ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குடியைக் கெடுக்கும்!

+5
Muthumohamed
ராஜா
ராஜு சரவணன்
அசுரன்
சாமி
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Sat Jul 13, 2013 7:54 pm

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை

13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.

இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சியர்ஸ்                                           மப்பு ஏறிப்போச்சு     

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த என்ன கொடுமை சார் இது  மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)


Last edited by சாமி on Thu Aug 01, 2013 12:01 am; edited 9 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Sat Jul 13, 2013 8:04 pm

2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை

மதுரை 12 July 2013
ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்ட போது குடிபோதையில் ரகளை செய்த 2 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 மதுரை தைக்கால் தெருவைச்சேர்ந்த சேகர் (47), செல்லூரைச் சேர்ந்த சுந்தர் (43) ஆகியோர் நண்பர்கள். இருவரும் மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் ஆரப்பாளையம் பகுதியில் சென்றனர்.

 இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலனஸ் வாகனம் வரவழைக்கப்பட்டது. அதில் இருவரையும் ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட்டது.

 ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனை நோக்கிச் சென்று கொ்ண்டிருந்த போது, உள்ளே இருந்த பொருள்களை இருவரும் அடித்து சேதப்படுத்தியதாகவும் அதை தட்டிக்கேட்ட ஓட்டுநரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 இது தொடர்பாக ஓட்டுநர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸார் 2 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Last edited by சாமி on Mon Jul 15, 2013 4:43 pm; edited 2 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Sat Jul 13, 2013 8:08 pm

3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!

நாகப்பட்டினம்  11 July 2013
நாகையில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

நாகை அக்கரைப்பேட்டை, நடுத் தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் மகள் விஜயகுமாரி(25). இவருக்கும், கடலூரைச் சேர்ந்த சரவணன் மகன் ராமு(36) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடலூரில் தனிக்குடித்தனம் நடத்தினர்.

மீன்பிடித் தொழிலாளரான ராமு, திருமணத்துக்குப் பின்னர் சரிவர வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம். இதையடுத்து, ராமுவுடன் அக்கரைப்பேட்டைக்குத் திரும்பிய விஜயகுமாரி, அக்கரைப்பேட்டையில் தனிக்குடித்தனம் இருந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி மது அருந்த பணம் கேட்டு ராமு, விஜயகுமாரியிடம் தகராறு செய்துள்ளார். அவர், பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமு, விஜயகுமாரி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்.

இதில், பலத்தக் காயமடைந்த விஜயகுமாரி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் 2009-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமுவை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த பின்னர், ராமுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி எஸ். சோலைமலை வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.


Last edited by சாமி on Mon Jul 15, 2013 4:44 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by அசுரன் Sat Jul 13, 2013 8:27 pm

500 அபராதம் ரொம்ப அதிகம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by ராஜு சரவணன் Sat Jul 13, 2013 10:50 pm

தினமும் குடியால் ஏற்படும் விபரீதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தினசரி இதுபற்றிய செய்தி செய்திதாள்களில் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதையே ஒரு தொடர் பதிவாக செயலாம் சாமி. இதை பார்க்கும் அந்த பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சாமாவது சிந்திப்பார்கள் அல்லவா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by ராஜா Sun Jul 14, 2013 10:56 am

சூப்பருங்க நல்ல பதிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by ராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:16 pm

தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
நாகர்கோவில் அருகே தாயாரை தாக்கிய அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவிலை அடுத்த தளவாய்புரம் ஜோஸ்வாகாலனியைச் சேர்ந்தவர் ஆசிர்வாதம். இவரது மனைவி ஞான பிரகாஷி (58).இவர்களது மகன் ஆன்றனி புகழ் (29). கட்டிட வேலை பார்த்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து வந்து தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்த ஆன்றனி புகழ் குடி போதையில் தாயாரை தாக்கியதாக தெரிகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது தம்பி ஆன்றனி சுரேஷ் (26) அம்மாவை அடிக்காதே என கூறியுள்ளார். இதனைப் பொருட்படுத்தாக அண்ணன் தாயாரை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆன்றனி சுரேஷ் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தலை, முதுகு பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். இதையடுத்து ஆன்றனி சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.இதனால் பதறிப்போன தாயார் ஞான பிரகாஷி டி.எஸ்.பி முகாம் அலுவலகத்துக்கு விரைந்து சென்று தன் மகன்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் நடந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதையடுத்து டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்த போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பார்த்த போது ஆன்றனி புகழ் இறந்து கிடந்தார்.

இதையடுத்து டி.எஸ்.பி உதயகுமார், நேசமணி நகர் ஆய்வாளர் ஜெயா பிரின்ஸி, உதவி ஆய்வாளர் இசக்கிராஜ் மற்றும் போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர். பின்னர் ஆன்றனி சுரேஷ் மீது கொலை வழக்கு பதிந்த போலீஸார் அவரை அங்குள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு கைது செய்தனர்.அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் தாயாரை தன் அண்ணன் தாக்கும் போது எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து அண்ணனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட ஆன்றனி சுரேஷ் நாகர்கோவில் அருகே ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நன்றி -  தினமணி 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by ராஜு சரவணன் Sun Jul 14, 2013 3:20 pm

நெல்லை, ஜூலை. 13 
நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் மருதப்பன். இவர் புளியரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த ஏட்டு மருதப்பன், மாலையில் பணி முடிந்து வீடு திரும்ப தென்காசி வந்தார்.
தென்காசியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் நன்றாக மது குடித்த அவர், வேன் ஸ்டாண்ட் அருகே வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஒருஇளம்பெண் தண்ணீர் பிடிக்க வந்தார். அந்த குடிநீர் குழாய் வேன்களுக்கு பின்னால் சற்று மறைவாக இருந்தது.
அப்போது அங்கு அமர்ந்திருந்த மருதப்பன், தண்ணீர் பிடிக்க வந்த இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இளம்பெண் பதறி துடித்து ரோட்டுக்கு ஓடி வந்தார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், ஏட்டு மருதப்பனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் அவரை அங்குள்ள மின் கம்பத்திலும் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி போலீசார் ஏட்டு மருதப்பனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, விசாரணை நடத்தி ஏட்டு மருதப்பனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.


நன்றி - மாலைமலர் 
 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Mon Jul 15, 2013 3:56 pm

6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!

15 July 2013
வெள்ளகோவில் சொரியன் கிணத்துப்பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து(53).இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.இதனை கண்டு அவரது மகன் செந்தில்குமார் (33)கண்டித்துள்ளார். ஆனாலும் தனது வழக்கத்தை காளிமுத்து மாற்றவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வந்த காளிமுத்து மனைவிடம் தகராறு செய்தார்.இதனை கண்டு கோபம் அடைந்த செந்தில் தந்தையை கண்டித்தார். ஆனால் அதை தந்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து தந்தை என்றும் பாராமல் அவரின் நெஞ்சில் சரமாரியாக வெட்டினார். சம்பவ இடத்திலேயே காளிமுத்து இறந்தார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மோகன்ராஜ் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by சாமி Mon Jul 15, 2013 3:59 pm

ராஜு சரவணன் wrote:இதையே ஒரு தொடர் பதிவாக செயலாம் சாமி. இதை பார்க்கும் அந்த பழக்கம் உள்ளவர்கள் கொஞ்சாமாவது சிந்திப்பார்கள் அல்லவா புன்னகை

இந்த காரணத்திற்காகத்தான் இந்த திரியை ஆரம்பித்தேன். நன்றி ராஜு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடி குடியைக் கெடுக்கும்!  Empty Re: குடி குடியைக் கெடுக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum