புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
3 Posts - 6%
Baarushree
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
2 Posts - 4%
prajai
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
2 Posts - 4%
சிவா
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
1 Post - 2%
viyasan
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
1 Post - 2%
Rutu
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
2 Posts - 15%
Rutu
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_m10மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 1:17 pm

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!

உலகத்துல தலைசிறந்த உயிரினம் (மிருகம்) நாமதான் அப்படீங்கிறதுல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது.

பரிணாமப்படி பார்த்தா வேணுமுன்னா, உலக உயிர்கள்ல நாம முதலிடத்துல இருக்கலாம். ஆனா, திறமைகள், தனித்தன்மைகள், வீரம் இப்படியான விஷயங்கள்படி பார்த்தா நாம எத்தனையோ உயிர்கள்கிட்டே தோற்றுவிடுவோம் அப்படீங்கிறதுதான் நிதர்சனம்!

நம்மளப் பத்தி (நாமளே) பெரியாளுன்னு நெனச்சிக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம், உலக உயிர்கள்லேயே நமக்கு மட்டுந்தான் 6 அறிவு இருக்குங்கிறதுதான்னு நான் நெனக்கிறேன். அந்த ஆறாவது அறிவுக்கு காரணம், பிற விலங்குகளைவிட பன்மடங்கு (பரிணாம) வளர்ச்சியடைந்த, மேம்பட்ட நம்ம மூளை!

ஆனா, அந்த மூளையைப் பயன்படுத்தி இந்த உலகத்தைப்பத்தி நாம தெளிவா தெரிஞ்சிக்கிட்ட/புரிஞ்சிக்கிட்ட விஷயங்களைவிட, இன்னும் தெரியாத/புரியாத விஷயங்கள் எண்ணிலடங்காதவை அப்படீன்னு சொன்னா, நீங்களும் ஒத்துவீங்கன்னு நெனக்கிறேன்?!

உதாரணத்துக்கு, பிறப்பு/இறப்பு, மனசாட்சி, தூக்கம் இப்படி எத்தனையோ விஷயங்களைப் பட்டியலிடலாம். இப்படிப்பட்ட, மூளைக்கு புலப்படாத ஆனால் மூளையுடன் தொடர்புடைய 10 மர்மங்களைப் பத்திதான் நாம இந்தப் பதிவுல இனிமே பார்க்கப்போறோம்.
அண்டா கா கசம்…..அபு கா ஹுகும்…..திறந்திடு சீசே…..இல்ல இல்ல….. திறந்திடு மூளையே……

1. இனிய கனவுகள் (Sweet Dreams)
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Sweet-dreams

http://traningsvark.files.wordpress.com
இரவு தூங்கப்போறதுக்கு முன்னாடி, நாம எல்லாருமே இனிய கனவுகள்னு சொல்றோம். ஆனா, அப்படிச் சொல்ற ஒரு 10 பேரு கிட்ட கனவுன்னா என்னன்னு கேட்டோம்னு வைங்க, பத்து வித்தியாசமான விளக்கம் கிடைக்கும்ங்கிறது உறுதி. ஏன்னா, கனவு பத்தி ஆராய்ச்சி பண்ற விஞ்ஞானிகளுக்கே இன்னும் சரியான விளக்கம் தெரியல! அதுக்காக, தெரியலைன்னு விட்டுட முடியுமா?!

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்றாங்கன்னா, “கனவு என்பது, நரம்புகளுக்கிடையிலான தொடர்புகளை தூண்டுவது அல்லது ஒரு நாளில் செய்ய முடியாதவற்றை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருவதால் நியாபகங்கள், எண்ணங்கள் பலப்படுவது” அப்படீன்னு சொல்றாங்க! ஆனா, கனவுகள் “வேகமான விழி அசைவு உறக்கம் (Rapid Eye Movement, REM)” அப்படீங்கிற ஒரு வகை உறக்கநிலையின்போதுதான் தோன்றுகின்றன என்பது மட்டும் உறுதின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

2. உறக்கம்

நாம எல்லாருமே தூங்குறோம். ஆனா, அந்த தூக்கத்தை பத்தின (அறிவியல்பூர்வமான) முழுவிவரம் இன்னும் யாருக்குமே தெரியாது இந்த நவீன விஞ்ஞான உலகத்துல! இதுவரைக்குமான உறக்கம் பத்தின ஆய்வுகள்ல தெரியவந்திருக்கிறது, மனித வாழ்க்கைக்கு உறக்கமானது இன்றியமையாதது அப்படீங்கிறதுதான்! தொடர்ந்த தூக்கமின்மையினால, மூளைக்கோளாறுகள்/பிறழ்வு நிலை, இறப்பு கூட வரலாமாம்!

வேகமான விழி அசைவு உறக்க நிலை (REM) மற்றும் வேகமான விழி அசைவில்லாத உறக்க நிலை (NREM) அப்படீன்னு ரெண்டு வகை உறக்க நிலைகள் உண்டு. இதுல, வேகமான விழி அசைவு உறக்க நிலையின்போது, நியாபகங்கள் செப்பனிடப்படுகின்றன என்று சொல்லப்பட்டாலும், அதற்க்கான தகுந்த ஆதராங்கள் எதுவுல் இல்லை! வேகமான விழி அசைவில்லாத உறக்க நிலையின்போது உடல் ஓய்வெடுத்துக்கொள்வது, சக்தியை சேமிப்பது என இருவினைகள் நடக்கிறது.

3. அமானுஷ்ய உணர்வுகள் (Phantom Feelings)
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Phantom_white_mask

countrygirldiabetic.blogspot.com
விபத்து/நோய்களால் கை/காலிழந்த சுமார் 80% விழுக்காட்டு மக்கள், தங்களின் இழந்த உடல் பாகங்களிலிருந்து, தொடு உணர்வு/ஸ்பரிசங்களை (அரிப்பு, கதகதப்பு, வலி, அழுத்தம் ஆகிய உணர்வுகளை) உணர்கிறார்களாம்! இது என்ன விந்தைடா சாமீ?! இம்மாதிரியான உணர்ச்சிகளை உணர்வதை “பேய் கை” அல்லது “phantom limb” அப்படீங்கிறாங்க ஆங்கிலத்தில்!

இதுக்கான அறிவியல்பூர்வமான விளக்கம் என்னன்னு கேட்டா, உடலின் எல்லா பகுதிகளும் முழுமையாகவே இருப்பதாக (ஒருவகை அச்சு மூளையில் பதிந்துவிட்டதால்) அவ்வாறே எண்ணிக்கொண்டு மூளை இயங்குவதாகவும், இழந்த பாகங்களிலுள்ள நரம்புகள், முதுகுத்தண்டுடன் புது தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செய்திகளை அனுப்புவதாகவும் இரு வேறு கருத்துகள் இருக்கிறது நரம்பியல் விஞ்ஞானிகள் மத்தியில்! சாமீ….எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் சாமீ!!

4. 24 மணி நேரக் கட்டுப்பாடு (Mission Control)
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! 800px-biological_clock_human-773742
wikipedia: biological_clock_human
நம்ம மூளையில உள்ள ஹைப்போ தலாமஸ் (hypothalamus) அப்படீங்கிற ஒரு பகுதிதான் நம்ம உடலியக்கத்தை கட்டுப்படுத்தும் “உயிரியல் கடிகாரம்” (biological clock) என்னும் 24 மணி நேர விழிப்பு-உறக்க நிகழ்வுகள் கடிகாரத்தையும் கண்கானிக்கிறது. ஆனா, இதே உயிரியல் கடிகாரமானது, செரிமானம், உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகிய உடலியக்க நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது.

சமீபத்திய ஒரு ஆய்வுப்படி, சூரிய ஒளிக் கதிர்களானது மெலடோனின் (melatonin) அப்படீங்கிற ஒரு ஹார்மோன் மூலமாக உயிரியல் கடிகாரத்தை முன்னும் பின்னுமாக திருத்தவல்லது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு போகும்போது, இரு நாடுகளுக்குமுள்ள நேர வித்தியாசத்தால் வரும் ஒருவித அயற்ச்சியை ஆங்கிலத்தில் ஜெட் லாக் ( jet lag ) என்கிறார்கள். மெலடோனின் ஹார்மோன் மாத்திரகளை உண்டால் இந்த அயற்ச்சியை தவிர்க்க முடியுமா முடியாதா என்பதுதான் இப்போதைய நரம்பியல் பட்டிமன்றம்!

5. நியாபக ஏணி (Memory Lane)
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Fc1372memory-lane-posters1
http://elperro1970.files.wordpress.com/
“நியாபகம் வருதே…..நியாபகம் வருதே….பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே” அப்படீன்னு நீங்க உங்க நியாபகங்கள் வந்து பாடினாலும் சரி, சும்மா அப்படியே குத்து மதிப்பா பாடினாலும் சரி, நம்ம எல்லாருக்குமே மறக்க முடியாதவை அப்படீன்னு ஒரு நினைவுப்பட்டியலே இருக்கும் வாழ்க்கையில! உதாரணத்துக்கு நமக்கு கிடைச்ச முதல் முத்தம். என்ன உடனே ஃப்ளாஷ் பேக்கா? (அதாங்க, இந்த தலையிலேர்ந்து முட்டை முட்டையா மேலெ போற மாதிரி சினிமாவுலெ எல்லாம் காட்டுவாங்களெ!) சரி சரி, நடக்கட்டும் நடக்கட்டும்…..

ஆமா அதெல்லாம் சரிதான், ஒரு மனுசன் எப்படி இந்த நியாபகங்களையெல்லாம் தொகுத்து வச்சிக்கிறான்? எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? இல்லைன்னா விடுங்க, ஏன்னா விஞ்ஞானிகள் யோசிச்சிட்டாங்க! மூளையை படமெடுக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், மனித மூளை எப்படி நியாபகங்களை உருவாக்கி, சேமிக்கிறது என்பதற்க்குக் காரணமான அடிப்படை நிகழ்வுகள் கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.

ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும், மனித மூளையின் ஒரு பகுதிதான் நம்மோட நியாபகப் பெட்டியாம்! ஆனா, இதுல வேடிக்கை என்னன்னா, இந்த நியாபகச் சேமிப்புல உண்மையான நியாபகம், பொய்யான நியாபகம் அப்படீங்கிற பாகுபாடெல்லாம் இல்லியாம்! உண்மையான நியாபகம் என்பது நடந்த நிகழ்வுகள், பொய்யான நியாபகங்கள் நடக்காத கற்பனைகள். ஆக நம்ம ஹிப்போகேம்பஸ், குத்துமதிப்பா எல்லா நியாபகத்தையும் சேர்த்து வைக்கிற ஒரு நியாபகக் குப்பைத்தொட்டு மாதிரி போலிருக்கு?!
“எல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டிலே பிழையிருக்காதென்று அர்த்தமா” அப்படீன்னு நம்ம நக்கீரர் கேட்ட மாதிரி, மனுசனுக்கு, “6 அறிவு இருந்துட்டா, அந்த அறிவு இருக்குற இடமான மூளையைப் பத்தி எல்லா உண்மைகளும் தெரிஞ்சிடனும்/புரிஞ்சிடனும்னு கட்டாயமா என்ன?” அப்படீன்னு கேக்குறீங்களா…..மனித மூளை பத்தின மர்மங்கள் இன்னும் பாக்கியிருக்குங்க! மீதமுள்ள அந்த மர்மங்களின் பட்டியல்/விளக்கத்தோட மீண்டும்.

தகவல் பகிர்வு - www.enayamthahir.com

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 1:31 pm

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்-2

மனித மூளையோட வினோதமான மர்மங்கள்னு கனுவுல ஆரம்பிச்சு நியாபக ஏணிவரைக்கும் பதிவோட முதல் பாகத்துல பார்த்தோம். அந்த வரிசையில, அடுத்ததுசிரிப்பு! அதனாலதான், பதிவை சிரிப்போட ஆரம்பிச்சிருக்கோம். வாங்க சிரிச்சுக்கிட்டே மேல படிப்போம்…..

6. சிரிப்பு (Brain Teaser)

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! 450px-43-_tkb_-_dawnswyr_mon_z_bethel_walia_07
wikipedia: Lestat (Jan Mehlich)
இந்தச் சிரிப்பு இருக்குங்களே, மனுசனோட செய்கைகள்/உணர்ச்சிகள்லேயே ரொம்ப மர்மமான, மனித மூளையாள இன்னும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு உணர்ச்சி அது?! அட ஆமாங்க, உதாரணத்துக்கு பதிவுத் தொடக்கத்துல நீங்க படிச்ச மூன்று வெவ்வேறு பாடல் வரிகளையே எடுத்துக்குங்களேன். முதல் (பாடல்) வரி என்ன சொல்லுதுன்னா, சிரிப்பிலே ஏற்படும் ஒலியில் ஒரு சங்கீதமே இருக்குது அப்படீன்னு சொல்லுது. சங்கீதம்னா ஒரு ஆறுதல்/சந்தோஷம்/சுகம் இப்படி பலவாறான அர்த்தங்கள் இருக்கு!
இரண்டாவது பாடல் வரியை எடுத்துக்கிட்டா, வாழ்க்கையை ஒருவர் எப்படி வாழ வேண்டும்/வாழக் கூடாது என்பதை சுட்டிக்காட்டும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைக்கூட சிரிப்பு மூலமாக சொல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது!மூன்றாவது பாடல் வரியை பார்த்தீங்கன்னா, ஒருவரின் சோகத்தைக்கூட அவரின் சிரிப்பின் மூலம் அறிந்துகொள்ள/விளங்கிக்கொள்ள முடியும் என்பதற்க்கான ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது! ஆக, சிரிப்பு எனும் ஒரு உணர்வு கிட்டத்தட்ட மூன்று வெவ்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளது!

சரி, இனி நாம சிரிப்பைப் பற்றிய அறிவியல்பூர்வ/விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களைப் பார்ப்போம். ஒருவரின் சந்தோஷமான சிரிப்பின்போது, மூளையின் மூன்று பாகங்கள் தூண்டப்படுகின்றனவாம்! அவை
சிரிப்பிலுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் மூளையின் சிந்திக்கும் பகுதி
தசைகளை அசையச் சொல்லி உத்தரவிடும் உடல் அசைவினை கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி
சிரிப்பினால் உண்டாகும் ஒருவித சந்தோஷ/உளைச்சளற்ற உணர்வினை ஏற்படுத்தும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி
இது எல்லாம் தெரிஞ்சும்கூட, நம்ம வடிவேல் காமெடி ஒன்னை சினிமாவுல பார்க்கும்போதோ, நம்ம நண்பர் ஒருத்தர் ஜோக் அடிக்கும்போதோ, நாம ஏன் சிரிக்கிறோம்ங்கிறதுக்கான காரணம்/அறிவியல்பூர்வமான விளக்கம் இன்னும் தெரியல சிரிப்பை ஆய்வு செய்கிற விஞ்ஞானிகளுக்கு!
ஆனா, அமெரிக்க ஆய்வாளர் ஜான் மோர்ரியல் (John Morreall, who is a pioneer of humor research at the College of William and Mary) அவர்களின் கூற்றுப்படி, “சிரிப்பு என்பது இயல்புநிலை எதிர்ப்பார்ப்புகள்/வரையரைகளை கட்டுடைத்து வரும் ஒரு உணர்ச்சியே! பிற விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சிரிப்பு என்பது பிறருக்கு இது ஒரு விளையாட்டான விஷயம் என்பதை உணர்த்தப் பயன்படும் ஒரு உணர்வு!
ஆமா, இதைப் படிக்கிற உங்களோட கூற்று என்ன? எது எப்படியோங்க, சிரிச்சா நாமளும் நல்லாயிருப்போம். நம்மைச் சுத்தியிருக்குரவங்களும் நல்லா இருப்பாங்க. அது போதுமில்ல நமக்கு?!

7. மரபனுவும் இயற்கையும் (Nature vs. Nurture)

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Gene
Courtesy: National Human Genome Research Institute
மனுசனோட உணர்வுகள்/எண்ணங்களையும், பண்புநலன்களையும் கட்டுப்படுத்துவது அவனுடைய மரபனுக்களா இல்லை சுற்றுச்சூழலா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, குடுமிப்பிடி சண்டை போடாத அளவுக்கு வெவ்வேறு கருத்துக்கள்/பதில்களோட விஞ்ஞானிகள் தங்கள் வாதங்களை முன்வைத்தாலும், அடிப்படையான காரணம்/பதில் மரபனுவும் சுற்றுச்சூழலும் அல்லது இரண்டில் ஏதாவது ஒன்றாகத்தானிருக்கும் என்கிறார்கள்!
ஒவ்வொரு மரபனுவையும் தனித்தனியாக ஆய்வு செய்யும்போது, ஒவ்வொரு பண்புநலனுக்கும் ஒவ்வொரு மரபனு காரணமாக இருக்கிறது என்று தெரியவந்தாலும், ஒருவரின் செயல்கள்/எண்ணங்கள் அனைத்துக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்கள்/சுற்றுச்சூழலும் பெருமளவில் பங்களிக்கிறது அல்லது பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்கிறார்கள் விஞ்ஞானிகள்! எனக்குக் கூட அப்படித்தாங்க தோனுது!

8. மரண மர்மம் (Mortal Mystery)
ஒருவர் இறந்துபோவதற்க்கு, “அவர்களின் விதி முடிந்து எமதர்மன் பாசக்கயிற்றால் பிடித்துப்போய் சொர்க்க/நரகத்தில் சேர்த்துவிடுகிறான் என்பதில் தொடங்கி, அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் (தெய்வம் கொல்வதாக), ஊழ்வினை பலன் இப்படி எத்தனையோ காரணங்களை நம் பெற்றோர்கள், புராணங்கள்/இதிகாசங்கள் மற்றும் நீதி நூல்கள் முன்வைத்தாலும், அறிவியலைப் படித்து சுவாசித்த மனது என்னவோ ஒத்துக்கொள்ள மறுக்கிறது என்பதே நிதர்சன/யதார்த்தமான உண்மை!
ஒருவர் ஏன் மூப்படைகிறார்னு ஆய்வாளர்கள்கிட்டே கேட்டா, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே நோய்களை எதிர்த்து போராடும் சக்தியையும், புண்களை ஆற்றிக்கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கிறான் என்றபோதும், வயதாக வயதாக அவை எல்லாம் வலுவிழந்து போகின்றன என்பது இயற்க்கை! அதனை விளக்க விஞ்ஞானிகள் முன்வைக்கும் கோட்பாடுகள் இரண்டு, அவை
மனிதனின் பிற குணங்களைப் போலவே மூப்படைதலும் மரபனுவியலின் ஒரு அங்கம். அது ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதும் கூட?!
மூப்படைதல் என்பது குறிக்கோள் இல்லாத, உடல் அனுக்களை அழிக்கும்/சேதப்படுத்தும் ஒரு உடலியல் நிகழ்வு. ஆய்வாளர்களில் ஒரு சாரார், கூடிய விரைவில் மூப்படைதலை தாமதப்படுத்தும் அல்லது மனிதனின் (இப்போதைய) வாழ்நாளை இருமடங்காக உயர்த்தும் அதிசயத்தை விஞ்ஞானம் நிகழ்த்தியே தீரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்! அட….இது நல்லாருக்கே?!

9. ஆழ் உறையவைத்தல் (Deep Freeze)

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Cryo_surgery
Photo courtesy of Alcor Life Extension Foundation
சாகாவரம் பெறுவது என்பது என்னவோ சாத்தியமில்லைதான்! ஆனால், இரண்டு வாழ்க்கை பெறுவது சாத்தியம்?! என்ன பைத்தியக்காரத்தனமா இருக்குன்னு பார்க்குறீங்களா? அட உண்மைதாங்க! வாழ்நாட்களை நீட்டிக்கும் விஞ்ஞானத்துறை என்று நம்பப்படும் க்ரையோனிக்ஸ் (cryonics) துறை மூலம், தற்போதைக்கு மருந்து/சிகிச்சையில்லாத ஒரு கொடிய நோயின்மூலம் இறந்தவரின் உடலை, எலும்பு சில்லிடும் அசுர குளிரான மைனஸ் 320 டிகிரி ஃபாரென்ஹீட் (minus 320 degrees Fahrenheit/78 Kelvin), திரவ நைட்ரஜன் வாயுவில் உறைய வைத்து, குறிப்பிட்ட அந்த நோய்க்கான மருந்தோ/சிகிச்சையோ கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அதைக்கொண்டு மீண்டும் அந்த இறந்தவுடலை உயிர்பிக்க முடியும் என்று நம்பப்படுகிறது!
இப்படித்தான் அமெரிக்காவின் (மறைந்த) தலைசிறந்த பேஸ்பால் வீரரான டெட் வில்லியம்ஸின் (Ted Williams) உடலை, அல்கார்ஸ் (Alcor’s) என்னும் உடல் உறையவைக்கும் நிறுவனம் ஒன்று உறையவைத்து பாதுக்காத்து வருகிறதாம்! இறந்த உடலை தலைகீழாக வைத்துதான் உறைய வைப்பாங்களாம். தவறுதலாக டேங்க் உடைந்து, திரவ நைட்ரஜன் சிந்தினாலும் மூளைமட்டும் திரவத்திலேயே மூழ்கி பாதுகாப்பாக இருக்குமாம். அது சரி!
ஆனா, இப்படி பாதுகாத்துக்கிட்டிருக்குற எந்த உடலும் இதுவரை மீண்டும் உயிர்பிக்கப் படவில்லையாம்! ஏன்னு கேக்குறீங்களா? ஏன்னா, இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் அப்படியோரு தொழில்நுட்பம் சாத்தியமேயில்லைங்கிறதுனாலதான்! (குறைந்தபட்சம் ஒரு அறிவியல்) காரணம், இறந்த ஒரு உடலை சரியான வெப்பத்தில் உறைய வைக்கவில்லையென்றால், அவ்வுடலின் அனுக்களெல்லாம் பனிக்கட்டியாகி தூள் தூளாக வெடித்துச்சிதறிவிடும் என்பதுதான்!

10. சுய நினைவு (Consciousness)
மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! 413px-robertfuddbewusstsein17jh

wikipedia:Robert Fludd
இரவு உறக்கம் முடித்து, காலையில் கண் விழித்து எழும் உங்களுக்கு, புல்லின்மேல் பனித்துளி அதனைத் தொட்டு உறவாடி ஜொலிக்கும் சூரியக் கதிரொளி, முற்றத்திலிருக்கும் நெற்கதிர்களை கொரிக்கும் சிட்டுக் குருவிகளின் சத்தம் இப்படி காலையின் அடையாளங்களையெல்லாம் நம்மால பார்க்க/உணர முடியும் இல்லீங்களா? ஆமா, முடியும். அதுக்குக் காரணம் நம்ம சுயநினைவு!
அதெல்லாம் சரிதான், ஆமா சுயநினைவுன்னா என்ன? அதாவது, சுய நினைவுன்னா அறிவியல்பூர்வமான அர்த்தம் என்ன? அதத்தான் பல நூற்றாண்டுகளாக நரம்பியல் விஞ்ஞானிகள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனா, திட்டவட்டமான ஒரு பதில்தான் இன்னும் கெடைக்கலை! அதுக்காக விஞ்ஞானிகள் சும்மா ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நெனைக்காதீங்க. சமீப காலங்களாதான், சுயநினைவு பத்தின ஆய்வை மிகத்தீவிரமா நடத்த ஆரம்பிச்சிருக்காங்க!
அதன் பலனா, சுயநினைவு பத்தின சுவாரசியமான சில/பல கேள்விகள், ஆரம்பநிலை புரிதல்கள்/விளக்கங்கள்னு நிறைய விஷயங்கள கண்டுபிடிச்சி, இன்னும் முன்னேறிகிட்டு இருக்காங்க நம்பிக்கையோடு!

தகவல் பகிர்வு - www.enayamthahir.com

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 03, 2012 2:29 pm

சிறந்த பதிவு.நன்றி பிரசன்னா அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்! Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக