புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
38 Posts - 66%
heezulia
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
8 Posts - 14%
Guna.D
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
206 Posts - 74%
heezulia
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
8 Posts - 3%
prajai
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar
அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10அமெரிக்காவின் புது எதிரி? Poll_m10அமெரிக்காவின் புது எதிரி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் புது எதிரி?

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 1:06 pm

சம்பவம் ஒன்று :

கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள... அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள்.

சம்பவம் இரண்டு :

போன மாதம் உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் தலைகுனிவு. நம் எல்லோருடைய இணைய செயல்பாடுகளை அமெரிக்கா உளவு பார்க்கும், ‘ப்ரிஸம்’ என்கிற ரகசியத் திட்டத்தைப் பற்றி விலாவாரியாக ஊடகங்களுக்குப் போட்டு உடைத்து விட்டார் எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞர். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர் இவர். அதுவுமின்றி, சி.ஐ.ஏ.வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு விட்டதாக பாதுகாப்புக் குற்றங்களுக்காக இவரை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து உஷாராக வெளியேறி, ஹாங்காங் வழியாக மாஸ்கோவுக்கு சென்றுவிட்டார் ஸ்நோடன். பல்வேறு நாடுகள் இவருக்கு புகலிடம் வழங்க தயங்கிக் கொண்டிருக்கும்போது, ஈக்குவேடார் தைரியமாக அவருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது.

அமெரிக்காவின் காலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு தென்அமெரிக்க குட்டி நாடுகள் குழி பறிப்பது புதிதல்ல. முன்பு கியூபா, பின்பு வெனிசுலா, இன்று ஈக்குவேடார். உலக கால்பந்துக் கோப்பையின் போது மட்டும்தான் இந்த நாட்டின் பெயரை நாம் அடிக்கடி கேள்விப்படுவோம். சமீபமாக அமெரிக்காவுக்கு தொடர்ந்து, ‘பெப்பே’ காட்டிக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் விடாமல் ஈக்குவேடாரை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

தென்அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் அமர்ந்திருக்கும் குட்டி நாடுதான் ஈக்குவேடார். மக்கள் தொகையே ஒன்றரை கோடிக்குள்தான். தோராயமாக ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவு. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ். இது தவிர அந்நாட்டின் பூர்வக்குடி மக்களின் மொழிகள் பத்துக்கும் மேலே உண்டு. இன்கா ஆதி கலாச்சாரம் கோலோச்சிய பூமி என்பதால் பழைமைக்குப் பஞ்சமேயில்லை. பழைமையான இடங்கள் என்று யுனெஸ்கோவில் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பல இடங்கள் ஈக்குவேடாரில் உண்டு.

ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து 1830-இல் சுதந்திரம் பெற்றது. அப்போதிலிருந்தே குடியரசு நாடாகவே இருக்கிறது. அவ்வப்போது குட்டிக்குட்டி கலகங்களால் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் ஜனநாயகம் திரும்புவதுண்டு. நம்மூரில் எல்லாம் மனித உரிமை என்கிற சொல்லையே கொஞ்சம் காலமாகத்தான் கேட்கிறோம். இங்கே இயற்கை உரிமை பற்றி வெகுகாலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக இயற்கை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாடு ஈக்குவேடார். இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி வகைகளும் நிறைந்த நாடு.

மக்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். வழக்கமான தென்அமெரிக்க நாடுகளைப் போலவே கால்பந்து என்றால் உயிர். வணிகம் என்றால், எண்ணெய் ஏற்றுமதிதான். அந்நாட்டின் 40% வணிகத்தை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. விவசாயம் என்றால் வாழைதான். வாழை பயிரிடுவதிலும், ஏற்றுமதியிலும் உலகளவில் ஈக்குவேடாருக்குதான் முதலிடம். கோக்கோ, கரும்பு, அரிசி, பருத்தி, சோளம், காபி போன்றவையும் விளைகின்றன.

பொதுவாகவே பெரிய சச்சரவுகளுக்குள் தலையிடாத நாடாகத்தான் ஈக்குவேடார் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ‘ஆயில் அரசியல்’ காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான மனோபாவம் மனதுக்குள்ளேயே எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது. ரேஃபல் கோரியா அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த உணர்வு முன்பிலும் அதிகமாக வெளிப்படுகிறது.

ஐம்பது வயதான கோரியா, அடிப்படையில் ஒரு பொருளாதார மேதை. 2007-இல் பொறுப்பேற்றவுடனேயே நிதி சீர்திருத்தங்களை தொடங்கினார். முந்தைய ஊழல் ஆட்சிகளின் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து மிக விரைவாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்தார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை மிகத்திறமையாகக் கையாண்டதால் அடுத்தடுத்து அவரே தேர்தல்களில் வென்று வருகிறார். வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸின் அபிமானி. அவருக்கு நெருக்கமான நட்போடு இருந்ததால் இடதுசாரி சார்பும் உண்டு.

பெட்ரோல் விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் அடாவடியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். ‘ஐந்து பேரல் எண்ணெய் எடுக்கப்பட்டால், அவற்றில் ஒன்றே ஒன்றுதான் எடுக்கப்படும் நாட்டுக்கு கிடைக்கிறது. மீதி நான்கு வேறு எங்கோ யாருக்கோ கொழுத்த லாபத்துக்கு விற்கப்படுகிறது. இது ஏற்கெனவே முடியாத செயல். இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் புதியதாக மாற்றி புதுப்பிப்போம்’ என்று ஒருமுறை பேசினார். அயல்நாட்டு நிறுவனங்கள் பெட்ரோலை உறிஞ்சி உறிஞ்சி ஈக்குவேடாரை சக்கையாகப் பிழிவதாக கோரியா தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பெட்ரோலால் கிடைக்கும் உபரி லாபத்தைக்கொண்டு ஈக்குவேடார் மக்களின் ஏழ்மையைப் போக்கும் சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். சோசலிஸம்தான் ஈக்குவேடார் மாதிரியான நாட்டுக்குப் பொருந்தும் என்பது அவரது நம்பிக்கை.

கடந்த கால் நூற்றாண்டில் மிக வலிமையான, நேர்மையான தலைவர் என்று மக்களிடையே பெயர் எடுத்திருக்கிறார். மிக லேசான, பலகீனமான எதிர்ப்புகளும் உண்டு என்றாலும் மூன்றாம் முறையாகவும் (இரண்டு முறை தேர்தலில் வென்று) அவரே அதிபராக தொடர்வது, அவருக்குக் கிடைத்திருக்கும் அபரிமிதமான மக்கள் ஆதரவுதான் காரணம்.

அமெரிக்கா தன்னுடைய எதிரிகளை பெட்ரோல் மார்க்கெட்டில்தான் உருவாக்குகிறது.

யுவகிருஷ்ணா
புதியதலைமுறை

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 17, 2013 1:12 pm

போன வாரம் இதே எதிரியைப் பற்றி இங்க செய்தி வந்ததே படத்தோட - டெக்லஸ் போட்டாரு.

இந்த எதிரி நம்ம அகலா இருக்குமோன்னு நெனச்சேன் - அடுத்த வாரம் அமெரிக்கா போகிறார் புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 17, 2013 1:26 pm

யினியவன் wrote:இந்த எதிரி நம்ம அகலா இருக்குமோன்னு நெனச்சேன் - அடுத்த வாரம் அமெரிக்கா போகிறார் புன்னகை

தெரியும் பாஸ் நானும் வாழ்த்து சொல்லி இருக்கேன் ........

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 17, 2013 2:49 pm

அமெரிக்காவின் ஹாட் நியூஸ் இந்த எட்வர்ட் ஸ்நோடன்.மனுஷன் பார்க்க மணிரத்தினம் பட ஹீரோ மாதிரி இருந்துகிட்டு எவ்வளவு பெரிய விஷயத்தை பொசுக்குன்னு போட்டு உடச்சுட்டார் . இவருக்கு பின்புலமாக பல நாடுகள் இருக்குமோ புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 17, 2013 11:40 pm

சம்பவம் ஒன்று :
கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள... அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள்.

சம்பவம் இரண்டு :
போன மாதம் உலக அரங்கில் அமெரிக்காவுக்குப் பெரும் தலைகுனிவு. நம் எல்லோருடைய இணைய செயல்பாடுகளை அமெரிக்கா உளவு பார்க்கும், ‘ப்ரிஸம்’ என்கிற ரகசியத் திட்டத்தைப் பற்றி விலாவாரியாக ஊடகங்களுக்குப் போட்டு உடைத்து விட்டார் எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞர். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர் இவர். அதுவுமின்றி, சி.ஐ.ஏ.வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். நாட்டின் ரகசியங்களை வெளியிட்டு விட்டதாக பாதுகாப்புக் குற்றங்களுக்காக இவரை கைது செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலிருந்து உஷாராக வெளியேறி, ஹாங்காங் வழியாக மாஸ்கோவுக்கு சென்றுவிட்டார் ஸ்நோடன். பல்வேறு நாடுகள் இவருக்கு புகலிடம் வழங்க தயங்கிக் கொண்டிருக்கும்போது, ஈக்குவேடார் தைரியமாக அவருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது.

அமெரிக்காவின் காலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு அந்நாட்டுக்கு தென்அமெரிக்க குட்டி நாடுகள் குழி பறிப்பது புதிதல்ல. முன்பு கியூபா, பின்பு வெனிசுலா, இன்று ஈக்குவேடார். உலக கால்பந்துக் கோப்பையின் போது மட்டும்தான் இந்த நாட்டின் பெயரை நாம் அடிக்கடி கேள்விப்படுவோம். சமீபமாக அமெரிக்காவுக்கு தொடர்ந்து, ‘பெப்பே’ காட்டிக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் விடாமல் ஈக்குவேடாரை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

தென்அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் அமர்ந்திருக்கும் குட்டி நாடுதான் ஈக்குவேடார். மக்கள் தொகையே ஒன்றரை கோடிக்குள்தான். தோராயமாக ஒரு லட்சம் சதுர மைல் பரப்பளவு. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஸ்பானிஷ். இது தவிர அந்நாட்டின் பூர்வக்குடி மக்களின் மொழிகள் பத்துக்கும் மேலே உண்டு. இன்கா ஆதி கலாச்சாரம் கோலோச்சிய பூமி என்பதால் பழைமைக்குப் பஞ்சமேயில்லை. பழைமையான இடங்கள் என்று யுனெஸ்கோவில் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பல இடங்கள் ஈக்குவேடாரில் உண்டு.

ஸ்பானிய காலனியாதிக்கத்தில் இருந்து 1830-இல் சுதந்திரம் பெற்றது. அப்போதிலிருந்தே குடியரசு நாடாகவே இருக்கிறது. அவ்வப்போது குட்டிக்குட்டி கலகங்களால் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டு மீண்டும் ஜனநாயகம் திரும்புவதுண்டு. நம்மூரில் எல்லாம் மனித உரிமை என்கிற சொல்லையே கொஞ்சம் காலமாகத்தான் கேட்கிறோம். இங்கே இயற்கை உரிமை பற்றி வெகுகாலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக இயற்கை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாடு ஈக்குவேடார். இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி வகைகளும் நிறைந்த நாடு.

மக்கள் பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்கள். வழக்கமான தென்அமெரிக்க நாடுகளைப் போலவே கால்பந்து என்றால் உயிர். வணிகம் என்றால், எண்ணெய் ஏற்றுமதிதான். அந்நாட்டின் 40% வணிகத்தை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. விவசாயம் என்றால் வாழைதான். வாழை பயிரிடுவதிலும், ஏற்றுமதியிலும் உலகளவில் ஈக்குவேடாருக்குதான் முதலிடம். கோக்கோ, கரும்பு, அரிசி, பருத்தி, சோளம், காபி போன்றவையும் விளைகின்றன.

பொதுவாகவே பெரிய சச்சரவுகளுக்குள் தலையிடாத நாடாகத்தான் ஈக்குவேடார் இருந்து வந்திருக்கிறது. ஆனால், ‘ஆயில் அரசியல்’ காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான மனோபாவம் மனதுக்குள்ளேயே எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்திருக்கிறது. ரேஃபல் கோரியா அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த உணர்வு முன்பிலும் அதிகமாக வெளிப்படுகிறது.

ஐம்பது வயதான கோரியா, அடிப்படையில் ஒரு பொருளாதார மேதை. 2007-இல் பொறுப்பேற்றவுடனேயே நிதி சீர்திருத்தங்களை தொடங்கினார். முந்தைய ஊழல் ஆட்சிகளின் நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்து மிக விரைவாக நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வந்தார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை மிகத்திறமையாகக் கையாண்டதால் அடுத்தடுத்து அவரே தேர்தல்களில் வென்று வருகிறார். வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸின் அபிமானி. அவருக்கு நெருக்கமான நட்போடு இருந்ததால் இடதுசாரி சார்பும் உண்டு.

பெட்ரோல் விற்பனையில் அமெரிக்க நிறுவனங்களின் அடாவடியை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். ‘ஐந்து பேரல் எண்ணெய் எடுக்கப்பட்டால், அவற்றில் ஒன்றே ஒன்றுதான் எடுக்கப்படும் நாட்டுக்கு கிடைக்கிறது. மீதி நான்கு வேறு எங்கோ யாருக்கோ கொழுத்த லாபத்துக்கு விற்கப்படுகிறது. இது ஏற்கெனவே முடியாத செயல். இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் புதியதாக மாற்றி புதுப்பிப்போம்’ என்று ஒருமுறை பேசினார். அயல்நாட்டு நிறுவனங்கள் பெட்ரோலை உறிஞ்சி உறிஞ்சி ஈக்குவேடாரை சக்கையாகப் பிழிவதாக கோரியா தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். பெட்ரோலால் கிடைக்கும் உபரி லாபத்தைக்கொண்டு ஈக்குவேடார் மக்களின் ஏழ்மையைப் போக்கும் சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டம். சோசலிஸம்தான் ஈக்குவேடார் மாதிரியான நாட்டுக்குப் பொருந்தும் என்பது அவரது நம்பிக்கை.

கடந்த கால் நூற்றாண்டில் மிக வலிமையான, நேர்மையான தலைவர் என்று மக்களிடையே பெயர் எடுத்திருக்கிறார். மிக லேசான, பலகீனமான எதிர்ப்புகளும் உண்டு என்றாலும் மூன்றாம் முறையாகவும் (இரண்டு முறை தேர்தலில் வென்று) அவரே அதிபராக தொடர்வது, அவருக்குக் கிடைத்திருக்கும் அபரிமிதமான மக்கள் ஆதரவுதான் காரணம்.

அமெரிக்கா தன்னுடைய எதிரிகளை பெட்ரோல் மார்க்கெட்டில்தான் உருவாக்குகிறது.

நன்றி-புதிய தலைமுறை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக