ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாத ராசி பலன்கள் !

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty ஆடி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Tue Jul 09, 2013 6:53 pm

First topic message reminder :

மேஷம் !

மேஷம்: சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நீங்கள் மற்றவர்களின் அதிகாரம், ஆணவத்திற்கு கட்டுப்படமாட்டீர்கள். உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் பிரபல யோகாதிபதியான குருபகவானுடன் சேர்ந்து காணப்படுவதால் இந்த மாதம் முழுக்க நீங்கள் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை எல் லாம் முடிப்பீர்கள். ராசிநாதன் வலுவாக காணப்படுவதால் பதவிகள் தேடி வரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். 11ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.

சூரியன் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாண முயற்சியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி களை உடனுக்குடன் செலுத்தப் பாருங்கள். வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரை பார்ப்பது நல்லது. ராசியிலேயே கேது நிற்பதாலும் உங்கள் ராசியை சனிபகவான் பார்த்துக் கொண்டிருப்பதாலும் கால் மற்றும் கழுத்து வலி வரும். தூக்கம் குறையும். 7ம் வீட்டில் ராகு நிற்பதால் மனைவிக்கு ஹார்மோன் கோளாறு, தைராய்டு பிரச்னைகள் ஏற்படும்.

அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், 3ல் குரு நிற்பதால் உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். மாணவர்களே! மறதி உண்டாகும். நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வேலைக்கு விண்ணப் பித்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் தாமதமாகும். காதல் விஷயத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்யும் அமைப்பு உண்டாகும். வேலையாட்கள் மூலமாக வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். உணவு, கட்டிட உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால், உங்கள் ராசிநாதனான செவ்வாய் வலுவாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் கூடி வரும். விவசாயிகளே! மாற்றுப் பயிரிடுங்கள். அரசால் ஆதாயம் உண்டு. நீர்வளம் கிட்டும். விட்டுக்கொடுக் கும் மனப்பான்மையாலும் சமயோஜித புத்தியாலும் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 22, 23, 24, 25, ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 18ந் தேதி காலை 10 மணி முதல் 19, 20ந் தேதி நண்பகல் 12:30 மணி வரை மற்றும் ஆகஸ்ட் 14ந் தேதி மாலை 6 மணி முதல் 15, 16 ஆகிய தேதிகளில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.

பரிகாரம்:

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள வாராஹி அம்மனை தரிசித்து வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty மகரம்

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:02 pm

மகரம்: வெள்ளை மனம் கொண்ட நீங்கள், சில நேரங்களில் வெகுளித்தனமாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 18ந் தேதி முதல் 8ல் மறைந்தாலும் தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணத்தட்டுப்பாடு குறையும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். 6ல் புதன் நிற்பதால் சேமிப்புகள் கரையும். 30ந் தேதி முதல் புதன் 7ல் நுழைவதால் ஓரளவு நிம்மதி உண்டு. விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். சூரியன் 7ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மனைவிக்கு அடிவயிற்றில் வலி, முதுகு வலி, தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும்.

ஈகோ பிரச்னையால் கணவன் மனைவிக்குள் மோதல்கள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குருபகவான் 6ல் மறைந்திருப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். கேது சுக ஸ்தானத்தில் நிற்பதால் நேரம் தவறி சாப்பிட வேண்டியது வரும். எதிர்காலத்தை நினைத்து ஒருவித பயம் வந்து நீங்கும். தாயாருடன் வாக்குவாதம் வேண்டாம். உங்கள் ராசிநாதன் சனிபகவான் ராகுவுடன் நிற்பதால் உங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு பிறகு உங்களை கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள்.

அரசியல்வாதிகளே! பதவியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். சகாக்களின் ஒத்துழைப்பு குறையும். மாணவர்களே! அன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். கணிதம், இந்தி பாடத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படியுங்கள். கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உயர்கல்வியில் அலட்சியம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் 30ந் தேதி முதல் பற்றுவரவு கணிசமாக உயரும். சந்தை நிலவரத்திற்கேற்ப சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் ஓரளவு குறையும்.

புது முதலீடுகளை தவிர்க்கவும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். கமிஷன், எண்ணெய், கட்டிட உதிரி பாகங் களால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். புது வாய்ப்புகள் வரும். விவசாயிகளே! நிலப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், மாதத்தின் பிற்பகுதியில் மகசூல் பெருகும். கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 17, 19, 20, 25, 26, 27, 28, ஆகஸ்ட் 4, 5, 6, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10ந் தேதி காலை 7:30 மணி வரை தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆவூர் எனும் தலத்திற்கு சென்று வாருங்கள். கோ பூஜை செய்யுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty கும்பம்

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:03 pm

கும்பம்: ஆழமாக யோசித்து, அதிரடியாக செயல்படும் குணமுடைய நீங்கள், எப்போதும் மனசாட்சிக்கு மதிப்பளிப்பீர்கள். சோர்ந்து வருபவர்களை உற்சாகப்படுத்தும் நீங்கள், சொன்ன சொல் தவற மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு எதிர்மறை எண்ணங்களையும் முன்கோபத்தையும் உறவினர், நண்பர்களுடன் மோதல் போக்கையும் கொடுத்து வந்த சூரியன் இப்போது 6ல் நுழைந்திருப்பதால் இங்கிதமாகப்பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

வழக்கில் இருந்த தேக்க நிலை, மந்த நிலை மாறும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். ஷேர் மூலமாக பணம் வரும். 30ந் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் பிள்ளைகளால் அலைச்சல், வருத்தங்கள் வந்து நீங்கும். அவர்களுக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 11ந் தேதி வரை உங்களின் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். குருபகவான் 5ம் வீட்டிலேயே நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும்.

பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 5ம் வீட்டிலேயே செவ்வாயும் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். முன்கோபத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உங்களின் ராசிநாதன் சனிபகவானை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பெருகும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகள் தேடி வரும். எதிர் கோஷ்டிக்காரர்களை ராஜதந்திரத்தால் வீழ்த்துவீர்கள். மாணவர்களே! நினைவாற்றல் கூடும். வகுப்பாசிரியர் பாராட்டுவார்கள். விளையாட்டுப் போட்டியிலும் பதக்கம் வெல்வீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கித் தவித்தீர்களே! உண்மையான நட்பு எது என்பதை உணர்வீர்கள். உயர்கல்வியிலும் வெற்றி உண்டு. 3ல் கேது நிற்பதால் வியாபாரத்தில் தைரியமாக புது முதலீடு செய்யலாம். பழைய பாக்கிகளும் வசூலாகும். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களை பங்குதாரர்களாக சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வு,
சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள்.

கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரக்கூடும். விவசாயிகளே! ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். அக்கம் பக்கம் உள்ள விவசாயிகளுடன் மோதல் போக்கு வேண்டாம். திடீர் திருப்பங்களும் யோகங்களும் நிறைந்த மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 18, 19, 20, 21, 27, 28, 29, ஆகஸ்ட் 6, 9, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 10ந் தேதி காலை 7:30 மணி முதல் 11 மற்றும் 12ந் தேதி மதியம் 2 மணி வரை பெரிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:

காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள பெருநகர் பிரம்மபுரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty மீனம்

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:04 pm

மீனம்: வெள்ளை உள்ளமும் விடாப்பிடியான செயல்திறனும் கொண்ட நீங்கள், எப்போதும் கலகலப்பாக இருப்பவர்கள். உங்களின் ராசிநாதனான குருபகவானும் தன-பாக்யாதிபதியான செவ்வாயும் சேர்ந்து 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும். புது முயற்சிகள் பலிதமாகும். ஒரு வீட்டு மனையை விற்றுவிட்டு மற்றொன்று வாங்க வேண்டுமென்று நினைத்தீர்களே! அதுவும் நல்ல விலைக்குப் போகும். புதுச் சொத்து வாங்குவீர்கள். குருவும் செவ்வாயும் 10ம் வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதால் புது வேலைக்கு முயற்சித்தால் வெற்றி பெறுவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

ஆனால், சூரியன் 5ல் நுழைந்திருப்பதால் உறவினர்களுடன் நெருடல்கள் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்களும் பிரச்னைகளும் செலவினங்களும் இருக்கும். சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் பணப் பற்றாக்குறை ஏற்படும். கடன் பிரச்னை தலைதூக்கும். ராகுவும் 8ல் நிற்பதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு மற்றும் கழுத்து வலி வந்துபோகும். கேது 2ம் வீட்டில் தொடர்வதால் கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் பெறாமல் வீடு கட்டத் தொடங்காதீர்கள். எதிர்வீடு, பக்கத்து வீட்டாருடன் சண்டை, சச்சரவு வரும். வழக்குகளையும்
சந்திக்க நேரிடும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை குறை கூறிப் பேச வேண்டாம். தலைமையை திருப்திபடுத்துவதற்காக பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களே! கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தள்ளிப்போகும். வேலை வாய்ப்பும் தாமதமாகும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளாமல் முதலீடு செய்ய வேண்டாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு புதுத் துறையில் இறங்காதீர்கள். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஓரளவு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் சின்னச் சின்ன பிரச்னைகள் வெடிக்கும். விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். கலைத்துறையினரே! வீண் பழிக்கு ஆளாவீர்கள். பழைய சம்பள பாக்கியை போராடிப் பெற வேண்டியிருக்கும். விவசாயிகளே! பக்கத்து நிலக்காரரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். மரப் பயிர்களால் லாபமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூலை 21, 22, 23, 30, ஆகஸ்ட் 2, 4, 5, 8, 9, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஆகஸ்ட் 12ந் தேதி மதியம் 2 மணி முதல் 13 மற்றும் 14ந் தேதி மாலை 6 மணி வரை முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்:

விருத்தாசலம் அருகேயுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை தரிசியுங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by மதுமிதா Tue Jul 09, 2013 7:12 pm

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். wrote:
எனக்கு என்னும் பஸ்ஸ்போர்டே கிடைக்கல ... அம்மா இது நீங்கள் கணித்ததா?

அப்படி யென்றால் வரும் சனி கிழமை எனக்கு ரிசல்ட் வருகிறது அது பற்றி ஏதாவது சொல்லுங்கள் அம்மா....சோகம்


ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Mஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Aஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Dஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Hஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 U



ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:15 pm

MADHUMITHA wrote:
புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். wrote:
எனக்கு என்னும் பஸ்ஸ்போர்டே கிடைக்கல ... அம்மா இது நீங்கள் கணித்ததா?

அப்படி யென்றால் வரும் சனி கிழமை எனக்கு ரிசல்ட் வருகிறது அது பற்றி ஏதாவது சொல்லுங்கள் அம்மா....சோகம்

சுத்தம்............. நான் கணிக்களை மது புன்னகை copy paste செய்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by யினியவன் Tue Jul 09, 2013 7:18 pm

எனக்கு பதிலைக் காணோமேம்மா? புன்னகை

(உங்க பலன் இன்னிக்கு - கண்டும் காணாமல் போவதுன்னு இருக்குமோ?) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:27 pm

யினியவன் wrote:எனக்கு பதிலைக் காணோமேம்மா? புன்னகை

(உங்க பலன் இன்னிக்கு - கண்டும் காணாமல் போவதுன்னு இருக்குமோ?) புன்னகை

அதுக்குத்தான் 'நன்றி' சொல்லிட்டேனே என்று வந்துவிட்டேன் புன்னகை
.
.
கண்டும் காணாமலா அதுவும் உங்களையா ? NEVER கூடாது கூடாது கூடாது


Last edited by krishnaamma on Tue Jul 09, 2013 7:30 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Tue Jul 09, 2013 7:29 pm

யினியவன் wrote:ஆடி மாச காத்தாடிச்சா
அம்மாவோட பலன் பதிவு வரும்
மானே மாங்குயிலே... புன்னகை

ஆடி மாதம் மட்டுமில்லை இனியவன், எல்லா மாதமுமே வரும் தான் புன்னகை ஏதோ சோர்ந்த உள்ளத்துக்கு ஒரு தெம்பு தான் புன்னகை நல்லதா போட்டிருந்தா நமக்கு என்று எடுத்துக்கணும், இல்லையா இது யாருக்கோ என்று போய்விடனும்... இது தான் என் பாலிசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by யினியவன் Tue Jul 09, 2013 8:09 pm

உங்க பதிவுன்னு தாம்மா வந்தேன் - அந்த ராசிகளுக்கு என்னிடம் ராசி இல்லை எப்பவுமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by krishnaamma Tue Jul 09, 2013 8:26 pm

யினியவன் wrote:உங்க பதிவுன்னு தாம்மா வந்தேன் - அந்த ராசிகளுக்கு என்னிடம் ராசி இல்லை எப்பவுமே புன்னகை

கூடாது கூடாது கூடாது இப்படி மனதை விடக்கூடாது இனியவன் புன்னகை எங்க எல்லோருக்குமே அப்படித்தான், சுகமாக வாழ இங்கு ( பூமிக்கு ) யாரும் வருவதில்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆடி மாத ராசி பலன்கள் ! - Page 2 Empty Re: ஆடி மாத ராசி பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum