புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_c10அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_m10அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_c10 
6 Posts - 60%
heezulia
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_c10அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_m10அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_c10அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_m10அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ? Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 02, 2013 10:48 am

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர்வாளர்களாலும் பல்வேறு தளங்களில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கடும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி வருகிறது.ஆனால் பெருவாரியான மக்கள், ஏழைகளுக்கும் ஆங்கில வழிக்கல்வி கிடைக்கப் போகிறதே என்ற ஆதரவான மனநிலையில் தான் இருக்கின்றனர். இந்த “இங்கிலிஷ் மீடிய” போதை என்பது அணுஉலை வந்து விட்டால் மின்சாரம் கிடைத்து விடும் என்ற போதைக்கு நிகரானது. ஆங்கில வழிக்கல்வியில் பயின்று விட்டால் ஆங்கில அறிவு வளர்ந்து விடும். எனவே உயர்கல்வி, பன்னாட்டு நிறுவன வேலை என பிய்த்து உதறிவிடலாம் என்ற பொதுக்கருத்தே ஆங்கில வழிக்கல்வியை ஆதரிக்கச் செய்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீதான உண்மையான அக்கறையோடு தான் வெளியிடப்பட்டதா? இந்த அறிவிப்பு அடிப்படையில் யாருக்கு சேவகம் செய்யப் போகிறது ? என்ற பல கேள்விகளுக்கான விடையை யதார்த்த நிலையிலிருந்து அணுக வேண்டியிருக்கிறது.

ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வரமா? சாபமா ?

கடந்த ஆண்டு சென்னையில் சில குடிசைகள் நள்ளிரவோடு எரிந்து சாம்பலாயின. சென்னை கிரீம்ஸ் ரோடு, மக்கீஸ் கார்டன் போன்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அவை. இச்சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்கு முன், அவர்களின் குடிசைகளை விட்டு வெளியேறி சென்னையின் ஒதுக்குப்புறமான கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு குடியேறுமாறு ஆணையிட்ட சென்னை மாநகராட்சியை புறக்கணித்த அம்மக்களுக்கு கிடைத்த பரிசு அது. போராட்டத்தில் குதித்த அம்மக்கள் அக்குடிசைகளை விட்டு வெளியேற மாட்டோம் என்று உறுதியாக நின்றதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

ஒன்று அரசு மருத்துவமனை வெகு அருகாமையில் இருப்பது. மற்றொன்று கல்வி. அம்மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானாலும் பரவாயில்லை என்று தம் குழந்தைகளை நகரத்திற்குள் அமைந்திருக்கும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்திருந்தினர். அதில் ஒரு சிறுமி சர்ச் பார்க் கான்வென்ட் சீருடையோடு வந்து ஒலிபெருக்கியில் பேசினாள். “நாங்க இங்க தான் இருப்போம். எங்கயும் போக மாட்டோம்!”

நான் மேலே கூறிய நிகழ்வை, ஏழைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்க முடிகிறதே என்று தட்டையாக புரிந்து கொள்ளக் கூடாது. தரமான கல்வி தனியாரில் தான் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கிடைக்காது என்ற தொடர் ஊடக பிரச்சாரத்தின் மூலம் நமது சமூகத்தில் உள்ள பொது கருத்து மற்றும் ஆங்கிலம் மீதான மக்களின் மோகம், அவ்வெளிய பெற்றோரை தனியாரை நோக்கி ஓட வைத்திருக்கிறது. இப்ப‌டி எல்லா ஏழை ம‌க்க‌ளாலும் த‌னியாரை நோக்கி ஓட‌ முடியுமா என்ன‌ ?

இன்றைய அரசு பள்ளிகளின் நிலைமை என்ன? அடிப்ப‌டை வச‌திக‌ளான‌ க‌ழிவ‌றையிலிருந்து, வ‌குப்ப‌றை முத‌ல் ஆசிரிய‌ர்க‌ள் வ‌ரை பெய‌ர் சொன்னாலே போதும் த‌ர‌ம் எளிதில் விள‌ங்கும் நிலைமை தான். மேலும் இருக்கும் ஒரு மொழிப்பாடமான ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கவே சரியான ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இல்லை, இருக்கும் ஒரு சிலரும் மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிப்ப‌தில்லை.( தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலேயே ஆங்கில மொழிப் பாடம் சரியாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை) எனவே ஆங்கில பாடத்திற்கு மட்டும் தனியாக சிறப்பு பயிற்சி வகுப்பு(Tution) வைத்துக் கொள்ளும் சூழல் ஏற்கெனவே இருக்கிறது. ஆக அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல்,ஆங்கில வழிக்கல்வியை திணிப்பதில் ஒரு வியாபார நோக்கமிருப்பதை யூகிக்க முடிக்கிறது. அது என்ன வியாபார நோக்கம் என்பதை பிறகு பார்ப்போம்.

அரசு பள்ளிகளில் யார் அதிகம் படிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்ட, ஏழை, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் தான். இவர்களில் பெரும்பான்மை முதல் தலைமுறை கல்வி பெறுபவர்களாகவே இருக்கின்றனர். ஒரு குழந்தை கல்வியுலகில் காலடி எடுத்து வைத்து, தன் தாய்மொழியை கற்குமுன்னரே, அன்னிய மொழியான ஆங்கில வழிக்கல்வியை கற்க வேண்டிய அவலத்தை என்னவென்று சொல்ல? உலகின் எந்த பகுதியிலும் நிகழாத கொடுமை இது. அரசு பள்ளிகளில் இருக்கும் பல ஆசிரியர்களால் ஆங்கிலத்தை மாணவர்களுக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்க தெரியவில்லை, தெரிந்த சில ஆசிரியர்களாலும் கால அட்டவணையின் நிர்ப்பந்தத்தால் ஒருமுறை மட்டுமே ஒரு பாடத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம், அன்னிய மொழியில் ஒரு முறை மட்டுமே சொல்லிக் கொடுப்பதால் அது அரைகுறையாகத் தான் புரியும். வீட்டிற்கு வந்தால் பெற்றோர்களால் சொல்லி கொடுக்க முடியாத சூழல், சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு (Tution)செல்ல முடியாத பொருளாதார நிலைமைகளால், பாதியிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பிள்ளைகள் ஆளாக நேரிடுகிறது. அல்லது இந்த‌ மதிப்பெண் கலாச்சார சமூக அமைப்பில் அவர்கள் திறமை குறைந்தவர்களாக, வாய்ப்புகளை இழப்பவர்களாக முன்னிறுத்தப்படுவார்கள். ஆக குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை நோக்கி வரும் இவ்வெளிய மக்களை இருகரம் நோக்கி வரவேற்கும் திட்டமாக இது நிச்சயம் இருக்க முடியாது. படித்தால் தனியார் பள்ளியில் போய் படி, இங்கே வந்தால் இப்படி தான் இருக்கும் என்று படிக்க வரும் ஏழை மாணவர்களை அரசு பள்ளிகளின் வாயிலோடு அடித்து விரட்டும் ஒரு சூழ்ச்சியாகத் தான் இதைக் கருத முடிகிறது.

மொழிப்பாடங்களை பயிற்றுவிப்பதில்,பயில்வதில் ஆசிரியர்களும் மாணவர்களும் எத்தகைய அணுகுமுறையை கையாள்கின்றனர் ?

மேனிலைப் பள்ளி மாணவர்கள், மொழிப் பாடங்களான தமிழையும், ஆங்கிலத்தையும் தேர்வுகளுக்கு மட்டுமே படிக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.பிரதானமாக கணக்கு,வேதியியல்,இயற்பியல் போன்ற மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களை மட்டுமே வருடம் முழுதும் அதிக கவனம் செலுத்தி படிக்கின்றனர்.
ஆசிரியர்களும் பிரதான பாடங்களை மட்டுமே சிரத்தையோடு பயிற்றுவிக்கின்றனர். மற்றபடி மொழிப்பாட வகுப்புகள் சற்றே இளைப்பாற வசதியான வகுப்புகளாகத் தான் மாறிப்போயிருக்கின்றன. எனவே அரசோ தனியாரோ எப்பள்ளியானாலும் சரி, குறிப்பிட்ட ஒரு மொழியறிவை மேம்படுத்த‌ வாய்ப்பில்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. எனவே ஆங்கில வழிக்கல்வியில் கற்றாலும் கூட ஒரு சில ஆங்கில கலைச் சொற்களை கற்றுக் கொள்ள முடியுமே தவிர, ஆங்கில இலக்கண அறிவோ, ஆங்கில இலக்கிய புலமையோ பெற்று விட‌ முடியாது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியால் யாருக்கு லாபம்?

சமகால சமூக அமைப்பு என்பது மதிப்பெண்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நல்ல கல்வியைத் தேடி பெற்றோர்கள் சென்ற காலம் அருகி, எந்த‌ பள்ளியில் படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்? அதன் மூலம் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? அந்த கல்லூரி மூலம் பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்குமா என்ற நிலைக்கு சமூக அமைப்பு இறங்கி வந்தாகி விட்டது. குழந்தைகள் பந்தயக் குதிரைகளாக்கப் படுகிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் முதலீடுகளுக்கு இலாபமாக,குழந்தைகளின் மதிப்பெண்களைக் கேட்கின்றனர்.எந்த குழந்தை அதிக மதிப்பெண் பெறுகிறதோ, அதுவே அதிகம் விலைபோகும் சந்தைப் பொருளாக்கப் படுகிறது. ஆக போட்டி நிறைந்த இந்த சந்தையுலகில் தான் அரசுகளின் வியாபார யுக்திகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சமச்சீர் கல்வியை முடக்குவதில் தீவிர ஆர்வம் காட்டிய ஜெயலலிதா அரசின் கல்விக் கொள்கையானது தனியார் முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால், மெட்ரிகுலேஷன் பேனர் வைத்து அரசு நியமிக்கும் கட்டணத்தை விட அதிகமாக டொனேஷன் என்ற பெயரில் கொள்ளையடிக்க முடியாதே என்ற கவலையில், தனியார் முதலாளிகள் திரண்டு வந்து இத்திட்டத்தை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு தோல்வியடைந்தாலும், தற்பொழுது வந்துள்ள அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

அரசுகளின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கு துணை நிற்கின்றது. இன்றைக்கு ம‌த்தியில் ஆளும் ம‌ன்மோக‌ன் அர‌சு க‌ல்வி, ம‌ருத்துவ‌ம் உள்ளிட்ட‌ எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளையும் த‌னியாரிட‌ம் கைய‌ளித்து வ‌ருகின்ற‌து. அத‌ன் ஒரு ந‌ட‌வ‌டிக்கைகாக‌ தான் த‌னியார் ப‌ள்ளிகூட‌ங்க‌ளில் ப‌டிக்கும் ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ க‌ல்வி க‌ட்ட‌ண‌த்தை அர‌சே செலுத்தும் திட்ட‌ம். இந்த‌ திட்ட‌த்தில் அதிக‌ள‌வு மாண‌வ‌ர்க‌ளை சேர்க்க‌ வைப்ப‌த‌ற்காக‌வே ஜெய‌ல‌லிதா அர‌சு இந்த‌ அறிவிப்பை வெளியிட்டுள்ள‌து.

தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதற்கு அரசு உதவி பெறும் ( Government Aided ) அமைப்புகளாகும் நடைமுறை தான் வழக்கத்தில் இருந்தது.தமிழகத்தின் பெருவாரியான கிறித்துவ அமைப்புகள் இப்படியான அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றன. ஆனால் நிலைமை இப்போது தலை கீழாக மாறி வருகின்றது. அரசு பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதை தனியார் வசம் ஒப்படைக்கும் புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது.25 லட்சம் முன்பணமாக கட்டும் எந்த தனியார் முதலாளியும் அரசு பள்ளிகளை ஏற்று நடத்தலாம். தங்கள் விருப்பம் போல கட்டணமும் வசூலித்துக் கொள்ளலாம்.மாலை நேர சிறப்பு வகுப்புகள் வைத்து, தமக்கு தேவையான அடிமைக் கல்வியை போதிக்கலாம் என்ற தனியார் மயமாக்கலுக்கு முழுவீச்சில் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இந்த புதிய கொள்கை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், தரத்தை உயர்த்தாமல் எப்படி கருணாநிதி, மருத்துவ‌ காப்பீட்டு திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தாரோ, அதே பாணியில் இப்போது ஜெயலலிதா அரசு, அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க, ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்துகிறது. அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஆங்கில வழிக்கல்வி மூலம் அச்சேர்க்கை விகிதத்தை உயர்த்தி அதை தனியார் வசம் ஒப்படைப்பது, சேர்க்கை விகிதம் குறைந்தால் இருக்கும் பள்ளிகளை மூடிவிடுவது என்பதைத் தான் அரசு அமல்படுத்தப் போகின்றது. ஆகவே ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்துவதினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், குறைத்தாலும் லாபமென்னவோ தனியாருக்கு தான்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வெறும் மொழிப்பிரச்சினை மட்டுந்தானா?

தாய்மொழியில் கல்வி கற்பதால் தொழிற்நுட்பத்திலும் வளர்ச்சியிலும் சக்கைபோடு போடும் சீனா, ச‌ப்பான், செர்மனி என பல எடுத்துக்காட்டுகள் நம் முன் வைக்கப்படுகின்றன. தாய்மொழியில் கல்வி கற்பதால் என்னென்ன சிறப்புகள் என்று ஓராயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அரசால் அமைக்கப்பட்ட எல்லா ஆணையங்களும் தாய்மொழி வழியில் தான் கல்வி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் உள்ளன. இருப்பினும் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அந்த ஆங்கில‌ மோகம், ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு ஆற்றலாக (Skill) பார்க்காமல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதையே ஒரு அறிவாக, ஆங்கிலத்தில் பேசுபவர்களை மேதைகளாக பாவிக்கக் கூடிய அவல நிலையைக் காண்கிறோம்.

அது மட்டுமின்றி, நம் வாழும் சமூகத்தில் கல்வி என்பது சாதிய கட்டமைப்புக்கு நிகரான ஒரு அடுக்குமாடி வழிமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. “வேதம் ஓதும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று! என்கிற மனுதர்மம், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை அடிப்படையிலேயே மறுக்கிறது. அந்த மனு விஷத்தை குடித்து வாழும் சமகால இன்டெக்லெக்ச்சுவல் பார்ப்பன சமூகம், அதன் வன்மத்தை எல்லா ஆதிக்க சாதி சமூகத்திலும் தூவிப் பார்க்கிறது.பார்ப்பனிய, சத்திரிய,வைசியர் என்ற வர்ண அடுக்குமுறையானது, கல்வியிலும் CBSE, Metriculation, State Board, தனியார்,அரசு பள்ளிகள் என்று பேதத்தை விளைவிக்கிறது. அக்கட்டமைப்புகளின் அடித்தளத்தை உலுக்கும் ஒரு முயற்சியாக அமைந்த சமச்சீர் கல்வியை, பத்மா சேஷாத்ரி வகையறா தனியார் , பார்ப்பனீய முதலாளிகள் தான் முன்னணியில் நின்று எதிர்த்தனர். வெண்ணெய், நெய் உண்டு ஆச்சாரமாக வாழும் உயர்சாதியும், சாக்கடை அள்ளுபவனும் ஒரே கல்வியை கற்பதா என்ற அடிப்படை மனுதர்ம சிந்தனை, வியாபார நோக்கங்களைக் கூட மிஞ்சி நிற்கின்றது.பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் கை கோர்ப்பது இந்த புள்ளியிலிருந்து தான்.

கல்வி தனியார் மயமாவது முதலாளிகளின்,அரசுகளின் லாபவெறி என்றால், அதோடு தாய்மொழி புறக்கணிக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட இன, கலாச்சார ஒடுக்குமுறை தான்.ஜெயலலிதா ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியின் மீதான‌ தனது தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறார். போரில் ஒரு நாட்டின் இராணுவம், எதிரி நாட்டை தாக்கும் போது, நூலகங்களைத் தான் திட்டமிட்டு முதலில் அழிப்பார்களாம்.சமச்சீர் கல்வியை எதிர்ப்பதும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்குவேன் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதும்,செம்மொழி நூலகத்தை செல்லரிக்க விடுவதும் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாக,லாப நோக்குக்காக என மட்டுமே பார்க்காமல் தமிழ் இன,மொழி மீதான படையெடுப்பாக, ஒரு இனத்தின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையாக பார்த்தால் அந்த உண்மை புரியும். ஆகவே கல்வி மீதான எந்த ஒரு ஒடுக்குமுறையும், சமூக நீதியின் மீதான தாக்குதல் தான்.

நன்றி
– அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்




மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 02, 2013 3:39 pm

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியின் படிகள் என்ன என்ன என்று இன்று இணையத்தில் தேடும் பொழுது, இந்தியாவில் உள்ள பல தளங்கள், மருத்துவக் கட்டுரைகள் அவர்களின் உடல் மற்றும் எடை வளர்ச்சி குறித்த விவரங்களை மட்டுமே தருகிறது.

ஆனால் வெளிநாட்டுத் தளங்கள் 3 மாதம் முதலே அவர்களின் அறிவு, திறமை என்ன என்ன என்று அளவிட்டு அதை ஆரம்பம் முதல் மேம்படுத்துவது எப்படி என்றும் அறிவுரை கூறுகிறது. நம் நாடு குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறை அவ்வளவு தான்.

பெற்றோர்கள் பணம் கட்டி பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தால் போதும், தங்கள் கடமை முடிந்து விடுவதாக நினைத்து விடுகின்றனர். குழந்தைகளை விளையாடக்கூட அனுமதிப்பதில்லை. கல்வி என்பது என்ன, அதன் இலக்கு எது என்பதை பெரும்பாலான பெற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஊருடன் வாழ்வதே சரி என்ற போதையில் ஒருவர் விழ அனைவரும் அதில் சரிகின்றனர்.

மிக ஆழமான கட்டுரை பகிர்தமைக்கு மிக்க நன்றி , ஆயினும் மக்கள் இதை எந்த அளவுக்கு உணர்வர் என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

நயன்தாரா பற்றிக் கட்டுரை எழுதினால் அதை நான்கு பக்கம் விவாதிக்கவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். என்னத்த சொல்ல





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 02, 2013 6:29 pm

சதாசிவம் wrote:
நயன்தாரா பற்றிக் கட்டுரை எழுதினால் அதை நான்கு பக்கம் விவாதிக்கவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். என்னத்த சொல்ல
   

சும்மா சொல்லுங்கள் நயன்தாரா என்ன நாகேஷ் பற்றி செய்தி போட்டாலும் 40 பக்கம் வரை அலசி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கும் ஆட்கள் இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற விஷயங்களில் அவர்கள் எப்படி மூக்கை நுழைப்பார். அவகளுக்கு வேண்டிய கிக் இது போன்ற விஷயங்களில் இல்லை. ஏனெனில் கிக்கில் சென்று கொண்டிருக்கும் இந்த தமிழ் சமூகத்தில் கிக் இல்லை என்றால் எந்த விஷயமும் காதில் வாங்கிக்கொள்ளபட மாட்டாது.

- தன் பிள்ளை காது குளிர ஆங்கிலத்தில் பேசினால் தனது பிறவி பயனை அடைந்ததாக நினைக்கும் பெற்றோர்களை எப்போதும் திருத்தவே முடியாது.
- 2 லட்சம் 4 லட்சம் செலவு செய்து பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தால் தன் குழந்தை நான்கு படித்து விடுவான் என்று நினைத்து காசை வாரி வாரி இறைக்கும் பெற்றோர்களை என்னவென்று சொல்வது.
- ஆங்கில மொழி மோகம் கொண்டு தன் மொழியை மிதித்து பிற மொழிக்காக தன்னையே தியாகம் செய்யும் சுரணை கெட்ட தமிழர்களை என்னவென்று திருத்துவது.

- உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு நல்ல பெயர் உண்டு. தொழில் நுட்ப துறையில் திறமையானவர்கள், வல்லவர்கள் என்று. ஆங்கிலவழி கல்வி வெகு சீக்கிரம் இந்த பெயரை காவு வாங்கும் என்பது உறுதி.

நல்ல பகிர்வு நண்பரே புன்னகை

எனது விருப்பம் புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 02, 2013 7:05 pm

@ சதாசிவம்,ராஜு சரவணன் உங்களின் பின்னூட்டங்கக்கு நன்றி நண்பரே .....
நாம் தான் மாற்ற வேண்டும் இந்த ஆங்கில மொழி மோகதை ....



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக