ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

+3
ChitraGanesan
Dr.S.Soundarapandian
கவிஞர் கே இனியவன்
7 posters

Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by கவிஞர் கே இனியவன் Wed 10 Jul 2013 - 23:45

உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற சரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன. இத்தகைய உணவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை மட்டுமின்றி, ஆபத்தான பல கெமிக்கல்களை முற்றிலும் வெளியேற்றிவிடும். அதிலும் பூண்டு, வெங்காயம் மற்றும் மீன் போன்றவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

ஆனால் பலர் இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக சைவ உணவாளர்கள், இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஆகவே தான், அத்தகையவர்களுக்காக மிகவும் சிறந்த சைவ உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.

அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது தண்ணீரையும் அதிகம் பருக வேண்டும்.

முட்டைகோஸ்

:இந்த பச்சை இலைக்காய்கறியானது சிறுநீரகத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின் கே அதிகமாகவும் நிறைந்துள்ளது.

சிவப்பு திராட்சை

சிவப்பு நிற திராட்சையில் ஒருசில ஃப்ளேவோனாய்டுகள் நிறைந்துள்ளன. அதிலும் ரெஸ்வெராட்ரால் என்னும் இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் ஃப்ளேவோனாய்டு அதிகம் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பார்ஸ்லி

சைவ உணவாளர்கள், இந்த கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், சிறுநீரகம் மற்றும் உடல் முழுவதுக்கும் நல்லது. அதிலும் இதனை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட்டால், சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்.

காலிஃப்ளவர்

இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு உணவுப் பொருளாகும். ஏனெனில் காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் நிறைந்திருப்பதால், அது உடல் முழுவதுக்கும் மிகவும் நல்லது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் அந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.

இஞ்சி

சைவ உணவாளர்கள் உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது, சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.

தயிர்
தயிரும் செரிமானத்தை அதிரிக்கும் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா இருப்பதால், அது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. முக்கியமாக இந்த உணவை சைவ உணவாளர்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் நிறைந்துள்ள நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் அத்தகைய எண்ணெயை உணவில் சேர்த்தாலும், சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.

நன்றி ;முழுமுதலோன் ..
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by Dr.S.Soundarapandian Sat 28 Dec 2013 - 13:29

முழுமுதலோன் , கவிஞர் கே . இனியவன் ஆகியோர்க்கு நன்றி ! இன்று பலரும் அவதிப்படும் நோய் சிறுநீரகக் கோளாறு ! ‘கல்லுருக்கி’ என்றொரு மூலிகை உள்ளது ! செடி இது ; வெள்ளைப் பூப் பூக்கும் ; இதுபற்றி நான் Commons wikimediaவில் படத்துடன் கூறியுள்ளேன் ! இது சிறுநீரகக் கல்லை உடைக்கும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள் !  அறிவியல் முறையில் ஆயவேண்டிய மூலிகைகளில் இதுவும் ஒன்று !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by ChitraGanesan Sat 28 Dec 2013 - 20:02

சிறுகுறிஞ்சான் என்ற மூலிகையும் சிறு நீரரக கல்லை கறக்கும் .
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by krishnaamma Sat 28 Dec 2013 - 22:08

ரொம்ப உபயோகமான தகவல்கள், மிக்க நன்றி ! கே. இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by T.N.Balasubramanian Sun 29 Dec 2013 - 8:27

பட்டியலிட்ட முழுமுதலோன் , கவிஞர் கே . இனியவன், டாக்டர் soundrapandian , சித்ரா கணேசன் முதலானோருக்கு நன்றி.

இவற்றில் சில பழங்கள் , வாங்குவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்காது. ஏழைகளும் வாங்க கூடிய வாழைத்தண்டு வறியோரும் வாழ கடவுள் தந்த வரப்பிரசாதம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by விஸ்வாஜீ Mon 30 Dec 2013 - 11:03

எங்கள் வீட்டில் வாழைத்தண்டு பொரியல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
கண்டிப்பாக இடம்பெறும்.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by T.N.Balasubramanian Mon 30 Dec 2013 - 15:00

vishwajee wrote:எங்கள் வீட்டில் வாழைத்தண்டு பொரியல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
கண்டிப்பாக இடம்பெறும்.
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1041776

சிறு தண்டை நீர் ,உங்கள் அகத்தில்(வீட்டில்) அடிக்கடி பண்ணுவதால் ,
சிறு நீரக கோளாறு  வரவே வராது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by விஸ்வாஜீ Mon 30 Dec 2013 - 21:40

T.N.Balasubramanian wrote:
vishwajee wrote:எங்கள் வீட்டில் வாழைத்தண்டு பொரியல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
கண்டிப்பாக இடம்பெறும்.
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1041776

சிறு தண்டை நீர் ,உங்கள் அகத்தில்(வீட்டில்) அடிக்கடி பண்ணுவதால் ,
சிறு நீரக கோளாறு  வரவே வராது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1041821

எப்படி ஐயா இப்படி  சூப்பருங்க 
நன்றி ஐயா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by SenthilMookan Wed 29 Jan 2014 - 1:49

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! 3838410834 சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! 3838410834 சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! 103459460 மிக்க நன்றி ! கே. இனியவன்!


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Empty Re: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum