Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
அறிவியலில் நிரூபணம் ஐயந்திரிபர அளிக்க இயலும் ஒரே துறை கணிதம் ஆகும்.ஒரு கருதுகோள் அல்லது கூற்று எந்த சூழலில் உண்மையாக இருக்கும் என்பதை அறிவியலில் பரிசோதனை மூலம் உறுதி செய்தாலும்,பரிசோதை கருதுகோளின் அனைத்து அம்சங்களையும் ,பரிசோதனையில் 100% கொண்டு வர முடிந்தது என சொல்ல முடியாது. ஆனால் கணிதத்தில் பல கருதுகோள்கள் பிற கணித [நிரூபிக்கப் பட்ட]தேற்றங்கள்,விதிகள் மூலம் நிரூபணம் அளிக்க இயலும்.
கணிதம் என்பது ஒரு பெருங்கடல்,அல்லது எல்லையற்ற பிரபஞ்சம் போல் எனலாம். கணிதத்தில் எண்கணிதத்தில் நமது தமிழகத்தை சேர்ந்த திரு.இரமானுஜம் பல அரிய கண்டுபிடிப்புகள், நிரூபண பங்களிப்பு செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எண்கணிதம்[number theory] சார்ந்த பல புதிர்களில் நிரூபணங்கள் சில நூற்றாண்டுகளாக தீர்க்கப் படாமல் உள்ளன. அப்படி ஒரு புதிரைத் தீர்த்தால் ஒரு மில்லியன் டாலர்[சுமார் 5 கோடி ரூபாய்] பரிசு என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு பரிசு இவ்வளவு அளிக்க வேண்டியது இல்லை என்பது நம் கருத்து. ஒரு வேளை தீர்வு காணும் அறிஞருக்கு,ஆய்வுகளைத் தொடர நல்ல வசதி வாய்ப்பு, அவரின் பங்களிப்புகள் கணித மாணவர்கள் அனைவருக்கும் சென்றடைய ஆவண செய்வதே சால சிறந்தது என கூறுகிறோம்.
பணம் என்னும் ஒப்பீட்டு மதிப்புமுறை ,சமூகத்தில் எல்லா தளங்களிலும் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதில் முதன்மைப் பங்காற்றுகிறது என்பது உண்மையே!!.கல்வியில் பொருளாதார நலன் மட்டுமே சார்ந்து பணியை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது கல்விக்கு எந்த பயனையும் ஆற்றாது.
சரி புதிருக்கு போவோம். இந்த புதிரின் ஒரு மாறுபட்ட வடிவத்திற்கு நிரூபணம் வழங்கப்பட்டதை நாம் ஏற்கெனவே பதிவாக்கி,அந்த ஆவணப் படத்தையும் அதில் அளித்து இருந்தோம்.ஃபெர்மேட்டின் இறுதி தேற்றம் என்னும் புதிரின் நிரூபணத்தை ஆண்ட்ரூ வைல்ஸ்[Andrew wiles] என்னும் கணித ஆய்வாளர் தீர்வு கண்டதைப் பற்றிய பதிவே அது.
ஃபெர்மேட்டின் இறுதி தேற்றத்தின் கதை: காணொளி
பிதாகரஸ் தேற்றத்திற்கு முழு எண் தீர்வுகள் கண்டறியும் விதம்
"இரு முழுஎண்களின் இரண்டுக்கு மேற்பட்ட அடுக்குகளின் கூடுதலை,இன்னொரு முழு எண்ணின் அடுக்கு மதிப்பாக கூற இயலும் போது, அந்த மூன்று எண்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு பகா எண் காரணியாவது இருக்கும்."
அதைப் பற்றி சிறிய முன்னோட்டம் கொடுத்து பிறகு, ஒரு மில்லியன் பரிசு தரும் பீள் கணிப்பு [Beal conjecture] புதிர் பற்றி பார்ப்போம்.
ஃபெர்மாட்டின் இறுதி தேற்றம் என்ன சொல்கிறது?
பிதாகரஸ் தேற்றத்தின் இரண்டுக்கு அதிக பரிமாண[dimension] அளவில், முழு எண்களில் தீர்வு கிடையாது!!
என்ன சகோ தெளிவாக சொல்லுங்கள் என்கிறீர்களா!!
பிதாகரஸ் தேற்றம் தெரியும் அல்லவா, ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின்[hypotenuse] வர்க்கம் ஆனது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம்.
a^2+b^2=c^2
இதற்கு முழு எண் தீர்வுகள் பல் உண்டு. எ.கா [3,4,5].[5,12,13] எப்படி முழு எண் தீர்வுகள் காண்பது என்பதையும் பதிவு இட்டு இருக்கிறோம்.
பிதாகரஸ் தேற்றம் வர்க்கம் அதாவது இரு பரிமாண அடுக்குகள் பற்றி கூறுகிறது இப்போது இரண்டுக்கு அதிகமான பரிமாணத்தில் பிதாகரஸ் தேற்றத்திற்கு முழு எண்களில் தீர்வு இல்லை என்பதே ஃபெர்மேட்டின் இறுதி தேற்றம் கூறும் கணிப்பு ஆகும்.
a^n+b^n=c^n, n>2
a,b,c,n=முழு எண்கள் [integers]
இப்போது பீள் கணிப்புக்கு செல்வோம்.
http://www.bealconjecture.com/
BEAL'S CONJECTURE: If Ax + By = Cz, where A, B, C, x, y and z are positive integers and x, y and z are all greater than 2, then A, B and C must have a common prime factor.
தமிழர்களின் தாய்மொழியாம் ஆங்கிலத்தில் சொல்லி இருப்பதால் புரியும் என்றாலும்,போனால் போகட்டும் என தமிழிலும் சொல்வோம்.
ஃபெர்மேட்டின் தேற்றத்தைப் போல் அடுக்குகள் அளவுகள் சமமாக இருக்க வேண்டியது இல்லை என்பதும், அப்படி அளவுகள் சமமாக இல்லாது போது இந்தக் கூற்று உண்மை ஆகும்.
An + Bn = Cn
{ [ஃபெர்மேட்டின் தேற்றம்,முழு எண் தீர்வு இல்லை,x=y=z=n!!!}
If Ax + By = Cz, முழு எண் தீர்வு உண்டு!!
{x,y,z}>2
{A,B,C,x,y,z}= முழு எண்கள் [integers]
சரி தீர்வுதான் இருக்கிறதே அப்புறம் என்ன சிக்கல் என்கிறீர்களா.இந்த தீர்வுகளுக்கு பொதுவாக ஒரு பகா எண் காரணியாவது இருந்தே ஆகும் என்பதுதான் பீள் கணிப்பு!!!
சரி ஒரு எ.கா பார்த்துவிட்டு புதிரை வரையறுப்போம்.
26 + 43 = 27
இப்படி தீர்வுகளில் உள்ள A,B,C முழு எண்களுக்கு பொதுவான பகா எண் காரணி உண்டு என்பதுதான்,பீள் கணிப்பு ஆகும். நாம் பார்த்த எ.கா வில் கூட A=2 ,B=4 ,C=2 இவற்றின் பகா எண் காரணி[prime factor] 2 என எளிதில் உணரலாம்.
Ax + By = Cz,
இப்போது இந்த சமன்பாட்டின் முழு எண் தீர்வுகளில் A,B,C மூன்று எண்களுக்கும் பொதுவான பகா எண் காரணி இல்லாமல் ஒரு தீர்வு கண்டுபிடித்தால் ,பீள் கணிப்பு தவறாகி விடும்.
இப்படி பொது பகா எண் காரணி இல்லாமல் ஒரு எ.கா எனில் A=2 ,B=3 ,C=5 என் வைப்போம் x,y,z எந்த முழு மதிப்பு இட்டாலும் தீர்வு கிட்டாது.ஏன்???
ஆகவே பீள் கணிப்பு தவறு என ஒரு எ.கா அல்லது,[பொதுவான பகா எண் காரணி இல்லாத] தீர்வு இருக்க முடியாது என நிரூபணம் அளித்தால் ஒரு மில்லியன் டாலர்[5 கோடி ரூபாய்] என்பதுதான் புதிர்.மேலதிக தகவல் இங்கே பெறலாம்.
http://ns3.ams.org/bealprize.html
நன்றி ஆற்றலரசு.ப்ளாக்ஸ்பாட்
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
இனிமே இந்த மாதிரி கணக்கு போடாம இருந்த உங்களுக்கு ஐந்து கோடி சோனியாஜியிடம் இருந்து வாங்கித் தரேன் ராஜூ!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
யினியவன் wrote:இனிமே இந்த மாதிரி கணக்கு போடாம இருந்த உங்களுக்கு ஐந்து கோடி சோனியாஜியிடம் இருந்து வாங்கித் தரேன் ராஜூ!!!
நாம் கணக்கு மன்னர் பூவன் தான் இதுபோன்ற ஜூஜிபி கணக்குகளை போட சரியான ஆள் பாஸ்
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
அவருக்கு கணக்கு பண்ணத்தான் தெரியும்ராஜு சரவணன் wrote:நாம் கணக்கு மன்னர் பூவன் தான் இதுபோன்ற ஜூஜிபி கணக்குகளை போட சரியான ஆள் பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:இனிமே இந்த மாதிரி கணக்கு போடாம இருந்த உங்களுக்கு ஐந்து கோடி சோனியாஜியிடம் இருந்து வாங்கித் தரேன் ராஜூ!!!
நாம் கணக்கு மன்னர் பூவன் தான் இதுபோன்ற ஜூஜிபி கணக்குகளை போட சரியான ஆள் பாஸ்
கணக்குல நான் வீக்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
யினியவன் wrote:அவருக்கு கணக்கு பண்ணத்தான் தெரியும்ராஜு சரவணன் wrote:நாம் கணக்கு மன்னர் பூவன் தான் இதுபோன்ற ஜூஜிபி கணக்குகளை போட சரியான ஆள் பாஸ்
அப்ப அந்த ஒரு மில்லியன்?
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:இனிமே இந்த மாதிரி கணக்கு போடாம இருந்த உங்களுக்கு ஐந்து கோடி சோனியாஜியிடம் இருந்து வாங்கித் தரேன் ராஜூ!!!
நாம் கணக்கு மன்னர் பூவன் தான் இதுபோன்ற ஜூஜிபி கணக்குகளை போட சரியான ஆள் பாஸ்
கணக்குல நான் வீக்
நீங்க வீக்-ண நாங்க இயர் பாஸ்
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:இனிமே இந்த மாதிரி கணக்கு போடாம இருந்த உங்களுக்கு ஐந்து கோடி சோனியாஜியிடம் இருந்து வாங்கித் தரேன் ராஜூ!!!
நாம் கணக்கு மன்னர் பூவன் தான் இதுபோன்ற ஜூஜிபி கணக்குகளை போட சரியான ஆள் பாஸ்
கணக்குல நான் வீக்
நீங்க வீக்-ண நாங்க இயர் பாஸ்
இருக்கிற கணக்கு பிரச்சனையே மண்டை உடையுது இதில் இது வேறயா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
பில்லியன்ல ஒரு பொண்ணு இருக்கறப்ப அவருக்கு மில்லியனா முக்கியம்?ராஜு சரவணன் wrote:அப்ப அந்த ஒரு மில்லியன்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!
யினியவன் wrote:அவருக்கு கணக்கு பண்ணத்தான் தெரியும்ராஜு சரவணன் wrote:நாம் கணக்கு மன்னர் பூவன் தான் இதுபோன்ற ஜூஜிபி கணக்குகளை போட சரியான ஆள் பாஸ்
ஆமாம் இது எந்த கணக்கு , கணக்கில் வரா கணக்கா இருக்கே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» மில்லியன் டாலர் ஹோம் பேஜ்
» மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்!
» லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர்
» தங்க முலாம் பூசப்பட்ட கார் - விலை 9 மில்லியன் US டாலர்
» மில்லியன் டாலர் ஹோம் பேஜ்
» மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்!
» லஷ்கர் தலைவரைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 10 மில்லியன் டாலர்
» தங்க முலாம் பூசப்பட்ட கார் - விலை 9 மில்லியன் US டாலர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|