ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களைப் ……..பறிக்காதீர்…….!

2 posters

Go down

பூக்களைப் ……..பறிக்காதீர்…….! Empty பூக்களைப் ……..பறிக்காதீர்…….!

Post by manikandan.dp Tue Jul 23, 2013 1:04 pm

பூக்களைப் ……..பறிக்காதீர்…….! 0tla
தும்கூரில் எங்கள் பள்ளியைச் சுற்றி விதவிதமான செடிகள், மரங்கள்; பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு வகுப்பறையை சுற்றிலும் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகள்; பள்ளி வளாக சுற்று சுவரை ஒட்டினாற் போல விண்ணை முட்டும் உயரமான மரங்கள். பள்ளியில் நுழைந்த உடன் வேறு ஏதோ உலகத்திற்கு வந்து விட்டாற்போல ஒரு சூழ்நிலை. கண்ணுக்கு அத்தனை குளுமையாக இருக்கும். பள்ளியை சுற்றிப் பூங்காவா? அல்லது பூங்காவிற்குள் பள்ளியா என்று கேட்கத் தோன்றும். ரோஜாக்களில் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையையும் இங்கே பார்க்கலாம். எப்படி இயற்கை அன்னை இந்த இடத்தில் மட்டும் இத்தகைய எழிலைக் காட்டுகிறாள் என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும்.

நான் சங்கீத ஆசிரியை. என் வேலை பிரார்த்தனையை நடத்துவது. அது முடிந்தபின் எனது வகுப்பு உடனடியாக இருந்தால் அங்கேயே இருப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வந்து விடுவேன்.

ஒரு நாள் எங்கள் தலைமை ஆசிரியர் பிரார்த்தனை முடிந்தவுடன் என்னைப் பார்த்து “ஒரு ‘நேச்சர் வாக்’ போய்விட்டு வாருங்களேன்” என்றார்.

“’நேச்சர் வாக்……’ ?” நான் புரியாமல் பார்த்தேன்.

“அதோ, அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்…” என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் ஒரு ஆசிரியை குழந்தைகளுடன் பள்ளியைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். நானும் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு புதுமையான அனுபவம் எனக்காகக் காத்திருந்தது அங்கே. அந்த ஆசிரியை குழந்தைகளுக்கு ஒவ்வொரு செடியின் பெயரையும் சொல்லி, அது செடி வகையா, கொடி வகையா, புதர் வகையா, அல்லது நீண்டு நெடிதுயர்ந்து வளரும் மரமா  என்று சொல்லிக் கொண்டே வந்தார். அதுமட்டுமல்ல. ஒவ்வொரு குழந்தையும் செடிகளை தொட்டுப் பார்த்து அதன் இலை அமைப்பு, தன்மை, அளவு, வண்ணம் ஆகியவற்றை அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டிருந்தன. அதேபோல பூக்களின் பெயர்கள், பூக்கும் காலம், அந்தச் செடியை எப்படிப் பயிரிடுவது – அதாவது விதையை நடவேண்டுமா அல்லது பதியன் போட வேண்டுமா என்ற விவரங்களையும் ஆசிரியை சொன்னார். சிறிது தூரம் சென்றபின் குழந்தைகள் தாங்களாவே அங்கிருந்த செடிகளைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.

“புதிதாக நட்ட செடிகளைப் பற்றி மட்டும்தான் நான் சொல்லுவேன். இந்தச் செடிகளை அவர்கள் பலமுறை பார்த்திருப்பதால், அவர்களுக்கே எல்லாம் தெரியும். வேறு எந்த இடத்தில் இந்தச் செடிகளைப் பார்த்தாலும் இந்தக் குழந்தைகளால் பெயர் சொல்லி அடையாளம் காட்ட முடியும்.” என்று எனக்கு விளக்கினார் ஆசிரியை.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகள் அவர்களது ஆசிரியைகளுடன் இந்த ‘நேச்சர் வாக்’ பண்ணுகிறார்கள்.

நேச்சர் வாக்’ முடித்துக் கொண்டு வந்த என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் மிகப் பெருமையாக சொன்னார்: “குழந்தைகளின் கையாலேயே பல செடிகளை நடச் செய்கிறோம். நட்டபின் தினமும் நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பது அவர்கள்தான். முளை விடுவதிலிருந்து ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் இயற்கை தங்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்று சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் உணருகிறார்கள். எங்கள் பள்ளியில் ‘புற்களின் மேல் நடக்காதே’, ‘பூக்களைப் பறிக்காதே’ என்ற அறிவிப்பு பலகை கிடையாது. குழந்தைகள் இயற்கையைப் பேணுவது தங்கள் கடமை என்று பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.”

பிஞ்சுக் குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களால் தீண்டப்படுவதாலேயே இயற்கை இப்படி எழில் கோலம் காட்டுகிறாள் என்று எனது சந்தேகத்திற்கும் விடை கிடைத்தது அவரது பேச்சிலிருந்து. மனது நிறைந்து போயிற்று.

நானும் என் கணவரும் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது இந்த நிகழ்ச்சி அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும். எங்களைப் போல நிறைய பேர் நடப்பதற்காக வருவார்கள். பலபேரின் கையில் கைபேசி இருக்கும். அதில் பேசியபடியே நடப்பார்கள். பெங்களூருக்கு ‘பூங்கா நகரம்’ என்றே பெயர். எத்தனை பேருக்கு இயற்கையை ரசிக்கத் தெரிகிறது?

இப்படி ‘நேச்சர் வாக்’ பண்ணுவது மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது; நமது கவனம் கலையாமல் இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது என்று இன்று காலை செய்தித்தாளில் படித்தவுடன் எனக்குத் தும்கூர் பள்ளி நினைவு ஏகமாக வந்து விட்டது.

அதன் விளைவாக பூத்ததுதான் இந்தப் ‘பூக்களைப் பறிக்காதீர்”

நன்றி
ranjani narayanan
http://ranjaninarayanan.wordpress.com


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

பூக்களைப் ……..பறிக்காதீர்…….! Empty Re: பூக்களைப் ……..பறிக்காதீர்…….!

Post by malik Tue Jul 23, 2013 2:47 pm


“குழந்தைகளின் கையாலேயே பல செடிகளை நடச் செய்கிறோம். நட்டபின் தினமும் நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பது அவர்கள்தான். முளை விடுவதிலிருந்து ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் இயற்கை தங்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்று சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் உணருகிறார்கள். எங்கள் பள்ளியில் ‘புற்களின் மேல் நடக்காதே’, ‘பூக்களைப் பறிக்காதே’ என்ற அறிவிப்பு பலகை கிடையாது. குழந்தைகள் இயற்கையைப் பேணுவது தங்கள் கடமை என்று பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.

அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல விஷயங்கள்..!! இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்று கூறும் நாம்.. அதனை வளர்ப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும்..!!


இப்படி ‘நேச்சர் வாக்’ பண்ணுவது மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது;
நமது கவனம் கலையாமல் இருக்கிறது; - என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது

இயற்கையோடு இயைந்த வாழ்வு.. உயிரினங்களுக்கு வரும் நோய்களுக்கு நிவாராணமாக மட்டுமில்லை..
நோய் வருவதிலிருந்து பாதுகாப்பதாகவும் இருக்கின்றது..!!

அனைவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான கருத்துக்களை கூறும் பயனுள்ள கட்டுரை.. பகிர்ந்தமைக்கு நன்றி மணிகண்டன்..!! சூப்பருங்க
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum