ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவின் கதை

2 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கருவின் கதை - Page 5 Empty கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:03 pm

First topic message reminder :

பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.


1 முதல் 4 வாரம் வரை


சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது

நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:45 pm

31-வது வாரம்

குழந்தை தலை முதல் பாதம் வரை 18 இஞ்ச் நீளமும், 3.5 பவுண்டுகள் எடையும் இருக்கும். மென்மையான காது நரம்புகள் முழுமையாக இணைக்கப்பட்டு விடும். இதனால் இதுவரை அதிகமான ஒலியை மட்டுமே கேட்டு உணர்ந்த குழந்தை, ஒலிகளை வேறுபடுத்தி அறிய கற்றுக் கொள்கிறது. அதாவது பழக்கமான ஒலிகளையும், இசையையும் நன்றாக கேட்டு அறிய முடியும்.

இந்த வாரத்தில் உங்களுடைய அடிவயிற்றின் பெரும்பகுதியை கர்ப்பப் பை நிரம்பி விடும். 21 பவுண்டு முதல் 27 பவுண்டுகள் வரை எடை போட வாய்ப்பு உள்ளது. இப்போது டெலிவரி பற்றிய பயமும், கவலையும் அவ்வப்போது தலை தூக்கி பார்க்கும். ஆனால் அது நீடிக்காது.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

மூச்சுப் பயிற்சியையும், ஓய்வாக தளர்த்திக் கொள்ளும் ரிலாக்ஷேசன் பயிற்சியையும் செய்து பாருங்கள். அடுத்து வரும் சில வாரங்களில் உங்களுக்கு குளூக்கோஸ் டெஸ்ட் எடுக்க வேண்டியுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:46 pm

வாரம் -32

குழந்தை தலைமுதல் பாதம் வரை 18.9 இஞ்ச்கள் நீளமும், 4 பவுண்டுகள் எடையும் இருக்கும். இப்போது கிட்டத்தட்ட கருப்பை முழுவதும் குழந்தையின் உருவம் நிரம்பி விடும். சுருங்கிய மென்மையான தோலின் அடியில் ஒரு கொழுப்பு படலம் உருவாக ஆரம்பிக்கும். குழந்தை கண்களை திறக்கவும், மூச்சு விடவும் பயிற்சி செய்து கொண்டிருக்கும்.

இதுவரை ஒரு மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே மருத்துவரை பார்த்து வந்த நீங்கள், இந்த வாரத்தில் இருந்து 2 வாரத்துக்கு ஒருமுறை மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம் ஆகும். இதை கடைசி மாதம் முடிய ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும். கால்களில் வீக்கம், முதுகுவலி தொடர்ந்து தொல்லை கொடுக்கும். தாய்ப்பால் சுரப்பதற்கு அறிகுறியாக உங்களுடைய மார்பகங்களில் இருந்து மஞ்சள் நிறத்தில் colostrum என்ற திரவம் கூட கசிவதை நீங்கள் காணலாம்;.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

இந்த நேரத்தில் உங்களுடைய உடலமைப்பும், அடிவயிற்றின் வடிவமும், உங்களுடைய உடல் எடையும், உங்களைப் போலவே கர்ப்பமாக உள்ள பெண்களிடமிருந்து வேறுபடலாம். ஆனால் சவுகரியமாக இருப்பதற்கு நிறைய திரவ ஆகாரங்களை குடியுங்கள். உட்கார்ந்து இருக்கும்போது கால்களை மெல்ல மெல்ல தூக்கி பயிற்சி செய்யுங்கள்;.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:47 pm

வாரம் -33

குழந்தை தலை முதல் பாதம் வரை 19.4 இஞ்ச் நீளமும், 4.4 பவுண்டு எடையும் இருக்கும். அடுத்து வரும் சில வாரங்களில் குழந்தையின் வளர்ச்சி அபரிமிதமாக அமையும். அதாவது அடுத்த 7 வாரங்களில் கருவானது தன்னுடைய முழு வளர்ச்சியில் பாதி அளவுக்கு வந்திருக்கும். கடந்த பல வாரங்களாக இயக்கத்தில் இருந்த குழந்தை இந்த வாரத்தில் தன்னுடைய இயக்கத்தை குறைத்துக் கொள்ளும். அதாவது மூட்டுக்களை மடித்து வளைந்து இருக்கும். கால்கள் குறுக்காக மடிக்கப்பட்டு காணப்படும்.

இப்போது கருப்பையானது தொப்புளில் இருந்து 5.2 இஞ்ச் மேலே அமைந்திருக்கும். உங்களுடைய உடல் எடை 22 பவுண்டு முதல் 28 பவுண்டு வரை கூடும். நீங்கள் ஒரு பவுண்டு கூடுகிறீர்கள் என்றால் அதில் அரை பவுண்டு உங்கள் குழந்தைக்குப் போய் சேரும்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது மருத்துவ ரீதியாக பாதுகாப்பானது தான் என்றாலும் உங்களுக்கு பெரும் அசவுகரியமாக இருக்கும். உங்களுடைய துணைவரிடம் வேறு வழிமுறைகளில் (பிறப்புறுப்பு, ஆசன வாய் தவிர்த்து) உறவு கொள்ளச் சொல்லலாம்;.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:47 pm

வாரம் 34

குழந்தை தலை முதல் பாதம் வரை 19.8 இஞ்ச் நீளமும், 5 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தையின் தலை கீழ்ப்பகுதிக்கு சென்று அமையும். எல்லா உறுப்புகளும் கிட்டத்தட்ட முழு வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால் நுரையீரல்கள் இன்னும் வளர வேண்டி யுள்ளது. அதுபோல தோல் சிவப்பு நிறத்துக்குப் பதிலாக ரோஸ் நிறத்தில் காணப்படும். கை விரல் நகங்கள் நன்றாக வளர்ந்து இருக்கும். ஆனால் அதே சமயம் கால் நகங்கள் இன்னும் வளர வேண்டும். குழந்தைக்கு நிறைய முடி இருக்கும். குழந்தையின் உருவம் கருப்பை முழுவதும் நிரம்பி விடுவதால் முன்பு போல இயக்கத்தை காண முடியாது.

கருப்பை பிரசவத்துக்கு இப்போதே ஆயத்தமாக தொடங்கும். அதனால் சுருங்குவதற்கும், வலுவடையவும் செய்யும். அதற்கு Braxton Hicks Contractions என்று பெயர். ஆனால் அதை உங்களால் உணர முடியாது. இடுப்பு பகுதி விரிவடையும். இதனால் குறிப்பாக பின் பகுதியில் வலி இருக்கலாம். கருப்பை கீழ் விலா எலும்புக்கு எதிராக தள்ளப்படுவதால் விலா எலும்புக்கு கூட்டில் வலி உண்டாகும் அளவுக்கு ரணம் உண்டாகும். அடி வயிறு சுருங்குவதால் தொப்புளும் வெளித்தள்ளப்படும்.

டிப்ஸ்

இந்த நேரத்தில் பிறக்கப் போகும் உங்களுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி யோசனை செய்யலாம். தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி பால் கொடுக்க வேண்டும்? என்னென்ன நேரத்தில் கொடுக்க வேண்டும்? அதற்கான பராமரிப்புகள் என்னென்ன? என்பது போன்ற விவரங்களை மகப்பேறு மருத்துவரிடமோ, அல்லது உங்களுடைய உறவினர்கள், நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்;.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:48 pm

35 வது முதல் 40-வது வாரம் வரை

குழந்தை தொடர்ந்து வளர்ந்து முதிர்ச்சி அடையும். நுரையீரல்கள் முழுமை யாக உருவாகி விடும். கண்களை மூடி திறக்கும். தலையைத் திருப்பும். கைகளால் உறுதியாக பற்றிக் கொள்ளும். வெளிப்புறங்களில் ஏற்படும் ஒலி- ஒளி, மற்றும் தொடு உணர்வு களுக்கு தகுந்தாற் போல உடலில் இயக்கம் காணப்படும்.

உங்களால் இன்னமும் எளிதாக நடமாட முடியும். உங்களுடைய குழந்தை, பிரசவத்துக்கு தகுந்தாற் போல தன்னுடைய இட அமைப்பை மாற்றிக் கொள்ளும். குழந்தை இடுப்புக் குழிக்குள் விழுந்து விடும். வழக்கமாக குழந்தையின் தலைப்பகுதி பிறப்பு பாதையை நோக்கியே அமையும்.

இந்த மாதத்தின் முடிவில் குழந்தையானது 18 முதல் 20 இஞ்ச் நீளமும், 7 பவுண்டு எடையும் இருக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:49 pm

வாரம் 35

குழந்தை தலை முதல் பாதம் வரை 20.25 இஞ்ச் நீளமும், 5.5 பவுண்டு களுக்கும் கூடுதலான எடையுடனும் இருக்கும். நுரையீரல்கள் கிட்டத்தட்ட முழுமையாக வளர்ந்திருக்கும். ஆனாலும் இந்த நேரத்தில் குழந்தை பிறக்குமானால் அதை இன்குபேட்டர் கருவியில் வைக்க வேண்டி இருக்கும். வெளிப்புற வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு குழந்தையின் தோலுக்கு அடியில் இன்னும் கொழுப்பு சேர்ந்து இருக்காது.

இப்போது உங்கள் கருப்பை தொப்புளுக்கு 6 இஞ்ச் உயரத்துக்கு மேலே இருக்கும். உங்களுடைய உடல் எடை 24 முதல் 29 பவுண்டுகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் இருந்து 37-வது வாரம் வரையிலான நேரத்தில் உங்களுக்கு குரூப்-பி ஸ்ட்ரப்டோகாக்கஸ் பரிசோதனை எடுக்கப்படும். மிகவும் அசவுகரியமாக இருக்கும் மென்பதால் சரியாக தூங்க முடியாமல் தவிப்பீர்கள். பிரசவ வேதனை மற்றும் டெலிவரி தொடர்பாக நீங்கள் அதிகமாக கவலைப் படுவீர்கள். இதனால் சில சமயம் அதிகமாக எரிச்சல் அடைவீர்கள்;.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

குழந்தைக்கு தேவையான துணிமணிகள், கருவிகள், உங்களுக்கு தேவையான துணிமணிகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:50 pm

வாரம் -36

இந்த வாரத்தில் குழந்தை தலை முதல் பாதம் வரை 20.7 இஞ்ச் நீளமும், 6 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தை அடிவயிற்றில் விழுந்து, தலைப்பகுதியானது பிரசவத்துக்கு தயாரான நிலைக்கு மாறிக் கொண்டு இருக்கும். குழந்தையின் மூளை வெகு வேகமாக வளரும். மேலும் கண்களை மூடி- திறக்க பிராக்டீஸ் எடுத்துக் கொண்டிருக்கும்.

கருப்பை கடந்த சில வாரங்களாக மிகப் பெரிதாக வளர்ந்து இருக்கும். அநேகமாக அது தற்போது உங்களுடைய இடுப்பெலும்புக்கு கீழே வந்து நிற்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிகமான சக்தி தேவைப்படும். மேலும் இப்போது உங்களுக்கு பின்புறம் மற்றும் இடுப்புக் குழியில் அசவுகரியம், மலச்சிக்கல், முதுகு வலி, நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகள் இருக்கும்;.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

பிரசவத்துக்கு தேவையான ஏற்பாடுகளை முனைப்பாக கவனித்துக் கொள்ள வேண்டியதுதான் இந்த வாரத்துக்கான டிப்ஸ் ஆகும்;
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:50 pm

வாரம் 37

குழந்தை தலை முதல் பாதம் வரை 21 இஞ்ச் நீளமும், 6.5 பவுண்டுகள் எடையும் இருக்கும். குழந்தை தினந்தோறும் சுற்றிக் கொண்டு இருக்கும். அதனுடைய தோலில் காணப்படும் சுருக்கங்கள் மறைந்து ரோஸ் நிறத்துக்கு மாறிக் கொண்டிருக்கும். வழக்கமாக குழந்தையின் தலைப்பகுதி உங்களுடைய இடுப்பெலும்புக் குழியின் கீழ்ப்பகுதியிலேயே காணப்படும்.

கருப்பையின் அளவில் மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த 2 வாரங்களாக அப்படியே இருக்கும். ஆனால் உங்களுடைய உடம்பு எடை அதிகரிப்பது இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்சமாக, அதாவது 25 முதல் 35 பவுண்டுகள் வரை இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு டாக்டர் இடுப்பெலும்புக்குழி பரிசோதனை மேற்கொள்வார். அதன் மூலம் பிரசவம் எப்படி இருக்கும்? என்பதை அவரால் அனுமானிக்க முடியும்
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:51 pm

வாரம் -38

குழந்தை தலை முதல் பாதம் வரை 21 இஞ்ச் நீளமும், 6.8 பவுண்டுகள் எடையும் இருக்கும். உடம்பு முழுவதும் இதுவரை காணப்பட்ட லாங்கூ எனப்படும் மென்மையான முடி மற்றும் வெண்ணை போன்ற மெழுகு படலம் மறைய தொடங்கும். ஆன்டிபயாடிக் மருந்துகளை குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலம் நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும். குழந்தையின் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், வெளிப்புறச் சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் குழந்தையின் தோல் கனமானதாக மாறிக் கொண்டு இருக்கும். வெளிஉலகத்தை சந்திப்பதற்கு உங்களுடைய குழந்தை அநேகமாக ரெடியாகி விட்டது. ஆம்! 95 சதவீத குழந்தைகள் இந்த வாரத்தில் தான் பிறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தருணத்தில் உங்களுடைய உடல் எடை மற்றும் கருப்பையின் அளவில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. ஆனாலும் நீங்கள் மேலும் அதிகமான அசவுகரியத்தை உணருவீர்கள்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்[

குழந்தை ஆணாக இருக்கும்பட்சத்தில் சுன்னத் செய்ய வேண்டுமா? என்பதை நீங்கள் தற்போதே முடிவு செய்து கொள்ளலாம். சுன்னத் செய்து கொள்வது மருத்துவ ரீதியாக நல்லதுதான். ஆனால் சுன்னத் விஷயத்தில் மதம் மற்றும் கலாச்சாரத்தில் கொடுக்கப்படும் அளவுக்கு மருத்துவக் காரணத்துக்காக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.


Last edited by இளங்கோ on Sun Feb 15, 2009 2:52 pm; edited 1 time in total
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Admin Sun Feb 15, 2009 2:52 pm

வாரம் 39

குழந்தை 21.5 இஞ்ச் நீளமும், எடை 7 பவுண்டுக்கு சற்று குறைவாகவும் காணப்படும். கால் விரல் நகங்கள், கை விரல் நகங்கள் முழுமை யாக வளர்ந்து இருக்கும். குழந்தையின் கை மற்றும் கால்களின் தசை வலுவாக மாறும். அதே சமயம் நுரையீரல் பிராக்டீஸ் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். குழந்தையின் தலை பிறப்பு வாசலை நோக்கி இருக்கும்பட்சத்தில் தலைப்பகுதி இடுப்பெலும்பு குழியினுள் தலை இறங்கி நிற்கும். இதனால் உங்களால் சற்று ஈசியாக மூச்சு விட முடியும்.

இப்போது அசவுகரியங்கள் இன்னும் கடுமையாக இருக்கும். இடுப்பெலும்பு குழி மற்றும் அடிவயிறு பகுதிகள் கருப்பையால் முழுமையாக நிரம்பி கீழ்நோக்கி வெளியேறக் கூடிய வகையில் அழுத்தம் அதிகரிக்கும்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

பிரசவ வலிக்கான அறிகுறிகள் தென்படுகிறதா? என்று கவனியுங்கள். அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம். அல்லது இந்த வாரம் கழித்து கூட வரலாம். இந்த நேரத்தில் பொய் வலிக்கும், நிஜமான பிரசவ வலிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளவது நல்லது

பொய்யான பிரசவ வலி அடிவயிற்றின் அடிப்பகுதியில் ஆரம்பித்து அதேப் பகுதி முழுவதும் பரவும். ஆனால் உண்மையான பிரசவ வலி மிகவும் கடுமையாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல அதனுடைய வேகம் கூடும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

கருவின் கதை - Page 5 Empty Re: கருவின் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum