ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள்

2 posters

Go down

"கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள் Empty "கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள்

Post by சாமி Sun Jun 16, 2013 6:55 am

இருபதாம் நூற்றாண்டு தமிழர்தம் வரலாற்றில் தனியொரு இடம் பிடித்தவர் கே.பி. சுந்தராம்பாள். நடிகையாக, பாடகியாக, நாட்டுப்பற்றுடைய தியாகியாக எல்லாவற்றுக்கும் மேலாக அமர காதலுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர் கே.பி.எஸ். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒன்றுவிடாமல் தொகுத்து, அவர் பாடிய பாடல்கள், ஆடிய நாடகங்கள், நடித்த படங்கள் என்று அனைத்தையும் பட்டியலிட்டுக் "கொடுமுடி கோகிலம்' என்கிற அற்புதமான புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் ப. சோழநாடன்.

கே.பி. சுந்தராம்பாளின் நூற்றாண்டை ஒட்டி 2007-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் புத்தகத்தைப் பல முறை படித்துமிருக்கிறேன். ஆனால், இப்போதுதான் பதிவு செய்ய வேளை வாய்த்தது.

கே.பி. சுந்தராம்பாளுக்கும் எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கும் இடையே பூத்த காதல், திருமணம், பிரிவு, ஆனாலும் அவர்களிடம் நிலவிய அன்பும் நெருக்கமும் போன்ற அத்தனை அந்தரங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம். "கர்நாடக சங்கீதத்தைப் பாமரரும் ரசிக்கும் வண்ணம் செய்த மாயவித்தைக்காரர் கிட்டப்பா' என்பதற்கு உதாரணம், சிறந்த சங்கீத விற்பன்னர்களான முத்தையா பாகவதர், பிடில் கோவிந்தசாமிப் பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், காரைக்குடி சகோதரர்கள், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் கிட்டப்பா - கே.பி.எஸ். நாடகங்கள் நடந்தால் முதல் வரிசையில் ஆஜராகி விடுவார்கள் என்பதுதான்.

பிராமணரான கிட்டப்பா ஏற்கெனவே திருமணமானவர். அது தெரிந்தும், 1927-ஆம் ஆண்டு கிட்டப்பாவைத் திருமணம் செய்து கொண்ட கே.பி. சுந்தராம்பாள், ஏழே ஆண்டுகளில் விதவையானார். அப்போது அவருக்கு வயது 25. கிட்டப்பாவுக்கு வயது 28. கிட்டப்பா இறந்தது முதல், வெள்ளைச் சேலையுடுத்தி, கைம்பெண் நோன்பு நோர்க்க ஆரம்பித்துவிட்டார் கே.பி.எஸ்.

""அன்று முதல் இன்று வரை நான் பால் சாப்பிடுவதில்லை. சோடா, கலர் குடிப்பதில்லை. புஷ்டியான ஆகாரங்கள் சாப்பிடுவதில்லை. அமாவாசைதோறும் காவிரி ஸ்நானம் செய்யத் தவறுவதில்லை. இவை தவிர, நகை எதுவும் அணிவதில்லை. பிற ஆடவருடன் நடிப்பதுமில்லை'' என்று முடிவெடுத்தவர் சுந்தராம்பாள். கிட்டப்பா விட்டுச்சென்ற கடனை முழுவதும் அடைத்ததுடன், அவரது அஸ்தி கலசத்தைக் காசிக்கு எடுத்துச்சென்று கரைத்து விட்டு வந்தார்.

கிட்டப்பா சுந்தராம்பாளுக்கு விட்டுச்சென்ற சொத்து தனது நினைவும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு துளசி மாலையும்தான்.

சுதந்திரப் போராட்டத்திற்கு கே.பி. சுந்தராம்பாள் ஆற்றிய பணி அளப்பரியது. இரண்டு முறை காந்தியடிகள் தனது சுற்றுப்பயணத்தின்போது சுந்தராம்பாள் வீட்டிற்கே வந்து தங்கி இருந்திருக்கிறார் என்றால், அந்த நாளில் அவரது பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, தீரர் சத்தியமூர்த்தியைத் தனது சொந்த சகோதரனாகவே பாவித்தவர் கே.பி.எஸ். சத்தியமூர்த்தியின் மகள் இவரை "அத்தை' என்றுதான் அழைப்பார். சத்தியமூர்த்தி திருவல்லிக்கேணியில் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் என்பதையும், 18 மாத வாடகை பாக்கி என்பதையும் கேட்டுப் பதறிப்போன கே.பி.எஸ். தி.நகரிலிருந்த தனது நான்கரை கிரவுண்ட் நிலத்தை சத்தியமூர்த்தியின் பெயருக்கு எழுதி வைத்ததுடன், அவர் சொந்த வீடு கட்டவும் உதவி இருக்கிறார். அந்த வீட்டுக்கு சத்தியமூர்த்தி, "சுந்தரா' என்று தன் உடன்பிறவாச் சகோதரியின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

இந்தியாவிலேயே முதன்முதலில் அரசியல் பிரசாரம் செய்த கலைஞர் கே.பி. சுந்தராம்பாள்தான். காங்கிரஸின் வெற்றி, கே.பி.எஸ்.சின் வெற்றி என்று சி. சுப்பிரமணியம் அறிவிக்கும் அளவுக்கு அவரது பங்களிப்பு இருந்தது. கடைசிவரை, நான் காந்திய வழியிலும், காங்கிரஸ் மரபிலும்தான் இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.

தமிழகத்தில் முதன் முதலாக நாடகத்திற்கு முன்பதிவு செய்யும் வழக்கம் சுந்தராம்பாள் நாடகத்திற்குத்தான் ஏற்பட்டது. வள்ளி திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், கோவலனுக்காவது முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்யப்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல, நாடக - இசை - திரைப்படத் துறையிலிருந்து இந்தியாவில் முதன்முறையாக மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்மணி கே.பி. சுந்தராம்பாள்தான்.

அந்த நாள் தமிழ் நாடக உலகம், புகழ்பெற்ற கூத்தர்கள், நாடக ஆசிரியர்கள், நாடகக் கம்பெனிகள், நாடக நடிகர்கள் ஆகியோரின் பட்டியலும் எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் இருவரும் பாடிய பாடல்களின் தொகுப்புகளும், கே.பி.எஸ்.சின் திரையுலகப் பங்களிப்பு பற்றிய விரிவான பதிவும் சோழ நாடனின் "கொடுமுடி கோகிலம்' புத்தகத்தை ஓர் ஆவணப் பதிவாக்குகின்றன.

சில முரண்கள், குறைபாடுகள், ஆசிரியரின் தனிப்பட்ட மனமாச்சரியப் பதிவுகள் இருந்தாலும்கூட ஒரு முழுமையான, அற்புதமான வரலாற்றுப் பதிவு "கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாளின் வரலாறு!

நன்றி-தினமணி-கலாரசிகன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

"கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள் Empty Re: "கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள்

Post by krishnaamma Sun Jun 16, 2013 4:49 pm

"கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள் K.b.sundarambal-igalattasஎங்க பாட்டின் தோழியாம் அவர் புன்னகை(எங்க அப்பாவின் அம்மா ) எங்கள் பாட்டி தாத்தாவின் நில புலன்கள் கொடுமுடி இல் தான் இருந்தது. ஆனால் அவர்கள் பவானி இல் இருந்தார்கள், எங்க பாட்டின் வீட்டுக்கு சுந்தரம்பாள் வந்திருக்காங்களாம்  , எங்க அப்பா பார்த்து பேசி இருக்காங்களாம், அப்பா சொல்வார். எங்க பாட்டி இன் பேர் ரங்கநாயகி, அவங்களை அன்புடன் 'ரங்கம்' என்றுதான் அழைப்பார்களாம்  புன்னகை இதுவும் அப்பா சொன்னது தான் புன்னகை

இன்று  தந்தையர்  தினம் , அப்பாவை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன், இந்த கட்டுரை பார்த்ததும் அந்த நினைவுகள் அதிகம் ஆனது, நன்றி சாமி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum