ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

4 posters

Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by சதாசிவம் Mon Jun 17, 2013 10:39 am

இந்தியர்கள் திறமையானவர்கள், கடும் உழைப்பாளிகளாக இருந்தாலும், வளர்ந்து வரும் பிற உலக நாடுகளை விட நிர்வாகத் திறமையிலும், புதிய நிர்வாகக் கொள்கைகளைஏற்பதிலும்,துறை சார்ந்த அறிவு வளர்ச்சியிலும் சற்று பின் தங்கியுள்ளனர். முப்பது கோடி இந்திய மக்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர 3000 ஆங்கிலேயர்கள் போதுமானதாக இருந்தது.சங்க காலத்தில்  பல திறமைகள் பெற்றிருந்தாலும், இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல எம்‌என்‌சி நிறுவனங்கள் அவர்களின்தாய் நிறுவனங்களின் கட்டுக்குள் தான் இயங்குகிறது. அதாவது சொல்வதைச் செய்யும் கிளிப் பிள்ளைகளாகத் தான் நம்மை அவர்கள் பார்க்கும் சூழல் நிலவுகிறது. இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளும் வெளிநாட்டுத் தொடர்புடன் இயங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பலர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்கின்றனர்.

ஆகையால் நாம் திறமைகளை வளர்ப்பது அவசியமாகிறது. வெளிநாட்டு தொடர்பில்/ நிறுவனங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய (அல்லது மறந்து போன) திறமைகள் என்ன என்ன என்று விவாதிப்பதே இத்திரியின் நோக்கம்..
இங்கு பலர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அடுத்த இந்திய தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை 
யோசிக்கவே இத்திரி. இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன் .  

வேலை மட்டுமல்ல குழந்தை வளர்ப்பு, கல்வி என்ற பிற விஷயங்களையும் விவாதிக்கலாம்.

Last edited by சதாசிவம் on Mon Jun 17, 2013 3:07 pm; edited 1 time in total

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by ராஜு சரவணன் Mon Jun 17, 2013 11:57 am

என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் சொல்லும் பாணியில்(செய்முறை,வடிவமைப்பு) அவனது வேலைகளை செய்து கொடுக்கும் அடிமைகள் தான் நாம். அவர்கள் பயன்படுத்தும் பாணியை விட புதியதொரு பாணியை உருவாக்கி அவர்களுக்கு சவால்விடும் திறமை நமக்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.

2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.

3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by பார்த்திபன் Mon Jun 17, 2013 12:57 pm

வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை முதலில் நாம் உணரவேண்டும். (நல்லவை எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வதில் தவறில்லையே) பலர் இந்த அடிப்படையையே ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப் பல விடயங்கள் கற்றுக்கொள்ளவேண்டி இருந்தாலும், அடிப்படையான சிலவற்றை முதலில் விவாதிக்கத் தொடங்கலாம்.

1) நேர மேலாண்மை - வெளிநாடுகளில் சென்று பணியாற்றிய அல்லது பணியாற்றிக்கொண்டிருக்கும் அல்லது அவர்கள் மூலம் கேள்விப்பட்ட அனைவருக்கும் தெரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் நேரம் தவறாமையை எப்படித் தங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக கருதுகிறார்கள் என்று. ஒன்பது மணிக்கு அலுவலகம் வரவேண்டுமென்றால் மிகச்சரியாக வந்து நிற்பார்கள். அலுவலகத்திற்கு என்று மட்டும் இல்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களூடான சந்திப்பானாலும் சரி, சொன்ன நேரத்தில் சரியாக வந்து சேர்வார்கள். நம் நாட்டினர் இவ்விடயத்தில் எப்படி என்று அனைவருக்கும் தெரியும்.

2) போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்தல் - வெளிநாடுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாவதும், போக்குவரத்து நெரிசல் எளிதில் சமாளிக்கப்படுவதும், எவ்வாறு சாத்தியப்படுகிரதென்றால், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் அவர்கள் காட்டும் அக்கறைதான் அடிப்படைக் காரணம். மேற்கூறிய நேர மேலாண்மைக்கு அவர்களுக்குக் கை கொடுப்பது இந்த விடயமும் தான்.

3) திட்டமிட்ட கடின உழைப்பு - கடின உழைப்பிற்கும் திட்டமிட்ட கடின உழைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம்மவர்களும் கடினமாக உழைக்கத் தெரிந்தவர்கள் என்கிறபோதும், அதைத் திட்டமிடாமல் செய்வதால் அக்கடின உழைப்பின் பலன் பெரும்பாலான நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. ஜப்பானியர்களை இந்த விடயத்தில் நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by சதாசிவம் Mon Jun 17, 2013 3:18 pm

ராஜு சரவணன் wrote:என்னை பொறுத்தவரை வெள்ளைக்காரன் சொல்லும் பாணியில்(செய்முறை,வடிவமைப்பு) அவனது  வேலைகளை  செய்து கொடுக்கும் அடிமைகள் தான் நாம். அவர்கள் பயன்படுத்தும் பாணியை விட புதியதொரு பாணியை உருவாக்கி அவர்களுக்கு சவால்விடும் திறமை நமக்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

1) நம்மை பொறுத்தவரை இருப்பதை அப்படியே செய்பவர்கள்.
அவர்களை பொறுத்தவரை செய்வதை ஏன் எப்படி எதற்கு என்று சிந்தித்து செய்பவர்கள்.

2) அதே போல் அவர்களில் ஒருவர் பல புலமை பெற்றவராக இருக்கிறார்கள்.
நாம் பெற்றிருக்கும் ஒரு புலமையில் ஓராயிரம் தவறுகள் செய்கிறோம்.

3) அவர்கள் தங்கள் தாய்மொழியில் படிப்பு, சிந்தனை, செயல், புதுமை என்று அமைகிறது.
நாம் அந்நிய மொழியில் படிப்பு,செயல் மட்டுமே அமைகிறது.
தங்கள் வருகைக்கு நன்றி ராஜு.

தாய்மொழி கல்வி அவசியம், ஆயினும் முழுக்க தமிழ் வழியில் படித்தவர்கள் கூட, அவர்கள் படிப்பதை புரிந்து படிப்பதில்லை. கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். குழந்தை வளர்ப்பு 
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by சதாசிவம் Mon Jun 17, 2013 3:30 pm

பார்த்தீபன், தங்களின் பதிவுக்கும் நன்றி.

உங்கள் கருத்தை முழுவதும் ஏற்கிறேன், திறமை எங்கிருந்தாலும் ஏற்க வேண்டும்.

திறமைகளின் மூலம், அவர்களின் சமூக ஒழுங்குமுறைகளின் அடிப்படை என்ன என்று ஆராய்வது தான் நாம் செய்ய வேண்டியது.

மேலும் தொடர்வோம்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by ramubabu Mon Jun 17, 2013 5:07 pm

தாய்மொழி கல்வி அவசியம், ஆயினும் முழுக்க தமிழ் வழியில் படித்தவர்கள் கூட, அவர்கள் படிப்பதை புரிந்து படிப்பதில்லை. கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். குழந்தை வளர்ப்பு
முதலே சுயச்சார்பை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Back to top Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by சதாசிவம் Mon Jun 17, 2013 6:31 pm

ஒரு நாடு வளம் பெற சிறந்த, சுயசிந்தனை மிக்க மக்கள் அவசியம். சிறந்த மக்களை உருவாக்க சீரான அரசியல் கட்டமைப்பும், முறைகேடற்ற அதிகாரிகளும் அவசியம். பல நேரங்களில் அரசியலையும், அதிகாரத்தை மட்டும் குறை சொல்ல முயலும் நாம், இவர்கள் அனைவரும் நம்மில் இருந்து புறப்பட்டவர்களே என்பதை மறந்து விடுகிறோம். மக்களுக்கு எந்த அளவுக்கு விழிப்புணர்வு, தகவலின் உண்மையை பகுத்துணரும் திறமையும் இருக்கிறதோ அந்த அளவுக்கு ஊழல் குறைந்திருக்கும்.

நாம் தாய் மொழியில் பேசினாலும், சிந்தித்தாலும் ஒரு விஷயத்தை தமிழ்மொழியிலே எழுத, பேச முயலும் பொழுதும் நம்மால் அதை சரி வர கோர்வையாக செய்ய இயலுவதில்லை. திறமைக்குறைவுக்கு  பயிற்றுமொழி மட்டும் காரணமில்லை. அடிப்படையை புரிந்து கொள்வதிலிருந்து இது ஆரம்பம் ஆகிறது.    

ஒரு மனிதரின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது அவர் கற்கும் கல்வி, பெறும் அனுபவம், பகுத்தறியும் அறிவு ஆகிய மூன்று விஷயங்கள் தான். கல்வியும், பெற்றோரும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி முறையை உடனடியாக மாற்ற இயலாது, ஆயினும் பெற்றோரின் அணுகுமுறையை மாற்றுவது சுலபம்.  

இந்தியா மட்டுமல்ல பல ஆசிய நாடுகளும் புரிதலற்ற கல்வியை போதிக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த மேலாண்மை பல்கலைக்கழகங்கள் ஒரு சிறந்த நிர்வாகிக்கு என்ன என்ன திறமை வேண்டும் என்று நினைக்கிறதோ, அவற்றை குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாய் அமைத்திருப்பதே வளர்ந்த பிறநாடுகளின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இவ்வகை திறமைகளில் பட்டியலிட்டு அவைகளின் ஆணிவேர் என்னவென்று தேடுவது தான் நாம் செய்ய வேண்டியது. அதில் ஒரு சில

Analytic Skills
Conceptual thinking
Communication Skills
Decision Making
Job Delegation
Leadership
Planning and Organising
Problem solving
Response to situation
Strategic thinking
Time management
Social Behavior

வெற்றிக்கான இந்தக் காரணிகள் நமக்கு புதிதல்ல, திருக்குறள், மகாபாரதம், பஞ்ச தந்திரக்கதைகள், நம்நாட்டு இலக்கியங்களில் இவைகள் புதைந்துள்ளது. மறந்த இவற்றை புதுப்பித்தாலே போதும், நம் திறமை அடுத்தவரை சவால்விடும் அளவுக்கு வளர்ந்துவிடும்.

இத்திறமைகளைப் பற்றி விரிவாக விவாதிப்போம்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன  ? விவாதிக்க வாருங்கள்   Empty Re: பிறநாடுகளிலிருந்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன ? விவாதிக்க வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum