ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

5 posters

Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:47 pm

தமிழ்நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு கணக்குப்படி, மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேராகப் பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை 97 லட்சம் அதிகரித்துள்ளது.

2011–ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரத்தை, சென்னையில் நேற்று வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் மாநில இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் அளித்த பேட்டி:

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 9–ம் தேதி முதல் பிப்ரவரி 28–ம் தேதி வரை நாடு முழுவதும் கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் 1–ம் தேதி முதல் 5–ம் தேதி வரை மீண்டும் சரிபார்ப்புப் பணியும் நடந்தது.

2011–ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர். பெண்கள் 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர். நகரப்பகுதியில் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 எனவும், கிராம பகுதியில் 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரத்து 590 எனவும் மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

2011-ம் ஆண்டுடன் முடிந்த 10 ஆண்டுகளில், 97 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப் பகுதியில் 23 லட்சமும், நகரப்பகுதியில் 74 லட்சமாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை அதிகம் உள்ள மாவட்டங்களாக, சென்னை (46,46,732), காஞ்சீபுரம் (39,98,252), வேலூர் (39,36,331) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்கள் அரியலூர் (7,54,894), நீலகிரி (7,35,394), பெரம்பலூர் (5,65,223) .

ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 555 மக்கள் வசிக்கின்றனர். இது 2001–ம் ஆண்டைவிட 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தியில் முதல் மூன்று இடங்களை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன. பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் கடைசி இடங்களில் உள்ளன.

பட்டியல் சமூகத்தினர் ஒரு கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 ஆகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதம் 21.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. பழங்குடியினர் மக்கள்தொகை 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சிவீதமும் 22 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 37 ஆயிரத்து 507 ஆகும். மொத்த எழுத்தறிவு வீதம் 80.1 சதவிகிதமாகும். இதில் 86.8 சதவீதம் ஆண்களும், 73.4 சதவீதம் பெண்களாகவும் உள்ளனர். எழுத்தறிவுள்ளவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்கள் கன்னியாகுமரி (91.7), சென்னை (90.2), தூத்துக்குடி (86.2) சதவிகிதமாகும். கிருஷ்ணகிரி (71.5), அரியலூர் (71.3), தர்மபுரி (68.5) ஆகிய மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன.

2001-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 317 கிராமங்கள் இருந்தன. ஆனால் பத்தாண்டுகளில் 338 கிராமங்கள் குறைந்து தற்போது 15 ஆயிரத்து 979 கிராமங்கள் மட்டுமே உள்ளன. நகரமயமாக்கல் காரணமாக பல கிராமங்கள் நகரங்களுடன் இணைந்து விட்டன. தற்போது புதிதாக 265 நகரங்கள் உருவாகியுள்ளன. மொத்த நகரங்களின் எண்ணிக்கை தற்போது 1,097 ஆக அதிகரித்துள்ளன.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 51 லட்சத்து 16 ஆயிரத்து 39 விவசாயிகள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 48 ஆயிரத்து 457 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, 8.67 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.

2001-ஆம் ஆண்டில் 86 லட்சத்து 37 ஆயிரத்து 630 ஆக இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 96 லட்சத்து 6 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பத்தாண்டுகளில் புதிதாக 9 லட்சத்து 68 ஆயிரத்து 917 விவசாயக் கூலிகள் உருவாகியுள்ளனர்.

நன்றி அந்திமழை.காம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty Re: 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by யினியவன் Fri Jun 14, 2013 6:52 pm

பகிர்வு நன்று ராஜூ

விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள் அதே சமயம்
விவசாயக் கூலித் தொழிலார்கள் அதிகரித்துள்ளனர்!!!

நிலத்தை விளைவிக்க இயலாமல் விற்றோ அல்லது தரிசாக விட்டுட்டோ
விவசாயிகள் கூலித் தொழிலாளராய் மாறிவிட்டனரோ??? வருத்தமா இருக்கு...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty Re: 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 6:58 pm

பெருவாரியான விவசாய நிலங்கள் இன்று மனைகளாக கூறு போட்டு வித்து விட்டார்கள். விவசாயத்தை எந்த அரசும் கண்டுகொள்வது இல்லையே அப்புறம் என்ன செய்ய முடியும் பாஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty Re: 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by டார்வின் Fri Jun 14, 2013 7:20 pm

நல்ல தகவல் ,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty Re: 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by சிவா Sat Jun 15, 2013 7:54 am

கிராமங்கள் அழிவது என்பது தமிழர்களின் கலாச்சாரம் அழிகிறது என்றாகிறது.

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty Re: 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by Muthumohamed Sat Jun 15, 2013 11:57 am

யினியவன் wrote:பகிர்வு நன்று ராஜூ

விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள் அதே சமயம்
விவசாயக் கூலித் தொழிலார்கள் அதிகரித்துள்ளனர்!!!

நிலத்தை விளைவிக்க இயலாமல் விற்றோ அல்லது தரிசாக விட்டுட்டோ
விவசாயிகள் கூலித் தொழிலாளராய் மாறிவிட்டனரோ??? வருத்தமா இருக்கு...

கூலி தொழிலாளர்களாக மாறி விட்டார்கள் என்பதே உண்மை

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின T7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின O7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின A7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின E7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty Re: 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by Muthumohamed Sat Jun 15, 2013 12:00 pm

ராஜு சரவணன் wrote:பெருவாரியான விவசாய நிலங்கள் இன்று மனைகளாக கூறு போட்டு வித்து விட்டார்கள். விவசாயத்தை எந்த அரசும் கண்டுகொள்வது இல்லையே அப்புறம் என்ன செய்ய முடியும் பாஸ்

அரசு அவர்களை பற்றி சிந்திக்கவே நேரம் போதவில்லை பிறகு எப்படி விவசாயிகளை பற்றி சிந்திக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின T7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின U7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின O7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின H7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின A7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின M7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின E7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின Empty Re: 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
» 2100ல் மக்கள்தொகை ஆயிரம் கோடி!
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை
» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum