ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!

2 posters

Go down

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!  Empty அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!

Post by சிவா Sat Jun 15, 2013 9:33 pm



தேசிய முன்னணி மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா தொடர்ந்து சந்திப்பு நடத்தி வருவது அடுத்த பிரதமராக வருவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார் என்பதைக் காட்டுவதாக மலேசியன் இன்சைடர் இணைய செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர், அம்பாங் பகுதியிலுள்ள தனது மாளிகை வீட்டில் அவர் தொடர்ந்து சந்திப்புக்களை நடத்தி, ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் உண்டா என்பது குறித்து வியூகங்களை வகுத்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகின்றது.

அவ்வாறு அவர் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட அவருக்கு 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். தற்போது எதிர் கட்சிகள் 89 இடங்களைக் கைவசம் வைத்துள்ளன.

அனைத்து எதிர் கட்சி உறுப்பினர்களும் துங்கு ரசாலியோடு கைகோர்த்தால், அவரது சொந்த ஆதரவையும் சேர்த்து 90 உறுப்பினர்களின் ஆதரவு துங்கு ரசாலிக்குக் கிடைக்கும்.

மேற்கொண்டு தேவைப்படும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவரால் திரட்ட முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

மகாதீர் கொள்கையிலிருந்து விலகும் மாற்று தலைமைத்துவம் தேவை!

நாட்டின் இன்றைய சூழ்நிலையில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தகுதி துங்கு ரசாலிக்கு மட்டுமே உண்டு என அவரைச் சந்தித்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்த மோசமான தோல்வி காரணமாக நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் அம்னோவில் வலுத்து வருகின்றது.

ஆனால், அம்னோவில் பலர் டான்ஸ்ரீ மொய்தீன் அடுத்த பிரதமராக வருவதை ஆதரிக்கவில்லை.

அதேபோன்று, அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவதையும், பல மலாய்க்காரர்களும், அம்னோவினரும் விரும்பவில்லை.

இந்நிலையில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடுநிலை பிரதமர் வேட்பாளராக துங்கு ரசாலி மட்டுமே காணப்படுகின்றார்.

கிளந்தான் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால், மற்ற மாநில சுல்தான்களின் மரியாதையையும், ஆதரவையும், மாமன்னரின் ஒப்புதலையும் கூட அவரால் பெற முடியும்.

அதோடு நஜிப்பும் மொய்தீனும், மகாதீரின் பாரம்பரியத்தை – மகாதீரின் கொள்கைகளைத் தொடரும் தலைவர்களாகத்தான் பார்க்கப்படுகின்றார்கள். இந்நிலையில், மகாதீரின் கைப்பிடியிலிருந்து அரசாங்கத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் துங்கு ரசாலி போன்ற ஒரு தலைவர்தான் பொருத்தமானவர் என்ற கருத்தும் நிலவுகின்றது.

சபா, சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு

இதற்கிடையில் அமைச்சரவை நியமனங்களில் அதிருப்தி கொண்டுள்ள சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த திங்கட்கிழமை துங்கு ரசாலியைச் சந்தித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து வரும் சில வாரங்களில் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கப் பதவிகள் வழங்க பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சபா, சரவாக் மாநிலங்களில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 47 தொகுதிகளை தேசிய முன்னணி வென்றுள்ளது. தற்போது 133 தொகுதிகளை தேசிய முன்னணி வைத்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகும்.

இருப்பினும் 20 அமைச்சர் மற்றும் துணையமைச்சர் பதவிகளை மட்டுமே நஜிப், சபா, சரவாக் மாநிலங்களுக்கு வழங்கியிருக்கின்றார்.

குறிப்பாக சரவாக்கின் எஸ்பிடிபி எனப்படும் கட்சி நான்கு நாடாளுமன்ற தொகுதிகளை கைவசம் வைத்திருந்தாலும், அதற்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

ஆனாலும், மேற்கு மலேசியாவில் உள்ள ம.இ.காவுக்கு அதன் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் அதிருப்தி கொண்டுள்ள சபா, சரவாக் மாநில தேசிய முன்னணி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணையோடு துங்கு ரசாலியால் அதிரடி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதுதான் இப்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் விவாதமாகும்.

செல்லியல்.காம்


அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!  Empty Re: அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!

Post by யினியவன் Sat Jun 15, 2013 9:55 pm

துங்கு ரசா அலி அங்க போயி தூங்கிட மாட்டாரே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!  Empty Re: அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!

Post by சிவா Sat Jun 15, 2013 9:58 pm

முதலில் போக முடியுமா எனப் பார்க்கலாம். அதற்குள் இவருக்கு என்னென்ன சோதனைகளை ஏற்படுத்தப் போகிறார்களோ.....

(அலைபேசி வழி இது எனது முதல் பதிவு தல. இதற்கு முன் முகநூலில் மட்டுமே அலைபேசி வழி பதிவிடுவேன்)


அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!  Empty Re: அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!

Post by யினியவன் Sat Jun 15, 2013 10:53 pm

கலக்குறீங்க சிவா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!  Empty Re: அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum