புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
21 Posts - 84%
heezulia
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
1 Post - 4%
viyasan
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
213 Posts - 42%
heezulia
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
21 Posts - 4%
prajai
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_m10 ஒளிந்திருந்த முகம் (The Hidden Face) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளிந்திருந்த முகம் (The Hidden Face)


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 1:02 pm

போன வாரம், ஞாயிற்று கிழமை, இரவு Set Max சேனலில், Murder 3 ஹிந்தி படம் காண்பித்து கொண்டிருந்தார்கள்.. அது ஒரு த்ரில்லர் படம், நான் பார்க்க அமர்ந்த சமயம், பாதி படம் முடிந்து விட்டிருந்தது, தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, இருந்தும் படம் பரபரப்பாக இருந்தது, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் இருந்தது! நேரம் ஆகி விட்ட படியால், டீவீயை அணைக்க வேண்டிய கட்டாயம், இல்லையேல் அடுத்த நாள் காலை எந்திரிக்க முடியாது. அரை மனதோடு படுக்க சென்றேன்…. அடுத்து என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று என்ற புலம்பலோடு தூங்கி போனேன்!!

சிறு வயதில் இருந்தே, ஒரு பழக்கம், எந்த கதை புத்தகத்தை எடுத்தாலும், கதை முடிவு தெரியாமல் எந்திரித்ததில்லை.. அது இன்னிக்கு வரைக்கும் அந்த ஆர்வம் குறையவே இல்லை… அதே ஆர்வத்தோடு, அடுத்த நாள் காலை, என் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இணையத்தில் Murder3 படத்துக்கான விமர்சன பக்கங்களை தேடி, தேடி படித்தேன், அப்போ தான் தெரிந்தது, இந்த படத்தை, ‘La Cara Oculta(The Hidden Face’ என்ற Spanish படத்தின் கதையை தான் ஹிந்தியில் எடுத்திருக்கிரார்கள் என்று.. டூப்ளிகேட்டை விட ஒரிஜினல் இன்னும் நல்லா இருக்கும் இல்ல, இணையத்தில் ஒரு வழியாய் தேடி பிடித்து பார்த்து விட்டேன்….

படத்தின் ஹீரோ Adrian, அவனை தான் முதல் காட்சியில் அறிமுக படுத்துகிரார் இயக்குனர்.. அவன் ஒரு புகழ் பெற்ற இசை கலைஞன்.. அவன் தன் உயிர் காதலி அவனுக்காக விட்டு சென்ற ஒளி படத்தை எடுத்து பார்த்து, மனது வெறுத்து போய் அழுது கொண்டிருந்தான்.. அந்த ஒளி படத்தில், அவனுடைய காதலி Belen, தன்னால் இனி ஒரு நிமிடம் கூட அவனுடன் சேர்ந்து இருக்க முடியாது எனவும், தன்னை தேடி வர வேண்டாம் எனவும், இந்த முடிவு தான், இருவருக்கும் நல்லது என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறி கொண்டிருந்தாள்.. அழுது முடித்த கையோடு, தன்னை போலவே அழுது கொண்டிருந்த மழையில், தன் காரை எடுத்து கொண்டு, தன் மனதை அமைதி படுத்த Bar க்கு சென்றான்.. மனது வெறுத்த நிலையில், அந்த Barரில் வேலை செய்யும், Fabiana அவனுடைய மன காயத்துக்கு மருந்தாகிறாள்..

மெல்ல அவன் மனதுக்குள் நுழைந்த Fabiana, அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். பெலென் விட்டு, விட்டு சென்றதை, கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தான் Andrean.. அவர்கள் தங்கி இருந்த வீடு, Columbiaவில் Bogota என்ற மாநகரத்தில், ஊருக்கு வெளியே ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் அமைந்திருந்தது! சற்றே பெரிய, அழகான, அமானுஷ்யமான வீடு அது.. அந்த வீட்டில், வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான நாய் ஒன்றும் இருந்தது. அதன் பெயர் Hans.

