புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
69 Posts - 58%
heezulia
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
111 Posts - 59%
heezulia
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_m10காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2012 6:18 am

காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Gallerye_015807609_552907

"காதல்' என்ற பெயரில் சமீபநாட்களாக தமிழகத்தில் அங்குமிங்குமாக நிகழும் கொலைவெறிகள், ரத்தத்தை ஒரு கணம் உறைய வைப்பதாக உள்ளன. கோவை புறநகரில் வீடு புகுந்து, கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று, "ஆசிட்' ஊற்றி எரித்து, அந்த நெருப்பிலேயே தானும் விழுந்து தற்கொலை செய்துகொண்டான் காதலன்.

இக்கொடூர சம்பவத்தை தடுக்க முயன்ற, மாணவியின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சினிமாவையும் மிஞ்சும் வகையில் அரங்கேறிய இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், "எங்களாலேயே அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை, இதுபோன்ற கொடூர சம்பவ வழக்கை இதற்குமுன் நாங்கள் விசாரித்ததில்லை,' என்கின்றனர்.

கோவை, காளப்பட்டி, பள்ளி வீதியைச் சேர்ந்தவர் அசீம்(22). பீளமேடு ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரியில் எம்.ஐ.பி., (மாஸ்டர் ஆப் இன்டர்நேஷனல் பிசினஸ்) முதலாமாண்டு படித்து வந்தார். வடவள்ளி, தோப்பில் நகர், வீரமாத்தியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த தொழிலதிபர் சஜீவ்மேனன் மகள் ஸ்ருதி(22). இருவரும் இளங்கலை படித்தபோதிருந்தே காதலித்துள்ளனர். முதுகலை படிப்பை துவக்கிய நிலையில் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. காதலனை சந்திப்பதை ஸ்ருதி தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அசீம், நேற்று முன்தினம் மாலை, வடவள்ளியிலுள்ள ஸ்ருதியின் வீட்டுக்கு தனது காரில் சென்றுள்ளார். காம்பவுண்டுக்கு வெளியே சாலையில் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த இவரை, ஸ்ருதியின் தாயார் லதா தடுத்து வாக்குவாதம் செய்துள் ளார்.

அடுத்தகணமே அசீம், கத்தியால் சரமாரியாக குத்த, ரத்த வெள் ளத்தில் சரிந்தார் லதா; கை, கால், வயிறு, மார்பு என 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. தொடர்ந்து, காதலி ஸ்ருதி இருந்த அறைக்குள் நுழைந்து, அவரையும் சரமாரியாக 9 இடங்களில் குத்தினார்.கொலைவெறி அத்துடன் அடங்கவில்லை. தான் கொண்டு வந்திருந்த "ஆசிட்'டை ஸ்ருதியின் மீது ஊற்றி தீ வைத்தார். ஏற்கனவே கத்தி குத்துகளால் குற்றுயிராய் கிடந்த ஸ்ருதியின் உடலெங்கும் நெருப்பு பற்றி எரிய, தன் மீதும் "ஆசிட்'டை ஊற்றியவாறு, காதலியின் உடல் மீது விழுந்தார். அடுத்த வினாடியே காதலனையும் எரித்தது நெருப்பு. அந்த அறையில் இருந்த "சோபா செட்' உள்ளிட்ட பொருட்களும் எரிந்ததால், ஜன்னல் வழியே வெளியேறிய புகையை பார்த்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். வாசலில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லதாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இன்னும் சிலர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, நெஞ்சத்தை உறைய வைத்த காட்சி அரங்கேறியிருந்தது. ஸ்ருதியும், ஒரு வாலிபரும் கரிக்கட்டையாக நெருப்பில் கிடந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் டி.எஸ். பி., சண்முகம், வடவள்ளி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். டில்லியிலுள்ள ஸ்ருதியின் தந்தை சஜீவ்மேனனுக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஸ்ருதியின் தாயார் லதா, சுய நினைவு திரும்பி, நடந்த சம்பவத்தை விவரித்தால் மட்டுமே நடந்த சம்பவம் குறித்த மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்கின்றனர், போலீசார்.

"காதலின் நினைவாக ஏதாவது கொடு...!'

வடவள்ளி போலீசார் கூறியதாவது:அசீம், ஸ்ருதி இருவரும் பி. ஐ.எம்., (பேச்சுலர் ஆப் இன்டர்நேஷனல் பிசினஸ்) படிக்கும்போதிருந்தே காதலித்துள்ளனர்.

இருவரும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, எம்.ஐ.பி., (முதுகலை) ஒன்றாக படித்துள்ளனர். இருவரது காதலுக்கு ஸ்ருதியின் அம்மா லதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து காதலனை விட்டு கொஞ்சம், கொஞ்சமாக ஸ்ருதி விலகத்துவங்கியுள்ளார். இருப்பினும், அசீம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், தான் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பெங்களூருக்கு வேலைக்கு செல்வதாகவும், தனக்கு ஏதாவது ஒரு பொருளை காதல் நினைவாக தரவேண்டுமென காதலியிடம் அசீம் கேட்டாராம். இதற்கு ஸ்ருதி மறுத்ததால் ஆவேசமடைந்து, அதன் பிறகே இச்சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

ஸ்டீல் வியாபாரி மகன்:

கோவை, காளப்பட்டியில் ஸ்டீல் வியாபாரம் செய்துவரும் அயூப் என்பவரின் மகன்தான் அசீம். அசீமுக்கு, ஒரு அண்ணன், ஒரு சகோதரி உள்ளனர். இத்துயர சம்பவம் நிகழ்ந்தபின், போலீசார் அசீம் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, "மகனின் காதல் விவகாரம் எங்களுக்கே தெரியாது' என, போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

"மகளின் காதல் பற்றி தெரியாது':

ஸ்ருதியின் தந்தை சஜீவ்மேனன் டில்லியில் தங்கி, ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். மாதம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வதால், பெரும்பாலும் ஸ்ருதி தனது அம்மா லதா, தாத்தா விபிமேனனுடன் வசித்துள்ளார். ஸ்ருதியின் அக்கா ஷீத்தல் பல்டாக்டராக உள்ளார். இவருக்கு திருமணமாகி விட்டது. தனது மகளின் காதல் விவகாரம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாதென, வடவள்ளி போலீசிடம் தந்தை சஜீவ்மேனன் தெரிவித்து, கதறியுள்ளார்.

பெற்றோரே... பிள்ளைகள் பத்திரம்! அபாயமணி அடிக்கிறார் டாக்டர்:

ஒருதலைக்காதல், காதலித்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை, தமிழகத்தில் மூன்று பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஒன்று சென்னை, மற்ற இரு சம்பவங்கள் கோவையில் நிகழ்ந்துள்ளன.

சென்னை, திருவொற்றியூர், மாணிக்கம் நகரைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் - அக்னெஸ் தம்பதியினரின் ஒரே மகள், பி.எஸ்சி., பட்டதாரி கார்த்திகா, 21, கடந்த 11ம் தேதி, காலை 8.30 மணியளவில், பாரிமுனை பஸ் ஸ்டாப்பில் காதலர் ராஜரத்தினத்தால் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். பின்னர், ராஜரத்தினமும் தனக்குத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். மது, மாது உள்ளிட்ட தீய பழக்கங்கள் கொண்ட ராஜரத்தினத்தை, திருமணம் செய்ய கார்த்திகா மறுத்ததே, இச்சம்பவத்துக்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டது.

அடுத்த சம்பவம் கோவையில் நடந்தது. கணபதி, கணேஷ் "லே-அவுட்'டில் வசிக்கும் அய்யப்பன்- அஜிதா தம்பதியினரின் மகள் அபிநயா, 14, கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் வேணுகோபால் 21, அபிநயாவை காதலித்துள்ளார். கடந்த 21ம் தேதி, மாலை வீட்டில் தனியாக இருந்த அபிநயாவிடம், வேணுகோபால் காதலிப்பதாக கூறியுள்ளார். அவர் அதை ஏற்க மறுக்கவே, அபிநயாவை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, வேணுகோபாலும் தற்கொலைக்கு முயன்றார். இவர் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

மூன்றாவது சம்பவம் கோவை, வடவள்ளியில் நடந்துள்ளது. சஜீஸ்மேனன், லதா தம்பதியினரின் இளைய மகள் ஸ்ருதியை கொடூரமாக கொன்று, அவரது தாயையும் கத்தியால் குத்திய காதலன் அசீம், தானும் தற்கொலை செய்து கொண்டார். மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களு எழை, நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பங்களில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை, கே.எம்.சி.எச்., மருத்துவமனை மனநல மருத்துவர் சீனிவாசன் கூறியதாவது:சமூக, கலாசார சீரழிவுகளால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன; "டிவி', "சினிமா'க்கள் முக்கிய காரணம். காதலை ஏற்க மறுக்கும் பெண்ணிடம், மீண்டும், மீண்டும் வற்புறுத்துவது என்பது அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகவே கருதப்படுகிறது. முதலில், சினிமா கதாநாயகன் போல் எண்ணி இளைஞர்கள் செயல்படுகின்றனர். முடிவில், நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாக வருவதை, ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லை. பெண்ணின் அழகை ரசிப்பது ஏற்புடையது; அதை அடைய நினைத்து செயல்படுபவர்கள் மனித நிலையிலிருந்து அரக்ககுண நிலைக்கு மாறிவிடுகின்றனர்.அவர்களிடம் மூர்க்கத்தனம் காணப்படும்;உயிரின் மதிப்பு குறித்து புரியாது. அந்நிலையில் நான்தான் முக்கியம், என் விருப்பம் தான் முக்கியம் என்றும், அதை அடையும் வழி எதுவாக இருந்தாலும், எனக்கு கவலையில்லை என்று செயல்படுவார்கள். உளவியலில் இதற்கு, "ஆத்திர உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை' (Impulsive Behaviour) என்று பெயர். பெற்றோர், குழந்தை வளர்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், கண்காணிக்க வேண்டியது அவசியம். வளர்இளம் பருவத்தில் நன்னெறிகளை, அழுத்தமாய், ஆழமாய் அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். இவ்வாறு, சீனிவாசன் தெரிவித்தார்.

கோவையில் அடுத்த கத்திக்குத்து

காதலை மறைத்து, தன்னை ஒதுக்கிய மாமன் மகளை வழிமறித்து, கத்தியால் குத்திய வாலிபர், கைது செய்யப்பட்டார்.
கோவை, சுந்தராபுரம், வெங்கடசாமிலேஅவுட்டைச் சேர்ந்தவர் ரம்யா, 24. எம்.சி.ஏ.,பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர். இவரும், சுந்தராபுரம், பகுதியைச் சேர்ந்த மதன்குமாரும் நெருங்கிய உறவினர்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.சில மாதங்களுக்கு முன், ரம்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன்பின், மதன்குமாரைவிட்டு, ஒதுங்கினாராம் ரம்யா. இவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த மதன்குமார், ரம்யா தன்னை புறக்கணித்து விட்டாளே என ஆத்திரம் அடைந்தார்.நேற்று முன்தினம் காலை, ரம்யா அலுவலகம் செல்வதற்காக, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ராம்நகருக்குள் நடந்து சென்றார். அப்போது, வழிமறித்த மதன்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால், குத்தினார். படுகாயமடைந்த ரம்யா கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள், ரம்யாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டூர் போலீசார், மதன் குமாரை கைது செய்தனர். கோவையில் நடந்த காதல் தகராறுகளில், ஏற் கனவே இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நடந்த கொலை முயற்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்



காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 24, 2012 6:45 am

இப்போதெல்லாம் இது போன்ற கொடூரச் செயல்கள் அதிகமாகிக்கொண்டே varukirathu சோகம் நிச்சயமாக இவையெல்லாம் சினிமா, வானொலி சீரியல்களின் தாக்கமே சோகம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 24, 2012 12:04 pm

மிக மோசம் என்ன கொடுமை சார் இது



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

காதல் கொலைவெறி, கோவையை அதிரச் செய்த கொடூரத்தின் உச்சம்! Mgr
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 24, 2012 12:18 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இப்போதெல்லாம் இது போன்ற கொடூரச் செயல்கள் அதிகமாகிக்கொண்டே varukirathu சோகம் நிச்சயமாக இவையெல்லாம் சினிமா, வானொலி சீரியல்களின் தாக்கமே சோகம்
சூப்பருங்க உண்மையான கருத்து ஐயா , அனைத்து விதங்களையும் சினிமாவில் விவரமாக காமித்துவிடுகிரார்கள் அதே போல செய்ய எளிதாக இருக்கிறது இன்றைய தலைமுறைக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 24, 2012 1:17 pm

ஆசிட் எல்லாம் நாம லேபில் மாத்திரமே பார்த்தோம்.

இப்ப ஆசிடும் கையுமா சுத்துராங்களே?




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 24, 2012 2:06 pm

காதலின் உச்சம் இந்த அளவுக்கு போயிருக்கிறது. என்ன கொடுமை சார் இது
பெற்றோர்கள் தான் இதற்கு முழு பொறுப்பு,
பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிக்காமல் விட்டது தான் தவறு.யாருக்கும் தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.

kad00003
kad00003
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 24/09/2012

Postkad00003 Mon Sep 24, 2012 2:19 pm

இது எல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை ..............................இது மட்டும் உண்மை

Kannnamma
Kannnamma
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2012

PostKannnamma Tue Sep 25, 2012 1:52 am

புரிந்து கொள்ள தெரியாமல்
புழுங்கி தவிக்கும் இளைய சமுதாயத்தை பெற்றோர் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை
அவைகளின் தாக்கமே இந்த கொடூர செயல்கள்...
அநியாயம் அநியாயம் கூடாது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக