புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
1 Post - 1%
jothi64
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_m10ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தொரு அரேபிய இரவுக் கதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 1:56 am

Arabian Nights - كتاب ألف ليلة وليلة - அரேபியன் இரவுகள்

பழங்காலத்தில் பெர்ஷியா என்ற பெரிய நகரத்தை தலைநகராகக் கொண்டு ஒரு அரேபியப் பேரரசு இருந்தது. அந்த ராஜ்ஜியம் நல்ல செழிப்புள்ளதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அந்த நாட்டு அரசருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அரசரின் மரணத்திற்குப் பின் அவரது மூத்த மகன் ஷாகிரியார் அரசரானார். அவரது தம்பி பெர்ஷிய பேரரசின் மற்றொரு பகுதியை ஆண்டு வந்தார். பேரரசர் ஷாகிரியார் பொது மக்களுக்கு நல்ல ஒரு அரசராக விளங்கினார். ஆனால் அவர் மனைவி தீய குணம் கொண்ட பெண்மணி. இது அரசருக்குத் தெரியாமல் இருந்தது. தன் மனைவியின் தீய குணத்தை அறியாத பேரரசர் அவளை மிகவும் நேசித்தார். தன் மனைவிக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆடை ஆபரணங்கள் கொடுத்து மகிழ்வித்தார்.

ஒரு நாள் தன் மனைவியின் கொடிய குணம் அவருக்குத் தெரிய வந்தது. அரசர் அதிர்ந்து போனார். மிகவும் ஆத்திரப்பட்டார். அந்த நாட்டு சட்டப்படி தன் மனைவியை கொலை செய்ய ஆணையிட்டார். மனைவி இறந்த பின்னாலும் அரசரின் கோபம் அடங்கவில்லை. உலகில் உள்ள எல்லாப் பெண்களும் தன் மனைவியைப் போலவே தீய குணம் கொண்டவர்கள் என்று எண்ணினார். அதனால் எல்லாப் பெண்களையும் கொல்லத் திட்டமிட்டார். எனவே நாட்டில் உள்ள இளம் பெண்களைத் திருமணம் செய்து, மறு நாளே கொல்ல எண்ணம் கொண்டார்.

தன்னுடைய மந்திரியிடம் தனது யோசனையைத் தெரிவித்து அதற்குரிய ஆணையைப் பிறப்பித்தார். மகா மந்திரிக்கு, அரசரின் ஆணை தவறு என்று அவசருக்குப் புரிய வைக்க முடியவில்லை. அரசர் அந்த அளவுக்குப் பெண்களின் மேல் ஆத்திரம் கொண்டிருந்தார். அதனால் தினப்படி, அரசர் ஒரு இளம் பெண்ணை மணப்பதும் மறுநாள் புது மணப் பெண்ணைக் கொல்வதுமாக இருந்தார்.

ஒரு நல்ல அரசர் இப்படி கொடும் செயலைச் செய்வது கண்டு மக்கள் வேதனைப் பட்டனர். தங்களுக்கு அரசரால் இழைக்கப்படும் கொடுமைக்கு நீதி கிடைக்காமல் பரிதவித்தனர்.

பெர்ஷியா நாட்டு மந்திரிக்கு இரண்டு புதல்விகள் இருந்தார்கள். மூத்தவள் ஷஹரஜாத். இளையவள் தினார்ஜாத். ஷஹரஜாத் மிகவும் புத்திசாலி. பல நாட்டு வரலாறு, தத்துவங்கள் அறிந்தவள். அவள் தன் தந்தையை அணுகி "தந்தையே, நான் அரசரின் இந்த கொடும் செயலை நிறுத்தப் போகிறேன்" என்றாள்.

அதற்கு மந்திரி "மகளே நீ செய்ய நினைப்பது நல்ல காரியம் தான்!. ஆனால் அதை எப்படிச் செய்யப் போகிறாய்?"என்று கேட்டார்.

"நான் சுல்தானை மணக்கப் போகிறேன்" என்றாள் ஷஹரஜாத்.

மந்திரி அதிர்ச்சியடைந்தார். மகளை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஷஹரஜாத் தன் முடிவில் திடமாக இருந்ததினால் மனம் நொந்து போய் மன்னரிடம் ஷஹரஜாதின் விருப்பத்தைத் கூறினார். ஆச்சிரியமடைந்த மன்னர், திருமணத்திற்கு சம்மதித்தார்.

இதற்கிடையில் ஷஹரஜாத் தன் தங்கையிடம் "தங்கையே! மன்னரிடம் என்னுடைய கடைசி ஆசையாக நான் உன்னையும் என்னுடன் வைத்துக் கொள்ள வேண்டுவேன். அவர் அதற்கு ஒத்துக் கொண்டால், நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றாள்.

"அக்கா உனக்கு என்ன உதவி வேண்டும், சொல்! தயங்காமல் செய்கிறேன்" என்று தங்கையும் உறுதி கூறினாள்.

விடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக நீ என்னை எழுப்பி, 'அக்கா நீ, உன்னுடைய அற்புதமான கதைகளில் ஒன்றை இறப்பதற்கு முன் சொல்வாயா என்று கேட்க வேண்டும்' என்றாள். தங்கையும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தாள்.

மன்னருக்கும் ஷஹரஜாதிற்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு ஷஹரஜாத் மன்னரிடம் சென்று "அரசே நான் என் தங்கையை எந்நாளும் பிரிந்ததில்லை. நாளை காலையோ எனக்கு மரணம் அதனால் இன்று இரவு மட்டும் என் தங்கை என்னுடன் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கெஞ்சினாள். இரக்கப்பட்ட மன்னரும் அதற்கு இணங்கினார்.

திட்டமிட்டது போலவே பொழுது விடிவதற்கு ஒரு மணி நேரம் இருக்கும் போது தினார்ஜாத் தமக்கையை எழுப்பினாள். "அக்கா தயவு செய்து, நீ எனக்கு உன்னுடைய அற்புதமான கதைகளிலிருந்து ஒரு கதையைச் சொல்!. இன்னும் சில மணி நேரத்தில் நீ இறந்து விடுவாய், உன் குரலைக் கேட்க எனக்கு ஆவலாக உள்ளது!" என்றாள். ஷஹரஜாதும் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 1:58 am

அரேபியப் பாலைவனத்தில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். தன் வேலையின் பொருட்டு அவன் அடிக்கடி பாலைவனத்தைக் கடக்க வேண்டியிருந்தது. ஒரு முறை தன் தொழில் காரணமாகத் தன் நகரைவிட்டு வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. பாலைவனத்தைக் கடக்கவே நான்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டது. அதனால் வழியில் உணவுக்காக நிறையப் பேரிச்சம் பழங்களை எடுத்து மடியில் கட்டிக் கொண்டு பயணம் மேற்கொண்டான்.

வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவன் திரும்பும் வழியில் அவனுக்குப் பசித்தது. பல நாட்கள் பயணம் செய்த காரணத்தால் மிகவும் சோர்வாகவும் இருந்தது. குதிரை மெல்லப் பாலைவனத்தில் நடக்க, தன் கையிலிருந்த பேரிச்சம் பழங்களை ஒவ்வொன்றாகத் தின்று, கொட்டைகளைத் தூக்கி எறிந்தான்.

அப்படியே பயணப்பட்டு வருகையில் ஒரு பாலைவனச் சோலையைக் கண்டான். அந்தப் பாலைவனச் சோலையில் ஒரு சிறிய நீரோடையும் ஒரு சில மரங்களும் இருந்தன. மிகுந்த சந்தோஷத்துடன் இறங்கி ஓய்வெடுத்தான். குதிரைக்குத் தண்ணீர் கொடுத்தான். தானும் ஒடையில் இறங்கி நீர் அருந்தி, தன் உடலை சுத்தம் செய்து கொண்டான்.

அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது அவனை நோக்கி ஒரு மாய பூதம் கோபமாக ஓடி வருவது தெரிந்தது. அந்தப் பாலைவனத்தில் கொடிய மாய பூதங்கள் வசிப்பது அவனுக்குத் தெரியாது. முகம் சிவக்கக் கத்திக் கொண்டு ஓடி வரும் பூதததைப் பார்த்ததும் பயந்து போனான் அந்த வணிகன். அந்த பூதத்தின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.

"ஏய் நான் உன்னைக் கொன்று விடப் போகிறேன்" என்று கோபமாகக் கத்தியபடித் தன் வாளைத் தூக்கியது பூதம்.

"ஐயா, நீங்கள் என்னைக் கொன்றுவிடக் கூடிய வலிமை வாய்ந்தவர்; அதனால் என்னைக் கொல்லுங்கள்; ஆனால் எதற்காக என்னைக் கொல்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுக் கொல்லுங்கள்" என்று பணிவாகக் கேட்டான் வணிகன்.

"நீ என் மகனைக் கொன்று விட்டாய், அதனால் தான் நான் உன்னைக் கொல்லப் போகிறேன்" என்றது பூதம்.

"உங்கள் மகனை நான் கொன்றேனா? இல்லையே, அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே" என்று குழப்பத்துடன் கேட்டான் வணிகன்.

"ஏய் நீ பேரிச்சம் பழங்களைத் தின்றுக் கொட்டையைத் தூக்கி எறியவில்லை?" கோபமாக வணிகனைக் கேட்டது பூதம்.

"ஆமாம், ஆமாம்" என்று பயத்துடன் ஒத்துக் கொண்டான் வணிகன்.

"அந்தக் கொட்டை என் குழந்தையின் கண்ணில் விழுந்து அது இறந்து விட்டது. அதனால் தான் நான் உன்னைக் கொல்லப் பொகிறேன்" என்று கர்ஜித்தது பூதம்.

மிரண்டு போனான் வணிகன். அவன் யோசிக்காமல் செய்த செயல் அவனுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. ஆனாலும் தைரியமாக, "ஐயா பூதமே, என்னை மன்னித்துவிடுங்கள், நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன்." என்று சொன்னான்.

"என் மகனின் உயிருக்கு பதிலாக நான் உன்னைக் கொன்றே தீருவேன்" என்று கோபமாகக் கத்தியது பூதம். வணிகன் அந்த பூதத்தின் கால்களில் விழுந்து கதறினான். பூதம் அவனை மன்னிக்க மறுத்தது.

பூதம் தன்னைக் கண்டிப்பாகக் கொன்றுவிடும் என்று உணர்ந்த வணிகன், "ஐயா நான் இறப்பதற்கு முன் என்னுடைய கடைசி ஆசையையாவது நிறைவேற்றுங்கள்" என்று கெஞ்சினான். "என்ன? சொல்" என்றது பூதம்.

"நான் என் மனைவி மக்களைப் பார்த்துவிட்டு உங்களிடம் திரும்பி வருகிறேன். நான் வீட்டை விட்டுக் கிளம்பி அதிக நாட்களாகிறது. அதனால் அவர்கள் கவலையோடு இருப்பார்கள். எனவே அவர்களிடம் சொல்லிக் கொண்டு உங்களிடமே நான் திரும்பி வருகிறேன்" என்றான் வணிகன்.

"வணிகனை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்தது பூதம்..." என்று சொல்லிக் கதையை நிறுத்தினாள் ஷஹரஜாத்.

"அக்கா, கதையை ஏன் நிறுத்தி விட்டாய்? மிகவும் சுவாரசியமாக இருக்கிறதே" என்றாள் தங்கை.

"பொழுது புலர்ந்து விட்டது பார்" என்றாள் ஷஹரஜாத். பொழுது விடிந்ததும் தனக்கு மரணம் என்பது அவளுக்குத் தெரியும். அரசர் என்ன சொல்லப் போகிறாரோ என்று சகோதரிகள் இருவரும் பயத்துடன் காத்திருந்தனர்.

சுல்தானும் ஷஹரஜாதின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கும் கதையின் முடிவில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே அவள் கதையை முடித்ததும் நாளை அவளைக் கொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அரச வேலைகளைக் கவனிக்கப் புறப்பட்டார்.

இரண்டாம் நாள் இரவுக்காக ஷஹரஜாத் காத்திருந்தாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:01 am

ஷெஹரஜாதின் கதையைக் கேட்கப் பேரரசர் ஷாஹிரார் ஆவலோடு தன்னுடைய அந்தப்புரத்திற்கு வந்தார். புத்திசாலி ஷெஹரஜாத் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். பொழுது புலரும் போது முக்கியமான திருப்பத்தில் கதையை நிறுத்தி விடுவது, பிறகு அரசரின் மனம் மாறும் வரை கற்பனைக் கதையை வளர்த்துக் கொண்டே போவது- இது தான் அவளது திட்டம். இந்த திட்டத்துடன் அவள் கதையைத் தொடர்ந்தாள்.

தன் முன்னால் பயத்துடன் குனிந்திருந்த வணிகனை யோசனையோடு பார்த்தது பூதம்.

"நீ ஊருக்குச் சென்றால் என்னிடம் எப்போது திரும்பி வருவாய்?" என்று கேட்டது.

"நான் ஊர் சென்று திரும்ப ஒரு வருடம் ஆகும். அதனால் இன்னும் பன்னிரெண்டு மாதத்தில் உன்னை கண்டிப்பாய் இதே ஓடை அருகில் சந்திக்கிறேன்," என்று வணிகன் வாக்குக் கொடுத்தான்.

"ம் சரி, ஒரு வருடத்தில் திரும்ப வர வேண்டும் இல்லையென்றால்..", என்று பயமுறுத்தி விட்டு அங்கிருந்து மறைந்தது பூதம்.

வணிகனும் குதிரையிலேறி வீடு திரும்பினான். அவனது மனைவியும் குழந்தைகளும் அவனுக்காக காத்திருந்தனர். ஆனால் தன் குடும்பத்தினரைக் கண்டதும் வணிகன் துக்கம் தாளாமல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறி அழுதான்.

நான் இன்னும் உங்களுடன் ஒரு வருட காலம் தான் வாழ முடியும் என்று வருத்தப்பட்டவனை அவன் மனைவி தேற்றினாள்.

"உங்களுக்கு ஒரு வருடம் வாழக் கிடைத்ததே நல்ல விஷயம் தான் இந்தக் குறுகிய காலத்தை சரியானபடி செலவிட வேண்டும்," என்றாள்.

மனைவியின் ஆலோசனையைக் கேட்ட வணிகன் அந்த ஒரு வருட காலத்தில் தன்னுடைய கடமைகளை முடித்தான். வாங்கியிருந்த கடன்களை அடைத்தான். தனக்குப் பிறகு மனைவி குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆட்களை ஏற்பாடு செய்தான். ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்தான். இவ்வாறாக ஒரு வருடம் வேகமாக ஓடி விட்டது.

கனத்த இதயத்துடன் வணிகன் பாலைவனத்திலிருந்த நீரோடைக்குத் திரும்பினான். அங்கே மாய பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தான். அப்போது அங்கே ஒரு சிவந்த பெண் மானை ஓட்டிக் கொண்டு ஒரு முதியவர் வந்தார்.

பாலைவன நீரோடைக்கு அருகில் வணிகன் தனியாக இருப்பதைக் கவனித்த அவர் வணிகனை நெருங்கி, "அப்பா இந்த இடத்தில் பொல்லாத பூதங்கள் இருக்குமே, இங்கே ஏன் தனியாக நிற்கிறாய்?" என்று கேட்டார்.

அதற்கு வணிகன் அழுதபடி தன் கதையை அந்த முதியவரிடம் கூறினான். கதையைக் கேட்ட முதியவர், "அட என்ன ஆச்சிரியமாக இருக்கிறதே, மாய பூதம் உன்னை வந்து கொல்லப் போகிறதா? அந்த மாய பூதத்தை நானும் பார்க்க வேண்டும்," என்று சொல்லி வணிகனுடன் அவரும் பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

இருவரும் அங்கேயே உட்கார்ந்து பூதத்திற்காக காத்திருந்தனர், கொஞ்ச நேரம் கழித்து இரண்டு கருப்பு நாய்களைக் கூட்டியபடி ஒரு முதியவர் அங்கு வந்தார். நீரோடைக்கு அருகில் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்தவர், "நண்பர்களே நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? இது ஆபத்தான இடமாயிற்றே?" என்று கேட்டார்.

பெண் மானை வைத்துக் கொண்டிருந்த முதியவர் வணிகனின் கதையைச் சொல்லி, தான் மாய பூதத்திற்காக கத்திருப்பதாய் சொன்னார். வந்த இரண்டாவது முதியவரும் இவர்களோடு மாய பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே மூன்றாவது கிழவர் தள்ளாடி வந்தார். வணிகனின் சோகக் கதையைக் கேட்ட அவரும் மற்ற மூவரோடு சேர்ந்து பூதத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

சீக்கிரமே ஒரு புகை மண்டலத்திலிருந்து மாய பூதம் எழும்பியது. சிவந்த கண்களுடன் வாளைத் தூக்கிக் கொண்டு கோபமாக வெளி வந்த பூதத்தைப் பார்த்த நால்வரும் பயந்து போனார்கள்.

வணிகனை கோபமாகத் தூக்கிய பூதம், "என் மகன் இறந்து போனது போல் நீயும் இறந்து போ," என்று கர்ஜித்தபடி தன் வாளை ஓங்கியது. மற்ற மூவரும் வணிகனுக்காக பயந்து அழுதனர்.

மானை வைத்துக் கொண்டிருந்த முதியவர், "மாய பூதமே நான் ஒரு அற்புதமான கதை சொல்வேன். அது இந்த வணிகனின் கதையை விட ஆச்சரியமூட்டுவதாக இருந்தால் நீ வணிகனைத் தண்டிக்கும் உரிமையில் மூன்றில் ஒரு பாகத்தை எனக்குக் கொடுத்துவிடு," என்று கெஞ்சினார்.

பூதம் அதற்கு சம்மதித்தது. கிழவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:01 am

முதல் முதியவர் தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

எனக்கும் என் மனைவிக்கும் பல காலங்களாக குழந்தைகளே இல்லை. அதனால் என்னுடைய விசுவாசமான அடிமைப் பெண் ஒருத்தியின் மகனை என்னுடைய மகனாக தத்து எடுத்துக் கொண்டேன். ஆனால் என் மனைவி அதை விரும்பவில்லை. ஆனாலும் எனக்கு சந்ததி வேண்டும் என்பதற்காக நான் அதை பொருட்படுத்தவில்லை.

ஒரு முறை நான் நீண்டதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது. அப்போது என் மகனையும் அவனுடைய தாயாரையும் என் மனைவியின் பொறுப்பில் விட்டுச் சென்றேன். நான் இல்லாத சமயத்தில் சில சூனிய வித்தைகளைக் கற்றுக் கொண்ட என் மனைவி என் மகனை ஒரு கன்றுக் குட்டியாகவும், அவனுடைய தாயை பசுவாகவும் மாற்றி வேலைக்காரர்களிடம் பராமரிக்கக் கொடுத்துவிட்டாள்.

நான் ஒரு வருடம் கழித்து வீடு திரும்பினேன். அப்போது என் மனைவி என்னிடம் ‘உன்னுடைய அடிமைப் பெண் இறந்து விட்டாள். உனது மகனையோ இரண்டு மாதங்களாகக் காணவில்லை’ என்று சொல்லி அழுதாள். நானும் என் மனைவியை நம்பி விட்டேன். ஆனாலும் மனம் சோர்ந்து போகாமல் என் மகனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். நான் என்ன தேடியும் எனக்கு என் மகன் கிடைக்கவில்லை.

அப்படியே இருக்க ஒரு பண்டிகை வந்தது. பண்டிகையின் போது விருந்து வைத்துக் கொண்டாட ஒரு கொழுத்த மாட்டைக் கொண்டு வரும்படி என் வேலையாளிடம் கூறினேன். அவன் கொண்டு வந்த பசுவோ மிகவும் சோகமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. அந்தப் பசுதான் என்னுடைய அடிமைப் பெண் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பசு அழுவதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. வேறு ஒரு மாட்டைக் கொண்டு வரும்படி என் வேலையாளை ஏவினேன்.

அது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அந்த மாட்டைத்தான் நான் கொல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். எனவே நான் அந்த மாட்டைக் கொல்ல ஆணையிட்டேன். ஆனால் அந்த மாட்டில் இறைச்சியே கொஞ்சம் கூட இல்லை வெறும் எலும்புகள் மட்டுமே இருந்தன. அதனால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.

“நம் கொட்டகையில் இருக்கும் கொழுத்த கன்றுக் குட்டியைக் கொண்டு வந்து கொல்லுங்கள்” என்று ஆணையிட்டேன். அப்படிக் கொண்டு வரப்பட்ட கன்றுக் குட்டி தான் என் மகன் என எனக்குத் தெரியாது. ஆனால் அந்த கன்றுக் குட்டியின் கண்ணிலும் கண்ணீரைக் கண்டு மனம் கலங்கிவிட்டேன். என் மனைவி எப்படி வற்புறுத்தியும் அந்தக் கன்றுக் குட்டியைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை. அதனால் அதைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.

மறுநாள் என் வேலைக்காரன் என்னைத் தேடி வந்து, “ஐயா என் மகள் ஒரு சில மந்திரங்கள் தெரிந்தவள்; நேற்று அந்தக் கன்றுக் குட்டியைப் பார்த்ததும் சிரித்தாள். பின் அழுதாள். நான் அவளிடம் காரணம் கேட்டேன்.

அதற்கு அவள், “அப்பா இந்தக் கன்று நம் எஜமானனுடைய தொலைந்து போன மகன். அது புரிந்து போனதும் சிரித்தேன். ஆனால் கொல்லப்பட்ட பசுவோ நாம் இறந்து போய்விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கும் அடிமைப் பெண். அவளுக்காகவே அழுதேன், என்று சொன்னாள்” என்று சொன்னான்.

என் வேலைக்காரன் சொன்ன செய்தியைக் கேட்டு நான் மிகவும் திகைப்படைந்தேன். அவனுடைய மகளிடம் சென்று என் மகனை மாற்றித் தரும்படி கேட்டேன். அதற்கு அவள், என்னுடைய மகனை அவளுக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்றும் தவறு செய்த என் மனைவியைத் தண்டிக்கும் உரிமையை அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் இரண்டு நிபந்தனைகள் போட்டாள். நான் அதற்கு சம்மதித்தேன். “ஆனால் என் மனைவியை உயிரோடு மட்டும் விட்டுவிடு” என்று கூறினேன்.

உடனே அந்த வேலைக்காரப் பெண் கன்றுக் குட்டியாய் இருந்த என் மகனை மனித உருவத்திற்கு மாற்றினாள். என் மனைவியை ஒரு பெண் மானாக மாற்றி விட்டாள். நான் என் மகனை அந்த வேலைக்காரப் பெண்ணுக்கே திருமணம் செய்து வைத்தேன். பெண் மானாக மாறிவிட்ட என் மனைவியை நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லித் தன் கதையை முடித்தார் முதல் முதியவர்.

“அப்படியானால் உன்னுடன் இருக்கும் இந்தப் பெண்மான் உன்னுடைய மனைவியா?” என்று கேட்டது பூதம். ஆமாமென்று தலையசைத்தார் முதியவர்.

“உன் கதை விசித்திரமானதுதான். நான் வாக்குக் கொடுத்தபடி இந்த வணிகனின் தண்டனையில் மூன்றில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கிறேன்” என்றது பூதம்.

இரண்டாவது முதியவர் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:03 am

தன்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருக்கும் முகங்களைக் கூர்ந்து நோக்கிவிட்டு தன் கதையை தொடர்ந்தார் முதியவர்.

“அந்தப் பெண் கந்தல் துணிகளை அணிந்திருந்தாள். அவளுடைய ஆடைகள் மிகவும் அழுக்காய் இருந்தன. என் முன் மண்டியிட்டிருந்த அவள் என் கைகளை முத்தமிட்டு, “ஐயா தயவு செய்து என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்”என்று கெஞ்சினாள்.

அதற்கு நான் “பெண்ணே உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதே. உன்னை நான் எப்படி மணம் செய்து கொள்வது? என்று கேட்டேன். அதற்கு அவள், “ ஐயா தய்வு செய்து என்னிடம் பரிதாபம் கொள்ளுங்கள். நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டால் நான் உங்களுக்கு நல்ல மனைவியாக இருப்பேன். இது சத்தியம்” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினாள்.

அவளைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. எனவே அவளைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டேன். அவளுக்குப் புதிய ஆடைகளையும் அணிகலன்களையும் வாங்கிக் கொடுத்தேன். அவள் மிகவும் சந்தோஷமாக அனைத்தையும் வாங்கிக் கொண்டாள். எங்கள் சகோதரர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்ததது. பின் எங்கள் மூவருடைய கடல் பயணம் தொடர்ந்தது.

பயணத்தின் போது எனது மனைவியிடம் பல நல்ல குணநலன்களைக் கண்டேன். ஏழையாக இருந்தபோதும் அவள் பல நல்ல குணங்களைக் கொண்டிருந்தாள். பிறரின் நலனில் அக்கறைக் கொண்டவளாய் இருந்தாள்.அவளுடைய வரவால் என் வியாபாரமும் செழித்தது. நான் என்மனைவியை மிகவும் ஆழமாக நேசிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னுடைய நல்வாழ்வு என்னுடைய சகோதரர்களுக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆனந்தமான இல்வாழ்க்கையையும் செழிப்பான வியாபாரத்தையும் கண்டு பொறாமை கொண்டார்கள். என் அன்புச் சகோதரர்களே என்னை வெறுப்பது எனக்குத் தெரியாமல் போயிற்று.

ஒரு நாள் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த என்னையும் என் மனைவியையும் அவர்கள் கடலில்த் தூக்கிப் போட்டார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த எனக்கு இது தெரியவில்லை. என் மனைவி ஒரு தேவதை என்பதும் எனக்குத் தெரியவில்லை. கடலில் எறியப்பட்ட என்னைக் காப்பாற்றி என்னை ஒரு தீவில்கொண்டு சேர்த்தாள் என் மனைவி.

அதிகாலையில் நான் விழித்தபோது என் மனைவியிடமிருந்து எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன். என் மனைவிக்கு மனதார நன்றி சொன்னேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்த அவள், “நான் மாயவித்தைகள் தெரிந்த ஒரு தேவதை. உன்னை அன்று பார்த்தவுடனேயே எனக்கு உன்னைப் பிடித்துவிட்டது. உன்னை சோதிக்க விரும்பினேன். ஏழைப் பெண்ணாக உருவெடுத்து உன்னிடம் வந்தேன். நீ எனக்கு உதவிகள் செய்தாய். அதனாலேயே நான் உன்னைக் காப்பாற்றினேன்” என்றாள்.

அடுத்து அவள் கோபமாக, “உன்னைக் கொல்லத் துணிந்த உன் சகோதரர்களை நான் தண்டிக்கப் போகிறேன். அவர்கள் நன்றி கெட்டவர்கள். அவர்களின் கப்பல் மூழ்கும் படி நான் செய்கிறேன்” என்றாள். நான் பதறிவிட்டேன். என் சகோதரர்களை மன்னிக்கும் படி அவளை வேண்டினேன். அவர்களுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து அவர்கள் திருந்தி வாழ வாய்ப்புத் தருமாறு கேட்டேன்.

அவள் கோபம் தணிந்தது. மறு வினாடி நான் என் வீட்டில் இருந்தேன். அங்கே இரண்டு கறுப்பு நாய்கள் நின்று கொண்டிருந்தன.அவை சோகமாக இருந்தன. இதற்கு முன்னால் என்னிடன் நாய்கள் இல்லையே என்று யோசித்தேன்.

தேவதையான என் மனைவி என் முன் தோன்றி “இவை இரண்டும் உன் சகோதரர்கள். அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையாக பத்து வருட காலம் இவர்கள் நாயாக இருப்பார்கள். அதன் பின் நீ என்னைத் தேடிவா” என்று தான் இருக்குமிடத்தையும் சொல்லி மறைந்தாள்.

இது நடந்து பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. எனவே நாய்களை அழைத்துக் கொண்டு என் மனைவியைத் தேடிச் செல்கிறேன்” என்று தன் கதையை முடித்தார் இரண்டாவது முதியவர்.

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பூதம் வியாபாரியின் தண்டனையில் இரண்டில் ஒரு பாகத்தைக் குறைத்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:04 am

“ஓ! மாய பூதமே, என் கதையைக் கேள் “ என்று மூன்றாம் முதியவர் தன் கதையைத் தொடர்ந்தார். அவருடன் ஒரு கழுதை நின்று கொண்டிருந்தது.

“ஐயா மாண்பு மிகு பூதமே, இந்தக் கழுதை என்னுடைய மனைவி. எங்கள் கதையைக் கேள். உனக்கு அது மகிழ்ச்சி அளித்தால் இந்த வணிகனுடைய தண்டனையில் மீதியை எனக்குக் கொடுத்துவிடு” என்று சொல்லித் தன் கதையைத் சொல்ல ஆரம்பித்தார்.

“நானும் இவர்களைப் போல வணிகன் தான். வியாபாரம் பொருட்டு நான் ஒரு வருடம் என் ஊரை விட்டுச் சென்று விட்டேன். நான் சென்றிருந்த வேளையில் என் மனைவி என்னை மறந்து என் அடிமையைத் தன் கணவனாக்கிக் கொண்டிருந்தாள். அது எனக்குத் தெரியாமல் மிகவும் ஆவலாக நான் வீடு திரும்பினேன். என்னைக் கண்டு கோபம் கொண்ட என் மனைவி என் மேல் நீர் தெளித்து என்னைத் தன் மந்திர சக்தியால் நாயாக மாற்றிவிட்டாள். அவளை ஒன்றும் செய்ய முடியாத நான் துக்கத்தோடு அலைந்து திரிந்தேன்.

அப்படி அலைந்து திரிந்த ஒரு நாள் நான் ஒரு கசாப்புக் கடையின் முன் வந்தேன். மிகவும் பசியோடு இருந்த நான் அங்கிருந்த எலும்புகளைத் தின்றேன். என்னைக் கண்டு பரிதாபப்பட்ட அந்தக் கசாப்புக் கடைக்காரன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். வீட்டில் இருந்த அவருடைய மகள் என்னைக் கண்டதும் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

தன் தந்தையைப் பார்த்து அவள், 'அப்பா நம் வீட்டிற்கு நீங்கள் ஒரு அறிமுகமில்லாத ஆணை அழைத்து வந்திருக்கிறீர்களே' என்று கோபப்பட்டாள். ஒன்றும் புரியாத அவள் தந்தையோ, 'ஆணா? இங்கே என்னைத் தவிர எந்த ஒரு ஆணும் இல்லையே' என்றார்.

உடனே அந்தப் பெண் என்னைக் காட்டி, 'நீங்கள் கொண்டு வந்திருக்கும் இந்த நாய் தன் மனைவியினால் நாயாக மாற்றப்பட்ட ஒரு ஆண்' என்று சொல்லி என் மேல் தண்ணீர் தெளித்து என்னை மீண்டும் மனிதனாக மாற்றினாள். மீண்டும் மனிதனான நான் அந்தப் பெண்ணின் கையை நன்றியோடு முத்தமிட்டு என் மனைவியைத் தண்டிக்கும் வழியைக் கேட்டேன்.

அவள் என்னிடம் ஒரு குடுவை நிறைய மந்திர நீரைக் கொடுத்து, 'நீ உன் மனைவியின் மீது அவள் தூங்கும் போது இதைத் தெளிக்க வேண்டும். அப்போது உன் மனைவி என்ன உருவமாக மாற வேண்டும் என்று எண்ணுகிறாயோ அவள் அப்படி மாறி விடுவாள்' என்றாள். நானும் அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, 'நீ கழுதையாக மாறுவாயாக' என்று சொல்லி மந்திர நீரை அவள் மேல் தெளித்தேன். அவளும் கழுதையாக மாறிவிட்டாள்." என்று சொல்லித் தன் கதையை நிறுத்தினார்.

கதையைக் கேட்ட மாய பூதம் முதியவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கழுதையை நோக்கி, 'இது உண்மையா?' என்று கேட்டது. அதற்குக் கழுதையும் தன் தலையை ஆட்டியது.

மூன்றாவது முதியவரின் கதையைக் கேட்ட மாய பூதம் வணிகனின் தண்டனையின் கடைசி பாகத்தை அந்த முதியவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றது. வணிகன் மிக மகிழ்ச்சியாக முதியவர்களுக்கு நன்றி கூறித் தன் வீடு நோக்கிப் பயணப்பட்டான். தன் கதையைச் சொல்லி நிறுத்தினாள் ஷஹரஜாத்.

அவளுடைய தங்கை அவளைப் பார்த்து, “அக்கா, நீ என்ன அருமையான கதையைச் சொன்னாய். மிகவும் நன்றாக இருந்தது” என்று சொன்னாள்.

உடனே ஷஹரஜாத், “தங்கையே, எனக்கு இதைவிட சுவையான ஒரு மீனவன் கதை தெரியும். ஆனால் என்ன, இப்போதோ பொழுது புலர்ந்துவிட்டது. நான் மரணம் அடையும் நேரமிது” என்று சொல்லி நிறுத்தினாள்.

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பேரரசரும், "ஷஹரஜாத் என்னுடைய அரச வேலைகளை முடித்துக் கொண்டு இரவு வருகிறேன். நீ எனக்கு அந்த மீனவன் கதையை இரவு சொல்" என்று சொல்லித் தன் அரச வேலைகளைக் கவனிக்கச் சென்றார், மூன்றாம் நாள் இரவும் வந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:04 am

அந்தப்புரத்தில் தன் கணவரை அணுகிய ஷஹரஜாத், “பேரரசரே, கேளுங்கள். நான் சொல்லப்போகும் இந்தக் கதையில் வரும் மீனவன் மிகவும் ஏழை. அவனுக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தார்கள். கடலில் மீன் பிடிக்கப் போகும் போது அவனிடம் ஒரு பழக்கம் இருந்தது. கடலுக்குள் ஒரு நாளைக்கு நான்கு முறை தான் வலையை வீசுவான். அதில் கிடைக்கும் மீன்களை விற்றே அவன் வாழ்க்கை நடத்தி வந்தான்.

அப்படி இருக்கையில் ஒரு நாள் அவன் கடலுக்கு சென்று மிக ஆழமான இடத்தில் வலையை வீசிவிட்டுக் காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் வலையை நீரிலிருந்து இழுக்கும் போது அது மிகவும் கனமாகவும் இழுக்க முடியாமலும் இருந்தது. தனக்கு ஏதோ நிறைய மீன்கள் கிடைத்ததாக நினைத்த மீனவன் மிகவும் மகிழ்ச்சியுடன் வலையை இழுத்தான். ஆனால் வலையில் மீன்கள் இல்லை. வலைக்குள் ஒரு இறந்த கழுதைதான் இருந்தது.

தன் தலைவிதியை நொந்தபடி மீனவன் மீண்டும் தன் வலையை கடலுக்குள் வீசினான். இரண்டாவது முறை அவனுக்கு உடைந்த மண்பாண்டம் கிடைத்தது. அல்லா ஏன் என்னை இன்று இப்படி சோதிக்கிறார் என்று மனம் வெதும்பிய மீனவன் கடலின் இன்னும் ஆழமான பகுதிக்குச் சென்று தன் வலையை வீசினான். ஆனால் மூன்றாவது முறையும் அவனுக்கு மீன்கள் சிக்கவில்லை.

மிகுந்த வருத்ததுடன் கடைசி முறையாக வலையை வீசிய மீனவன் வலையை அதிக நேரம் கடலுக்குள் இருக்கும் படி வைத்தான். ஆனாலும் கடவுள் அருள் அன்று அவன் பக்கம் இல்லை. அவன் வலையை இழுக்கும் போது முன்பு போல வலை கனமாக இருந்தாலும் அதில் மீன்கள் இல்லை. அதற்குள்ளே ஒரு பெரிய வெண்கல கலசம் இருந்தது. அது இரும்பினால் அழுத்தமாக மூடப்பட்டு அரக்கினால் முத்திரையிடப் பட்டிருந்தது.

எனக்கு இன்று மீன் கிடைக்கக் கூடாது என்று அல்லா நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் என்று வருந்திய மீனவன் இந்த வெண்கல கலசத்தை விற்றுத்தான் இன்று சாப்பாட்டிற்கு வழி செய்ய வேண்டும் என்று எண்ணியபடி கலசத்தைக் குலுக்கினான். அந்தக் கலசம் மிகக் கனமாக இருந்தது. எனக்கு இன்று மீன் கிடைக்காவிட்டாலும் என் குடும்பத்தின் இன்றைய சாப்பாட்டிற்கு அல்லா வழி செய்துவிட்டார். அந்தக் கலசத்தையும் அதன் உள் இருக்கும் பொருட்களையும் அன்று சந்தையில் விற்றால் தனக்கு நல்ல பணம் கிடைக்கும் என்று எண்ணியபடி கலசத்தின் மூடியைத் திறந்தான். அவன் உள்ளே பார்த்தபோது அந்தக் கலசத்தில் ஒன்றுமே இல்லை.

ஆச்சரியத்துடன் கலசத்தைத் தலைகீழாகக் கவிழ்த்துக் குலுக்கினான்.. அவன் அதைத் திறந்தவுடன் வெண்புகை கிளம்பியது. அந்தப் புகையிலிருந்து கோபமான ஒரு மாய பூதம் வெளிப்பட்டது. அது பார்ப்பதற்கே மிக பயங்கரமாக இருந்தது. மீனவனைப் பார்த்த அந்த பூதம்’நான் உன்னைக் கொல்லப் போகிறேன்’ என்று உறுமிய படி அவனைத் தூக்கியது.

பயந்து போன மீனவன், ’ஐயா பூதமே நான் உங்களை விடுதலை செய்து இருக்கிறேன் நீங்கள் என்னைக் கொல்வேன் என்று சொல்வது நியாயமா’ என்றுக் கேட்டான்.

‘நீ என்னை விடுதலை செய்ததினாலேயே உனக்கு ஒரே ஒரு வரம் அளிக்கிறேன். அதன் பின் நான் உன்னைக் கொல்லத்தான் வேண்டும்’ என்று மீனவனை மிரட்டியது பூதம்.

‘ஆனால் நான் உனக்கு எந்தத் தீமையும் செய்யவில்லையே’ என்றான் மீனவன்.

‘அது அப்படித்தான். என் கதையைக் கேள். அப்புறம் நான் சொல்வது உனக்குப் புரியும்’ என்று சொல்லிய பூதம் தன் கதையைச் சொல்லத் தொடங்கியது.

இங்கு தன் கதையை நிறுத்தினாள். பொழுது புலர்ந்து விட்டது. அவள் கதையை முடிப்பதற்குப் பேரரசர் இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:05 am

ஷஹரஜாதின் கதையில் இருந்த பூதம் தன் கதையை மீனவனிடம் சொல்லத் தொடங்கியது.

“நான் மாய பூதங்களின் ராஜாவிற்கு எதிராக நடந்து கொண்டேன். என்னைத் தண்டிப்பதற்காக, என்னை இந்தக் கலசத்தில் அடைத்து, இரும்பு மூடியால் மூடினான். இந்த இரும்பு மூடி மிக மந்திர சக்தி வாய்ந்ததால், என்னால் வெளியே வர முடியவில்லை. அது மட்டும் போதாதென்று எண்ணிய எங்கள் அரசன், என்னைக் கடலில் வீசி விட்டான்.

கடலில் விழுந்த நான் ஒரு உறுதி பூண்டேன். முதல் நூறு ஆண்டுகளுக்குள்ளாக என்னை விடுவிப்பவனை அவன் இறந்த பின்னும் செல்வம் இருக்கும்படி செல்வந்தனாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் முதல் நூறு வருடம் யாருமே வரவில்லை. இரண்டாவது நூற்றாண்டில் என்னை விடுவிப்பவருக்கு உலகத்தில் உள்ள எல்லாப் பொக்கிஷங்களையும் வாரிக் கொடுப்பேன் என்று உறுதி பூண்டேன். ஆனால் யாரும் வரவில்லை. அதன்பின் என்னை விடுவிப்பவரை ஒரு தேசத்தின் பேரரசராக்குவேன் என்று உறுதி பூண்டேன். ஆனால் யாரும் என்னை விடுவிக்கவில்லை. அதனால் நான் மிகவும் கோபம் கொண்டேன். என்னை விடுவிப்பவரை நான் கொல்வதுதான் சரி என்று எண்ணிக் கொண்டேன். நீ என்னை விடுவித்து விட்டாய். அதனால் உன்னைக் கொல்வது தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி நிறுத்தியது பூதம்.

மீனவன் யோசித்தான். இந்த பூதத்திடமிருந்து தப்ப வேண்டுமானால் ஏதாவாது தந்திரம் செய்துதான் தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். எனவே பூதத்தைப் பார்த்து, “ஏ பூதமே! நீ சொல்லும் கதையை, நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட நீ, எப்படி இந்தச் சின்ன கலசத்தில் இத்தனைக் காலம் இருந்திருப்பாய்?’ என்று அப்பாவியாய் சொன்னான்.

கோபமுற்ற பூதம், “என்னையா நம்ப மறுக்கிறாய், முட்டாளே!” என்று சீறியது. மேலும், ‘இதோ பார்!’ என்று சொல்லித் தன் உருவத்தைப் புகை வடிவமாக்கிக் கொண்டு கலசத்திற்குள் நுழைந்தது. வினாடி தாமதியாத மீனவன் மீண்டும் அந்த வெண்கல கலசத்தை இரும்பு மூடி கொண்டு மூடினான். கலசத்திற்குள் இருந்து பூதம் தப்பிக்க முயன்றது. இரும்பு மூடியின் மந்திர சக்தியால் அதனால் கலசத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.

கலசத்திலிருந்த பூதத்தைப் பார்த்து மீனவன் சொன்னான், “ ஏ பூதமே!, நான் உன்னைக் கடலில் வீசப் போகிறேன். அது மட்டுமல்ல இங்கேயே வீடு கட்டி இருந்து இங்கு வரும் மீனவர்களுக்கு உன்னைப் பற்றி எச்சரித்து அனுப்பி விடுவேன். உன்னால் இனி, உதவி செய்பவர்களுக்கு துரோகம் செய்ய முடியாது” என்றான்.

தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த பூதம், “என்னை விட்டு விடு, நான் உனக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். நீ எது கேட்டாலும் செய்வேன்” என்று சொல்லியது. உடனே மீனவன், “ஏ பூதமே! நான் உன்னை நம்பினால் என்னுடைய கதையும் கிரேக்க மன்னனுக்கும் அவனுடைய மருத்துவனுக்கும் இடையே நடந்த கதையாய் ஆகி விடும்” என்று சொல்லித் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:05 am

பெர்ஷிய நாட்டில் யூனான் என்ற கிரேக்க அரசர் இருந்தார். புகழ் பெற்ற அந்த அரசர் அதிகமான செல்வங்களையும். பெரிய படைகளையும் கொண்டிருந்தார். ஆனால் அவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எந்தவித சிகிச்சைகளாலும் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. எத்தனையோ மருந்துகளைக் குடித்தாலும் மூலிகைப் பொடிகளை உட்கொண்டாலும் அவரது உடல் நிலையில் எந்த வித மாற்றமில்லை. எத்தனையோ மருந்து களிம்புகளைத் தடவியும் பயன் இல்லை. தனது தொழுநோயால் இந்த அரசர் தினம் அல்லல் பட்டார்.

அரசரது நோயைப் பற்றி கேள்விப்பட்ட எந்த ஒரு மருத்துவராலும் அரசரைக் குணப்படுத்த முடியவில்லை. இந்த வேளையில் அந்த ஊருக்கு ஒரு வயதான மருத்துவர் வந்தார். அவர் மருத்துவத் துறையில் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் கிரேக்கம், ரோமம், பெர்ஷிய மொழி, அரேபியம், சிரியன் ஆகிய மொழிகளில் கைதேர்ந்தவராய் இருந்தார். பல நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். பலவகை மருத்துவ சித்தாந்தந்தங்களிலும், செயல் முறைகளிலும் சிறந்து விளங்கினார். பலவித மூலிகைககளின் குணங்களைப் பற்றியும் அறிந்திருந்தார்.

அவர் நகரத்திற்கு வந்த ஓரிரண்டு நாட்களிலேயே அரசருடைய வியாதியைப் பற்றிக் கேள்விப்பட்டார். உடனே அரசவைக்குத் தயாராகிச் சென்றார்.

அரசவைக்குச் சென்ற மருத்துவர் மண்டியிட்டு அரசரை வணங்கினார். பின் அரசரை நோக்கி “அரசே, உங்களுடைய நோயைப் பற்றிய செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதை எந்த வித மருந்துகளும் இல்லாமல் என்னால் குணப்படுத்த முடியும்” என்றார். இதைக் கேட்ட அரசர் மிகவும் வியப்படைந்தார்.

“ஐயா மருத்துவரே, நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல மருந்துகள் எதுவும் இல்லாமல் என்னைக் குணமாக்கிவிட்டால் உங்களுடைய மூன்று தலை முறைகளுக்குக் குறையாத செலவத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன் ஆனால் நீங்கள் சொவது நிஜமா? உங்களால் உணமையாக என்னைக் குணப்படுத்த முடியுமா?” என்று கேட்டார்.

உடனே மருத்துவர்,"ஐயா நான் சொல்வது படி நீங்கள் செய்தால் எந்த வித மருந்துகளையும் குடிக்கத் தேவையில்லை. உங்கள் உடலிலும் எந்தவித களிம்புகளும் பூசிக் கொள்ள வேண்டாம்," என்று சொன்னார்.

"அப்படியானால் சிகிச்சையை எப்போது ஆரம்பிக்கலாம்," என்று ஆவலாக அரசர் கேட்டார்.

அதற்கு மருத்துவர், “நாளையே சிகிச்சையை ஆரம்பித்துவிடலாம்,” என்று சொல்லி அரசரிடம் விடை பெற்றுச் சென்றார்.

மருத்துவர் அந்த நகரத்திலேயே ஒரு வீடு அமர்த்தி தன்னுடைய சிகிச்சைக்குத் தேவையான வேலையை ஆரம்பித்தார். முதலில் ஒரு உள்ளீடற்ற காலியான கைத்தடியை உருவாக்கினார். அதற்குள் அரசருக்குத் தேவையான மருந்துகளையும் மூலிகைகளையும் உள்ளே வைத்து அழகிய வேலைப்பாடுள்ள கைப்பிடியால் மூடினார். அரசருக்கு ஒரு அழகான கைத்தடி தயாரானது. அதை எடுத்துக் கொண்டு அரசரைக் காணச்சென்றார்.

“அரசே, நீங்கள் இந்தக் கைத்தடியைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடன் போலோ பந்தாட்டத்தை குதிரையில் ஏறி நன்றாக ஆடுங்கள். உங்கள் கைச்சூட்டினால் இந்தக் கைத்தடி சூடாகும். அதன் பின் உங்களுக்கு நன்றாக வியர்க்கத் தொடங்கும். அப்படி உங்கள் உடல் முழுவதும் வியர்வை ஆறாய்ப் பெருகும் வரை விளையாடுங்கள். அதன் பின் நல்ல தைலங்கள் நிறைந்த நீரில் குளித்து இரவு முழுவதும் ஓய்வெடுங்கள். நீங்கள் இப்படிச் செய்தாலே உங்கள் நோய் உங்களை விட்டு ஓடிவிடும்,” என்றுக் கூறினார்.

அந்த கிரேக்க அரசரும் அப்படியே செய்தார். அவர் விளையாடும் போது அவர் கை வழியாக கைத்தடியிலிருந்த மருந்து அரசரின் உடலில் புகுந்தது. மருந்து உடலில் வேலை செய்யச் செய்ய அவருக்கு வியர்த்து ஒழுகியது. அதன் பின் மருத்துவர் சொன்னபடி நீராடி இரவில் நல்ல நித்திரை செய்தார். விழித்துப் பார்க்கும் போது அவரது உடலில் தொழு நோய்க்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. அவரும் புத்துணர்ச்சியோடு இருந்தார். மருத்துவரின் சிகிச்சை நல்ல பலனை அளித்து இருந்தது.

மனம் மகிழந்த அரசர் மருத்துவருக்கு மிக விலை உயர்ந்த பரிசுகளைக் கொடுத்து தன்னுடைய இருக்கைக்கு அருகிலேயே அமர்த்திக் கொண்டார். அது மட்டுமல்லாமல் மருத்துவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து அவருக்கு தினம் ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கும் படி ஆணையிட்டார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிரேக்க அரசவையின் மந்திரி அரசரைத் தனிமையில் சந்தித்தார். மந்திரி அரசரை எச்சரிக்கும் விதத்தில் “அரசே, இந்த மருத்துவர் யார் என்று தெரியாமல் இவர் மேல் இத்தனை நம்பிக்கை வைப்பது தவறு இது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று கூறினார்.

மந்திரி சொன்னதைக் கேட்ட அரசர், “மந்திரியே, நீர் மருத்துவரின் மீது மிகுந்த பொறாமை கொண்டு இருக்கிறீர் என்று தெரிகிறது. இல்லையென்றால் நீர் இப்படி பேச மாட்டீர். என்னை இந்த மருத்துவர் கொல்ல வேண்டுமென்றால் என் நோயைக் குணப்படுத்தத் தேவையேயில்லையே” என்றவர் தொடர்ந்து, “சிந்துபாத் அரசரின் கதையில் வரும் மந்திரியின் வார்த்தைகள் எனக்கு நன்கு நினைவு இருக்கிறது,” என்று சொல்லிப் புன்னகைத்தார் கிரேக்க அரசர்.

உடனே, “அரசே, அந்த கதையை எனக்குச் சொல்ல வேண்டும்” என்று கிரேக்க மந்திரி தன் அரசரை வேண்டினார். அரசரும் தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்

கதையை இந்த இடத்தில் நிறுத்தினாள் ஷஹரஜாத். உடனே அவள் தங்கை, “அக்கா, உன் கதை எவ்வளவு சுவாரசியமானதாக இருக்கிறது. கேட்பதற்கே இன்பமாக இருக்கிறது” என்றாள்.

“தங்கையே, இதை விட சுவாரஸியமான கதைகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. வாய்ப்புக் கிடைத்தால் நாளை சொல்வேன்” என்றாள் ஷஹரஜாத்.

அவளின் கதைகளைக் கேட்கும் ஆவலில் அவளது தண்டனையைத் தள்ளிப் போட்டார் அரசர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2009 2:06 am

ஷஹரஜாதின் தங்கை, “அக்கா உனக்குத் தூக்கம் வரவில்லையானால் கதையைத் தொடர்கிறாயா?” என்று கேட்டாள். ஷஹரஜாதும் கதையைத் தொடர்ந்தாள்.

மீனவன் சொல்ல பூதம் கதை கேட்டுக் கொண்டிருந்தது. கிரேக்க மன்னன் தன் மந்திரியிடம், “மந்திரியே, நான் உங்கள் சொல் கேட்டு இந்த மருத்துவரைக் கொன்றால் சிந்துபாத் அரசர் தனது செல்லப் பறவையான வல்லூறைக் கொன்ற பின் வருந்தியது போல வருந்த வேண்டியிருக்கும்” என்றார்.
அதற்கு அந்த மந்திரி, “அரசே, எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்.

“உலகம் ஆளும் சிந்துபாத் அரசர் தன்னுடைய செல்லப் பிராணியாக ஒரு வல்லூறை பிரியமாக வளர்த்து வந்தார். அந்தப் பறவை எப்போதும் அவர் கையிலேயே இருக்கும். அவர் எங்கு சென்றாலும் அந்தப் பறவை அவருடனே இருக்கும்.அதன் கழுத்தில் ஒரு சின்னக் குவளை கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அதில் தான் அரசர் வல்லூறுக்கு நீர் கொடுப்பார்.

ஒரு நாள் அரசர் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றார். காட்டிற்குச் சென்று வலை விரித்துக் காத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையில் ஒரு மான் துள்ளிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்த அரசர், “வீரர்களே, எவன் ஒருவன் இந்த மானைத் தன் தலையைத் தாண்டி குதிக்க அனுமதிக்கிறானோ அவனுக்கு மரணம்” என்று அறிவித்தார். துள்ளி வந்த மான் அரசரின் முன் மண்டியிட்டு அவரை வணங்குவது போல தலை தாழ்த்தியது. அதைக் கண்டு குதிரை மேல் அமர்ந்திருந்த சிந்துபாத் அரசரும் தனது வில்லைத் தாழ்த்தி அந்த மானுக்கு பதில் வணக்கம் செய்தார். மறுவினாடி அந்த மான் அரசரின் தலையைத் தாண்டிக் குதித்துச் சென்றது.

திரும்பித் தன் பரிவாரங்களைப் பார்த்த அரசர் அவர்கள் தன்னைக் காட்டி ஏதோ பேசிக் கொள்வதைக் கண்டார். தன்னுடைய ஆணையைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த அரசர், உடனே அந்த மானைத் துரத்தி வேகமாகத் தன் குதிரையைச் செலுத்தினார்.

காட்டினுள் வெகுதூரம் சென்றுவிட்டார். அவருடனேயே அவருடையச் செல்லப் பறவையும் சென்றது. அது அரசருக்கும் மானுக்கும் முன்னால் பறந்து போய் மானின் கண்களைக் குருடாக்கியது. அரசர் தன் அம்பினால் அந்த மானை வீழ்த்தினார்.

அரசரும் குதிரையும் வேட்டையாடிய களைப்பாலும் தாகத்தாலும் மிகவும் தவித்தனர். எங்கு தேடியும் குடிப்பதற்கு நீர் கிடைக்கவில்லை. அப்போது ஒரு மரத்திலிருந்து வெண்ணெய் உருகி வழிவது போல நீர் விழுந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த அரசர், வல்லூறின் கழுத்திலிருந்த குவளையை எடுத்து மரத்திலிருந்து வழியும் நீரைப் பிடித்து தன் செல்லப் பிராணிக்குக் குடிக்கக் கொடுத்தார். ஆனால் நீரை அருந்தாமல் வல்லூறு அதைத் தட்டிவிட்டது. அரசர் அந்த நீரைப் பிடித்துத் தன் குதிரைக்குத் தந்த போதும் வல்லூறு மீண்டும் ஒரு முறை அந்தக் குவளையைத் தட்டி விட்டது. அரசர் தானும் அந்த நீரைக் குடிக்க முயன்றார். வல்லூறு அதையும் தட்டி விட்டது.

கோபம் கொண்ட அரசர் தன் வாளால் அந்தப் பறவையின் சிறகுகளை வெட்டினார். “ஏய் பறவையே, உனக்கு நீர் அருந்த விருப்பமில்லையேல் என்னையும் குதிரையையும் ஏன் தடுக்க வேண்டும்?” என்று கோபப்பட்டார். காயப்பட்டு விழுந்த பறவை தன் தலை அசைவுகளால் மரத்தின் மேலே பார்க்கும்படி அரசரைத் தூண்டியது. அப்படியே தன் தலையை நிமிர்த்திப் பார்த்த அரசர் மரத்தின் மேல் இருந்து விழுந்தது நீர் இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டார். மரத்தின் மேல் கூட்டமாக இருந்த கட்டுவிரியன் பாம்புகளின் வாயிலிருந்து வழியும் விஷத்தையே தான் நீராகக் கருதிவிட்டதை எண்ணி வருந்தினார். தன்னுடைய கவசங்களினாலேயே தான் விஷம் தன் உடலில் நேரடியாக படவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். தன்னையும் குதிரையையும் காப்பாற்ற வல்லூறு செய்த செயல்களைப் புரிந்து கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டார்.யோசனை இல்லாமல் தன் செல்லப் பிராணியைக் காயப்படுத்திவிட்டதை எண்ணி வேதனைப் பட்டார்.

காயப்பட்ட பறவையையும் அடித்து வீழ்த்திய மானையும் எடுத்துக் கொண்டு தன் பாசறைக்கு மன்னர் வந்தார். அவரது மடியிலேயே அவரது செல்லப் பிராணி வல்லூறு இறந்து போனது.

“இது தான் பேரரசர் சிந்துபாதிற்கு நடந்தது. நான் இனியும் நீ சொல்வது போல் செய்தேனானால் எனக்கும் கிளியைக் கொன்ற மனிதனுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது” என்று மந்திரியிடம் சொன்ன கிரேக்க மன்னன் தன் கதையைத் தொடர்ந்தான்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக