புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
24 Posts - 60%
heezulia
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
11 Posts - 28%
Balaurushya
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 3%
Barushree
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 3%
nahoor
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 3%
kavithasankar
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
78 Posts - 76%
heezulia
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
11 Posts - 11%
mohamed nizamudeen
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 1%
nahoor
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 1%
Barushree
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_m10ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 2:43 pm

இன்று ஜாதியை எதிர்க்கும் பலரும் சொல்வது, ஜாதி என்றாலே ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி என பல தீய விசயங்களைத்தான். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். என் கேள்வி, எதில் தான் வேறுபாடு இல்லை? பிறப்பிலேயே ஆண் பெண் வேறுபாடு இருக்கிறது.. அதற்காக ஆண் பெண் இருவரையும் ஒழித்துவிட்டு ஒரே இனமாக கொண்டு வந்துவிடலாமா? சொத்தின் மூலமும் செல்வத்தின் மூலமும் வேறுபாடு இருக்கிறது.. அதனால் யாருமே சொத்து வைத்திருக்க கூடாது என சொல்லலாமா? மதத்தின் மூலம் உலகமே ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு குண்டு வீசும் சூழலில் இருக்கிறது.. மதமே வேண்டாம் என சொல்லிப்பாருங்கள்..

நான் இங்கு ஜாதிய வேறுபாடு வேண்டும் என சொல்ல வரவில்லை. பிறப்பு, மதம், செல்வம் இவற்றில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடு இருந்தாலும் மதமே வேண்டாம் என்றும், ஆண் பெண் என இல்லாமல் நியூட்ரலாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் சொல்லாமல், மக்களின் மனதை ’எதிலும் வேறுபாடு இல்லை’, என ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம், வர முயற்சி செய்கிறோம்.. அப்படி இருந்தும் சில இடங்களில் பெண் சிசுக்கொலை நடக்கத்தான் செய்கிறது. போன மாதம் டைம் ஆன்லைன் கட்டுரையில்இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு பெண் சிசுக்கொலைகளும் முக்கிய காரணம் என சொல்கிறார்கள். (http://ideas.time.com/2013/01/04/rape-in-india-a-result-of-sex-selection/?iid=obinsite).. அதே போல் இப்போதும் பல இடங்களில் ஜாதி வன்முறை நடக்கத்தான் செய்கிறது, பெண் சிசுக்கொலைகள் போல சரியான வழிகாட்டுதல் இல்லாததால்.. அதற்காக ஜாதியே கூடாதென்று சொல்லாமல் ஜாதிய வேறுபாடு பார்க்கக்கூடாது என மக்களுக்கு புரியவைக்கலாம்.

என்ன தான் பேசினாலும் ஜாதியை ஒழித்துவிடவும் முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜாதியை ஒழிக்க வேண்டும் என பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும் ஜாதி வெறியை இன்னும் தான் அதிகரிக்கும். அதிலும் இந்த பகுத்தறிவுவாதிகள் எனப்படுவோர், ஜாதி எதிர்ப்பு என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே எப்போதும் தாக்குவர். சமீபத்தில் நடந்த விஸ்வரூபம் பிரச்சனையில் ரஜினி அவர்கள் கமலுக்கு செய்த உதவியில் கூட, “பார்ப்பனீயம்” இருக்கிறது என நோண்டி ஆராய்ந்தவர்கள் அவர்கள். அந்த தாக்குதலில் இல்லாத ஜாதி வெறியா பிறரிடம் வந்துவிடப்போகிறது? அப்படி வசைபாடுவதை விட்டுவிட்டு, எளிதாக “மதம் என்பது வீட்டு பூஜை அறை வரை; ஜாதி என்பது வீட்டு வாசல் வரை” (courtesy: Paul Pown Raj) என ஒவ்வொருவருக்கும் புரிய வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடுமே? ஆனால் செய்ய மாட்டார்கள். கலகம் முடித்துவிடவில்லை எனில் பகுத்தறிவுக்கு மதிப்பு இல்லையே?


இங்கு பகுத்தறிவாளர்கள் பலரும் சொல்வது என்ன? ஜாதி மனிதனை பிரிக்கிறது என்கிறார்கள். ஜாதியால் ஒற்றுமை இல்லை என்கிறார்கள். இன்னும் இது போல் பல காரணங்கள். இவர்கள் ஒற்றுமை என எதை சொல்ல வருகிறார்கள் என தெரியவில்லை. ஒற்றுமை தான் எல்லாரிடமும் இருக்கிறதே.. என் நண்பர் குழுவில் பலரும் என் ஜாதியோ என் மதமோ கிடையாது. ஆனாலும் இன்று எனக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது அவர்கள் தான். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். நண்பன் புகைத்த தம்மை தான் ஒரு ஃபப் வாங்கி இழுக்கும் நட்புக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாது. என் வேற்றுமத & வேற்று ஜாதி நண்பர்களின் அம்மா, அப்பா, சகோதரி எல்லோரையும் நானும் அம்மா, அப்பா, தங்கச்சி என்று தான் சொல்கிறேன். அவர்களும் அப்படியே. பின் எப்படி ஜாதிகளுக்குள் ஒற்றுமை இல்லை என இவர்கள் சொல்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை ஒற்றுமை என்பது, இன்னொரு ஜாதியில் திருமண பந்தம் கொண்டிருப்பது தான் போல.. நீங்கள் வேறு ஜாதிக்காரரோடு வித்தியாசம் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தால் மட்டும் பகுத்தறிவுக்கு போதாது. உங்கள் வீட்டு பிள்ளைகளையும் அவர்களுக்கு கட்டி வைத்தால் தான் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதாக இந்த பகுத்தறிவு செம்மல்கள் ஒத்துக்கொள்வார்கள். பகுத்தறிவு என்பதே திருமணத்தை மறுக்கிறது.. ஆனால் அதே பகுத்தறிவு தான், திருமணத்தின் மூலம் ஜாதியை ஒழிக்க முடியும் என்கிறது. என்ன ஒரு விந்தை இது?


அதே போல் ஜாதி இல்லை, மதம் இல்லை என கோசம் போடுபவர்களில் தான் பெரும்பான்மையோர் மொழி வெறியர்களாகவும், இனத்தீவிரவாதியாகவும் இருக்கிறார்கள்.. ஜாதியும் மதமும் சக மனிதன் மேல் துவேசத்தை வளர்க்கிறது என்று சொல்லும் இவர்கள் தான், மொழி வேறுபாட்டாலும் இன வேறுபாட்டாலும் பிறரை தூற்றுகிறார்கள். வேற்று மதத்திலோ ஜாதியிலோ திருமணம் செய்து கொண்டால் ஜாதியும் மதமும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் ஒழியும் என்று சொல்லும் இவர்கள் தான் இலங்கையில் வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒரே இனமாக இருக்க தமிழர்களையும் சிங்களவர்களையும் கலக்க அந்த அரசு செய்யும் முயற்சிகளை எதிர்க்கிறார்கள். அதாவது இந்து மதத்தில் கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் பகுத்தறிவு இலங்கையில் அதே கலப்பு திருமணத்தை எதிர்க்கிறது.. அதற்காக இலங்கையில் நடப்பதற்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என அர்த்தம் இல்லை. இலங்கையில் நடப்பதை தப்பு என சொல்லும் இவர்கள் இங்கு மட்டும் அதே தவறை சரி என எப்படி சொல்கிறார்கள் என கேள்வி தான் கேட்கிறேன்.

அதே போல் இவர்களின் ஜாதி வித்தியாசம் எல்லாம் இந்து மதத்திற்குள் மட்டும் தான்.. சர்ச்சுகளில் நடக்கும் ஜாதி பேதங்களைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.. திறந்தால்? சிறுபான்மையினர் உரிமை என்னாவது? மதுரைக்கு தெற்கே கிறிஸ்தவர்கள் தங்கள் ஜாதிக்குள் தான் திருமணம் செய்துகொள்வார்கள். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியின் கிராமங்களில் ஜாதிவாரியாக சர்ச் இருந்ததாக கூட சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டிருக்கிறேன்.. சில சர்ச்சுகளில் தலித்துக்களை கூரை போட்டு தனியாக அமர வைத்திருப்பார்களாம்.. மதுரைக்கு வடக்கே கிறிஸ்தவர்களிடம் இந்த அளவுக்கு ஜாதி பேதம் இல்லையென்றாலும், ஒரு பிறபடுத்தப்பட்ட கிறிஸ்தவர் தாழ்த்தப்பட்டவருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கிறிஸ்தவ மதம் இன்னும் பக்குவப்படவில்லை. அதே போல் தான் இஸ்லாமும்.. ராவுத்தரை பொறுத்தவரை லெப்பை மட்டம் தான்.. பட்டானிக்கு, ராவுத்தர் லெப்பை இருவரும் மட்டம் தான்.. லெப்பை, ராவுத்தர், பட்டானிக்கு இடையில் திருமண பந்தம் கிடையாது. ஒரே ஜாதியில் கல்யாணம் செய்தால் குதிக்கும் இவர்கள், ஒரே குடும்பத்தில் ஒன்று விட்ட சகோதரியை சகோதரனை கல்யாணம் செய்துகொள்பவர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏனென்றால் சிறுபான்மையினர் நம் நாட்டில் மருமகள்கள் போல்.. மண்சட்டியும் அவர்கள் கை பட்டால் பொன் சட்டி தான்..

சரி, நான் முந்தைய பத்தியில் கலப்பு திருமணத்தை தவறு என்று சொன்னதால் சிலருக்கு கேள்வி எழலாம், ‘அதெப்படி கலப்பு திருமணத்தை தவறு என நீ சொல்லலாம்?’ என்று.. நான் முதலிலேயே ஒன்றை சொல்லிவிட்டேன். ஜாதி என்பது என் வீட்டு வாசல் வரை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் அந்த எண்ணத்துடன் நான் அடுத்து சொல்லப் போவதை படியுங்கள். என் வீட்டு வாசலை நான் தாண்டியவுடன், என் நண்பனை, என் தொழில் நிமித்த ஆட்களை பார்க்கும் போது எனக்கு ஜாதி, மதம் எல்லாம் ஞாபகம் வராது. ’சரி, அவர்களிடம் தான் நீ ஜாதி பார்ப்பதில்லையே, பின் ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்வதில்லை?’ எனக்கேட்டால், என் பதில், “ஏன் அவர்களோடு திருமண பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும்?” என பதில் கேள்வியாகத் தான் இருக்கும்.. இலங்கையில் தமிழனுக்கு என்று சில பழக்க வழக்கம் , சடங்கு, கலாச்சாரம் இருக்கிறது. அவனை சிங்களவனோடு கலக்கும் போது தமிழனின் அடையாளமும் பழக்க வழக்கமும் சிதைந்து போகும் என நினைப்பது சரி என்றால், இங்கு நானும் அப்படி நினைப்பது சரியே.

என் வீட்டிற்கு என்று என் குடும்பத்திற்கு என்று சில பழக்க வழக்கங்கள் இருக்கும். எங்கள் குடும்பங்களில் பெண் ஊரில் தான் திருமணம் நடக்கும். பெண் வீட்டில் தான் முதலிரவு நடக்கும். சில ஜாதிகளில் மாப்பிள்ளை வீட்டில் தான் இந்த சடங்குகள் எல்லாம் நடக்கும். ஒரு சில ஜாதிகளில் மணமக்களின் பெற்றோர் மேடையில் அமர்ந்து மாற்றி மாற்றி மரியாதை செய்துகொள்வர். சில சமூகங்களில் மணமக்களின் தாய்மாமன்கள் இதை செய்வர். மாப்பிள்ளை தலைப்பாகை அணிந்து கொண்டு தாலி கட்டும் ஜாதியும் இருக்கின்றன, மாப்பிள்ளைக்கு மிஞ்சி (மெட்டி) போடும் ஜாதியும் இருக்கின்றன. சிலர் மஞ்சள் கயிரில் தாலியை மட்டும் தங்கத்தில் செய்து மூன்று முடிச்சு போடுவார்கள். சில ஜாதிகளில் தங்க சங்கிலியில் தாலியை கோர்த்து, அதை கட்டாமல் அணிவிப்பார்கள். முக்குலத்தோர் இல்ல திருமணங்களில் கெடாய் விருந்து இருக்கும். வேறு சில ஜாதி திருமணங்களில் சைவம் மட்டுமே பிராதானம். அதுவும் நகரத்தார் வீட்டு கல்யாணங்களில் நுங்கில் பாயாசம், இளநீரில் மோர் என நாம் கற்பனையே செய்து பார்த்திராத ரகங்களில் 16 வகை 18 வகை என பதார்த்தங்கள் இருக்கும். பிராமணர் வீட்டு திருமணங்கள் அவர்களுக்குரிய நலங்கு, ஜானவாசம் என 6, 7 விசேசங்களோடு நடக்கும். எங்கள் குடும்ப கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பின் போது பெண் வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்பது அவ்வளவு அழகு. 26, 51 என ஆரத்தியிலேயே மாப்பிள்ளையை மயக்கம் அடையச்செய்யும் ஆட்கள் எல்லாம் உண்டு. இதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இரு வீட்டினரும் மிகுந்த சந்தோசத்தோடு பகை, கவலை, வஞ்சகம் என அனைத்தையும் மறந்து தங்கள் இல்ல திருமணத்திற்காக மாய்ந்து செய்வது இதெல்லாம்.கலப்பு திருமணத்தில் இதெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்கொள்ள முடியாது.. சரி, கலப்பு திருமணம் செய்பவர்கள் தங்கள் இரு வீட்டு சடங்குகளையும் செய்யலாமே என்றால் அதுவும் சரி வராது. ஒத்த கருத்துள்ள, ஒரே மாதிரியான சடங்குகள் கொண்ட இரு குடும்பங்கள் திருமணம் செய்யும் போதே எவ்வளவு களேபரங்கள்? இதில் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் என்றால் மனஸ்தாபம் தான் மிஞ்சும். அப்படி மனஸ்தாபம் இல்லாமல் எல்லாம் சுபமாய் முடிந்தாலும், இரண்டு சடங்குகளும் கலந்து, திரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்று ஆகிவிடும். இந்து கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஒரு கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்திற்கு ஒவ்வொரு ஜாதியிலும் ஒவ்வொரு வரைமுறை செயல்முறை இருக்கிறது. கலப்பு திருமணம் மூலம் அந்த வரைமுறையும் செயல்முறையும் போய் வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்னும் புள்ளியில் வந்து நிற்கும். வெறும் தாலி கட்டுவது மட்டும் தான் திருமணம் என்றால், எதற்கு காலம் காலமாக இவ்வளவு உறவினர்களும் கொண்டாட்டங்களும், மகிழ்ச்சிகளும்? உறவினர்கள் நம் கல்யாண செலவை பகிர்ந்து கொள்ள, கொண்டாட்டங்கள் உறவை இன்னும் பலமாக்க, இப்படி ஒற்றுமையாக அனைவரும் கூடும் போது வரும் மகிழ்ச்சி தான் உண்மையான சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கொடுக்கும்.

திருமணத்தில் மட்டும் அல்ல. குல தெய்வ வழிபாட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. சிலர் ஆடு வெட்டுவார்கள், சில குல தெய்வம் சைவமாய் இருக்கும். சில குல தெய்வங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு பொதுவானவையாய் இருக்கும். எங்கள் குல தெய்வம் 4 ஜாதிகளுக்கு உரியது. அதில் தலித் சமுதாயமும் ஒன்று. அங்கெல்லாம் நாங்கள் ஒற்றுமையாக பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம்.

சரி நான் ஏன் இவ்வளவு பேசுகிறேன் என்றால் கலப்புத்திருமணங்களால், ஜாதியை ஒழிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. கலப்புத் திருமணம் என்று மட்டும் அல்ல, எதனாலும் ஜாதியை ஒழிக்க முடியாது. ஒரு முதலியார் பையன் செட்டியார் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் எப்படி ஜாதி ஒழியும்? அவர்களின் குழந்தை முதலியாராகவோ செட்டியாராகவோ தான் இருக்கும். ஒரு நாடார் வீட்டு பெண் தலித் ஆணை மணந்து கொண்டால் அவர்களின் குழந்தை ஜாதி அடையாளம் இல்லாமல் வளர்க்கப்படுமா? அதனால் கலப்புத்திருமணங்கள் ஜாதியை என்றும் ஒழித்துவிடாது. மாறாக நான் சொன்னது போல் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளை ஜாதி வித்தியாசம் பார்க்காமல் நண்பர்களோடு பழக விட வேண்டும். சில நேரங்களில் அந்த நட்பில் காதலும் வரலாம். அப்போது தன் பிள்ளை அந்த காதலின் மூலம் வருங்காலத்தில் நன்றாக இருப்பான்/ள் என பெற்றோர்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக செய்யலாம். ஆனால் மீண்டும் சொல்கிறேன் அதனால் ஜாதி ஒழியாது. ஜாதி வேறுபாடு வேண்டுமானால் மறையும். ஜாதி வேறுபாடு மறைய கலப்புத்திருமணம் என்பது கொஞ்சம் ரிஸ்க்கான தேர்வு தான். ஒழுங்கான பழக்க வழக்கங்கள் மூலமாகவே ஜாதி வேறுபாட்டை கலையலாம்.

ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கலைந்து ”நான் ஒரு மனிதன், மனிதாபிமானி” என எல்லோராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒருவன் அப்படி வாழ நினைத்தால் அவனை இத்தனை வருடம் ஆளாக்கி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது சங்கடத்தை கொடுக்கலாம். அவன் ஒருவனின் புரட்சிக்காக அவர்களை ஏன் அவன் சங்கடப்படுத்த வேண்டும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் ஜாதி வேறுபாடு பார்க்காமல் வளர்வதில் என்ன வந்துவிடப்போகிறது? தனி மனிதனாக, ‘இது என் பெர்சனல் யாரும் இதில் தலையிடாதீர்கள்’ என எல்லோரும் வாழ ஆரம்பித்தால் யாருக்குள்ளும் ஒற்றுமை இருக்காது. ஜாதி என்பது ஒரு சிறு குழுவாக மக்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுவும் இல்லை என்றால் மக்கள் இன்னும் அதிகமாக அடித்துகொண்டு தான் இருப்பார்கள்.

அதே போல் நம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கிறது. அது நமது பாரம்பரியம். உலக நாடுகள் இந்தியர்களையும் இந்திய கலாச்சாரத்தையும் உயர்ந்தது என இது போன்ற நமது பழக்க வழக்கங்களை வைத்து தான் சொல்கிறது. அந்த அடையாளங்களை எல்லாம் இழந்து நாம் வெறும் புரட்சி மட்டும் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு தெரிந்து புரட்சி பேசிய யாரும் தங்கள் குடும்பத்தை சந்தோசமாக வைத்திருந்தது இல்லை, அன்றைய சாக்ரடீஸ், ஹிட்லர், பகத்சிங்கில் இருந்து இன்றைய என் நண்பர்கள் சிலர் வரை. அதே போல் மக்களை பகுத்தறிவு என்னும் பெயரில் தூண்டி விடும் எவராலும் தன் வீட்டில் கூட அந்த பகுத்தறிவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

முடிவாக, உலகில் இருக்கும் எல்லோருக்கும் தான் சார்ந்த தன் இனம்/மதம்/குலம் சார்ந்த பெருமை இருக்கத்தான் செய்யும். தமிழன் என்றால் சிலருக்கு சிலிர்க்கும், யாராவது கிறிஸ்தவ பாடல் பாடுவதை கேட்டாலே சிலருக்கு கண்ணீர் வரும், ரோட்டில் திருமண ஊர்வலம் செல்லும் கூட்டத்தை பார்த்தால் தன் சொந்த பந்த ஞாபகம் வரும் சிலருக்கு. இப்படி ஒவ்வொருவருக்கும் தன் ஜாதி, மொழி, மதம் சார்ந்த அபிமானம் இருக்கத்தான் செய்யும், ஒரு நாத்திகனுக்கு இன்னொரு நாத்திகன் மேல் அபிமானம் இருபப்தைப்போல. அதனால் கலப்புத்திருமணம் மட்டுமே ஜாதி ஒழிப்புக்கான வழி அல்ல. மக்களுக்குள் ஒற்றுமை இருந்தாலே போதும். அந்த ஒற்றுமை என்பதை நம் குடும்பத்திற்குள் இருந்து ஆரம்பிப்போம். நம் பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்காமல் பழைமையை மறக்காமல் வாழ்வோம். ஜாதி, மதம் என்பதை நம் வீட்டு வாசல் வரை மட்டும் வைத்திருப்போம். முன்பே சொன்னது போல் ஜாதி என்பது சிறு குழுக்களுக்குள் ஒற்றுமையாக வாழ படைக்கப்பட்டவை. அந்த சிறு குழுக்கள் தன்னை போன்ற இன்னொரு சிறு குழுவின் மீது ஏற்றத்தாழ்வு பார்க்காமல், அதே நேரத்தில் தன் பழக்க வழக்கத்தையும் விடாமல் நட்போடு பழக ஆரம்பித்தாலே போதும், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நாமும் நம் சுற்றமும் பிள்ளைகளும் ஜாதி மத இன வேறுபாடு இல்லாமல் பழகுவோம்.. ஜாதிகள் வேண்டும் நம் பழக்க வழக்கங்கள் நம்மை விட்டுப்போகாமல் இருக்க...

நன்றி சிவகாசிகாரன்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 2:57 pm

இவர் கூறும் கருத்துகள் சற்று சிந்திக்க வைக்கிறது புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 07, 2013 3:00 pm

என்னுடைய கருத்து ஜாதி தேவையே இல்லை




ஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Mஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Uஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Tஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Hஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Uஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Mஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Oஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Hஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Aஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Mஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் Eஜாதி தேவையா ஒரு கண்ணோட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 11:39 pm

என்னுடைய கருத்து இருப்பது நல்லது தான். ஆனால் தன் சாதி உயர்ந்தது என்றோ, சாதி வெறியோ கூடாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக