Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்சி அரசியலை வேரறுப்போம் !
2 posters
Page 1 of 1
கட்சி அரசியலை வேரறுப்போம் !
சிதறி கிடந்த மக்களை ஒன்றுபடுத்த அன்று கட்சி ஆரம்பிக்கப்பட்டது . ஆனால் இன்று அந்த கட்சி தான் மக்களைப் பிரிக்கிறது . நமது நாடு பாரம்பரியமானது . பல்வேறு விதமான கலாச்சாரங்கள் பின்பற்றப் படுகின்றன . பல்வேறு விதமான மொழிகள் பேசப் படுகின்றன . பல்வேறு விதமான மதங்கள் பின்பற்றப் படுகின்றன . இப்படி எத்தனையோ பேதங்கள் இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் . ஆனால் நம் ஒற்றுமையை கட்சி பேதங்கள் அசைத்துப் பார்க்கிறது .
மக்கள் நலன் சார்ந்த அரசியல் அழிந்து வருகிறது . கட்சி நலன் சார்ந்த அரசியல் வளர்ந்து வருகிறது . இன்று இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களைப் பற்றியோ ,மக்கள் நலன் சார்ந்தோ சிந்திப்பதில்லை . கட்சி நலன் சார்ந்து , கட்சியை எப்படி வளர்ப்பது ? ஆட்சியை எப்படி பிடிப்பது ? பதவிகளை எப்படி கைப்பற்றுவது ? என்று தான் சிந்திக்கின்றனர் . இதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், இன்றைய அரசியல்வாதிகள் . ஒரு சிலர் மட்டுமே மக்கள் நலன் சார்ந்தும் , ஒட்டு மொத்த முன்னேற்றம் சார்ந்தும் சிந்திகின்றனர் , செயல்படுத்துகின்றனர் .
மக்கள் தொடர்ந்து ஏமாற்றப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் . அரசாட்சி முடிவு பெற்றதாக சொல்லிக்கொண்டாலும் இன்றும் அரசாட்சி, நம் ஜனநாயகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது . அடுத்த கட்ட தலைவர்களும் இளவரசர்கள் போலே உலவுகின்றனர் கட்சியை வளர்க்கும் பணியில் மத்தியிலிருந்து மாவட்டம் வரை . கட்சியை வளர்த்தால் தான் எல்லா இடங்களிலும் ஆட்சியை பிடிக்க முடியுமாம் . ஆட்சியைப் பிடித்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமாம் . நன்றாக கதை அளக்கிறார்கள் . நல்லதை இப்போதே செய்ய ஆரம்பித்தால் கட்சி தானாக வளருமே . என்ன கொடுமை இது ?
வியாபார உலகில் இன்று எல்லாம் வியாபாரம் தான் . இதற்கு அரசியலும் விதிவிலக்கல்ல . ஆனால் இது நாட்டுக்கு அழிவைத் தரக்கூடியது . கல்வியும் , அரசியலும் வியாபாரமாவதைத் தடுக்கா விட்டால் நாம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் . பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன . கல்வியையும் , அரசியலையும் விட்டுவிடுங்கள் அவை பிழைத்துக்கொள்ளட்டும் . அற்பணிப்பு உணர்வும் , சேவை மனப்பான்மையும் உள்ளவர்கள் மட்டுமே கல்வித் துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்க முடியும் . அரசியல் வியாபாரத்திலும் இடைத் தரகர்கள் உருவாகி விட்டது மானக்கேடான விசயம் . இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது அவசியம் .
மனசாட்சியே இல்லாத மனிதர்களாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர் . மக்களின் வரிப் பணத்தில் தான் வாழ்கிறோம் என்பதையே மறந்து விட்டனர் . கட்சித் தலைவர் என்னவோ தன் சொந்த பணத்தில் ஆட்சி நடத்துவது போலவும் இவர்கள் அவர் வழி நடப்பது போலவும் நடந்து கொள்கின்றனர் . மக்களின் வரிப்பணத்தில் தொட்டதுக்கெல்லாம் வெட்கமே இல்லாமல் விளம்பரத்தட்டிகள் (பேனர்கள் ) வைக்கின்றனர் . சம்பந்தமே இல்லாமல் ரெண்டு மைல் தூரத்திற்கு கொடிக்கம்பங்கள் , ஒளிவிளக்குகள் அமைக்கின்றனர் . ஏற்கனவே இருப்பவர்கள் தான் இப்படி என்றால் , புதிதாக வருபவர்களும் பேனர்கள் வைப்பதிலும் , தோரணம் கட்டுவதிலும் தான் ஆர்வம் காட்டுகின்றனர் . அதிக பேனர்கள் வைத்ததை பெருமையாக மேடையில் பேசுகின்றனர் . இவர்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்று எப்படி நம்புவது ?
தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான் சாதாரண மனிதன் . இன்று முன்னேற வேண்டுமானால் நீங்கள் அதிக பேரை ஏமாற்ற வேண்டும் . யார் அதிக பேரை ஏமாற்றுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் . இங்கே நீங்கள் நீதி , நேர்மை பார்க்கக் கூடாது , பார்த்தால் தோற்று விடுவீர்கள் . நம்மை , நம் இளிச்சவாய்தனத்தை எல்லோரும் நன்கு பயன்படுத்துகின்றனர் . நமக்கு எந்த விதத்திலும் பயன் தராத எத்தனையோ பொருட்களை தினமும் பயன்படுத்துகிறோம் .ஏன் என்று கேட்டால் , உலகமயமாதல் , நாம் வளரும் நாடு ,இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பதில் வருகிறது .
உலகத்தின் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக இந்தியா மாறிவிட்டது . இந்தியாவில் மட்டும் 1,38,73,854 சில்லரை வர்த்தக அங்காடிகள் உள்ளன 2009 ஆம் ஆண்டு கணக்குப்படி . இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் உள்ள சில்லரை அங்காடிகளின் எண்ணிக்கை 48,17,367 . வித்தியாசம் இரண்டு மடங்குக்குமேல் ( G.K.Today February 2011) . இவ்வளவுக்கும் இந்தியா ஒரு விவசாய நாடு . 80% மக்கள் விவசாயத்தையும் , விவசாயம் சார்ந்த தொழில்களையும் நம்பி வாழ்கின்றனர் . விவசாயம் சார்ந்த பெரிய திட்டங்கள் இதுவரை செயல்படுத்தவே இல்லை . விவசாயம் தீண்டத்தகாத தொழில் போல் ஆகிவிட்டது . விளைநிலங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விற்கப்படுகின்றன . விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை . உரங்கள் மண் வளத்தைப் பாழ்படுத்தி விட்டன . தொழிற்சாலைக் கழிவுகள் நீர் ஆதாரங்கள் அனைத்தையும் பாதிக்கின்றன . இன்னும் கொஞ்சம் நாட்களில் சோறு கிடைக்காமல் அலையப்போகிறோம் . அப்போதும் எதுவும் பேசாமல் மாத்திரை வடிவில் கிடைக்கப்போகும் உணவை உண்டு மருத்துவமனைகளில் வாழப்போகிறோம் .
பெரும் வணிக நிறுவனங்களின் பிடியில் அரசியலும் , அரசியல்வாதிகளும் உள்ளனர் . தேர்தலுக்கு செலவளிக்கப்படும் பணத்தின் பெரும் பகுதி இந்த வணிக நிறுவனங்களுடையது . இதற்காக அரசு இயந்திரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் விருப்பம் போல் சுழலும் . வளைந்து கொடுக்கும் . அப்பாவி மக்களைப் அடித்து விரட்டும் . அரசு மானியத்தில் , 24 மணி நேர மின்சார , தண்ணீர் வசதியுடன் , ஊரெங்கும் தொழிற்சாலைகள் அமையும் . தொழிற்சாலைக் கழிவுகள் பக்கத்தில் இருக்கும் அந்தப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ஆறு அல்லது குளத்தில் கலக்கும் . இதை யாரும் கேட்க மாட்டார்கள் . அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்து வேண்டுமென்றே அதிக விலை நிர்ணயிப்பார்கள் . உள்நாட்டில் விலை போகாது . ஏற்றுமதி செய்யப்படும் . இவர்களுக்கும் நம்மை அடிமையாக வைத்திருந்த ஆங்கிலேயர்க்கும் பெரிய வித்தியாசமில்லை . தொழிற்சங்கம் என்பதே இல்லாமல் செய்து விட்டனர் . யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத் தூக்கலாம் . யாராலும் கேள்வி கேட்க முடியாது . இது தான் இன்றைய நிலை .
நாட்டில் இப்படி எத்தனையோ மக்களைப் பாதிக்கும் விசயங்கள் இருந்தாலும் இங்கு இருக்கும் கோடானகோடி கட்சிகள் கண்டுகொள்வதில்லை . ஆட்சியை பிடிக்கவே போராடுகின்றனர் . மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை தங்கள் ஓட்டு வங்கியாக மாற்றவே முயல்கின்றனர் . இதற்கு ஜாதி , மதம் , சமூகம் என்று பல்வேறு ஆயுதங்களை பயன் படுத்துகின்றனர் . ஜாதி சார்ந்த அரசியல் மீண்டும் தலைதூக்குகிறது . இதை இப்போதே தடுக்க வேண்டும் . ஜாதிப்பேரைச் சொல்லி ஓட்டு கேட்கும் யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள் . அப்படிப் போட்டாலும் உங்களுக்கு எந்த நன்மையையும் இல்லை . இதை எல்லாம் விட பெரிய பேதம் கட்சி சார்ந்த பேதம் .
அன்று கட்சித் தலைவர்களை முன்மாதிரியாக கொண்டு கட்சியில் இணைந்தார்கள் . தனது தலைவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற பிம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள் , வருகிறார்கள் . தனது தலைவரையும் , கட்சியையும் உயிரினும் மேலாக மதித்தான் , இதற்காக மற்றவர்களிடம் சண்டையும் போட்டான் , சாதாரண தொண்டன் . பணம் இறங்கி விளையாட ஆரம்பித்த பிறகு உண்மைத் தொண்டனுக்கு எந்த மதிப்பும் இல்லை . ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் தான் சார்ந்த கட்சியின் தவறான செயல்பாடுகளுக்குக் கூட எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை . இது தான் நம் ஜனநாயகத்தின் பிகப்பெரிய வியாதி .
தப்பு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . " நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே " வழி வந்தவர்கள் தானே நாம் . தப்பு செய்தவர் தலைவராக இருந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் , ஆனால் ஓட்டு மட்டும் எனக்குப் போடுங்கள் , என்று சொல்பவர்களை என்ன செய்வது . நல்ல மக்கள் தலைவராக இருந்தால் ,"யார் கொடுக்கும் பணத்தையும் வாங்காதீர்கள் , உழைத்து சேர்ப்பதுவே நிலைக்காத இந்தக் காலத்தில் உங்களையும் , உங்கள் தன்மானத்தையும் விற்று அந்தப் பணத்தை வாங்காதீர்கள் " என்று தானே சொல்ல வேண்டும் . ஆதலால் , மக்களே , மக்களுக்கு மக்களே ஏமாந்து விடாதீர்கள் .
"ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் " என்ன கொடுமை இது . ஏழைகளையும் , அவர்களின் படிப்பறிவின்மையயும் தங்களது ஓட்டு வாங்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர் . ஆட்சியாளர்கள் நினைத்தால் ஏழைகளே இல்லாமல் செய்ய முடியும் . எல்லோருக்கும் முழுமையான படிப்பறிவைக் கொடுக்க முடியும் . ஆனால் ,செய்ய மாட்டார்கள் . அப்படிச் செய்தால் இவர்கள் ஏமாற்றுவதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் .
யார் ஆட்சிக்கு வந்தாலும் கட்சியின் பேரைச்சொல்லி, கட்சியில் உள்ள முக்கியப்புள்ளிகளின் பேரைப் பயன்படுத்தி வார்டு முதல் வட்டம் , மாவட்டம் , மாநகராட்சி வரை ஏகப்பட்ட அடாவடிகளும் , அட்டூழியங்களும் தினமும் நடந்தேறுகின்றன . நிலத்தை மிரட்டி எழுதி வாங்குவது , கட்டப்பஞ்சாயத்து செய்வது , வணிக நிறுவனங்களை மிரட்டுவது என்று இவர்கள் குட்டி மன்னர்கள் போல்தான் செயல் படுகின்றனர் . இதில் வாரிசு அரசியல் வேறு , தலைவர் முதல் , வார்டு உறுப்பினர் வரை . " ஊருக்கு ஒரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை , அவனவனுக்கு ஒரு டசன் பட்டினி பட்டாளம் " என்று எம் .ஆர் .ராதா சொன்னது போலத் தான் இன்று வரை நம் நிலை உள்ளது .
இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு . கட்சியை வைத்து உருவாக்கப்படும் பிரிவினைகளை தடுத்து நிறுத்த வேண்டும் . கட்சி நலன் சார்ந்த அரசியலை வளர விடக்கூடாது . மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்க வேண்டும் . ஆள்வது யாராக இருந்தாலும் , தப்பு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் . தண்டனை, நாம் கொடுக்காவிட்டாலும் காலம் கொடுக்கும் . நல்லது யார் செய்தாலும் ஆதரிக்க வேண்டும் இதில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என்ற பேதம் இருக்கக் கூடாது . மக்கள் நலன் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒன்று பட்டால்தான் உண்மையான மக்கள் ஆட்சியை மலரச் செய்ய முடியும் . மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் தூக்கி எறியுங்கள் . இந்த தேர்தலில் முடியா விட்டாலும் அடுத்த தேர்தலுக்குள் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க முடியும் .
கட்சியினால் உருவாக்கப்படும் பேதங்களை வேரறுப்போம் !
மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவோம் !

Re: கட்சி அரசியலை வேரறுப்போம் !
நல்ல விழிப்புணர்வு கட்டுரை நண்பரே ..ஆனால் மக்கள் இதிலெல்லாம் தங்களை ஈடுபடுதி கொள்வதில்லை
Guest- Guest
Similar topics
» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
» ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்
» கொள்கையே இல்லாத கட்சி காங்கிரசு கட்சி - சீமான்
» ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !
» அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum