ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்!

Go down

 உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்! Empty உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்!

Post by சாமி Sat Jul 13, 2013 6:25 pm

கொங்கு நாட்டிலுள்ள தேவார வைப்புத் தலங்களுள் பேரூரும் ஒன்று. இத்தலத்திற்குத் தட்சிணகயிலாயம், மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, ஞானபுரம், பிறவாநெறித்தலம் முதலான பல பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பேரூரில், கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டதுதான் பேரூர்ப் புராணம்.

பேரூர்ப் புராணத்தில் 19-ஆவது படலமாக உள்ளது பள்ளுப்படலம். இதில் 69 பாடல்கள் உள்ளன. மேலும், சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சுவையான நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் சென்று, காஞ்சிமாநதியில் நீராடி ஆலயத்தை அடையும் முன்னரே இறைவனும் இறைவியும் உழவராகவும் உழத்தியாகவும் (பள்ளர்-பள்ளி) வயலுக்குச் சென்றனர். சிவகணங்கள் ஏவல் செய்கின்ற பள்ளர்களாயினர். திருக்கோயிலுக்குச் சென்ற நாயனார் இறைவனைத் தரிசிக்கப் பெறாமல் இடபதேவர் உணர்த்திய குறிப்பால் வயலுக்குச் சென்று அங்கிருந்த இறைவனையும் இறைவியையும் வணங்கி அருள்பெற்றார் என்பதாகப் படலம் தொடங்குகிறது. இனிப் படலத்தில் கூறப்பெற்றுள்ள உழவியற் செய்திகளை அறிவோம்.

உமாதேவியாகிய இறைவியும் பள்ளியானாள். விநாயகரும் முருகனும் பள்ளச் சிறாராய் வயலின்கண் விளையாடினர். (பா.28,29) உழவுத் தொழிலின் மேன்மையை எடுத்துக்காட்ட இறைவனும் இறைவியும் உழவர்களாயினர் என்ற செய்தியை இதன் மூலம் கச்சியப்பர் உணர்த்தியுள்ளார். இறைவனாகிய உழவன் தோற்றம் எப்படி இருந்தது என்பதை பின்வரும் பாடலில் விளக்கியுள்ளார்.

"புலியதள் கழுவாக் காழக உடையாய்ப்
பொலியநால் வாய்க்கரி உரிவை
ஒலிமயிர் நூற்ற படாமென வயங்க
ஒளிர்சடை தலைச்சுற்றாய் மிளிர
வலியரித் துவக்குப் பக்கறை யாக
வாளரா வதன்கயி றாகக்
கலிகெழு மறையா கமலங்கழ லாகக்
கண்ணுதல் பள்ளனா தலுமே''
(பா.25)

வயலில் வேலை செய்யும் உழவர்கள் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிவது வழக்கம். இறைவன் உழவனாக நிற்பதால் தலைப்பாகை, கோவணம் முதலியவற்றை அணிந்து வயலில் நின்றாராம். பாடலின்படி இறைவனது ஒளிர்சடை தலைச்சுற்றாகவும் (தலைப்பாகை) சிங்கத்தின் தோல் கோவணமாகவும் (பக்கறை) விளங்கிற்றாம். ""போதிய அம்பலத்து ஆடுவார், பள்ளனாய்ப் புகுந்து'' (பா.69) என்ற பாடலடிகளுடன் பள்ளுப்படலம் முடிகிறது. சிற்றம்பலத்தில் திருநடனம் செய்தருளுகின்ற சிவபெருமான் பள்ளனாகக் கோலங்கொண்டார் என்ற உழவியற் குறிப்புடன் படலத்தை நிறைவு செய்துள்ளார் கச்சியப்பர்.

பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திங்கள் கார்த்திகை தொடங்கிப் பத்து நாள்களுக்கு "நாற்றுநடு விழா' நிகழும். விழாவின் பத்தாம் நாள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் நாற்று நடுவது போன்ற காட்சி இன்றும் பக்தர்களால் நடைபெற்று (நடத்தப்பெற்று) வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி-தினமணி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum