புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
17 Posts - 4%
prajai
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
8 Posts - 2%
jairam
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
Jenila
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விதிவிலக்கா, எதற்காக? Poll_c10விதிவிலக்கா, எதற்காக? Poll_m10விதிவிலக்கா, எதற்காக? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிவிலக்கா, எதற்காக?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 09, 2013 9:43 am

திரைப்படத் துறைக்கு சேவை வரி கூடாது என்ற கோரிக்கையைவலியுறுத்தி தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் அனைவரும் திங்கள்கிழமை (ஜனவரி 7) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இது வெறும் அடையாள உண்ணாவிரதம் மட்டுமே. மத்திய அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காவிடில் மேலும் சில போராட்ட உத்திகளில் திரையுலகம் ஈடுபடக்கூடும்.
:-
திரையுலகின் நூற்றாண்டு தொடக்க விழா ஆண்டாகிய 2012-இல் திரையுலகம் மீது வரிகளை விதிக்க மாட்டோம் என்று 2012 மார்ச் முதல் வாரத்தில், அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி கூறினார். பட்ஜெட்டில் சேவை வரி 12.36% ஆக உயர்த்தப்பட்டபோது, சேவை வரிப் பட்டியலில் திரையிடுவோர், விநியோகஸ்தர்களுக்கு விலக்கு அளித்ததற்காக அப்போது திரையுலகம் அவருக்கு நன்றியும் தெரிவித்தது.
:-
ஆனால், மத்திய அரசு ஜூன் மாதம் வெளியிட்ட சில சுற்றறிக்கைகள், சேவை என்றால் என்ன என்று வகைப்படுத்தியது. இதில் திரைத்துறை கலைஞர்கள் இடம்பெறும் கட்டாயம் ஏற்பட்டது. இப்போது இந்த சேவை வரியை எதிர்த்துத் திரையுலகினர், சின்னத்திரைக் கலைஞர்கள் அனைவரும் களம் இறங்கியுள்ளனர்.
:-
நடிகர்கள் மட்டுமின்றி கேமராமேன், எடிட்டிங் செய்பவர், ஒலிப்பதிவு செய்யும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் தங்கள் வருமானத்தில் 12.36%சேவை வரி செலுத்த வேண்டும். ஒரு தயாரிப்பாளர் பட விநியோகஸ்தர்களுக்கு படத்தைத் திரையிடும் உரிமையை வழங்குவதால் (காப்பிரைட்) கிடைக்கும் பணத்துக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
:-
இத்தகைய சேவை வரி விதிப்பினால், ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் பெறும் நடிகர், ரூ. 12.36 லட்சம் சேவை வரி கட்ட வேண்டும். ஆனால், அந்த நடிகர் இந்த சேவை வரியை படத் தயாரிப்பாளரே செலுத்த நிர்பந்திப்பார் என்றும் இத்தகைய நடைமுறையால் கருப்புப் பணம்தான் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.
:-
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "இப்படி வரி போட்டால் கருப்புப் பணம்தான் அதிகமாகும். கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால்தான் அரசுக்கு அதிகப் பணம் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.
:-
இத்தகைய வரிவிதிப்பை மத்திய அரசு கொண்டுவரக் காரணம், இன்று இந்தியத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையுலகம் அடைந்துள்ள மாற்றமும், இத்தொழிலில் உருவாகியுள்ள புதிய நடைமுறைகளும்தான்.
இன்றைய திரையுலகம் வெறும் திரையரங்குடன் நிற்கவில்லை.திரையரங்குகள் மூலம் அரசுக்கு வரும் கேளிக்கை வரி மிகமிக சொற்பம். தற்போது 600 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் ஒவ்வொரு வீடும் ஹோம் தியேட்டராக மாறிவிட்டது. 3ஜி தொழில்நுட்பம் மேலும் பரவலாகும்போது, செல்போனில்,டேப்லெட்டில் திரைப்படம் அல்லது சின்னத்திரை சீரியல்களைப் பார்க்க முடியும். ஆகவே சேவை என்பதன் பொருளை மத்திய அரசுவிரித்துக்கொண்டே போகிறது.
:-
ஓராண்டில் சுமார் 1,000 திரைப்படங்களும் 9,000 சீரியல்களும் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒலிப்பதிவு, பாடல்பதிவு, ஸ்டுடியோ எல்லாமும் மிகச் சிறிய அளவில், ஒரு வீட்டுக்குள் இருந்தாலே போதும் என்ற அளவுக்கு கணினித் தொழில்நுட்பம் எல்லைகளைச் சுருக்கியுள்ளது.
:-
அதுமட்டுமல்ல, இந்தியாவில் செலவு குறைவு என்ற காரணத்தால், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் சில அனிமேஷன் படங்களும், எடிட்டிங் பணிகளும் இந்தியாவுக்கு அயல்பணி ஒப்பந்தமாக வருவது அதிகரித்துள்ளது.
:-
மேலும், திரைப்பட காட்சித்தொகுப்புகளை, பாடல்களை, அல்லது படம் முழுவதையும் தனியார் தொலைக்காட்சிகள் பயன்படுத்திக்கொள்ள, ஒளிபரப்பு உரிமைகளை வழங்குவதிலும் புதிய நடைமுறைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு படம் முடியும் முன்பாகவே இந்த உரிமைப் பரிமாற்றம் நடந்துவிடுகிறது. வெளிநாட்டுப் படங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு, நேரடியாக தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
:-
"விஸ்வரூபம்' போன்று, ஒரு படத்தை நேரடியாக, டி.டி.எச் மூலம் வெளியிடலாம் என்கின்ற அளவுக்கு தொழில்நுட்பம் விரிந்துள்ளநிலையில், திரை மற்றும் சின்னத்திரை சேவை வகைப்பாட்டில் தானே சிக்கிக்கொள்கிறது.
:-
இந்த வரி விதிப்பினால், தயாரிப்புச் செலவு கூடும், இந்தச் செலவு கடைசியாக மக்கள் மீதுதான் வந்து விழும் என்று சொல்கிறார்கள். இந்த வாதம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருக்கலாம். திரையரங்குகளைத் தேடி வந்து பார்க்கும் மக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட இந்த நாளில் இந்த வாதம் பொருந்தாது.
:-
பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, அவர்களது சேவை வரியை அவர்களே கட்டினாலே போதும், தயாரிப்புச் செலவு பெரிதும் குறைந்துவிடும்.
திரைப்படம் என்பது திரைத்துறையோடு நின்றுவிடும் நிலைமை இன்றில்லை. திரையரங்குகள் என்பதைத் தாண்டி, தனியார் தொலைக்காட்சிச் சேனல்களுடன் தொடர்புடைய தொழிலாக திரைத்துறை மாறிவிட்டது. திரைத்துறைக்கு சேவை வரி விலக்கு அளிப்பதன் பெரும்பயன் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத்தான் மறைமுகமாகப் போய்ச் சேரும்.
:-
நடிக, நடிகையரும், திரையுலகஊழியர்களும் மாதச் சம்பளம் பெறுபவர்கள் அல்ல. ஒப்பந்தப் பணியாளர்கள். ஒப்பந்தம் என்றாலே அதற்கு சேவைவரி உண்டு. சிகையலங்காரம், அழகுக் கலை வல்லுநர்கள் போன்றவர்களுக்கே சேவை வரி உண்டு எனும்போது, லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் பெறும் திரைப்படத் துறையினருக்கு எதற்காக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று புரியவில்லை.
:-
வழக்கில் ஆஜராவதற்கு நாளொன்றுக்கு லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெறும் வழக்குரைஞர்களை மட்டும் வழக்குரைஞரான நிதியமைச்சர் ஏன் சேவை வரி வரம்பில் சேர்க்காமல் விட்டு வைத்திருக்கிறார்? அவர்களுக்கு ஏன் விதிவிலக்கு என்கிற கேள்வியையும் இந்த நேரத்தில் எழுப்பத் தோன்றுகிறதே...
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக