புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று 'நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை' - வணங்குவோம் வாருங்கள்!
Page 1 of 1 •
குருபூசை: நின்றிசீர் நெடுமாற நாயனாரின் குருபூசை துலை மாதம்(ஐப்பசி), அடுப்பு நாண்மீன்(பரணி நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது.
பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசு புரிந்து வந்தார். இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியார் என்னும் சிவக்கொழுந்தைப் பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றார். இவர் சமணர்களது மாய வலையில் சிக்கிப் பின்னர் ஆளுடைப் பிள்ளையாரின் திருவருளால் சைவ சமயம் சார்ந்து சைவ ஆகம நெறிப்படி ஒழுகினார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார். ஒரு சமயம், வடபுலத்துப் பகை மன்னனை திருநெல்வேலியில் நடந்த கடும்போரிலே தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். திருநெல்வேலி களத்திலே வெற்றி கண்ட நெடுமாறனைக் கன்னித் தமிழ்த் தெய்வப் புலவர்கள், திருநெல்வேலி வென்ற நெடுமாறர் என்று சிறப்பித்தார்கள். இத்தகைய தமது சிறந்த வெற்றிக்குக் காரணம் சிவனாரின் திருவருள் ஒன்றேதான் என்பதை உணர்ந்த நெடுமாறன் ஆலயப் பணிகள் பல புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு, திருநீற்று பெருமையை ஓங்கச் செய்த புகழோடு நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபாதமடைந்து இன்புற்றிருந்தார்.
================================================
விக்கிப்பீடியாவில் இருந்து:-
நின்றசீர் நெடுமாற நாயனார் பாண்டிய மன்னரும் சைவ நாயன்மார்களுள் ஒருவரும் ஆவர். “நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை குறிப்பிடுகிறது.
நெடுமாறனார் பாண்டுநாட்டு மன்னாராய்ப் பாராண்டு வந்தார். அந்நாளில் வடநாட்டு மன்னர் பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். அவர்களை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். அதனால் நெல்வேலிவென்ற நெடுமாறன் எனப் பெயர் பெற்றார். நெடுமாறனார் சோழமன்னன் மகளான மங்கையற்கரசியாரைத் திருமணம் செய்தார்.
மாறனார் தீவினைப் பயனாய் சமண சமயத்தைச் சார்ந்து தீப்பிணியுற்றார். திருஞானசம்பந்தர் என்னும் நாமமந்திரத்தைச் செவிப்புலத்துற்றபோதே மாறனாரது தீப்பிணி சிறிது குறைவுற்றது. சம்பந்தப் பிள்ளையார் வந்தபொழுது தன்னையும் அறியாமல் தன் தலைப்பக்கமாக இருந்த பொற்றவிசில் அவரை அமருமாறு கையெடுத்துக் காட்டினார். அப்பொழுது ஆரவாரித்த சமணரை அடங்குமாறு சொல்லி தம் சுரநோயைத் தீர்ப்பதுவே இருசாராருக்மாகியவாது என உரைத்தார். சம்பந்தப்பிளையார் திருப்பதிகம் பாடி திருநீறு தடவியபோது அவர்தம் வலப்பக்கம் அமுத இனிமையும் சுவர்க்க இன்பமும் போல சுகம் செய்தது. மற்றைய பாகம் நரகத் துன்பமும் கொடுவிடமும் போல வருத்தியது. சமணரை “வாதில் தோற்றீர்” எனக் கூறிச் சம்பந்தப் பிள்ளையாரை மனதார வணங்கி வருத்தம் முற்றூம் தீரும்படி வேண்டினார். முற்றும் தீர்ந்ததும் முடிமிசைக் கைகுவித்த கையராய் “ஞானசம்பந்தர் பாதம் அடைந்து உய்ந்தேன்” எனப் போற்றினார்.
சமணரை “என்னவாது உமக்கு” என ஏளனஞ்செய்தார். ஏளக்குறிப்பறியாத சமணர் அதனை ஒரு வினாவெனக் கொண்டு அனல் வாதத்திற்கும் எழுந்தனர். அனல் வாதத்தில் பச்சென்றிருந்த ஏட்டைப் பரசமய கோளரியார் காட்ட சமணர்கள் சாம்பரைக் கையினாற் பிசைந்துகொண்டு தூற்றிக்கொண்டு நின்றனர். அது கண்டு நகைசெய்த நெடுமாறர் ஏடு எரிந்த பின்னரும் “நீங்கள் தோற்றிலீர் போலும்” என்றார். அவ்வங்கதம் விளங்காத அமணர் அதனைப் பயன் மொழியாகக் கொண்டு புனல் வாதத்திற்கு எழுந்தனர். புனல் வாதத்தின்போது வாழ்கஅந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தைச் சம்பந்தப்பிள்ளையார் பாடினார். அத்திருப்பாசுரத்தில் அமைந்த வேந்தனும் ஓங்குக எனும் மந்திரமொழியால் கூன்நீங்கி நின்றசீர் நெடுமாறன் ஆனார். வாதில்தோற்ற சமணரை “வெங்கழுவேற்றுவன், இவ்வேந்தன்” என அவர்கள் சொன்னதற்கேற்ப முறை செய்யுமாறு குலச்சிறையாரைப் பணித்தார். அமணர் கழுவேறத் தாம் திருநீறு பூசிச் சைவரானார்.
சமந்தப் பிள்ளையாருடன் ஆலவாய்ப்பெருமான் முன் நின்று. “திருவாலவாய் மன்னரே! அமணரின் மாயையில் மயங்கிக் கிடந்த என்னை ஆளுடையபிள்ளையாரைத் தந்து ஆட்கொண்டருளினீர் எனப் போற்றி செய்தார். சம்பந்தப் பிள்ளையாருடன் கூடிப் பாண்டிநாட்டுத் திருத்தலம் பலவும் பணியும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் சோழ நாடு செல்ல நினைத்ததும் அவருடன் போகவே மனம் விரும்பினார். பிள்ளையார் “நீர் இங்கிருந்து சிவநெறி போற்றுவீர்” எனக் கூறிய மொழிக்கிணங்கி மதுரையில் இருந்து சிவநெறி தழைக்க அரசாண்டிருந்தார். இவ்வண்ணம் பகை தடிந்து, சிவநெறியிலே நெடுங்காலம் அரசாண்டு சிவலோகமுற்றார்.

அரிமர்த்தனின் மறைவுக்குப் பிறகு பலர் மதுரையை ஆண்டனர். அவர்களில் ஒருவன் கூன் பாண்டியன் என்னும் நெடுமாறன். நெடுமாறனின் போர்த்திறமையும், புகழும் சோழ மன்னனை ஈர்த்தது. அவன் தன் மகள் மங்கையர்க்கரசியை நெடுமாறனுக்கு திருமணம் செய்து வைத்தான். அத்துடன், குலச்சிறையார் என்ற அறிவார்ந்த அமைச்சரையும் மதுரைக்கு அனுப்பி, தன் மருமகனுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மதுரை மண்ணில் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் குடிபுகுந்தனர். மன்னன் நெடுமாறனை சமண மதம் ஈர்த்தது. மக்கள் சமண மதத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற உத்தரவையும் அவன் பிறப்பித்தான். இது மங்கையர்க்கரசியாருக்கும், குலச்சிறையாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மன்னனிடம் பேசும் துணிச்சல் அவர்களுக்கேது! மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரவே மக்கள் பயந்தனர். கோயில் காலியாகக் கிடந்தது.
இந்த அவலநிலை பற்றி, சொக்கநாதப் பெருமானிடமே சென்று பிரார்த்திக்க ராணி முடிவெடுத்தாள். குலச்சிறையாரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று, இருவருமாய் பிரார்த்தித்தனர். அப்போது அந்தணர் (அந்தணர் என்பது சாதியல்ல; சான்றோர்) ஒருவர் சன்னதிக்கு வந்தார். கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட யாருமே இல்லாத நிலையில், இவர் மட்டும் மன்னன் கட்டளையை மீறி எப்படி துணிச்சலாக உள்ளே வந்தார் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். வந்தவர் அரசியை வணங்கி, அரசியாரே! நான் சோழநாட்டில் வசிக்கிறேன். பல திருத்தலங்களுக்கும் சென்று வருகிறேன். மதுரையில் எம்பெருமானையும் தரிசிக்க எண்ணியே இங்கு வந்தேன். இங்கே யாருமே இல்லாததைக் கண்டு விசாரித்தேன். சமணத்தை மக்கள் பின்பற்றுவதால் யாருமே வருவதில்லை என அறிந்து வருத்தமடைந்தேன். இருப்பினும், மீண்டும் சைவத்தைக் கொண்டு வர ஒரு மார்க்கம் உள்ளது. சொல்லட்டுமா, என்றார்.கரும்பு தின்ன கூலியா? சொல்லுங்கள் அந்தணரே! என்றாள் அரசி.
சீர்காழியில் ஞானசம்பந்தன் என்னும் தெய்வமகன் இருக்கிறார். மூன்று வயதில் உமையம்மையிடமே பால் குடித்த குழந்தை அவர். அவரை இங்கு வரவழைத்தால் சைவம் தழைக்க வகை செய்வார், என்றார். உடனே ஓலை எழுதிய ராணி, அந்தணரே! தாங்கள் இதை ஞானசம்பந்தரிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள். அவரை மதுரைக்கு வரச்சொல்லுங்கள், என்றாள்.
திருமறைக்காடு (வேதாரண்யம்) இடத்தில் அவர் இருப்பதைக் கேள்விப்பட்ட அந்தணர் அங்கு சென்றார். அங்கே திருநாவுக்கரசரும் தங்கியிருந்தார். இருபெரும் சைவப்பழங்களைக் கண்ட அந்தணர் ஓலையை சம்பந்தரிடம் ஒப்படைத்து மதுரையின் நிலையை விளக்கினார். அதைப் படித்ததுமே அங்கு செல்ல முடிவெடுத்து விட்டார் சம்பந்தர்.
நாவுக்கரசர் அவரிடம், ஐயனே! சமணர்களைப் பற்றி தங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களால் பாதிக்கப் பட்ட எனக்கு அதுபற்றி நன்றாகவே தெரியும். மேலும், நாளும் கோளும் இப்போதைக்கு நன்மை தருவதாக இல்லை. நல்லநாள் பார்த்து கிளம்பலாமே! என்றார். சம்பந்தர் அவரிடம், திருநாவுக்கரசப் பெருமானே! ஐயனே! நாம் நமசிவாயத்தின் அடிமைகள். நமசிவாயம் இருக்க நாளும் கோளும் என்ன செய்து விடும், என்றவர், வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி, என்று துவங்கி பாடல்களை வரிசையாக அடுக்கினார். இன்றும் கூட, நவக்கிரகங்களால் நமக்கு தொல்லை ஏற்படுமோ என்று அஞ்சுவோர் இந்தப் பதிகத்தைப் பாடி வருவதை நாம் அறிவோம். இதையடுத்து நாவுக்கரசர் ஏதும் சொல்லவில்லை. கிரகங்களை எல்லாம் சட்டை செய்யாமல் சம்பந்தர் கிளம்பி விட்டார்.
ஞானசம்பந்தர் மதுரை வந்ததும், மங்கையர்க்கரசியார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முடங்கிக் கிடந்த சைவர்களும் எழுந்தனர். மன்னனின் தடையை மீறி சம்பந்தர் சொக்கநாதர் கோயிலுக்குச் சென்றார். முடங்கிக்கிடந்த சைவர்களுக்கு இந்தச் செயல் புத்துணர்வை அளித்தது. மதுரையில் வாகீசமுனிவர் என்பவர் தங்கியிருந்தார். அவர் சம்பந்தரை தனது திருமாளிகைக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
கோபமடைந்த சமணர்கள் அந்த மாளிகைக்கு தீ வைத்து சம்பந்தரைக் கொன்று விட தீர்மானித்தனர். அவர்கள் ஒரு வேள்வி நடத்தி தீத்தேவனை வரவழைத்து மாளிகையை அழிக்கச் சொன்னார்கள். தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட சம்பந்தர் கொதித்து விட்டார். மாளிகைக்குள் சிக்கிக் கொண்ட அவரை வெப்பம் வாட்டியது. இளம் தளிராயிற்றே அவர்! அந்த வேதனையைப் பொறுத்துக் கொண்டு செய்யனே திருஆலவாய் மேவிய எனத்துவங்கி ஒரு பதிகம் (11 பாடல்கள்) பாடினார். பாடலின் கடைசி வரியாக, இந்த துன்பம் தனக்கு ஏற்பட காரணமானவன் பாண்டியன் என்பதால், இந்தத் தீ அவனையே சாரட்டும் என்றரீதியில் கடைசி வரியை முடித்தார். அவர் பாடி முடித்தாரோ இல்லையோ... பஞ்சணையில் சந்தனம் பூசி குளுகுளுவென்ற தென்றலில் படுத்திருந்த பாண்டியன் உடலில் வெப்பம் பற்றிக் கொண்டது. அவன் அலறினான். கடும் ஜுரம் அடித்தது. வைத்தியர்கள் வந்தார்கள். பல மருந்துககைளக் கொடுத்தார்கள். அவனது வெப்பத்தைத் தணிக்க மயில்தோகையால் வருடினார்கள். எதற்கும் பலனில்லை. சமணர்களோ தங்களது மந்திரங்களை எல்லாம் பிரயோகித்துப் பார்த்தார்கள். முடியவில்லை. மதுரை வந்திருக்கும் சம்பந்தரை அழைத்து வந்து வைத்தியம் செய்தால் நோய் குணமாகும் என மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மன்னனிடம் சொல்ல, நோயின் கொடுமை தாங்க முடியாத அவன் அதற்கு சம்மதித்தான். சம்பந்தர் வந்தார். இதைக் கேள்விப் பட்ட சமணர்களும் வந்தனர். மன்னரே! இந்த சம்பந்தரால் உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது. இதோ! ஐந்து நிமிடத்தில் குணமாக்குகிறோம், என்று சொல்லி ஏதோ வைத்தியம் செய்ய, அது மன்னனின் வேதனையை அதிகமாக்கி விட்டது. போதாக் குறைக்கு அந்த வெப்பம் அருகில் இருந்த சமணர்களையும் தாக்கியது. அவர்கள் ஒதுங்கி நின்றனர். மன்னன் கத்தினான்.
சமணர்களே! ஒதுங்கி நில்லுங்கள். சம்பந்தரே எனக்கு வைத்தியம் பார்க்கட்டும், என்றான். சம்பந்தர் உடனே திருநீறை கையில் எடுக்க,அரசே! இந்தச் சிறுவன் உங்களை மயக்கப் பார்க்கிறான். இந்த திருநீறைக் கையில் எடுக்க விடாதீர்கள், என்றனர். மன்னன் என்ன செய்வதென தெரியாமல் விழிக்க, சம்பந்தர் வேறு ஏதும் வேண்டாம். கோயில் மடைப்பள்ளி சாம்பலைக் கொண்டு வாருங்கள், என்றார். சாம்பல் வந்தது. அதை மன்னனின் உடலில் தேய்த்ததுமே வெப்பம் குறைந்து விட்டது. மன்னன் சம்பந்தரைப் பாராட்டியதுடன், சிவாயநம என்னும் மந்திரத்தையும் அவர் உபதேசிக்கக் கேட்டு, அதை ஏற்று மீண்டும் சைவன் ஆனான்.
நெடுமாற பாண்டியன் கூன் உடம்பு கொண்டவன். சம்பந்தரின் அருள் மழையால் அவனது கூனும் நிமிர்ந்து விட்டது. மன்னன் அவருடன் கோயிலுக்குச் சென்றான். மக்கள் ஆரவாரம் செய்து அவர்களை வரவேற்றனர்.

சாமி அவர்கள் மிக நல்ல செய்தியை - இல்லை இல்லை வரலாற்றை - அளித்துள்ளார் ! மூட நம்பிக்கையையும் அருமையான தமிழர் வராற்றையும் பிரித்தறிய இயலாவாறு சில தலைமுறைகளைக் கெடுத்த பெருமை நம்மனோர்க்கு உண்டு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1