Fabiana , தனியாக இருக்கும் போது சிறிது பயமாகவே இருக்கிரது.. நிறைய விஷயங்கள் வித்யாசமாக அவள் கண்ணில் படுகிரது.. முக்கியமாக, அவள் குளியலறையில் இருக்கும் போது, தண்ணீர் தேங்கி இருக்கும் வாஷ் பேசினில், அலைகளை கவனிக்கிராள்..வாஷ் பேசின் குழாய் வழியாக, சன்னமாக ஒரு ஒலியை உணர்கிராள். அவ்வப்பொழுது, லோக்கல் போலீஸ், காணாமல் போன Belen பற்றி , விசாரித்து செல்கிரார்கள். அதில் ஒரு போலீஸ், Fabiana உயிருக்கு உயிராக காதலிப்பவன்! அவனுக்கு, Fabiana, Adrianனுடன் வந்து இருப்பதில் சிறிது வருத்தம் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை எச்சரிக்கை செய்கிரான்.. Fabiana, புது பணக்கார காதலன் கிடைத்த மோகத்தில் எதையும், சட்டை செய்ய மறுக்கிறாள்.. Fabiana வுக்கு, அந்த வீட்டில், அடுதடுத்து ஆச்சரியங்கள், காத்து கொண்டிருந்தன.. ஒரு செய்னில், கோர்த்து வைக்க பட்டிருந்த சாவியை, தற்செயலாக கண்டெடுக்கிறாள்.. ஒன்றும் புறியாமல் அதை எடுத்து மாலை போல அணிந்து கொள்கிராள்.

ஒரு நாள், படுக்கையறையில் உள்ள புத்தக அலமாரி, சிதறி கிடக்கிறது, Fabiana குளியலறையில்,கண்ணாடி முன் நின்று, யாரிடமோ பேசும் சத்தம் கேட்டு, அட்ரியன் ஆச்சரியத்தோடு, உள்ளே நுழைகிறான்.. அவனை கண்டவுடன், பேச்சை மாற்றுகிராள் Fabiana. அவனுடைய, முன்னால் காதலியான, Belen பற்றி, ஏதாவது, தகவல் தெரிந்ததா, என்று அக்கறையோடு விசாரிக்கிராள்! உடனே குறுக்கிட்டு பேசிய Adrian, Belen என்பவள், என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு, வேறு ஒரு ஆடவனை தேடி சென்று விட்டாள், அவளை பற்றி எதுவும் பேசாதே என்று அவள் வாயை அடைத்து, அவளை அணைத்து கொள்கிரான்.. Adrianனை அணைத்தபடி, படுக்கையறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்து பார்க்கிராள் Fabiana!! அந்த கண்ணாடியின் உள்ளே, ஒரு பயங்கரமான, அதிர்ச்சியான, கோபத்தொட கத்தி கொண்டிருக்கும் Belen உடைய முகத்தை, முதன் முறையாக காட்டுகிரார் இயக்குனர்!!!

Belenனின் கோபமான, கோர முகத்தை காட்டிய இயக்குனர், அவளுடைய கடந்த கால நிகழ்வுகளுக்கு நம்மையும் இழுத்து செல்கிரார்.. Belenனின் காதலன் Adrianனுக்கு, கொலம்பியாவில் உல்ல Bogota மாநகரத்தின், Cவை, தலைமை ஏற்று, வழி நடத்த அழைக்கிரார்கள்! அவன் தன் உயிர்க் காதலி Belenனையும், அழைத்து செல்கிரான். Belen தன் காதலனுக்காக, தான் பார்த்து கொண்டிருக்கும் வேலையை துறந்து விட்டு, காதலோடு அவனை தொடர்ந்து செல்கிறாள்.

Bogotaவில், ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில், அமைந்த, அரண்மனை போன்ற பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்கிரார்கள். அந்த வீடு, Emma என்ற ஒரு பெண்மணிக்கு சொந்தமான வீடு. அவளுடைய கணவர் ஒரு ஜெர்மானியர். அவர் இறந்து விட்ட படியால், அவள் இந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை எனவும், தான் பெர்லின் செல்ல விரும்புவதாகவும், குறிப்பிடுகிராள். தன் வளர்ப்பு நாயான Hanசை பார்த்து கொள்ளுமாரும், பெர்லின் கிளம்புவதற்க்கு முன், ஒரு தடவை, வருவதாய் சொல்லி விட்டு கிளம்புகிராள்.

Adrianனும், Belenனும், தங்கள் வாழ்க்கையை அவ்வீட்டினுள் இனிதே ஆரம்பிக்கின்றனர்!! ஒரு நாள் தான் வழி நடத்தும்,இசை குழுவினர் அரங்கேற்றிய நிகழ்ச்சியை காண்பிக்க, Belenனை அழைத்து கொண்டு செல்கிரான் Adrian. மிக அற்புதமாக, இசை குழுவை வழி நடத்தும் Adrianனை கண்டு, உள்ளம் பூரித்து போகிராள் பெலென். நிகழ்ச்சி, பெருத்த ஆரவாரத்துடனும், கைத்தட்டலுடன் இனிதாக முடிகிரது. மிகுந்த உற்சாகத்துடன் Adrianனை தேடி செல்கிராள் பெலென். அவனை, காணாமல் ஏமாற்றம் அடையும் அவள், ஒரு மறைவான இடத்தில்,பேசி கொண்டிருக்கும், Adrianனையும், அவனுடைய இசை குழுவின், வயலின் வாசிக்கும் Veronicaவையும் முதன் முறையாக பார்க்கிராள். பிறகு, இருவரும் வீடு திரும்புகிரார்கள்.

அடுத்த நாள், Adrian வேலைக்கு செல்ல, பெலெனும் தன் வேலை சம்பந்தமாக, தனியே ஊருக்குள் செல்கிராள். வேலை வேகமாக முடிந்த படியால், Adrian வேலை செய்யும் இடத்துக்கு, சென்று விட்டு வர நினைக்கிராள். அவனுடைய அலுவலகத்துக்கு உற்சாகமாக சென்றவளுக்கு,ஏமாற்றமே மிஞ்சுகிரது. அங்கே, Adrian, Veronicaவுடன், சிரித்து பேசி, தண்ணியடித்து கூத்தடித்து கொண்டிருக்கிரான்! படம்விருட்டென்று, அவனை இழுத்து கொண்டு வெளியேறிய, பெலென்,வீட்டுக்கு செல்லும் வரை, அவனை கடிந்து கொண்டே வருகிராள். Adrianனும், தனக்கும், Veronicaவுக்கும், எந்த ஒரு உறவும் இல்லை என்று அவள் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்கிரான். ஊடலுடன் ஆரம்பித்த அந்த தினம், இரவில் காதலுடன் முடிவடைகிரது.

அடுத்த நாள், Adrian வேலைக்கு, செல்ல ஆயுத்தமாக, அவனின், கை பேசியை எடுத்து கொண்டு, கோபமாக, அவனை இடை மறிக்கிராள் பெலென். ‘உனக்கும், Veronicaவுக்கும் என்ன சம்பந்தம், அதிகாலையில், எதற்கு இவ்வளவு குறுஞ்ச்செய்திகள்’ என்று கோபம் கொள்கிராள். அப்பவும், Adrian, முகத்தில் சின்ன சலனம் கூட இல்லாமல், ‘ உன்னை தவிர வேறு ஒரு பெண் என் வாழ்வில் கண்டிப்பாக இல்லை’ என்று பதிலளித்து விட்டு தன் வேலைக்கு செல்கிரான். அப்பொழுது, அந்த வீட்டினுடைய உரிமையாளர், Emma ,வீட்டுக்கு வருவதாய் போன் செய்கிரார். அடுத்த, அரைமணி நேரத்தில் வந்து சேரும் Emma, தான் பெர்லின் புறப்பட்டு விட்டதாகவும், கடைசியாக, பெலெனை பார்த்து விட்டசெல்ல வந்ததாகவும் குறிபிடுகிறாள். பெலெனும், எம்மாவும் மனம் விட்டு பேசி கொள்கின்றனர். எம்மா, தன் ஜெர்மானிய காதல் கணவனுக்காக, இந்த Bogota மாநகரத்துக்கு வந்தவள், இன்று தன் சொந்த ஊரான, பெர்லினுக்கு கிளம்பி விட்டதாக கூறுகிராள். உடனே பெலெனும், தானும், தன் காதலனுக்காக, இங்கு வந்ததாகவும், இப்படி இங்கே காதலனை நம்பி வந்து,பெரிய பிழை செய்து விட்டேனோ என்று மன கிலேசம் கொள்கிராள்.

இதை கேட்ட எம்மா, பெலெனுக்கு, தன் மனதின் உள்ளே, மறைத்து வைத்த ரகசியத்தை போட்டு உடைக்கிராள். எம்மா, பெலெனை, வீட்டினுள்ளே அவர்களுடைய படுக்கை அறைக்கு அழைத்து செல்கிராள். அங்கே, இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னே, ஒரு ரகசிய அறையை காண்பிக்கிராள். அந்த அறைக்கான தாழ்ப்பாள், புத்தக அலமாரின் உள்ளே அமைந்திருந்தது. இவர்களுடைய, படுக்கையறையிலும், குளியலறையிலும், இருக்கும் கண்ணாடி, One Way Vision கண்ணாடி. ரகசிய அறையிலிருந்த படியே, படுக்கையறையிலும், குளியலறையிலும் நடப்பவற்றை தெள்ள தெளிவாக காண முடியும், சத்தத்தையும் தெளிவாக கேட்க முடியும் என்று சொல்கிராள். அதே போல், ரகசிய அறையில் இருந்து, ஒரு சின்ன சத்தம் கூட வெளியே வராது, என்றும் சொல்கிராள். இந்த வீடு, தன் ஜெர்மானிய கணவரின் ஆசைப்படி, ஒரு இத்தாலிய கட்டிடம் கட்டுபவராள் வடிவமைக்கப்பட்ட வீடு. போர் காலங்களில், மறைந்து கொள்வதற்கு என்று கட்ட பட்ட ஒரு ரகசிய அறை இது என்றும், Adrianனின் உண்மையான காதலை கண்டு கொள்ள இந்த அறை உனக்கு உதவும், என்று கூறிவிட்டு, விடை பெறுகிரார் எம்மா.

அன்றே, தன் உயிர் காதலனுக்கு, காதல் பரிட்சை, வைத்து, சிறிது அவனுக்கு, புத்தி புகட்ட எண்ணுகிராள் பெலென்.அவசர, அவசரமாக, தன் உடைமை அனைத்தையும், எடுத்து கொண்டு, அந்த ரகசிய அறைக்குள் தஞ்சம் அடைகிராள் பெலென். அதற்கு முன், தன்னை தானே, ஒரு ஒளி படத்தை எடுத்து, முன் பதிவில் கூறியபடி, தான் அவனை விட்டு நீங்கி செல்வதாகவும், இனி தன்னை தேட வேண்டாம் , இந்த முடிவே இருவருக்கு நல்லது என்று உருக்கமாக பதிவு செய்து, அவன் அதை எடுத்து பார்க்க, ஒரு பேப்பரில் குறிப்பு எழுதி, அதை முகம்பார்க்கும் கண்ணடியில் ஒட்டுகிறாள். Adrianனின் கார் வரும், சத்தம் கேட்கவே, அவசர அவசரமாக, ரகசிய அறைக்குள் ஓடி,கதவை சாத்துகிராள். அந்தோ பரிதாபம், ஓடுகிர அவசரத்தில், ரகசிய அறையின் சாவி, கீழே விழுவது கூட தெரியாமல், ஓடி ,கதவை சாத்தி கொண்டாள், நம் கதா நாயகி..

Adrian, காலையில் நடந்த வாக்குவாதங்களை மனதில் வைத்து, தன் காதலி பெலெனுக்காக, அழகான பூங்கொத்துடன், படுக்கையறைக்குள் நுழைகிரான். பெலெனை, காணாமல், தவிக்கும் அவன் கண்ணில், அவள் கண்ணடியில்,ஒட்டிய குறிப்பு கண்ணில் படுகிரது. ஒளி படத்தை பார்த்து விட்டு, துக்கம் தாங்க முடியாமல், ஒவென்று கதறிஅழுகிரான். இவை அனைத்தையும் ஒன்று விடாமல், ரகசிய அறையில் இருந்து பார்த்த பெலெனுக்கு, தான் தேவை இல்லாமல், தன் அன்பு காதலனை சந்தேகம் கொண்டு விட்டோமோ என்று பதறியடித்து ,ரகசிய அறையை திறந்து வெளியே சென்று தன் அருமை காதலனை கட்டிகொள்ள துடிக்கிராள்.

சாவியை எடுக்க தன் கை பையின்னுள், துலாவிய போது தான், தான் சாவியை தொலைத்தது அவளுக்கு தெரிய வருகிரது. காட்டு கத்தல் கத்தியும், பிரயோஜனம் இல்லை, ஒரு சத்தம் கூட, வெளியே Adrianனுக்கு கேட்க வில்லை. அழுது முடித்து, வாஷ்பேசினில், தண்ணீர் நிரப்பி, முகம் கழுவிய Adrianனை, குளியலறை கண்ணாடி வழியாய், பார்க்கும் பெலென், ஒரு உருட்டு கட்டையால், ரகசிய அறையில் செல்லும் தண்ணீர் குழாய்களை அடித்து, வாஷ் பேசினில் எழுந்த நீர் அலைகள் மூலம், அவனின் கவனத்தை கவர முயலுகிராள்.. மனம் வெறுத்த அவனோ, அவள் பிரிந்து சென்ற துக்கம் தாங்காமல், வீட்டை விட்டு, தன் கார் போன போக்கில் செல்கிரான். விதியை நொந்தவாறு பெலென் ரகசிய அறைக்குள் செய்வதறியாமல் திகைக்கிறாள்.

ரகசிய அறைக்குள் செய்வதரியாது தவித்த பெலென், அந்த ரகசிய அறையிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிரதா என்று தேடுகிராள். தன்னிடம் உள்ள வேறு சாவிகளை வைத்து, அந்த கதவை திறக்க முற்படுகிராள். அவள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.. அந்த அறைக்குள், தண்ணீருக்கென்று ஒரு குழாய், அதை திறந்தால், செம்மண் கலந்த நீர் வெளிவருகிரது.. அதன் உள்ளே இருந்த அலமாரியில், அந்த வீட்டின், உறிமையாளரின், சில துணிமணிகள், அந்த வீட்டின் உடைய வரைபடம் எல்லாம் இருக்கிரது. அது போக, சில பதப்படுத்தப்பட்ட உணவும் அவள் கண்ணில் தென்படுகிரது. அந்த உணவு, எத்தனை நாளுக்கு முற்பட்டதோ, அது அடைக்கபட்ட டப்பாவை திறந்து, சிறிது தன் வாயில் வைத்து ருசி பார்க்கிராள்! பெலெனுக்கு குமட்டி கொண்டு வந்தது. பிறகு வேறு வழி தெரியாமல், அதையே தன் பசிக்கு இரையாக்குகி றாள். படம் இரு நாட்களாய், பெலென் பிறிந்து சென்ற துக்கம் தாங்க முடியாமல், குடியிலேயே தன் பொழுதை களித்தவன், அந்த நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தன் காயத்துக்கு மருந்தாக செயல்பட்ட, பாரில் வேலை செய்யும் Fabianaவை தேடி செல்கிரான். அவளிடம் சென்று, தனக்கு அவளை பிடித்திருப்பதாகவும், தன்னோடு, தன்னுடைய தோழியாய், காதலியாய், தன் வீட்டிற்கு வருமாறு வேண்டுகிரான். முதலில், சிறிது தயக்கம் காட்டும் Fabiana, பிறகு, அவனுடைய, அழகு, திறமை,பணம், புகழுக்கு அடிமையாகி, அவனுடன், அவனுடைய வீடு வந்து சேர்கிராள்.படம் திடுதிப்பென்று, சம்பந்தமே இல்லாமல், யாரையோ,தன் படுக்கையறை வரை அழைத்து வரும், Adrianனை பார்த்து, உள்ளம் கொதித்து போகிராள் பெலென். அதிர்ச்சியடையும் அவள்,புதிதாக பெய்த மழையில் முழைத்த காளான் போல் வந்திருக்கும் Fabianaவை வாய்க்கு வந்தபடி திட்டுகிராள். தன் இடத்தில் வேறு ஒருத்தியை காண சகிக்காமல், குமுறி, குமுறி அழுதபடியே தூங்கி விடுகிராள். அடுத்த நாள் காலை, Fabiana பல் துலக்குவதற்க்காக, வாஸ்பேசினின் கண்ணாடியை பார்த்தபடி, நின்று கொண்டு இருக்கிறாள். அவளை பார்த்தவுடன், தன் கோபத்தை எல்லாம் கேவலமான வார்த்தைகளால், ரகசிய அறையில் இருந்த குழாய் வழியாக கத்துகிராள், பெலென். ஏதோ சத்தம் கேட்டவளாய்,Fabiana, வாஸ்பேசின் குழாய் அருகே, தன் காதை வைத்து கேட்டு விட்டு, ஏதாவது பிரமையாய் இருக்கும் என்று நினைத்து விட்டு, சென்று விடுகிராள். இதே போல் ஒருமுறை, குழாய் வழியாக சத்தம் கேட்டு, பயந்து போய், குளியளறையை விட்டு வெளியேரும் Fabiana, விழுந்து அடித்து ஓடி வந்த நாயை பார்த்து அதிர்ச்சியடைகிராள். தான் குளியல் தொட்டியில், குளித்து கொண்டிருந்த போது,எழுந்த நீர் அலைகள், அடிக்கடி வாஸ்பேசின் குழாய் வழியாக வரும் சத்தங்கள், படுக்கையறை முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்னயே, படுத்து கிடக்கும் வளர்ப்பு நாய், இவை யனைத்தும், அவளுக்குள், சிறிது கிலியை கிளப்பி விடுகிரது. Adrianனிடம், பயந்துபோய் அவள் சொல்ல, அவன் அவளை பார்த்து சிரித்து விட்டு செல்கிரான்.

Fabiana ஏதேச்சையாக, படுக்கையறையில் தொலைந்து போன, சாவியை கண்டெடுக்கிறாள். அதை மாலை போல அணிந்து கொள்கிராள். அதை கவனித்த பெலென், சாவி Fabiana கையில் கிடைத்த மகிழ்சிசியில் துள்ளி குதிக்கிறாள்! அவள் அது எதனுடைய சாவி, என்று அறிந்து கொள்ள முயலுவாளா, என்று ஆர்வத்துடன் கவனித்த பெலெனுக்கு, ஏமாற்றமே மிஞ்சுகிரது! கரண்ட் திடுதிப்பென்று, போய் விடுவதால், Fabiana, அந்த அறையை விட்டு வெளியே போய் விடுகிராள்.

அடுத்த நாள், Adrianனுக்கு, லோக்கல் போலீஸிடம் இருந்து, ஒரு போன் கால் வருகிரது. ஒரு பெண்ணுடைய பிணம் கிடைத்து இருகிரது எனவும், அது, அவனுடைய முன்னால் காதலி பெலென் உடையதா, என்று பார்த்து சொல்வதற்க்காக வர சொல்கிரார்கள். இதை கேட்ட, Fabianaவுக்கு, சிரிப்பி அள்ளி கொண்டு வருகிரது, ஆட்ரியன் தனக்கே, தனக்கு என்ற எண்ணம், அவளை குதூகூலம் அடைய செய்கிரது. அட்ரியன் வெளியில் சென்றவுடன், தோட்டத்துக்கு செல்லும் Fabiana, அங்குள்ள நீர் நிறைந்த குட்டையில், கல்லை தூக்கி போட்டு விளையாடுகிராள். அப்பொழுது, அந்த குட்டையில் எழும்பிய நீர் அலைகள், அவளுக்குள் இருந்த துப்பறியும் மனதை தட்டி எழுப்புகிரது.

நேராக குளியலறை சென்றவள், வாஸ்பேசினில் கட கட வென்று, தண்ணீரை நிரப்பி விட்டு, முகம் பார்க்கும், கண்ணாடியை நோக்கி, ஆரம்பி என்று கத்துகிராள். இதை கொஞ்சமும், எதிர் பார்க்காத பெலென், மிகுந்த உற்சாகத்துடன், உருட்டு கட்டையை எடுத்து, தண்ணீர் செல்லும் பைப்பை தட்டு தட்டென்று தட்டுகிராள். நீர் அலைகள் வாஸ்பேசினுள் திரண்டு திரண்டு வருகிரது. Fabiana நிறுத்து, என்று சொன்னவுடன், நீர் அலைகள் நின்று போகிரது. இதை கண்டு விக்கித்து போகும் Fabiana, Adrian இது உன்னுடைய வேலையா, இப்படியெல்லாம் செய்து, என்னை பயமுறுத்தாதே என்று அலறுகிராள். நீர் அலைகள் எதுவும் இப்போ ஆடவில்லை. பின்பு சிறிது, தைரியம் கொண்டு, நீ பெலெனா என்று கேட்கிராள். நீர் அலைகளை எழுப்பி, ஆம் என்று பதில் அளிக்கிராள் Belen. நீ இறந்து போய் விட்டாயா?? ஆட்ரியன் உன்னை அடைத்து வைத்து இருக்கிரானா?? போன்ற கேள்விகளுக்கு, அமைதி காத்த பெலென், நீ இந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொண்டு இருக்கிராயா?? என்ற கேள்விக்கு, மிகுந்த உற்சாகத்துடன் நீர் அலைகளை எழுப்புகிராள் பெலென்… Fabiana, உடனே, அந்த ரகசிய அறையுடைய கதவை, தாழ்ப்பாளை தேடுகிராள். படுக்கையறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின், பக்கத்தில் உள்ள புத்தக அலமாரியில், உள்ள புத்தகங்களை எல்லா தள்ளிய போது, அந்த ரகசிய அறையின் தாழ்ப்பாள் கண்ணில் படுகிரது. தன் கழுத்தில் மாலையாய் தொங்கி கொண்டிருக்கும், சாவியின் நினைவு வரவே, அதை எடுத்து திறக்க முற்படுகிராள்.

பெலென், இந்த ரகசிய அறையில் இருந்து வெளியே செல்ல போகிரோம் என்று மகிழ்ச்சியின் உச்சத்துக்கே செல்கிராள். தீடிரென்று, என்ன நினைத்தாளோ, Fabiana, தன் முயற்சியை, கை விட்டு விடுகிராள். எங்கே, பெலென் வெளியே வந்து விட்டால், Adrian தன் கை நழுவி போய் விடுவானோ என்ற பயமோ, என்னவோ.. சரியாக அந்த நிமிடம், Adrianனும் வந்து சேர்கிரான். என்னவாயிற்று என்று அக்கறையுடன் விசாரிக்கும், Fabiana, பெலென் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று வினவுகிராள். அதை கேட்ட மாத்திரத்தில், முகம் சுழிக்கும், Adrian, பெலென் என்பவள், இனி தன் வாழ்வில் இல்லை, இனி எல்லாமே நீ தான் என, Fabianவை கட்டி கொள்கிரான். அவனை கட்டி கொண்டவாரே, Fabiana முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்து பார்க்கிறாள். கோபம், அதிர்ச்சி, ஏமாற்றம் எல்லாம் ஒன்று சேர, கொதித்து போகிராள் பெலென்!!

அன்றே, Fabiana, தங்கள் படுக்கையறையை, வேற அறைக்கு மாற்றுகிறாள். அன்று இரவு வீடு வந்து சேரூம் Adrian, திடுதிப்பென்று, அறை மாற்றம் செய்தது கண்டு, முதன் முறையாக அவளிடம் கோப முகம் காட்டுகிரான். அடுத்த நாள், Adrian வேலைக்கு சென்று விட, Fabianaவை உயிருக்கு உயிராய் காதலித்த, அந்த போலிஸ்காரன், ஒரு கவரை Fabianaவிடம் கொடுத்து, Adrianனிடம் எச்சரிக்கையாகவும், இருக்குமாறு,அவளுக்கு புத்திமதி கூறி விட்டு செல்கிரான். அந்த கவரின் உள்ளே, Adrianனும், வயலின் வாசிப்பாளர் Veronicaவும், தனிமையில், நெருக்கமாக இருக்கும் புகைபடங்கள் இருக்கின்றன. அதை பார்த்து வெறுத்து போகும் Fabiana, பெலெனை காப்பாற்ற முடிவு செய்கிராள். சாவியை எடுத்து கொண்டு ரகசிய அறையை திறக்கிறாள். அந்த அறை மிக மோசமானதாக, வீச்சம் அடித்து கொண்டு இருந்தது. உள்ளே தூங்கி கொண்டிருக்கும் பெலெனை, மெதுவாக தட்டி எழுப்புகிராள் Fabiana. திடுக்கிட்டு முழிக்கும் பெலென், Fabianaவை அருகில் பார்த்தவுடன், இருக்கிர கோபத்தில், எரிச்சலில், தன் கையில் வைத்திருந்த ஆயுதத்தால், அவள் தலையில் ஒரு போடு போடுகிராள். மயங்கி சரிகிறாள் Fabiana.

அவசர அவசரமாய், சாவியை எடுத்து கொண்டு, ரகசிய அறையில் இருந்து வெளியில் வந்து, ரகசிய அறையை சாத்தி விடுகிராள். Adrianனுடன் ஏற்பட்ட காதல் கசந்து போன நிலையில், அவன் கண்ணில் பட பிடிக்காமல் தன் வழியே செல்கிராள் Belen. போவதற்க்கு முன்னால், தான் Adrianனுடன், முதன் முதல் சேர்ந்து எடுத்த புகைபடத்தை கண்ணாடியில் ஒட்டி விட்டு சென்று விடுகிறாள். ஆட்ரியன், வேலை முடிந்து, வீட்டுக்கு வருபவன், Fabianaவை காணாமல் திகைக்கிரான். Fabiana, நினைவு தெளிந்தவளாய், ரகசிய அறையின் உள்ளே செய்வதரியாமல், கதவை தட்டி கொண்டு நிற்கிறாள்!!!!!!!!!!!!!

முற்றும்..

நன்றி
எண்ணங்கள் பலவிதம்
mahalakshmivijayan



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக