புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
5 Posts - 63%
Barushree
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
2 Posts - 3%
prajai
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
2 Posts - 3%
Shivanya
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
1 Post - 1%
Barushree
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_m10சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:32 pm

சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் June-i10

அந்தக் காலை வேளையில் பங்களாவுக்கு முன்புறமாய்ப் பச்சைக் கம்பளம் போன்ற புல்வெளியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த நமோ நாராயணன் தனக்குப் பின்னால் எழுந்த அய்யா… வணக்கம் என்ற குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தார்.

சற்றே அழுக்கான வெள்ளை வேட்டியிலும், சட்டையிலும் தெரிந்த அந்த கிராமத்து நபரைப் பார்த்ததும் லேசாய் முகம் மலர்ந்தார்.

அடேடே… வாங்க பொன்னுசாமி…! என்ன இவ்வளவு காலை நேரத்துல… பட்டணத்துப் பக்கம்.

அய்யாவைப் பார்த்துட்டுப் போலாம்ன்னு…!

நீங்க விஷயம் இல்லாமே வரமாட்டீங்களே…? வாங்க அப்படி அந்த நாற்காலியில போய் உட்காரலாம்…

புல்வெளிக்கு நடுவே போடப்பட்டு இருந்த அந்த நவீன மோஸ்தர் நாற்காலிகளைப் பார்த்தபடி நடந்தார் நமோ நாராயணன்.

என்ன பொன்னுசாமி…! கிராமத்துல விவசாயமெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு…? போன வாரம் நல்ல மழையாமே… டி.வி.&யில் பார்த்தேன்…

மழை பேய்ஞ்சு என்னங்கய்யா பிரயோசனம்? நம்ம கிராமத்துல இருக்கிற விவசாயிங்கள்ல பாதி பேர் பொன்னாய் விளையற பூமியை எல்லாம் தரிசு நிலம்ன்னு சொல்லிப் பொய் சர்ட்டிபிகேட் வாங்கி ரியல் எஸ்டேட்காரங்களுக்கு வித்துட்டுப் பட்டணம் பார்க்க வந்துட்டாங்க.

ரியல் எஸ்டேட்காரன் அந்தப் பூமியை மைசூர்பாகு மாதிரி துண்டம் போட்டு வித்துட்டு இருக்கான். சைட்ல ஒரு வீடுகூட கிடையாது. ஆனா ரோடெல்லாம் போட்டு விதவிதமாய் பேர் வெச்சு கலர் கலராய் கொடிகளைப் பறக்க விட்டுட்டானுக…

பார்த்தாலே வயித்தை எரியுது. நிலைமை இப்படியே போனா விவசாயம் பண்றதுக்கு நிலமே இல்லாமே போயிடும் போலிருக்கு. அரிசியையும், காய்கறியையும் மியூசியத்துலதான் பார்க்கணும் போலிருக்குங்கய்யா…!

நங்க சொல்றது வாஸ்தவம்தான் பொன்னுசாமி… இதையெல்லாம் பார்த்துட்டு நம்ம கவர்ன்மெண்டே சும்மாயிருக்கும்போது நாம என்ன பண்ண முடியும்…?

சொல்லிக் கொண்டே ஒரு பெருமூச்சோடு நாற்காலிக்குப் போய் சாய்ந்தார் நமோ நாராயணன். நீங்களும் உட்கார்ங்க பொன்னுசாமி.

பரவாயில்லீங்கய்யா…! நான் உங்ககிட்டே வேற ஒரு விஷயமாய் பேச வந்தேன்…! ஒரு அஞ்சு நிமிஷந்தான்…!

சொல்லுங்க… என்ன விஷயம்…?

அய்யா…! நம்ம தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து கவனிச்சுட்டு இருந்த மாரிமுத்து ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விஷக்காய்ச்சல் வந்து செத்துப் போனது உங்களுக்குத் தெரியும். மாரிமுத்துக்கு ஒரே பொண்ணு.

பேரு செல்வி. செல்விக்கு அம்மாவும் கிடையாது. கிராமத்துல விவசாய வேலை எதுவும் இல்லாததினால அந்தப் பொண்ணு சாப்பாட்டுக்கே கஷ்டப்படுது… அதனால….

சொல்லுங்க பொன்னுசாமி…!

நம்ம வீட்ல வேலைக்கு வெச்சுகிட்டா பரவாயில்லைன்னு

அவ்வளவுதானே… அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்து இருக்கீங்களா…?

ஆமாங்கய்யா…! என்றவர் திரும்பிப் பார்த்து ஒரு பெரிய குரோட்டன்ஸ் செடிக்குப் பின்னால் மறைவாய் நின்றிருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்துக் கையசைத்தார். செல்வி! இங்கே வாம்மா…!

அந்தப் பெண் பூப்போட்ட மஞ்சள்நிற சேலையில் வெளிப்பட்டாள். இருபது வயது இருக்கலாம். மாநிறம், திருத்தமான முகம், பெரிய கண்கள். தயக்கமாய் நடைபோட்டு வந்தவள் நமோ நாராயணனைப் பார்த்ததும் பவ்யமாய் ஒரு கும்பிடு போட்டாள். அவர் அவளை ஒரு புன்னகையில் நனைத்தார்.

என்னம்மா… படிச்சிருக்கியா…?

எட்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேன்ய்யா. அதுக்கு மேலே அப்பாரு படிக்க வேண்டாம்னுட்டார். காட்டு வேலைக்குப் போயிட்டிருந்தேன்ய்யா. அதுவும் இப்போ இல்லேன்னு ஆயிடுச்சு…

விவசாய நிலமே காணாமே போகும்போது வேலை எப்படிய்யா கிடைக்கும்…?



சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:33 pm


ரெண்டு நாளைக்கு முந்திதான் வாத்தியார் அய்யா டவுன்ல ஒரு வீட்டுக்கு வேலை பார்க்கப் போறியா… நல்ல சம்பளம் குடுத்து மூணு வேளை சாப்பாடும் போடுவாங்கன்னு சொன்னார். அதுதான் புறப்பட்டு வந்துட்டேன்ய்யா…!

நமோ நாராயணனின் புன்னகை பெரிதாயிற்று. இந்த வீட்டுக்கு வந்துட்டேல்ல…

இனிமே உனக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. சம்பளம் உனக்கு அஞ்சாயிரம் ரூபாய். மூணுவேளை சாப்பாடு, நீ தங்கிக்க ரூம், தீபாவளிக்கு மூணு மாச போனஸ், துணிமணியெல்லாம் உண்டு.

ஆனா வீட்டு வேலை எல்லாத்தையும் நீதான் பொறுப்பா பார்த்துக்கணும். இந்த வீட்ல நானும் என்னோட மனைவியும் மட்டுந்தான். ரெண்டு பொண்ணுக உள்ளூர்லதான் இருக்காங்க. சனி, ஞாயிறு குழந்தைகளோடு வந்துடுவாங்க. பேரன் பேத்தின்னு வீடு ஒரே அமர்க்களமாய் இருக்கும். அன்னிக்கு மட்டும்தான் உனக்கு வேலை அதிகமாய் இருக்கும். மற்ற நாட்கள்ல வேலை இருக்காது.

செல்வி சந்தோஷத்தில் மூச்சுத் திணறிக் கொண்டிருக்க நமோ நாராயணன் கொஞ்சம் தள்ளி செடிகளுக்கு உரம் வைத்துக் கொண்டிருந்த ஒரு ஆளைக் கைத்தட்டிக் கூப்பிட்டார்.

பொன்ராசு…!

அய்யா…! அந்த ஆள் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஓட்டமும் நடையுமாய் வந்தான்.

இந்தப் பொண்ணை அம்மாகிட்டே கூட்டிட்டுப் போய் வேலைக்குச் சேர்த்து இருக்கிற விபரத்தை சொல்லு.

சரிங்கய்யா…! அந்த ஆள் தலையை ஆட்டிவிட்டுச் செல்வியை உள்ளே கூட்டிப் போக, பொன்னுசாமி கைகளைக் குவித்தார்.

அய்யா…! நான் சொன்ன மாத்திரத்தில் செல்விக்கு ஒரு வேலையைப் போட்டுக் கொடுத்தற்கு நன்றி. செல்வி வெள்ளந்தியான பொண்ணு. அப்பனும் ஆத்தாளும் இல்லாத அந்தப் பொண்ணை நீங்கதான் பார்த்துக்கணும்.

பொன்னுசாமி…! அந்தப் பொண்ணைப் பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம். எனக்கு ரெண்டு பொண்ணுக. இதுவும் என்னோட இன்னொரு பொண்ணு மாதிரி இருந்துட்டுப் போகட்டும்…

அய்யா! உங்களுக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு…!

நமோ நாராயணன் சிரித்தார். உண்மையைச் சொல்லப் போனா நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். ஏற்கெனவே வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பொண்ணு உடம்புக்கு முடியாமே போன வாரம்தான் வேலையை விட்டுட்டுப் போனா. நீங்க சரியான நேரத்துக்கு ஒரு பொண்ணைக் கொண்டு வந்து வேலையில் விட்டிருக்கீங்க…

இருந்தாலும் நான் சொன்ன மாத்திரத்தில வேலைக்கு எடுத்துட்டீங்களே…?

பொன்னுசாமி! நீங்க வாத்தியாராய் இருந்து ரிடையரானவங்க. அந்த கிராமத்திலேயே இன்னமும் வாழ்ந்துட்டு இருக்கிறவங்க… உங்களுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியாதா என்ன? வாங்க… டிபன் சாப்டுட்டு ஊருக்கு கிளம்பலாம்…

நமோ நாராயணன் எ-ழுந்து பொன்னுசாமியின் தோள் மீது கையை வைத்தார்.

வாரம் ஒன்று கரைந்து போயிருக்க அன்றைக்கு சனிக்கிழமை.

நமோ நாராயணனின் இரண்டு பெண்களான பவித்ராவும், வைஜெயந்தியும் தத்தம் கணவர்களோடு காலை எட்டு மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார்கள். பவித்ராவுக்கு ஆறு வயதில் ஓர் ஆண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், வைஜெயந்திக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தையும் இருந்தார்கள். வீடு அமளி துமளிப்பட்டது.

செல்வியைப் பார்த்துவிட்டுச் சகோதரிகள் இருவரும் கண் சிமிட்டியபடி ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள்.

எப்படியிருக்கான்னு பார்த்தியா…?

பாரதிராஜாவோட ஆரம்ப காலத்துல வர்ற அழகான கதாநாயகி மாதிரி இருக்கா…

ப்யூட்டி பார்லர்க்கு கூட்டிட்டுப் போய் லேசா ஒரு பேஸியல் வாஷ் பண்ணி மேக்கப் போட்டா போதும், உன்னையும் என்னையும் ஓரம் கட்டிடுவா…

எதையுமே நீட்டா பண்றாளாம்… சமையல்ல அசத்தறாளாம். அதுவும் நான்&வெஜ் அயிட்டங்கள்ல தூள் பறத்தறாளாம். அம்மா நேத்து எனக்குப் போன் பண்ணி ஒரே பாராட்டு மழைதான்!

ம்… அம்மா எனக்கும் போன் பண்ணினா. நேத்து அவ பண்ணின வெஜிடபிள் பிரியாணி மாதிரி அம்மா சாப்பிட்டதேயில்லையாம்…!

அப்பா மாத்திரம் என்ன…? செல்வி போடற காப்பிக்கு அப்பா அடிமையாயிட்டாரம்!

அவளைச் சுவீகாரம் எடுத்துக்காமே இருந்தா சரி…

எங்கேயோ கிராமத்துல பொறந்து காட்டுவேலை பார்த்துகிட்டு இருந்தவளுக்கு இப்படியொரு சொர்க்க போக வாழ்க்கை. மாசம் பொறந்தா அஞ்சாயிரம் ரூபாய் சம்பளம். மூக்குப்பிடிக்க மூணுவேளை

சாப்பாடு. தங்கிக்க ரூம்… குடுத்து வெச்சவ. நம்ம வீட்டுக்கு வந்திருக்கா…!
எப்படியோ இவ வந்ததிலிருந்து அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாய் இருக்காங்க. அது போதும் நமக்கு…!

செல்வி அவர்கள் வந்த சந்தோஷத்தில் பம்பரமாய்ச் சுழன்று மதிய விருந்தை ஏற்பாடு செய்து முடித்தபோது சரியாய் ஒரு மணி. காளான் பிரியாணியும் வஞ்சிரம் மீனும் ஒரு சேர மணந்து வீட்டையே தூக்கியது.

சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேர மதிய தூக்கத்துக்குப் பின் மறுபடியும் எல்லோரும் ஹாலில் கூடினார்கள். பவித்ரா தன் கையில் வைத்து இருந்த விலை உயர்ந்த செல்போனினால் எல்லோரையும் படம் பிடித்தாள். பிறகு சமையல்கட்டை பார்த்துக் குரல் கொடுத்தாள்.

செல்வி…!

என்னம்மா பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த செல்வி எழுந்து ஓடி வந்தாள். அப்படி சுவரோமாய் நில்லு…!

அய்யோ… போட்டோவா… வேண்டாம்மா? நான் போட்டோவில் நல்லாவே விழமாட்டேன்…

அது எல்லாம் முடியாது. இந்த செல்போனில் எடுத்தா நீ சினிமாவில் வர்ற ஹீரோயின் மாதிரி இருப்பே! அப்படி ஓரமாய் போய் நில்லு பவித்ரா உரத்த குரலில் அன்புக் கட்டளையிட, செல்வி கூச்சத்தோடு போய் நின்றாள். செல்போன் காமிரா அவளைப் பல கோணங்களில் வி-ழுங்கியது.

எவ்வளவு அழகாய் இருக்கே பாரு. செல்போனில் போட்டோக்களைப் பார்த்த போது சந்தோஷத்தில் சுவாசிக்கத் திணறினாள் செல்வி. தண்ணீர் கலக்காத பால் போல் நீர்த்துப் போகாத அந்தக் குடும்பத்தின் அன்பில் கரைந்தாள். தன்னுடைய கிராமத்துப் பூமாரியம்மனை மானசீகமாய்க் கும்பிட்டாள். அம்மா! தாயே… இந்த சந்தோஷம் எப்பவும் எனக்கு நிலைக்கணும்…!

செல்வி வேலைக்குச் சேர்ந்து சரியாய் ஒரு மாதம் முடிந்து போயிருந்தது.
அன்றைக்குக் காலை நமோ நாராயணன் தன்னுடைய அறையில் உட்கார்ந்து பேப்பரைப் புரட்டிக் கொண்டு இருந்தபோது அவருடைய மனைவி திலகா அவருக்கு முன்பாய் வந்து நின்றாள்.




சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:33 pm


என்னங்க…

ம்…

செல்விக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா…?

நமோ நாராயணன் பேப்பரை மடித்தார். கூப்பிடு செல்வியை! முதல் மாச சம்பளத்தை நீயே குடு…! பத்து ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தன் பர்ஸிலிருந்து எடுத்தார். வீட்டின் உள்பக்கம் பார்த்து திலகா உரக்கக் குரல் கொடுத்தாள்.

செல்வி…!

இதோ வந்துட்டேம்மா…!

ஈரக்கையைச் சேலைத் தலைப்பால் துடைத்தபடி உள்ளேயிருந்து வெளிப்பட்டாள் செல்வி. முகத்தில் லேசாய் ஒரு வாட்டம் ஒட்டியிருந்தது.

வேலையெல்லாம் முடிஞ்சுதா…?

முடிஞ்சுதம்மா…!

சரி… இந்தா… உன்னோட முதல் மாச சம்பளம்!

கணவரின் கையிலிருந்த ரூபாய் நோட்டுக்களை வாங்கி செல்வியிடம் நீட்டினாள் திலகா.

பணத்தை வாங்காமல் மௌனமாய் நின்றாள் செல்வி.

ம்… வாங்கிக்க… செல்வி!

செல்வி தலைகுனிந்தபடி மெல்லிய குரலில் சொன்னாள் வேண்டாம்மா..
எ… எ… என்னது… வேண்டாமா…? ஏன்…?

செல்வி நிமிர்ந்தாள். திலகாவை தயக்கமாய் பார்த்தபடி மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். அம்மா…! நான் ஒண்ணு சொன்னா நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே!

சொல்லு!

நான் இந்த வீட்ல ஒரு மாசம் தங்கியிருந்து மூணு வேளையும் சாப்பிட்டிருக்கேன். அதுக்கு ஈடாய் அந்தப் பணம் உங்ககிட்டயே இருக்கட்டும்

செல்வி! நீ என்ன சொல்றே…? இது உன்னோட சம்பளம். அதுவும் முதல் சம்பளம்!

என்னைப் பொறுத்தவரைக்கும் இது கடைசி சம்பளம்.

கடைசி சம்பளமா…? அப்படீன்னா…!

நான் இன்னிக்கே என்னோட ஊருக்குப் போறேன். எனக்கு இங்கே வேலை செய்யப் பிடிக்கலை…

நமோ நாராயணனும் திலகாவும் அதிர்ந்து போனார்கள்.
காரணம்…?

சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாதுய்யா. அது மாதிரியான விஷயங்களில் இதுவும் ஒண்ணு

செல்வி! நீ பேசறது புரியலை…!

என்னிக்காவது ஒரு நாள் புரியும்ய்யா…! நான் வர்றேன்.

சுவரோரமாய் சாத்திவைத்து இருந்த மஞ்சள் நிறப் பையை எடுத்துக் கொண்டு செல்வி கிளம்பிவிட நமோ நாராயணனும் திலகாவும் குழப்பமான முகங்களோடு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

மறுநாள் காலை ஏழு மணி. டவுன் பஸ்ஸில் பயணம் செய்து தன் கிராமத்து பஸ் ஸ்டாப்பில் செல்வி இறங்கியபோது டீக்கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த பொன்னுசாமி அவளைப் பார்த்ததும் திகைப்போடு எழுந்து வந்தார்.

என்னம்மா! திரும்பி வந்துட்டே…?

கறைபடிந்த கைகளோடும், பாவப்பட்ட மனசோடும் சோறு போடற இடம் சொர்க்கமாகவே இருந்தாலும் அது எனக்கு வேண்டாங்க வாத்தியாரய்யா செல்வியின் உதட்டில் ஒரு வெறுமையான புன்னகை ஒட்டியிருந்தது.
நீ என்னம்மா சொல்றே?

செல்வியின் குரல் தாழ்ந்தது. அய்யா…! அந்த வீட்ல வாரத்துக்கு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடக்குது. கவர்மெண்ட்டுக்குத் தெரியாமே மணல் கொள்ளை வியாபாரம் நடக்குது. இது தவிர நில மோசடிகள் மூலமாய் பெட்டி பெட்டியாய்ப் பணம் வருது.

இந்த ஒரு மாத காலத்துல இதையெல்லாம் பார்த்துப் பார்த்து மனசே மரத்துப் போச்சுய்யா.

அந்த வீட்டுச் சாப்பாட்டைக் கையால தொடறதுகூட பாவம்ன்னு நினைச்சுத்தான் புறப்பட்டு வந்துட்டேன். அந்த வீட்ல பாலும் சோறும், கறியும் மீனுமாய்ச் சாப்பிடறதைவிட, நம்ம கிராமத்துல காட்டு வேலைக்குப் போய் கால் வயிற்றுக்குக் கஞ்சி குடிச்சாக்கூட அது எனக்கு அமிர்தமாய் இருக்கும்ய்யா சொல்லிவிட்டுச் செல்வி நடக்க, பொன்னுசாமி வாத்தியார் பிரமிப்பில் உறைந்து போனவராய் ஒரு சிலையாய் மாறி செல்வியையே இமைக்காமல் பார்த்தார்.




சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 5:51 pm

இந்தக் கதை க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் கதையா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 6:05 pm

அந்த வீட்டுச் சாப்பாட்டைக் கையால தொடறதுகூட பாவம்ன்னு நினைச்சுத்தான் புறப்பட்டு வந்துட்டேன். அந்த வீட்ல பாலும் சோறும், கறியும் மீனுமாய்ச் சாப்பிடறதைவிட, நம்ம கிராமத்துல காட்டு வேலைக்குப் போய் கால் வயிற்றுக்குக் கஞ்சி குடிச்சாக்கூட அது எனக்கு அமிர்தமாய் இருக்கும்ய்யா சொல்லிவிட்டுச் செல்வி நடக்க, பொன்னுசாமி வாத்தியார் பிரமிப்பில் உறைந்து போனவராய் ஒரு சிலையாய் மாறி செல்வியையே இமைக்காமல் பார்த்தார். wrote:

சூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 6:10 pm

ஜாஹீதாபானு wrote:இந்தக் கதை க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் கதையா?

சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் June-i11

அவர் கதையேதான்! சூப்பருங்க 



சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 28, 2013 6:18 pm

சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 




சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Mசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Uசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Tசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Hசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Uசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Mசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Oசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Hசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Aசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Mசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Eசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 6:25 pm

நானும் இவருடைய நிறைய கதை படித்துருக்கேன் கதை இரு களங்களில் வெவ்வேறகா சென்று இறுதியில் ஒரே கதையாக முடியும் யாராலும் யார் குற்றவாளி என்று கண்டறிவது கஷ்டம் சிறந்த படைப்பாளர் ...



சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Mசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Aசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Dசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் Hசொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் U



சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 6:27 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தக் கதை க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் கதையா?

சொர்க்கமே என்றாலும் - ராஜேஷ்குமார் June-i11

அவர் கதையேதான்! சூப்பருங்க 

அருமையிருக்கு அருமையிருக்கு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக