ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

2 posters

Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Jul 15, 2013 8:59 pm

குழந்தைகள் குக்கூ ...
நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .மின் அஞ்சல் tharuvavaideepan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018.
விலை ரூபாய் 60.மின் அஞ்சல் minminihaiku@gmail.com

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் .

ஒப்பற்ற திருக்குறளுக்கு விளக்கம் தரும் விதமாக குழந்தைகள் இலக்கியம் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . .இந்த நூலை ஆறிலிருந்து அறுபது வரை யாவரும் படிக்கலாம் .'ஓடி விளையாடு பாப்பா ' என்று பாடிய மகாகவி பாரதியார்தான் முதன் முதலில் குக்கூ கவிதைகளை தமிழில் அறிமுகம் செய்தவர் .அவர் வழி நின்று இவரும் குக்கூ கவிதை எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .அவர்கள் அரசுப்பணியில் , பரபரப்பான வட்டாட்சியர் பணி புரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருவது பாராட்டுக்குரியது . சுட்டிப் பூங்கா என்ற ஹைக்கூ கவிதை நூலின் மூலம் பரவலானப் பாராட்டைப் பெற்ற கவிஞரின் அடுத்த படிப்பு இந்நூல்

குயிலின் கூவலாக கவிதை வடித்துள்ளார் . எவ்வளவு கவலை , சோகம் நம்மிடையே இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பைக் கண்டால் கவலை , சோகம் காணமல் போகும் .இந்த நூல் வாசிக்கும் வாசகர்களுக்கும் கவலை , சோகம் காணமல் போகும் .என்று உறுதி கூறலாம்
.
அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் மிக நன்று .அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று .குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பாவின் திருமகள் நா .தேவி நாச்சியப்பன் அவர்களின் வாழ்த்துரை மிக நன்று .இந்த நூலை வடிவமைத்து , வாழ்த்துரை வழங்கி வெளியிட்டு உள்ள மின்மினி இதழ் ஆசிரியரும் , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் கன்னிகோயில் இராஜாவின் கை வண்ணம் நூல் ஆசிரியரின் கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன .குழந்தைகளின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள அனைத்து குக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

படபடக்கும்
குழந்தைகளின்
இமைகள்
தெரித்து
விழும்
ஹைக்கூப் பூக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் ஹைக்கூப் பார்வை மிக நன்று .

குழந்தைகள் விளையாடுவதை ரசித்து மகிழலாம் .குழந்தைகளோடு விளையாடினால் குழந்தைகளாகவே மாறி விடலாம் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

குழந்தை
விளையாடும்போது
ஆனந்தம்
குழந்தைகளோடு
விளையாடும்போது
பேரானந்தம் !

நிலாவை எல்லாக் கவிஞர்களும் பாடி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்கள் வித்தியாசமாக பாடி உள்ளார் .பாருங்கள் .

தெருக்கள் தோறும்
நிலாக்கள்
விளையாடும் அதிசயம்
குழந்தைகள் !

பணம் கூடக் கூட நடிகையின் ஆடை குறையும் அவலத்தை சுட்டும் விதமாக உள்ள கவிதை நன்று .

அரை குறை ஆடையில்
முகம் சுளிக்க வைத்தபடி
நடிகை !
முழுமையான நிருவாணத்தில்
அழகாக குழந்தை !

பெற்றோர்கள் பலர் குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிப்பதே இல்லை .குறிப்பாக அடுககங்களில் வாழும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்பும் இல்லை .

விரட்டாதீர்கள்
விளையாடவரும்
விளையாட்டுக்களை
அனுமதியுங்கள்
குழந்தைளோடு விளையாட !

பலூன் கண்டதும் பரவசம் அடையும் குழந்தைகளின் மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

விரிந்து கொள்கிறது
பலூன்களை ஊதும்போது
குழந்தைகளின் மனங்களும் !

அரும்புகளின் குறும்புகள் பார்த்திட அழகோ அழகு !அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .மிக நன்று .

குதூகலமாய்க்
கும்மாளம் போட்டுக் கொள்கின்றன
குறும்புகள்
குழந்தைகளிடத்தில் !

படிக்கும் வாசகர்கள் மனதில் குழந்தைகளைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளார் .

தவழும் தண்ணீர்
குளிக்கும் குழந்தை
சுத்தமாகிக் கொள்ளும்
நதி !

நிலாவே குழந்தைகளைத் தேடுமாம் நூல் ஆசிரியர் கற்பனை மிக நன்று .

வீடுதோறும்
முற்றங்க்ளைத் தேடுகிறது
நிலா !
குழந்தைகளுக்குப்
பால்சோறு படைக்க !

பல குடும்பங்கள் கிராமம் விட்டு நகரத்திற்கு நகர்ந்து விட்ட காரணத்தால் , நகரத்து வீட்டில் தாத்தா பாட்டி இருப்பது இல்லை .குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாரும் இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கிராமத்து
வீட்டுத் திண்ணையில்
நசுங்கிக் கிடக்கும்
ஏராளமான கதைகள்
குழந்தைகளுக்காக !

கடலையும் குழந்தையையும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தும் கவிதை நன்று .

கால்களை
நனைத்துக் கொள்ள
குழந்தைகள் வருகையில்
களிப்படைந்து விடுகிறது கடல் !

குழந்தைகள் காலையில் கண் விழித்தவுடனேயே சுறுசுறுப்பாகி விடுவார்கள் .அவர்களை ரசித்தால் நமக்கும் சுறுசுறுப்பு வந்து விடும் .

படுக்கையிலிருந்து
குழந்தை எழுகையில்
விழித்துக் கொள்கின்றன
விளையாட்டுகள் !

இப்படி நூல் முழுவதும் குழந்தைகள் !குழந்தைகள் !குழந்தைகள் ! தவிர வேறு இல்லை என்று சொல்லும் அளவிற்கு குழந்தை இலக்கியம் படைத்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்

.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by பார்த்திபன் Tue Jul 16, 2013 11:07 am

அருமையான கவிதைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். கண்டிப்பாக குழந்தைகள் குக்கூ நூலை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்திவிட்டது தங்களது விமர்சனம்.

தொடர்ந்து தங்களது நூல் விமர்சனங்களைப் படித்து வருகிறேன். தாங்கள் படித்ததோடு நிற்காமல் அதை விமர்சனம் வாயிலாக மற்றவர்க்கும் பரிந்துரை செய்யும் உங்கள் செயல் பாராட்டத்தக்கது. தங்கள் ஒரு நல்ல வாசிப்பாளர் என்பதையும் மீறி நல்ல படைப்புகள் அனேகரிடம் போய்ச் சேரவேண்டும் என்கிற உயர் சிந்தனை உடையவராகவும் இருப்பது கண்டு மகிழ்ச்சி! தங்கள் அனைத்து நூல் விமர்சனங்களையும் தொகுத்து ஒரு நூலாகவே வெளியிடலாம். அந்த அளவிற்கு நேர்தியாக இருக்கிறது உங்களது விமர்சனங்கள். பாராட்டுகள்!மகிழ்ச்சி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Tue Jul 16, 2013 6:12 pm

அன்புள்ள பார்த்திபன் வர்களுக்கு வணக்கம் .25 ஹைக்கூ கவிஞர்களின் நூல் விமர்சனம் நூலாக வந்து விட்டது .பெயர் ஹைக்கூ ஆற்றுப்படை .பின்னர் ஒவ்வொரு நூலாக எல்லா
விம்ர்சனமும் நூலாக வெளியிட திட்டம் உள்ளது .தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி .

.http://eraeravi.blogspot.in/2012/07/blog-post_6112.html
http://www.tamilthottam.in/f16-forum

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

குழந்தைகள் குக்கூ   ...  நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: குழந்தைகள் குக்கூ ... நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum