ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்!

2 posters

Go down

எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்! Empty எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்!

Post by சாமி Sun Jun 23, 2013 10:53 pm

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,

ஒரு நாள் அலுவல்கள் முடிந்து வந்த அவர் இரவு 11மணிக்கு ராமபுரத் தோட்டத்தில், நாயை உடன் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் சுற்றி வந்தார் . அப்போது தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரரின் 5 வயது சிறுவனை எழுப்பி, அவனிடம்
" பள்ளிக்கூடம் போனயா ?"
" போனேன் "
" சாப்பிட்டாயா ?"
"ம்... சாப்பிட்டேன் "
"என்ன சாப்பிட்ட கண்ணா ?"

சிறுவன் தான் சாப்பிட்டதை எல்லாம் ஒப்புவிக்கிறான். சிறுவனுக்கு முத்தம் தந்துவிட்டு அவனை தூங்க சொல்கிறார் மக்கள் திலகம் .

தோட்டத்தை சுற்றி முடித்த பின் , தன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமையல் காரர் மணியை எழுப்பி,
" டேய் மணி , நீ இங்கு வேலை செய்ய வேண்டாம் . கிளம்பு "
சமையல் காரர் காரணம் எதுவும் கேட்கவில்லை . கேட்டால் அடிவிழும்.மணியும் அந்நேரத்தில் வெளியே கிளம்பிவிடுகிறார். அவருக்கு காரணம் எதுவும் புரியவில்லை . ஆனால் மணிக்கு தெரிந்திருந்தது, தலைவரின் கோபம் சற்று நிமிடத்திற்கு தான் .

தினமும் தலைவர் வெளியே கிளம்பும்போது, மணி நிற்பார் . எம்.ஜி.ஆர் முகத்தை திருப்பி கொள்வார் . இப்படியே மூன்று மாதங்கள் ஓடின

எம்.ஜி.ஆர் கண்டுகொண்ட பாடில்லை .ஆனால் சம்பளம் மட்டும் அவர் வீட்டுக்கு சென்றுவிடும் . ஒருநாள் ஆனது ஆகட்டும் என்று நேரே அவர் இடத்திற்கு சென்று தலைவர் காலில் விழுந்துவிட்டார் மணி . " அண்ணே நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்கே தெரில . என் மீது கோபம் ன்னா நாலு அடி கூட அடிச்சிருங்கண்ணே . " என்றார் .

எம்.ஜி.ஆர் புன்னகையுடன் , மணியிடம் " டேய் மணி, நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் , நான் சாப்பிடறது தான் வேலைக்காரர்களும் சாப்பிடனும் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன் , ஆனா அந்த பையனுக்கு ஏன் நான் சாப்பிட்ட மீனை வைக்கல? "

மணிக்கு ஒன்று புரியல. எப்போ தலைவர் மீன் சாப்பிட்டார் , நாம எப்போ அதை மறந்தோம் ன்னு எதுவும்நினைவில் இல்லை .இருந்தாலும் சமாளிப்பதற்கு "அண்ணே மன்னிச்சிடுங்கண்ணே . வேலை இருந்ததால அதை மட்டும் மறந்திருப்பேன் , என்ன மீண்டும் இங்க வேலை செய்ய விடுங்கண்ணே "என்று கேட்டுக்கொண்டார் .
"சரி போய் வேலையை செய் . திரும்பவும் இந்த மாதிரி தவறு இருக்க கூடாது " - தலைவர் உத்தரவிட்டுவிட்டார் . மணிக்கு ஏக சந்தோஷம்

மணி மீண்டும் வேலைக்கு சேர்ந்த விதம் இன்னும் சுவாரஸ்யம் .
மணி வெளியே அனுப்பிவிட்டு , தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆர் , "அந்த சமையல் காரர் மணியை கோபத்துல வெளிய அனுப்பிட்டேன் . அவனை தினமும் நம் தோட்டத்து கேட் அருகே நான் புறப்படும்போது நிற்க சொல்லு " என்று உத்தரவிடுகிறார்.

அதன் படி தான் மணியும் நின்றார் .தலைவர் காரில் புறப்படும்போது , மணி எம்.ஜி.ஆரை பார்த்து வணங்குவார் . உடனே தலைவர் சட்டென முகத்தை திருப்பிகொள்வார் அதான் கோபமாம் . இப்படி மூன்று மாதங்கள் தன் கோப நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் புரட்சி தலைவர் . அதன் பின் தான் மணியை வீட்டுக்கு வரச்சொல்லி வேலைக்குசேர்த்துள்ளார் தலைவர்

இது என்ன மாதிரியான சாமார்த்தியம் , மனிதநேயம் என்றேகணிக்க முடியவில்லை. இவருக்கு பொன்மனச்செம்மல்என்ற பட்டத்தை வாரியார் ஒப்புக்கு தந்துவிடவில்லை என்பதை இந்த நிகழ்விலேயே அறியலாம் .
நன்றி - தமிழால் இணைவோம்


Last edited by சாமி on Mon Jun 24, 2013 7:24 am; edited 2 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்! Empty Re: எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்!

Post by சாமி Mon Jun 24, 2013 7:11 am

லட்சுமி காந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது என்.எஸ்.கே. நாடகக் குழுவுக்கு வருமானம் வேண்டுமே என்பதற்காக தன் மனைவி நடிகை டி.ஏ.மதுரத்தை திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கக் கேட்டுக்கொண்டார் என்.எஸ்.கே. அதன்படி அவரது "பைத்தியக்காரன்' என்ற நாடகம் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

அந்தப் படத்தில் ஒரு விசேஷ அம்சம் என்ன தெரியுமா? எம்.ஜி.ஆரின் காதல் ஜோடியாக நடித்தவர் டி.ஏ.மதுரமேதான். பல படங்களில் டி.ஏ.மதுரம் நடித்திருந்தாலும் எல்லாப் படங்களிலுமே என்.எஸ்.கே.வுக்கு மட்டுமே ஜோடியாக நடித்திருக்கிறார் டி.ஏ.மதுரம். என்.எஸ்.கிருஷ்ணனைத் தவிர வேறு ஒரு நடிகருக்கு ஜோடியாக நடித்தது எம்.ஜி.ஆருடன் மட்டும்தான்!

("எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்' என்ற நூலில் கே.பி.ராமகிருஷ்ணன். எழுத்தாக்கம்: எஸ். ரஜத்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்! Empty Re: எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்!

Post by சாமி Mon Jun 24, 2013 7:19 am

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் என்.எஸ்.கே.கிட்டப்பாவுக்கும், திமுக பிரமுகர் திருப்பத்தூர் ராமமூர்த்தியின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்தில் நடக்கும் எல்லாத் திருமணத்தையும் நடத்தி வைக்கும் எம்.ஜி.ஆர்.தான் இந்தத் திருமணத்தையும் நடத்தி வைப்பதாகவும், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்துவதாகவும் பத்திரிகை அடித்து, கொடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

திருமணத்திற்கு பத்து நாட்களே இடைவெளி இருந்த சமயத்தில் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருமணத்தில் எப்படி இரண்டு தலைவர்களும் ஒரே மேடையில் கலந்து கொள்வார்கள்? என்று நினைத்த என்.எஸ்.கே. குடும்பத்தார் எம்.ஜி.ஆரிடம் போய்,""நாங்கள் இனி பத்திரிகை கொடுப்பதை நிறுத்திவிடுகிறோம்'' என்று சொல்ல, ""நீங்கள் எல்லோருக்கும் இதே பத்திரிகையைக் கொடுங்கள். நான் வருவேன். மற்றவர்களும் வருவார்கள்''என்றார்.

திருமண நாள் வந்தது. சென்னை சேத்துப்பட்டு அருகில்தான் திருமண மண்டபம். என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் சேத்துப்பட்டிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை கூட்டம் அலைமோதியது.

திருமண மேடைக்கு கருணாநிதி வந்த பத்தாவது நிமிடத்தில் எம்.ஜி.ஆர். வந்தார். எம்.ஜி.ஆர். வந்ததும் கருணாநிதி தனக்குப் பக்கத்திலிருந்த இருக்கையில்,""இங்கே உட்காருங்க!'' என்று சைகையாலே சொல்ல, எம்.ஜி.ஆரும் சிரித்துக் கொண்டே உட்கார்ந்தார். இரண்டு பேரும் சிரித்துக் கொள்கிறார்கள்; ஆனால் பேசிக் கொள்ளவில்லை.

இரண்டு பேரும் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். எந்தவித அரசியலும் பேசவில்லை.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்! Empty Re: எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்!

Post by சாமி Mon Jul 01, 2013 8:52 pm

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா ! நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்! Empty Re: எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்!

Post by அசுரன் Mon Jul 01, 2013 9:42 pm

உண்மையில் எம்ஜியார் ஒரு பொன்மனச்செம்மல் தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்! Empty Re: எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றிய துணுக்குகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் : தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் புது விளக்கம்
» முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது ஒரு பெண் புகார்
» விஜயகாந்துடன் கூட்டணி சேர கண் அசைத்து காதல் மொழி பேசுகிறார்கள்-பண்ருட்டி ராமச்சந்திரன்
» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum