Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரவணா ஸ்டோர்!
+8
ஹர்ஷித்
krishnaamma
ஜாஹீதாபானு
பூவன்
ராஜா
பார்த்திபன்
manikandan.dp
ராஜு சரவணன்
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சரவணா ஸ்டோர்!
சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம்.
வேலைப்பளுவுக்கிடையில் அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல் சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள் ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன்.
அங்கு எப்போது சென்றாலும் வேலைப்பார்க்கும் ஏதாவது ஒரு பையனிடமோ பெண்ணிடமோ பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்பேன். “நானும் திருநெல்வேலிக்காரந்தாம்டே..”னு சொல்லி பேச ஆரம்பித்தால் போதும் அவங்களும் உற்சாகமாப்பேச ஆரம்பிப்பார்கள். அவர்களின் கதைகளை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு வரும் நாட்கள் எல்லாம் மனம் கனத்துப்போகும்.
இன்று அங்கு சென்றிருந்தபோது அந்த காட்சியைக் கண்டேன். ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க எலும்பு தோலுமாக இருந்த இளம்பெண் ஒருவர் சோர்ந்துபோய் துணிகள் தொங்கவிடப்பட்ட இடங்களுக்கு நடுவில் மறைவாய் அமர்ந்திருந்தார்.
“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“கால்வலிண்ணே… முடியல..” என்றார் பரிதாபமாக.
“ஏன் உங்களுக்கு உட்கார நாற்காலி எதுவும் வைக்க மாட்டாங்களா..?”
“அதெல்லாம் கிடையாதுண்ணே.. காலையில வந்ததுல இருந்து திரும்ப தூங்கப்போறவரைக்கும் பதினாறு மணிநேரம் நாங்க நின்னுட்டு தான் வேலைப்பார்க்கணும்.. வலி எடுக்கும்.. கொஞ்சம் ஓரமா உக்காரலாம்னு பார்த்தா சூப்பர்வைஸருங்க கண்ல பட்டா செத்தோம்..” என்று அவர் கூறியபோது என் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
சரவணா ஸ்டோருக்குள் பொருட்கள் வாங்கவோ, குறைந்த பட்சம் அந்த பல அடுக்கு மாளிகைக்குள் சுற்றிப்பார்க்கவாவது நாம் சென்றிருப்போம்.
சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தால் முதல் ஒரு மணிநேரம் உற்சாகமாக சுற்றி வந்து பொருட்களை வாங்க முடியும். அதன்பிறகு தன்னியல்பாக உங்கள் கால்களில் உளைச்சல் ஏற்படும். எங்காவது உட்காரலாம் என்று கால்கள் கெஞ்சும்.
அந்தமாதிரியான தருணத்தில் எப்போதாவது நீங்கள் அங்கு பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே பணிபுரியும் ஊழியர்களின் கால்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..
நம்முடைய கால்களைப் போன்றே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கும் கால்கள் உண்டு. அந்த கால்களுக்கும் வலி எடுக்கும்.. அவர்கள் எங்கு உட்கார்கிறார்கள் ஏன் அவர்களுக்கு உட்கார இருக்கை கொடுக்கவில்லை என்பது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..
இப்படி பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே வேலைப்பார்க்கும் நிலைக்கு காரணம் அவர்களின் குடும்ப சூழல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது சரவணா ஸ்டோர் கும்பல்.
தென்மாவட்டங்களில் இருந்து குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகளை இறக்குமதி செய்த சரவணா ஸ்டோர் ஓனர்கள் இப்போது வட இந்திய தொழிலாளர்களை குறிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்களை விட இன்னும்கூட குறைவாக ஊதியம் கொடுக்கலாம். அவர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சுரண்டுவதுதான் ஓனர்களின் தந்திரம். குறைவான ஊதியத்திலும் முடிவெட்டுறது முதற்கொண்டு பல காரணங்களைச் சொல்லி பிடித்தமும் செய்துக் கொள்வார்கள்.
இப்படி தொழிலாளர்களிடம் ஆட்டையப்போட்ட பணத்தை தான் நடிகைகளுக்கும் நடிகன்களுக்கும் விளம்பரம் என்றப்பெயரில் வாரி இறைக்கிறார்கள் சரவணாஸ்டோர்ஸ் முதலாளிகள்.
இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை.
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்த தொழிலாளர்கள் விசயத்தில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தொழிலாளர்களின் உரிமையான எட்டுமணி நேர வேலை என்பதை விடுங்கள்.. குறைந்தபட்சம் முதலில் பதினாறு மணிநேரம் நின்றுக் கொண்டு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு நாற்காலியாவது போட்டுக்கொடுக்க சொல்லுங்கள் பாவிகளே..
“எடுத்துக்கோ.. எடுத்துக்கோ..
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் விதவிதமான நடிகைகள் வந்து துள்ளிக் குதிப்பதை பார்க்கும்போது, இனிமேல் கொஞ்சம் இந்த தொழிலாளர்களின் கால்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே…
அந்த கால்களிலிருந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சிகளால் உறிஞ்சப்பட்ட ரத்தமே அந்த நடிகைகளிடம் கொட்டப்படும் கோடிகள்..
-கார்ட்டூனிஸ்ட்.பாலா
நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம்
Re: சரவணா ஸ்டோர்!
உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: சரவணா ஸ்டோர்!
இதைப் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!manikandan.dp wrote:
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
Re: சரவணா ஸ்டோர்!
அதானே , எனக்கும் தெரியாதே என்ன நடந்தது ?! கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் நண்பரேபார்த்திபன் wrote:இதைப் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!manikandan.dp wrote:
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
Re: சரவணா ஸ்டோர்!
அங்காடிப் பட்சிகள்
பள்ளி இடைவிலகளோடு
பசிப்போக்கப் போராட
பட்டணத்தை நோக்கிப்
பறந்து வந்த
பாவப்பட்ட பட்சிகள் !
இரவும் பகலும் உருளும்
இயந்திரமாய் எமையாக்கி
உறிஞ்சி உறிஞ்சி – எம்
உதிரம் சப்புகிறது அங்காடி;
உரிமையாளனும் கட்டிடமும்
இன்னும் உயர்வதற்காய் !
செய்யா தப்பிற்கும்
கன்னத்தில் ஐவிரல் சித்திரங்களோடு;
மனிதம் செத்த மாக்கள் மேய்க்கும்
மக்களாகிப் போகின்றோம்-
மட்கிப் போன கனாக்களோடு !
அவர்கள் - மகிழ்வோடு சுற்ற
மகிழூந்து துடைக்கவும்...
காலணி மினுக்கி,
காரி உமிழுமிடம் கழுவிப் போடவும்;
ஊரிலிருந்து ஓடிவந்து-
கொத்தடிமைகளாய்ச் செத்து மடிகின்றோம் !
சிறுநீருக்கும் தேநீருக்கும் கூட
அனுமதி வேண்டி அங்கலாய்கிறோம்!
சதா ரணம் சாதாரணமாகிப் போக
சாதம் உண்ணும் வேளையிலும்
சக்கை உண்டுச் சாகின்றோம் !
கந்தலானாலும்
கண்களைக் கசக்கிக்
கட்டிக் கொள்கின்றோம்- அகத்துள்
நெருப்போடும் வெறுப்போடும்,
ஆடையகத் தொழிலாளிகள் என்ற
அடையாளங்களுடன் !
இங்கே எல்லாமே
உயர்விலை தான்
மலிவாக - நாம் மட்டுமே !
நிமிர்ந்து நடக்கும் போதே
கூன் விழுந்த வாழ்க்கை...
நேர்ப்படும் நேரம் சொல்ல
யாருமில்லை !
- நண்பர் 'கே.எஸ்.கலை' (eluthu.com)
பள்ளி இடைவிலகளோடு
பசிப்போக்கப் போராட
பட்டணத்தை நோக்கிப்
பறந்து வந்த
பாவப்பட்ட பட்சிகள் !
இரவும் பகலும் உருளும்
இயந்திரமாய் எமையாக்கி
உறிஞ்சி உறிஞ்சி – எம்
உதிரம் சப்புகிறது அங்காடி;
உரிமையாளனும் கட்டிடமும்
இன்னும் உயர்வதற்காய் !
செய்யா தப்பிற்கும்
கன்னத்தில் ஐவிரல் சித்திரங்களோடு;
மனிதம் செத்த மாக்கள் மேய்க்கும்
மக்களாகிப் போகின்றோம்-
மட்கிப் போன கனாக்களோடு !
அவர்கள் - மகிழ்வோடு சுற்ற
மகிழூந்து துடைக்கவும்...
காலணி மினுக்கி,
காரி உமிழுமிடம் கழுவிப் போடவும்;
ஊரிலிருந்து ஓடிவந்து-
கொத்தடிமைகளாய்ச் செத்து மடிகின்றோம் !
சிறுநீருக்கும் தேநீருக்கும் கூட
அனுமதி வேண்டி அங்கலாய்கிறோம்!
சதா ரணம் சாதாரணமாகிப் போக
சாதம் உண்ணும் வேளையிலும்
சக்கை உண்டுச் சாகின்றோம் !
கந்தலானாலும்
கண்களைக் கசக்கிக்
கட்டிக் கொள்கின்றோம்- அகத்துள்
நெருப்போடும் வெறுப்போடும்,
ஆடையகத் தொழிலாளிகள் என்ற
அடையாளங்களுடன் !
இங்கே எல்லாமே
உயர்விலை தான்
மலிவாக - நாம் மட்டுமே !
நிமிர்ந்து நடக்கும் போதே
கூன் விழுந்த வாழ்க்கை...
நேர்ப்படும் நேரம் சொல்ல
யாருமில்லை !
- நண்பர் 'கே.எஸ்.கலை' (eluthu.com)
Re: சரவணா ஸ்டோர்!
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது.
இன்று சென்னையில் மட்டும் இல்லை , அதே போல சரவணா ஸ்டோர் மட்டும் இல்லை பெரும்பாலான வர்த்தகநிறுவனங்கள் வேலை செய்யும் தொழிலாளர் நிலைமை இதுதான் ...
இதயம் இழந்து இயந்திரமாய்
இயக்கப்படும் இரக்கமற்ற
இவர்களின் இதயம் என்ன இயந்திரமா ?
இல்லாதவரை இல்லாமல் ஆக்கிடும்
இவர்களுக்குள் இரக்கமும் வாரதோ ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சரவணா ஸ்டோர்!
manikandan.dp wrote:உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
என்னது இறந்துட்டாரா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சரவணா ஸ்டோர்!
பூவன் wrote:பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது.
இன்று சென்னையில் மட்டும் இல்லை , அதே போல சரவணா ஸ்டோர் மட்டும் இல்லை பெரும்பாலான வர்த்தகநிறுவனங்கள் வேலை செய்யும் தொழிலாளர் நிலைமை இதுதான் ...
இதயம் இழந்து இயந்திரமாய்
இயக்கப்படும் இரக்கமற்ற
இவர்களின் இதயம் என்ன இயந்திரமா ?
இல்லாதவரை இல்லாமல் ஆக்கிடும்
இவர்களுக்குள் இரக்கமும் வாரதோ ?
சூப்பர் பூவன்
Re: சரவணா ஸ்டோர்!
பார்த்திபன் wrote:அங்காடிப் பட்சிகள்
பள்ளி இடைவிலகளோடு
பசிப்போக்கப் போராட
பட்டணத்தை நோக்கிப்
பறந்து வந்த
பாவப்பட்ட பட்சிகள் !
இரவும் பகலும் உருளும்
இயந்திரமாய் எமையாக்கி
உறிஞ்சி உறிஞ்சி – எம்
உதிரம் சப்புகிறது அங்காடி;
உரிமையாளனும் கட்டிடமும்
இன்னும் உயர்வதற்காய் !
செய்யா தப்பிற்கும்
கன்னத்தில் ஐவிரல் சித்திரங்களோடு;
மனிதம் செத்த மாக்கள் மேய்க்கும்
மக்களாகிப் போகின்றோம்-
மட்கிப் போன கனாக்களோடு !
அவர்கள் - மகிழ்வோடு சுற்ற
மகிழூந்து துடைக்கவும்...
காலணி மினுக்கி,
காரி உமிழுமிடம் கழுவிப் போடவும்;
ஊரிலிருந்து ஓடிவந்து-
கொத்தடிமைகளாய்ச் செத்து மடிகின்றோம் !
சிறுநீருக்கும் தேநீருக்கும் கூட
அனுமதி வேண்டி அங்கலாய்கிறோம்!
சதா ரணம் சாதாரணமாகிப் போக
சாதம் உண்ணும் வேளையிலும்
சக்கை உண்டுச் சாகின்றோம் !
கந்தலானாலும்
கண்களைக் கசக்கிக்
கட்டிக் கொள்கின்றோம்- அகத்துள்
நெருப்போடும் வெறுப்போடும்,
ஆடையகத் தொழிலாளிகள் என்ற
அடையாளங்களுடன் !
இங்கே எல்லாமே
உயர்விலை தான்
மலிவாக - நாம் மட்டுமே !
நிமிர்ந்து நடக்கும் போதே
கூன் விழுந்த வாழ்க்கை...
நேர்ப்படும் நேரம் சொல்ல
யாருமில்லை !
- நண்பர் 'கே.எஸ்.கலை' (eluthu.com)
மனம் கனக்கும் கவிதை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: சரவணா ஸ்டோர்!
ராஜா wrote:அதானே , எனக்கும் தெரியாதே என்ன நடந்தது ?! கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் நண்பரேபார்த்திபன் wrote:இதைப் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!manikandan.dp wrote:
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் ......
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இறந்ததை அவரது மகன்கள் வெளியே சொல்லாமல் அடக்கம் செய்துவிட்டனர் ..... பின் உறவினர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தான் தெரிய வந்தது.
இதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது
1) இறந்த செய்தி தெரிந்தால் சரவணா ஸ்டோர் வியாபாரம் பாதிக்கப்பட்டும் மற்றும் குறைந்தது 2 நாள் கடையை மூட நேரிடும் ....
2)சொத்துகளில் இருந்த பிரச்சனையை சரிசெய்ய அல்லது பங்கு பிரிக்க இரண்டு நாள் தேவை
3)அவர் நோய்வாய் பட்டு இறந்தால் (வெளியே சொல்ல முடியாத நோயாக இருக்கலாம் )
என பல காரணங்கள் நான் கேள்விபட்டேன்
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இறந்ததை சொல்லாமல் இருந்தற்கு ஒரு நல்ல காரணங்கள் இருக்க வாய்ப்புஇல்லை ...
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கொரோனா பீதி- புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மூடப்பட்டது!
» சரவணா ஸ்டோர் கடைகளில் கணக்கில் வராத ரூ. 150 கோடி பணம், நகைகள் சிக்கின-குடோன்களுக்கு சீல்!
» சரவணா என்கிற சவக்கிடங்கு!?
» 30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்
» வேலன்-ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும்
» சரவணா ஸ்டோர் கடைகளில் கணக்கில் வராத ரூ. 150 கோடி பணம், நகைகள் சிக்கின-குடோன்களுக்கு சீல்!
» சரவணா என்கிற சவக்கிடங்கு!?
» 30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்
» வேலன்-ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum