ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

3 posters

Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by manikandan.dp Sun Jul 07, 2013 10:13 am

இணையத்திற்கு இணைப்பு தரும் வழிகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகின்றன. இணைப்பு தரும் நிறுவனத்தின் சேவை கிளை மையத்தில் உள்ள சர்வரிலிருந்து, வயர் இழுத்து, நம் இல்லம் மற்றும் அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இணைப்பு தரும் பழக்கம் இன்னும் இருந்தாலும், வயர் இன்றி இணைப்பு தருவதே இன்றைய சிறப்பாக இயங்கி வருகிறது. வை-பி, டேட்டா கார்ட், வை-மேக்ஸ் என இணைப்பின் தன்மைகள் மாறி வருகின்றன. ஆனால், இணைப்பு எப்படிப்பட்டதாயினும், அது வேகமான தகவல் பரிமாற்றம் தருவதையே மக்கள் விரும்புகின்றனர். மின்னல் வேக இணைய இணைப்பு கிடைக்காதா என அனைவருமே விரும்புகின்றனர். கட்டமைப்பு செலவு, கட்டணம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வேகமான இணைய இணைப்பு கிடைக்கும். இந்தியா உட்பட பல நாடுகளில், இணைய வேகம் இன்னும் மிக மிக மிதமான நிலையிலேயே உள்ளது.

சரி, அதி வேகமான இணைப்பில் முதல் இடம் பெறுவது எந்த நாடாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். அமெரிக்கா என்று உங்கள் எண்ணத்தில் பளிச்சிட்டால், அதனை மறுத்துவிடுங்கள். முதல் பத்து இடங்களில் கூட அமெரிக்கா இல்லை. அந்நாட்டின் விஸ்தீரணத் தினால், அதன் சராசரி இணைய இணைப்பு வேகம், அந்நாட்டிற்கு முதல் பத்து இடங்களில் கூட இடம் தரவில்லை. 14 ஆவது இடத்தில் உள்ளது. இங்கு உலக அளவில் அதி வேக இணைப்பு தரும் சில நாடுகளைப் பார்க்கலாம். இந்த வகையில் புளூம்பெர்க் (Bloomberg.com) தளத்தில் கிடைக்கும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. ஹாங்காங் :

நொடிக்கு 54.1. மெகா பிட்ஸ் வேகம். பன்னாட்டளவில் அதிகமான வேகத்தில் இணைய இணைப்பு தரும் நாடு. மக்கள் பெருக்கம், இணையத்தைப் பயன்படுத்துவோர் அதிகம், இணையத்தில் எந்த பொருள் பற்றியும் பதிவதற்குத் தடையற்ற அரசின் ஆதரவு எனப் பல காரணங்களை இதற்குக் கூறலாம். சாப்ட்வேர் பைரசி எனப்படும் திருட்டு நகல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதிலும், இணையம் வழி வழங்குவதிலும், சிறுவர்கள் சார்ந்த பாலியல் தகவல்களைத் தருவதிலும் இங்குள்ள இணைய தளங்கள் பயன்படுகின்றன. பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட இந்த நாடு, இவை எதனையும் தடுப்பதில்லை. இணைய தளம் அமைத்து செயல்பட எந்த உரிமமும் பெற வேண்டியதில்லை.

2. தென் கொரியா:

நொடிக்கு 48.8 மெகா பிட்ஸ். டிஜிட்டல் விளையாட்டுகளுக்கு உலக அளவில் பெயர் பெற்ற நாடு. உலக அளவில் இணைய வழி விளையாட்டு போட்டியை அடிக்கடி நடத்தும் நாடு. இந்நாட்டின் இணைய அலைக் கற்றையில் பெரும்பகுதி, விளையாட்டுகளை நடத்துவதிலேயே செலவாகிறது. இணைய இணைப்பு கட்டணம் இங்கு மிக மிகக் குறைவு.
அரசின் கொள்கைகள், இணைய பயன்பாட்டைப் பெரிதும் ஊக்குவிப்பதாக உள்ளன. அனைத்து பெரிய நகரங்களிலும், வயர் இணைப்பற்ற இணைய தொடர்பு தரப்படுகிறது. இங்குள்ள உணவு விடுதிகள் அனைத்திலும் இலவச வை-பி இணைய இணைப்பு தரப்படுகிறது.

3. ஜப்பான்:

நொடிக்கு 42.2 மெகா பிட்ஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழில் பிரிவில், ஜப்பான் தன் உயர்நிலையை விட்டுவிட்டாலும், தகவல் தொழில் நுட்பத்தில் இன்னும் முன்னணி இடத்தைக் கொண்டுள்ளது. இணையத் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருப்பதை, ஜப்பான் தன் தேசியக் கொள்கையாகவும், இலக்காகவும் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்றத்தை எடுத்துச் செல்ல, இணைய இணைப்பு தருவதில் அதிவேக ஆப்டிக் பைபர் கேபிள்கள், நாடெங்கும் பயன்படுத்தப்படுகின்றன.

4. லத்வியா:

நொடிக்கு 37.5 மெகா பிட்ஸ்: தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகளை எண்ணுகையில், லத்வியா அதில் ஓர் இடம் பிடிக்கவில்லை. ஆனால், இணைய இணைப்பினைப் பொறுத்த வரை, வேகமான தகவல் பரிமாற்றம் கூடிய இணைப்பினைத் தருவதில் முன்னணி இடம் கொண்டுள்ளது.

5. ருமானியா:

நொடிக்கு 37.4 மெகா பிட்ஸ்: இந்நாட்டின் சில நகரங்கள், உலக அளவில் அதிவேக இணைய இணைப்பு தருவதில் முதலிடங்களைப் பிடித்துள்ளன. தென் கொரியாவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் சென்ற ஆண்டில் இடம் பெற்றிருந்தது.

6. பெல்ஜியம்:

நொடிக்கு 32.7 மெகா பிட்ஸ்: இந்நாட்டின் பெரும்பாலான மக்கள், தாங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பில் டேட்டாவிற்கான அதிக பட்சத்தினை வரையறை செய்துள்ளனர். இணைப்பு தரும் வேகம் போதுமானதாக உள்ளது.

7. ஸ்விட்சர்லாந்து:

நொடிக்கு 32.4 மெகா பிட்ஸ். ஐரோப்பிய நாடுகளில், அதிக வேகத்தில் இணைப்பு தரும் நாடு ஸ்விட்சர்லாந்து. நாட்டின் ஜனத்தொகை அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் இணையம் பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நாடாகவும் இது இடம் பெற்றுள்ளது.

8. பல்கேரியா:

நொடிக்கு 32.1 மெகா பிட்ஸ்: குறைந்த அளவிலான அரசு வரிகள், குறைவான செலவில் கிடைக்கும் மனித உழைப்பு ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றதால், பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இங்கு தங்கள் நிறுவனப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இந்நாட்டில், பெரும்பாலான இணைய இணைப்புகள் லோக்கல் ஏரியா நெட்வொர்க் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. வேகம் மற்றும் சேவையில் உதவி ஆகியவற்றால், மக்கள் அதனையே விரும்புகின்றனர்.

9. இஸ்ரேல்:

நொடிக்கு 30.9 மெகா பிட்ஸ். 2001 ஆம் ஆண்டில் தான், இஸ்ரேலில் மக்களுக்கு இன்ட்ர்நெட் கிடைத்தது. அதன் பின்னர், மிக வேகமாக வளர்ந்து இந்த இடத்தைப் பிடித்துள்ளது. தொலைபேசி மற்றும் கேபிள் கட்டமைப்பு மூலம், இங்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படுகிறது.

10. சிங்கப்பூர்:

நொடிக்கு 30.7 மெகா பிட்ஸ். தொழில் நுட்ப கூடு எனச் செல்லமாக அழைக்கப்படும் நாடு. 99 சதவீத மக்கள் இணைய இணைப்பினைக் கொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில், ""அதிபுத்திசாலியான நாடு” எனப் பெயர் எடுக்க வேண்டும் என்ற இலக்கோடு சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக, இணைய இணைப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. அதிவேக பைபர் நெட்வொர்க் அமைக்கப்பட்டு இணைப்பு தரப்படுகிறது. நேஷன் வைட் பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் ஒன்றை மிக வேகமாக சிங்கப்பூர் அரசு அமைத்து வருகிறது.
மேலே தரப்பட்டுள்ள பட்டியல், இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளதாகும். அந்நாட்டின் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையம் பயன் படுத்தும் மக்கள், குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.

படித்தில் பிடித்தது
உங்களுக்காக


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty Re: அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by ராஜா Sun Jul 07, 2013 1:21 pm

பதிவு அதிக இணைப்பு கொடுப்பவர்களை பற்றியா அல்லது அதிவேக இணைப்பு கொடுப்பவர்களை பற்றியா

இது எல்லாம் எப்ப வந்த விபரங்கள்?

சமீப காலங்களாக இங்கு மத்தியகிழக்கு நாடுகளில் 100 mbps கண்ணாடி இழை இணைய இணைப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் புன்னகை


அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty Re: அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by manikandan.dp Sun Jul 07, 2013 4:21 pm

இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது....
நான் இன்று தான் இந்த பதிவை படித்தேன் மற்றும் பகிர்ந்தேன்....

"மத்தியகிழக்கு நாடுகளில் 100 mbps கண்ணாடி இழை இணைய இணைப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்" - இது இணைய இணைப்பு வேகமா அல்லது இணைய வேகமா?

"அப்புறம் இன்னொரு விஷயம் இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது" - இந்த பதிவை படிக்க வேண்டும் தலைப்பு அல்லது லிங்க் கிடைக்குமா ?

தவறு இருந்தால் மன்னிக்கவும்

பின்னூட்டத்திற்கு நன்றி ....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty Re: அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by ராஜா Sun Jul 07, 2013 5:06 pm

manikandan.dp wrote:இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது....
நான் இன்று தான் இந்த பதிவை படித்தேன் மற்றும் பகிர்ந்தேன்....
இது இணைய இணைப்பு வேகமா அல்லது இணைய வேகமா?
இந்த பதிவை படிக்க வேண்டும் தலைப்பு அல்லது லிங்க் கிடைக்குமா ?
தவறு இருந்தால் மன்னிக்கவும்
பின்னூட்டத்திற்கு நன்றி ....
தலைப்பு நினைவுக்கு வரவில்லை கிடைத்தால் அறியதருகிறேன் ,
இணைய இணைப்பு வேகம் / இணைய வேகம் என்ன வித்தியாசம் ?!


சற்று பழைய செய்திகளை மற்ற தளங்களில் இருந்து பதியும் போது , நமது தேடுபொறில் அந்த பதிவு தலைப்பு அல்லது அது பற்றிய ஒருசில வார்த்தைகளை இட்டு தேடுங்கள் , ஏற்கனவே இங்கிருந்தால் தெரிந்துவிடும்.

"மேற்கோள்" என்பதை அழுத்தி நீங்கள் பதில் சொல்லலாம் ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty Re: அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by manikandan.dp Sun Jul 07, 2013 5:13 pm

நன்றி


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty Re: அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 5:36 pm

நல்ல பதிவு நண்பரே.

நம்ம இந்தியாவின் இணைய வேகம் என்ன?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty Re: அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by manikandan.dp Sun Jul 07, 2013 5:44 pm

ராஜு சரவணன் wrote:நல்ல பதிவு நண்பரே.

நம்ம இந்தியாவின் இணைய வேகம் என்ன?


தெரியவில்லை......
கிடைத்தவுடன் பகிர்கிறேன்

இந்தியாவில் தற்போதுதான் 3G சேவை சூடுபிடித்துள்ளது (10 டு 20 mbps என் கணிப்பு )
தவறு இருந்தால் மன்னிக்கவும்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள் Empty Re: அதிக இணைய இணைப்பு தரும் நாடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum