புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
73 Posts - 46%
heezulia
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
304 Posts - 43%
heezulia
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ் அகராதி - ஊ  Poll_c10தமிழ் அகராதி - ஊ  Poll_m10தமிழ் அகராதி - ஊ  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - ஊ


   
   
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:12 am

ஆக்கமும், உழைப்பும் : http://www.thamilworld.com/forum/ - நன்றிகள்


ஊ - தசை; வினையெச்ச விகுதி; (எ.கா - செய்யூ); கைக்கிளை என்ற இசையைக் குறிக்கும் எழுத்து
ஊகடன் - முருங்கை : காட்டு முருங்கை.
ஊகம் - பெண் குரங்கு; கருங்குரங்கு (துடைப்பப்புல்); படை அணிவகுப்பு; யூகித்தறிதல்; ஆலோசனை; யுக்தி; திகைப்பு; ஊமத்தை, கருத்து : எண்ணம் : ஞானம் :
ஊகனம் - அனுமித்தல் : தீர்த்தல் : நியாயஞ் சொல்லுதல்.
ஊகனி - துடைப்பம்.


ஊகாஞ்சிதம் - தற்குறிப்பேற்ற அணி.
ஊகாமுள் - ஊகம்புல்லின் முள்.
ஊகாரம் - ஊ என்னும் எழுத்து.
ஊகித்தல் - திட்டமாக எண்ணுதல் : அறஞ்சொல்லுதல் : மட்டுக் கட்டுதல் : தருக்கித்து ஆராய்தல்.
ஊகித்தறிகை : எண்ணுகை : யுக்தி : அறிவு : யூகம் : உட்பொருளை ஆராய்ந்துணர்தல் : நினைவு : புலி : அவாய் நிலையால் வரற்பாலனவற்றை வருவித்தல்.


ஊகி - யூகித்தறி; ஆலோசனை செய் [ஊகித்தல்]
ஊகு, ஊகூ - ஒரு வித்தியாதரன் : கந்தருவருள் ஒருவன் : ஊகம்புல்.
ஊகை - ஊகம்.
ஊக்கப்பாடு - ஊக்கங்கொள்கை.
ஊக்கலர் - முயற்சியுடையவர்.


ஊக்கல் - எழுப்பல் : ஏறுதல் : தளர்த்தல் : அசைத்தல் : மிகுதி : யாக்கல் : முயலுகை :
ஊக்கம் - மனக் கிளர்ச்சி; முயற்சி; மனவலிமை; உயர்ச்சி; உண்மை
ஊக்கு - முயலுதல் செய்; உற்சாக மூட்டு; கற்பி; சிறிது அசைத்தல் செய்; நெகிழச் செய் [ஊக்குதல்]
ஊக்குதல் : முயலுதல் : ஆட்டுதல் : நெகிழ்த்தல் : தப்புதல் : கற்பித்தல் : நினைத்தல் : உற்சாக மூட்டுதல்.
ஊக்கார் - மேற்கொள்ளார்.


ஊங்கண் - உவ்விடத்து; முன்காலத்தில்; முன்பு
ஊங்குதல் - ஊக்கல்.
ஊங்கணூர் - சேர நாட்டிற் கடற்கரைக் கண்ணிருந்த ஓர் ஊர் : இதன் பக்கமாகக் கடலில் வஞ்சக உருக் கொண்டு முளைத்து நின்ற ஒரு கடப்ப மரத்தைச் சேரனொருவன் வெட்டினான்.
ஊங்கணோர் - முன்னோர்
ஊங்கு - உவ்விடம்; முன்காலத்தில்; மேம்பட்டது; முன்பு : நடு : மிகுதி : உயர்ச்சி : மேல் : ஊங்கண் : ஆடு.


ஊங்குதல் - ஆடுதல்.
ஊசரம் - உவர்மண் : பூவழலை : உவர்த்தரை.
ஊசல் - ஊஞ்சல்; ஊஞ்சல் பாட்டு; முன்னும் பின்னுமான அசைவு; மனந்தடுமாறல்; பதனழிந்த பொருள்
ஊசலாடல் - அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் : ஊஞ்சலாடுதல்.
ஊசல்வரி - ஊஞ்சற்பாட்டு.


ஊசல்சீர் - ஊசல்வரி.
ஊசற்பயற்றுக்காரி - வறுமைமிக்க கிழவி.
ஊசற்பருவம் - பெண்பாற்பிள்ளைத் தமிழினுள் ஓர் உறுப்பு.
ஊசா - மூக்குத்திச் செடி.
ஊசாடுதல் - ஊடாடுதல் : ஊசலாடுதல் : உலாவித்திரிதல்.


ஊசாட்டம் - உலாத்து : களவு : விரைவு : ஊசலாட்டம் : வரத்துப் போக்கு.
ஊசாலி - மீன் பிடிகூடை.
ஊசி - தையலூசி; எழுத்தாணி; கருவிகளில் ஊசி போன்ற பாகம்; கூர்மை; மென்மை
ஊசிக்கண் - சிறு கண்.
ஊசிக்கப்பல் - புகையிலைவகை.


ஊசிக்காது - நுனித்தறியும் செவிப்பயன் : ஊசித்துளை.
ஊசிக்காந்தம் - இரும்பிழுக்குங் காந்தக்கல் : சலாகை : சும்பகம்.
ஊசிக்காய் - ஒருவகைத் தேங்காய்.
ஊசிக்கார் - ஒருவகை நெல்.
ஊசித்தூற்றல் - சிறுமழை.


ஊசிப்புழு - ஒருவகைப் புழு.
ஊசிமிளகாய் - கொச்சிமிளகாய்.
ஊசிமுறி - இடைக்காடர் இயற்றிய ஒரு நூல்.
ஊசிவெண்டோடு - கூரிய வெள்ளியதோடு.
ஊசிவேர் - சிறுவேர்.




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:16 am

ஊசுதல் - சீவுதல் : அழுகுதல் : சுவை கெடுதல் : கைத்தல் : நாறுதல் : பதனழிதல்.
ஊச்சில் - தசைநோய்.
ஊச்சுதல் - உறிஞ்சுதல்.
ஊஞ்சல் - ஆடும் பலகை; ஊஞ்சல் பாட்டு
ஊஞ்சற்பாட்டு - ஊஞ்சலாடும் போது பாடும் பாட்டு.


ஊட்டம் - உணவு; செழிப்பு
ஊட்டு - உண்ணச் செய்; புகட்டு; சாய்மேற்று; அனுபவிக்கச் செய் [ஊட்டுதல்]
ஊடகம் - ஒருவகைக் கடல்மீன் : மனம்.
ஊடரம் - உவர்நிலம்.
ஊடல் - புலவி; காதலரிடையே பூசல்


ஊடலுவகை - புலவியின்பின் கூடலால் உண்டாகும் மகிழ்ச்சி.
ஊடறுத்தல் - நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல் : ஊடுருவுதல்.
ஊடாடல், ஊடாடுதல் - கல்வி பயிலுதல் : நடமாடுதல் : பழகுதல் : நடுவே திரிதல் : பலகாற் பயிலுதல் : கலந்து பழகுதல் : கலத்தல் : சஞ்சரித்தல் : பெருமுயற்சி செய்தல்.
ஊடாடிப்பார்த்தல் - ஆராய்ந்து பார்த்தல்.
ஊடாட்டம் - பழக்கம் : பலகாற் பயிலுகை.


ஊடான் - கடல்மீன் வகையில் ஒன்று.
ஊடு - நடு; இடைப்பட்டது; இடுப்பு; நெசவின் தார் நூல்; புலத்தல் செய்; பிணங்கு [ஊடுதல்]
ஊடுருவு - இடையே நுழைந்து செல் [ஊடுருவுதல்]
ஊடுசாகுபடி - இருவகைத் தானியங்களைக் கலந்து பயிரிடுகை.
ஊடுசெல்லல், ஊடு செல்லுதல் - நடுவிற்போதல் : இடையே போதல்.


ஊடுதட்டு - இருவர் வேலையினிடையே, இடையிற் புகுந்து பெற்ற ஊதியம்.
ஊடுதல் - பலத்தல் : பிணங்குதல்.
ஊடுதாக்கல், ஊடுதாக்குதல் - ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் : பின்னிடாமல் எதிர் நிற்றல்.
ஊடுபற்றுதல் - உள்ளே பற்றியெரிதல்.
ஊடுபோக்கல், ஊடுபோக்குதல் - உருவச் செய்தல் : நடுவறுத்தல் : வழக்குத் தீர்த்தல்.


ஊடுருவல், ஊடுருவுதல் - தட்டுருவல் : நுழைதல் : பீறுதல் : துளைத்தல் : புதைத்தல் : இடையுருவிச் செல்லுதல்.
ஊடுவெளி - இடைவெளி.
ஊடூடே - அடிக்கடி : இங்கும் அங்கும் : இடையிடையே : அப்போதைக்கப்போது : ஊடேயூடே.
ஊடை - நூற்றார் : மனைவி : உண்டை : ஊடு : புடைவையின் குறுக்குநூல்.
ஊடையம் - நீரரண்.


ஊட்டல் - உண்பிக்கை : ஊட்டுதல் : விலங்கின் கன்றுண்ணல்.
ஊட்டி - குரல்வளை : உணவு : பறவையுணவு : மிடறு : மழை.
ஊட்டித்தல் - தாளியடித்தல்.
ஊட்டிரம் - தேட்தொடுக்கி.
ஊட்டுணை - தலையாட்டம்.


ஊட்டுதல் - புகட்டுதல் : உண்ணச் செய்தல் : விருந்திடல் : நுகரச் செய்தல் :கன்று அல்லது குட்டி பால் குடித்தல் : அகிற்புகை பஞ்சு மை முதலியன ஊட்டுதல் :நினைப்பூட்டுதல் : இன்ப துன்பங்களை யருத்தல்.
ஊட்டுப்புரை - கேரள நாட்டில் பார்ப்பனர்க்கு உணவளிக்கும் இடம்.
ஊட்டுவான் - சமையற்காரன்.
ஊண் - உணவு; உண்ணுதல்; அனுபவம்
ஊணம் - ஒரு நாடு.


ஊணர் - ஊணநாட்டார் : பேருண்டிக்காரர்.
ஊணல் - ஊணுதல்.
ஊணன் - மிகையாக உண்பவன்
ஊணா - சடைச்சிமரம்.
ஊணி - உணவு கொள்பவள்.


ஊணுதல் - ஊன்றுதல் : நடுதல்.
ஊண்சாலை - அன்னசாலை.
ஊண்தழல் - வயிற்றுத் தீ.
ஊத்தை - அழுக்கு
ஊதல் - வீக்கம்; வாத நோய்; நிரம்புதல்; குளிர் காற்று; ஊதல் கருவி




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:16 am

ஊதநாதன் - இனத்தைக் காக்கும் யானை.
ஊதம் - யானைக் கூட்டம் : போருக்கு வருமாறு கேட்டல்.
ஊதல்போடுதல் - புகை போட்டுப் பழுக்கச் செய்தல் : பெருச்சாளி போன்றவை பொந்தினின்றும் வெளியேற்றப் புகை மூட்டுதல்
ஊதற்காற்று - பனிக்காலத்துக் குளிர் காற்று.
ஊதாங்குழல் - நெருப்பூதுங்குழல்.


ஊதா - சிவப்புக் கலந்த நீலம்
ஊதாரி - வீண் செலவுக்காரன்
ஊதியம் - இலாபம்; பயன்; கல்வி
ஊதிகை - முல்லைக் கொடி.
ஊதிடு கொம்பு - கொம்பினாற் செய்த இசைக்குழல்.


ஊதிப்பார்த்தல் - மந்திரித்தல்.
ஊதிப்போடுதல் - எளிதில் வெல்லுதல்.
ஊதிலி - ஊதுகுழல்.
ஊதினபொன் - புடமிட்ட பொன்.
ஊது - (காற்றை) குழல் போன்ற அமைப்பினால் செலுத்து; துளை செய்; ஒலி செய்; வீங்கு [ஊதுதல்]


ஊதுவத்தி - நறுமணச் சரக்கு தடவிய குச்சி
ஊதுகட்டி - சொக்கவெள்ளி.
ஊதுகணை - கணைநோய்வகை : குழந்தைகள் நோய்வகை.
ஊதுகரப்பான் - கரப்பான் நோய் வகையில் ஒன்று.
ஊதுகாமாலை - ஒருநோய்.


ஊதுகுழல் - ஒருவாச்சியம் : நெருப்பூதும் குழல் : ஊதும் இசைக்குழல்.
ஊதுகொம்பு - ஊதிடு கொம்பு : ஆம்பல் : இரலை : கொம்பு : கோடு : வயிர்.
ஊதுதல் - குழலூதல் : தீயெரிய ஊதல் : துளைத்தல் : புடமிடுதல் : நுகர்தல் :ஒலித்தல் : வீங்குதல் : அரித்தல் : காற்று நொய்தாய் வீசுதல் : நோவு தீர ஊதுதல்.
ஊதுமா - ஓர் இனிப்புக் கூழ்.
ஊதுமாந்தம் - குழந்தைகளுக்கு மாந்தத்தால் வயிறு விம்மும் நோய்.


ஊதும் - நுகரும்.
ஊதுலைக்குருகு - துருத்தி.
ஊதுவழலை - ஒருவகைப் பாம்பு.
ஊத்தங்காய் - புதைத்துப் பழுக்க வைத்த காய்.
ஊத்தப்பம் - தோசை வகை.


ஊத்து - ஊதுகை : காகளத்தொனி : உடம்பு ஊதுதல்.
ஊத்தைக்குடியன் - ஒரு பேய்.
ஊதை - குளிர் காற்று; வாத நோய்
ஊந்து - கச்சோலம்.
ஊமச்சி - ஊமைப்பெண் : நத்தை : மட்டி.


ஊமணச்சட்டி - சூளையில் நன்றாய் வேகாத சட்டி.
ஊமணச்சி - அழகற்றவள்.
ஊமணாமூஞ்சி - பொலிவற்ற முகமுள்ளவர் : பேசுந் திறமில்லாதவர் : ஊமணையன்.
ஊமணை - பேசுந்திறனற்றவர் : அழகற்றது.
ஊமத்தம், ஊமத்தை - ஒரு வகைச் செடி


ஊமற்கரி - பனங்கொட்டைக் கரி.
ஊமன் - ஊமையன் (பெண்பால் - ஊமைச்சி) ; கோட்டான்; கூகை
ஊமாண்டிகாட்டுதல் - பிள்ளைகளை அச்சுறுத்துதல்.
ஊமிள் - சிறுபூனை.
ஊமை - பேச்சுத் திறன் இல்லாதவர்; பேச்சுத் திறன் இல்லாமை; ஒரு வகைப் போர் முரசு; கீரி


ஊமைக்கட்டி - முகங்கொள்ளாத சிலந்திக்கட்டி.
ஊமைக்காயம் - முரட்டடியால் வெளியில் காயம் தெரியாது உண்டான உள் வீக்கம்.
ஊமைக்காய் - பருப்பற்ற காய்.
ஊமைக்கிளாத்தி - ஒருவகை மீன்.
ஊமைக்கோட்டான் வெயில் - மேகமூட்டத்தில் உறைக்கும் வெயில்.




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:17 am

ஊமைத்தசும்பு - வாயில்லாத குடம்.
ஊமைமணி - நாக்கில்லாத மணி.
ஊமையெழுத்து - ஒலியற்றவெழுத்து : மெய்யெழுத்து : பிரணவம்.
ஊம் - மவுனம் : ஊமை.
ஊமையன் - மூங்கையன் (பெண்பால் - ஊமைச்சி)


ஊய்தல் - பதனழிதல் : ஊசுதல்.
ஊர் - நகர்ந்து செல்; பரவு; வடிதல் செய்; நெருங்கு; கழலு; தினவெடு; ஏறிச் செலுத்து [ஊர்தல்]; நகரம்; கிராமம்; சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றித் தோன்றும் பரிவேடம்; ஊர்தல்
ஊர்ச்சிதம் - நிலையான தன்மை; உறுதி
ஊர்த்துவம் - மேல்; மேல் நோக்கியது
ஊர்தி - வாகனம்; மேலேறியது


ஊர்வலம் - ஊரை வலமாக வருதல்
ஊர்வன - ஊரும் பிராணிகள்
ஊரகம் - ஒரு திருப்பதி.
ஊரணி - ஊருணி.
ஊரண்டினார் - கள்ளி.


ஊரவியன் - வைசியன்.
ஊரற்புண் - ஆறாப்புண் : காய்ந்து வரும் புண்.
ஊரல் - ஊர்ந்து செல்லும் ஒன்று; தேமல்; படர் தாமரை; ஒரு நீர்ப்பறவை; கிளிஞ்சில்; பசுமை
ஊரவர் - ஊர் மக்கள்
ஊரன் - மருதநிலத் தலைவன்


ஊராண்மை - ஊர்த்தலைமை; தலைமை; தாராள மனப்பான்மை; பகைமேற்செல்லல்
ஊரா - ஊர்ப்பசு.
ஊராக்குதிரை - குதிரைமலை.
ஊராட்சி - ஊர் ஆளுகை : ஒரு பழைய வரி.
ஊராண்மை - ஊரையாளுந் தன்மை : மிக்க செயல் : ஒப்புரவு : உபகாரியாந்தன்மை : ஊரின்கண் மேம்பாடுடைமை : பகைமேற் செல்லுகை.


ஊராநற்றேர் - வான்கலம் : வானூர்தி.
ஊரார் - ஊரவர் : பிறர்.
ஊராளி - ஊரதிகாரி : ஒரு சாதியாள் : ஒரு மலைச் சாதியான் : உழவுத் தொழில் புரிவோன் : வரிக்கூத்துவகை.
ஊரி - இளமை : சங்கு : முகில் : ஒருவிதப் பூண்டு : புல்லுருவி.
ஊரிலிகம்பலை - ஊர்க்கலகம்.


ஊரின் - சென்றால்.
ஊரின்னிசை - வெண்பாக்களால் சிறப்பிக்கும் ஒரு பிரபந்தம்.
ஊரு - தொடை
ஊருகால் - சங்கு : நத்தை.
ஊருசன் - வைசியன்.


ஊருடைமுதலி - முருங்கை.
ஊருடையான் - ஊர்க்கணக்கன்.
ஊருணி - ஊருக்கு நீர் தரும் சிறிய நீர் நிலை
ஊருதல் - ஏறுதல் : செலுத்துதல்.
ஊரெறிதல் - ஊரைக் கொள்ளையிடுதல்.


ஊரெறிபறை - பாலை நிலத்துப் பறை.
ஊரோச்சம் - ஊரெல்லாம் பேசத்தக்கதாயிருத்தல்.
ஊர்காவல் - தலையாரி.
ஊர்கொண்டன்று - நிரம்புறுதலுற்றது.
ஊர்கொலை - பகைமேற் செல்வோர் : நிரைகொள்ளுமுன் நிரை காவலரைக் கொல்லும் புறத்துறை.


ஊர்கோடல் - ஊர் கொள்ளல் : பரிவேடித்தல் : சுற்றிப்பரவுதல் : பரிவேடிப்பு.
ஊர்கோள் - பரிவேடம்.
ஊர்க்கலாபம் - மக்களுக்குள் உண்டாகும் கலகம்.
ஊர்க்கற்செம்மை - புடமிட்ட நிலை.
ஊர்க்காறுவாறு - ஊர்விசாரணை.




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:17 am

ஊர்க்குருவி - அடைக்கலக்குருவி : கடலகம் : கலிங்கம் : கல்வி : குனிங்கரி : சகடம் : புலிங்கம்.
ஊர்ச்சம் - ஊக்கம் : சுவாசம் : சௌகரியம் : கார்த்திகைமாதம்.
ஊர்ணநாபி - சிலந்திப்பூச்சி.
ஊர்ணம் - ஆடு முதலியவற்றின் மயிர் : நூலிழை : புருவ நடுவிலுள்ள சுழி.
ஊர்தல் - ஊருதல்: தவழ்தல்: செல்லுதல்: பரவுதல்: ஏறிச் செல்லுதல்: தினவுறுதல்: தடவுதல்: சஞ்சரித்தல்: மேற்கொள்ளுதல்: நெருங்குதல்: மறைத்தல்: அடர்தல்: வடிதல்: மிகுதல்.


ஊர்த்தலைமை - நாட்டாண்மை.
ஊர்த்தல் - ஊற்றுதல்.
ஊர்த்துவதி - மேனோக்கிச் செல்லுகை.
ஊர்த்துவசீலம் - தீ.
ஊர்த்துவதாண்டவம் - மேலே ஒரு காலைத் தூக்கியாடும் நடனம்.


ஊர்த்துவலிங்கன் - சிவன்.
ஊர்த்துவாங்கம் - அரைக்கு மேற்பட்டவுறுப்பு.
ஊர்நத்தம் - ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் : குடியிருப்பு.
ஊர்நேரிசை - ஒரு நூல்.
ஊர்பு இழிதல் - ஏறியிறங்கல்.


ஊர்ப்பட்டது - மிகுந்தது.
ஊர்ப்பாக்கு - திருமண அழைப்புக்காக வைக்கும் தாம்பூலம்.
ஊர்ப்பாடு - பிறருடைய வேலை.
ஊர்ப்புரட்டு - பெரும்பொய்.
ஊர்ப்புலம் - ஆமணக்கு.


ஊர்மன்றம் - ஊரிலேயுள்ள பொது இடம்.
ஊர்மி - ஒளி: உயிரைத் துன்புறுத்தல்: நீரோட்டம்: அலை: வருத்தம்: வேட்டி மடிப்பு, வயிறு முதலிய இடங்களிலுள்ள மூன்று மடிப்பு: விரகம்: ஆற்றாமை: விரைவு.
ஊர்மிகை - அலை : மோதிரம் : திரை ஓதம்.
ஊர்மிளை - இலக்குமணன் மனைவி : கணவனால் விரும்பப்பட்ட கற்புள்ள மனைவி.
ஊர்முகம் - படைகள் பொரும் இடம்.


ஊர்வசி - தேவகணிகையரில் ஒருத்தி.
ஊர்வரப்பன் - வெள்ளரி.
ஊர்வன் - ஏழுபிறப்பில் ஒன்று அஃது ஊர்ந்து செல்வது.
ஊர்வாரி - ஊர்ச்சலதாரை.
ஊர்வாரியம் - சிற்றூர்ச்சபை.


ஊர்விருத்தம் - ஒருவகை நூல்.
ஊர்வெண்பா - பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார வெண்பாவாற் பத்துச் செய்யுள் பாடுவது.
ஊலுகம் - ஆந்தை : கோட்டான் : வல்லூகம்.
ஊழ் - முதிர்ச்சியடை; பதனழி; மலர்தல் செய் [ஊழ்தல், ஊழ்த்தல்]
ஊழ்வினை - பழவினை


ஊழகம், ஊழம் - வைகறை.
ஊழலத்தி - ஊழலாற்றி.
ஊழலாற்றி - ஒருவகை மரம்.
ஊழலித்தல் - அருவருத்தல் : இளைத்தல் : மெலிதல் : சோர்தல் : பதனழிதல் : நாற்றமடைந்து கெடுதல்.
ஊழற்சதை - பெருகித்தளர்ந்த சதை.


ஊழனிலம் - சேற்று நிலம்.
ஊழிக்காய்ச்சல் - தொற்றுக் காய்ச்சல்.
ஊழித்தீ - வடவைத்தீ.
ஊழிநாயகன் - உலகைச் சங்கரிக்கும் கடவுள்.
ஊழிநாள் - முடிவு நாள்.


ஊழிநோய் - தொற்று நோய்.
ஊழிமுதல்வன் - கடவுள்.
ஊழியமறியல் - கடுங்காவல்.
ஊழியான் - நெடுங்கால வாழ்க்கையை யுடையான் : கடவுள்.
ஊழியூழிகாலம் - என்றும்.




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:18 am

ஊழிலை - இலைச்சருகு.
ஊழுறல், ஊழுறுதல் - முதிரல் : குடைதல் : முடிவு பெறுதல்.
ஊழை - பித்தம்.
ஊழைக்குருத்து - துளசி.
ஊழொளி - பேரொளி : மிகுந்த ஒளி : கதிரவன்.


ஊழ்கு - நினை : எண்ணு.
ஊழ்குதல் - எண்ணுதல்.
ஊழ்கொளல் - நன்குமதிக்கப்படல்.
ஊழ்குதல் - முதிர்தல் : பழவினைப்பயன் : குணம் : முறைமை : தடவை : முதிர்வு : முடிவு.
ஊழ்த்தசை - புலால்.


ஊழ்த்தல் - கழலுதல்: விரிதல்: செவ்வியழிதல்: மலர்தல்: நினைத்தல்: முதிர்தல்: உதிர்த்தல்: சொரிதல்: சிறத்தல்: இறைச்சி: முடைநாற்றம்: நரகம்: பருவம்: ஊண்.
ஊழ்த்துச் சொரிதல் - பழகிச் சொரிதல்.
ஊழ்த்துணை - மனைவி.
ஊழ்ந்தல் - ஊருதல்.
ஊழ்ந்து - முற்றி முதிர்ந்து.


ஊழ்ப்பாடு - முடிவுபடுகை.
ஊழ்முறை - நியதி : பூருவநியாயம் : வினைப்பயன் முறை.
ஊழ்மை - முறைமை.
ஊழ்விதி - பழவினைப்பயன்.
ஊழ்வினைப்பயன் - கருமபலன்.


ஊழல் - அழுகிக்கெட்டது; சேறு போல் ஆபாசமானது; முறை கெட்டது
ஊழி - நெடுங்காலம்; யுகம்; உலகம் முடியும் காலம்; வாழ்நாள்; விதி; உலகம்; முறைமை
ஊழியம் - தொண்டு [ஊழியன்]
ஊளன் - ஆணரி : நரி.
ஊளான் - நரி : கடல் மீன்வகை.


ஊளி - ஊத்தை : உளி : நாய், நரி முதலியன கத்தும் ஒலி : தீநாற்றம் : குரல்.
ஊளை - நரி அல்லது நாயின் ஒலி; தீய நாற்றம்
ஊளைக்காது - சீழ்வடியும் காது.
ஊறணி - ஊறல் : ஊற்றுக் கசிவு நிலம் : சேற்று நிலம் : வருவாய்.
ஊறுகறி - ஊறுகாய்.


ஊறுகோள் - காயம்: கொலை: ஊறுதல்: சாரமேறுதல்: நனைதல்: நீர் பெருகுதல்: பல வழியினும் பொருள் வந்தடைதல்: கசிதல்: மெலிந்தவுடல் தேறுதல்: வாயூறுதல்.
ஊறுநீர் - ஊற்றுநீர்.
ஊறுபுண் - ஆறிவரும் புண்.
ஊறை - சவ்வரிசி.
ஊற்றங்கோல் - ஊன்றுகோல்.


ஊற்றம் - ஆதாரம்; பற்றுக்கோடு; உறுதி; வலிமை; ஆர்வம்; பழக்கம் தொடுதல் உணர்ச்சி; இடையூறு; கேடு
ஊற்று - (திரவத்தை) வெளியே கொட்டு; வித்திலிருந்து எண்ணெய் வடி [ஊற்றுதல்]; நீரூற்று; சுரத்தல்; கசிதல்; ஊன்றுகோல்; பற்றுக்கோடு
ஊற்றாணி - இடையூறு : ஊறு : கலப்பை யுறுப்பினுள் ஒன்று.
ஊற்றால் - உரோகிணிநாள் : மீன் பிடிக்குங் கூடு : கோழிக் குஞ்சுகளை அடைக்குங் கூடை.
ஊற்றுக்களம் - பலரும் வந்து சேருதலையுடைய இடம்.


ஊற்றுக்கோல் - ஊன்று கோல்.
ஊற்றுதல் - வார்த்தல் : வடித்தல் : வெளியே விடுதல்.
ஊற்றுப்பறி - மீன்பிடிக்குங் கருவி.
ஊற்றுப்பூ - தேங்காய்ப் பிண்ணாக்கு.
ஊற்று மரம் - செக்குலக்கை : எண்ணெய் ஊற்றும் மரம்.


ஊறல் - ஊறுதல்; நீரூற்று; சாறு; கலப்பு; வருவாய்; களிம்பு
ஊறு - (திரவம்)கசி; சுரத்தல், பதமாக நனை; பருத்தல் செய்; வளர்ச்சியுறு[ஊறுதல்]; நெருங்குதல்; இடையூறு; துன்பம்; நாசம்; கொல்லல்; உடம்பு; காயம்; வடு; வல்லூறு
ஊறுபாடு - இடையூறு; துன்பம்; காயமுண்டாக்குதல்
ஊன் - இறைச்சி; தசை; உடல்
ஊனகத்தண்டு - கருவண்டு : அடைகுறடு.




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:18 am

ஊனக்கண் - கட்பொறி : குருட்டு விழி : பசுஞானம்.
ஊனக்காரகன் - இழிதொழில் செய்விப்போன்.
ஊனவன் - மனிதன்.
ஊனாயம் - தந்திரம்.
ஊனி - ஊளாமீன் : ஒலி : பசி.


ஊனுருக்கி - இருமல் நோய்.
ஊனோட்டி - உடும்பிறைச்சி.
ஊன்கணார் - மானிடர் : அறிவில்தாவர்.
ஊன்செய்கோட்டம் - உடல்.
ஊன்விலைஞர் - ஊன்விற்போர்.


ஊன்றக்கட்டுதல் - பலப்படுத்தல்.
ஊன்றல் - இறுகப்பிடித்தல் : சார்தல் : தள்ளல் : நடுதல் : நிறுத்தல் : நினைத்தல் : மதித்தல் : பலப்படுத்தல் : ஊன்றுதல் : நட்டல்.
ஊன்றிக் கேட்டல் - மிகக் கருத்தாகக் கேட்டல்.
ஊன்றிச் சொல்லல் - தெளிவாய்ப் பேசுதல்.
ஊன்றிப் படித்தல் - படிப்பதில் கருத்துப்பதியுமாறு மனதை ஒருவழிப்படுத்திப் படித்தல்.


ஊன்றிப் பெய்தல் - விடாது ஓங்கிப் பெய்தல்.
ஊன்றுகால் - தாங்கும் முட்டுக்கால் : நடுகால்.
ஊன்றுகோல் - பற்றுக்கோல் : தடி.
ஊன்றுதல் - அமர்த்தல் : நடுதல் : நிலைப்படுத்தல் : பதித்தல் : பலப்பித்தல் : வேர்வைத்தல் : நிலைபெறுதல் : சென்று தங்குதல் : அழுந்த வைத்தல் : நிலைநிறுத்தல் : துணையாகப் பற்றுதல் : தாங்குதல் : தீர்மானித்தல் : அமுக்குதல் : தள்ளுதல் : இறுகப் பிடித்தல் : உறுதியாய் நிற்றல்.
ஊன்று - நிலை பெறு; நடுதல் செய்; ஆதாரமாகக் கொள்; தாங்கு; தீர்மானம் செய்; தள்ளுதல் செய்; அழுத்து; நோவு படுத்து [ஊன்றுதல்]
ஊனம் - குற்றம்; குறைபாடு; பழி; தீமை; அழிவு




மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 09, 2012 10:24 am

ஹை இது நம்ம சிவா போட்டுட்டு இருந்ததுல்ல?

தொடருங்கள் சந்திரகி - வாழ்த்துகள்.




சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 09, 2012 10:43 am

முழுமையாய் இருப்பின் சிறப்புற இருக்கும் எனும் ஆவல்தான்.

நன்றிகள்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக