ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

+2
சதாசிவம்
ராஜு சரவணன்
6 posters

Go down

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Empty தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

Post by ராஜு சரவணன் Wed Jun 26, 2013 11:17 am

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Ooj5

புத்தர் என்னும் கவுதம சித்தார்த்தர் மீது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பான்மை இந்திய இந்து,&நாத்திககர்களுக்கு மிக்க மதிப்பு உண்டு.ஆனால் ஈழ சகோதரர்களைக் கேட்டால் பதில் வேறுவிதமாக வரும். அது ஏன் என்பதையும் பார்ப்போம்.முதலில் தேரவாத பவுத்தத்தின் வரலாறு,கொள்கைகள் பற்றி சுருக்கமாக அறிவோம்.

ஒரு மதம்,இயக்கம் நடைமுறையில் அன்று முதல் இன்றுவரை என்ன செய்தது,செய்கிறது, என்பதன் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே அதன் மீது கருத்து சொல்ல முடியும்.

பவுத்தம் பொ.ஆ.மு 600 ல் கவுதம் சித்தார்த்தர்[566-486 B.C.E.]  என்னும் அரசர் , தனது ஆட்சி,அதிகாரம்,குடும்பம் துறந்து ஞானம் தேடி சென்று,ஆசையே துன்பத்திற்குகாரணம் என்னும் அரிய உண்மையின் மூலம் பெற்ற ஞானத்தை,உலக முழுதும் பரப்பியதின் விளைவே பவுத்தம்.

இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட அசோகரின் கலிங்கப் போருக்கு[261 BCE] பிந்தைய , பவுத்த மத மாற்றம் அத்னை இந்தியாவின் முக்கிய மதம் ஆக்கியது. அசோகரின் மகன் மகிந்தா[ இவர் வேற!!!],மகள் சங்கமித்திரை இலங்கைக்கு பவுத்த மதப் பிரச்சாரகர் ஆக அனுப்பியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. பல இடங்களில் பவுத்த விகாரைகள் என்னும் மடங்கள், அதில் மதம் பரப்புதலை முதன்மைப் பணியாக கொண்ட புத்த பிக்குகள்(துறவுகள்) என செழித்தது. இந்தியாவில் அசோகரின் ஆட்சிக்கு பிறகு ,பவுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியை இழந்தது.

புத்தர் என்று ஒருவர் இருந்தாரா என்பதும்,புத்தர்,இயேசு,கிருஷ்னர் ஆகியோர் ஒருவரே என்றும் சில கருத்துகள் உண்டு என்றாலும், இப்போதைய வரலாற்றில் கவுதம சித்தார்த்தர் ஒருவாழ்ந்த மனிதராக ஏற்கப் படுகிறார்.

எந்த ஒரு மதமும் வளரும் போது ,அதனுள் ஏற்படும் கருத்து வித்தியாசங்கள் பெருகும் போது பிளவுபடும், கவுதம சித்தார்த்த்ரை ஒரு ஞானம் பெற்ற மனிதராக, அல்லது கடவுளின் அவதாரமாக பார்ப்பதா என்னும் கருத்து முரண்களினால், அது ஹீனயானம்[புத்தர் ஒரு மனிதன்],மஹாயானம்[புத்தர் ஒரு கடவுள்] உள்ளிட்ட சில பிரிவுகளானது. பவுத்தத்தின் அஹிம்சை, புலால் மறுப்பு போன்றவற்றை சனாதன தர்ம‌ மதம் [தற்போதைய பெயர் இந்து] ஏற்றது,புத்தர் விஷ்னுவின் அவதாரம் ஆக்கப் பட்டார்.அதே போல் இந்து மத உருவ வழிபாடு,சடங்குகள் பலவற்றை பவுத்தம் ஏற்றது. சுருக்கமாக சொன்னால் புத்தரை ஏக இறைவனாக கொண்ட, அவருக்கு கீழ் பல [ சனாத்ன தர்ம மத] சிறு தெய்வங்கள் கடவுள் ஆனார்.

பவுத்தம்,சனாதன மதம் வேறுபாடுகள் குறைந்ததாலும், ஆட்சி,அதிகாரம் இழந்ததாலும்  இந்தியாவில் தனக்கான இடத்தை இழந்தது.  தங்களின் கொள்கை காக்க  இலங்கை, பர்மா,தாய்லாந்து சீன,ஜப்பான் போன்ற இடங்களுக்கு ஆயிரக் கணக்கான புத்த பிக்குகள் இடம் பெயர்ந்த்னர்.

ஆட்சி அதிகாரம் இழந்தால் ஏக இறை மதங்கள் இல்லாமல் போகும், ஆனால் பல இறை மதங்கள் வெகுநாள் தாக்கு பிடிக்கும்:::::
சார்வாகனின் மத அழிவு விதி1!!!!!

இப்படி ஆட்சி,அதிகாரம் இழந்த புத்த பிக்குகள் ,பவுத்தத்தில் ஒரு பிரிவாக ,மிக்க கட்டுப்பாட்டுடன், என்றும் நிலைக்கும் வரையில் மாற்றியமைத்த பவுத்தமே தேரவாத பவுத்தம்.

தேரவாத பவுத்தம் ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம். புத்தர் பிற கடவுள்களை விட உயர்ந்தவர். தேரவாத பவுத்தம் பிற மதங்களை விட உயர்ந்தது. பவுத்தம் பாதுகாப்பவரே,பிக்குக்களுக்கு கட்டுப்படுபவரே  ஆட்சியில் இருக்க முடியும்.

இப்படி சொல்லும் எந்த மதத்தையும் நாம் ஆக்கிமிப்பு, ஒடுக்கு முறை மதம் என்கிதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் N4nறோம்.

இப்போது தேரவாத பவுதம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைப் பார்க்கப் போகிறோம்.

[img]https://2img.net/r/ihimizer/img836/5471/n4n.png/[img]

1.இலங்கை 2. பர்மா 3.தாய்லாந்து 4.லாவோஸ் 5.க‌ம்பொடியா

5.கம்போடியா

இதில் கம்போடியா என்றால் நினைவுக்கு வருவது க்யுமர் ரோக் எனப்படும் இடதுசாரிக் குழுவின் ஆட்சியும் அது சார் வன்முறைகளுமே. க்யுமர் ரோக் மதத்தை தடை செய்தாலும், கட்டுக் கோப்பான அமைப்பை கொண்ட தேரவாத பவுத்தம் , மீண்டும் அரசினை ஆட்டுவிக்கும் சக்தியானது.

பவுத்தம் முன்பு இந்து மதம் போன்ற ஒரு பேகன் மதம் வழக்கத்தில் இருந்தது. அங்கோர் வாட் ஆலயம் ஒரு சிறப்பு ஆகும்

95% இம்மதப் பிரிவு என்பதாலும், பிற மதத்தவர் சில பகுதிகளில் மட்டும் செறிந்து வாழ்வதாலும், பெரிய அளவில்  பிற மதத்தவரை ஒடுக்குவதாக தகவல் இல்லை.
http://en.wikipedia.org/wiki/Freedom_of_religion_in_Cambodia

The Constitution designates Buddhism as the state religion. The government permits Buddhist religious instruction in public schools as an extension of this constitutional designation.

தேரவாத பவுத்தமே அரச மதம், அரசு பள்ளிகளீல் பவுத்தம் கற்பிக்கப் படுகிறது.
இது அவர்களின் தேசிய கீதம்.

http://en.wikipedia.org/wiki/Nokor_ரீச்

Verse IIISongs rise up from the pagodasTo the glory of holy Buddhist faith.Let us be faithful to our ancestors' belief.Thus heaven will lavish its bountyTowards the ancient Khmer country, The Grand Kingdom


மதத்தோடு தேசியம் கலப்பது தேரவாத பவுத்தத்தில் ஒரு அம்சம்!!!

4.லாவோஸ்

http://en.wikipedia.org/wiki/Freedom_of_religion_in_Laos

இங்கே பிற மதத்தவர் மிக குறைவு என்றாலும் மதமாற்றம் என்பது தண்டனைக்குறியதாக உள்ளது. இயற்கை வழிபாடு செய்யும் ஆதிவாசிக் குழுக்களையும் ,மக்கள் தொகையில் சேர்த்து கணக்கு காட்டி விடுகிறார்.

The country has an area of 85,000 square miles (220,000 km2) and a population of 6.4 million. Almost all ethnic or "lowland" Lao are followers of Theravada Buddhism; however, lowland Lao constitute only 40-50 percent of the population. The remainder of the population belongs to at least 48 distinct ethnic minority groups. Most of these ethnic minorities are practitioners of animism, with beliefs that vary greatly among groups. Animism is predominant among most Sino-Thai groups, such as the Thai Dam and Thai Daeng, as well as among Mon-Khmer and Burmo-Tibetan groups. Even among lowland Lao, many pre-Buddhist animistic religious beliefs have been incorporated into Theravada Buddhistpractice. Catholics and Protestants constitute approximately 2 percent of the population. Other minority religious groups include those practicing the Baha'i faith, Islam, Mahayana Buddhism, and Confucianism. A very small number of citizens follow no religion.
****

3.தாய்லாந்து

இங்கு மன்னராட்சி என்றாலும் ஜனநாயகமும்,பாராளுமன்ற அமைப்பும் உண்டு.இங்கே 90_95  தேரவாத பவுத்தம், 5_10 இஸ்லாம், 1% கிறித்தவர் வாழ்கின்றார். முஸ்லிம்கள் மலேசியாவை ஒட்டிய‌ட தெற்கு பகுதியில் உள்ள 5 மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அரசியல்,வேலைவாய்ப்பில் சரியான பங்கீடு இல்லை என எழுந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது.

http://en.wikipedia.org/wiki/South_Thailand_insurgency

இப்போராட்டம் இன்றுவரை தொடர்கிறது, போராடும் இஸ்லாமிய குழுக்கள் இதனை உலக இஸ்லாமிய நாடுகளிடம் எடுத்துச் சென்றாலும் இவர்களின் பிரச்சினை பற்றிய அக்கரை அங்கு இல்லை. இப்படி இருப்பது இயல்பு என நாம் அறிவோம்!!

2.பர்மா
உலகின் மிக ஒடுக்குமுறை  கொண்ட அரசுகளுள் ஒன்றுதான் இது. சர்வாதிகார ஆட்சி நீண்ட நாட்களாக நடக்கிறது. ரோஹிங்கா முஸ்லிம்களை ஒடுக்க நாளொறு மேனியும் பொழுதொறு சட்டமாக வடிவமைப்பதில் ஈடு இணையற்றவர்கள். நம்ம வஹாபி சகோக்களையும் மிஞ்சிய ஒடுக்குமுறையாளர்கள். வஹாபிகள் அமரிக்க எடுபிடிகள் என்பதால் அமெரிக்கா சொன்னால் மறுப்பின்றி உடனே கேட்பார்கள்,ஆனால் பர்மியர்கள் யார் சொன்னாலும் கேட்பது இல்லை.

பாருங்கள் ரோஹிங்க முஸ்லிம்கள்  இரு குழுந்தை மட்டுமே பெற வேண்டும் என் ஒரு சட்டம் சென்ற வாரம் போட்டு,அதன் விளைவாக நடக்கும் கலவரத்தையும் செய்திகளில் படிக்கும் போது நாகரிக உலகில் வாழ்கிறோமா என சந்தேகம் வருகிறது.

http://www.huffingtonpost.com/2013/05/25/two-child-limit-for-rohingya-muslims-in-parts-of-myanmar_n_3337816.html?utm_hp_ref=religion

YANGON, Myanmar -- Authorities in Myanmar's western Rakhine state have imposed a two-child limit for Muslim Rohingya families, a policy that does not apply to Buddhists in the area and comes amid accusations of ethnic cleansing in the aftermath of sectarian violence.

http://en.wikipedia.org/wiki/Persecution_of_Muslims_in_Burma
ஏழைகளை அவர்களின் மதம் சார் இறைவன் மட்டுமல்ல, சக மதத்தினரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எ.கா ரோஹிங்கா முஸ்லிம்களே.

இதன் எதிர்வினையாக வங்க தேசத்தில் இருந்து துரத்தப்படும் பவுத்தர்களை,ரோஹிங்காக்களின் இடத்தில் பர்மிய அரசு குடியேற்றுகிறது.ஆனால் வங்க தேசத்துக்குள் உயிரிக்கு தப்பி நுழையும் ரோஹிங்காக்களை உள்ளே விடாமல் துரத்துகிறது இஸ்லாமிய வங்க தேசம்!!!!
http://www.csmonitor.com/World/Asia-South-Central/2013/0524/Buddhists-from-Bangladesh-resettle-in-Myanmar-Rohingya-Muslims-cry-foul

1.இலங்கை

இப்போது இலங்கையில் 70% பவுத்தர்களை 100% ஆக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறார். மலையகத் தமிழர்களை இரு நூற்றாண்டுகளாக உழைப்பை சுரண்டி துரத்தியது, சிங்களம் மட்டுமே சட்டம்,தரப்படுத்தல் என பலவிதங்களில் ஈழத்தமிழர்களில் சுரண்டினர். வசதி படைத்த பல ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தது போக மீதி உள்ளோர் , இலங்கையில்இரண்டாம் தரக் குடிமக்களாய்  அங்கும், தமிழகத்தில் அகதிமுகாம் என இங்க்கேயும் வாழ்க்கையை ஓட்டுகிறார்.

இராஜபக்சேவை எதிர்த்து தினமும் சவால் விடும் ,பெரிய சிறிய தமிழக  கட்சிகள் எதுவும்  இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க குரல் கொடுப்பது இல்லை. செய்ய இயல்வதை பேசாமல் இருப்பதும்,செய்ய இயலாததை  செய்வதாக வாக்குறுதி கொடுப்பதுதானே தமிழக(இந்திய) அரசியல்!!!
தமிழர்களை ஒடுக்க சிங்களர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் உதவினாலும்,அவர்களையும் நிம்மதியாக இருக்க் பவுத்த மத்வாதிகள் விரும்ப வில்லை.

இத்தனைக்க்கும் இந்தியாவில் வந்தே மாதரம் பாட மறுக்கும் இந்திய முஸ்லிம்கள் போல் இல்லாமல், சிங்கள தேசிய கீதமான நமோ[வணங்குகிறேன்] இலங்கைத் தாயே என்பதைப் பாடுகிறார்.
http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Matha

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

ஏற்கெனவே ஹலால் முத்திரை  தடுப்பதில் வெற்றி கண்ட பொது பலசேனா, தம்புள்ள என்னும் பகுதியை புனித பிரதேசம் ஆக்கி, அப்பகுதியில் பிற மத சின்னங்கள்,கோயில் இல்லாமல் செய்து வெளியேற்றினார்.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130527_dambulla.shtml

சிங்கள அரசு என்ன செய்தாலும்,இலங்கை முஸ்லிம் தலைவர்கள் கண்டு கொள்வது இல்லை. தமிழர்களை படு மோசமாக நடத்தும் இராஜபக்சே அரசு, முஸ்லிம்களை மோசமாகத்தானே நடத்துகிறது என ஒப்பீட்டு அளவு சார் நடவடிக்கை என நமக்கு புரிகிறது.

இன்னும் சென்ற வாரம்  மாடு வெட்டுவதை எதிர்த்து பவுத்த மத குரு தீக்குளிப்பு என்பது,ஆயிரக்கண்க்கில் நடந்த கொலைகளை கண்டுகொள்ளாத மத அமைப்புகளின் இரட்டைவேடப்போக்கு பற்றி என்ன சொல்வது??

தமிழர்கள் தனிநாடு கேட்டதால்தான் பிரச்சினை என்போர், இலங்கை அரசுக்கு வால் பிடிக்கும் முஸ்லிம்களையும் ஒடுக்குவது ஏன் என சிந்திக்க மாட்டார்களா?

இப்பதிவில் நாம் சொல்ல வருவது தேரவாதம் பவுத்தம் என்பது ஒரு ஒடுக்குமுறை சார்ந்த மதம்.உலகளாவிய அரசு அமைக்கும் நோக்கம் இல்லை என்றாலும்,தேரவாதம் பவுத்த பெரும்பான்மை மத நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர். இதன் ஒரு நிகழ்வுதான் இலங்கை,பர்மா,தாய்லாந்து.

ஆகவே இலங்கை,பர்மா,தாய்லாந்து சிறுபான்மையினருக்கு சம உரிமை ,அதிகாரப் பங்கீடு கிடைக்க வேண்டியதின் நியாயத்தை உணர்வோம்.

இந்தியாவில பலருக்கும்,தமிழர்களில் கூட பலருக்கும் இனமத ரீதியான ஒடுக்குதல் குறித்து எதுவும் தெரிவது இல்லை.சாதிரீதியான ஒடுக்குதல் தெரியும் என்றாலும்,இதில் கீழ் இருப்பவனை ஒடுக்கி,மேல் இருப்பவனுக்கு ஒடுங்கி போவது என்பதால், ஒடுங்குபதைப் பற்றி கவலைப் படாமல்,அடுத்தவனை ஒடுக்குவதையே பலரும் சிந்திப்பதால் இதனை சரியாக உணர்வது இல்லை.

உலக முழுதும் வாழும் மனிதர்களுக்கும் பொதுவான உரிமைகள் சார்ந்து பொதுவான சட்டம் வேண்டும்.அனைவருக்கும் வாழ்வாதார‌ம், இயற்கை சூழல் மேம்பாடு,பாதுகாப்பு சார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.மதம் அரசியலில் கலக்க கூடாது.

மனித உரிமைகளுக்கு முரணான மதவாத,சர்வாதிகார ஆட்சிகள் உலகில் ஒழிய வேண்டும்.

இந்த இலக்கு நோக்கி மனிதம் செல்லுமா???

நன்றி ஆற்றலரசு ப்ளாக்ஸ்பாட்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Empty Re: தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

Post by சதாசிவம் Wed Jun 26, 2013 3:20 pm

பல தகவல்கள் அடங்கிய பதிவை பகிர்தமைக்கு நன்றி.

மதமும் அரசியலும், ஒரு நாணயத்தின் இருபுறங்கள் போல் தான்..இவற்றை பிரிப்பது மிக மிகக் கடினம். மதச்சார்பற்ற நாடுகளிலும் அரசியல் செய்வோர் அனைத்து தரப்பினரையும் கோட்டா அடிப்படையில் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. தகுதி, திறமையை விட இந்த கோட்டா அடிப்படை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

பன்னெடுங்காலமாக மன்னர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் மதத் தலைவர்களின் பங்கு இருந்துள்ளது என்பதை வரலாறு பறை சாற்றுகிறது. மதத்தை பரப்ப மன்னர்கள் தேவைப்பட்டனர். ஒரு மன்னரை மதம் மாற்றினால் நாட்டு மக்கள் அனைவரும் மதம் மாற வேண்டிய சூழல் சரித்திரத்தில் பலமுறை நிகழ்ந்துள்ளது. யாருக்கு தெரியும் அசோகர் காலத்திலும் இந்த திணிப்பு முறையில் தான் புத்தமதம் பரவி இருக்கலாம்.

நாட்டு மக்களின் பெரும்பாலோனோர் எவரோ , அவர்களுக்கு சாதகமான வழியில் நாடு செல்லும். இதை தவிர்க்க முடியாது. மக்கள் என்ன தான் மனித நேயத்தை விரும்பினாலும், அடிப்படையில் சுயநலவாதிகள். தங்களின் நலனுக்கு ஆதரவு இருக்கும் அரசை/ அதன் பின்புலனில் இருக்கும் மதத்தையே ஆதரிப்பர். பிறருக்கு நடக்கும் தீங்கை கேட்பவர் ஒரு சிலரே.

மனிதன் ஜாதியையும், மதத்தையும் தூக்கி எறியும் பொழுது தான், மனிதம் மலரும். குழந்தைக்கு பெயர் வைப்பதில் இருந்து, வளரும் ஒவ்வோர் பருவதிலும் நாம் அறியாமலே மதம் நமக்குள் திணிக்கப்படுகிறது.

திருமணம் போல், 18 வயதுக்குப் பிறகு விருப்பமான மதத்தை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், அதுவரை மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசக்கூடாது, பழக்கக்கூடாது என்று பெற்றோருக்கு சட்டம் போட்டால், பெரும்பாலான மதங்கள் ஒரு சில தலைமுறையில் முழுவதும் அழிந்து போகும்.










சதாசிவம்
தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Empty Re: தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

Post by அகல் Wed Jun 26, 2013 3:31 pm

சதாசிவம் wrote:
நாட்டு மக்களின் பெரும்பாலோனோர் எவரோ , அவர்களுக்கு சாதகமான வழியில் நாடு செல்லும். இதை தவிர்க்க முடியாது. மக்கள் என்ன தான் மனித நேயத்தை விரும்பினாலும், அடிப்படையில் சுயநலவாதிகள். தங்களின் நலனுக்கு ஆதரவு இருக்கும் அரசை/ அதன் பின்புலனில் இருக்கும் மதத்தையே ஆதரிப்பர். பிறருக்கு நடக்கும் தீங்கை கேட்பவர் ஒரு சிலரே.

மனிதன் ஜாதியையும், மதத்தையும் தூக்கி எறியும் பொழுது தான், மனிதம் மலரும். குழந்தைக்கு பெயர் வைப்பதில் இருந்து, வளரும் ஒவ்வோர் பருவதிலும் நாம் அறியாமலே மதம் நமக்குள் திணிக்கப்படுகிறது.

திருமணம் போல், 18 வயதுக்குப் பிறகு விருப்பமான மதத்தை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், அதுவரை மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசக்கூடாது, பழக்கக்கூடாது என்று பெற்றோருக்கு சட்டம் போட்டால், பெரும்பாலான மதங்கள் ஒரு சில தலைமுறையில் முழுவதும் அழிந்து போகும்.    
ஓகே!!!!


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Empty Re: தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

Post by SajeevJino Wed Jun 26, 2013 10:02 pm

இதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை ..சீனா இதற்கு மிக சிறந்த உதாரணம்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Empty Re: தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

Post by Muthumohamed Wed Jun 26, 2013 11:34 pm

விரிவான உண்மை கட்டுரை சூப்பருங்கநன்றிநன்றிநன்றி

உண்மை தான் இலங்கையிலும் பர்மாவிலும் நிகழ்ந்ததை நிறைய காண முடிந்தது



தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Mதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Uதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Tதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Hதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Uதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Mதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Oதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Hதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Aதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Mதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Eதேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Empty Re: தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

Post by imz Thu Jun 27, 2013 11:21 am

இப்போது இலங்கை பவுத்தத்தை வளர்க்கிறோம்.. என்ற போர்வையில் அநியாயங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது....ஆண்டவன் தான் காப்பாற்றணும்...
imz
imz
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Back to top Go down

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Empty Re: தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum