ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம்

Go down

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Empty காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம்

Post by soplangi Fri Jul 05, 2013 12:00 pm

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிக அளவு நிகழ்த்தப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் கழகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த 9 ஆண்டுகளாக போலி என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் இந்த மாநிலங்களில் அதிகமாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற போலி என்கவுன்ட்டரில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2004ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை டெல்லியில் மனித உரிமை துளியும் இல்லாமல் போனதாக மனித உரிமைகள் கழகம் கூறியுள்ளது. மனித உரிமை கழகத்தின் இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குஜராத் போலி என்கவுன்ட்டர் சம்பவத்தை சர்ச்சையாக்கும் காங்கிரஸ், டெல்லி போலி என்கவுன்ட்டர் பற்றி கேள்வி எழுப்பாதது ஏன் என்றும் தேசிய மனித உரிமை கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம் Empty Re: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அதிகம்

Post by soplangi Fri Jul 05, 2013 12:04 pm

புதுடில்லி : காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த 9 ஆண்டுகளாக போலி என்கவுன்டர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மனித உரிமைகள் கழகம் ஒரு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்புக்களும் இந்த மாநிலங்களிலேயே அதிகம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி என்கவுன்டர்கள் :

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய குஜராத் என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக ஜூலை 03ம் தேதியன்று சிபிஐ தரப்பில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. 2004ம் ஆண்டு இஷாத் ஜாகன் உள்ளிட்ட 3 பேர் என்கவுன்டரில் பலியாகினர். இது போலி என்கவுன்டர் என சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் கட்சிகள் பல இதை வைத்து பல்வேறு தரப்பில் அரசியல் ஆக்கி வந்தனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்வாக சீர்கேடே இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதே போன்று டில்லியில் 2006ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுன்டரில் 3 பேர் பலியாகி உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் நடைபெற்ற இந்த போலி என்கவுன்டர் சம்பவம் இதுவரை செய்தியாக்கப்பட்டோ அல்லது அரசியல் ஆக்கப்பட்டோ வெளிவரவில்லை. வடக்கு டில்லியின் திமர்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த போலி என்கவுன்டரில் 2 இஸ்லாமியர்களும், ஒரு இந்து காவல் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஷீலா தீட்சித் அரசு மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை.

மனித உரிமைகள் கழக அறிக்கை :

2007ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் கழகம் தமது இணையதளத்தில் 2004-2005 ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுன்டர்கள் தொடர்பாக புள்ளிவிபர கணக்கை வெளியிட்டது. இஷ்ராத் ஜாகன் என்கவுன்டர் சம்பவத்தையும் மனித உரிமைகள் கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2004-2005ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது ஏற்படும் உயிரிழப்புக்கள் பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், அசாம், ராஜஸ்தான், தமிழகம் மற்றம் மேற்குவங்கத்தில் வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் போலீஸ் விசாரணையில் ஏற்படும் உயிரிழப்புக்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, டில்லி, ஜார்கண்ட் மற்றும் உத்ராஞ்சல் ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளது. 2004-2005 முதல் 2013ம் ஆண்டு வரை டில்லியில் மனித உரிமை என்பது துளி கூட இல்லாமல் போனதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குஜராத் சம்பவத்தை இடைவிடாது தொடர்ந்து சர்ச்சையாக்குபவர்கள் தேசிய தலைநகரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏன் கேள்வி கேட்பதில்லை என தேசிய மனித உரிமைகள் கழகம் கேள்வி எழுப்பி உள்ளது. 2004-2005 அறிக்கையில், நாடு முழுவதும் 122 என்கவுன்டர்கள் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 66 உத்திர பிரதேசத்திலும், 18 ஆந்திராவிலும், 9 டில்லியிலும், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 5 என்கவுன்டர்களும் நடைபெற்றுள்ளன. இதில் 84 போலி என்கவுன்டர் என மனித உரிமைகள் கழகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. 2004-2005ம் ஆண்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவுபெற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகியவற்றில் அதிகளவிலான என்கவுன்டர்கள் நடந்துள்ளது. குஜராத்தில் ஒரே ஒரு என்கவுன்டர் மட்டுமே நிகழ்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் 6 ம், சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்திர பிரதேசத்தில் 54ம், காங்கிரஸ் ஆளும் அரியானாவில் 4ம் நடந்துள்ளது. குஜராத்தில் 5 என்கவுன்டர்கள் நிலுவையில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் 21ம், மகாராஷ்டிராவில் 29ம், சமாஜ்வாதி ஆட்சி செய்யும் உத்திர பிரதேசத்தில் 175ம், தலைநகர் டில்லியில் 18ம், உத்ராஞ்சலில் 14ம் நிலுவையில் உள்ளன.

அரசு தரப்பு புள்ளிவிபரம்:

தேசிய மனித உரிமைகள் கழகம் என்கவுன்டர்கள் குறித்து இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் லோக்சபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் புள்ளிவிபர கணக்கை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : போலீஸ், பாதுகாப்பு படை ஆகியவற்றால் 2009-10 முதல் 2012-13 வரை நாடு முழுவதும் 555 போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது; இந்த 555 வழக்குகளில் 144 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளது; 411 நிலுவையில் உள்ளது; 2009-10ம் ஆண்டில் மணிப்பூர் மற்றும் உத்திர பிரதேசத்தில் அதிகளவிலான போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளன; குஜராத்தில் போலி என்கவுன்டர் ஏதும் நடைபெறவில்லை; 2010-11ல் உத்திர பிரதேசத்தில் அதிகபட்சமாக 40 போலி என்கவுன்டர்களும், அசாம், ஆந்திரா, அரியானா ஆகி மாநிலங்களில் 30 போலி என்கவுன்டர்கள் நடந்துள்ளன. 2011-12ம் ஆண்டிலும் உத்திர பிரதேச மாநிலமே அதிக என்கவுன்டர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மனித உரிமை கழக அறிக்கையின்படி 2002-2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற 440 போலி என்கவுன்டர்களில் குஜராத்தில் குறைந்த பட்சமாக 5ம், அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 231 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளன. அத‌னைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 33ம், மகாராஷ்டிராவில் 31ம், டில்லி 26ம், ஆந்திராவில் 22ம், உத்ராஞ்சலில் 19ம், அசாமில் 12ம், மத்திய பிரதேசம் மற்றம் கர்நாடகாவில் தலா 10ம், தமிழகத்தில் 9ம், மேற்கு வங்கத்தில் 8ம், பீகார் மற்றும் அரியானாவில் தலா 6ம் நடை‌பெற்றுள்ளன. ஆர்.பி.என்.சிங்., குறிப்பிட்ட அறிக்கை விபரத்தில் 2013ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 10 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 10 போலி என்கவுன்டர்கள் குறித்து இதுவரை எந்தஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. இதற்கு பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, டில்லி முதல்வரோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் நடைபெற்ற என்கவுன்டர் அரசியலாக்கப்பட்டு, பெரும் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில் 2009-2013ம் ஆண்டு வரை நடைபெற்ற 555 போலி என்கவுன்டர்கள் குறித்தும், 2009-2013 மார்ச் வரை நடைபெற்ற 440 போலி என்கவுன்டர்கள் குறித்தும் எவ்வித நடவடிக்கையோ விசாரணையோ செய்யப்பட்டாமலும், யாரும் வாய்திறக்காமலும் இருப்பது மோடி மீதான அரசியல் காழ்புணர்ச்சியையோ காட்டுகிறது.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum