ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே!

2 posters

Go down

தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே! Empty தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே!

Post by சாமி Sun Jun 23, 2013 6:53 am

அருணகிரிநாதர் அருளிய அருமைத் திருப்புகழில் "தமிழ்' பற்றிய பெருமைக்குரிய கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழில், ஒரு மலரின் வடிவம் போன்றது இயற்றமிழ்; வண்ணம் போன்றது இசைத்தமிழ்; வாசம் போன்றது நாடகத் தமிழ். மூன்று பண்புகளும் ஒன்றாய்க் கலந்து அதே சமயம் தனித்தனிச் சிறப்புடன் திகழ்கிறது திருப்புகழ்.

""இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறி'' என்று திருவண்ணாமலை திருப்புகழில் வருகிறது.

செம்மையான தமிழ்; அதாவது தூய்மையான தமிழ்.

"அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது.

மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. ""தன் தமிழின் மிகுநேய முருகேசா'' என்று சிறுவாபுரி திருப்புகழிலும் ""தண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே'' என்று பழனி திருப்புகழிலும் வருகின்றன.

தமிழ்ச் சொற்கள் அமிழ்தினும் இனியன. பொருள் வளமும் அழகு நலமும் பொலிவன. அருணைவள்ளல் நிம்பபுரம் திருப்புகழில் ""வந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதமம் அருள்வாயே'' என்று முருகனிடம் வேண்டுகிறார்.

தமிழ் மொழியை ஆய்ந்து மெய்மை காணும் வழியை, அதன் நுட்பத்தை சங்கத்தில் இருந்த புலவர்களுக்கு முருகன் விளக்கி அருளினார். "கலையுணர் புலவன்' என்றே முருகனுக்கு ஒரு பெயருண்டு.

தெரிதமிழ் - ஆய்ந்து காணும் தமிழ். ""தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே'' என்று சிதம்பரம் திருப்புகழில் வருவது காண்க.

மகிழ்சியினால் ஆர்த்துப் பாடும் இசைப்பாட்டை "தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே'' என்று அருணகிரிநாதர் பொதுத் திருப்புகழில் கூறுகிறார். காவடி தூக்கி துள்ளி ஆடும் பக்தர்கள் பாடும் நொண்டிச்சிந்து, கண்ணிகள் "தெள்ளுதமிழ்' எனப்படும்.

ஆதி சிவன் பெற்ற தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ் மொழிகளில் முற்பட்டது; முதன்மையானது ""முந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி'' என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.

தித்திக்கும் தமிழ் - இன்பத்தமிழ், இனிய தமிழ் எனப்படும். பொதியமலை முனிவனின் மனம் நனிமகிழ, அவர் புகழ, செவி குளிர இனிய தமிழை குமரன் பேசுகிறான்.

""சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே''

தமிழைப் பயில்கின்றபோது சொற்களின் பொருள்கள் நயனங்கள் முன் சுந்தரக் காட்சியாய்த் தெரிகின்றன. எனவே, சித்திரத் தமிழ் என்றருளினார்.

வளைந்தும், சுழிந்தும், நீட்டியும், சுவையுணர்வுடன், கலையுணர்வுடன் எழுத்துகள் அமைந்த தமிழ்! எழுத்தழகு, சொல்லழகு, கருத்தழகுடன் இதயம் கவரும் உதய ஒளித்தமிழ்!

""செஞ்சொல் சேர் சித்ரத்தமிழில் உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ?'' என்று குடந்தைத் திருப்புகழில் சந்தக்கவிமணி சாற்றுகிறார்.

ஞானம்பெற மிக எளிதான வழி ஒன்று உண்டு. அது நம் தாய்மொழியை மனம் படிந்து பயில்வதுதான். தெளிந்த மெய்ப்பொருள்களைக் கொண்ட தமிழ் ஞானத்தமிழ் ஆகும்.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் தமிழ் நாவாரப்பாடும் ஞானத்தமிழ். பூவாரம் (பூமாலை) வாடிவிடும்; பாவாரம் (பாமாலை) என்றும் பட்டொளி வீசி தகதக எனப் பளிச்சிடும். ""சேனக்குரு கூடலில் அன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து'' என்று சீர்காழி திருப்புகழில் வருகிறது. இவ்வாறு பலவகைத் தமிழ்களைப் பாடிப் பரவியுள்ள அருணகிரிநாதரை என்றென்றும் (குறிப்பாக இன்று) நினைவுகூர்வது சாலப்பொருந்தும்.

நன்றி- தினமனி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே! Empty Re: தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே!

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 8:07 am

நல்ல பகிர்வு சாமி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum