ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Poll_c10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Poll_m10இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Poll_c10 
Barushree

kavithasankar

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

+7
ராஜு சரவணன்
sundaram77
ராஜா
சிவா
SHANMUGHAM
தர்மா
அகல்
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Fri Jul 05, 2013 8:54 pm

First topic message reminder :

திவ்யாவின் காதல் கணவன் தர்மபுரி இளவரசனின் இறப்பு யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த சம்பவத்திற்கு சாதிவெறி முக்கிய காரணம் என்றாலும் ஊடகங்களுக்கும் அதில் பக்கு உண்டு. இதற்கிடையே சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இளவரசனின் இறப்பு கொலையா ? தற்கொலையா ? என்ற ஒரு பெரிய கேள்வி மனதில் குடிகொள்ள காரணங்கள் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் அதைப் பற்றிய எனது பார்வையை மட்டும் பதிவு செய்ய கனத்த மனதுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

1. நீதிமன்ற விசாரணையின் போது இளவரசன் தன்னை வற்புறுத்தி கூட்டிச் சென்றார், மிரட்டினார், கடத்தினார் என்ற எந்த பழியையும் இளவரசன் மீது திவ்யா போடவில்லை. இரண்டு தினங்களுக்கு முன், எனது தாயாரின் நலன் கருதி அவருடன் வாழ்வேன், இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று நீதி மன்றத்தில் திவ்யா கூறினார். ஆனால் இளவரசனை வெறுத்து விலகியதாகக் கூறவில்லை. திவ்யா தன்னை முற்றிலும் வெறுத்திருக்கும் பட்சத்தில் இளவரசன் தற்கொலை முயற்சி செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் திவ்யா தன்னுடன் வாழப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் அவர் எனக்குக் கிடைப்பார், நம்பிக்கை இருக்கிறது. திவ்யாவைச் சுற்றி இருப்போர் அவரை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள் என்று சலமில்லாமல் தனது கடைசிப் பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

2. இளவரசனின் முந்தய பேட்டிகளைப் பார்த்தல் அவரின் தெளிவும், தைரியம் நமக்குத் தெரியும். அதோடு திவ்யாவை விட்டுவிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள இளவரசனுக்கு திவ்யா வெறும் காதலியல்ல, மனைவி. தனக்குச் சொந்தமானவள். திவ்யா வார்த்தையளவில் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அவள் தனது மனைவி என்பதால் சட்டம் இருக்கிறது எப்படியும் சேரமுடியும் என்ற நம்பிக்கை இளவரசனுக்கு இருந்திருக்கும்.

3. அப்படியே திவ்யாவின் வார்த்தைகளால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வைத்துக் கொண்டாலும், புகைப்படங்களில் காணப்படும் இளவரசனின் உடல், ரயில்முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், அவ்வளவு வேகமாக வரும் ரயிலின்முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பரின் உடல் இவ்வாறு சில காயங்களுடன் தப்பி இருக்க வாய்ப்பில்லை. ஒரு பக்க முகமும், தலையும் மட்டும் காயம் அடைந்திருக்கிறது, சட்டைகூட பெரிதாக கசங்கவில்லை என்று செய்திகளில் படிக்க முடிகிறது. ரயில் விபத்தில் பெருத்த காயங்கள் இல்லாமல், சட்டை கசங்காமல் தலையில் மட்டும் காயங்களுடன் சாவது பெரும் ஆச்சர்யத்திற்குரியது.

4. சாதிய சக்திகள் ஒன்றுகூடி இளவரசனுடன் வாழபோவதில்லை என்று திவ்யாவைக் கூற வைத்த பிறகு, அவர்களின் அடுத்த நோக்கம் தங்களது சாதியைச் சேர்ந்த ஒரு ஆணிற்கு அந்தப் பெண்ணை கூடியவிரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன்-திவ்யாவின் திருமணம் நாடறிந்தது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அது சட்டப்படி செல்லக்கூடிய திருமணம்.

மறுமணம் செய்து வைக்க வேண்டுமானால் விவாகரத்துப் பெறவேண்டும். அதற்கு அந்தப் பெண்ணை ஒத்துக் கொள்ளவைத்தாலும், இளவரசன் இருந்த நிலைப்பாட்டில் அவர் திவ்யாவைப் பிரிய ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படியே ஒத்துகொண்டாலும் குறைந்தது ஒருவருடம் விவாகரத்திற்காக காத்திருக்கவேண்டும். அதற்குள் திவ்யா மீண்டும் தனது மனதை மாற்றிக்கொண்டு இளவரசனுடன் போனால் இதுவரை தங்கள் சாதியைக் காக்க செய்த போராட்டங்கள் வீணாகிவிடும் என்று அவர்கள் கருதி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இளவரசன் இறந்துவிட்டால் உடனடி மறுமணம் சாத்தியம் என்ற எண்ணம் தலைதூக்கி இருக்கலாம். அதனால் இந்த அவலமும் அரங்கேற்றப் பட்டிருக்கலாம்.

திவ்யா தனது தாயுடன் போக மிக முக்கியமான காரணம் அவர் தந்தையின் இறப்பு. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அந்த ஒரு காரணத்தை வைத்தே சாதிய சக்திகள் திவ்யாவை உணர்வுப் பூர்வமாக அணுகி, அவரது சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். இளவரசனோடு போனால் நானும் இறந்துவிடுவேன் என்று அவரது தாயும் பயமுறுத்தி இருப்பார். என்ன செய்வதென்று தெரியாத பேதையாய், மன அழுத்தம், சாதிய நிர்பந்தம் இவற்றிற்கிடையே வேறு வழியில்லாமல் திவ்யா இளவரசனுடன் இனி வாழப்போவதில்லை என்று வார்த்தையளவில் மட்டுமே சொல்லி இருக்க வேண்டும்.

இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இல்லை இது தற்கொலையானால் அதற்கான சரியான காரணங்கள் என்ன என்பதை சாதிய/அரசியல் ஈடுபாடில்லாத, முறையான விசாரணை நடத்தப்பட்டால் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்குமா என்பதும், அப்படியே நடத்தாலும் விசாரணையை முடிக்க எத்தனை வருடங்கள் இழுப்பார்கள் என்பதும் பெரும் கேள்விக்குறியே !

"சாதி வெறியால் இளம் காதலர்களை இந்த நிலைக்குத் தள்ளிய நமது சமூகத்தை நினைத்து, ஒரு தமிழனாய் வெட்கித் தலை குனிகிறேன்"

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/07/blog-post_5.html

அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by ராஜா Sat Jul 06, 2013 3:32 pm

அகல் wrote:ஒரு குறைந்த பட்ச பாராட்டிக்கூட பதிவு செய்து நாம் ஊக்குவிக்க மறந்துவிட்டு, சதி வெறியால் ஏற்பட்ட இந்த இழப்பை அவர்கள் மேல் திணிக்க அடுக்கடுகாய் காரணங்களைத் தேடுகிறோம்... சாதிவெறியைக் கண்டிக்கக் கூட தவறுகிறோம்...
பொதுவில் கருத்து சொல்லும்போது கவனத்துடன் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் அகல். இந்த இளவரசனை பாராட்டாத அனைவரும் காதலுக்கு எதிரியுமில்லை , சாதி வெறியர்களுமில்லை.
எனக்கு தெரிந்து எத்தனையோ காதலில் ஜெயித்த ஜோடியினர் இருக்கிறார்கள் அவர்களில் பலர் கலப்பு திருமணம் செய்தவர்கள் வெற்றிகரமாக தங்களின் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.தங்களின் பிள்ளைகளை டாக்டர் , இஞ்சீனியர் என்று உயர்படிப்பு படிக்க வைத்தவர்களும் வைத்துக்கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by தர்மா Sat Jul 06, 2013 4:50 pm

அப்படியே ஆமோதிக்கிறேன் தம்பி.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Sat Jul 06, 2013 9:51 pm

ராஜா wrote:
அகல் wrote:ஒரு குறைந்த பட்ச பாராட்டிக்கூட பதிவு செய்து நாம் ஊக்குவிக்க மறந்துவிட்டு, சதி வெறியால் ஏற்பட்ட இந்த இழப்பை அவர்கள் மேல் திணிக்க அடுக்கடுகாய் காரணங்களைத் தேடுகிறோம்... சாதிவெறியைக் கண்டிக்கக் கூட தவறுகிறோம்...
பொதுவில் கருத்து சொல்லும்போது கவனத்துடன் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் அகல். இந்த இளவரசனை பாராட்டாத அனைவரும் காதலுக்கு எதிரியுமில்லை , சாதி வெறியர்களுமில்லை.
எனக்கு தெரிந்து எத்தனையோ காதலில் ஜெயித்த ஜோடியினர் இருக்கிறார்கள் அவர்களில் பலர் கலப்பு திருமணம் செய்தவர்கள் வெற்றிகரமாக தங்களின் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.தங்களின் பிள்ளைகளை டாக்டர் , இஞ்சீனியர் என்று உயர்படிப்பு படிக்க வைத்தவர்களும் வைத்துக்கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இது தவறான கருத்து என்று கருதினால் மன்னிக்கவும். அது உங்களது பார்வையாக இருக்கலாம்.. நீங்கள் உங்களது கருத்துக்களைப் பதிவு செய்தீர்கள், அதன் அடிப்படையில் நானும் எனது கருத்துக்களை பொதுப்படையாகவே பதிவு செய்தேன்.. இது பொது இடத்தில் பதியக்கூடாத கருத்து என்றால், அந்த இளவரசனின் தனித் திறமை என்ன, அவனால் என்ன செய்ய முடியும் முடியாது என்று தெரியாது, வயதை மட்டுமே காரணம் காட்டி அவனது மனைவிக்கு நப்கீன் வாங்கித்தர எங்கே போவான் ? என்ற தங்களது ஒரு தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் ஏற்புடையாதா என்பதை சற்று யோசிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன்.. இதைவிட ஒரு ஆண்மகனை இழிவாக விமர்ச்சிக்க முடியுமா என்பதை சற்று சிந்திக்கவும்.. இதே போன்ற விமர்சனங்கள் நம் மீது வீசப்பட்டால் நமது மனநிலை எப்படி இருக்கும்... இன்னும் பதினெட்டு வயதே நிரம்பாத பல பேர் தங்கள் குடும்பத்தை வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நன்றி...

Last edited by அகல் on Sat Jul 06, 2013 10:36 pm; edited 1 time in total

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Sat Jul 06, 2013 10:30 pm

சில சமகால நிகழ்வுகள் அரசியல் சமூகவியல் செய்திகள் என்பதற்கும் அப்பால் சென்றுவிடுகின்றன. அவற்றில் விவாதிப்பதற்குக்கூட ஏதுமிருப்பதில்லை. நெடுங்காலநோக்கில் மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் உடையவை அவை. அதிலொன்று இளவரசனின் மரணம்.

தமிழகத்தின் முக்கியமான அரசியல்நிகழ்வாக இளவரசன் திவ்யா காதல் மணம் உருவாகி வருவதை கவனித்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு விவாதிக்க ஏதுமே இல்லை. இந்த நூற்றாண்டு உருவாக்கிய விழுமியங்கள் நெறிகள் எதிலும் நம்பிக்கையற்ற கீழ்மனிதர்களுக்கும் இந்நூற்றாண்டு உருவாக்கிய அறத்தை நம்பிய இரு புதிய தலைமுறையினருக்கும் இடையேயான போர்தான் அது. அதில் அடிப்படை அறவுணர்வோ எளிய சிந்தனை உணர்வோ உடைய ஒருவர் எடுக்கக்கூடிய நிலைப்பாடு ஒன்றே. சமரசமில்லாமல் ,ஆனால்களும் இருந்தாலும் இல்லாமல் இளையதலைமுறையினரை ஆதரிப்பது. அதுதான் என் நிலைப்பாடு.

அது என்னைப்பொறுத்தவரை அரசியல் நிலைப்பாடு அல்ல. சமூகவியல் புரிதல் அல்ல. சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் செல்லுபடியாகும் ஒரு வாழ்க்கைமுறை. அந்தத் தளத்தில் நின்றபடியே ஒருவர் பேசியாகவேண்டுமென்பதே என் எண்ணம்.
எந்தத் தருணத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை நான் ஏற்றுக்கொண்டதில்லை அருவருப்பூட்டும் ஒரு பழமைவாதக்கும்பல் என்பதற்கு மேலாக அவர்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை. ஒரு நாகரீகமான சிவில்சமூகம் கடுமையக முரண்படவேண்டிய, வெறுத்து ஒதுக்கவேண்டிய எதிர்மறைச் சக்தி அவர்கள். ஒரு நேர்மையான அரசால் ஒடுக்கி அழிக்கப்படவேண்டிய சமூகவிரோதக்கும்பல். எந்தவித அடிப்படை அறமும் இல்லாத அந்த ஒட்டுண்ணிக்கும்பலின் மிகப்பெரிய இரை வன்னியமக்கள்தான். இன்று அவர்களே அதைப்புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

இந்தத் தளத்தில் இதற்கு முன்னரே இதேகருத்தைத்தான் எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் அந்த அமைப்பின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது, அந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது அதை வன்மையாகக் கண்டித்திருக்கிறேன். ஏன் இருபதாண்டுகளுக்கு முன்னால் அவ்வமைப்பை இங்குள்ள பெரியாரியர்களும் இடதுசாரிகளும் சிற்றிதழ்க்கலகக்காரர்களும் தூக்கிப்பிடித்தபோது என் வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்து அதற்காக வசைபாடப்பட்டிருக்கிறேன்.
ஏதேனும் ஒரு கட்டத்தில் அவ்வமைப்பை ஆதரித்த ஒவொருவரும் அதை முழுமையாக நிராகரித்துப்பேசக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய ஒரு தரப்பு என்றால் அவர்கள்தான். அதைச் செய்யாத ஒவ்வொருவரும் இந்தக் குற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்றே பொருள்.

தமிழகச்சாதிவெறியர்கள் தூக்கிப்பிடிக்கும் பெரியாரியம் தமிழ்த்தேசியவாதம் போன்ற போலிச்சொல்லாடல்களுக்கு அடியில் இருக்கும் அப்பட்டமான யதார்த்தம் வெளிவர இந்த தருணம் காரணமாகியிருக்கிறது. இனியேனும் நேரடியாக உண்மையின் கண்களில் பார்த்து சிந்திக்க நாம் பழகியாகவேண்டும்.

நாம் சாதியொழிப்பு முதல் சமத்துவம் வரையிலான அனைத்து கருத்துக்களையும் அதிகார அரசியலுக்கான ஆயுதங்களாக மட்டுமே கையாண்டிருக்கிறோம். நம்மை எதிர்ப்பவர்களை, நமக்குப்பிடிக்காதவர்களை வசைபாடுவதற்காக மட்டுமே கையில் எடுத்திருக்கிறோம். நாம் அக்கருத்துக்களை நம் இல்லங்களுக்குக் கொண்டு சென்றதில்லை. நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தந்ததில்லை.

நடந்திருப்பது ஒரு கொடூரமான கொலை மட்டும் அல்ல. ஓர் இளம்தம்பதியினருக்கு எதிரான கொடூரம் மட்டும் அல்ல. நாகரீக சமூகத்துக்கு எதிரான அறைகூவல். அதைத் தமிழக சிந்தனையாளர்களும் சாமானியர்களும் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதில் மட்டுமே நம் எதிர்காலம் உள்ளது. இதில் ஒரே வரிதான் பதிலாக இருக்க முடியும். ‘இந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் தரப்பில் நான் இல்லை’
என் மகனின் வயதுதான் இளவரசனுக்கு. ஒரு தந்தையின் நெஞ்சில் ஊறும் கண்ண்ணீருடன் அவனுக்கு அஞ்சலி

எழுத்தாளர் ஜெயமோகன்....

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by Muthumohamed Sat Jul 06, 2013 10:44 pm

இன்றைய காலத்திலும் ஜாதிவெறி பிடிச்சவர்கள் இருக்கிறார்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

உங்களின் வேதனை புரிகிறது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி தான்

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Mஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Uஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Tஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Hஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Uஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Mஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Oஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Hஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Aஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Mஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Eஇளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by ராஜா Sun Jul 07, 2013 12:49 pm

அகல் wrote:ஒரு குறைந்த பட்ச பாராட்டிக்கூட பதிவு செய்து நாம் ஊக்குவிக்க மறந்துவிட்டு, சதி வெறியால் ஏற்பட்ட இந்த இழப்பை அவர்கள் மேல் திணிக்க அடுக்கடுகாய் காரணங்களைத் தேடுகிறோம்... சாதிவெறியைக் கண்டிக்கக் கூட தவறுகிறோம்...
இது தவறான கருத்து என்று கருதினால் மன்னிக்கவும். அது உங்களது பார்வையாக இருக்கலாம்.. நீங்கள் உங்களது கருத்துக்களைப் பதிவு செய்தீர்கள், அதன் அடிப்படையில் நானும் எனது கருத்துக்களை பொதுப்படையாகவே பதிவு செய்தேன்.. இது பொது இடத்தில் பதியக்கூடாத கருத்து என்றால், அந்த இளவரசனின் தனித் திறமை என்ன, அவனால் என்ன செய்ய முடியும் முடியாது என்று தெரியாது, வயதை மட்டுமே காரணம் காட்டி அவனது மனைவிக்கு நப்கீன் வாங்கித்தர எங்கே போவான் ? என்ற தங்களது ஒரு தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் ஏற்புடையாதா என்பதை சற்று யோசிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன்.. இதைவிட ஒரு ஆண்மகனை இழிவாக விமர்ச்சிக்க முடியுமா என்பதை சற்று சிந்திக்கவும்.. இதே போன்ற விமர்சனங்கள் நம் மீது வீசப்பட்டால் நமது மனநிலை எப்படி இருக்கும்... இன்னும் பதினெட்டு வயதே நிரம்பாத பல பேர் தங்கள் குடும்பத்தை வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நன்றி...[/quote]

உங்கள் பார்வை என்பது எது?நீங்கள் சொல்வது மட்டும் தான் சரி என்பது தானா?
குறைந்த பட்ச பாராட்டு என்றால் என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன், 20000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள ஒரு தளத்தில் குறைந்த பட்ச பாராட்டு கூட பதிவு செய்யாதவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் என்பது போல உள்ளது உங்களின் வரிகள் அதற்காக தான் நான் பதிலளித்தேன்.

நான் சாதிவெறியை இங்கு ஆதரிக்கவே இல்லை , நான் விமர்சித்தது கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் அவசரபட்டு திருமணம் செய்தால் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றை தான் , இது இழிவான விமர்சனமா இல்லையா என்று திருமணம் ஆன அனைவருக்கும் தெரியும். உணவு உடை முதற்கொண்டு அனைத்தையும் அவனுக்கும் அவன் மனைவிக்கும் ஒருவன் சம்பாதிக்க வேண்டும் , திருமணமாகாத படிக்கும் மாணவன் என்றால் அது வேறு நிலை பெற்றோர் இருப்பார்கள், இந்த இளவரசன் நிலையிலேயே கூட அவரின் பெற்றோர் தனது மருமகளுக்கு உணவு உடை விஷயத்தில் பெருந்தன்மையோடு இருக்கலாம் , ஆனால் நான் சொல்லியுள்ள விஷயத்தை அவர் எப்படி தனது மாமியாரிடம் கேட்பார் என்பதை சிந்த்தித்து பாருங்கள் , அல்லது கணவனான இளவரசனிடம் கேட்டால் என்ன பதில் கிடைதிருக்கும்.

இளவரசனின் அம்மாவின் பத்திரிகை பேட்டியின் ஒரு வரி  இது "சீட்டு கட்டுவதற்காக ATM சென்று பணம் எடுத்துவரும்படி சொன்னேன் , 9000 எடுத்து வந்தான் என்னிடம் 7000 கொடுத்துவிட்டு தான் 2000 வைத்துக்கொண்டு , நண்பனை பார்த்து விட்டு வருகிறேன் என்று சென்றான்"

எல்லா விஷயத்திலுமே பாசிட்டிவ் திங்கிங் ஏற்புடையாதாக இருக்காது , ரிஸ்க் மானேஜ்மென்ட் துறையில் வேலை பார்ப்பவர்கள் அனைத்தையும் நெகட்டிவாக சிந்தித்து வேலை பார்த்தால் தான் அவரின் நிறுவனத்தில் உள்ள மற்றவர்கள் பாஸிட்டிவா வேலை பார்க்க முடியும் என்பது தெரியாதவர் அல்ல நீங்கள்.
18 வயதே நிரம்பாத எத்தனையோ பேர் நன்றாக வாழவைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தான் ஆனால் அதற்காக எல்லா 18 வயது மானவர்களும் இதே நிலையை எடுத்தால் அனைவராலும் வெற்றிபெற முடியுமா ?! செய்திதாள்களின் வார இதழ்களில் "இது உங்கள் இடம் " இடங்களில் சிலரின் கண்ணீர் கதைகளை படிக்கும் பொது வேதனையாக இருக்கும்.

நாங்கள் சொல்வது எல்லாம் வாழ்வில் வெற்றிபெறுவதற்கு என்ன வழியோ அதை பின்பற்றி சிறப்பாக வாழுங்கள் என்பது தான்,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Sun Jul 07, 2013 2:03 pm

ராஜா wrote:
அகல் wrote:ஒரு குறைந்த பட்ச பாராட்டிக்கூட பதிவு செய்து நாம் ஊக்குவிக்க மறந்துவிட்டு, சதி வெறியால் ஏற்பட்ட இந்த இழப்பை அவர்கள் மேல் திணிக்க அடுக்கடுகாய் காரணங்களைத் தேடுகிறோம்... சாதிவெறியைக் கண்டிக்கக் கூட தவறுகிறோம்...
இது தவறான கருத்து என்று கருதினால் மன்னிக்கவும். அது உங்களது பார்வையாக இருக்கலாம்.. நீங்கள் உங்களது கருத்துக்களைப் பதிவு செய்தீர்கள், அதன் அடிப்படையில் நானும் எனது கருத்துக்களை பொதுப்படையாகவே பதிவு செய்தேன்.. இது பொது இடத்தில் பதியக்கூடாத கருத்து என்றால், அந்த இளவரசனின் தனித் திறமை என்ன, அவனால் என்ன செய்ய முடியும் முடியாது என்று தெரியாது, வயதை மட்டுமே காரணம் காட்டி அவனது மனைவிக்கு நப்கீன் வாங்கித்தர எங்கே போவான் ? என்ற தங்களது ஒரு தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் ஏற்புடையாதா என்பதை சற்று யோசிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன்.. இதைவிட ஒரு ஆண்மகனை இழிவாக விமர்ச்சிக்க முடியுமா என்பதை சற்று சிந்திக்கவும்.. இதே போன்ற விமர்சனங்கள் நம் மீது வீசப்பட்டால் நமது மனநிலை எப்படி இருக்கும்... இன்னும் பதினெட்டு வயதே நிரம்பாத பல பேர் தங்கள் குடும்பத்தை வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்... நன்றி...

உங்கள் பார்வை என்பது எது?நீங்கள் சொல்வது மட்டும் தான் சரி என்பது தானா?
குறைந்த பட்ச பாராட்டு என்றால் என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன், 20000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள ஒரு தளத்தில் குறைந்த பட்ச பாராட்டு கூட பதிவு செய்யாதவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் என்பது போல உள்ளது உங்களின் வரிகள் அதற்காக தான் நான் பதிலளித்தேன்.

நான் சாதிவெறியை இங்கு ஆதரிக்கவே இல்லை , நான் விமர்சித்தது கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் அவசரபட்டு திருமணம் செய்தால் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றை தான் , இது இழிவான விமர்சனமா இல்லையா என்று திருமணம் ஆன அனைவருக்கும் தெரியும். உணவு உடை முதற்கொண்டு அனைத்தையும் அவனுக்கும் அவன் மனைவிக்கும் ஒருவன் சம்பாதிக்க வேண்டும் , திருமணமாகாத படிக்கும் மாணவன் என்றால் அது வேறு நிலை பெற்றோர் இருப்பார்கள், இந்த இளவரசன் நிலையிலேயே கூட அவரின் பெற்றோர் தனது மருமகளுக்கு உணவு உடை விஷயத்தில் பெருந்தன்மையோடு இருக்கலாம் , ஆனால் நான் சொல்லியுள்ள விஷயத்தை அவர் எப்படி தனது மாமியாரிடம் கேட்பார் என்பதை சிந்த்தித்து பாருங்கள் , அல்லது கணவனான இளவரசனிடம் கேட்டால் என்ன பதில் கிடைதிருக்கும்.

இளவரசனின் அம்மாவின் பத்திரிகை பேட்டியின் ஒரு வரி  இது "சீட்டு கட்டுவதற்காக ATM சென்று பணம் எடுத்துவரும்படி சொன்னேன் , 9000 எடுத்து வந்தான் என்னிடம் 7000 கொடுத்துவிட்டு தான் 2000 வைத்துக்கொண்டு , நண்பனை பார்த்து விட்டு வருகிறேன் என்று சென்றான்"

எல்லா விஷயத்திலுமே பாசிட்டிவ் திங்கிங் ஏற்புடையாதாக இருக்காது , ரிஸ்க் மானேஜ்மென்ட் துறையில் வேலை பார்ப்பவர்கள் அனைத்தையும் நெகட்டிவாக சிந்தித்து வேலை பார்த்தால் தான் அவரின் நிறுவனத்தில் உள்ள மற்றவர்கள் பாஸிட்டிவா வேலை பார்க்க முடியும் என்பது தெரியாதவர் அல்ல நீங்கள்.
18 வயதே நிரம்பாத எத்தனையோ பேர் நன்றாக வாழவைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தான் ஆனால் அதற்காக எல்லா 18 வயது மானவர்களும் இதே நிலையை எடுத்தால் அனைவராலும் வெற்றிபெற முடியுமா ?! செய்திதாள்களின் வார இதழ்களில் "இது உங்கள் இடம் " இடங்களில் சிலரின் கண்ணீர் கதைகளை படிக்கும் பொது வேதனையாக இருக்கும்.

நாங்கள் சொல்வது எல்லாம் வாழ்வில் வெற்றிபெறுவதற்கு என்ன வழியோ அதை பின்பற்றி சிறப்பாக வாழுங்கள் என்பது தான்,[/quote]  நான் சொல்வதுதான் சரி அதை நண்பர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்று நான் கூறவில்லை... எனது கருத்தை நீங்கள் அப்படி எடுத்துக் கொள்வீர்களே ஆனால் நானும் உங்களது கருத்தை அவ்வாறே எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும்... நீங்கள் உங்களது பார்வையைப் பதிவு செய்தீர்கள் நான் எனது பார்வையைப் பதிவி செய்தேன், அதன் அடிப்படையில் விவாதம் நடந்தது  அவ்வளவுதான்... இங்கே ஒரு நண்பர் ஜாதி வெறி என்பதெல்லாம் சும்மா காதலுக்குச் சொல்லப்படும் சாக்கு என்ற பார்வையில் கருத்தைப் பதிவு செய்தார்... கிராமத்திற்கு வந்து பாருங்கள் சாதி வெறி எவ்வாறு தலை தூக்கி தாண்டவம் ஆடுகிறது என்று... எனது கிராமத்தில் என் கண்முன்னே நடந்த சில சம்பவங்களை இதற்கு முன்னரே எழுதி இருக்கிறேன்... முடிந்தால் நீங்கள் இங்கே படிக்கலாம்..    

http://kakkaisirakinile.blogspot.in/2012/12/blog-post_24.html

நான் சொல்ல வந்ததெல்லாம் ஒன்றுதான், அவனது வயதாய் காரணம் காட்டி அவனை இயலாதவன், இந்த வயதில் எதுவும் சாதிக்கமுடியாது என்ற கோணத்தில் இடப்பட்ட கருத்துகள் ஏற்புடையதல்ல.. அதன் அடப்படையில் அவன் மீது வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனம் ஏற்புடையதில்லை என்பது தான்.. அதே வேளையில் ஆரம்ப கட்டத்தில் அவர்களின் வாழ்வில் பல சாவல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதில் எனக்கு எந்த ,மாற்றுக் கருத்தும் இல்லை... ஆனால் அதைச் சமாளிக்கும் வழிகளையும் அவன் அரசு வேலை வழியாகத் தேடிக்கொண்டான். வயது, காதலித்தார்கள் என்பது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்ற பார்வையைத் தாண்டி பலவேறு காரணங்கள் இருக்கிறது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு... இதில் மிக முக்கியமானது சாதிய அரசியல் ஈடுபாடு என்பதை அனைவரும் அறிவார்கள்... நீங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறேன்...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by யினியவன் Sun Jul 07, 2013 2:17 pm

சாதியை ஒழித்துவிட்டால் சரித்திரத்தில்
அரசியலே ஒழிந்துவிடும் நம் நாட்டில்

அப்புறம் அவனுக என்ன பண்ணுறது?

(சாதி புரையோடிப்போன ஒன்று - மாறி வருகிறார்கள் மக்கள் ஆனால் அரசியல் மாற விட மாட்டேங்கிறது)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 2:21 pm

நான் சொல்ல வந்ததெல்லாம் ஒன்றுதான், அவனது வயதாய் காரணம் காட்டி அவனை இயலாதவன், இந்த வயதில் எதுவும் சாதிக்கமுடியாது என்ற கோணத்தில் இடப்பட்ட கருத்துகள் ஏற்புடையதல்ல..

தவறான எண்ணம் நண்பரே. வயதுக்கு வராத அதாவது தனது வாழ்கையை சுயமாக தீர்க்கமாக முடிவெடுக்க தெறியாத ஒருவர் காதலித்து விட்டார் அதனால் இறந்து விட்டார் என்ற காரத்திற்காக ஆதாரவு கொடுக்க முடியாது. வயதை வைத்து பார்த்தால் அவர் ஒரு சிறுவன் தான் சிறுவன் செந்த தவறை இனியும் செய்யாமல் திறுத்த வேண்டுமோ தவிர அப்படியே விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by அகல் Sun Jul 07, 2013 2:35 pm

ராஜு சரவணன் wrote:

நான் சொல்ல வந்ததெல்லாம் ஒன்றுதான், அவனது வயதாய் காரணம் காட்டி அவனை இயலாதவன், இந்த வயதில் எதுவும் சாதிக்கமுடியாது என்ற கோணத்தில் இடப்பட்ட கருத்துகள் ஏற்புடையதல்ல..

தவறான எண்ணம் நண்பரே. வயதுக்கு வராத அதாவது தனது வாழ்கையை சுயமாக தீர்க்கமாக முடிவெடுக்க தெறியாத ஒருவரை காதலித்து விட்டார் அதனால் இறந்து விட்டார் என்ற காரத்திற்காக ஆதாரவு கொனுக்க முடியாது. வயதை வைத்து பார்த்தால் அவர் ஒரு சிறுவன் தான் சிறுவன் செந்த தவறை இனியும் செய்யாமல் திறுத்த வேண்டுமோ தவிர அப்படியே விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது.
நண்பரே... நான் மீண்டும் மீண்டும் சொன்னாலும் ஒரு கருத்தையே வலியுறுத்த வேண்டியதாகவே இருக்கும்.. அவன் சிறுவன் சிறுவன் என்று சொல்லும் நாம் ஏன் அதே சிறுவயதில் அவன் அரசுப்பணியில் வேலை பெரும் அளவிற்கு முன்னேறியதை ஏற்க மறுக்கிறோம்... அவன் இயலாதவன் என்றால் முடியுமா என்பதைப் பாருங்கள்... வயதைத் தாண்டி, படிப்பைத் தாண்டி சாதித்த ஆயிரம் ஆயிரம் உதாரணங்கள் நம்முன் இருக்கிறது தோழரே.. அவனால் இது முடியும் முடியாது என்று அவனது திறைமையை அறியாது நாம் வரையறுக்க இயலாது... அவனைத் திருத்த அவன் எதுவும் குற்றமும் செய்யவில்லை (உண்மையில் குற்றம் செய்தவர்கள் யார்  என்பது யாவருக்கும் தெரியும்.. அது உங்களுக்கும் தெரியும்... அதை நாம் முற்றிலும் விட்டுவிட்டோம்)...

இதே நமது திருச்சியில் கண்பார்வை முற்றிலும் இழந்த இளைஞன், இருசக்கர மெக்கானிக் வேலை செய்து அனைவரையும் அசத்திக் கொண்டிருக்கிறான்.. அவன் பார்வை இல்லாதவன் என்ற பார்வையில் நாம் பார்த்தால், இது எப்படி சாத்தியம் அவனால் செய்ய முடியாது என்றே சொல்லத் தோன்றும். ஆனால் அவன் சாதிக்கிறான்... அதனால் ஒருவரின் திறமையை வயது அவர்களது உடல் அமைப்பு வைத்து நாம் எடைபோட முடியாது என்பது எனது தாழ்மையாக கருத்து தோழரே...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !? - Page 3 Empty Re: இளவரசனின் இறப்பு தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை !?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum