புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
39 Posts - 72%
heezulia
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
375 Posts - 78%
heezulia
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
8 Posts - 2%
prajai
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_m10உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 22, 2013 9:46 am

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில், பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு சார்பில், 207 பேர் தான் இறந்துள்ளனர் என, கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள், பலி எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டும் என, தெரிவிக்கிறது; 60 ஆயிரம் பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது.

40 ஹெலிகாப்டர்கள்:

பேய் மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, கடும் குளிர் போன்றவற்றால், உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் மற்றும் பல பகுதிகளில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை, 22 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், நேற்று முதல், 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ராணுவத்தின், 8,000 வீரர்கள், இந்தோ - திபெத் எல்லை போலீசின், 2,000 வீரர்கள், எல்லை சாலைகள் அமைப்பின், 3,000 பணியாளர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், சில இடங்களில், தற்காலிக இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மீட்கப்படுகின்றனர். ஓட்டல்கள், தங்குமிடங்கள் தகர்ந்து விட்டதால், காடுகளிலும், உயர்ந்த இடங்களிலும் தஞ்சம் அடைந்தவர்கள், ஹெலிகாப்டரில், நூல் ஏணி மூலம் மீட்கப்படுகின்றனர்.

33 ஆயிரம் பேர் மீட்பு:

கேதார்நாத்தில் மீட்புப் பணி துவங்கி, மூன்று நாட்கள் ஆன நிலையில், நேற்று தான், அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மதிய நிலவரப்படி, கேதார்நாத், ஹரித்துவார் பகுதிகளில், 33 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும், 60 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரித்துவாரில் நேற்று, 40 உடல்கள் கண்டெடுக்கப் பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை, 207 என, அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான உத்தரகண்ட் மாநில அரசின், விவசாய அமைச்சர், ராகேஷ் சர்மா, ""கேதார்நாத் பகுதியில் இரண்டு நாட்களாக தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன்; பலி எண்ணிக்கை, அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என, கருதுகிறேன். இரண்டு நாள் மழையில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய, குறைந்தபட்சம், ஐந்தாண்டு களாகவது ஆகும்,'' என்றார். கேதார்நாத் சிவன் கோவிலில் வழிபடச் சென்றிருந்த பக்தர்கள் தான், அதிக அளவில் இறந்துள்ளனர். கோவில் வாசலில், நேற்று காலை, சடலக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுருட்டிய பந்து போல, நான்கைந்து பேர் இறந்து கிடந்ததை, பத்திரிகையாளர்கள் பார்த்தனர். தரை மட்டத்திலிருந்து, 15 அடி உயரத்திலிருந்த கோவில், இப்போது, சமதளமாகியுள்ளது. சுற்றிலும் ஆள் உயர பாறைகளும், கற்குவியல்களும், அந்த புனிதமான இடத்தை, கல்குவாரி போல் மாற்றியுள்ளன.

தகவல் தொடர்பு இல்லை:

கேதார்நாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்னமும் நிலைமை மோசமாகவே உள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு அறவே இல்லை. ஹெலிகாப்டர்கள் மட்டும் தான், ஒரே வாகன போக்குவரத்தாக மாறிப் போயுள்ளன. இன்று முதல், பத்ரிநாத் பகுதியில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி, பத்ரிநாத் பகுதியில், 9,000 பேர் சிக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சலிலும் பாதிப்பு:

அது போல், உத்தரகண்டின் அண்டை மாநிலமான, பனி சூழ்ந்த, இமாச்சலிலும் மழை, நிலச்சரிவு பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு பக்தர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மாறாக, உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை, 600 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும், சில ஆயிரம் பேர், நான்கைந்து நாட்களாக நடுங்கும் குளிரில், உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்து, வெறும் அனுதாபம் மட்டுமே தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை விட, ராணுவ வீரர்கள் தான் உண்மையான, "ஹீரோ'க்கள் என, மீட்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். ஏனெனில், மாநில நிர்வாகமே அணுக முடியாத சூழ்நிலையில், தங்கள் உயிரையும் துச்சமாக கருதி, பொதுமக்களை மீட்கும், ராணுவ வீரர்களின் பணி மெச்சத் தகுந்தது என, அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

சம்பளத்தை பிடிக்கிறார் சோனியா:

காங்கிரஸ் தலைவர் சோனியா, தன் கட்சி, எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை, உத்தரகண்ட் நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். மேலும், கட்சியின் ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்கள், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தலா, 10 லட்சம் ரூபாயை உத்தரகண்ட் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான, சில நிமிடங்களிலேயே, பார்லிமென்ட் விவகாரத் துறை இணையமைச்சர், ராஜிவ் சுக்லா, இரண்டு மாத சம்பள பணத்தை வழங்குவதாக அறிவித்து, கட்சி மேலிடம் மீதான விசுவாசத்தைக் காட்டினார். "ஐ.பி.எல்., கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த அவர், இரண்டு மாதமென்ன, இரண்டு ஆண்டு சம்பள தொகையையும் நன்கொடையாக கொடுக்கலாம்' என, டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர் கிண்டலாக கூறினார்.

உ.பி.,யில் நிலைமை மோசம்:

உத்தர பிரதேசத்திலும், மழையின் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கங்கை, ஷாரதா நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. கடந்த நான்கு நாட்களாக, அபாய மட்டத்தில் யமுனை நதியில் வெள்ளம் பாய்வதால், கைரானா மாவட்டத்தில் உள்ள முக்கிய பாலத்தில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், உ.பி., - அரியானா சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யின், 13 மாவட்டங்கள், வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின், "சிக்கன' முதல்வர், அகிலேஷ், 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். இது, "பெருங்கடலில் பெருங்காயம் கரைத்தது போலத் தான்' என, பாதிக்கப்பட்ட மக்கள் கிண்டல் செய்கின்றனர்.

முதல்வர்கள் தாராளம்:

உத்தரகண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள, கங்கை நதி பாயும் மாநிலங்களில், இந்துக்களின் புனித தலங்கள் பல அமைந்துள்ளதால், அந்த இடங்களுக்கு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சென்றுள்ளனர். மழை மற்றும் வெள்ளத்தால், அனைத்து மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும், பல மாநில முதல்வர்கள் முன்வந்துள்ளனர். வட மாநிலங்களின் முதல்வர்கள் பலர், 1 கோடி ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரை நிவாரண நிதி வழங்கியுள்ளனர். அந்தப் பட்டியலில் நேற்று, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லாவும் சேர்ந்தார்.

அரசியல் செய்கிறார் அசோக்:

காங்கிரஸ் ஆளும், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத்திற்கு, இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், உத்தரகண்ட் சென்று, பாதிக்கப்பட்டுள்ள, அம்மாநில மக்களை மீட்க, முதல்வர் அசோக் கெலாட் நேற்று அங்கு சென்றார். நெருக்கமான அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களின் உதவியாளர்களுடன், முதல்வர் அசோக் கெலாட் உத்தரகண்ட் சென்றுள் ளார். "இதெல்லாம் அரசியல் ஸ்டன்ட்' என, பலரும் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே அங்கு நிலைமை மோசமாக உள்ள நிலையில், இத்தகைய பயணம் தேவையில்லாதது என, கூறினர்.

அடிதடி சண்டை:

தண்ணீரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து போடப்படும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்து கொள்வதில், பல இடங்களில் அடிதடி மோதல் ஏற்பட்டது. பொருட்கள் கிடைக்காத பலர், அரசு அதிகாரிகளையும், ராணுவத்தினரையும் குற்றம்சாட்டினர். ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகி, பரிதவித்து வரும் பயணிகளிடம், சில இடங்களில் கொள்ளையும், கொள்ளை முயற்சியும் நடந்ததாக கூறப்படுகிறது.

பெண்கள் பலாத்காரம்:

உத்தரகண்ட்டில், சிக்கித் தவிக்கும் பெண்களிடமிருந்து, நேபாளத்தை சேர்ந்த கொள்ளையர்கள், நகைகளை பறித்து சென்றுள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சிலர், வனப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர். இரு தினங்களுக்கும் மேலாக உணவின்றி தவித்தவர்கள், சோர்வடைந்திருந்தனர். அப்போது, மலைப்பகுதியில், பதுங்கியிருந்த மர்ம கும்பல், ஆயுதங்களுடன் அங்கு வந்து, பெண்களை மிரட்டி, அவர்களின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களில் சிலர், பெண்களை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளனர்.

சிறப்பு அதிகாரி நியமனம்:

உத்தரகண்ட்டில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து செல்ல, மத்திய அரசின் சிறப்பு அதிகாரியாக, உள்துறை முன்னாள் செயலர், வி.கே.துகால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டருக்கு மாரடைப்பு:

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாகை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் டவுடியால், கேதார்நாத், ருத்ரபிரயாகை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்யச் சென்றார். அங்குள்ள நிலைமையை நேரில் கண்ட அவருக்கு, அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக பக்தர்கள் பலி:

புனித யாத்திரையாக, ஹரித்துவார் சென்ற விழுப்புரத்தைச் சேர்ந்த, 37 பேர், மழை வெள்ளத்தில் சிக்கினர். இவர் களில், 2 பேர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

தினமலர்



உத்தரகண்டில் சிக்கி தவிக்கும் 60 ஆயிரம் பேர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 22, 2013 10:20 am

பேரிடர் மேலாண்மை என்ற குப்பை அமைப்பை வைத்து கொண்டு அதிக மக்களை பலி குடுத்து விட்டது இந்த காங்கிரஸ் அரசு ...சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக