ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள்

3 posters

Go down

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் Empty ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள்

Post by soplangi Fri 5 Jul 2013 - 15:22

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது. தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.

தானியங்கள் மற்றும் நட்ஸ் :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001328-1-grains

தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.

ப்ளூபெர்ரி :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001398-3-blueberry
ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.

செர்ரி :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001419-4-cherries

செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

தக்காளி :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001448-6-tomato

தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

ப்ராக்கோலி :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001542-8-broccoli

ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.

தயிர் :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001572-10-curd

தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சாக்லெட் :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001592-11-chocolate

அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

காபி :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001609-12-coffee

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கடல் சிப்பி :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001342-2-oysters

நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.

மீன்கள் :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001433-5-salmon

மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

முட்டைகள் :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001520-7-eggs

முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.

மாட்டுக்கறி :

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் 05-1373001560-9-red-meat

கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.

உடற்பயிற்சி :

மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.

-- ஒன் இந்தியா
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் Empty Re: ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள்

Post by soplangi Fri 5 Jul 2013 - 15:23

தமிழ் நாட்டில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளதாக தகவல்.. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் Empty Re: ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள்

Post by ஜாஹீதாபானு Fri 5 Jul 2013 - 17:31

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் Empty Re: ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள்

Post by யினியவன் Fri 5 Jul 2013 - 19:42

இத ஞாபகம் வெச்சுக்க முடியுதா பார்ப்போம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள் Empty Re: ஞாபக மறதியைத் (அல்சைமர் நோய்) தடுக்கும் சிறந்த 12 உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum