ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனி ஜோதிடம் தெரியுமா.............

4 posters

Go down

கனி ஜோதிடம் தெரியுமா............. Empty கனி ஜோதிடம் தெரியுமா.............

Post by aarul Mon 23 Nov 2009 - 16:33

கனி ஜோதிடம் தெரியுமா.............

கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில்
இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி
நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப்
பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.


கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும்
கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா
என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!


மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான
ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள
மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ
மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள்
இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
விரும்புவீர்களே தவிர சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள்.
மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்...
கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம்
கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள்
வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.



உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்.... நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே
மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப்
பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால் உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன்
கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான்.
உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப்
பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள்.
உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும்
அன்பும் நிலவும்.



ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு பொறுமையும்இ அதே அளவு
திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின
உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும்.
நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக
இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த
அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன்
தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.



ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத்
தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும்
வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப்
படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள் ஒரு குழுவிற்குச்
சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும் முன்னேறிச் செல்வீர்களே
தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும்
ஈடுபாட்டிலும் செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர்
நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.



அன்னாசியை ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென
ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு
அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை
மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக
இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில்
உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும் நேர்மையாகவும்
இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள்
ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத்
தொடர்வீர்கள். உங்கள் துணைவர் ஃ துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால்
ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை
சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.



பேரிக்காய்ப்பிரியர்களே! உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில்
ஈடுபடுத்தினால் அதை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது
என்பது நிரம்பவும் கடினம் உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன்
தொடங்கிவிட்டு இடையிலே கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும்
உடனடியாகப் பலன் தெரிந்தாக வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும்
தெம்பும் உடையவர். யாருடனும் எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை
நீண்ட நாள் தொடர்வதில் அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.



திராட்சை விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக
மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு
கொள்ளாது' என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம்
பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு.
அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ
எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு
இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும்
குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள்
வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச்
செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள்.
வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள்
வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச
நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும்.
அவ்வளவுதான்.



செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடுதான்.
குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம்
விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான
இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கும்.
சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும். உங்களுக்குக்
கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான சலிப்பு
தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால் விளம்பரத்துறை ஓவியம்
கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக
இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம்
கற்றுக்கொள்ளவேண்டும்.



சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு? அப்படியென்றால் நீங்கள் கொஞ்சம்
கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும் ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை
சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு
அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள். ஆனால் அவசரமோ பதற்றமோ உங்கள்
பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும் மிக்கவர். விரிவாக விளக்கப்
படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள் தொடர்பான பணிதான் உங்களுக்கு
மிகவும் பிடித்தமான உங்களுக்குப் பொருத்தமான பணியாக இருக்கும். புற அழகு
அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும்
என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக
நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால்
அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள்
குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும் நிறைந்தவராக இருப்பதால் உங்கள்
பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.



இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன
என்று தெரிந்துகொண்டு அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க
வையுங்களேன்!!!!!!!

படித்ததில் பிடித்தது
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

கனி ஜோதிடம் தெரியுமா............. Empty Re: கனி ஜோதிடம் தெரியுமா.............

Post by செரின் Mon 23 Nov 2009 - 16:36

கனி ஜோதிடம் தெரியுமா............. 838572 கனி ஜோதிடம் தெரியுமா............. 838572 கனி ஜோதிடம் தெரியுமா............. 838572 மேலே உள்ள எதுவுமே பிடிக்கல என்னா???
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கனி ஜோதிடம் தெரியுமா............. Empty Re: கனி ஜோதிடம் தெரியுமா.............

Post by VIJAY Mon 23 Nov 2009 - 16:45

திராட்சை விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக
மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு
கொள்ளாது' என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம்
பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு.
அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ
எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு
இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும்
குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள்
வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச்
செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள்.
வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள்
வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச
நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும்.
அவ்வளவுதான்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கனி ஜோதிடம் தெரியுமா............. Empty Re: கனி ஜோதிடம் தெரியுமா.............

Post by aarul Mon 23 Nov 2009 - 16:54

நீங்கள் தெய்வ பிறவி
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

கனி ஜோதிடம் தெரியுமா............. Empty Re: கனி ஜோதிடம் தெரியுமா.............

Post by தாமு Mon 23 Nov 2009 - 17:35

நீங்கள் தெய்வ பிறவி

கனி ஜோதிடம் தெரியுமா............. Affraid கனி ஜோதிடம் தெரியுமா............. Affraid கனி ஜோதிடம் தெரியுமா............. Affraid
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கனி ஜோதிடம் தெரியுமா............. Empty Re: கனி ஜோதிடம் தெரியுமா.............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனி ஜோதிடம் தெரியுமா.............
» ஜோதிடம் என்பது அறிவியலா?-
» எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum