ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமான சுமை! (ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!)

Go down

சுகமான சுமை! (ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!) Empty சுகமான சுமை! (ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!)

Post by krishnaamma Wed Jul 03, 2013 9:56 pm

சுகமான சுமை! (ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!) E_1372414278

புராண காலங்களில், அரக்கர்கள், தேவர்களுக்கு துன்பம் செய்தது போல, தற்காலத்தில் மதுவெனும் அரக்கன், குடும்பங்கள் பலவற்றை துவம்சம் செய்து கொண்டிருக்கிறான். குடிகாரர்களால் இளைய சமுதாயம் ரொம்பவே கெட்டுப் போகிறது. ஒரு குடிகாரத் தந்தை, தாயை காரணமின்றி அடிக்கும்போது, அதைப் பார்க்கும் பிஞ்சு நெஞ்சங்கள் வெந்து போகின்றன.

பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்தது ஏன் தெரியுமா? பெற்ற குழந்தைகளை சரிவர கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தான். "கூர்மம்' என்றால், ஆமை. ஆமையை தன் அவதார நோக்கத்திற்கு அவர் பயன்படுத்தக் காரணம் என்ன?

ஒரு கிணற்றில், தன் குட்டியுடன் வசிக்கும் ஆமையை, குட்டியிடமிருந்து பிரித்து, வேறொரு கிணற்றில் கொண்டு போய் விட்டாலும், தாய் ஆமை, குட்டியையே நினைத்துக் கொண்டு இருக்குமாம். குட்டி சாப்பிட்டதோ, இல்லையோ என்ற எண்ணத்தைத் தவிர, அதற்கு வேறு எதுவும் இருக்காது. தாய் ஆமையின் இத்தகைய இடைவிடாத நினைப்பினால், குட்டியின் வயிறு நிரம்பி விடுமாம். தான் எங்கிருந்தாலும், தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள தாய் ஆமையைப் போல, ஒரு குடும்பத் தலைவனும், எந்தச் சூழலிலும் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். நாமே குடித்து அழிந்தால், நம் குழந்தைகளும் அப்படித்தானே ஆகும் என்ற சிந்தனை எழ வேண்டும்.

அது மட்டுமல்ல... ஆமைக்கு இன்னொரு விசேஷ சக்தியும் உண்டு. அது, தன் ஓட்டுக்குள் தன் உறுப்புகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும் சக்தியுடையது. அடக்கம் என்றால் பயந்து கிடப்பதல்ல; பணிவு என்று அர்த்தம். எவ்வளவு பணம், பதவி வந்தாலும் பணிவுடன் நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மனதை அடக்கி வாழ வேண்டும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என்கிறார் வள்ளுவர். ஆமை ஓட்டுக்குள் தன் உறுப்புகளை அடக்கியிருப்பது போல, மனிதனும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் அடக்கினால், அது ஏழு பிறவிக்கும் நன்மை தரும் என்பது இதன் பொருள்.

ஆமையிடம் இத்தகைய அபூர்வ சக்திகள் <உள்ளதன் காரணமாக, பக்தர்களைக் காக்கும் பரந்தாமன், ஆமை வடிவத்தில் அவதாரம் எடுத்தார். இந்த அவதாரம் ஆனி மாதம், தேய்பிறை ஏகாதசியன்று நிகழ்ந்தது.ஒரு காலத்தில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் ஏற்பட்டது. தேவர்கள் தரப்பில் நிறைய பேர் இறந்தனர். அசுரர்கள் தரப்பில் இறப்பு இருந் தாலும், அவர்களது குருவான சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த அமிர்த சஞ்சீவினி மந்திரத்தால், இறந்தவர்களை உயிர்ப்பித்து விட்டார். எனவே, அசுரர்களின் பலம் கூடியது. தேவர்களும் அதே சக்தியைப் பெற விரும்பினர். அமிர்தம் குடித்தால், இறப்பு இல்லை என அறிந்து, அமிர்தம் பெற பாற்கடலைக் கடைய திட்டமிட்டனர்.

பெருமாளின் ஆலோசனைப்படி, அசுரர்களையும் இந்தப் பணிக்கு சேர்த்துக் கொண்டனர். வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி, மந்தரமலையை மத்தாக்கி கடலுக்குள் இறக்கி கடைய முயன்ற போது, மந்தரமலை கடலுக்கு அடியில் சிக்கி, சுற்ற மறுத்தது. உடனே, பெருமாள் ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்றார். மந்தரமலையை தன் முதுகில் தாங்கி, அது சுற்றுவதற்கு ஆதாரமாக நின்றார். அமிர்தம் வெளிப்பட்டது. தேவர்களும் சாகாநிலை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சி மூலம் இன்னொரு படிப்பினையும் நமக்கு கிடைக்கிறது. குடும்பம் என்றால் பாரம் இருக்கத்தான் செய்யும். அதை குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளோர் சுகமான சுமையாக ஏற்க வேண்டும். ஜோதிட ரீதியாக சனிதிசை, ஏழரைசனி, அஷ்டமசனி, கண்டகசனி நடப்பவர்கள் கூர்மத்தை வழிபடுவது நல்லது. ஸ்ரீரங்கம் தசாவதார கோவில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அகரம் தசாவதார கோவில், மதுரை அழகர்கோவில் ஆகியவற்றில் கூர்ம அவதார பெருமாளை தரிசிக்கலாம். அந்தப் பரந்தாமன், நமக்கு எல்லா வளத்தையும் அருளட்டும்.

நன்றி : தினமலர் - தி. செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுகமான சுமை! (ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!) Empty Re: சுகமான சுமை! (ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!)

Post by krishnaamma Wed Jul 03, 2013 10:03 pm

//ஒரு கிணற்றில், தன் குட்டியுடன் வசிக்கும் ஆமையை, குட்டியிடமிருந்து பிரித்து, வேறொரு கிணற்றில் கொண்டு போய் விட்டாலும், தாய் ஆமை, குட்டியையே நினைத்துக் கொண்டு இருக்குமாம். குட்டி சாப்பிட்டதோ, இல்லையோ என்ற எண்ணத்தைத் தவிர, அதற்கு வேறு எதுவும் இருக்காது. தாய் ஆமையின் இத்தகைய இடைவிடாத நினைப்பினால், குட்டியின் வயிறு நிரம்பி விடுமாம். தான் எங்கிருந்தாலும், தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள தாய் ஆமையைப் போல, ஒரு குடும்பத் தலைவனும், எந்தச் சூழலிலும் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். நாமே குடித்து அழிந்தால், நம் குழந்தைகளும் அப்படித்தானே ஆகும் என்ற சிந்தனை எழ வேண்டும்.//

அவ்வளவு அருமையான வார்த்தைகள் ? ஆஹா ஆஹா.....:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum