புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
16 Posts - 59%
heezulia
மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
58 Posts - 62%
heezulia
மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மதுபானக் கடை  இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Aug 04, 2012 9:51 pm

மதுபானக் கடை

இயக்கம் திரு .கமலக்கண்ணன்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வழக்கமான திரைப்பட மசாலா இல்லாமல் மிக இயல்பாக யதார்த்தமாக பாடமாக்கி உள்ளார் .திரு. கமலக்கண்ணன்.இவரை மற்றொரு பாலாஜி சக்திவேல் என்றே சொல்லலாம் .படத்தில் கோடிகள் ஊதியம் பெறும் நடிகர்கள் இல்லை .கோடிகள் ஊதியம் பெறும் நடிகைகள் இல்லை .புகழ்ப்பெற்ற நகைச் சுவை நடிகர் இல்லை.வெளி நாடு செல்ல வில்லை .டுயட் பாடல் இல்லை . எந்த பிரமாண்டமும் இன்றி பிரமாதமாக இயக்கி உள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள் .சமீபத்தில் வந்த எல்லா திரைப்படங்களிலும் மதுபானக் கடையில் மது அருந்தும் காட்சி கட்டாயம் இருக்கும் .ஆனால் இந்தப் படமோ மொத்தப் படமும், மதுபானக் கடையிலேயே நடக்கின்றது .படம் தொடங்கும் போதே "இந்தத் திரைப்படத்தில் கதை என்று இருப்பதாக நீங்கள் கருதினால்,அது உங்களுடைய கற்பனை "வித்தியாசமாக உள்ளது .அதேபோல் படத்தில் பெரிய கதை ஒன்றும் இல்லை .ஆனால்
மதுபானக் கடையில் குடிமகன்கள் நடத்தும் கூத்து படம் முழுவதும் காட்டி உள்ளார் .

படத்தின் பெயரைப் பார்த்து விட்டு குடிக்கு எதிராக கவிதை ,கட்டுரை எழுதி வரும் நாம் இந்தப் படத்திற்குபோக வேண்டுமா ? முதலில் என்று யோசித்தேன் .பின் என்ன சொல்கிறார் என்று போய் பார்ப்போம் என்று போய் பார்த்தேன் .

ஆனால் படத்தில் குடியின் பாதிப்பை மிக ஆழமாக சொல்லாவிட்டாலும் , மதுபானக் கடையில் நடக்கும் திருவிளையாடல்களை தோலுரித்துக் காட்டி உள்ளார் .மதுபானக் கடை திறக்கும் முன் காத்திருக்கும் குடிமகன்கள் ,திறக்க தாமதமானதால் கடிந்துகொள்ளும் குடிமகன்கள்.கடை அடைக்கும் நேரத்தில் மது கேட்கும் குடிமகன்கள்,கடை அடைத்தபின் கூடுதல் விலைக்கு விற்றல்.போலியான சரக்குகளை விற்கும் அவலம் .

மதுக்கடையில் அமர்ந்து மது குடிப்பவர்களுக்கு விற்கும் உணவு சமைப்பவர் காய்கறி அழுகிப் போய் உள்ளது என்று சொல்ல ,"குடிகார நாய்களுக்குதானே சும்மா போடு "என்று சொல்கின்றார் முதலாளி .பள்ளி ஆசிரியரே மது குடிக்க வரும் அவலம் .தங்கள் ஆசிரியர் வந்து இருப்பதைப் பார்த்து பதுங்கி வந்து சீருடையை கழற்றிவிட்டு சென்று மாணவர்கள் பீர் வாங்கிகுடிக்கும் அவலம் . கல்லூரி மாணவர்கள் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மதுக்கடையில் மது அருந்தி கொண்டாடும் அவலம் .தன் நிலத்தில் மதுக் கடை நடப்பதை பார்த்து பைத்தியமான ஒருவர் . மதுக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே முதலாளியின் மகளை காதலிக்கும் ஒருவன் .இது வேண்டாம் ஆபத்து என்று தடுக்கும் சக தொழிலாளி .ஒரு குடிமகன் குடிக்க வந்தால் குடித்து முடித்து விட்டு வெளியே செல்லாமல் வசனம் பேசும் அவரைக் கண்டு நடுங்கும் மதுக்கடைபணியாளர்கள் .பெரிய குடிகாரனையே பயமுறுத்தும் மற்றொரு குடிமகன் .காதலில் தோல்வியுற்று முதன்முறையாக பீர் குடித்து விட்டு சொல்லும் கவிதை நன்று .வசனம் எழுதியவருக்கு பாராட்டு .

என்னை இறந்துவிடு என்று சொல்
மறுபடியும் பிறந்து விடுவேன் .ஆனால்
மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதே
இருந்தும் இறந்து விடுவேன் !

குடிமகன் சொல்லும் வசனம் "நாம தள்ளாடினால்தான் கவர்மென்ட் ஸ்டேடியா இருக்கும் .நாம் ஸ்டேடியாயிட்டா கவர்மென்ட் தள்ளாடிரும் "
அரசாங்கம் வருமானம் ஈட்ட ஆயிரம் வழிகள் உண்டு .மதுபானக் கடை வருமானம் அவமானம்.என்பது என் கருத்து.
"ஆலயமணி அடித்தால் சத்தம் ஆல்க்ககால் மணி அடித்தால் யுத்தம் "
நாட்டுநடப்பை குடியால் குடி அழியும் உண்மையை அப்பட்டமாக படமாக்கி உள்ளார்.படம் அல்ல பாடம் வழக்கமாக சொல்வார்கள் இந்தப் படத்திற்கு பொருந்தும் .இந்தப் படம் பார்த்து விட்டு குடி மகன்கள் திருந்தினால் அது இயக்குனரின் வெற்றி .மறந்து வந்த நமக்கு மதுபானக் கடை யை நினைவு படுத்தி விட்டாரே என்று குடிக்க செல்லும் குடிமகன்களை திருத்த வேண்டும் என்றால் மதுபானக் கடைகளை மூட வேண்டும் .
துப்புரவுத் தொழிலாளி மதுபானக் கடையில் தண்ணீர் கேட்டதற்கு அவரிடம் தீண்டாமை பேசும் குடிமகனைப் பார்த்து கோபப் பட்டு அவர் பேசும் வசனம் கைதட்டல் பெறுகின்றது .எதோ எதுக்கோ இயந்திரம் கண்டு பிடித்தவர்கள் பிய் மூத்திரம் அள்ள ஏன்டா? கண்டு பிடிக்க வில்லை .நாங்களும் உங்களை மாதிரி மனுஷன் தானே. கஷ்டப் படுகிறோம் . இது வரை மனிதநேயம் .மிக நெகிழ்வான வசனம். பாராட்டுக்கள் .
துப்புரவுத் தொழிலாளி கெட்ட வாடை பொறுக்க முடியாமல் குடிக்கிறார்கள் என்று நியாயப்படுத்துவதுப் போல உள்ளது .குடி யார் ? குடித்தாலும் தவறுதான்.குடி குடியை கெடுக்கும் என்பது முற்றிலும் உண்மை. குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பதை அனைவரும் உணர வேண்டும் .எழுத்தில் படிப்பதோடு நின்று விடாமல் குடிக்காமல் இருந்து கடைபிடிக்க வேண்டும் .ஒரு ஆய்வில் சொன்ன தகவல் 80 %குற்றங்கள் மது போதையால்தான் நடக்கின்றது .ஒரு காவலர் சொன்ன தகவல் சனி ஞாயிறு வந்து விட்டாலே குடி தொடர்பான சண்டைகளே அதிகம் .

தொழிலாளிகள் பற்றிய பாடல் மிக நன்று .இந்தப் பாடலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் தலைவர்,எழுத்தாளர் பொன்னீலன் பாராட்டி இருந்தார் .

மதுபானக் கடை இன்று திருவிழாக் கடை போல கூட்டம் கூடுகின்றது .ஆசிரியர் ,மாணவன் ,அப்பா, மகன் ஒரே கடையில் குடிக்கும் அவலம் நடக்கின்றது.குசராத்து போல தமிழகத்திலும் முழுமையாக மது விலக்கு மட்டுமே ,நம் குடிமகன்களை திருத்த முடியும் .வெட்டுக் குத்து
குத்துப்பாட்டு ,கவர்ச்சி நடனம் ,துப்பாக்கி சூடு,வன்முறை ,ஆபாசம் இன்றி துணிவுடன் படம் இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இவரைப் பார்த்து மசாலாப்பட இயக்குனர்கள் திருந்த வேண்டும் .சமுதாயத்திற்கு பயனுள்ள கருத்து சொல்ல முன் வர வேண்டும் .



--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!










View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக