புதிய பதிவுகள்
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
21 Posts - 64%
heezulia
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
148 Posts - 55%
heezulia
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
9 Posts - 3%
prajai
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
1 Post - 0%
cordiac
விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_m10விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 04, 2013 7:11 pm

விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா 7974_555660574476148_291439919_n


விருந்து உபசரித்தல் என்பது சங்க காலத்தில் இல்லறக் கடமையாக இருந்து வந்துள்ளது. இனிய இல்லறத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்று விருந்து புரத்தல். ஆனால் விருந்து புரத்தல் எனப்படும் விருந்தோம்பல் காலத்தின் கட்டாயமாக, தேவை கருதியே சங்க காலத்தில் இருந்து வந்துள்ளது எனலாம்.

இக்காலத்தில் ஆங்காங்கு காணப்படுவது போல சங்க காலத்தில் உணவகங்கள் இல்லை. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைப் பிரிவினர் நாட்டில் வாழ்ந்தனர். இப்பிரிவுகள் ஒரு போதும் சாதியையோ, மதத்தையோ, உயர்வு தாழ்வு கருதியோ அமைக்கப் பட்டிருக்க வில்லை. செய்தொழில் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தன.

இந்நான்கு பிரிவினரில் வேளாளர் தவிர ஏனைய மூன்று பிரிவினர் ஏதேனும் ஒரு காரணம் கருதி அடுத்த நிலத்திற்கு அதாவது வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியவராக இருந்தனர். இப்பயணங்களைத் தொல்காப்பிய இலக்கணம் ‘பிரிவு’ என்னும் பகுதியில் அடக்கும்.

அரசர் போர், கல்வி காரணமாக வெளியூர் செல்வார். அந்தணர் கற்க, கற்பிக்க, தூது செல்லல் முதலிய அலுவல் காரணமாக வெளியூர் செல்வார். திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடிய வணிகர்கள் வியாபாரம் நிமித்தமாக வெளியூர் சென்றனர். வெளியூர் சென்ற இவர்கள் எங்கு உண்டு, உறங்குவார்கள்?

வேளாளர்கள் ஒரே ஊரில் அதாவது மருத நிலத்தில் தங்கி விவசாயம் செய்து வாழ்ந்தார்கள். நிலக்கிழாராக வாழ்ந்த வேளாளர்கள் உழுதொழிலில் தாம் பெற்ற பயன் விருந்தோம்பலில்தான் முடிவடைவதாக எண்ணினார்கள். அதனால் பல்வேறு காரணம் கருதி தம் ஊர் வருபவர்களுக்கு உணவு பரிமாறி, தங்க இடம் கொடுத்து உபசரித்தலைத் தங்கள் கடமையாகக் கொண்டு ஒழுகினர்.
“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்:81)
என்னும் ஐயன் திருவள்ளுவனின் குறள் வேளாளர்களின் இயல்பைக் கூறும் வண்ணமாக படைக்கப்பட்டுள்ளது.

உளவர்களின் இல்லத்தரசிகள் உணவு சமைத்த பின்னர் வாசலுக்கு வந்து காத்திருப்பார்கள். எவரேனும் விருந்தினர் வருகிறார்களா என்று காத்து வந்த விருந்தினர்க்கு உணவிட்ட பின்னரே தாம் உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவ்வழக்கத்தைக் கண்டு வியந்து “வருவிருந்து வைகலும் ஓம்புவான்” (குறள்:83) என்று வேளாளர்களுக்குப் பாமாலை சூட்டியுள்ளார் ஐயன் திருவள்ளுவர்.


பந்தி தொடரும்….


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 07, 2013 12:50 pm

விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Agriculture_main
“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” (திரிகடுகம்:12) என்று வேளார்ளர்களை உயர்த்திக் கூறுகிறது திரிகடுகம். குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை ஆகிய வன்மையான நிலத்தில் இருந்து வருகின்ற விருந்தினரை மருத நிலமாகிய மென்மையான நிலத்தில் வாழும்மென்மையான மனத்தை உடைய வேளாளர்கள் வாளைமீன், ஆமை, தேன், பெண்களால் பறித்து வரப்படும் தாமரை மலர்கள் ஆகியவற்றைக் கொடுத்து வரவேற்று உபசரித்தனராம். இதனைப் புற நானூற்றுப் புலவர் கூறுகின்றார். உங்களுக்காக அந்தப் பாடல் இதோ.

“கீழ்மடைக் கொண்ட வாளையும்,
உழவர் படை மிளிர்ந் திட்ட யாமையும்,
அறைநர் கரும்பில் கொண்ட தேனும்,
பொருந்துறை நீர்தரு மகளிர்
குற்ற குவளையும்” (புறம்:42)

வன்புலம் என்பது புன்செய் நிலத்தையும் மென்புலம் என்பது நன்செய் நிலத்தையும் குறித்தது. மருத நிலத்தைத் தவிர ஐவகை நிலங்களில் ஏனையவை வானம் பார்த்த பூமியான புன்செய் நிலங்கள். ஆகையால் அவற்றை வன்புலம் என்றனர்.

திரைப்படங்களில் ஏழ்மைக் காட்சியை மிக நுணுக்கமாகக் காட்டுவர். ஒரு வீட்டில் சோறு உண்ண இருக்காது. ஏதோ இருந்த கொஞ்சம் சோற்றைக் கணவனுக்கும் குழந்தைக்கும் பகிர்ந்து பரிமாறிவிட்டு வந்து அந்தக் குடும்பத் தலைவி பானையில் சிறிதளவே இருக்கும் தண்ணீரை சுரண்டி முகர்ந்து குடிப்பாள். இது வறுமைக்காட்சியின் உச்சம். அடுப்பில் பூனை தூங்குவது, சாப்பாட்டு நேரம் நீர் அருந்துவது முதலிய இந்த உச்சக் கட்ட வறுமைக் காட்சிகள் எல்லாம் திரைப்படங்களுக்குத் தமிழ் இலக்கியங்களின் கொடைதான்.

எப்படிப் பட்ட வறுமையில் இருந்தாலும் விருந்து கொடுப்பதில்தான் இல்லறத்தின் பெருமை இருப்பதாக நினைத்தார்கள் நம் முன்னோர்கள். அதானால் எந்த நிலையிலும் விருந்து உபசரித்தார்கள்.

குடநீரைக் காய்ச்சிக் குடித்துப் பசியாற்றிக் கொள்ளக்கூடிய அளவில் இல்லத்தில் வறுமை தன் செல்வாக்கை நடத்திய போதும் கடல் நீர் அளவு உண்ணும் விருந்தினரைப் பெற்றாலும் இன்மொழி பேசி வரவேற்பதைக் கடமையாகக் கொண்டவர்களே சிறந்த இல்லத்தரசிகள் என்று ஒரு வரையறையை வகுக்கிறது நாலடியார் பாடல் ஒன்று.

“குடநீரட் டுண்ணூ மிடுக்கட் பொழுதும்
கடல் நீர் அறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையறாக் கொள்ளு
மடமொழி மாதர் மனைமாட்சி யான்”

இந்த நாலடியார் கருத்துக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர்கள் சங்கத் தமிழ் பெண்கள். வறுமை. வீட்டில் உணவு மிகக் குறைவாக இருக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கே உணவு போதாது. ஆனாலும் நீண்ட பந்தல் போட்டு விருந்து கொடுக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்களாம். இதனை,

“உள்ளது தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉ” (புறம் 331)

என்னும் புறநானூற்றுப் பாடல் காட்டுகிறது.

பருத்தியில் இருந்து நூல் எடுக்கும் பணியைச் செய்கின்ற குறைந்த வருவாயை உடைய பெண்கள் எப்படி விருந்து படைத்தனர் பாருங்கள். அவர்களது மென்மையான மனத்தைப் போலவே விருந்தும் மென்மையாகப் படைத்தனராம். விழுங்கக் கூடிய அளவில் பதமாக, புதிதாக உடும்பின் நினத்தால் செய்த கூழை வந்த விருந்தினர்க்குக் கொடுத்துள்ளனர். இதனை தங்கால் பொற்கொல்லனார் என்னும் புலவர் புறநானூற்றில் சுட்டுவார். பாடல் பின்வருவது.

“படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை
யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு
விருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்:326)

விழுக்கு என்றால் விழுங்கக் கூடிய அளவில் பதமாக என்று பொருள். சங்கத்தலைவியர் விருந்து கொடுப்பதில் மிகுந்த விருப்பம் உடையவராக இருந்திருக்கின்றனர் என்பதை மேற்சுட்டிய பாடல்கள் விளக்கின.

பொருள் தேடும் பொருட்டு வெளியூர் சென்ற தலைவன் ஒருவனின் சொல்லாடல் பின்வருவது. “விரைந்து தேரைச் செலுத்துவாயாக” என்று வினை முற்றிய தலைவன் தன் தேர்ப்பாகனிடம் கூறுகிறான். ஏன் என்று தெரியுமா? தலைவி விருந்து உபசரிக்கும் விருப்பத்தோடு இருப்பாள். அதே வேளையில் தன் பிரிவால் உபசரிக்க இயலாமல் வருந்தி இருப்பாள். விருந்து புரக்காததால் வருத்தம் தோய்ந்த அவளது முகத்தில் இளநகை பூக்க வேண்டும். ஆகையால் தேரினை விரைந்து செலுத்துவாயாக என்கிறானாம். இதனைக் கூறும் சங்கப் பாடல் இதோ.

“விருந்துஅயர் விருப்பொடு வருந்தினள்
அசைஇய முறுவல் இன்நகை காணம்” (நற்; 81)

தலைவனைப் பிரிந்து வாடிய வருத்தத்தை விடவும் விருந்து புரக்காத வருத்தமே பெண்களிடத்தில் மிகுதியாக இருந்துள்ளது. இதனைக் கூறுபவர்கள் சங்கத் தலைவர்களே. இதே கருத்தை,

“விருந்துஅயர் விரும்பினள் வருந்தும்
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?” (நற்; 374)

என்னும் இந்தத் நற்றிணைத் தலைவனும் வழி மொழிகிறான்.

இது பரவாயில்லை. சங்கத் தமிழர்களுக்குக் காதலும் வீரமும் இரு கண்கள் என்பார்கள். போர் முரசில் காற்று மோதினால் அதனைப் போர் அறிவிக்கும் முரசு என்று நினைத்துக் கொண்டு போர்க்கோலம் பூண்டு போர்க்குக் கிளம்பி விடுவார்கள்.

அப்படிப் பட்ட போர் யுகத்தில் வாழ்ந்த ஒரு மறவன் என்ன கூறுகிறான் என்று பாருங்கள். மன்னனோடு போருக்குச் சென்ற அவன் போர் விரைவில் முடிந்தால் நல்லது என்று கூறுவதற்கு விருந்து புரத்தல் காரணமாக இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது விருந்தின் மேன்மை நன்கு விளங்கும்.

“பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்,
விருந்துநனி பெறுதலும் உரியள் மாதோ! (ஐங்; 442)

இந்தப் பாடலில் போர் நிமித்தமாக வெளியூர் சென்றுள்ள படைவீரன் மன்னன் போரைக் கைவிடுவானாயின் அருந்ததி போன்ற கற்பினையுடைய தன் மனைவி விருந்தினைப் பெறுவாள் என்று குறிப்பிடுகிறான். இதன் மூலம் சங்க காலத்தில் பெருகி இருந்து இப்போது அருகிக் கொண்டு வரும் விருந்து கொடுக்கும் இப்பண்பு இனிய இல்லறத்திற்கு மேலும் இனிமை கூட்டி இருக்கிறது என்பது புலனாகிறது.

அது மட்டுமல்ல, காதலர்களைக் களவில் இருந்து கற்பு வாழ்வுக்குக் கொண்டு சேர்க்கவும் அதாவது காதலர்களைக் கணவன் மனைவியாக மாற்றவும் விருந்து புரத்தல் காரணமாக அமைகிறது. எப்படி என்கிறீர்களா?

அடுத்த பந்தியில் சொல்றேன்......

(பந்தி தொடரும்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jul 10, 2013 9:25 pm

விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா 970942_557849814257224_1491155287_n
இது ஒரு காதலனும் காதலியின் தோழியும் பேசிக்கொள்கிற காட்சி. காதலி அடையாளம் சொன்ன இடத்தில் பட்டப் பகலில் பல நாள்கள் தன் காதலியைச் சந்திக்கிறான் அந்தக் கள்வன். கள்வன் என்றால் திருடன் அல்லன். காதல் திருடன். செய்தி சோலையின் தென்றலாய் பரவி விடுகிறது. என்ன செய்வான். அதன் பிறகு ஒருவரும் அறியாது இரவு நேரத்தில் சந்திக்கிறான். அதற்கும் வந்து விடுகிறது தடங்கல். அவள் வீடு முழுவதும் விருந்தினர். தலைவியை வெளியில் அழைத்து வரச் சொல்லி தோழியிடம். கெஞ்சுகிறான், மன்றாடுகிறான். திருமணத்திற்கான முயற்சிகள் எதையும் செய்யாமல் இப்படியே பகலிலும் இரவிலும் சந்தித்துச் செல்கின்ற அவனைத் திருமணத்திற்குத் தூண்ட இதுதான் தருணம் என்று நினைக்கிறாள் அவள்.

“ஏமுற இளையரும் புவியும் இன்புற, நீயும்
இல்உறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே” (அகம்:300)

“பார் விருந்தினர்கள் மகிழ்வாக உணவருந்திக் கொண்டு இருப்பதை. தலைவியை விரைந்து திருமணம் புரிந்து கொண்டால் நீயும் விருந்தினர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தலாம்” என்று கூறுகிறாள் ஒரு அகநானூற்றுத் தோழி.

களவிலேயே காலத்தைக் கழிக்கும் தலைவனைக் கற்பில் செலுத்த தோழி கையாளும் உத்திகளில் இவ்வுத்தி விருந்தின் பெருமையைச் சுட்டுவது மட்டுமல்ல. விருந்தினருடன் இல்லத்தரசனும் அமர்ந்து உணவருந்துவது தமிழர் மரபு என்பதையும் அறிய முடிகிறது.

இது ஒரு கிளுகிளுப்பூட்டும் சங்கத் தமிழ்க் குடும்பத்து காட்சி இது. ஒரு பின்னிரவு நேரம் விருந்தினர் வந்து விடுகின்றனர். இரவில் வந்த விருந்தினர்க்கு உபசரிக்க வேண்டி கொழுவிய தசையை நெய் அளாவிப் (சேர்த்து) பலவிதமாகச் சமைக்கிறாள் தலைவி. விருந்தும் உபசரித்து முடிக்கிறாள். நெய்ப்புகையும் அடுப்புப் புகையும் படிந்த நெற்றி. அதில் நுன்னிய வியர்வைத் துளிகள். வேலை செய்த சோர்வினால் தளர்ந்த நடை. அப்பாடா என்று களைப்புடன் தலைவனை நாடிச் செல்கிறாள் தலைவி. முன் எப்போதும் இல்லாத காதலோடும், பெருமிதத்தோடும் அவளை விரும்பிக் கூடுகிறானாம் தலைவன். இயல்புதானே. இதனை,

எல்லி வந்த நல்லிசை விருந்திற்கு
கிளர்இழை அரிவை நெய்துழந்து அட்ட
விளர்ஊன் அம்புகை எறிந்த நெற்றி
சிறுநுன் பல்வியர் பொறித்த
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே” (நற்;41)

என்னும் நற்றிணைப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. இதில் விருந்து புரத்தலுக்காக மனைவி சந்தித்த சிரமங்கள், சிந்திய வியர்வைகள் எல்லாம் சித்தரிக்கப் பட்டுள்ளன. மிகு சிரமத்துடன் விருந்து படைத்து இல்லறம் பேணும் தலைவியைத் தலைவன் மிகவும் விரும்புவான் என்னும் உளவியலையும் இப்பாடல் காட்டுகிறது. ஆம் தன் மனையாள் சமைத்த உணவை விருந்தினர் உண்டு பாராட்டும் போது அவனுக்குப் பெருமை கூடுகிறது. மகிழ்ச்சி கூடுகிறது. அதனால் கூடல் இன்பமும் கூடுகிறது.

“அறத்திற்கே அன்பு சார்பென்பர் அறியார்
மறத்திற்கு மஃதே துணை”

என்பது வள்ளுவ அறம். அறத்திற்கும் மறத்திற்கும் அன்பே அடிப்படை என்று திருவள்ளுவர் கூறுவது போல கூடலுக்குக் காரணமாக இருக்கும் விருந்தினர்கள் ஊடலுக்கும் காரணமாக இருக்கின்றனர். ஊடல் விருந்து பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அடுத்த பதிவில்...

பந்தி தொடரும்.....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 11, 2013 4:26 am

அருமையான பதிவு விருந்து உபசரிப்பதில் தமிழனுக்கு நிகர் எவனும் இல்லை

பாண்டி தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 




விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Mவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Uவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Tவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Hவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Uவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Mவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Oவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Hவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Aவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Mவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Eவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 12, 2013 10:55 pm

Muthumohamed wrote:அருமையான பதிவு விருந்து உபசரிப்பதில் தமிழனுக்கு நிகர் எவனும் இல்லை

பாண்டி தொடரட்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ம்ம்ம்ம் தொடரும். நன்றி முத்து..



விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Aவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Aவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Tவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Hவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Iவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Rவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Aவிருந்து அன்றும் இன்றும் - ஆதிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 20, 2013 9:10 pm

விருந்து அன்றும் இன்றும் - ஆதிரா 1017696_561837460525126_1670329374_n

ஊடல் தீர்க்கும் விருந்து பற்றி அறிய ஆவலாக இருக்கிறீர்கள். என் இல்லத்தில் விருந்து கைகூடியதாலும் என் தமிழ் என்னோடு ஊடியதாலும் என்னால் உடனடியாக ஊடல் விருந்தைப் பரிமாற முடியவில்லை. மன்னிக்கவும் விருந்தினர்களே.

இப்போது பார்க்கலாம் ஒரு அழகிய காட்சி.
கூடலுக்கு உதவிய விருந்து உபசரித்தல், ஊடல் முடிவுக்கு வரவும் உதவுகிறது. ஊடலுக்கு உதவும் விருந்து பற்றி அறியும் முன்பு ஊடலைப் பற்றி சிறிது பார்த்து விடுவது நலம்.

புலவி, ஊடல், உணர்தல் கூடல் என்னும் நான்கும் குடும்ப வாழ்வில் தலைவன் தலைவி இருவரிடமும் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் இனிமையான சுவைகள். இவற்றுள் கூடல் இன்பத்தை மிகச் செய்யும் சுவைகள் புலவி, ஊடல் என்னும் இரண்டும். இதை அனுபவித்துச் சொன்ன மூத்தத் தமிழன் தான் திருவள்ளுவன். இதனை,

“ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்”

என்பான். அக இன்பத்தை அல்லது கூடல் இன்பத்தை மிகவும் இரசனையாக்கும் இந்த சுவைகளில் ‘புலவி’ என்பது சிறு பொழுது, சிறிது நேரம் மட்டும் கொள்ளும் பொய்க் கோபம். அதாவது தலைவி தலைவனோடு கொள்ளும் செல்லக் கோபம் என்றும் கூறலாம்.

தலைவி புலவியோடு இருப்பாள். அப்போது, தும்மினால் தலையில் தட்டி ‘நீடு வாழ்க’ என்று கூறியபடி தலைவி புலவி ஒழிப்பாள் என்று நினைத்துத் தலைவன் தும்முவான்.
அவளோ அவன் தும்மியதும் “நினைக்க வேண்டிய நான் அருகில் இருக்கும் போது உங்களை யார் நினைக்கின்றார்கள் நீங்கள் தும்முகிறீர்கள்?” என்று செல்லக் கோபம் கொள்வதும், மறுநாள் அதே போல் தும்மல் வருகிறது. வந்த தும்மலை அடக்கிக் கொள்கிறான் தலைவன். “நிச்சயமாக உங்களுக்கு யாரோ காதலி இருக்கிறாள். அது எனக்குத் தெரியக் கூடாது என்றுதான் வந்த தும்மலை அடக்கிக் கொண்டீர்கள் ”என்று கள்ளக் கோபம் கொள்வதும் “இந்தப் பிறவியில் உன்னைப் பிரிய மாட்டேன்” என்று தலைவன் கூறியதும், “அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரிந்து விடுவீரோ?” என்று அழுவதும் திருக்குறள் தலைவியின் புலவி நுணுக்கம்.

ஊடல் என்பது தவறு இழைத்த தலைவனுடன் அல்லது தலைவன் தவறு இழைத்தான் என்று தவறாக எண்ணிக் கொண்டு தலைவி கொள்ளும் கோபம். தலைவன் மீது தவறே இல்லாவிட்டலும் மேலும் அவன் அதிக அன்பைத் தன் மீது செலுத்துமாறு செய்யவே தலைவி ஊடல் கொள்வாள். இது பெண் உளவியல். ஊடல் கொள்ளும் காலம் புலவியின் காலத்தை விட சற்று அதிகமாக இருக்கலாம்.

ஊடலை அளவுக்கு அதிகமாகச் செல்ல விடுதல் கூடாது. உணவில் உப்பு எப்படி அளவோடு சேர்த்துக் கொள்கிறோமோ அது போல ஊடல் அளவோடு இருக்க வேண்டும் என்பது ஊடலுக்கான இலக்கணம். இந்த ஊடலில் மட்டும் வெற்றியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் போல் அல்ல. மாறுபடுவர். இங்கு தோற்றவர்களே வெற்றி பெற்றவர்களாம். இவற்றையெல்லாம் சொல்வது வள்ளுவ ஞானியே.

காலம் அறிந்து உரிய நேரத்தில் உணர்ந்து கூடுதல் வேண்டும். அப்படி சரியான காலத்தை அறிதலை ‘உணர்தல்’ என்று குறித்தார்கள்.

இப்போது தொடர வேண்டிய இடத்திற்கு வருவோம். தொல்காப்பியம் ஊடல் தீர்க்கும் வாயில்களாக அதாவது தலைவன் தலைவியின் ஊடலை முடிவுக்குக் கொண்டு வருபவர்கள் என்று ஒரு பட்டியலைத் தருகிறது. அதில் விருந்தினரையும் அடக்குகிறது. இதோ பாடல்.

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப”

விருந்தினர் எப்படி இவர்களின் ஊடலைத் தீர்த்து வைப்பார்கள். பார்க்கலாமா?

தலைவி தலைவனுடன் ஊடல் கொண்டு இருக்கிறாள். ஊடலில் இருந்த தன் தலைவியைச் சேர தலைவன் நினைக்கிறான். ஆனால் அவளோ தலைவன் வரும்போதெல்லாம் கதவை அடைத்து விடுகிறாள். சமயம் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கள்வன் விருந்தினர் இல்லத்துக்குள் நுழையும் வேளை அவனும் அவர்களுடன் நுழைந்து விடுகிறான். இதை அறியாத தலைவி விருந்து சமைத்து அவர்களுக்குப் பரிமாற ஆயத்தம் ஆகும்போது விருந்தினர் இடையில் இவனும் அமர்ந்திருப்பதைப் பார்த்து விடுகிறாள்.

ஆனால் வந்தவர் முன் அவளால் அவனை விரட்ட முடியாது; வைய முடியாது; ஏன் கோபிக்கக் கூட முடியாது. என்ன செய்வாள்? அவனோடு கொண்ட புலவியை மறந்தோ அல்லது மறைத்தோ சிரித்து விடுகிறாள். இதனைக் கண்டு ரசிக்கிறான் தலைவன். எப்படிப் பாருங்கள். சமாதானமும் சாந்தியும் குடும்பத்தில் நுழைந்து விடுகிறது.

விருந்து உபசரித்து ஊடல் மறந்து கூடல் கொள்ளும் சங்கத் தமிழரின் இந்த அழகான இல்லற மாட்சியை எப்படிக் காட்சிப் படுத்துகிறார் மாங்குடி கிழார் என்னும் சங்கப் புலவர்.

இல்லத்திற்கு விருந்தினர் வருகின்றனர். இல்லத் தலைவி, வியர்க்க வியர்க்க உணவு தயாரிக்கிறாள். புகை உண்ட கண்களை உடைய அவள் பிறை போன்ற நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளைத் தன் அழகிய சேலையின் முந்தானையின் நுனியால் துடைத்துக் கொண்டு

விருந்தினர்க்கு உணவு பரிமாற வாழை இலையை அறுத்து வருகிறாள். அதன் அடிக்காம்பு பெரியதாக உள்ளது. மோதிரம் அணிந்த மெல்லிய விரல்கள் சிவக்கும் படியாக அதனைத் தன் விரல்களால் பகிர்ந்து கொண்டு அட்டிலில் நிற்கிறாள். அப்போது அவனைப் பார்த்து விடுகிறாள். அவன் மீது புலவி உள்ளவளாக இருந்த போதும் விருந்தினர் முன்பு அவள் புன்னகைப் பூக்கிறாள். அவனது கள்ளத் தனத்தையும் சாமர்த்தியத்தையும் கண்டு சிரிக்காமல் இருக்க முடியுமா?

“சிவந்த அவளது முகத்தில் இது போன்ற முல்லைப் பூச் சிரிப்பை எப்போதும் கண்டு மகிழ வேண்டும். அதற்காக மேலும் மேலும் வருக விருந்தினர்களே” என்று அந்தக் கள்வன் விருந்தினர்களை அழைக்கின்றான். பாடலைப் பாருங்கள்.

“தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேழை
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப,
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகைஉண்டு அமர்த்த கண்ணள், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அம்துகில் தலையில் துடையினள், நப்புலந்து
அட்டி லோளே; அம்மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பு ஆன்று,
சிறிமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே” (நற்:120)

மற்றொரு சுவையான ஊடல் காட்சியுடன் மீண்டும் சந்திக்கிறேன்.


பந்தி தொடரும்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக