ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

+7
Muthumohamed
balakarthik
ஜாஹீதாபானு
ராஜா
முத்துராஜ்
யினியவன்
மதுமிதா
11 posters

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by மதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 6:26 pm; edited 2 times in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty உன் பேர் சொல்ல ஆசைதான்

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:25 pm

பாடல் 54

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

உன் பெர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

கண்ணில் கடைகண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல காரணம் காதல் தானே

ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே...

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே

நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் ஒளியும் நானே ஆகிறேன்

வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே

காலம் கறைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே...

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்

உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

ஆசைதான் உன் மேல் ஆசைதான்

ஆசைதான் உன் மேல் ஆசைதான்

**************************************
படம் : மின்சார கண்ணா (1999)
இசை : தேவா
பாடியவர் :  ஹரிஹரன், சுஜாதா
பாடல் வரி : நா.முத்துகுமார்
***************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:33 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty என்ன இது என்ன இது என்னை கொல்வது

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:28 pm

பாடல் 55

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ

காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ

எதுவுமே... எதுவுமே... எதுவுமே...
எதுவுமே... நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்

இதுவரை... விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர் கதை

வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்

ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது
என்ன இது என்ன இது என்னை கொல்வது

என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான்

கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

இனி வரும்.....................................................
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்

உனக்கு நான்.... பிறந்தவள்
மனமென்னும் கதவை தான் திறந்தவள்

காதல் பிறந்தால் காவல் கடக்கும்

போட்டு வைத்த கோட்டுக்குள்ளே
காதல் என்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ
****************************************
படம் : நள தமயந்தி (2003)
இசை : ரமேஷ் வினாயகம்
பாடியவர் :  சின்மயி, ரமேஷ் வினாயகம்
பாடல் வரி : நா.முத்துகுமார்
*****************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:33 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty முன் பனியா முதல் மழையா

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:30 pm

பாடல் 56

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனச தெறந்து சொல்லடி வெளியே
கரைய கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனச தெறந்து சொல்லடி வெளியே
என் இதயத்தை என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்
உன் விழியினில் உன் விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து விட்டேன்
இது வரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே

சலங்க குலுங்க மோதும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு
நிலவ புடிச்சிக்க நெனப்பது எதுக்கு

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழி பார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே

******************************************
படம் :நந்தா (2001)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : பழனி பாரதி
பாடியவர் :S.P.பால சுப்பிரமணியம், மால்குடி சுபா
******************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:34 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:31 pm

பாடல் 57

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கண்கள் அறியா காற்றைப் போலே
கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்
பூவே உந்தன் முகவரியென்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பெளர்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கூந்தல் காட்டில் வழி தெரியாமல்
மாட்டிகொண்டேன் என் வழியென்ன
உன்னை இங்கே தேடித்தேடி
தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

**************************************************
படம் : நினைத்தேன் வந்தாய் (1998)
இசை : தேவா
பாடலாசிரியர் : பழனிபாரதி
பாடியவர் : ஹரிஹரன்
**************************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:35 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty மனம் விரும்புதே உன்னை

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:36 pm

பாடல் 58

மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே

மனம் விரும்புதே உன்னை... உன்னை

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே

என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!

நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

மனம் விரும்புதே உன்னை... உன்னை

********************************************
படம் : நேருக்கு நேர் (1997)
இசை : தேவா
பாடியவர் : ஹரிணி
பாடல் வரி : வைரமுத்து
*********************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:36 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:42 pm

பாடல் 59

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ...ஓ... கஜுராஹோ...

என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே

பூவின்னுள் பனி துளி துருது துருது துருதே
பனியோடு தேந்துளி உருது உருது உருதே

காமனின் வழிபாடு உடலினை கொண்டாடு
தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

கஜுராஹோ...ஓ... கஜுராஹோ

நீராக உன் உடல் நெளியுது வலையுது முழ்கவா
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா

மேலாடை நீயேன மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதினில் மோகன ராடினம் ஆடவா

பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு

எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்

****************************************
படம் : ஒரு நாள் ஒரு கனவு (2005)
இசை : இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : பழனிபாரதி
****************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:37 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty பூவே பூவே பெண் பூவே

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:47 pm

பாடல் 60

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே
உன் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே.....

காதலின் வயது அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி

ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூடகோடி வருஷமாகும்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே.....

பூமியை தழுவும் வேர்களை போலே
உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்

ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பூவே பூவே பெண் பூவே

**********************************************
படம் : ஒன்ஸ்மோர் (1997)
இசை : தேவா
பாடியவர் : K.S.சித்ரா, S.N.சுரேந்தர்
பாடல் வரி : வைரமுத்து
*********************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:37 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

Post by மதுமிதா Tue Jul 02, 2013 2:52 pm

பாடல் 61

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் பிதுக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே மீன் நழுவதில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாயிறு
நீ ஒரு முள்ளேன்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிறு

நீ வீரமான கள்ளன் உள்ளுரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை
காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

******************************************************
படம் : அமர்க்களம் (1999)
இசை : பரத்வாஜ்
பாடியவர் : K.S. சித்ரா
பாடல் வரி :  வைரமுத்து
******************************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:38 pm; edited 2 times in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

Post by மதுமிதா Wed Jul 17, 2013 5:51 pm

பாடல்:62

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண்கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே ஏன்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி
தேவதை வாழ்வது வீடுல்லை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண்முடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே

எங்கள் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லகினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ

********************************************
படம் :யாரடி நீ மோகினி (2008)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :ஹரிஹரன்
பாடல் வரி: நா.முத்துகுமார்
*******************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:39 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்

Post by மதுமிதா Wed Jul 17, 2013 5:54 pm

பாடல் 63

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ...

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....

ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா

நன்மையென்றும் தீமையென்றும்
நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே

துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.

********************************************
படம் : யூத் (2002)
இசை : மணி சர்மா
பாடியவர் :  S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து
******************************************

Last edited by MADHUMITHA on Wed Jul 17, 2013 7:39 pm; edited 1 time in total

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 U

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 9 Empty Re: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum