ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by manikandan.dp Wed Jul 03, 2013 10:25 am

உலகமே அதிர்ச்சியில் சமைந்திருக்கிறது. 29 வயதேயான எட்வர்ட் ஸ்நோடென்னை, அமெரிக்க அரசின் ஒற்றாடலை உலகத்துக்குத் தெரியவைத்த "நாயகன்’ என்று போற்றுவதா இல்லை தனது அரசின் நம்பிக்கையைத் தகர்த்த "துரோகி’ என்று தூற்றுவதா என்பது அவரவர் பார்வையைப் பொருத்த விஷயம். அமெரிக்க அரசின் ஒற்று நிறுவனமான சி.ஐ.ஏ.வில் மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த ஸ்நோடென், கூகுள், மைக்ரோ சாப்ட், யாகூ, ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதள நிறுவனங்களிலிருந்தும், வேறு பல வழிகளிலும் உலகளாவிய அளவில் தனிநபர்களாலும், அரசுகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் அமெரிக்க அரசு, அவர்களுக்குத் தெரியாமல் ஒற்றாடுகிறது என்கிற ரகசியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தனது மனசாட்சிக்கு விரோதமான செயலாக அது இருப்பதாலும், தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயலாக அது இருப்பதாலும், அமெரிக்க அரசின் இந்தத் தவறான செயலைத்தான் உலகறியச் செய்வதாகக் கூறியிருக்கிறார் அவர். அமெரிக்க உளவு அமைப்பின் பெயருக்குக் களங்கமும், தேசவிரோதமுமான இந்தச் செயலுக்காக, ஸ்நோடென் கைது செய்யப்பட்டு தேசத் துரோகக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள்.

இன்னொரு புறம், தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்பி இருக்கும் ஸ்நோடெனின் செயல் பாராட்டுக்குரியது என்றும், அமெரிக்காவின் ஆன்மாவாக இருக்கும் தனி மனித சுதந்திரத்தைப் பாதுகாக்கத் துணிந்த ஸ்நோடென் தண்டனைக்குரியவர் அல்ல என்றும் லட்சக்கணக்கான மக்கள் உரிமை ஆர்வலர்களும், இணையதளப் பயனாளிகளும் அமெரிக்க அதிபருக்கு மின்னஞ்சல் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். ""அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பு வெளிநாட்டவர்களைத்தான் உளவு பார்த்ததே தவிர, எந்தவொரு அமெரிக்கரின் தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தவும் இல்லை, அமெரிக்க சட்டதிட்டங்களை மீறவும் இல்லை. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பையும், தேச நலனையும் கருதிச் செய்யப்பட்டதுதான் இந்த இணையதளக் கருத்துப் பரிமாற்றங்களைக் கண்காணித்த செயல்” என்பது அதிபர் ஒபாமாவின் விளக்கம்.

அமெரிக்காவின் கிரிமினல் செய்கையை உலகுக்கு அம்பலப்படுத்துவதற்காகத்தான் இப்போது ஹாங்காங்கில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் எட்வர்ட் ஸ்நோடன். சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் ஸ்நோடென் தஞ்சம் அடைந்திருப்பதிலிருந்து, அவரது செய்கைகளுக்கு சீனாவின் ஆதரவு இருக்கக்கூடுமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

அமெரிக்க உளவு நிறுவனத்தின் இணையதள வேவு பார்க்கும் முயற்சியில், சீனா, ரஷியா போன்ற நாடுகளைவிட அதிகமாக ஒற்று நடத்தப்பட்ட நாடு இந்தியா என்பதுதான் அதிர்ச்சியான தகவல். வெரிசான், ஏ.டி அன்ட் டி போன்ற சர்வதேசத் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், யாகூ, பேஸ்புக், ட்விட்டர் போன்ற தேடுதள இணையங்களும் அமெரிக்க நிறுவனங்களாக இருப்பதால் உலகளாவிய அளவில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்துமே அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்கின்றன என்பது அதிர்ச்சியை அதிகரிக்கிறது.

இது தெரிந்துதான் சீனா, தனக்கென்று "பைடூ’ என்கிற இணையத்தைத் தொடங்கி இருக்கிறது. ஒருவேளை, அமெரிக்கா இதுபோலத் தகவல்களை ரகசியமாக ஒற்று நடத்துவது தெரிந்ததால்தான் சீன அரசு "பைடூ’வை அறிமுகப்படுத்தியதோ என்றுகூடச் சந்தேகமாக இருக்கிறது. ஸ்நோடென் சீன ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங்கில் தஞ்சமடைந்திருப்பது, இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

அமெரிக்கா தனது நாட்டின் பாதுகாப்புக்காகவும், தனது தேசிய நலனுக்காகவும் உலகளாவிய அளவில் இணையதளத் தகவல்களை ஒற்று நடத்தியது சரியா, தவறா என்று கேட்டால், அமெரிக்காவின் பார்வையில் சரி, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் பார்வையில் தவறு என்று சொல்வதைத்தவிர வேறு வழியில்லை. அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு அளிக்கப்பட்ட சில அதிகாரங்களில் இத்தகைய தொலைபேசி, இணையதளங்களை ஊடுருவிப் பார்க்கும் அதிகாரம் இருப்பதை மறுப்பதற்கில்லை.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் இன்னொரு முகத்தை நாம் பார்க்கத் தவறுகிறோம். கைப்பேசி வைத்திருக்கும் அனைவரின் நடமாட்டமும் கண்காணிப்புக்கு உட்பட்டது. அதிலும் குறிப்பாக, தனியார் செல்பேசி நிறுவனங்கள் யாருடைய உரையாடலையும் ஒட்டுக்கேட்க முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவு செய்யும் தகவல்கள் அடுத்த சில நொடிகளில் உலகளாவிய அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்ட் வைத்திருந்தால், அந்த நபரைப் பற்றிய அத்தனை தகவல்களும் எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கையூட்டின் உதவியால் பெற முடியும் என்பது வேதனையான உண்மை.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் ஒட்டுக் கேட்கவும், ஒற்றர்கள் மூலம் வேவு பார்க்கவும் தொடங்கிவிட்ட நிலையில், அமெரிக்காவின் செயல் ஆச்சரியப்படுத்தவில்லை. மாறாக, சீனாவைப்போல நாம் விழிப்புடன் இல்லையே என்று வருத்தப்படத் தோன்றுகிறது.

தனிமனித உரிமை பற்றிப் பேசும் தகுதியை நம்மிடமிருந்து விஞ்ஞானமும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பறித்துவிட்டன!

நன்றி-தினமணி


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Vigneshseetha இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by ராஜா Wed Jul 03, 2013 11:26 am

உளவு பார்ப்பதும் , ஒற்று அறிவதும் மன்னர் ஆட்சி காலங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருவது தானே. இதில் என்ன தவறு இருக்கிறது.

என்னை பொறுத்தவரை தன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக ஆகிய இவன் தேசத்துரோகி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by manikandan.dp Wed Jul 03, 2013 11:54 am

கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by ஜாஹீதாபானு Wed Jul 03, 2013 12:00 pm

:அடபாவி: 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by ராஜா Wed Jul 03, 2013 12:39 pm

manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by manikandan.dp Wed Jul 03, 2013 12:53 pm

ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by ராஜா Wed Jul 03, 2013 1:18 pm

manikandan.dp wrote:
ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)
சீனா & பாகிஸ்தான் நாடுகளுடன் எப்படி நட்புறவாக இருப்பது என்று அரசியல் தலைவர்களுக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள் பாவம் தெரியாததால் கஷ்டபட்டுக்கொண்டு உள்ளார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by krishnaamma Wed Jul 03, 2013 1:22 pm

manikandan.dp wrote:
ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)

கூடாது கூடாது கூடாது எனக்கு ராஜா சொல்வது தான் சரி என்று படுகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by manikandan.dp Wed Jul 03, 2013 4:03 pm

krishnaamma wrote:
manikandan.dp wrote:
ராஜா wrote:
manikandan.dp wrote:கண்டிப்பாக தேசத்துரோகி அமெரிக்காவுக்கு மட்டும்.....அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக மாற்றுவது குற்றமே ......  
அடுத்த நாட்டு ரகசியம் தெரிந்தால் தான் தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

தன் நாட்டையும் நாட்டுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அடுத்த நாட்டுடன் நட்புறவு கொள்ளவேண்டும் தவிர அடுத்த நாட்டு ரகசியத்தை அறிந்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிமையாக்குவது தவறு ......(குறிப்பாக இந்தியாவின் அரசியல் தலைவர்களை அமெரிக்கா இப்படித்தான் பணியவைக்கிறது ...)

கூடாது கூடாது கூடாது எனக்கு ராஜா சொல்வது தான் சரி என்று படுகிறது புன்னகை

@ ராஜா,krishnaamma
சீனா & பாகிஸ்தான் நாடுகளுடன் நட்புறவை ஒரு சில அரசியல் தலைவர்கள் தவறான நடத்தையால் (சுயநலம்) எதிரி நாடக மாறிவிட்டன.எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் பார்த்துகொள்வது நல்லது.

சர்வதேசத் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், யாகூ, பேஸ்புக், ட்விட்டர் போன்ற தேடுதள இணையங்களும் அமெரிக்க நிறுவனங்களாக இருப்பதால் உலகளாவிய அளவில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்துமே அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இருக்கின்றன.

இதனால் அமெரிக்கா அவர்களை பற்றிய உண்மையான செய்திகளை தவறானது என்று கூறி நிக்குவது எந்த விதத்தில் சரியாகும்....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by manikandan.dp Wed Jul 03, 2013 4:10 pm

ஒரு நாட்டை மட்டும் அல்ல தனி மனிதனியும் உளவு பார்ப்பது தனிமனித சுகந்திரத்தை பாதிக்கும்.

நினைத்து  பாருங்கள் உங்களை ஒருவர் வேவு பார்க்கிறார் என்றால் உங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா ......


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum