புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா! Poll_c10இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா! Poll_m10இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா! Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா! Poll_c10இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா! Poll_m10இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா! Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா!

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 25, 2013 1:15 pm

இறைவனின் பெரிதான தயவால்,உலகில் வளர்ந்த ஒரு பத்து நாடுகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றேன்.குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி என்னை மலைக்க வைத்தது.வாழ்வில் முதன் முதலாக, நான் பார்த்த வெளிநாடு நாடு ஜெர்மனி.

அந்த தேசத்தை பார்த்த போது, மனதில் அப்படி ஒரு பிரமிப்பு.
நான் பார்த்த வெளிநாடுகளில்,எல்லாவகையிலும் ஜெர்மனியை முதலிடத்தில் வைத்து பார்க்கும் அளவுக்கு,அநேக விடயங்களை அந்த தேசம் எனக்கு கற்று கொடுத்தது.

வெறுமனே தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்களை தாண்டி,மக்களின் ஒழுக்கம், எளிமை, அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு ,சக மனிதனுக்கான மரியாதை, பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் விதம்,அவர்களின் நேர்மை என்று பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.

நடு நிசியில் இரண்டு மணி,மூன்று மணி என்று எந்நேரம் வேண்டுமானாலும் தனியாக பயணித்து, வீடு வந்து சேர்ந்த நாட்கள் ஏராளம் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட, உள்ளத்தில் எவ்வித பயமும் இருந்தது கிடையாது.

இந்த நடு ராத்திரியில் திருடர்களின் தொல்லை இருக்குமோ, அல்லது வெளிநாட்டவர் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமோ,
ஒருவேளை நம்மை தாக்கினாலும் தாக்குவார்களோ என்று ஒருநாள் கூட சிந்தித்து பார்க்கும் அளவுக்கு எந்த சூழலும் அங்கு இல்லை.

ஐரோப்பிய நாடுகளில்,பொது வெளிகளில் சுத்தம்,ஆரோக்கியம் என்றால் அதில் ஜெர்மனியை மிஞ்ச இயலாது. சுவிட்சர்லாந்தையும் பொது வெளி சுத்தத்தில் அடித்துக் கொள்ள முடியாது. அப்படி பார்த்தாலும் சுவிட்சர்லாந்தில் பெரும்பான்மை மக்கள் ஜெர்மானியர்களே!

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு பார்த்தால்,தொழில் நுட்பம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, கல்வி, பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் ஜெர்மனி தான் முதலிடம் என்றே சொல்லும் அளவுக், அனைத்து விடயங்களிலும் உயர்ந்து நிற்கிறது.

நண்பர்கள் பொதுவாக என்னிடம் கேட்பது உண்டு. நீங்கள் பார்த்த வெளிநாடுகளிலேயே சிறந்த நாடு எது என்று? சந்தேகம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஜெர்மனி தானென்று புன்னகை
ஒரே ஒரு சிக்கல் எதுவென்றால் மொழி மட்டுமேபுன்னகை அங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நமக்கு அவர்களின் தாய்மொழி தெரியாதுபுன்னகை

மேற்கத்திய நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு, போக்குவரத்து, கல்வி,பொருளாதாரம்,மருத்துவம்,தொழில் வளர்சிகள்,அடிப்படை பாதுகாப்பு போன்ற பல விடயங்களை பற்றி சிலாகித்து பேசும் போது, நண்பர் ஒருவர் சொன்னார், மேற்கத்திய நாடுகளை நான் பார்த்தது இல்லை. ஆனால் பலமுறை சீனாவை பார்த்து விட்டேன். சீனாவின் வளர்ச்சி மிகவும் அபரிவிதமானது என்றார்.

பீஜிங்,ஷாங்காய் போன்ற நகரங்களை எல்லாம் பார்த்தால், மிரண்டு போவீர்கள் என்று சொன்னார். மேற்கத்திய நாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சீனாவின் வளர்ச்சி இருக்கிறது என்று, பயிற்சிக்காக சீனா வந்த, எங்கள் நிறுவனத்தின் மேற்கத்திய நண்பர்களே சிலாகித்து பேசினார்கள் என்று சொன்னார். அவர்களே விரும்பி விரும்பி நகரத்தின் பல பகுதிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்றார்.

நான் சீனாவுக்கு போனதில்லை. அதனால் அப்படியா என்று கேட்டுக்கொண்டேன்.

மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியை மிஞ்சி, ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்கும் என்றால் அதை வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு, சொர்க்க பூமியாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சமீபத்தில் அதே நண்பர், அமெரிக்காவுக்கும் சென்று வந்தார். வந்த பிறகு சொன்னார், அமெரிக்காவை விட சீனா தான் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

காரணம் சீனா தான், புதுசு கண்ணா புதுசு மாதிரி இருக்கிறது. பிரமாண்டத்தில் சீனா, அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது என்று சொன்னார். அவர் பார்த்த இடங்கள் நியூயார்க் அல்லது கலிபோர்னியா போன்ற நகரங்களாக இல்லாமல் இருந்ததால், ஒருவேளை சரியான ஒப்பீடாக இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆனால் நேற்று வேறொரு நண்பரை, அவரது வீட்டில் சந்தித்த பொழுது, மடிக்கணினியில் சில புகைப்படங்களை காட்டினார். தற்போது, வேலை விடயமாக,அடிக்கடி சீனா செல்ல வேண்டி இருக்கிறது.சீனாவை பாருங்கள் என்று சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.
பார்த்தால் அப்படி ஒரு ஆச்சர்யம்.

மேற்கத்திய நாடுகளின் கட்டமைப்பு வசதிகளில்,
எந்த வித்தியாசத்தையும் பார்க்க இயலாத அளவுக்கு சாலைகள், கட்டடங்கள், ரயில் பயணங்கள், துறை முகங்கள், விமான நிலையங்கள் என்று மிக பிரமாண்டமாய் இருக்கிறது சீனா.
மேற்கத்திய நாடுகளில் பார்த்த அத்தனை வசதிகளையும்,அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள் சீனர்கள்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை பொறுத்தது.

தரமான சாலைகள், போக்குவரத்து வசதிகள், மக்களுக்கான அடிப்படை குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள், எல்லோருக்கும் பொதுவான அடிப்படை இலவச கல்வி, எல்லோருக்கும் பொதுவான சட்டமும் ,நியாயமான தண்டனைகளும் அனைத்து விதிகளையும் மக்கள் கடைபிடிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவது,விதி மீறல்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கி மக்களை சரி படுத்துவது, பொது இடங்களில் சுத்தம், திருட்டு வன்முறை போன்ற கொடுஞ்செயல்கள் நிகழாத வகையில் மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வது,ஊழல்,லஞ்சம் போன்ற கேடுகெட்ட சம்பங்கள் கூடுமானவரையில் நடக்காமல் பார்த்துக்கொள்வது, நீதியும் நியாயமும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் காவல்துறை மற்றும் நீதி துறை செயல்படுவது போன்றவற்றை சொல்லலாம்.

இந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியை பார்த்தால் பிரமிக்க தக்க வளர்ச்சியாகவே தோன்றுகிறது.
சீனாவின் அதிவேக ரயில்களில் பயணித்த நண்பர்கள் இருவரும் சொல்கிறார்கள்.

இப்படி ஒரு பயணம்,வேறு எங்கும் வாய்ப்பே இல்லை... சீன ரயில்களின் வேகம் மணிக்கு முன்னூறு கிலோமீட்டர்,நானூறு கிலோமீட்டர் என்று மின்னல் வேகத்தில் இருக்கிறது.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து, நகரத்தின் மையப்பகுதி முப்பது கிலோமீட்டர்.ஆனால் இந்த முப்பது கிலோமீட்டார் தூரத்தை வெறும் எட்டு நிமிடங்களில் இந்த அதிவேக ரயில்களில் மூலம் நீங்கள் கடந்து விட முடியும்.

பீஜிங்கில் இருந்து ஷாங்காய் ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் தூரம். ஆனால் அதிவேக ரயில்கள் மூலம் இந்த தூரத்தை வெறும் நான்கு மணி நேரத்தில் நீங்கள் அடைந்து விட முடியும்.

ஐநூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து,அன்றாடம் வேலைக்கு சென்று வரும் பெரும்பான்மை மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் வேலைக்கு செல்லும் பயண நேரம் என்பது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே.

சிந்தித்து பாருங்கள். இந்தியாவில் இப்படியான அதிவேக ரயில்கள் வந்தால், காலையில் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டு, மாலையில் வீடு திரும்பும் அளவுக்கு நிலைமை மாறி விடும்..

கற்பனையாக இருந்தாலும் கூட சிந்தித்து பார்க்கும் போது எத்தனை மகிழ்வாய் இருக்கிறது பாருங்கள்.

இந்த அதிவேக ரயில்கள் அனைத்தும் சீனர்களே வடிவமைத்து அவர்களே தயாரித்தது. வெளிநாடுகளின் உதவி என்பது சற்றும் கிடையாது.

இந்தியாவில் அதிவேக ரயிலின் வேகம் என்பது நூறு கிலோமீட்டர் என்கிறார்கள். ஆனால் சராசரி வேகம் என்பது எண்பது கிலோமீட்டர் தான்.

2020 க்குள் சீனாவின் முக்கிய வழித்தடங்கள் அனைத்தையும், இந்த அதிவேக ரயில்கள் மூலமே சமாளிக்க போவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கிட்டதட்ட இருபதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, இது போன்ற அதி வேக ரயில்கள் மூலம் இணைக்க போவதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்களின் அடுத்த பத்தாண்டுகள் திட்டத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும் போல் இருக்கிறது.

சீனாவை போல, தரமான சாலைகள் இந்தியாவில் இருக்கிறதா என்று தேடி பார்த்தாலும் கிடைக்காது.

ஆராய்ச்சி படிப்புகளுக்கென்று, கடந்த சில ஆண்டுகளில் சீனா செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்கை கூட இந்தியா செலவு செய்யவில்லை. அதற்கான திட்டுமிடுதல்கள் இல்லை. 2011 இல் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அவர்கள் செலவிட்ட தொகை நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் நாம் ஒரு பத்து பில்லியன் டாலர்கள், செலவழிப்பதே மிக அதிகம்.

இப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அதீத அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு அனைத்து தொழில்களிலும், ஆராய்ச்சிகளிலும், தயாரிப்புகளிலும் சீனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

குண்டூசி முதல் ஏவுகணை வரை அத்தனையும் சீனர்களின் சொந்த தயாரிப்புகள்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும், அத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சீன தயாரிப்புகளே.

நாம் குடிசை தொழிலாக ஊறுகாய் அல்லது பொறி உருண்டை செய்வது வழக்கம். ஆனால் சீனாவில் குடிசை தொழிலாய் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்வதும், செல்போன்கள் செய்வதுமாய் இருக்கிறார்கள்.

அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆடைகள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மடிக்கணினி முதற்கொண்டு அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகு பொருட்கள், அனைத்தும் சீனா தயாரிப்புகள் என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் அல்லது இந்திய தயாரிப்புகள் என்னவென்று பார்த்தால் பெரிய கேள்விகுறி?

கொஞ்சம் உணவு பொருட்கள், கொஞ்சம் ஆடைகள் இதை தாண்டி உலக அரங்கில் இந்தியாவின் தயாரிப்புகள் என்னென்ன?

உலகநாடுகள் பலவற்றில், சீன பொருட்களுக்கென்று பல பெரிய பெரிய அங்காடிகளை திறந்திருக்கிறார்கள். இன்று இந்தியாவில் கூட பயன்படுத்தப்படும் பல பொருட்கள் சீன தயாரிப்புகள்.

அது கைபேசியாக இருந்தாலும் சரி, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசு முதற்கொண்டு அனைத்தும் சீன தயாரிப்புகளாய் தான் இன்று இந்தியாவில் வலம் வருகிறது.

இந்தியாவின் அடிப்படை விவசாயத்தை செய்யவோ, அதை ஊக்குவிக்கவோ இந்த தேசமும், ஆட்சியாளர்களும் தாயாராக இல்லை. உணவுக்கும் கூட நாம் இனி அடுத்தவன் கையை ஏந்த வேண்டிய காலம் சீக்கிரமே வரும்.

தொழில்களை,விவசாயத்தை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முயல்வதற்கு பதிலாக, சிறு விவசாயிகள் எல்லாம் விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அமைதியாக வேறு வேலைகள் பார்த்து விட்டு போங்கள் என்று சொல்லும், ஒரு ரோபோ பிரதமரை தான் நாம் வைத்திருக்கிறோம்,மிகப்பெரிய பொருளாதார மேதை என்று பெருமை பீத்திக் கொண்டு.

உலக அரங்கில், சீன ராணுவம் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவம். ராணுவ தளவாடங்கள், அனைத்திலும் உலகில் எந்த நாட்டோடும் போட்டி போட்டு கொண்டு நிற்கிறார்கள். அனைத்தும் சொந்த தயாரிப்புகள்.

விண்வெளி ஆராய்ச்சியா, ராக்கெட் தயாரிப்பா, செயற்கை கோள்களா, ஏவுகணைகளா எதுவாக இருந்தாலும் அவர்களே சொந்தமாக தயாரிக்கிறார்கள்.

அமெரிக்கர்கள், ரஷ்யர்களுக்கு போட்டியாக, இன்னும் பல இடங்களில் அவர்களை முந்திக் கொண்டு நிற்கிறார்கள்.

சமீபத்தில் செய்தி தாள் ஒன்றில் படித்தேன். குறி பார்த்து தாக்கும் அதி வேக ஏவுகணைகள் பலவற்றை சீனர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.
இதுவரை அமெரிக்கர்கள் வைத்திருந்த அதிவேக ஏவுகணைகளின் வேகத்தை விட,சீனர்களின் தயாரிப்பு பல படங்கு என்று, அமெரிக்கர்களே கவலைப்பட்டதாய், செய்திகளில் படித்தேன்.

இந்தியாவின் அனைத்து விண்வெளி ஆராய்ச்சி,ஏவுகணை, அணு தொழில் நுட்பம் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கியதாகவோ, அல்லது கூட்டு முயற்சியாக தான் இன்று வரை இருக்கிறதேயன்றி, சீனாவை போல தன்னிச்சையாக இயங்க கூடியதாக இல்லை.

உலகின் அனைத்து தயாரிப்புகளும் இன்று சீனாவில் தான் தயாராகிறது என்ற அளவில் சீனா இருக்கிறது.

உலக வர்த்தகத்துக்கு, ஆங்கிலம் மிகவும் முக்கியம் என்று உணர்ந்த சீனர்கள் இன்று அதி வேகமாக ஆங்கிலத்தை விரும்பி படிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளில், சீனாவில் அதிக அளவில் விற்ற புத்தங்களின் பட்டியலில், ஆங்கில டிக்சனரி தான் முதலிடம் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலத்தை தீவிரமாக படித்து வருகிறார்கள்.

இந்திய தாயாரிப்புகள் எதுவும் உலக சந்தையில் இல்லாதிருக்க,அப்படி ஒரு உற்பத்தி வருமானம் வராமல், வெளிநாடுகளின் மென்பொருள் துறையை மட்டுமே நம்பிக் கொண்டும்,பொருட்களின் உற்பத்திக்கு பதிலாக, அந்நிய முதலீடுகளை நேரடியாக இந்தியாவில் வரவைத்துக் கொண்டு,இதோ பார் நாங்கள் வளர்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றால், கூடிய விரைவில் நம் பொருளாதாரம் சிதைந்து போகும். சீனாவை போல ஒரு வலுவான பொருளாதரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாம் பொருட்களை தயாரிக்க வேண்டும்.
உலக சந்தையில் இந்திய பொருட்கள் விலை போக வேண்டும்.

சீனாவில் மின்தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் தயாரிக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் இயற்கை மற்றும் சூரிய மின்சாரம் மூலம் நாட்டின் மொத்த மின்சார தேவையில் முப்பது சதவிகிதத்தை எட்டிபிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

இன்று வரை அறுபது விழுக்காடு அனல் மற்றும் புனல் மின்சாரம் தான். உலக நாடுகள் எல்லாம் இயற்கை மின்சாரம் என்று சிந்திக்கும் போது, இந்தியா மட்டும் அணு மின்சாரம் தான் சிறந்தது என்று இறுமாப்போடு திரிகிறது.இத்தனைக்கும் இந்திய அணு உலைகள் இந்தியாவின் சொந்த தயாரிப்பு இல்லை. அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விலைக்கு வாங்கப்படுகிறது.

சொந்தமாக அணு உலைகளை தயாரித்தாலும்,கூட மாற்று மின்சாரத்தில் அதிக அக்கறை எடுக்கிறார்கள் சீனர்கள்.

நடப்பு ஆண்டு கணக்கின் படி,இந்தியாவில் இன்னும் நாற்பது விழுக்காடு கிராமங்களுக்கு மின்சாரம் போய் சேரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சீனா போன்ற சர்வாதிகார(கிட்டத்தட்ட) நாட்டில் மக்கள் நலன் சார்ந்து, மக்களுக்கு எது நன்மை என்று சிந்தித்து மக்களுக்காக செயல்படுகிறார்கள்.ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டே,மக்கள் விரோத நடவடிக்கைகளில், மக்கள் விரும்பாத செயல்களை, திட்டங்களை மக்களிடம் புகுத்துவது தான் இந்தியாவின் அழகே!

மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் போட்டிகளை, சீனாவில் சில ஆண்டகளுக்கு முன்பு நடத்தினார்கள். உலக நாடுகள் பலவும் வியந்து போகும் அளவுக்கு, மிக நேர்த்தியாக நடத்திக் காட்டினார்கள். போட்டி நடத்தியதோடு மட்டுமல்ல, உலக அரங்கில் அதிக பதக்கங்களை வென்றும் காட்டினார்கள் சீனர்கள். ஆனால் ஒரு தங்க பதக்கம் வாங்கவே இந்தியா முக்கு முக்கென்று முக்குகிறது.

இத்தனைக்கும் மக்கள் தொகையில் சீனாவோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் விளையாட்டில் தங்கம் வாங்குவதற்கு பதிலாக, நகை கடையில் காசு கொடுத்து வாங்கினால் தான் உண்டு என்னும் அவல நிலை தான் இன்னும் இந்தியாவில்.

காரணம் இந்தியாவில் எந்த விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில்லை, பணம் செலவு செய்வதில்லை, கிரிக்கெட் என்னும் வீணா போன விளையாட்டை தவிர.

கிரிக்கெட் விளையாண்டால் மட்டும் தான், இந்தியாவில் தினம் தோறும் கோடீஸ்வரன், மற்ற விளையாட்டு வீரர்களை எல்லாம் எவரும் கண்டு கொள்ள கூட தயாராக இல்லை. எப்படி விளங்கும் இந்த தேசம்?

காமன்வெல்த் விளையாட்டு என்ற பெயரில் உலக அரங்கில் இந்தியா கேவலப்பட்டு ,அசிங்கப்பட்டு நின்றதை போன்ற சொதப்பல் வேலைகளை, ஒலிம்பிக் விளையாட்டு நடத்தும் போது சீனர்கள் செய்யவில்லை.

வெள்கைக்காரன் கொடுத்த காசையே அவனுக்கு தெரியாம ஆட்டைய போடுற திருட்டு பயலுகளை வச்சுக்கிட்டு இந்தியா எப்படி வளரும்?
காமன்வெல்த் புகழ் கல்மாடி, எந்த சிக்கலும் இன்றி சந்தோசமா சுத்திகிட்டு இருக்கின்றார்.

ராணுவ வீரர்களுக்கு வீடுகள் வாங்கியதில் ஊழல், உடைகள் வாங்கியதில் ஊழல், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், நிலக்கரி வாங்கியதில் ஊழல், அணு உலையில் ஊழல், அலைக்கற்றையில் ஊழல், விளையாட்டு ஊழல், கால்நடை தீவன ஊழல், மருந்து வாங்கியதில் ஊழல் இப்படி ஊழல் இல்லாத எந்த துறையும் இந்தியாவில் இல்லை என்று நாம் ஊழல் குறித்து காலம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் அளவுக்கு ஊழல்.

கடந்த வாரம், சீனாவின் முந்தைய ஆட்சியின், போக்குவரத்து அமைச்சர் ஒருவருக்கு, மரண தண்டனை வழங்கி இருக்கிறார்கள். இத்தனைக்கும் சீனாவின் போக்குவரத்தில் அதிக மாற்றங்கள் கொண்டு வந்த,அதிவேக ரயில்கள் வர காரணமாய் இருந்தவர்.

அவருடைய இருபது ஆண்டு கால அரசியலில், இருபது கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.இருபது கோடி ஊழலுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிற்கிறார்.அந்த அளவுக்கு கடுமையான சட்டங்களும், தண்டனைகளும்.

இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் குற்றம் நிரூபிக்கப்பட்டதும், அவர் சார்ந்த கட்சியே, அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். நடக்குமா இந்தியாவில்?

இருபது வருடத்திற்கு மேலாக, டான்சி நிலம் மற்றும் அதிக பொருள் சேர்ந்த வழக்கு ஜெயலலிதாவின் பெயரில். ஆனால் இந்த வழக்கு இன்னும் ஒரு முப்பது ஆண்டுகள் போனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

கருணாநிதி குடும்ப புகழ் அலைக்கற்றை ஊழல், முடிய இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் ஆகலாம். குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர். இதெல்லாம் விளங்கவா?

சீனா வளர்ச்சியில் தொட முடியாத உயரத்தை தொட்டுக்கொண்டே இருக்கட்டும்.

நாமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான், சீனாவை விட நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்க தான் தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசு என்று.

முதலில் சீனாவில் இருப்பதை போன்ற ஒரு மாதிரி நகரத்தை,
இந்தியாவில் உருவாக்கி காட்டுங்கள். பிறகு பேசலாம் யார் வல்லரசு என்று.

சீனாவில் குறைகளே இல்லையா? குறைகள் இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய, அடிப்படை வசதிகளை எல்லாம் தரமாக செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

இந்தியாவின் அடிப்படை சாலைகள்,சுத்தமான குடி தண்ணீர், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றவை இன்னும் சாதாரண மக்களுக்கு கூட முழுமையாய் போய் சேரவில்லை.

இதை எல்லாம் செய்த பிறகு வல்லரசு ஆகுங்கள், சீனாவோடு போட்டி போடுங்கள். அதுவரை மக்கள் தொகையில் வேண்டுமானால், இந்தியா சீனாவோடு போட்டி போட்டு கொள்ளட்டும்புன்னகை

நண்பர் ஆண்டனி வளன்,
முகநூல்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 25, 2013 1:32 pm

சமீபத்தில் செய்தி தாள் ஒன்றில் படித்தேன். குறி பார்த்து தாக்கும் அதி வேக ஏவுகணைகள் பலவற்றை சீனர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.
இதுவரை அமெரிக்கர்கள் வைத்திருந்த அதிவேக ஏவுகணைகளின் வேகத்தை விட,சீனர்களின் தயாரிப்பு பல படங்கு என்று, அமெரிக்கர்களே கவலைப்பட்டதாய், செய்திகளில் படித்தேன்

சுத்தப் பொய்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 1:49 pm

SajeevJino wrote:
சுத்தப் பொய்

என்ன பொய்யோ............ ஆனால் அவர்கள் நாம் நாட்டுக்குள் 150 தடவையாக அத்து மீறி நுழைகிறார்களென்று சும்மா அவா வருவதை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கும் சோம்பேறிகள் கோபம் அல்ல அவர்கள் சோகம் இது உண்மைதானே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 25, 2013 3:42 pm

krishnaamma wrote:
SajeevJino wrote:
சுத்தப் பொய்

என்ன பொய்யோ............ ஆனால் அவர்கள் நாம் நாட்டுக்குள் 150 தடவையாக அத்து மீறி நுழைகிறார்களென்று சும்மா அவா வருவதை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கும் சோம்பேறிகள் கோபம் அல்ல அவர்கள் சோகம் இது உண்மைதானே?

இந்த விஷயத்தில் நமது ராணுவத்தை குறை கூறுவது என்பது கொள்ள முடியாதது ..ராணுவம் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. எனவே எந்த ஒரு முடிவு எடுக்க வேண்டுமானாலும் அரசின் ஆணை தேவைப்படுகிறது

நாம் போருக்கு தயாராக இல்லை. சீனாவுக்கு இது நன்றாகவே தெரியும் ஆனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சீன எல்லையில் மிக உறுயாக நின்று விடுவோம். அற்குகு முன் இந்தியாவுடன் சிறிய அளவில் ஒரு போர் புரிந்தால் இது தடுக்க பட்டு விடும். பிறகு நாம் அவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும்.. சீனாவுடன் போர் புரியும் சூழ்நிலை வந்தால் பாகிஸ்தானும் சும்மா இருக்காது அதுவும் உடனே காஷ்மீரில் அத்துமீறல் செய்து விடும்.

சீனர்கள் எல்லை தாண்டி வருவது எதற்கு என்றால் நாம் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் பின் அவர்கள் யுத்ததிற்கு நேரடியாக வந்துவிடலாம் என்று எண்ணுகின்றனர். அதனால் தான் நமது ராணுவம் பார்த்து கொண்டு சும்மா நிற்கிறது..

இன்னும் இல்லாமல் சீன எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உறுதியான ஆணை பறப்பிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் சீனர்களை சுடவோ அல்லது நேரடி மோதலில் ஈடுபடவோ கூடாது என்று ..

ராணுவ விதிமுறைகளால் என்னால் மேலும் தகவல்களை கூற முடியாது.. இருப்பினும் எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்டால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu Jul 25, 2013 7:34 pm

மக்களை கட்டிப்போட்டு வேலை வாங்கும் எந்த நாட்டின் வளர்ச்சியும் வெகுதூரம் செல்லாது. டினாமின் ஸ்குயர் படுகொலை என்றைக்காவது ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிவரும். அப்போது சீனா சின்னா பிணமாக இருக்கும். இந்தியா எப்போதும் போல ராஜா கூஜாவின் ஊழல்களுடன் பிரமாதமாக முன்னேறி கொண்டு இருக்கும் இது தவசி மலை சித்தர் சத்தியம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 25, 2013 7:51 pm

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வந்து ஒரு 100 பேரை சுட்டு வீழ்த்தினாலும் பின்பொறுநாள் சீன எல்லையில் பலமாக படைகளை நிறுத்த இந்தியா வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கும் அப்படிதானே நண்பரே! புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 8:17 pm

SajeevJino wrote:

ராணுவ விதிமுறைகளால் என்னால் மேலும் தகவல்களை கூற முடியாது.. இருப்பினும் எந்த சந்தேகம் இருந்தாலும் கேட்டால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்

ரொம்ப நன்றி நண்பரே! இவ்வளவு விஷயம் இருக்கா? விளக்கம் அருமை புன்னகைநம் நாடு மீண்டும் அந்நிய சக்திகளுக்கு அடிமையாகிடக்கூடாதே என்கிற ஆதங்கத்தில் தான் அப்படி பதிவு போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 25, 2013 8:18 pm

எல்லை பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும், பொறியியல் கட்டுமான துறையில் சைனா நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக மின்திட்ட துறைகளில் தற்போது இவர்கள் தான் ராஜா. பல இந்தியா நிறுவனங்கள் இவர்களின் பெறியியல் துறை நுட்பத்தில் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. இந்தியா பணி ஆணைகள் பலவற்றை குறைவான முதலீட்டில் செய்தும் தருகின்றனர். சர்வதேச பணி ஆணைகளில் இவர்கள் தான் முன்னணி. ஜிண்டால் பவர் , அடனி குரூப், எஸ்ஸார் பவர் , கே‌எஸ்‌கே பவர் போன்ற இந்தியா மின்திட்ட கட்டுமான நிறுவனங்கள் பல ஆணைகளை சீனாவிற்க்கு கொடுத்துள்ளன.

இந்தியா இன்னும் தனது பொறியில் துறையில் கற்றுக்கொள்ளும் நிலையில் தான் உள்ளது. அவர்கள் வளரும் நிலையில் உள்ளனர்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 25, 2013 8:53 pm

தர்மா wrote:மக்களை கட்டிப்போட்டு வேலை வாங்கும் எந்த நாட்டின் வளர்ச்சியும் வெகுதூரம் செல்லாது. டினாமின் ஸ்குயர் படுகொலை என்றைக்காவது ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிவரும். அப்போது சீனா சின்னா பிணமாக இருக்கும். இந்தியா எப்போதும் போல ராஜா கூஜாவின் ஊழல்களுடன் பிரமாதமாக முன்னேறி கொண்டு இருக்கும் இது தவசி மலை சித்தர் சத்தியம்

மிகச்சரியாக சொன்னீர்கள் .தன் சொந்த நாட்டு மக்களின் மேல் ராணுவ டாங்கிகளை ஏற்றி கொலை செய்த நாடு .சீனா அடித்து பிடித்து முன்னேறி வருகிறது .ஆனால் அங்கு கருத்து சுதந்திரமும் மக்களின் வாழும் விருப்பமும் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பார்த்தால் அதன் நிலை தெரிந்து விடும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jul 25, 2013 9:05 pm

அசுரன் wrote:சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வந்து ஒரு 100 பேரை சுட்டு வீழ்த்தினாலும் பின்பொறுநாள் சீன எல்லையில் பலமாக படைகளை நிறுத்த இந்தியா வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கும் அப்படிதானே நண்பரே! புன்னகை

சீனா இங்கு வந்து நமது வீரர்களை கொன்றாலும் இப்போதைய நிலையில் நாம் சும்மாதான் இருப்போம், அல்லது ஐ நா விடம் முறை இடுவோம்.. ஒரு சில நாடுகளிடம் சொல்லி சில கண்டனங்களை தெரிவிப்போம் அவ்வளவு தான். கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தான் ராணுவம் வந்து நமது ஆட்களை கழுத்தை அறுத்து கொலை செய்த போது நாம் என்ன செய்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும்..

இன்னொரு நாள் அவர்களை விடவும் பலமாக இருந்தாலும் நாம் அவர்களைப்போல் செய்ய மாட்டோம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக