புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
69 Posts - 58%
heezulia
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
111 Posts - 59%
heezulia
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_m10தமிழில் வரலாற்று நாவல்கள் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் வரலாற்று நாவல்கள்


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sun Jan 01, 2012 12:14 pm

(குறிப்பு : நான் அனைத்து வரலாற்று நாவல்களையும் படித்து முடித்தவன் அல்ல. நான் படித்தது வரையிலான வரலாற்று நாவல்களைஅடிப்படையாகக் கொண்டே நான் இந்நூலை எழுதியிருக்கிறேன்)

தமிழில் நான் படித்த முதல் வரலாற்று நாவல் 'அமராபரணன்' என்னும் நூலாகும். எனது அக்காளுக்கு இளங்கலைப் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருந்த இந்நூலை பத்து வயதாகும் போது நான் படித்து முடித்தேன். குறுநில ஆட்சியாளர்களுக்கும், குடிமக்களுக்கிடையே செல்வாக்கு பெற்ற தலைவனுக்கும் இடையேயான சச்சரவைச் சுற்றி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. எக்காலத்தைப் பற்றி இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி தெளிவான குறிப்பு எதுவும் நாவலில் புலப்படவில்லை.

கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய நூற்களை எனது பதிவயதின் தொடக்க காலகட்டத்தில் படித்தேன். இந்நாவல்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தைப் பற்றியும், அவற்றுடன் தொடர்புடையவர்களைப் பற்றியும், அக்கால அரசியலில் ஏற்படக் கூடிய சூழ்ச்சிச் சிக்கல்களையும் பற்றி விவரிக்கின்றன. குடிமக்கள் அரச குடும்பத்தில் இருக்கக்கூடிய கதாநாயகனுக்கு ஆதரவளிப்பதாகவே இந்நாவல்கள் குறிப்பிடுகின்றன. (எ.கா, பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழித் தேவன் மேல் சுமத்தப்பட்ட மக்கள் ஆதரவு)

அதிகமான வரலாற்று நாவல்கள் எழுதியவர்களுள் சாண்டில்யன் மிக முக்கியமானவர். அவர் தனது நாவல்களில் ஆபாசத்தைக் கலக்கிறார் என்று அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை அவர் தெளிவாகவே உணர்ந்திருந்தார். அத்தகைய குற்றச்சாட்டுகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தனது ராஜதிலகம் என்ற வரலாற்று நாவலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

"என் கதைகளில் எப்பொழுதும் உள்ள, ஆழ்ந்த படிப்பில்லாதவர்களுக்கு என்மீது வெளிக்கு வெறுப்பையும் உள்ளுக்கு உவகையும் அளிப்பதும், காவ்யம் படித்தவர்களுக்கு என்மீது மதிப்பையும் அளிப்பதுமான காதல் சுவை இந்த நூலிலும் இருக்கிறது. அந்தச் சுவைக்கு மெருகு கூட்டுகிறது ஆசார்ய தண்டியின் காவ்யதர்சம். ஒரு காவ்யம் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு ஆசார்ய தண்டி காவ்ய தர்சத்தில் எந்தக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறாரோ அதைச் சிறிதும் இந்தக் கதையில் மீறவில்லை. ஐயோ செக்ஸ் எழுதிவிடுகிறான் என்று சிலர் அழப்போகிறார்களே என்ற அச்சத்திற்காக அந்த ரஸத்தைச் சிறிதும் குறைக்கவும் இல்லை. 'ரஸராஜா' என்று அலங்கார சாஸ்திரம் குறிக்கும் ரஸத்தைக் குறைக்க நான் யார்?

ஆகவே அந்த ரஸத்தை எழுதுவதில் சிறிதும் தடங்கலில்லாமல் பேனாவை ஓட்டியிருக்கிறேன். என் கற்பனை போகுமளவுக்குத் தாராளமாக வர்ணனைகளையும் காதல் கட்டங்களையும் எழுதியிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுத முடியவில்லை என்ற குறைதான் எனக்கு. ஆனால் சாஸ்திரம் இடங்கொடாததால் அளவை மீறவில்லை".

சாண்டில்யனின் நாவல்களும் ராஜா-ராணிக் கதைகளாகவே இருந்தன.
அடுத்ததாக அகிலன் குறிப்பிடத்தக்கவர். அவரது வேங்கையின் மைந்தன் சாகித்திய அக்காதமி விருது பெற்றது. அவரது எழுத்து நடை வேறுபட்டிருந்தாலும், கதைத்தன்மையில் வேறுபாடு இல்லை. அவரின் நாவல்களும் ராஜா-ராணிக் கதைகளாகவே இருந்தன.

சாகித்திய அக்காதமி விருது பெற்ற கண்ணதாசனின் சேரமான் காதலியை அடுத்தபடியாகச் சொல்லலாம். ஆனால் அதுவும் அரச குடும்பத்துக் கதைதான். கண்ணதாசன் அந்நாவலில் குறிப்பிடத்தக்க அளவில் சிருங்கார ரஸத்தை உபயோகப்படுத்தியிருந்தார்.

அரு.ராமநாதன் தனது வீரபாண்டியன் மனைவி நூலில் ஒரு போர்வீரனுக்கும், எதிரியின் உளவாளிக்கும் ஏற்படும் காதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றி எழுதியிருந்தார். ஆனால் அவரும் அவர்கள் இருவரையும் அரச குடும்பத்தோடு வினோதமான முறையில் தொடர்பு படுத்தினார். அதாவது அவர்களிருவரும் அரசர்களின் ஆசைநாயகிகளின் குழந்தைகள் என்றார். அவரது அசோகன் காதலி நூலும் ஓரளவு வித்தியாசமான கதைப்போக்கையே கொண்டிருந்தது. நான் படித்த பிற எந்த நாவல்களையும் விட அரசனை உண்மையான மக்கள் நாயகனாக விளக்கியது அந்நூல்.

நா.பார்த்தசாரதி எழுதிய ராணி மங்கம்மாள் நாவல் ராஜா-ராணிக் கதையாகவே இருந்தாலும் தமிழக வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தைப் பற்றி அது குறிப்பிடுகிறது. தமிழகம் டில்லியின் ஆதிக்கத்தில் மெதுவாக உட்சென்றதைப் பற்றியும், தமிழகப் பேரரசுகள் என்ற நிலை மாறி, உட்பகையால் உளுத்துப்போன சிற்றரசுகளின் காலத்தை இந்நாவல் தொட்டுச் செல்கிறது.

முழுமையாக சாதாரண மக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூலாக நாலாவான் என்ற நாவலை நான் குறிப்பிடுவேன். இந்நாவலை நான் ஒரு கிளை நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தேன். இதன் ஆசிரியர் பெயர் எனக்கு நினைவில்லை. இந்நாவல் மேல்சாதி மனப்போக்கினால் பாதிப்புக்குள்ளான மக்களின் எழுச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

தமிழக வரலாற்று நாவல்கள் சிலவற்றைத் தவிர அனைத்தும் உண்மையில் ராஜா ராணிக் கதைகளாகவே இருந்திருக்கின்றன. சிலவற்றைத் தவிர அனைத்திலும் புனையம்சம் அதிகமாகவே இருந்திருக்கின்றது. 90 சதவீதம் பெரும்பாலான சரித்திர நாவல்களில் புனையப்பட்ட பங்காகவே இருக்கின்றது. ஏதோ ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட ஒரு வரியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு புனையப்பட்ட நாவல்களும் உண்டு. இக்காலத்தில் சரித்திர நாவல்களில் முயற்சிக்கக் கூடியவர்கள் குறைவே. பா.விஜய் நக்கீரனில் ஒரு வரலாற்றுத் தோடர்கதையை எழுதி அது நாவலாக வந்துள்ளது. ஆனால் சமீபத்திய சரித்திர நாவல்களை நான் இன்னும் படிக்கவில்லை. மன்னிக்கவும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக