Latest topics
» கவலைகள் போக்கும் கால பைரவர்by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூதுவளை (Solanum trilobatum)
2 posters
Page 1 of 1
தூதுவளை (Solanum trilobatum)
தூதுவளை (Solanum trilobatum)
பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.
சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.
மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.
நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்
தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.
சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. சளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும். இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது.
தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த குத்தல் இருமலும் காணாமல் போகும்.
தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும். தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.
"தூதுவளை, மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் களங்கமில்லை' என்றொரு பழமொழி உண்டு. அதாவது தூதுவளை மார்பு சார்ந்த வியாதிகளான நுரையீரல் கோளாறுகள், கபக் கோளாறுகள், இதயநோய்க் கோளாறுகளை அதிசயமாய் குணமாக்கும் தன்மை கொண்டது. அதேபோல் குடல் சார்ந்த, வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு மாதுளையே நன்மருந்தாகும்.
தூதுவளைக் கீரை முட்கள் நிறைந்த ஒருவகை கீரையாகும். முட்கள் நிறைந்த மூலிகைகளின் பூக்களில், நரம்புகளை வலுவாக்கும் தன்மையை இறைவன் வைத்திருக்கிறான். தூதுவளைப் பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது உணர்வு நரம்புகள் பலப்பட்டு, சரும நோய்கள், பார்வைக் குறைவு, காது கேளாமை, ருசியின்மை போன்ற கோளாறுகள் மாயமாய் மறையும்.
தூதுவளை தோசை
முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து விழுதாய் அரைக்கவும். இதனை எட்டு கரண்டி தோசை மாவில் கலந்து தோசை வார்க்கவும். இது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது; சுவையானது. இதனை வாரம் இருமுறையேனும் உட்கொண்டு வந்தால் சளி, இருமல், கப நோய்கள் அனைத்தும் குணமாகும்.
தூதுவளை ரசம்
முட்கள் நீக்கப்பட்ட தூதுவளை இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிதாய் அரிந்து கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை மைய தட்டி எடுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலை, மல்லி இலைகளையும் சிறிதாய் அரிந்து, அவற்றை தூதுவளை இலையுடன் சேர்த்து வதக்கி, அதில் தக்காளிக் கரைசலைச் சேர்த்து, மிளகு, சீரகம், பூண்டு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சூடு செய்யவும். கொதி வருவதற்கு முன் இறக்கி சுவையாய் சாப்பிட, சளி, இருமல் மூக்கடைப்பு, ஈஸ்னோபீலியா, தும்மல், சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்துக் குறைகளும் தீ ரும்
நல்ல பசி உண்டாக...
தூதுவளை இலைகள் மூன்று, மிளகு மூன்று, சிறிது மஞ்சள் ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்துச் சாப்பிட, நல்ல பசி உண்டாகும்.
தொண்டைச் சதை கரைய...
தூதுவளை இலை ஒரு கைப்பிடி, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவை வகைக்கு பத்து கிராம் எடுத்து நன்கு நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரி லிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய்ச் சுண்டச் செய்து, வேளைக்கு அறுபது மி.லி. வீதம் தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர, ஏழு தினங்களில் தொண்டையில் வளர்ந்துள்ள சதை (பர்ய்ள்ண்ப்ண்ற்ண்ள்) கரையும்.
விடாத இருமல் விலக...
தூதுவளை இலை ஒரு கைப்பிடி, உலர்ந்த திராட்சை முப்பது எண்ணிக்கை, அதிமதுரம் ஒரு துண்டு, சீரகம் பத்து கிராம் ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் நசித்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் காலை, ம தியம், இரவு மூன்று வேளையும் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர, எப்பேர்ப்பட்ட இருமலும் மூன்று தினங்களில் குணப்படும்.
ஆஸ்துமா, மூச்சுத் திணறல் குணமாக...
தூதுவளை, துளசி, முசுமுசுக்கை, கண்டங் கத்திரி ஆகிய நான்கையும் காயவைத்து, வகைக்கு நூறு கிராம் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஜாதிக்காய், மாசிக்காய், ஜாதிப்பத்திரி, ஏலக்காய், கருஞ்சீரகம், அக்ரகாரம், கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து,
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) பொடியை எடுத்து, தேனில் குழைத்து தினம் இருவேளை சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீ ரும்
சைனஸ் - தொடர் தும்மல் குணமாக...
தூதுவளை, குப்பைமேனி, துளசி, நிலவேம்பு, திப்பிலி, அதிமதுரம், சுக்கு, சித்தரத்தை ஆகியவற்றை வகைக்கு பத்துகிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் தட்டிப்போட்டு கசாயமிட்டு, நான்கில் ஒரு பங்காய் சுண்டச் செய்து, நூறு மி.லி. அளவில் தினமும் இருவேளை சாப்பிட்டு வர, தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
தூதுவளைப் பூக்களை நிழலில் உலர்த்தி நூறு கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் மாதுளம் பூ நூறு கிராம், ஜாதிக்காய் நூறு கிராம் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு நீங்கி புத்திரப்பேறு உண்டாகும்.
நன்றி முக நூல் நண்பர்

Re: தூதுவளை (Solanum trilobatum)
தூதுவளை பகிர்வுக்கு நன்றி
இதை படித்ததும் இந்தப்பாட்டு நினைவுக்கு வருது...
தூதுவளை இலை அரைச்சு தொண்டையில தான் நனைச்சு
மாமன் கிட்ட பேசப் போறேன் மணிக்கணக்கா....

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: தூதுவளை (Solanum trilobatum)
தூதுவளைப் பூக்களை நிழலில் உலர்த்தி நூறு கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். இத்துடன் மாதுளம் பூ நூறு கிராம், ஜாதிக்காய் நூறு கிராம் சேர்த்து அரைத்து பத்திரப்படுத்தவும். இதில் காலை- மாலை இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு நீங்கி புத்திரப்பேறு உண்டாகும்.
உங்கள் பாட்டுக்கு இதுதான் காரணமோ ..? பாடலாசிரியர் எழுதி இருப்பார் போல..
உங்கள் பாட்டுக்கு இதுதான் காரணமோ ..? பாடலாசிரியர் எழுதி இருப்பார் போல..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum