புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
115 Posts - 75%
heezulia
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
3 Posts - 2%
Pampu
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
280 Posts - 76%
heezulia
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
8 Posts - 2%
prajai
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இலமுரியா Poll_c10இலமுரியா Poll_m10இலமுரியா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலமுரியா


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue 27 Oct 2009 - 20:06

இலமுரியா கண்டம்

ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000
ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும்
இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது
என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர்
எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து”
தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு
பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம்
“இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்
. பேரறிஞர்
திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria)
என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர்
மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென்
மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது
எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை
அவர்கள் கூறுகின்றார்.
ஆஸ்திரேலியா,
சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த
நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில்
தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை
மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும். குமரிமாந்தரின் மொழியற்ற நிலை
“சைகை மொழி” - Sign Language.
குமரி
நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன்
இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி,
உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப்
போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture
Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம். இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 - 5,00,000 எழுத்தும்,
உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி
(Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture
Language - or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8
வகைப்படும். அவை 1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.
2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை
விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.
3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.
4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி
கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.
5. வாய்ச் செய்கையொலிகள்
வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.
6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.
7. சுட்டொலிகள் (Decitive Sounds)
சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.
8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
எழுப்பும் ஒலிகள் எனப்படும். தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச்
சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும்.
இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech)
என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப்
பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின்
பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம்
நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம்
தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர
தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர்
எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய
இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம்
ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின்
உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ்
நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது.
ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்
கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு
அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள்
திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட்,
திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும்
ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். 1. தொலைமேற்கில் - கிரேக்க நாடு
2. மேற்கில் - எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் - மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் - சீன நாடு
5. கிழக்கில் - பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் - நீண்ட மலைத் தொடர்
இம்மலைத்
தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை
மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை
பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என
பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட
நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான்
உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள்
தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும்
சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும்,
தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச்
சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன. குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே! குமரிக்கண்டத்தின்
பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ்
மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன.
பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப்
பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து
நாசமாக்கியது. நான்கு பெருங் கடல் கோள்கள் 1. முதல் சங்கம் - தென்மதுரை - கடல் கொண்டது
2. இரண்டாவது - நாகநன்னாடு - கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் - கபாடபுரம் - கடல் கொண்டது
4. நான்காவது - காவிரிப்பூம்பட்டிணம் - கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது. தொல்காப்பியம் பழந்தமிழ்
நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள்
பிந்தியதே தொல்காப்பியம். தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம்
நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.
தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச்
சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன. ஆனால்
அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக
அழிவுற்றன. மூன்று தமிழ் : தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம். 1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்
1. பழந்தமிழ் (Ancient Tamil) உட்பிரிவுகள் மூன்று. அ. முன்பழந்தமிழ் - தொல்பழந்தமிழ் Early ancient Tamil (or) Proto Ancient Tamil ஆ. மத்திய பழந்தமிழ் - Medieval Ancient Tamil இ. பின்பழந்தமிழ் - Later Ancient Tamil 2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil) உட்பிரிவுகள் மூன்று. அ. முன்இடைக்காலத் தமிழ் - Early Medieval Tamil ஆ. மத்தியஇடைக்காலத் தமிழ் - Medium Mediaval Tamil இ. பின்இடைக்காலத் தமிழ் - Later Medieval Tamil 3. தற்காலத் தமிழ் (Modern Tamil) உட்பிரிவுகள் மூன்று. அ. முன் தற்காலத் தமிழ் - Early Modern Tamil ஆ. பின் தற்காலத் தமிழ் - Later Modern Tamil முன்பழந்தமிழ் அல்லது தொல்பழந்தமிழ்
Early ancient Tamil (or) Proto Ancient Tamil திராவிட
மொழிகள் பல உள்ளன. அவைகள் அனைத்தும் தமிழ் என்ற ஒரு மூல மொழியிலிருந்து
உருவானவைகள். தொல்பழங்காலத்தில் திராவிட மூல மொழியாக இருந்த தமிழ்
மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு
மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள். அவற்றை நாம் ” திராவிட மொழிக்
குடும்பம்” என்று அழைக்கிறோம். பல மொழிகள் உருவாக மூலமாக, கருவாக இருந்த
மொழியினைத் தொல்திராவிட மொழி அல்லது மூலத்திராவிட மொழி (Proto Diravidan
Language) என்கிறோம். திராவிட மொழிக் குடும்பம் மூலத்திராவிட
மொழி அல்லது தொல் திராவிட மொழியாகத் திகழ்ந்த தமிழ் மொழியிலிருந்து
பிரிந்து சென்ற மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பம் என்கிறோம். தமிழ்,
கோண்டி, கூயி, கூவி, கோவாமி, மண்டா, கொண்டா, நாயக்கி, குருக், மால்தோ,
பிராகூய் போன்றவைகளோடு இன்னும் பல பல உண்டு. திராவிட மொழிகளை மூன்று
பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 1. தென் திராவிட மொழிகள் - தமிழ், மலையாளம், கன்னடம்.
2. நடுத்திராவிட மொழிகள் - தெலுங்கு, கோண்டி, கூயி, கூவி மேலும் பல உள்ளன.
3. வடதிராவிட மொழிகள் - குருக், மால்தோ, பிராகூப் மேலும் பல உள்ளன.
தமிழ்மொழியின் பெரும்புகழ் திராவிட
மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த மொழி தமிழ். சுமார் ஐந்தாயிரம் (5000)
ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூல்களையும் பல இலக்கியங்களையும் பெற்று
பாரெங்கும் புகழ்பரவ, பெரும் வளர்ச்சி பெற்றிருந்த ஒரே மொழி தமிழாகும்.
திராவிட மொழியை ஆய்வு செய்த பேரறிஞர்கள் திரு. பர்ரோவும், திரு. எமனோவும்
இணைந்து “திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி” (Diravidan Etymological
Dictonary) வெளியிட்டனர் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சியை உணருங்கள். இத்தமிழ்
மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய
பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது. பர்மா,
மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ்,
கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி
மலர்ந்திருந்தது.
தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு உலகெங்கும்
தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய
தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது.
அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள்
அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன.
உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன. அவ்வாறே குமரிக்கண்டமும்
நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு,
கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து
நாசமாகியது. உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது. வரலாற்றுச் சான்றுகள் வரலாறு
பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று. மொழி வரலாறு என்பது மொழியின்
தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள்,
பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை
நமக்குத் தருவது மொழி வரலாறு. ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே
முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள்
வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும். தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள் மொழிகள்
காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மொழிகள்
தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது
மனிதன் என்று தோன்றினான்? உயிரின வளர்ச்சிகள், மொழிகளின் இயற்கைத்
தோற்றம், அவற்றின் வளர்ச்சிகள், போன்ற பலதலைப்புகளில் சிந்தனையைச்
செலுத்தவும், ஆய்வினைக் கொள்ளவும், முதல் முதலில் தோன்றியது “டார்வினின்
பரிணாமக் கொள்கையே” ஆகும். தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள்
தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக்
கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச்
செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல
மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர். ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் ஒரு
வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை
அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே! இத்தோடு
ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து
விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள்,
மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர். தமிழ்மொழியின் தொன்மையையும்,
தோற்றத்தையும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பின்வரும் பகுதிகளில் நன்கு
அறிவோம். சார்லஸ் டார்வின் இங்கிலாந்து
நாட்டின் வரலாற்று மேதை திரு. சார்லஸ் டார்வின் எழுதிய “உயிரினத்தோற்றம்”
வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள், மற்றும் குரங்கையொத்த உருவைக் கொண்ட
“மாந்தன் (Lemuria)” போன்ற உயிரினத் தோற்றங்களை அறிகின்றோம். மேலும்
“மனிதனின் பாரம்பரிய வளர்ச்சி” என்னும் நூலின் வாயிலாக குமரிமாந்தனையும்,
மனித இன பரிணாம வளர்ச்சியையும் உணரமுடிகிறது.

தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........
இலமுரியா B60இலமுரியா B60இலமுரியா B60இலமுரியா B60இலமுரியா B60





<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக