புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
58 Posts - 59%
heezulia
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
53 Posts - 59%
heezulia
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10World War Z - சினிமா விமர்சனம்  Poll_m10World War Z - சினிமா விமர்சனம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

World War Z - சினிமா விமர்சனம்

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 24, 2013 10:21 am

World War Z - சினிமா விமர்சனம்  World-War-z-960x540

ஹாலிவுட்டின் ‘Suspension of Disbelief’ என்ற விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே நமது தளத்தில் பார்த்திருக்கிறோம். அது என்ன என்றால், திரையில் என்ன நடக்கிறதோ அதில் நமது முழு கவனமும் பதிந்திருக்கும்படி அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எந்த லாஜிக்கும் இல்லாமல் அந்தப் படம் இருந்தாலுமே, படம் பார்க்கும் அந்த நேரத்தில் அது ஆடியன்ஸின் மண்டையில் உறைக்காமல், அவர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவேண்டும். உதாரணம்: ஜுராஸிக் பார்க். பழங்காலத்தில் டைனோஸாரின் ரத்தத்தை உறிஞ்சி, ஃபாஸிலாக மாறிய கொசுவின் ரத்தத்தில் இருந்து டைனோஸார் மறுபடி உருவாகும் என்று சொல்லி ஆடியன்ஸை நம்பவைத்த படம் அது. அதேபோல் E.T, கிங் காங், இண்டிபெண்டன்ஸ் டே, மென் இன் ப்ளாக், டெர்மினேட்டர் முதலிரண்டு படங்கள்- இப்படி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இந்தப் படங்கள் எதிலுமே லாஜிக்கலான, இயல்பு வாழ்க்கையில் நாம் பார்த்து உணர்ந்த விஷயங்கள் இருக்காது. நமக்கு முற்றிலும் அந்நியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அவை நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி, ஆடியன்ஸை நம்பவைத்து, அதனாலேயே உலகெங்கும் ஓடிய படங்கள் இவை. படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு லாஜிகல் கேள்விகள் வராது. படம் முடிந்தபின்னர் வேண்டுமானால் வரலாம்.

ஆனால் அதே ஹாலிவுட்டில், இவற்றைப் போன்றே பல படங்கள் இதே Suspension of Disbelief மேட்டரை வைத்து எடுக்கப்பட்டு பயங்கர காமெடிப் படங்களாக அமைந்தும் இருக்கின்றன. உதாரணமாக John Carter திரைப்படம்.

மக்களால் நம்ப இயலாத விஷயங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் சில சமயம் நன்றாக ஓடுவதிலும், பல சமயங்கள் அடிமட்ட ஃப்ளாப் ஆவதிலும் இருக்கும் ரகசியம் என்ன?

அதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம். திரைக்கதையில் சொல்லப்படும் விஷயங்கள் கேள்விகள் கேட்கப்படாமல் நம்பப்பட வேண்டும். இதில் எங்காவது சுவாரஸ்யம் தப்பினால் உடனடியாக பல கேள்விகள் எழுந்து, படம் காலி.

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் மீது எனக்கு நல்ல அபிப்ராயமே இருக்கவில்லை. மற்றுமொரு ஸோம்பி திரைப்படம் என்று தான் எண்ணினேன். வழக்கப்படி கடைசி நேரத்தில் ‘போய்த்தான் பார்ப்போமே’ என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தோம்.

ஆச்சரியகரமாக, இந்தப் படம் எங்களுக்குப் பிடித்ததற்கு, இந்தப் படத்தின் வேகமான திரைக்கதைதான் காரணம்.

இதற்கு முன்னர் வெளிவந்த சில படங்கள் ஸோம்பிகளால் ஏற்படும் அழிவைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இந்தப் படத்தின் அளவு பிரம்மாண்டமாக எந்தப் படத்திலும் ஸோம்பிகளைப் பார்த்ததில்லை. Walking Dead போன்ற டிவி ஸீரீஸ்களிலும் கூட, ஸோம்பிகள் இந்த அளவு வந்ததில்லை. புற்றிலிருந்து கிளம்பும் எறும்புகளைப் போல உலக மக்கள் படுவேகமாக ஸோம்பிகளாக மாறுகின்றனர். உலகத்தின் பல நாடுகள் அழிந்தேவிடுகின்றன. வழக்கமான ஸோம்பி ஃபார்முலாதான் இதிலும் இருக்கிறது என்றாலும் (ஸோம்பி ஒரு மனிதனைக் கடித்தால் அவன் ஸோம்பியாகிவிடுவான்), படம் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் கரு, படுவேகமாக பரவும் ஒரு அழிவைப் பற்றியது. பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற பல வியாதிகள் ஏற்கெனவே நமக்குப் பரிச்சயம் ஆகியிருப்பதால், இந்த ஸோம்பி வைரஸ் அவைகளை வைத்தே இப்படத்தில் உருவாக்கப்பட்டிருப்பதன் லாஜிக் புரிகிறது. ஒருவேளை தடாலென்று இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டால்? இந்தக் கேள்விதான் இந்தப் படத்தை சுவாரஸ்யப்படுத்தும் விஷயங்களில் ஒன்று என்று தோன்றுகிறது.

படத்தின் நாயகன் ஜெர்ரி (ப்ராட் பிட்) ஒரு ஐநா முன்னாள் ஊழியன். படத்தில் இந்த ஸோம்பி வைரஸிடமிருந்து தப்பிய அமெரிக்க ராணுவ ஊழியர்களின் கமாண்டர், ஜெர்ரியிடம் இந்த வைரஸின் உருவாக்கத்தை ஆராயச்சொல்லி, இதைப்பற்றி பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் மருத்துவர் ஃபாஸ்பேக்குக்கு உதவ ஜெர்ரியை நிர்ப்பந்திக்கிறார். இந்த விஷயத்தில் ஃபாஸ்பேக்குக்கு உதவாவிடில் தனது குடும்பம் அங்கிருந்து வெளியேற்றப்படும் என்பதால் ஜெர்ரி சம்மதிக்கிறான். முதலில் ஃபாஸ்பேக்குடன் ஜெர்ரி பயணிக்கும் இடம் – தென் கொரியா. அங்குதான் இந்த ஸோம்பி வைரஸின் முதல் தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன. அங்கே, இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட கிராமத்தானின் பிணமும், அவனால் கடிபட்ட மருத்துவரின் பிணமும் இருக்கின்றன. ஆனால், இந்த ஸோம்பிகள் தாக்குதலின்போது தப்பிய ஒரு படைவீரனும் அங்கு இருக்கிறான். அவனைச் சுற்றியும் ஸோம்பிக்கள் வந்தபோதும் அவன் எப்படித் தப்பினான்?

இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் நாடு, ஸோம்பிகளின் தாக்குதலை முன்கூட்டிய அறிந்துகொண்டு ஒரு பாதுகாப்புமிக்க இடத்தை ஏற்படுத்தி, அங்கே அந்நாட்டவர்களை அனுமதித்துக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி ஜெர்ரிக்குக் கிடைக்கிறது. உடனே இஸ்ரேல் செல்கிறான் (இதற்கிடையில், ஜெர்ரியுடன் தென் கொரியா வந்த டாக்டர் ஃபாஸ்பேக், கால் தடுக்கி விழுந்து தனது துப்பாக்கியால் தவறுதலாக தன்னையே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்).

இஸ்ரேல். இந்த ஸோம்பி வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் உருவானது என்று ஜெர்ரிக்குத் தெரிகிறது. இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாடின் தலைவர் வாம்ப்ரன், என்னதான் நம்பவே முடியாத தகவலாக இருந்தாலும் இஸ்ரேலில் பாதுகாப்புமிகுந்த இடம் ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் இஸ்ரேல் இந்தத் தாக்குதலிலிருந்து பிழைத்தது என்றும் சொல்கிறார். ஆனால், ஒரு சிறிய தவறின் காரணமாக இஸ்ரேலும் அழிகிறது (எப்படி என்பதை படத்தில் பார்த்துக்கொள்ளவும்).

ஜெர்ரியின் பயணத்தில் இந்த ஸோம்பி வைரஸின் தாக்குதலுக்குத் தப்பித்த சிலரையும் எதேச்சையாக சந்திக்கிறான். ஆனால் முதலில் அதை ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜெர்ரி, பின்னால் இதைப்பற்றி ஆராய முற்படுகிறான்.

இஸ்ரேலிலிருந்து தப்பிக்கும் ஜெர்ரி என்ன ஆனான்? இந்த ஸோம்பி வைரஸை அவனால் தடுக்க முடிந்ததா? படம் பார்த்துப் புரிந்துகொள்க.

டெர்மினேட்டர் 2 படத்தைப் பார்த்தவர்களுக்கு, அந்தப் படம், வரிசையான அக்‌ஷன் காட்சிகளால் உருவான படம் என்பது தெரிந்திருக்கும். அதைப்போலவே இந்தப் படத்திலும் வரிசையான, சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக வருகின்றன. இந்தக் காட்சிகளின் வேகத்தால், எந்த ஒரு காட்சியிலும் அலுப்பு தட்டுவதன்முன்பே அடுத்த காட்சி ஆரம்பித்துவிடுகிறது. இதனால் பழைய காட்சியில் எந்தக் கேள்விகளும் எழுவதில்லை.

படத்தில் கதை என்பது பெரிதாக இல்லை. ஆனால் படத்தை எடுத்த விதத்தில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டம்+ஸிஜி+வேகம் ஆகியனவே இந்தப்படம் எனக்குப் பிடித்ததன் காரணம். படத்தின் முதல் காட்சியில் இருந்தே கதை தொடங்கிவிடுகிறது. எந்த வழவழாவும் இல்லை. அதேசமயம், படத்தில் பல டெம்ப்ளேட் காட்சிகளும் இருக்கின்றன. ஆனால், என்னைப்பொறுத்தவரை படத்தில் டெம்ப்ளேட் காட்சிகள் இருந்தாலும், திரைக்கதை வேகமாக இருந்தால், அக்காட்சிகளை மன்னிக்கலாம்.

வேர்ல்ட் வார் ஸீ – படத்தில் எதையும் எதிர்பார்க்காமல் சென்றால் படம் உங்களைக் கவரலாம். ஒருவேளை படம் பார்த்தபின் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் – well, better luck next time

--
கருந்தேள்

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 24, 2013 10:24 am

இந்த விமர்சனத்தை நான் பதிந்ததில் அர்த்தம் இருக்கிறது .... டிரைலரை பார்த்து விட்டு அடித்து பிடித்து என் மகனை அழைத்து கொண்டு ஓடினால் அவன் தூங்கியது தான் மிச்சம்... சோகம்அந்த அளவுக்கு படம் ஆவ்வ் .... விறுவிறுப்பு என்று சொன்னாலும் .. ரெஸிடெண்ட் ஈவில் , வாக்கிங் டெட் அனைத்தையும் சேர்த்து பார்தது போல் ஒரு பிரமை ... உங்கள் கருத்துகளை எதிர் பார்க்கிறேன் ...

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 24, 2013 10:29 am

இதில் முதன் முதல் ஜோம்பி இந்தியாவில் இருந்து தான் பரவுகிறது என்றும் , இந்தியா ராணுவம் ஒரு கையாலாகாதா ராணுவம் என்றும் பேசும் வசனம் வருகிறது ... என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 10:49 am

புரட்சி wrote:ரெஸிடெண்ட் ஈவில் , வாக்கிங் டெட் அனைத்தையும் சேர்த்து பார்தது  போல் ஒரு பிரமை
இப்படி சொன்ன பிறகும் படம் பார்க்க போயிடுவோமா என்ன புன்னகை , ஏற்கனவே இந்த ரெஸிடெண்ட் evil படத்தை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும்போது நாங்க அடிச்ச கூத்துல தியேட்டரே காமடி படம் பார்க்கிற எஃபக்ட் ஆயிடுச்சு சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக