ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொட்டு நீலம் டோய்..

2 posters

Go down

சொட்டு நீலம் டோய்.. Empty சொட்டு நீலம் டோய்..

Post by manikandan.dp Tue Jul 09, 2013 11:14 am



சில நாட்களுக்கு முன் நண்பர் சிபாரிசில் சென்னையில் இருக்கும் டோபி கானா எனப்படும் வண்ணாந்துறை பற்றி ஒரு டாகுமெண்டரி படம் பார்த்தேன். இதில் வந்த ‘வெயிலை நம்பி ஈரத்தில் வாழும்’ என்ற ஒரு வரி சட்டென்று புத்தியில் ஒட்டிக்கொண்டது வரிசையாக தொட்டிகளையும் கல்லையும் பார்த்தவுடன் பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது.

திருவருட்செல்வர் படத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டர் பற்றிய காட்சி. கண்ணதாசன் எழுதிய ஆத்து வெள்ளம் காத்திருக்கு என்ற சலவைத் தொழிலாளிகள் அனைவரும் சேர்ந்து பாடுவது போல் அமைந்தப்பாடல்.(இசை கே.வி.மஹாதேவன், பாடியவர்கள் எஸ்.ஜி. கிருஷ்ணன் குழுவினருடன் டி.எம். சௌந்தரராஜன்) https://www.youtube.com/watch?v=mYZSNEn4EJg

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு

போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா – நல்லா

புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

என்று matter of fact ஆரம்பம். அடுத்த வரியில் கவிஞர் சொல்லும் Comparison ரொம்ப சுவாரசியம்

மனசு போல வெளுத்து வச்சி

உறவைப் போல அடுக்கி வச்சு

வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா நாம

வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா

மெதுவாக ரன்வேயில் ஊர்ந்து செல்லும் விமானம் சட்டென்று வேகம் பிடித்து வானில் உயர்வது போல கடைசி சரணத்தில் ஒரு take off. மனிதர்களை அழுக்குத் துணியுடன் ஒப்பிட்டு, எப்படி அதை வெளுக்கலாம் என்று வழி சொல்லும் வரிகள்

கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா – உன்

சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு

பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே

மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே

ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே

அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா – அவன்

அருள் எனனும் நிழல்தனிலே வெள்ளையப்பா – இந்த

உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

பாரதியாரும் இந்த அழுக்கு மூட்டை பற்றி குள்ளச்சாமியிடம் தாம் பெற்ற உபதேசத்தை சொல்கிறார்.

மற்றொரு நாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை

வளமுறவே கட்டியவன் முதுகின் மீது

கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்

கருணைமுனி சுமந்து கொண்டு என்னெதிரே வந்தான்.

“தம்பிரானே; இந்த தகைமை என்னே ?

முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ

மூட்டை சுமந்திடுவதென்னே ? மொழிவாய் ” என்றேன்

புன்னகை பூத்த ஆரியனும் புகலுகின்றான்:

“புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே

இன்னொதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ”

என்றுரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்.

மனமென்னும் அழுக்கு மூட்டையை நீரில் சலவை செய்யலாமா? முடியாது என்கிறார் வாலி மகாநதி படத்தில் (இசை இளையராஜா பாடியவர் கமல்ஹாசன்) வரும் வரிகள் அபாரம்

https://www.youtube.com/watch?v=xPcCRNDq9_Q

நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது

அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது

சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது

இந்த முட்டாள்தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது

பின் எப்படி இந்தக்கறை போகும்? சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு என்று கண்ணதாசன் சொல்வதுதான் சரியான வழி. இவ்வளவு அழுக்கும் போக சொட்டு நீலம் போதாது. நீலகண்டன் வேண்டும்

நன்றி
மோகனகிருஷ்ணன்


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

சொட்டு நீலம் டோய்.. Empty Re: சொட்டு நீலம் டோய்..

Post by ஜாஹீதாபானு Tue Jul 09, 2013 2:41 pm

அருமை பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum