புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
102 Posts - 53%
heezulia
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
42 Posts - 63%
heezulia
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கானல் நீர்.....‎ Poll_c10கானல் நீர்.....‎ Poll_m10கானல் நீர்.....‎ Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானல் நீர்.....‎


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:09 pm

ஜனனி தன் சீமந்தம் முடிந்து தலைப்பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு குதூகலமாய் ‎சென்றாள். கனவுகளுடன் தன் குருதியில் உருவாகும் குழந்தையைக் காணும் ‎ஆவலில் அவள்...‎
நாட்கள் கனவுகளுடன் நகர்ந்தது. மெல்ல இடுப்பு வலி எட்டிப் பார்க்க, ‎பிறக்கப்போகும்

குழந்தையைப் பற்றிய கற்பனையில் வலியை மறந்து ஜனனி. ‎‎”எட்டாம் மாசக் குழந்தை தொட்டில் ஏறாதே, கடவுளே இது பிரசவ வலியாக ‎இருக்கக் கூடாதே” என ஜனனியின் தாய் பதட்டத்தில்.‎

அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்...ஜனனியும், தாயும் மகிழ்ச்சியில் ‎திளைத்திருக்க..முதல் குழந்தை அதுவும் ஆண் குழந்தை, அவர்களின் மகிழ்விற்கு ‎எல்லை ஏது? அதிக நேரம் நீடிக்கவில்லை அந்த மகிழ்ச்சி...குழந்தையின் மூளைக்கு ‎இரத்தம் செல்லவில்லையாம்.. செவிலித்தாய் குழந்தையை அவசரப் பிரிவிற்கு ‎அள்ளிச் செல்ல, ஜனனி மயக்க நிலையில்..தாயோ கவலையின் ‎உச்சத்தில்..நல்லபடியாக குழந்தை பிழைக்க வேண்டுமே என நினைவில் வந்த ‎அனைத்து தெய்வங்களையும் வேண்டி நின்றாள்..

ஜனனி கண்விழித்தவுடன், அம்மா குழந்தை எங்கே? ”சிகிச்சை ‎நடைபெறுகிறது..இரண்டு நாள் நீ பால் கொடுக்க கூடாதாம்..மருத்துவர் சொன்னார்..” ‎ஏன்? அதிர்ந்தாள் ஜனனி..”குழந்தை உடல் பாதிக்குமாம்..” பிறந்த குழந்தைக்கு பால் ‎கொடுக்கக் கூட முடியவில்லையே..உள்ளூர வருந்தினாலும், அம்மா கவலைப் ‎படக்கூடாதே என, இரண்டு நாள் தானே என்று தன்னை சமாதானப் ‎படுத்திக்கொண்டாள்..அம்மா ஏன் முகத்தில் கவலையாக இருக்கிறாய் ஜனனி கேட்க, ‎‎”அப்படியெல்லாம் இல்லை..சற்று சோர்வாக இருக்கு அவ்வளவுதான்”

அன்று மதியம் ஜனனியின் மாமனாரும்,மாமியாரும் வர, அவர்களை சிரித்த ‎முகத்துடன் வரவேற்ற ஜனனி குழந்தையைப் பார்த்தீர்களா என கேட்க, ஹ்ம்ம் ‎பார்த்தோம்..என்று கூறியபடியே..உங்களுக்கு வேறு மருத்துவமனையே ‎கிடைக்கவில்லையா..அனைவரும் வந்து செல்லும் இந்த அரசாங்க ‎மருத்துவமனையில் சேர்த்து..இப்படி எங்களையெல்லாம் இங்கே வரவழைத்து ‎விட்டீர்களே என கடிந்தார் மாமனார். புன்னகையுடன் அமைதியாய் ஜனனி.

மாலை அனைவரும் வீடு திரும்ப, கார் வரவழைத்து அனைவரும் அமர்ந்தபிறகு, ‎ஜனனி அம்மாவிடம், குழந்தையை ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என ‎புருவம் உயர்த்த, “குழந்தை இன்னும் இரண்டு நாள் இங்கு சிகிச்சை பெற ‎வேண்டுமாம்..நீ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவர்கள் ‎கூறிவிட்டனர்..நான் வந்து கவனித்துக் கொள்கிறேன் வா” அம்மாவைப் பின் ‎தொடர்ந்து காரில் அமர்ந்தாள்.‎
வீட்டு வாசலையடைந்த ஜனனி குழந்தையில்லாமல் தான் மட்டும் தனியாக ‎செல்வதை எண்ணி வெறுமையாய் உணர்ந்தபடியே உள்ளே நுழைய எத்தனிக்க ‎என்ன ஜனனிமா உன் புள்ள இறந்துட்டானாமே..? பாவம் தளச்சம்புள்ளைய இப்படி ‎பரிகொடுத்திட்டியே தாயி...‎
ஐயோ பாட்டிம்மா, மெதுவா பேசுங்க.அம்மா காதுல விழுந்தா சண்டைக்கு ‎வந்துடுவாங்க..குழந்தை இறக்கவில்லை..நல்லாத்தான் இருக்கான்..நாளைக்கு ‎அழைச்சிக்கிட்டு வந்திடுவோம். ஜனனியை ஒருமாதிரி பார்த்தவாறே உள்ளே ‎சென்ற பாட்டி..எவ்வளவு அழகான பிள்ளை இப்படி சவமா வந்திருக்கானே ‎அழுகுரல் கேட்க, உள்ளே விரைந்து சென்ற ஜனனி அந்தக் காட்சியைக் கண்டதும் ‎சிலையாய் உறைந்து நின்றாள். பையிலிருந்து இறந்த குழந்தையை வெளியில் ‎எடுத்துக்கொண்டிருந்தாள் அம்மா..

இப்படி உத்துப் பாக்காத தாயி அழுதிடுமா என பக்கத்து வீட்டுப் பாட்டி கூற, அம்மா ‎இறந்த தன் குழந்தையைக் கையில் கொடுக்க..நெருப்பிலிட்ட புழுவாய் மனம் ‎துடிக்கிறது..அழக்கூடத் தோன்றாமல் மனம் கணக்க, அப்படியே உட்கார்ந்து அமைதி ‎காத்தாள்..இரண்டு பாட்டியும் குழந்தைக்கு செய்ய வெண்டிய சடங்குகளை செய்து ‎முடித்து வீட்டின் கொல்லைப்புறத்தில் குழந்தையைப் புதைத்தும் ஆயிற்று.. தன் ‎உணர்வை வெளிப்படுத்தக் கூடத் தெரியாமல் மௌனத்தைத் தொடர்ந்தாள் ஜனனி.‎

கொல்லைப்புறம் செல்லும்போதெல்லாம், குழந்தையின் முகம் கண்ணில் ‎தோன்றுகிறது..இரவில் குழந்தை அழும் குரல் கேட்டால் தன் குழந்தை அழுவதாய் ‎உணர்ந்து பாலூட்ட எத்தனிக்க, அழுதது தன் குழந்தை இல்லை என தன்னுணர்வு ‎பெற்று., பின் இரவெல்லாம் விழித்து கண்ணீரில் கரைந்த இரவுகள் காலமெல்லாம் ‎நினைவில் வருகிறது.

அவள் நினைவில் வந்து உறுத்துவது குழந்தையின் இறப்பு மட்டுமல்ல.
தன் குழந்தையைப் பரிகொடுத்ததுக் கூடத் தெரியாமல் இருக்கும் ஒரு தாயிடம் ‎ஆறுதலாய் பேசக் கூடத் தோன்றாமல் ஆசாரத்தை மனதில் கொண்டு அரசாங்க ‎மருத்துவமையில் சேர்த்ததற்காக சண்டையிட்ட தன் மாமனார், மாமியாரின் ‎மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் இப்படியும் மனிதர்களா என்ற ‎விரக்தியும் மேலோங்கி நின்றது....

பாசமில்லா இடத்தில், பாசத்தை எதிர்நோக்கும் இவள் கானல் நீரை அருந்தக் ‎காத்திருக்கும் பேதையோ....??

இப்படி பாசமற்ற மனிதர்களிடம் பாசத்தை எதிர்பார்த்தது அவள் குற்றமா? ‎அல்லது பாசத்தை எதிர்பார்ப்பவளிடம் பாசத்தைக் காட்டாதது அவர்கள் ‎குற்றமா?‎


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 12:13 pm

ஈரம் பேசும் கதை...இரக்கமற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பது ஜனனியின் குற்றம் மட்டுமன்று ... ஜனங்களின் குற்றமும் கூட...

நல்ல கதை...வாழ்த்துகள் காயத்ரி வைத்யநாதன்...



கானல் நீர்.....‎ 224747944

கானல் நீர்.....‎ Rகானல் நீர்.....‎ Aகானல் நீர்.....‎ Emptyகானல் நீர்.....‎ Rகானல் நீர்.....‎ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 1:17 pm

ரா.ரா3275 wrote:ஈரம் பேசும் கதை...இரக்கமற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பது ஜனனியின் குற்றம் மட்டுமன்று ... ஜனங்களின் குற்றமும் கூட...

நல்ல கதை...வாழ்த்துகள் காயத்ரி வைத்யநாதன்...

ம்ம் உண்மைதான்..கிடைக்காது எனத்தெரிந்தும் எதிர்பார்ப்பது அறிவின்மையையே காட்டுகிறது...நன்றி



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 1:27 pm

கானல் நீர் தான் என தெரிந்தும்
கண்ணீர் விடுவது தவறு.

அன்பிற்கு விலையில்லாத பொழுது
இந்தக் கண்ணீருக்கா விலை இருக்கப் போகுது?

கதை நன்று காயத்ரி.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக