புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
26 Posts - 38%
prajai
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
3 Posts - 4%
Jenila
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
7 Posts - 6%
prajai
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
5 Posts - 4%
Jenila
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
4 Posts - 3%
Rutu
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
2 Posts - 2%
viyasan
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரழகி கிளியோபாட்ரா !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 11:57 am

இன்று நெல்லை விவேகநந்தா அவர்கள் எழுதிய "உலக பேரழகி கிளியோபாட்ராவின்" வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..


பேரழகி கிளியோபாட்ரா ! Cleopatradrawing

அழகு என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருபவள் எகிப்து பேரரசி
கிளியோபாட்ரா. உலகப் பேரழகி பட்டத்தை இன்றுவரையிலும் தக்க வைத்துக்
கொண்டிருப்பவள் கிளியோபாட்ராதான். அவளுடைய அழகால் கவிழ்ந்த அரசுகளும்
உண்டு. அந்த ஆழகை ஆராதித்த அரசுகளும் உண்டு. அந்த அழகின் வசீகரத்தால்
சிதறுண்டு போனது ராஜ்ஜியங்கள் மட்டுமல்ல.. அவளது வாழ்க்கையும்தான்..!

கி.மு.51-ம் ஆண்டில் ஒரு நாள்.

வடக்கு எகிப்தின் கடற்கரையில்
அமைந்திருந்த அலெக்சாண்டிரியா நகர மக்கள் அனைவரும் அடுத்து என்ன
நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருந்தனர்.

நாட்டை ஆளும்
பேரரசரின் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.
அமைச்சர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அங்கே
கூடி இருந்தனர்.

அவர்களின் பார்வை எல்லாம் நம் கதாநாயகியான 18 வயது
இளம்பெண்ணையும், 12 வயதான ஒரு பையனையும் மொய்த்துக் கொண்டிருந்தது. இவர்கள்
இருவரும் அக்காள், தம்பி. இவர்களது திருமணத்தைக் காணவே இந்த அரண்மனை
விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

என்னது...? அக்காள்- தம்பிக்குத் திருமணமா என்று அதிர்ச்சியடைகிறீர்களா?

கிறிஸ்து
பிறப்பதற்கு முன்பான காலகட்டத்தில் ஒவ்வொரு ராஜ்ஜியத்திலும் இப்படி
குடும்பத்துக்குள் மணம் செய்யும் சம்பிரதாயம் இருந்து வந்திருக்கிறது..

ஏன்?

அந்தக் காலத்தில் அரச பரம்பரையில், அரசாளும் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் காரணம்.

அரசர்
இறந்துவிட்டால், அவரது மனைவியைப் பேரரசி ஆக்கிவிடுவார்கள். அரசியும்
கொல்லப்பட்டுவிட்டால் (இது போராகவும் இருக்கலாம், அரசியலுக்காக நடக்கும்
கொலையாகவும் இருக்கலாம்) வாரிசை நியமிப்பார்கள். அந்த வாரிசு வயதுக்கு வந்த
ஆணாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவன், சிறுவனாக இருந்துவிட்டால்?

அவனுக்கு
மூத்த சகோதரி இருந்தால் அவளுக்கும், இவனுக்கும் திருமணம் செய்து வைத்து,
அவளை அரசியாக்கி விடுவார்கள். அப்படித்தான் பட்டத்துக்கு வந்தாள் நம்
கதாநாயகி கிளியோபாட்ரா!

திருமணம் நடைபெறும் இடத்தில் நம் கதாநாயகி
மிடுக்கோடு காட்சியளிக்க மணமகனான அவளது தம்பிதான், விரல் சூப்பாத குறையாக
நின்று கொண்டிருந்தான்.

பளபளக்கும் ஆடையில் வசீகரமாக அந்தக் கூட்டத்தில் மின்னிக் கொண்டிருந்த நம் கதாநாயகியைப் பற்றி கொஞ்சம் வர்ணித்துதான் ஆக வேண்டும்.

வயதுக்கு
வந்த 18 வயது பெண் என்பதால், ஒட்டுமொத்த அழகும் அவளது தேகத்தில் நைல்
நதியாக நீளமாக நெளிந்து வளர்ந்து படர்ந்திருந்தது.தலையை அலங்கரித்த,
பளிச்சிடும் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த கிரீடம் அவளது அழகில்
தோற்றுப்போய் ஒதுங்கி இருந்தது. கறுத்துச் செழித்து வளர்ந்திருந்த அவளது
தலை முடி, மெல்லிய இடுப்பு வரையிலும் உரசிக் கொண்டிருந்தது.

உருண்டையாகவும்
இல்லாமல், சப்பையாகவும் இல்லாமல், இவை இரண்டும் இடையில் அமைந்த அவளது
பிரகாசமான முகம், அந்த அரண்மனைக்கு இன்னும் வெளிச்சமூட்டியது.
மெல்லிடையிலும், மாராப்பிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆபரணங்கள், அவளை
குட்டித் தேவதைபோல் அலங்கரித்திருந்தன. அவளது கண்களில் மிரட்சிக்கு பதில்
தைரியம்... தைரியம்... தைரியம் மாத்திரமே!

இந்த உலகமே ஒரு நாள் எனது
கடைக்கண் பார்வையில் சொக்கி என் காலடியில் விழத்தான் போகிறது..." என்று
சொல்வதுபோல் திமிராக காட்சி தந்து கொண்டிருந்தன அவளது கண்கள்.

ஆனாலும்,
அந்த கண்களுக்குள் காதலும் ஒரு ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் நடந்து முடிந்தது திருமணம்.

யார் இந்த கிளியோபாட்ரா?

இயேசு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.69-ம் ஆண்டு ஜனவரி மாதம்
எகிப்தை ஆண்டு வந்த டாலமி வம்ச மன்னரான 12-ம் டாலமிக்கு மகளாகப்
பிறந்தவள்தான் நம் கதாநாயகி கிளியோபாட்ரா. இவளுக்கு முன்பு, அவளது
அரசவம்சத்தில் ஏற்கெனவே கிளியோபாட்ரா என்ற பெயரில் 6 பேர் வாழ்ந்து
முடித்துவிட்டதால், நம் கதாநாயகி 7-ம் கிளியோபாட்ரா என்று
அழைக்கப்படுகிறாள்.

தந்தை ஓ.கே. தாய் யார்?

இந்த கேள்விக்குத்தான் இன்றுவரையிலும் உறுதியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும், அவளது தாய் பெயர் இஸிஸ் என்று கூறுவோரும் உண்டு.

கிளியோபாட்ரா
எப்படிப்பட்டவள், அவளிடம் என்னென்ன திறமைகள் இருந்தன என்பவை பற்றியெல்லாம்
புகழ்ந்திருந்த அவள் காலத்து எழுத்தாளர்களின் விரிவான ஆதாரங்கள்
காலப்போக்கில் மறைந்துவிட்டன.

அதேநேரம், அவள் வாழ்ந்த 200
ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு கிறிஸ்து பிறந்த 150 ஆண்டுகளுக்குப்
பிறகு, அவளைப் பார்த்தவர்கள் மற்றும் அவளை சந்தித்தவர்கள் விட்டுச் சென்ற
குறிப்புகளைக் கொண்டு, புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியவைதான்
இன்றும் நமக்கு அவளைப் பற்றிய ஆதாரங்களாக உள்ளன.

அவள் சிவந்த நிற
மேனி கொண்டவள் அல்ல; ஆனால், அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த
மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும்,
இனிமையான குரலுக்கு சொந்தக்காரியாகவும் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்
இவர்.

கிளியோபாட்ரா பிறந்த டாலமி வம்சத்தினர், பரம்பரை பரம்பரையாக
அரசவம்ச வழியினர் கிடையாது. கி.மு. 345-களில் பரந்து விரிந்து காணப்பட்ட
பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே, அதாவது ஒரு மாகாணமாகவே எகிப்து
இருந்தது.

உலகையே தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரப் புறப்பட்டு,
வெற்றிமேல் வெற்றிபெற்ற மாவீரன், மாசிடோனிய பேரரசன் அலெக்ஸாண்டர் எகிப்து
மாகாணத்தின் மீதும் படையெடுத்து வெற்றிகொண்டான்.

எகிப்து வெற்றியைத்
தொடர்ந்து, நைல் நதி வழியாக பெரும் படைகளுடன் இந்தியா நோக்கிப் புறப்பட்ட
அலெக்ஸாண்டர், தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்ய சில கவர்னர்களை
நியமித்தார். அவர்கள் அந்த நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக்
கொண்டனர்.

அவ்வாறு அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட கவர்னர்களில்
ஒருவர்தான் டாலமி. இவர், அலெக்ஸாண்டரின் மிகச் சிறந்த படைத்தளபதி
மட்டுமின்றி சிறந்த நண்பரும்கூட. மாசிடோனியாவின் ஆர்டியா மாவட்டத்தைச்
சேர்ந்த செல்வந்தரான லகஸ் என்பவரின் மகன்தான் இந்த டாலமி. தாய் பெயர்
அர்சினி.

ஆரம்பத்தில் எகிப்து, லிபியா, அரேபியப் பகுதிகளின்
கவர்னராக மட்டுமே இருந்து வந்த டாலமி, கி.மு. 305 முதல் அலெக்ஸாண்டருக்குப்
பிறகு மன்னராக நாட்டை ஆளத் தொடங்கினார். அதுவரை, எகிப்தை ஆண்டு வந்த பல
வம்சத்தினரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். டாலமி என்ற புதிய வம்சம்
ஆரம்பமானது.

சரி.. கிளியோபாட்ரா பேரழகி ஆனது எப்படி?

கி.மு. 51-ல் தனது 12 வயது தம்பி 13-ம் டாலமியை திருமணம் செய்து கொண்டதன்
மூலம் எகிப்து பேரரசின் அரசி ஆனாள் 18 வயது கிளியோபாட்ரா. அவளது தம்பி
13-ம் டாலமி நாட்டின் அரசன் ஆனான்.

அரியணையில் ஏறிய கிளியோபாட்ரா,
ஒரு நாட்டின் அரசியாக மட்டுமின்றி அழகுப் பதுமையாகவும் திகழ்ந்தாள்.
பருவத்தின் செழிப்பு அவளது மேனியில் கொட்டிக் கிடந்தது. அதுவரை நைல் நதியை
அழகுக்கு அழகாய்ப் போற்றி வந்த எகிப்து கவிஞர்கள், அதற்கும் ஒரு படி மேலாக
கிளியோபாட்ராவை புகழ்ந்து தள்ளினர்.

தனது அழகைக் கண்டு தானே வியந்து
போனாள் கிளியோபாட்ரா. அந்த பேரழகுக்கு இன்னும் மெருகூட்ட தன்னைப் பலவாறு
அலங்கரித்துக் கொண்டாள். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் தனிக்கவனம் செலுத்தினாள்.
அக்காலத்தில் கிடைத்த இயற்கை அழகுப் பொருட்கள் அவளை விதவிதமாக
அலங்கரித்தன.

அவளது மேனியில் நறுமணப் பொருட்களின் வாசனை எப்போதும்
இருக்கும். அவள் அணிந்த ஆடைகளை நவரத்தினங்கள் அலங்கரித்தன. சிறப்பான சிகை
அலங்காரம் அவளது அழகு முகத்திற்கு, மேலும் அழகு சேர்த்தது. கழுத்தில்
இருந்து மூக்குவரை மறைக்கும் முகவலைகள் அவளது அழகை மேலும் அதிகரித்தது.

உதட்டுச்சாயம் இல்லாமலே லேசாக எப்போதும்
சிவந்திருந்த உதடுகளும், வில் போன்ற புருவத்தில் இருந்து புறப்பட்ட பார்வை
அம்புகளும் அவளுக்கே உரிய அடையாளமாகத் திகழ்ந்தன.

அவள் எங்கு
புறப்பட்டுச் சென்றாலும், சேவை செய்யும் அழகான இளம்பெண்களும்
பின்தொடர்ந்தனர். அந்த சேவைப் பெண்களுக்கு மத்தியில் நடந்து வந்த
கிளியோபாட்ரா சாட்சாத் தேவதை போலவே தெரிந்தாள். இவ்வாறாக, எகிப்து மக்களின்
தெய்வமாகவும் தேவதையாகவுமே தன்னைக் காட்டிக்கொண்டாள் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா,
கிரேக்க காதல் கடவுளான க்யூபிட் போலவே இருந்தாள். சில நேரங்களில்
எகிப்தைக் காக்கும் பிரதான கடவுளான இசிஸ் மற்றும் டார்சஸ் நகரின் முக்கிய
காதல் பெண் தெய்வமான அப்ரோடைட் ஆகிய இரு தெய்வங்களின் கலவை போலவும்
தெரிந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவளது அழகும் மேலும் மேலும்
அதிகரித்துக்கொண்டே போனது.

இப்படியெல்லாம் கிளியோபாட்ரா மேனி அழகில்
ஜொலிக்க அவள் தினமும் குளித்தவிதம்தான் காரணம் என்று இன்றுவரையில்
கூறுவோர் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப்
பாலில் குளித்தாள் என்பதுதான்-. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்பதற்கு
ஆதாரங்கள் இல்லை.

ஆனாலும், அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள்
உள்ளன. ஏனென்றால், அந்தக் காலத்தில் எகிப்தில் கழுதைகள் பிரபலமாக
திகழ்ந்தன. அவர்களது மறு ஜென்ம நம்பிக்கைக்கு கழுதைகளே முக்கிய காரணமாகத்
திகழ்ந்தன.

இறந்தவர் உடலைப் பாதுகாத்து வைத்திருந்தால், அந்த உடல்
மறு ஜென்மத்தின்போது உதவும் என்றும், ஆவிகள் இருப்பது உண்மை என்றும் அக்கால
எகிப்தியர் நம்பினர். அதன் காரணமாக, ஒருவர் இறந்துவிட்டால், அவரது
கல்லறைக் கிடங்கில் ஒரு கழுதையின் சிலையை செய்து வைக்கும் பழக்கம்
அவர்களிடத்தில் இருந்தது. மறு ஜென்மத்தில் இந்தக் கழுதை இப்போது
இறந்தவருக்கு உதவும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக
இருந்தது.

இப்படி, எகிப்தியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக
இருந்த கழுதை, கிளியோபாட்ராவின் அழகு ரகசியத்திலும் ஒளிந்திருப்பதில்
வியப்பில்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது. தனது அழகுக்காக
குங்குமப்பூவையும் அவள் பயன்படுத்தினாள் என்ற கருத்தும் உள்ளது.

அழகு
மட்டுமின்றி, பல்வேறு திறமைகளும் கிளியோபாட்ராவிடம் ஒளிர்ந்தன. அவளது
பேச்சில் இனிமை மட்டுமின்றி ஒருவித கவர்ச்சியும் சேர்ந்தே வந்தது. கற்பனை
வளமும் அவளிடம் நிறைந்திருந்தது. உணர்ச்சிகரமாக அவள் பேசும்போது,
துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டுகள் போல அவளது வார்த்தைகள் வேகமாகவும்
ஆக்ரோஷமாகவும் வந்து விழுந்தன.

தாய்மொழியுடன் மேலும் சில
மொழிகளையும் கற்று வைத்திருந்தாள். 9 மொழிகள் வரை கிளியோபாட்ராவுக்கு பேசத்
தெரியும் என்பது பலரது கருத்து. எகிப்தை ஆண்ட டாலமி வம்ச அரசர்களுக்கு
எகிப்திய மொழி தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிளியோபாட்ரா அதனைக் கற்று
வைத்திருந்தாள்.

உலோகங்களைப் பொன்னாக மாற்றும் ரசவாத வித்தையும் அவளுக்குத் தெரியும் என்று கூறுவோரும் உண்டு.

இப்படி பல்வகை திறமைகளுடனும், சாதுரியத்துடனும் செயல்பட்ட கிளியோபாட்ராவுக்கு, அவளது அமைச்சர்களாலேயே முதல் ஆபத்து வந்தது.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 09, 2011 12:00 pm

கிளி மூக்கு கிளியோபாத்ரா உண்மையில் அழகு இல்லாதவர் என்று கேள்விப்ட்டிருக்கிறேன் இலக்கியங்களில் மட்டுமே அவர் அழகானவர் என்றும் சொல்லி இருக்கிறார்கள்

பகிர்ந்தமைக்கு நன்றி ரேவதி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பேரழகி கிளியோபாட்ரா ! Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 12:02 pm

18 வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் திறம்பட செயல்பட்டாள்
கிளியோபாட்ரா. அவளுக்கு ஆலோசனை சொல்ல திறமை வாய்ந்த அமைச்சர்கள் பலரும்
இருந்தனர். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களை கலந்து ஆலோசித்த
பின்னரே எடுத்தாள். இதனால், கிளியோபாட்ராவின் எகிப்திய பேரரசில் இந்த
அமைச்சர்களும் தனி செல்வாக்குடன் திகழ்ந்தனர்.

நாட்டின் அரசனும்,
கிளியோபாட்ராவின் கணவனும் உடன் பிறந்த தம்பியுமான 13-ம் டாலமிக்கு 12 வயதே
ஆகியிருந்ததால் அவனது நடவடிக்கைகளில் சிறுபிள்ளைத்தனங்களே தொடர்ந்தன.

திறம்பட
ஆட்சிபுரிந்த கிளியோபாட்ரா எதிரிகளை அடக்குவதிலும் கைதேர்ந்தவளாக
இருந்தாள். கி.மு.க்களில் எகிப்து பேரரசானது மேலை எகிப்து, கீழை எகிப்து
என்று இரு பகுதிகளாக இருந்தது. மேலை எகிப்தில் வாழ்ந்த பூர்வீக குடிகள்
அவ்வபோது ஆட்சியாளர்களை எதிர்த்து கிளிர்ச்சி செய்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தனர். அவர்களது போராட்டத்தை அடக்குவது சிரமத்திற்குரிய வேலையாக
இருந்தது.

பேரரசியாக பதவியேற்ற கிளியோபாட்ரா, அந்தப் பிரச்சினைக்கு
முழு தீர்வு காண வேண்டும் என்று எண்ணினாள். தனது அமைச்சர்களிடம் கலந்து
ஆலோசித்தாள். பூர்வீகக் குடிகளை வலுக்கட்டாயமாக அடக்குவதுதான் நல்லது என்று
ஆலோசனை சொன்னார்கள் அமைச்சர்கள். ஆனால், கிளியோபாட்ராவுக்கு அதில்
உடன்பாடு இல்லை.

சொந்த மண்ணில் பிறந்தவர்கள் கிளர்ச்சி
செய்கிறார்கள் என்றால், அதில் நியாயமான காரணம் இருக்க வேண்டும் என்று
கருதினாள் கிளியோபாட்ரா. அதுபற்றி, தனது அமைச்சர்களிடம் பேசுவதைவிட,
நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதே சிறந்தது என்பது அவளது முடிவாக
இருந்தது.

அடுத்த சில நாட்களிலேயே மேலை எகிப்துக்கு பயணமானாள்
கிளியோபாட்ரா. பல மொழி திறன் பெற்றிருந்த அவளுக்கு மேலை எகிப்திய பூர்வீகக்
குடிகள் பேசும் மொழியும் தெரிந்திருந்தது. அவர்களிடம் சில மணி நேரம்
பேசினாள்.
இந்தப் பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. கிளர்ச்சி
செய்வதைக் கைவிடுவதாகக் கூறிய பூர்வீகக் குடிகள், சில கோரிக்கைகளை
கிளியோபாட்ரா முன் வைத்தனர். அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாள்
கிளியோபாட்ரா. இதன் மூலம் மேலை எகிப்திய பூர்வீகக் குடிகளுக்கும்,
ஆட்சியாளர்களுக்கும் இடையே இருந்து வந்த நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு
வந்தது. பூர்வீகக் குடிகள் கிளியோபாட்ராவை தங்களது பேரரசியாக
ஏற்றுக்கொண்டனர்.

எகிப்தின் புராதன நகரங்களான தீப்ஸ், ஹெர்மன்திஸ்
ஆகிய நகரங்களில் வசித்து வந்த புரோகிதர்களும் சில நேரங்களில் எகிப்து
பேரரசுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். காரணம், அவர்கள் அந்த பகுதியில்
அதிகார பலம் பெற்றுத் திகழ்ந்ததுதான். இவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி
சுமூக முடிவை ஏற்படுத்தினாள் கிளியோபாட்ரா.

இப்படி, தனது
பேரரசுக்குள் எதிரிகள் யாரும் இல்லாத நிலையைக் கொண்டு வந்தாள் அவள்.
முன்பு, மாவீரன் அலெக்ஸாண்டர் எகிப்தைக் கைப்பற்றியபோது தன்னை, மாசிடோனிய
ஆதி தெய்வமான அம்மோனின் மகன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரது
தாக்கம் கிளியோபாட்ராவிடமும் எதிரொலித்தது. இவள் தன்னை, எகிப்தின் ஆதி
தெய்வமான ரேயின் மகள் என்று அறிவித்துக் கொண்டாள்.

அந்தக் காலத்தில்
ஆட்சியாளர்கள் தெய்வங்களின் அம்சமாகவும், அவர்களின் பிரதிநிதிகளாகவும்
பார்க்கப்பட்டதால், கிளியோபாட்ராவின் அறிவிப்பு ஏகபோகமாக ஏற்கப்பட்டது.
ஹெர்மன்திஸ் நகரில் உள்ள டென்டிரா என்ற இடத்தில் ஒரு கோவிலையும்
ஏற்படுத்தினாள் கிளியோபாட்ரா. அந்த கோவிலில் ஹதர் என்ற தெய்வத்தின்
தோற்றத்தில் தனது உருவச் சிலையையும் வைக்க உத்தரவிட்டாள். கூடிய விரைவில்,
அவளது உருவச் சிலையும் அங்கு வைக்கப்பட்டு, அவள் ஒரு தெய்வாகவே மக்களால்
வழிபடப்பட்டாள்.

ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்குப்
பிறகுதான் அவளுக்கு பிரச்சினையே ஆரம்பித்தது. கணவனும், அரசனுமான டாலமியிடம்
இருந்தே பிரச்சினை வந்தது.

அப்போது 13-ம் டாலமிக்கு 15 வயதே
ஆகியிருந்ததால், அதிகாரம் படைத்த சில அமைச்சர்கள் அவனை தங்கள் கைப்பாவை
ஆக்கிக்கொண்டனர். கிளியோபாட்ராவை விரட்டியடித்தால், நாடு முழுவதும் உனக்கே
உனக்காகிவிடும் என்று ஆசை வார்த்தை காட்டி தூண்டில் போட்டனர் அவர்கள்.
சிறுவன் டாலமியும் அதை நம்பி, கிளியோபாட்ராவை துரத்தியடிக்க சம்மதித்தான்.

அந்தச்
சமயத்தில், ரோமானிய கவர்னரின் தூதுவர்கள் பார்த்தியர்களுக்கு எதிராக உதவி
கேட்டு கிளியோபாட்ராவைத் தேடி வந்தனர். அவர்களை கிளியோபாட்ராவின்
ஆதரவாளர்கள் கொன்றுவிட்டனர். இந்த சமயத்தில் டாலமியைத் திசை திருப்பிய
தியோடோடஸ், பொதினஸ் (இவன் ஓர் அலி), அச்சிலெஸ் என்ற படைத்தலைவன் ஆகியோரின்
சதித் திட்டத்தால் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டது.

அடுத்த நிமிடமே
நாட்டு மக்கள் எதிர்பார்க்காத ஓர் உத்தரவை வெளியிட்டான் அரசன் 13-ம் டாலமி.
கிளியோபாட்ராவின் பதவி பறிக்கப்பட்டது என்பதுதான் அந்த உத்தரவு. கூடவே,
கிளர்ச்சியும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிளர்ச்சியாளர்கள் அட்டகாசத்தில் இறங்கினார்கள். பொதுமக்கள் பலர்
கொல்லப்பட்டனர்.

தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட இந்த அடக்குமுறையால்,
அதுவரை பயத்தை அறியாத கிளியோபாட்ரா முதன் முதலாக பயந்தாள். இந்த நேரத்தில்
அரண்மனைக்குச் சென்றால் தன்னை யார் வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்று
அஞ்சிய அவள், அடைக்கலம் தேடி பயணித்தாள். அவளது தங்கை நான்காம்
அர்சினியும், அவளுக்கு நெருக்கமான சிலருமே அப்போது அவளுடன் இருந்தனர்.

எகிப்தின்
புராதன தலைநகராகத் திகழ்ந்த தீப்ஸ் சென்ற கிளியோபாட்ரா, அங்கு அடைக்கலம்
புகுந்தாள். அடுத்த நடவடிக்கைக்கு அவரச அவசரமாக தனது ஆதரவாளர்களுடன்
ஆலோசித்தாள். எலூசியம் என்ற இடத்திற்கு கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த
அரேபிய பூர்வீகக் குடிகள் அவளுக்கு உதவ முன்வந்தனர். அவர்களைக் கொண்டு ஒரு
படையைத் திரட்டினாள் கிளியோபாட்ரா. ஆனால், அந்த படை அவளுக்கு போதுமானதாகத்
தெரியவில்லை.

இந்நிலையில், கிளியோபாட்ரா தீப்ஸில் இருப்பதாகக்
கேள்விப்பட்ட டாலமி, அவளைக் கொலை செய்ய ஒரு படையை அங்கு அனுப்பினான்.
பயந்துபோன கிளியோபாட்ரா தனது தங்கையுடன் சிரியா நாட்டிற்குத் தப்பிச்
சென்றாள்.
சிரியாவுக்குத் தப்பிச் சென்ற கிளியோபாட்ரா, கார்ஸா என்ற இடத்திற்கு வடக்கே
உள்ள கடற்கரை நகரமான அஸ்கலன் என்ற இடத்தில் தங்கினாள். அங்கிருந்தபடி தனது
ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில், இத்தாலியில் ஆட்சியைக் கைப்பற்ற ரோமானிய செனட் உறுப்பினர்கள் இடையே கடும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இதையொட்டி,
கி.மு.48 ஆகஸ்ட் மாதம் பர்சலஸ் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ரோமானிய
பேரரசர் ஜூலியஸ் சீஸரிடம் படுதோல்வி அடைந்த பாம்பே, எகிப்து மன்னன் 13-ம்
டாலமியின் ஆதரவைப் பெறுவதற்காக அலெக்ஸாண்டிரியாவுக்கு ஓடினார்.

இந்த
பாம்பே வேறு யாரும் அல்ல. ரோமானியப் பேரரசின் படைத் தளபதிதான். ரோமானிய
பேரரசர் ஜூலியஸ் சீஸரின் இரண்டாவது மனைவியான பாம்பியா இவரது சகோதரியே!

பாம்பே
மிகச் சிறந்த மாவீரனாகத் திகழ்ந்ததோடு, ரோமப் பேரரசின் கீழ் இருந்த
எகிப்து உள்ளிட்ட கீழ்திசை நாடுகளுக்குத் தலைவராகவும் இருந்தார். தனது
சகோதரி பாம்பியாவை சீஸர் விவாகரத்து செய்ததால், அவருக்கும், சீஸருக்கும்
பகைமை வளர்ந்தது. இருவரும் இரு பிரிவினராக செயல்பட்டனர். சீஸரை எப்போது
பேரரசர் பொறுப்பில் இருந்து அகற்றலாம் என்று காத்திருந்தார் பாம்பே.

அதனால்தான்
பர்சலஸ் போரில் சீஸருக்கு எதிராகப் போர் புரிந்தார். ஆனால் அவரது
துரதிர்ஷ்டம், படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது. சீஸரிடம் சிக்கினால் தான்
கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சிய பாம்பே, அதுவரை தனது தலைமையின் கீழ்
இயங்கி வந்த எகிப்து பேரரசிடம் அடைக்கலம் கேட்டு ஓடி வந்தார்.

எகிப்து பேரரசின் அரசனாக இருந்த 13-ம் டாலமி தனக்கு உதவுவான் என்று எதிர்பார்த்தார். ஆனால், நடந்ததோ வேறு.
பாம்பேயை
ஆதரித்தால் ஜூலியஸ் சீஸரின் கோபத்திற்கு ஆளாகலாம் என்று எண்ணினான் 13-ம்
டாலமி. அதனால், சீஸரை ஆதரிப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.

அதன்
தொடர்ச்சியாக, அலெக்ஸாண்டிரியாவுக்கு தஞ்சம் புக வந்த பாம்பே, கி.மு.48
செப்டம்பர் மாதம் அலெக்ஸாண்டிரியா கடற்கரையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
பாய்மரக் கப்பலில் இருந்து கடற்கரையில் கால் பதித்த பாம்பே, தனக்கு எதிரே
சற்று தொலைவில் 13-ம் டாலமியின் படைவீரர்கள் சிலர் நிற்பதைக் கண்டார்.
தனக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று தப்பு
கணக்குப் போட்ட பாம்பே, அவர்களை நோக்கி உற்சாகத்துடன் சென்றார்.

"என்னை
வரவேற்க வந்ததற்கு நன்றி. உங்கள் மன்னருக்கும் எனது நன்றியைத்
தெரிவித்துவிடுங்கள்..." என்று அவர் சொன்னபோதே, ஒரு வீரனின் கூரிய வாள்
பாம்பேயின் உடலைத் துளைத்தது. அதிர்ச்சியான பாம்பே சுதாரிப்பதற்குள் அடுத்த
வீரன் இன்னொரு வாளை அவர்மீது பாய்ச்சினான். அடுத்த நிமிடமே ரத்த
வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் பாம்பே.

அவரது உடலை கடற்கரையோரம் வீசியெறிந்துவிட்டு, மன்னனிடம் தகவலைக் கூற அரண்மனைக்கு விரைந்தனர் வீரர்கள்.

ஆனால்,
மன்னன் 13-ம் டாலமியோ கடலுக்குள் சற்றுத் தொலைவில் நங்கூரம் பாய்ச்சி
நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு கப்பலில் நின்று கொண்டிருந்தான். பாம்பே கொலை
செய்யப்பட்டதை பார்த்துக் கொண்டுதான் இருந்தான் அவன். அவனுடன், அவனது
பிரதான அமைச்சர்கள் சிலரும் இருந்தனர். பாம்பே படுகொலை செய்யப்பட்டு நான்கு
நாட்கள் இருக்கும். ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு பெரும் படையுடன் திடீர்
விஜயம் செய்தார்.

நாட்டை விட்டு விரட்டப்பட்ட, அதுவரை அவர் காணாத
கிளியோபாட்ராவுக்கும், அவளது கணவன் 13-ம் டாலமிக்கும் இடையில்
ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும்,
பர்சலஸ் போரில் தப்பிச் சென்ற பாம்பேவை கைது செய்யும் எண்ணத்திலும் அவரது
இந்த பயணம் அமைந்திருந்தது.


அலெக்ஸாண்டிரியா வந்த சீஸரைக் காண
13-ம் டாலமி தனது அமைச்சர்களுடன் சென்றான். சிம்மாசனத்தில் கம்பீரமாக
வீற்றிருந்த சீஸரைப் பார்த்த 13-ம் டாலமிக்கு பயமே வந்துவிட்டது. அவன்
சிறுவன் அல்லவா? இப்போதுதான் முதன்முறையாக அந்த மாபெரும் வீரனைப்
பார்க்கிறான்.


சீஸரிடம் 13-ம் டாலமி, "நான் உங்களுக்கு, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பரிசு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறேன்..." என்றான்.

சீஸருக்கு புரியவில்லை.

"என்னது... நான் ஆவலுடன் எதிர்பார்த்த பரிசா?"

"ஆமாம் பேரரசே...!"

"சரி... நீ கொண்டு வந்த பரிசைக் கொடு. பார்க்கலாம்..." என்று கர்ஜனையோடு சொன்னார் சீஸர்.

அடுத்த
நொடியே தனது அமைச்சர்களைப் பார்த்தான் 13-ம் டாலமி. அவர்கள் ஒரு பெரிய
தாம்பாளத் தட்டில் ஒரு பொருளை வைத்து, அதை ஒரு துணியால் மூடிக் கொண்டு
வந்தனர்.

அதைப் பார்த்த சீஸருக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது. அது என்ன பொருள் என்பதை அறிய ஆவலானார்.

சீஸர் முன்பு வைக்கப்பட்ட அந்த தாம்பாளத்தில் இருந்த பொருள் மீது மூடப்பட்ட துணியை விலக்கினான் ஒரு வீரன்.
துணி
விலக்கப்பட்ட அடுத்த நொடியே திடுக்கிட்டார் சீஸர். அந்தத் தட்டில்
இருந்தது நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பாம்பேயின் தலை..!



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 12:19 pm

பாம்பேயின் தலையைத் துண்டித்துத் தனக்குப் பரிசாகக் கொண்டு வந்த டாலமி மீது ஜூலியஸ் சீஸருக்கு கோபம் அதிகமானது.

"இவனிடம்
விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது" என்று நினைத்தாரோ என்னவோ, "எகிப்து
இனி என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும்..." என்று
உத்தரவிட்டுவிட்டு அரியணையில் இருந்து கீழே இறங்கி வெளியேறினார்.

டாலமிக்கு
என்ன செய்வது என்றே தெரியவில்லை. "அமைச்சர்கள் பேச்சைக் கேட்டு
கிளியோபாட்ராவை ஏற்கெனவே துரத்திவிட்டோம். இப்போது இந்த சீஸர் நம்மை
துரத்திவிடுவார் போலிருக்கிறதே..." என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அன்று இரவு அரண்மனையின் சொகுசு படுக்கையறையிலும் அவனுக்குத் தூக்கம் வர மறுத்தது. நாளை என்ன நடக்குமோ என்ற பயம் அதிகமாகியது.

மறுநாள் காலை விடிந்தது.

டாலமி எதிர்பார்த்தது போலவே நடந்தது.

ஜூலியஸ்
சீஸரின் படைகள் எகிப்து பேரரசின் தலைநகரான அலெக்ஸாண்டிரியாவை
முற்றுகையிட்டன. நகர் வீதிகளில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கியதோடு
கண்ணில்பட்டவர்களை எல்லாம் கொலை செய்தனர். இதோடு அவர்கள் நின்றுவிடவில்லை;
பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்குள்ளும் புகுந்தனர். பொருட்களோடு,
பெண்களின் கற்பையும் சூறையாடினர்.

எங்குப் பார்த்தாலும் மக்களின்
அபயக்குரல். பொதுமக்களில் பலர் தற்காத்துக் கொள்ள மறைவான இடங்களில்
பதுங்கினர். சிலர் பாதுகாப்பான இடம் தேடி கடற்கரையோரம் ஓடினர்.

டாலமிக்கும்
பயம் அதிகமாகியது. தனது உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சினான். தலைமை
அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தி சீஸரின் ஆட்களைக் கொல்ல தனது
படைவீரர்களை அனுப்பினான்.

ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பலம்
வாய்ந்த ஜூலியஸ் சீஸரின் படை வெற்றிபெற்றது. டாலமியின் படைவீரர்கள்
ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் போர்க் கைதிகளாக
சிறைபிடிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த டாலமி பதறிப்போனான். தனது
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பக்கத்து நாடான எலூசியத்திற்கு தப்பி ஓடினான்.
அலெக்ஸாண்டிரியா முழுவதும் சீஸரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கூடவே
டாலமியின் அரண்மனையும்தான்!

தன்னைப் புதிய எகிப்திய பேரரசராக அறிவித்தார் ஜூலியஸ் சீஸர். ஆணைகளையும் பிறப்பிக்க ஆரம்பித்தார்.

இப்போது - கிளியோபாட்ரா ஒரு பக்கம் தலைமறைவு. 13-ம் டாலமி இன்னொரு பக்கம் தலைமறைவு.

எத்தனை
நாட்களுக்குத்தான் இப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்வது என்று யோசித்த
இருவரும், ஜூலியஸ் சீஸரிடம் இருந்து எகிப்தை கைப்பற்ற திட்டம் தீட்டினர்.
சீஸரின் படையை நேருக்கு நேராக எதிர்த்து போரிட படை பலம் தங்களிடம்
இல்லாததால், அவர்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

டாலமி சிறுவன் என்பதால், அவனால் ராஜதந்திரமான முடிவுகளையும் எடுக்க இயலவில்லை. வழக்கம்போல் தலைமை அமைச்சர்களிடமே ஆலோசனை கேட்டான்.

"மன்னா! இப்போது நம்மிடம் போதிய படைபலம் இல்லை. அதனால், யோசித்துதான் முடிவு எடுக்க வேண்டும்" .

"யோசித்துதான் முடிவெடுக்க வேண்டுமென்றால், என்னை இப்படியே இருக்கச் சொல்கிறீர்களா?"

"இல்லை மன்னா! இப்போதைய நிலவரப்படி சீஸரிடம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியே இல்லை".

"அப்படியென்றால், என்னை அவரது காலில் போய் விழச் சொல்கிறீர்களா?"

"மன்னா!
நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. அவருக்கு ஆதரவாகப் போய்விடுவோமே என்றுதான்
சொல்கிறோம்..." - டாலமியிடம் இப்படி யோசனை கூறினார்கள் தலைமை அமைச்சர்கள்.

வேறு வழி தெரியாத அவனும், "சரி..." என்று தலையை ஆட்டி வைத்தான்.

ஆட்சிக்காக தன்மானத்தைக் கூட இழக்கத் தயார் ஆனான். ஆனால், கிளியோபாட்ராவோ வேறுவிதமாக யோசித்தாள்.

தனது அழகால், ஜூலியஸ் சீஸரை என்ன... எப்பேற்பட்ட பேரரசனையும் வீழ்த்திவிட முடியும் என்று உறுதியாக நம்பினாள் அவள்.

அதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தாள்
பேரரசர் சீஸரைச் சந்திக்க, தனது அமைச்சரான பொதினசுடன் எலூசியத்தில் இருந்து
அலெக்சாண்டிரியாவுக்குப் பயணமானான், விரட்டப்பட்ட எகிப்து மன்னன் 13-ம்
டாலமி.

அதேபோல், கடற்கரை நகரமான அஸ்கலனில் அடைக்கலம் புகுந்திருந்த
கிளியோபாட்ராவும் சீஸரைச் சந்திக்க வந்தாள். எல்லோரும் அறியுமாறு
அலெக்ஸாண்டிரியா சென்றால், தன்னை சீஸரின் ஆட்கள் கொல்கிறார்களோ இல்லையோ,
டாலமியால் நிச்சயம் கொல்லப்படுவோம் என்று கருதினாள் அவள்.

இதனால்,
தன்னுடன் வந்த தங்கை அர்சினியைப் பிரிந்து, மாறுவேடத்தில் மிகவும் வேண்டிய
தோழியர் சிலருடன் அலெக்ஸாண்டிரியாவுக்குச் சென்றாள் கிளியோபாட்ரா.

சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள்..

அலெக்ஸாண்டிரியாவில் உள்ள எகிப்திய அரண்மனையில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார் ஜூலியஸ் சீஸர்.

'எகிப்தைக்
கைப்பற்றியாயிற்று.. அடுத்து என்ன செய்யலாம்?' என்று அவர் ஆலோசனை நடத்திக்
கொண்டிருந்தபோது, ஒரு பொருள் அவரது பார்வையை பளிச்சென்று கவர்ந்தது.

அந்தப்
பொருளைக் கூர்ந்து நோக்கினார் சீஸர். அது பாரசீக நாட்டில் இருந்து
வரவழைக்கப்பட்ட அழகான ரத்தினக் கம்பளம். திடீரென்று அது நெளிந்ததுதான்
அவரது பார்வையைத் திடீரென்று இழுத்தது. சீஸர் உள்பட அவையில் இருந்த அனைவரது
பார்வையும் அந்த ரத்தினக் கம்பளத்திலேயே குவிந்திருந்தது.

சீஸர்
அந்தக் கம்பளத்தை அவிழ்த்து என்னவென்று பார்க்க உத்தரவிட்டார். அவரது வீரன்
ஒருவன் அந்த ரத்தினக் கம்பளத்திடம் வேகமாகச் சென்றான். அவன் அதனருகில்
சென்றபோதும் அந்த கம்பளம் நெளிந்து கொண்டிருந்தது.

"ஒருவேளை மலைப்பாம்பாக இருக்குமோ..." என்றுயோசித்தவன், அதை அவிழ்த்து உருட்டி விட்டான்.

கம்பளத்தின்
ஒருமுனை அந்த வீரனின் காலடியில் இருக்க... மறுமுனை ஜூலியஸ் சீஸரை நோக்கி
வேகமாக உருண்டு போனது. கம்பளத்திற்குள் உருண்டு வந்த அந்தப் பொருள் ஒரு
அழகுப் பதுமையாக ஜூலியஸ் சீஸரின் கால் அருகில் வந்து விழுந்தது. அவள் வேறு
யாருமல்ல. கிளியோபாட்ராவேதான்!

அவளைப் பார்த்த மாத்திரத்தில்
அரியணையில் இருந்து எழுந்துவிட்டார் ஜூலியஸ் சீஸர். அவளை உச்சியில் இருந்து
உள்ளங்கால்வரை வேகமாக ஒரு நோட்டமிட்டார்.

கொள்ளை அழகு
என்பார்களே... அப்படிப்பட்ட ஓர் அழகு அவளது மேனியில் நைல் நதியாக
தவழ்ந்தோடியது. சீஸர் அவளது அழகில் கிறங்கி நின்றார். பின்பு சுதாரித்து,

" பெண்ணே நீ யார்?" என வினவினார்.

"நான்தான் கிளியோபாட்ரா! இந்த பேரரசுக்கு மகாராணி" அவள் கம்பீரமாகப் பதிலளித்தாள்.

"என்ன வேலையாக இங்கே, இந்த கோலத்தில் வந்தாய்?"

"அது பற்றி தனியாகத்தான் நான் தங்களிடம் பேச வேண்டும்"

"அவ்வளவு ரகசியமான விஷயமா அது?"

"ஆமாம்! இன்னொன்று... உங்களுக்காக பரிசு ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறேன்"


13-ம்
டாலமி பரிசு என்று, பாம்பேயின் தலையைக் கொடுத்ததால், இவளும் அப்படி ஏதாவது
கொண்டு வந்து இருப்பாளோ என அவர் எண்ணிக் கொண்டிருந்தபோது

"நீங்கள் வேறு எதையோ நினைத்துப் பயப்பட வேண்டாம். அந்தப் பரிசு நானேதான்"!

கிளியோபாட்ரா இப்படிச் சொன்னதும், ஜூலியஸ் சீசரின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

"இரவில்
நாம் இருவர் மட்டும் தனியாக சந்தித்துப் பேசுவோம்..." என்று கூறிவிட்டு,
தன் பணிப்பெண்களை அழைத்து, கிளியோபாட்ராவை நன்றாக உபசரிக்க உத்தரவிட்டார்
ஜூலியஸ் சீஸர்.
அந்தி சாயும் நேரம். அந்த பாலைவன பிரதேசத்து சூரியன் மஞ்சள் தேய்த்துக் குளித்த ஜொலிப்பில், ஒருவித மயக்கத்தில் இருந்தான்

அலெக்சாண்டிரியாவில்
உள்ள தனது அரண்மனைக்குள் கிளியோபாட்ராவும் ஏறக்குறைய அதே நிலையில்தான்
இருந்தாள். ஆம்... அவளும் வாசனைத் திரவியங்கள் கலந்த மிகவும் சுத்தமான
தண்ணீர் நிறைந்த தொட்டியில் நீராடத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அரண்மனை
சேவைப் பெண்கள் சிலர் அவளை அழைத்து வந்தனர். குளியல் அறை இருந்த
பகுதிக்குள் வந்ததும், சேவைப் பெண்களை, தான் கூப்பிடும்போது மட்டும்
வந்தால்போதும் என்று கூறி அனுப்பி வைத்தாள் கிளியோபாட்ரா. அவர்கள் கதவை
வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் இட்டனர்.அதற்கு முன்னதாக, சற்றே திரும்பினாள். அங்கே, குளியல் தொட்டியை ஒட்டி ஒரு பாத்திரத்தில், கழுதைப் பால் வைக்கப்பட்டு இருந்தது

பேரரசியாக
இருந்தபோது முழுக்க முழுக்க கழுதைப் பாலிலேயே குளித்துப்
பழக்கப்பட்டவளுக்கு, இப்போது ஒரு பாத்திரத்தில் மட்டும் இப்படி பாலை
வைத்திருந்தனர். இருந்தாலும், சமாளித்துக்கொண்டாள்.


குளியல் தொட்டிக்குள் அமர்ந்து கொண்டவள் நிதானமாகக் குளிக்க ஆரம்பித்தாள். சுமார் 10 நிமிடங்கள் மெதுவாக நகர்ந்து முடிந்தன.
நீராடி
முடித்தவள், அந்த பெரிய தொட்டியில் இருந்து சற்றே மேலே எழுந்து
அமர்ந்தாள். தொடர்ந்து பாத்திரத்தில் இருந்த பாலை ஒரு கோப்பையில் எடுத்துத்
தன் மீது ஊற்றிக் குளித்தாள்.

குளித்தது போதும் என்று நினைத்தவள,
தனது இரு கைகளையும் தட்டினாள். அவளது சேவைப் பெண்கள் இருவர், குளியல்
அறையின் முகப்பு வாசல் முன்பு வந்து நின்றனர்.

"உள்ளே வரலாமா மகாராணி?" - அவர்களது குரல் வந்த திசையை நோக்கித் திரும்பியவள், "ஆம்... வாருங்கள்" என்றாள்.

அவர்களில்
ஒருத்தியின் கையில் இரவு நேரத்தில் மகாராணிகள் அணியக் கூடிய மிகவும் விலை
உயர்ந்த ஆடை இருந்தது. இன்னொருத்தி, ஒரு தட்டில் வாசனைத் திரவியங்களைக்
கொண்டு வந்தாள்.

இருவரும் கிளியோபாட்ரா அருகில் வந்தது, அவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் அவளை நோக்கினர்.

"மகாராணி! நாங்கள் திரும்பிச் செல்ல உத்தரவு தர வேண்டும்!"

"தாராளமாகச் செல்லுங்கள்!"

அடுத்த
ஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தைவிட்டு அகன்று இருந்தனர் சேவைப் பெண்கள்
இருவரும். குளியல் அறையின் முன்புறக் கதவும் மூடப்பட்டு இருந்தது.
இரவு 8 மணி கடந்திருக்கும்.

52 வயதான ரோமானியப் பேரரசர் ஜூலியஸ்
சீஸர் கிளியோபாட்ரா அறை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றியும்
சேவைப் பெண்கள். அவர்கள் பேரரசருக்கு முன்பாக மலர்களை தூவியபடி வந்து
கொண்டிருந்தனர்.

கம்பீரமாக நிமிர்ந்து நடந்து வந்த ஜூலியஸ் சீஸர்,
கிளியோபாட்ரா அறையை நெருங்கியதும் உடன் வந்த சேவைப் பெண்கள் உத்தரவு பெற்று
விலகிக்கொண்டனர். அவர் மாத்திரம் கிளியோபாட்ரா அறைக்குள் நுழைந்தார்.

அறையின்
கதவை தாழ்ப்பாள் இட்டுக்கொண்டவர், கிளியோபாட்ரா எங்கே என்று பார்வையை
சுழற்றினார். உயரிய பஞ்சணையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் அவள் கிளியோபாட்ரா, தனது பேரழகில் பேரரசர் கிறங்கிப் போய்விட்டார் என்பதைப் புரிந்து கொண்டாள்.

அவளும் அவள் தனது காந்தக் கண்களால் சீஸரை நோட்டமிட்டாள்.

வீரன்
என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியது சீஸரின்
கம்பீரமான உடல். இவரிடம் தன்னை ஒப்படைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற
முடிவுக்கும் வந்தாள்.

அவளது இந்த முடிவின் பின்னணியில்
ராஜதந்திரமும் ஒளிந்திருந்தது. தனது அழகில் சீஸர் மயங்கி, அவர் தன்னை அவரது
மகாராணி ஆக்கிக் கொண்டால், மீண்டும் எகிப்து பேரரசு தனக்கு
கிடைத்துவிடும். ரோமானியப் பேரரசியாகவும் வலம் வரலாம் என்று எண்ணினாள்.

சீஸர் பேச ஆரம்பித்தார்.

"பேரழகுக்கு
பேரழகாக திகழும் என் அருமை கிளியோபாட்ராவே. உன் மவுனம்கூட பேரழகாகத்தான்
இருக்கிறது. ஆனாலும், இந்த நேரத்தில், அதாவது என்னருகில் நீ இருக்கும்போது
அந்த மவுனம் தேவையில்லையே..."

"அப்படியில்லை பேரரசரே..! தாங்கள் முதலில் பேசினால் நன்றாக இருக்கும் என்பதால் அமைதி காத்தேன்."

"ஆமாம்... திடீரென்று நீ என்னை சந்திக்கக் காரணம்...?"

"இப்போது,
இந்த எகிப்து பேரரசுக்கு நீங்கள் பேரரசராக இருக்கலாம். ஆனாலும், நான்தான்
பேரரசி. அப்படியிருந்தும், சிலரது சூழ்ச்சிகளுக்கு மயங்கி என்னை
நாட்டைவிட்டு விரட்டிய எனது கணவனை தோற்கடிக்க வேண்டும். நான் மீண்டும்
பேரரசி ஆக வேண்டும். அதற்கு உங்கள் துணை எனக்கு வேண்டும்...." என்று
கர்ஜித்தாள்

"உனது விருப்பத்தில் என்ன தவறு இருக்கிறது? நிச்சயம்
உன் கணவனைப் பழி வாங்கியே ஆக வேண்டும். இந்த நாட்டுக்கு பேரரசியாக
மட்டுமின்றி, எனக்கு மகாராணியாகவும் நீ இருந்தால் நிச்சயம் அதை
நிறைவேற்றிக் கொள்ளலாம்".

சீஸர் இப்படிச் சொன்னதும் சட்டென்று சிரித்தாள் கிளியோபாட்ரா.

"எனது
விருப்பத்தை இவ்வளவு எளிதில் நிறைவேற்றுவீர்கள் என்று நான்
எதிர்பார்க்கவில்லை..." என்ற கிளியோபாட்ராவிடம், லேசாக காதலும், வெட்கமும் வெளிப்பட்டது.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 12:56 pm

கிளியோபாட்ராவிடம் முதன் முறையாக வெட்கத்தை, அதுவும் மிக நெருக்கத்தில்
பார்த்த ஜூலியஸ் சீஸரின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது
போன்றும் உணர்ந்தார். வானத்தில் இறக்கை விரித்து முதன் முதலாக பறந்தால்
எப்படி இருக்குமோ... அந்த உணர்வும் வந்து போனது.


கிளியோபாட்ராவும்,
ஜூலியஸ் சீஸரும் ஒன்றாகக் கலந்துவிட்ட தகவல் அறிந்த, 13-ம் டாலமி வெகுண்டு
எழுந்தான். தன்னை ஏமாற்றிய கிளியோபாட்ரா, ஆட்சியைக் கைப்பற்ற ஏதோ பெரிய
திட்டம் போட்டிருப்பதாகவே கருதினான். ஒருவேளை, சீஸரின் உதவியால் அவள்
ஆட்சிக்கு வந்துவிட்டால், அவளை விரட்டிவிட்ட தன்னை எப்படியும்
கொன்றுவிடலாம் என்று பயந்தான் 13-ம் டாலமி.

உடனே தனது ஆதரவாளர்களைத்
திரட்டினான். அவர்களைப் பொதுமக்களிடம் அனுப்பி, கிளியோபாட்ராவுக்கு எதிராக
தூண்டிவிட்டான். கிளர்ச்சி ஏற்பட்டது, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது.

இதையறிந்த
ஜூலியஸ் சீஸர் கோபம் கொண்டார். 13-ம் டாலமியை உடனே கைது செய்யுமாறு தனது
படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே 13-ம் டாலமியைத் தேடி ஒரு
படை சென்றது. அவர்கள் தலைமறைவாக இருந்த 13-ம் டாலமியைக் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், கிளியோபாட்ராவின் தங்கையான
நான்காம் அர்சினி, 13-ம் டாலமியிடம் செல்வாக்கு பெற்றிருந்த பொதினஸ்
மற்றும் படைத்தளபதி அச்சிலெஸ் உதவியுடன் சேர்ந்து ஒரு பெரும் படையை
திரட்டினாள். சீஸரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது அவளது திட்டமாக
இருந்தது. அவள் 20 ஆயிரம் படைவீரர்களுடன் சீஸர் கைப்பற்றிய பகுதியை
முற்றுகையிட்டாள். அர்சினியின் படைகளும், சீஸரின் படைகளும் மோதின.

இந்தப்
போரில் இருதரப்பிலும் பல வீரர்கள் பலியாகினர். பொதுமக்களும்
கொல்லப்பட்டனர். அலெக்ஸாண்டிரியாவில் இருந்த நூலகத்துக்குத் தீ
வைக்கப்பட்டது. உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சேமிப்புக்
கிடங்குகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்தப் போர்ப்
பதற்றத்துக்கு மத்தியில் அர்சினி தனது ஆதரவாளர்களைத் திரட்டினாள். சீஸரை
எதிர்த்த எகிப்து மக்கள் இவளுடன் சேர்ந்து கொண்டனர். அந்த தைரியத்தில்
எகிப்தின் மகாராணியாக தன்னை அறிவித்தாள் அர்சினி.

எகிப்தைக்
கைப்பற்றிய ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸர் இந்த அறிவிப்பால் கொஞ்சம்
யோசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள
அர்சினியை எப்படி அடக்குவது என்று யோசித்தார். ராஜதந்திரத்துடன் காய்களை
நகர்த்தினார்.

சிறைபிடிக்கப்பட்ட 13-ம் டாலமியை விடுதலை செய்தார்.
ஆனாலும், சுமார் 6 மாதங்கள்வரை போர் நீடித்தது. அந்தப் போரில் பொதினஸ்
கொல்லப்பட்டான். அடுத்ததாக படைத்தளபதி அச்சிலெசும் பலியானான். எகிப்து படை
பின்வாங்கியது.

இதனால் விடுதலையான 13-ம் டாலமிக்கு பயம் அதிகமானது.
சீஸரின் படைவீரர்கள் தன்னைக் கொன்று விடுவார்களோ என்று பயந்தான். உடன்
இருந்து ஆலோசனை கூறிவந்த பொதினஸ், படைத்தளபதி அச்சிலெஸ் ஆகியோர்
கொல்லப்பட்டது அவனுக்குப் பேரிழப்பாக இருந்தது. அதனால் நாட்டைவிட்டுத்
தப்பிச் செல்ல முடிவெடுத்தான்.

ஒருநாள் இரவு தன்னந்தனியாக
நாட்டைவிட்டு ஓடினான் 13-ம் டாலமி. இரவு நேரம் என்பதால் எந்தத் திசை
நோக்கிச் செல்கிறோம் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. சீஸரின் படைவீரர்கள்
எங்கெங்கு முகாமிட்டு இருக்கிறார்களோ, அதற்கு எதிர்த்திசையில் ஓடினான்.

ஓரிடத்தில்
நைல் நதி குறுக்கிட்டது. அதை எப்படி கடப்பது என்று சிறுவனான 13-ம்
டாலமியால் யோசிக்க முடியவில்லை. ஒரு மரக்கட்டையை கையில் எடுத்துக்கொண்டு
ஆற்றுக்குள் இறங்கினான். ஆனால் ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அதில்
அடித்துச் செல்லப்பட்டு, நீருக்குள் மூழ்கி இறந்தான். அப்போது அவனுக்கு
வயது 15.

அதே நேரம், எகிப்தின் பேரரசியாக அறிவிக்கப்பட்ட அர்சினி
சிறைபிடிக்கப்பட்டாள். இதுதான் தகுந்த சமயம் என்று, அதற்காகவே காத்திருந்த
கிளியோபாட்ரா சீஸரிடம் மெல்லக் காயை நகர்த்தினாள்.

ஒருநாள் இரவு - சீஸரைத் தனிமையில் சந்தித்தாள்..

"பேரரசரே! என் அன்புக்கு உரியவரே! இப்போது எகிப்து முழுவதும் தங்கள் வசமாகிவிட்டது..."

"அது எதிர்பார்த்த விஷயம்தானே?"

"ஆமாம்!
இப்போது, நான் எகிப்து பேரரசியாக ஆசைப்படுகிறேன். அதுவும், உங்களின்
நிரந்தர துணையுடன்..." என்ற கிளியோபாட்ரா, ச

ஏற்கெனவே கிளியோபாட்ராவின் பேரழகு என்ற வலையில் கவிழ்ந்து கிடந்த சீஸர், அவளை எகிப்தின் மகாராணியாக்க சம்மதித்தார்.

அடுத்த
சிலநாட்களில் அதற்கான விழா நடந்தது. பெண்களே நேரடியாக ஆட்சிப் பொறுப்பை
ஏற்க முடியாது என்பதால், மீண்டும் ஒருமுறை அதிகாரப்பூர்வமாக ஒரு திருமணம்
செய்ய வேண்டிய அவசியம் கிளியோபாட்ராவுக்கு ஏற்பட்டது. சீஸருடன் "இணைந்து"
மட்டுமே வாழ முடியும் என்பதால், தனது இன்னொரு தம்பியை திருமணம் செய்துகொள்ள
முடிவெடுத்தாள் கிளியோபாட்ரா.

அந்த தம்பியின் பெயர் 14-ம் டாலமி.
அவனுக்கு அப்போது 16 வயதே ஆகியிருந்தது. அதாவது, இறந்துபோன 13-ம்
டாலமியைவிட ஒரு வயது அதிகம். அவனை கணவனாக ஏற்றுக்கொண்ட கிளியோபாட்ரா,
ஜூலியஸ் சீஸர் உதவியுடன் மீண்டும் எகிப்தின் மகாராணி ஆனாள்.

அடுத்த
சில நாட்களில் அவள் தேனிலவுக்குப் புறப்பட்டாள். புதிய கணவன் 14-ம் டாலமியை
அழைத்துக்கொண்டு அல்ல; ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீஸருடன்!
அழகான காலைப்பொழுது அது -

நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த அந்த
அழகான இடத்தில் தென்றல்காற்று வீசிக்கொண்டிருந்தது. இரவிலும் அனல்
தகிக்கும் அந்தப் பாலைவனபிரதேசத்தில், அதற்கு மாறாக குளுமையை வரவழைத்துக்
கொண்டிருந்த அந்த இடம் சற்று வியப்பைத்தான் தந்தது.

பாலைவன அனலைத் தாங்கி வந்த வெப்பமான காற்று, இந்த இடத்தில் மட்டும் நைல் நதியில் தாகம் பருகிய பரவசத்தில் குளிர்ந்துபோய் வீசியது.

பொதுவாக
வறட்சியைத் தாங்கி வளரும் கள்ளிச்செடி போன்ற தாவரங்களே காணப்படும்
பாலைவனம், இங்கு மட்டும் சோலைவனமாக மாறியிருந்தது. பச்சை பேரீச்சம் மரங்களை
மோதி வந்த காற்று லேசாகச் சலசலத்துக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட
அழகான இடத்தில் அமைந்திருந்தது அந்தக் குடில். அந்தக் குடிலுக்குள்
வி.வி.ஐ.பி.க்கள் இருவர் தங்கியிருந்தனர் என்பதால், குடிலைச் சுற்றிலும்
ஆங்காங்கே வீரர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிளியோபாட்ரா - பேரரசர் ஜூலியஸ் சீஸர் ஆகியோர்தான் அந்த வி.வி.ஐ.பி.க்கள். தேனிலவு கொண்டாடவே, இவர்கள் அங்கு வந்திருந்தார்கள்.

அந்த
வகையில், உலகில் முதன் முதலாக தேனிலவு கொண்டாடிய ஜோடியாக கிளியோபாட்ரா -
ஜூலியஸ் சீஸர் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களது கணிப்பு.

ஆனால்,
இவர்களது தேனிலவு கொண்டாட்டத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. இவர்கள்
தம்பதியராக அதாவது, திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக உல்லாசம்
அனுபவிக்க இங்கு வராமல், அந்த உல்லாசத்தை மாத்திரமே அனுபவிக்க
வந்திருந்தனர். இதுபோக, வேறு சில காரணங்களும் அவர்களுக்கு இருந்தன.

கிளியோபாட்ராவைப்
பொறுத்தவரை, அவள் எகிப்தின் மகாராணியாக ஆயுள் முழுக்க இருக்க வேண்டும்
என்று ஆசைப்பட்டாள். இப்போது அந்த மகாராணி அந்தஸ்தை அவளுக்குக்
கொடுத்திருப்பவர் ஜூலியஸ் சீஸர். அதனால், அவரை எந்த அளவுக்கு
சந்தோஷப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நல்லது என்று எண்ணிக்
கொண்டாள். அதற்காக, பார்ப்போர் எல்லாம், ஏன் பெண்கள் கூட வியந்து பொறாமை
கொள்ளும் தனது பேரழகை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

சீஸரும்
காரணம் இல்லாமல் கிளியோபாட்ராவை தன்னுடன் வைத்திருக்கவில்லை. முதன்முதலாக
அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவளது பேரழகில் கவிழ்ந்து போய்விட்டார்.
அவளுடன் உடலாலும், உள்ளத்தாலும் கலந்ததில் தன்னை ஒரு இளைஞன் போலவே
உணர்ந்தார் சீஸர். அதனால்தான், கிளியோபாட்ரா தன்னுடன் இருக்க வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டார். அதனாலேயே தேனிலவு வரைக்கும் வந்துவிட்டார்.


"என்னை
முதன் முதலாக வியக்க வைத்த பேரழகே! உன்னுடன் 100 வயதைக் கடந்தும் வாழ
வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த ஆசைதான் நிறைவேறுமா என்று பயமாக
இருக்கிறது".

"பயப்பட வேண்டாம் பேரரசே! உங்களுக்காகவே நான்
பிறந்ததுபோல் உணர்கிறேன். இந்த எகிப்து பேரரசின் மகாராணியாக, உங்களவளாக
நான் வாழ விரும்புகிறேன்..."

"உனது இந்த பேச்சு, ஆயிரம் வீரர்கள்
என்னைச் சுற்றி பாதுகாப்புக்கு நின்றிருப்பது போன்ற தைரியத்தைத்
தருகிறது..." என்ற ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவை அணைத்துக்கொண்டு அவளது
நெற்றியில் முத்தமிட்டார். அந்த மாவீரனது விழியோரம் லேசாக கலங்கியிருந்தது.

அந்த
விழியோரம் தனது மஞ்சள் கரத்தைக் கொண்டு சென்ற கிளியோபாட்ரா, அங்கிருந்த
ஈரத்தை துடைத்துவிட்டாள். ஆதரவாய் அவரை அணைத்துக்கொண்டாள்.


"சரி... இப்போது காலைப்பொழுதுதானே..? நாம் இந்த அழகிய நதியில் சிறிது தூரம் உலவிவிட்டு வரலாமே..." என்றார் சீஸர்.

"நானும்
அதைத்தான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். தாங்கள்
முந்திக்கொண்டு விட்டீர்கள்..." என்ற கிளியோபாட்ரா, லேசாகப் புன்னகையை
உதிர்த்தாள்.


படகில் ஒரே ஒரு வீரன் மட்டும் இருந்தான். சீஸர்
படகினுள் ஏறியதும், அந்த வீரனைப் படகில் இருந்து வெளியேற பணித்தார். அவனும்
வெளியேறினான்.

சிறிதுநேரத்தில் படகைத் துடுப்பை மீட்டி இயக்க ஆரம்பித்தார் சீஸர். அவருடன் கிளியோபாட்ரா மட்டுமே துணைக்கு இருந்தாள்.
கிளியோபாட்ராவும், ஜூலியஸ் சீஸரும் புறப்பட்ட உல்லாசப்படகு நைல் நதியில்
மெதுவாக பாய்ந்து சென்றது. சிறிது தூரம் சென்றதும் படகை நிறுத்திக்கொண்டார்
சீஸர்.

கிளியோபாட்ரா அவருக்கு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.
துடுப்பை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கிளியோபாட்ரா நோக்கி வந்த சீஸர், அவளை
அப்படியே தன்னோடு அணைத்துக்கொண்டார்.

"எனக்கே எனக்காய் உரியவளே!
இந்த அழகான நைல் நதியில் பேரழகியான உன்னோடு பயணிப்பது, ஏதோ உல்லாச
உலகத்தில் மிதப்பதுபோல் இருக்கிறது. சொர்க்கம் சொர்க்கம் என்று
சொல்கிறார்களே, அங்கேயும் இதே அனுபவம்தான் இருக்குமோ என்றுகூட எனக்குத்
தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?"

"எனக்கும் அப்படித்தான்
பேரரசே! உலகமே வியக்கும் ஒரு மாவீரனோடு தன்னந்தனியாக, அவருக்கே உரியவளாக
பயணிப்பதில் எனக்கும் பரமானந்தம்தான்..." என்ற

அந்த
படகின் அறை அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விலை உயர்ந்த பளபளக்கும்
அரேபிய கம்பளம் அங்கிருந்த சிறிய படுக்கையில் விரிக்கப்பட்டுக் கிடந்தது.
அதில் இருந்து வந்த வாசணை திரவியங்களின் மணம் 52 வயது சீஸரை 25 வயது
வாலிபனாக்கியது.

அவர்களது அணைப்பில் அங்கே காமத்திற்கு
பதிலாக அன்புதான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. காரணம், ஜூலியஸ் சீஸர்
உருக்கமாக பேசியதுதான்.

"அன்பே! உன்னைப் பார்த்த நாள் முதல் எதையோ
பறிகொடுத்ததுபோல் உணர்கிறேன். எனக்கும் உன்னை ஒத்த வயதாக இருந்தால் எப்படி
இருக்கும் என்றுகூட அடிக்கடி சிந்தித்துப் பார்க்கிறேன்".

"அதனால்
என்ன பேரரசே! மனம்தானே வயதை நிர்ணயிக்கிறது. அழகு இன்று இருக்கும், நாளை
போய்விடும். மனம் என்றும் ஆரோக்கியமாக இருந்தால், என்றும் 16 வயதாக
வாழலாம்..." என்று கிளியோபாட்ரா சொன்னபோது, அவளது மதிநுட்பத்தைக் கண்டு,
வியப்பில் புருவங்களை உயர்த்தினார் சீஸர்.

"உன்னுடைய மதிநுட்பம்,
பேரழகு, பழகும் தன்மை - இவற்றை எல்லாம் பார்க்கும்போது, உன்னை எனது
அதிகாரப்பூர்வ மனைவியாக அடைய முடியவில்லையே என்று அவ்வபோது தவிக்கிறேன்.
உன் மூலம் எனக்கொரு மாவீரன் மகனாய்ப் பிறக்க வேண்டும் என்று
ஆசைப்படுகிறேன். அது நடக்குமா?" என்று கேட்டார் சீஸர்,

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? உங்கள் மனைவியாக வாழ நான் தயாராக இருக்கும்போது வேறு எதை நினைத்து கவலைப்படுகிறீர்கள்?"

"உன்னை
எனது மனைவியாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், ரோம் மக்கள் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் எண்ணுகிறேன்".

"அதைப்பற்றி
இப்போதே ஏன் யோசிக்கிறீர்கள்? நாம் இப்போதைக்கு கணவன்-மனைவியாக வாழ்வோம்.
ரோமுக்கு சென்ற பிறகு, அப்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்து, மேற்கொண்டு முடிவு
எடுப்போம்." என்று கிளியோபாட்ரா சொன்ன பிறகுதான், சீஸருக்கு தைரியம்
வந்தது.

அவர்கள் இவ்வளவும் பேசி முடிக்க அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகியிருந்தது.

சிறிதுநேரம்
கிளியோபாட்ராவும், சீஸரும் அமைதியாக இருந்தனர். நீளமான நைல் நதியை
முத்தமிட்டு வந்த பாலைவனக் காற்று, அவர்கள் மீது குளிர்ந்த சாரலை
வீசிவிட்டுச் சென்றது. மனதிற்குள் அருவி கொட்டுவதுபோல் ஜில்லென இருந்தது.

சுமார்
2 மணி நேரம் இருவரும் நைல் நதியில் மிதந்திருப்பார்கள். அவர்களது
மகிழ்ச்சியான தேனிலவு கொண்டாட்டம் அந்தச் சூரியனுக்கு பிடிக்கவில்லை
போலும்; கோபத்தில் கிழக்கே மறைய ஆரம்பித்து இருந்தான். நைல் நதி இருளில்
கரைய ஆரம்பித்து இருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் பயணித்த
உல்லாசப் படகு கரையை நோக்கித் திரும்பியது. அப்போது யதார்த்தமாக பின்னே
திரும்பினாள் கிளியோபாட்ரா.

அவர்கள் சென்று கொண்டிருந்த படகை சில
படகுகள் பின்தொடர்ந்தபடி வேகமாக வந்து கொண்டிருந்தன. அந்த படகுகளில் ஆயுதம்
ஏந்திய வீரர்கள் இருப்பதும் அவளது பார்வையில் தெரிந்தது. அடுத்த நொடியே
பதற்றமானாள் கிளியோபாட்ரா.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 1:03 pm

"பேரரசே! அங்கே திரும்பிப் பாருங்கள். நம்மை யாரோ பின்தொடர்கிறார்கள். ஏதோ
விபரீதம் நடக்கப்போகிறது" - பதற்றமான கிளியோபாட்ராவை சட்டென்று திரும்பிப்
பார்த்தார் ஜூலியஸ் சீஸர்.

அவரது பார்வையிலும் அந்த படகுகள் பின்தொடர்ந்து வருவது தெரிந்தது. ஆனால், அவர் நிதானமாகவே இருந்தார்.

"ஏன்
பதற்றப்படுகிறாய் கிளியோபாட்ரா? அவர்கள் நம் எதிரிகள் அல்ல. நம்
பாதுகாப்பு வீரர்கள். ஒரு முன்னெச்சரிக்கைகாகத்தான் அவர்களை பாதுகாப்பு
பணியில் ஈடுபட வைத்தேன். இப்போது நாம் கரைக்கு திரும்புகிறோம் அல்லவா?
அதனால்தான் அவர்கள் விரைந்து வருகிறார்கள். "

"அப்படியா பேரரசே! நான் என்னவோ எதிரிகள்தான் வந்துவிட்டார்கள் என்று கொஞ்சம் பயந்துவிட்டேன்".

அடுத்த
ஐந்தாவது நிமிடத்தில் கரைக்கு வந்து சேர்ந்த அவர்கள், நதிக்கரைக்கு
அருகில் அமைந்திருந்த தற்காலிகக் குடியிருப்புக்குள் அடைக்கலம்
புகுந்தார்கள். அந்த இரவை அங்கேயே கழித்தார்கள்.

இரண்டு நாட்களாக
ஒரே இடத்தையே சுற்றிச்சுற்றி வந்ததால் சீஸருக்கு போர் அடித்ததுபோல்
இருந்தது. கிளியோபாட்ராவுடன் வேறு எங்கே செல்லலாம் என்று எண்ணியபோதுதான்
எகிப்து பிரமிடுகள் பற்றிய நினைவு வந்தது. உடனே கிளியோபாட்ராவை அழைத்தார்.

"அன்பே!
நான் எகிப்துக்கு வரும் வழியில் கூம்பு வடிவில் பெரிய கட்டிடங்களைப்
பார்த்தேன். நான் வீரர்களிடம் விசாரித்தபோது, அவை இறந்தவர்கள்
புதைக்கப்பட்ட இடங்கள் என்றார்கள். அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள
ஆசைப்படுகிறேன். நீ இந்த நாட்டுக்கு மகாராணி என்பதால் உனக்கு அதுபற்றி
நிறையவே தெரிந்திருக்கும். இப்போது நாம் அந்த இடத்துக்குச் செல்வோமா?"

"நான்கூட
உங்களிடம் அதுபற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன். அந்த கல்லறைகள் எங்கள்
நம்பிகைக்கு உரியவை. அதனால், அவற்றை சற்றுத் தொலைவில் இருந்து மட்டுமே
பார்க்க முடியும்" என்றாள் கிளியோபாட்ரா.

"சரி கிளம்புவோமா?"

"நினைத்த
நேரத்தில் அங்கே செல்ல முடியாது. அது பாலைவனப் பகுதி. வெயில்
சுட்டெரிக்கும். நிழலில் ஒதுங்குவதற்குக்கூட இடம் இருக்காது. குடிக்கத்
தண்ணீரும் கிடைக்காது. அதனால், இன்று அந்தி சாயும் வேளையில் அங்கே
செல்வோம்" என்றாள் கிளியோபாட்ரா.

சீஸரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
மாலையில் எகிப்து பிரமிடுகளைச் சுற்றிப் பார்க்கத் தேவையான ஏற்பாடுகளைச்
செய்யுமாறு தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்.

மாலை நேரம்
வந்ததும் கிளியோபாட்ராவை அழைத்துக்கொண்டு பிரமிடுகளைக் காண புறப்பட்டார்
சீஸர். பாதுகாப்புக்கு சில குதிரைப்படை வீரர்களையும் அழைத்துச் சென்றார்.

சில
கிலோமீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு எகிப்து பிரமிடுகள் காணப்படும்
இடத்தை அடைந்தார்கள். அப்போது சூரியன் கோபத்தின் அனலை கக்கிக்
கொண்டிருந்தான். அந்த பாலைவன மணலும் அனலால் தகித்துக் கொண்டிருந்தது.

பிரமிடுகள்
பகுதியை அடைந்ததும் குதிரையில் இருந்து கிளியோபாட்ராவும், சீஸரும்
இறங்கிக்கொண்டார்கள். பிரமிடுகள் அமைந்த பகுதியை நோக்கி நடந்தார்கள். ஒரு
மேடான பகுதியை ஏறி இறங்கியதும் சீஸருக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த
பள்ளமான பகுதியில் ஏராளமான பிரமிடுகள் இருந்தன. அவை அத்தனையும் வானத்தை
நோக்கி நீண்டிருந்தன. அதுபற்றி தெரிந்துகொள்ள கிளியோபாட்ரா பக்கம்
பார்வையைத் திருப்பினார் சீஸர்.

"என்னவளே! இங்கே இவ்வளவு கல்லறைகள் கட்டப்பட்டு இருக்கின்றனவே... இவை எல்லாம் யாருடையவை? எதற்காக கட்டப்பட்டன?"

"இவை
எல்லாம் எங்கள் மன்னர் பரம்பரைக்கு மட்டுமே உரியவை. இந்த கல்லறைகளுக்குள்
உறங்கிக்கொண்டிருப்பவர்கள் எங்கள் முன்னோர்கள் - இந்த எகிப்து பேரரசை ஆண்ட
பேரரசர்கள் மற்றும் குடும்பத்தினர். இறந்துபோன இவர்கள் இங்கு
புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்கள்."

கிளியோபாட்ரா இப்படிச் சொன்னதும் ஜூலியஸ் சீஸர் குறுக்கிட்டார்.

"என்னது இவர்கள் இங்கே விதைக்கப்பட்டு இருக்கிறார்களா? எனக்குச் சுத்தமாக புரியவில்லையே."

"இதுபற்றி
நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் எங்கள் நம்பிக்கைகள்
பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இறக்கின்ற அனைவருக்குமே மறுபிறவி என்ற
ஒன்று உண்டு. இங்கே நாம் எப்படி வாழ்கிறோமோ அதுபோன்று மறுமை உலகத்திலும்
வாழ முடியும். அதனால்தான், இறந்த எங்கள் முன்னோர்களை இந்த பிரம்மாண்ட
கல்லறைகளில் பாதுகாப்பாக உடல் கெடாதவாறு புதைத்து வைத்திருக்கிறார்கள்."

"இறந்த ஒருவரது உடல் அழுகித்தானே ஆகவேண்டும்? அது எப்படி கெடாமல் இருக்கும்?"

"இதுதான்
உங்கள் நாட்டினருக்கும், எங்கள் நாட்டினருக்கும் உள்ள வித்தியாசம். எங்கள்
அரண்மனையில் சிறப்பு வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இறந்த
ஒருவரது உடலை அப்படியே வைத்திருக்கும் ரகசியம் தெரியும். அதன்படிதான்
நாங்கள் இறந்தவர்களது உடலை மறுமை வாழ்வுக்காக பாதுகாக்கிறோம்".

"நீ
சொல்வதைப் பார்த்தால் ஏதோ திகில் கதை கேட்பதுபோல் இருக்கிறது. மேற்கொண்டு
சொல் " என்று கூறிக் கொண்டே பிரமிடுகளை நெருங்கினார் சீஸர்.

அப்போது கிளியோபாட்ரா அவரைத் தடுத்தாள்.

"மாவீரரே!
என்னவரே! சற்றுத் தொலைவில் இருந்தபடி இவற்றைப் பார்ப்பது நமக்கு நல்லது
என்று நினைக்கிறேன். நான் இந்த நாட்டுக்கு மகாராணி என்றாலும், ஒரு
பெண்தான். இங்கு பெண்கள் வரக்கூடாது என்ற நியதி உள்ளது. அதை நாம் மீறப்போய்
நமக்கு ஏதேனும் ஆகிவிட்டால்... நினைக்கவே பயமாக இருக்கிறது. அதனால்
அவற்றின் அருகில் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்."

"என்ன
கிளியோபாட்ரா பயந்துவிட்டாய்? ஒரு நாட்டை ஆளும் பேரரசி இப்படி பயப்படலாமா?
உனக்குத் துணையாக நான் இருக்கிறேன். அருகே எங்கள் நாட்டு மாவீரர்கள்
ஆயுதங்களோடு பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். வேறு ஏன் பயப்பட வேண்டும்?"

"நான்
சொன்னவை எல்லாம் எங்கள் நம்பிக்கைகள். அவை பொய்த்துப் போய்விடாது என்று
100 சதவீதம் நம்புகிறேன். ஆபத்து ஏற்படாமல் இருக்க நாம்தான் உஷாராக
இருந்துகொள்ள வேண்டும்" என்றாள் கிளியோபாட்ரா.

சீஸரும் அவளது யோசனையை சரி என்று ஏற்றுக்கொண்டார். சற்று தொலைவில் இருந்தபடியே பிரமிடுகளைப் பார்த்து வியந்தார் சீஸர்.

"இந்த கல்லறைகளுக்கு என்ன பெயர்?" - சீஸர் கேட்டார்.

"இவைகளுக்குப்
பெயர் மெர் (பிரமிடு என்பது பிரமிஸ் என்கிற கிரேக்கச் சொல்லில் இருந்து
பிறந்ததாகும்). இறப்புக்குப் பிறகு மறு உலகத்திற்கு செல்லத் தயாராகும் இடம்
இது."

"நீ சொல்வது எல்லாமே வியப்பாக இருக்கிறது. நீ இந்த கல்லறைகள்
பற்றி சொல்லச் சொல்ல... அவைகளுக்குள் என்னதான் இருக்கிறது என்று பார்க்க
வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எனது வீரர்கள் துணையுடன்
பார்த்துவிடுவேன்."

சீஸர் இப்படிச் சொன்ன மாத்திரத்தில் அந்த
இடத்தில் சட்டென்று பல மாற்றங்கள் ஏற்பட்டன. அனலை கக்கிக் கொண்டிருந்த
சூரியன் திடீரென மறைந்து போனான். எங்கிருந்தோ ஓடி வந்த இருள் கவ்விக்
கொண்டது. கூடவே, காற்றும் புயல் வேகத்தில் வீச ஆரம்பித்தது.

வேகமாக வீசிய காற்றில் பாலைவன மணல் அப்படியே மேலெழும்பியது. காய்ந்துபோன தாவரங்களின் கழிவுகளான சருகுகள் பலமாய் சலசலத்தன.

இந்த மாற்றங்களை திடீரென்று பார்த்த சீஸர் நடுங்கிப் போய்விட்டார். கிளியோபாட்ராவும் அப்படித்தான்.

இதற்குமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அவர்கள் வந்த வழியே வேகமாகத் திரும்பினர்.
முந்தைய நாள் எகிப்து பிரமிடுகளை காணப்போய் தான் சந்தித்த திகில் அனுபவத்தை
நினைத்து நினைத்துத் தூக்கத்தைத் தொலைத்த ஜூலியஸ் சீஸர் தாமதமாகவே
படுக்கையில் இருந்து எழுந்தார். கண் விழித்ததும், முதல் ஆளாக அவரது
பார்வையில் பட்டாள் கிளியோபாட்ரா.

"உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே.
பல தடவை உங்களை எழுப்ப முயன்றும் என்னால் முடியவில்லை. அதனால் பயந்தே
போய்விட்டேன். இப்போதுதான் தைரியம் வந்திருக்கிறது" என்றாள் கிளியோபாட்ரா.

"ஏன்
இவ்வளவு பதற்றப்படுகிறாய்? நான் ஒன்றும் பயப்படவில்லை. நேற்று நடந்த
சம்பவங்களுக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்ததால் உறக்கம் வர
தாமதமாகிவிட்டது. அவ்வளவுதான். எனக்கெல்லாம் பேய், பிசாசுகள் மீது
நம்பிக்கை இல்லை. நேற்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் அந்த
கல்லறைகளைக் காணத் தயாராகிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளேன்." என்று
சீஸர் சொல்லி முடித்தபோது மிரண்டே போய்விட்டாள் கிளியோபாட்ரா.

"என்னது
மீண்டும் மெர்களை காணப் போகிறீர்களா? உங்கள் அசாத்திய தைரியத்திற்கு அளவே
இல்லாமல் போய்விட்டது. அதை நான் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். ஆனால்,
மெர்கள் விஷயத்தில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டாம் என்றுதான்
எண்ணுகிறேன்."

"கண்ணே கிளியோபாட்ரா! கவலைகளை எல்லாம் மறந்துவிடு.
உங்கள் நாட்டு மெர்களால் இந்த ரோமாபுரி வேந்தனுக்கு ஒன்றும் ஆகிவிடாது.
வேண்டும் என்றால், உங்கள் மெர்கள் வேண்டுமானால் என் தைரியத்தைப் பார்த்து
பயப்படலாம்." என்ற சீஸர் சற்றே சிரித்து வைத்தார்.

"உங்கள்
பேச்சுக்கு மட்டும் குறைவில்லை. மெர்கள் விஷயத்தில் நான் என்ன சொன்னாலும்
நீங்கள் கேட்பதுபோல் தெரியவில்லை. அதனால், நீங்கள் அங்கே
செல்லும்போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். இதுதான் இந்த
மகாராணியின் கண்டிப்பான உத்தரவு."

"அப்படியே ஆகட்டும் மகாராணி! " என்ற சீஸர், படுக்கையில் இருந்து எழுந்து, கிளியோபாட்ரா முன்பு தலை குனிந்தார்.

உடனே -

"நீங்கள் மாவீரர் மட்டுமல்ல; அழகாகவே நடிக்கவும் செய்கிறீர்கள்!" என்று கூறினாள் கிளியோபாட்ரா.

அன்று களைப்பு காரணமாக சீஸர் எங்கும் வெளியில் செல்லவில்லை. கிளியோபாட்ராவுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தார்.

மறுநாள் விடியற்காலை -

மீண்டும் பிரமிடுகளை காண்பதற்காக கிளியோபாட்ராவுடன் புறப்பட்டுச் சென்றார் சீஸர். பாதுகாப்பு வீரர்களும் வழக்கம்போல் உடன் சென்றனர்.

சீஸரும்
கிளியோபாட்ராவும் பிரமிடுகள் இருந்த பகுதியை அடையவும், சூரியன் உதயம்
ஆகவும் சரியாக இருந்தது. தூக்கம் கலைந்து சோம்பல் முறித்து மெதுவாக எழுந்து
வந்தான் ஆதவன். அவனது மேனி பொன்னிறத்தில் தகதகத்தது.

"ஆஹா இந்த பாலைவனப் பகுதியில் சூரியனின் உதயத்தை பார்ப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று கூறி வியந்தார் சீஸர்.

தொடர்ந்து,
அந்த சகாரா பாலைவன மண்ணை தொட்டுப் பார்த்தார். ஜில்லென இருந்தது.
'அதிகாலையில் குளிர் போர்த்திய இந்த மண்ணா மதியமும், மாலையிலும் அனலாய்
தகிக்கிறது. என்னே இயற்கையின் விந்தை?' என்று மனதிற்குள் வியந்த சீஸர்,
கிளியோபாட்ராவை கேள்விக் கணையோடு பார்த்தார்.

"அன்றே உன்னிடம் கேட்க
வேண்டும் என்று எண்ணினேன். இன்னொரு ஜென்மம் உண்டு என்று கூறினாய்.
அதற்கும், இந்த கல்லறைகளில் இறந்தவரது உடலை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி
வைப்பதற்கும் என்ன சம்பந்தம்?"

"சம்பந்தம் இருக்கிறது. அதுபற்றி மேலும் விளக்கும் முன்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்."

"சரி கேள்! “

“நீங்களும்
மறுமை உலகத்திற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கும்
அதேபோன்று ரோமானிய சக்கரவர்த்தியாக - மாபெரும் வேந்தராக இருக்க வேண்டும்
என்றுதானே ஆசைப்படுவீர்கள்?"

"ஆமாம்! ஆனால் ஒன்று... உன்னைப்
பார்த்த பிறகு அடுத்த ஜென்மத்தில் நான் நீயாகவே பிறக்க வேண்டும் என்கிற
விபரீத ஆசைகூட ஏற்படுகிறது." என்று கூறிவிட்டு லேசாகச் சிரித்தார் சீஸர்.

"சரி சரி இந்த கொஞ்சல்களை எல்லாம் தனிமையில் வைத்துக்கொள்வோம். இங்கே நமது வீரர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்."

"சரி சொல்ல வந்த விஷயத்தை சொல்"

"மறுமை
உலகிற்கு சென்றவர் அதே உடலுடன் அங்கும் வாழவே நாங்கள் இறந்தவர்கள் உடலை
பதப்படுத்திப் பாதுகாக்கிறோம். அப்படிச் செய்தால்தான் இங்கே கிடைத்த சுகபோக
வாழ்க்கை அங்கேயும் கிடைக்கும்."

"நீ சொல்வதைப் பார்த்தால் இன்னும் என்னவெல்லாமோ செய்வீர்கள் போல் தெரிகிறதே."

"உங்கள்
கணிப்பு சரிதான்! இறந்தவர் உடலுடன் அவர் மறுமை வாழ்வு வாழ தேவையான
பொருட்களையும் சேர்த்து புதைப்போம். இறந்தவர் பயன்படுத்திய படுக்கை,
ஆபரணங்கள் முதற்கொண்டு சாப்பிடும் பாத்திரம் வரை இருக்கும்."

"இறந்தவருடன் இவற்றை எல்லாம் புதைத்தால் மண்ணோடு மண்ணாக மட்கிப்போய்விடுமே."

"நீங்கள்
அவசரப்பட வேண்டாம். இங்கே புதைத்தல் என்பதற்கு மண்ணோடு மண்ணாக புதைத்தல்
என்று அர்த்தம் கிடையாது. விசேஷமாக காற்று புகாத வகையில் தயாரிக்கப்பட்ட
நீண்ட பெட்டியில் இறந்தவர் உடலை வைத்து விடுவார்கள். அதற்கு முன்னதாக,
இறந்தவர் உடல் கெட்டுப்போகாமல் இருக்க எளிதில் அழுகும் குடல், கண் போன்ற
உடல் பகுதிகளை தனியாக எடுத்து நீக்கி விடுவார்கள். மேலும், மூலிகைகளில்
இருந்து பெறப்பட்ட தைலத்தை உடல் முழுவதும் பூசி, இன்னும் என்னவெல்லாமோ
செய்து பதப்படுத்தி பெட்டியை மூடி விடுவார்கள்.

பூமிக்குள் பெரிய
பள்ளம் தோண்டி ரகசிய அறை ஏற்படுத்தி அதற்குள் பெட்டியை வைத்து விடுவார்கள்.
அந்த அறையிலேயே இறந்தவர் மறு உலகத்தில் பயன்படுத்த தேவையான பொருட்களையும்
வைத்து விடுவார்கள். விலை மதிப்பற்ற தங்கம், வெள்ளி, வைரம் போன்ற
ஆபரணங்களும் அங்கே வைக்கப்படும். தொடர்ந்து, அந்த அறையை யாரும் திறக்காமல்
இருக்க மந்திரித்து மூடி விடுவார்கள்." என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்
கிளியோபாட்ரா.

"நீ இவ்வளவு சொன்னபிறகும் உங்கள் மக்களின்
நம்பிக்கையை பொய்யாக்க நான் விரும்பவில்லை. உங்களது மறுஜென்ம நம்பிக்கையை
உங்களுடனேயே விட்டுவிடுகிறேன்." என்ற சீஸர், பிரமிடுகளுக்குள் என்னதான்
இருக்கிறது என்பதை அறிய போட்ட திட்டத்தைக் கைவிட்டார்.

தொடர்ந்து
பிரமிடுகள் இருந்த பகுதியை சுற்றிப் பார்த்தார் சீஸர். முன்பு வந்தபோது
ஏற்பட்ட திடீர் இயற்கை மாற்றங்கள் இப்போது ஏற்படவில்லை.

"ஆமாம்
மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே புதைக்கப்பட்டு
பாதுகாக்கப்படுகின்றனர். சாதாரண மக்களும் இதை வழிமுறையைத்தான்
பின்பற்றுகிறார்களா?"

"ஆமாம்! நாங்கள் மன்னர் குடும்பத்தை
சேர்ந்தவர்கள் என்பதால், இறந்தவர் உடலை விமரிசையாக பத்திரப்படுத்தி
பிரம்மாண்டமாக மெர்களை எழுப்புகிறோம். ஆனால், சாதாரண மக்கள், இறந்தவர்கள்
உடலை சாதாரணமாகவே பதப்படுத்தி புதைத்து விடுகிறார்கள்."

"இன்னொன்று கேட்பேன். தவறாக நினைக்க மாட்டாயே...?"

"என்னுடைய வேந்தரான உங்களை நான் எப்படி தவறாக நினைப்பேன்?"

"நீ இறந்த பிறகும் இப்படித்தான் செய்வார்களா?"

"நிச்சயமாக!
ஆமாம் இதைக் கேட்கத்தான் சுற்றி வளைத்து வந்தீர்களா? எப்படி இருந்தாலும்,
யாராக இருந்தாலும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும்?"

"ஆமாம் ஆமாம்!" என்று கூறி, அந்தப் பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டார் சீஸர்.

இவ்வளவு
பேசி முடிக்கவும் மணி 8 கடந்திருந்தது. இதற்குமேல் இங்கு நின்றிருந்தால்
பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் அந்த இடத்தை வேகமாகக் காலி
செய்துவிட்டு அகன்றனர்.
கிளியோபாட்ராவுடன் நைல் நதிக்கரையோரம் தேனிலவு கொண்டாட வந்த ஜூலியஸ் சீஸர்,
தேனிலவு நாட்களை உற்சாகமாகக் கழித்தார். நாட்கள் வேகமாக நகர்ந்தன.

சுமார்
2 மாதம்வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள். கிளியோபாட்ரா எகிப்து
மக்களை மறந்து போனாள். சீஸர் ரோம சாம்ராஜ்யத்தை நினைத்துப் பார்க்கத்
தவறினார்.

கிளியோபாட்ரா - ஜூலியஸ் சீஸர் தேனிலவு கொண்டாட்டம்
முடிந்தபோது, அவர்களுக்கு மாபெரும் பரிசு ஒன்றும் கிடைத்தது. அந்த பரிசு
ஒரு உயிருள்ள பொருள். அதுதான், கிளியோபாட்ரா வயிற்றில் உருவான குழந்தை.

கிளியோபாட்ரா
கர்ப்பமாகி இருக்கிறாள் என்பதை அறிந்த சீஸர் அதனால் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை. கிளியோபாட்ராவை கண்ணும் கருத்துமாகவே உடனிருந்து
பார்த்துக்கொண்டார்.

சீஸரின் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருந்தது. தனக்கு வாரிசு இல்லையே என்ற குறை இந்த மூலம் தீரப் போகிறது என்று அவர் எண்ணினார்.

அது என்ன காரணம்? சற்று விரிவாகவே பார்ப்போம்.

இறந்துபோன,
ஜூலியஸ் சீஸரின் முதல் மனைவியான கெர்னெலியாவுக்கு குழந்தை இல்லை.
இரண்டாவது மனைவி பாம்பியாவை விவாகரத்து செய்துவிட்டதால் அவள் மூலமும்
குழந்தை இல்லை. இரண்டாம் மனைவி விவாகரத்துக்குப் பிறகு மூன்றாவதாக
கல்பூர்ணியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜூலியா என்ற ஒரு மகளும்
உண்டு. இவள் எந்த மனைவி மூலம் பிறந்தவள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

சீஸர்
பாம்பியாவை திருமணம் செய்த பிறகுதான் அவரது வாழ்வில் ஏறுமுகம் ஏற்பட்டது.
ரோமானிய அரசியலில் மிகவும் உயர்ந்த பதவியான சர்வாதிகாரி ஆனார்.

அதே மனைவி பிறரால் சந்தேகத்திற்கு உட்பட்டதால் அவளை விவாகரத்து செய்துவிட்டார் சீஸர். அந்த சம்பவம் எல்லோரும் அறிய வேண்டிய ஒன்று.

இந்த சம்பவம் நடந்தது கிமு. 62-ம் ஆண்டு (அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 8).

அன்றைய
தினம் ஜூலியஸ் சீஸரின் மாளிகையில் மதச்சடங்கு ஒன்று நடைபெற்றுக்
கொண்டிருந்தது. பெண்கள் மட்டும்தான் அந்தச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும்
என்பதால், சீஸரின் மனைவி பாம்பியா தனக்கு வேண்டிய மற்றும் மிகவும்
நெருங்கிய உறவுப் பெண்களையே விழாவுக்கு அழைத்திருந்தாள்.

சடங்கு
நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு வீரர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.
அதனால், அந்த இடம் முழுக்க பெண்களாகவே தெரிந்தனர். பாதுகாப்பு படையினரின்
பரிசோதனைக்குப் பிறகே அவர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால்,
இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி ஒருவன் அங்கே நுழைந்துவிட்டான். அவன்
பெயர் ப்யூப்ளியாஸ் கிளாடியஸ் (இதற்கு வசீகரமானவன் என்று அர்த்தம்). அவன்
வந்தது பெண் வேடத்தில் என்பதால் அவனைச் சரியாக கவனிக்காமல் முதலில் உள்ளே
அனுமதித்துவிட்டனர் படைவீரர்கள்.

பின், அவனது நடை, உடை, பாவனை
எல்லாவற்றையும் கவனித்த வீரர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவனைப்
பரிசோதித்ததில் குட்டு வெளிப்பட்டுவிட அவனை அப்படியே அமுக்கிப்
பிடித்துவிட்டனர்.

அந்தநேரம் ஜூலியஸ் சீஸர் அங்கே வந்துவிட்டார்.
மதச்சடங்கில் கலந்துகொள்ள வந்த பெண்களும் பரபரப்பாகிவிட்டனர். அவர்களில்
சிலர், சீஸரின் மனைவி பாம்பியா அழைக்கப்போய்தான் அவன் மாறுவேடத்தில்
வந்திருக்க முடியும் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பேச்சு சீஸரின்
காதிலும் விழுந்துவிட்டது.

"இந்த சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்" என்று கர்ஜித்த சீஸர், அதன்பிறகு தனது
மனைவி பாம்பியாவைப் பார்க்கவே மறுத்துவிட்டார். மறுநாளே அவளை விவாகரத்தும்
செய்துவிட்டார்.

தனது சகோதரியை சீஸர் விவாகரத்து செய்துவிட்டார்
என்பதை அறிந்த பாம்பே கொதித்தெழுந்தான். அன்று முதல் அவருக்கு முதல் எதிரி
ஆகிவிட்டான். மேலும், இருவருக்கும் அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக்
கைப்பற்றுவதில் பிரச்சினை இருந்து வந்தது. அதனால், சீஸரை எப்போது
விரட்டலாம் என்று காத்திருந்தான் பாம்பே.

ஆனால் அவன் சீஸரிடம்
தோல்வியுற்று, கிளியோபாட்ராவின் முதல் கணவன் 13&ம் டாலமியின்
ஆதரவாளர்களால் தலை கொய்து கொலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரிந்ததுதானே?

இந்த
சம்பவத்தில் சீஸர் உதிர்த்த, "சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்" என்ற வாக்கியம், இன்றும் உலகப்
புகழ்பெற்றதாக கருதப்படுகிறது.

சரி இனி விஷயத்திற்கு வருவோம்...

கிளியோபாட்ரா
தன்னால் கருவுற்று இருப்பதை அறிந்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற
சீஸருக்கு இன்னொரு ஆத்ம திருப்தியும் ஏற்பட்டது. ஏற்கெனவே தனது மகள் ஜூலியா
இறந்துபோன ஏக்கத்தில் வாரிசு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த சீஸர்,
தனக்கு கிளியோபாட்ரா எப்படியும் ஒரு ஆண் வாரிசை பெற்றுத்தருவாள் என்று
எதிர்பார்த்தார். அதனால் அவர் எகிப்திலேயே கிளியோபாட்ராவுடன் தங்கியிருக்க
நேரிட்டது.

அதேநேரம், ரோமிலோ அவர் பற்றிய தவறான தகவல்கள் அவரது
அரசியல் எதிரிகளால் மக்களிடம் வேகமாக பரப்பப்பட்டன. சீஸர் கிளியோபாட்ராவை
திருமணம் செய்து கொண்டுவிட்டார். வேற்று நாட்டு அரசியான அவளை இந்த
ரோமாபுரிக்கும் அரசியாக்க முயற்சிக்கிறார். அதனால், அவரை ரோமானிய முதன்மை
வேந்தர் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும். என்று தகவல்கள் பரப்பப்பட்டன.

“நம்
மாவீரர் சீஸரா இப்படி கிளியோபாட்ராவின் பேரழகில் மயங்கிக் கிடக்கிறார்?
ஒரு மாவீரருக்கு இது அழகா?“ என்று ரோமானிய மக்களும் பேசிக்கொள்ள
ஆரம்பித்தார்கள்.

இந்த சூழ்நிலையில் சரியாக 10 மாதம் ஆவதற்கு முன்பே
ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் கிளியோபாட்ரா. கிமு47ல் இந்த குழந்தை
பிறந்தது. அந்த குழந்தைக்கு "சிசேரியன்" என்று பெயரிட்டார்கள் சீஸர் &
கிளியோபாட்ரா தம்பதியர்.

இந்தக் குழந்தை கிளியோபாட்ராவுக்கு அறுவைச்
சிகிச்சை மூலமே பிறந்தது, அவளது வயிற்றைக் கீறி சீஸரே பிரசவம் பார்த்தார்
என்ற கருத்தும் உள்ளது.

மனிதனது அறிவுக்கு எட்டிய வகையில், உலகின்
முதன் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தையும் இதுதான் என்பதாலும், அதைச்
செய்தது சீஸர்தான் என்பதாலும், ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதற்கு
"சிசேரியன்" என்றே பெயர் வைத்து பெருமை சேர்த்துள்ளது இன்றைய மருத்துவ
உலகம்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 1:08 pm

கிளியோபாட்ரா மூலம் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் ஜூலியஸ் சீஸர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்தக்
குழந்தைக்கு சிசேரியன் என்று பெயர் வைத்தாலும், "டாலமி சீஸர்" என்று, தனது
மரபுப் பெயரையும், சீஸர் பெயரையும் இணைத்துச் சூட்டி மகிழ்ந்தாள்
கிளியோபாட்ரா. குழந்தை டாலமி சீஸர் தாயைப் போலவே பேரழகனான இருந்தான். அவனது
சின்னச்சின்ன குறும்புகளால் சிலிர்த்துப் போனார்கள் சீஸர் - கிளியோபாட்ரா
தம்பதியர்.

சில மாதங்கள் வேகமாக ஓடின. கிளியோபாட்ராவுடன் வாழ்ந்து,
மகன் டாலமி சீஸரை நன்கு கவனித்துக்கொண்டார் சீஸர். அதேநேரம், தாய்நாடு
நினைப்பும் அவருக்கு வந்துபோனது. கிளியோபாட்ராவே கதியென்று கிடந்தால் தனது
பெயர் கெட்டுப்போய்விடும் என்று கருதிய சீஸர் ரோமாபுரிக்குச் செல்ல
முடிவெடுத்தார். தன்னுடன் ஒரு மனைவியாக வாழ்ந்து கொண்டிருந்த
கிளியோபாட்ராவிடம் தனது முடிவைச் சொன்னார்.

"என்னவளே! காலம்
முழுவதும் உன்னுடனேயே சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஆனாலும், எனக்கென்று சில கடமைகள் உள்ளன. ரோமாபுரியின் முதன்மை வேந்தனாக
இருந்துகொண்டு, என்னால் இங்கேயே இருந்துவிட முடியாது. எனது வெற்றிகள்
எகிப்து வரையில் மட்டும் போதாது. இன்னும் பல தேசங்களை நான் வெல்ல வேண்டும்.
மாவீரன் அலெக்ஸாண்டர்போல் பெயரெடுக்க வேண்டும்."

"அதனால், இப்போதே ரோமாபுரிக்கு புறப்படப் போகிறீர்களா?" - கிளியோபாட்ரா கேட்டாள்

"ஆமாம்! நான் எப்படியும் அங்கே போய்த்தானே ஆக வேண்டும்?"

"அப்படியென்றால், என்னைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு இல்லையா?"

"ஏன்
இல்லை? இந்த எகிப்து மட்டுமின்றி கீழ்த்திசை நாடுகளையும், மேல்திசை
நாடுகளையும் இணைத்த ஒரு மாபெரும் பேரரசுக்கு உன்னை பேரரசி ஆக்கவே நான்
எண்ணுகிறேன். கூடிய விரைவில் ரோமாபுரி போன்ற ஒரு மாபெரும் தேசத்துக்கும்
மகாராணி ஆகப்போகிறாய்."

சீஸர் இப்படிச் சொன்னதும் தன்னையே மறந்துபோனாள் கிளியோபாட்ரா. அவள் அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை.
"நீங்கள் எதிர்பார்க்கும் புதிய பேரரசுக்கு என்னை மகாராணியாக்கும் முடிவை ரோமாபுரி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?"

"உடனே
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்தான். ரோமாபுரியின் இப்போதைய குடியாட்சி முறையை
ஒழிக்கப்போகிறேன். வாழ்நாள் சர்வாதிகாரியாக என்னை பிரகடனப்படுத்தப்
போகிறேன். ரோமப் பேரரசுக்கு இதுவரை முதன்மை ஆட்சியாளராகவே இருக்கும் நான்
பேரரசர் ஆகப்போகிறேன். அதன்பிறகு குடியாட்சிக்குப் பதிலாக என்னுடைய
முடியாட்சிதான் ரோமாபுரியில் நடக்கும்."

"நீங்கள் மாவீரர் என்பதை
நான் அறிவேன். உங்களது இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சினை வராதா?
ரோமாபுரி மக்கள் கிளர்ச்சி செய்ய மாட்டார்களா? உங்கள் செனட் உறுப்பினர்கள்
இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்களா? ரோமாபுரி ராணுவத்திற்கும்
தலைவராக பொறுப்பு வகிக்கும் உங்களால், அந்த ராணுவத்தை ஒட்டுமொத்தமாக உங்கள்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியுமா?"

"நிச்சயம் எல்லாமே
முடியும்! உலகத்தையே எனக்குக் கீழ் கொண்டு வரமுடியும் என்று அலெக்ஸாண்டர்
சூளுரைத்ததால்தான் அவரால் மாபெரும் வெற்றிபெற முடிந்தது. என்னாலும் வெற்றி
பெற முடியும். செனட்டர்களையும் சமாளிப்பேன். ராணுவத்தையும் எனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவேன்."

"உங்களை நான் முழுமையாக நம்புகிறேன்." என்ற கிளியோபாட்ரா, சீஸரை கட்டியணைத்து தனது ஆதரவைத் தெரிவித்தாள்.

"சரி.
நான் இங்கு உன்னுடன் சில காலம் வாழ்ந்ததற்கும், எகிப்துவரை நான் பெற்ற
வெற்றிக்கும் ஒரு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த விழா
என்னை மட்டுமின்றி உன்னையும், நம் குழந்தையையும் மகிழ்விப்பதாக இருக்க
வேண்டும். எகிப்தின் பேரரசியான நீயே அதற்கு ஏற்பாடுகளை செய்" என்று
அடுத்ததாக சொன்ன சீஸரை இன்னும் இறுக்கமாக அணைத்து சில முத்தங்களை பதித்து
விடைபெற்றாள் கிளியோபாட்ரா.

அடுத்த நாளே எகிப்து மக்களுக்கு நாட்டின் பேரரசி சார்பில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேரரசியான
கிளியோபாட்ரா "இசிஸ்" என்ற பெண் கடவுளின் மறுபிறவி என்றும், ஜூலியஸ்
சீஸர், "அமான்" என்னும் கடவுளின் மறுஅவதாரம் என்றும், இவர்களுக்கு பிறந்த
குழந்தை தெய்வக் குழந்தை என்றும் கருத்துகள் பரப்பப்பட்டன. ஏற்கெனவே
இத்தகைய நம்பிக்கைகளில் ஊறிப்போய் இருந்த எகிப்து மக்கள் அதை தெய்வ வாக்காக
ஏற்றுக்கொண்டனர்.

அத்துடன், சீஸரின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கான அறிவிப்பும் எகிப்து பேரரசு சார்பில் வெளியிடப்பட்டது. அந்த நாளும் வந்தது.

சீஸரும்,
கிளியோபாட்ராவும் தங்கள் குழந்தையுடன் அலெக்ஸாண்டிரியா நகர் வீதிகளில்
அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்தனர். வீதிகளின் இருபுறமும் மக்கள்
திரண்டிருந்து, அவர்களைத் தெய்வமாகவே வணங்கினர்.

நிலப்பரப்பில்
மட்டுமின்றி, எகிப்துக்கு வளம் சேர்க்கும் நைல் நதியிலும் வெற்றி விழா
கொண்டாட்டம் நடைபெற்றது. கப்பல் போன்ற மிகப்பெரிய படகில் சீஸரும்,
கிளியோபாட்ராவும் குழந்தையுடன் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். அவர்கள்
பவனி வந்த கப்பலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான படகுகளில் பாதுகாப்பு படை
வீரர்கள் உலா வந்தனர்.

மறுநாள் -

வெற்றி விழா கொண்டாட்டங்கள்
எல்லாம் முடிந்து சீஸர் விடைபெறும் நேரம் வந்தது. கிளியோபாட்ராவும்,
சீஸரும் தனிமையில் சந்தித்துக்கொண்டனர்

"எகிப்தின் வேந்தரே! தாங்கள் என்னைப் பிரிந்துதான் ஆகவேண்டுமா?"

"நிச்சயமாக! என் நாட்டு மக்களையும் நான் பார்த்துதானே ஆகவேண்டும்?"

"இப்போது
நான் ரோமாபுரிக்கு புறப்பட்டுச் செல்கிறேன். அங்குள்ள சூழ்நிலைகள்
மாறியதும் உன்னையும், நம் குழந்தையையும் அழைத்துக்கொள்கிறேன்".

"சரி...
இப்போதாவது ரோமாபுரிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னீர்களே.
ஒருவேளை, நீங்கள் என்னை அங்கு அழைத்துச் செல்ல மாட்டீர்களோ என்றுகூட
நினைத்தேன்".

"ஏன் பயப்படுகிறாய்? நமக்குள் ஏற்பட்ட இந்த பந்தம் ஒரு
கணவன்-மனைவி உறவைவிட புனிதமானது. இப்போது நீ என் அதிகாரப்பூர்வ மனைவியாக
இல்லாவிட்டாலும், நிச்சயம் ஓர்நாள் அதுபற்றி அறிவிப்பேன்." என்ற சீஸர்,
தவிப்புடன் நின்று கொண்டிருந்த கிளியோபாட்ராவை ஏறெடுத்துப் பார்த்தார்.

"என்ன. எதையோ சொல்ல நினைக்கிறாய்? ஆனால், தொண்டைக்கு மேல்தான் வர மறுக்கிறது. என்ன விஷயம்? எதுவாக இருந்தாலும் கேள்."

"நான் சொல்வதை நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது."

"நிச்சயமாக.!"

"நீங்கள் எகிப்துப் பேரரசை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத்தானே இங்கு படையெடுத்து வந்தீர்கள்?"

"ஆமாம்!
என்னுடைய எதிரி பாம்பேவை சிறைபிடித்த மாதிரியும் ஆயிற்று, எகிப்தும் நம்
வசம் ஆயிற்று, ரோமப் பேரரசையும் என் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்தாயிற்று என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்று எண்ணினேன். பாம்பே
கொல்லப்பட்டு விட்டதால் என் பணி எளிதாயிற்று. ஆனால்.." அதற்கு மேல் எப்படி
பேசுவது என்ற தவிப்பு சீஸரிடம் எட்டிப் பார்த்தது.

"என்ன ஆனால்...?" - கிளியோபாட்ரா கேட்டாள்

"வேறு
ஒன்றுமில்லை; இந்த நாட்டின் பேரரசியாக நீ மட்டும் இல்லையென்றால், நான்
அன்றே எகிப்தை ரோமாபுரிப் பேரரசுடன் இணைத்து, அன்றே வெற்றி விழாவை
கொண்டாடி, ரோமாபுரிக்கு நிரந்தர பேரரசரும் ஆகியிருப்பேன்."

"ஏன் என்னைப் பார்த்ததால் என்ன ஆயிற்று?"

"உன்னை
முதன் முதலாகப் பார்த்தபோதே உன் வசம் ஆகிவிட்டேன். ஏதோ பல ஜென்ம தொடர்பு
நமக்குள் இருப்பதுபோல் உணர்ந்தேன். மேலும், உனது பேரழகும் என்னை
சிறைப்பிடித்துவிட்டது." - சீஸர் இப்படிச் சொன்னபோது வெட்கத்தில் இன்னும்
முகம் சிவந்து போனாள் கிளியோபாட்ரா.

"சரிசரி என்னைப் புகழ்ந்தது
எல்லாம் போதும். இப்போது நீங்கள் ரோமுக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள். நம்
உறவு பற்றி அங்கே பல வதந்திகள் நிலவலாம். பொறுமையாக அந்த பிரச்சினையை
கையாளுங்கள். உங்கள் எதிர்கால கனவு நிச்சயம் நிறைவேறும்.!" என்று நம்பிக்கை
கூறிய கிளியோபாட்ராவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, விடைபெற்றார்
ஜூலியஸ் சீஸர்.
ஜூலியஸ் சீஸர் எகிப்து வந்து, ஒன்றரை ஆண்டு காலம் தன்னுடன் பழகி, குலாவி
மகிழ்ந்திருந்ததை நினைத்துப் பார்த்த கிளியோபாட்ராவுக்கு வியப்புதான்
மேலிட்டது. ஏதோ ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் வந்ததுபோல் உணர்ந்தாள்.

சீஸர்
ரோம் சென்ற அதே நேரத்தில், கிளியோபாட்ராவுக்கு எகிப்தில் இருக்கப்
பிடிக்கவில்லை. சீஸரின் நினைவுதான் அவளுக்குள் அடிக்கடி வந்து
எட்டிப்பார்த்தது.

இதே தவிப்புதான் சீஸருக்கும்! பேரழகியும், தனது
அதிகாரப்பூர்வமற்ற மனைவியுமான கிளியோபாட்ராவை அவரும் நினைக்காத நாட்கள்
இல்லை. அவளது நினைவுகளுடனேயே பெரும் படையுடன் ரோமுக்குச் சென்றார்.

சீஸரால்
எகிப்தின் நிரந்தர மகாராணியாக அறிவிக்கப்பட்ட கிளியோபாட்ரா நாட்டை ஆளத்
தொடங்கினாள். எகிப்தில் அவளுக்கு எதிரிகள் நிறையப்பேர் உண்டு என்பதால்,
அவளது பாதுகாப்புக்காக ரோமானியப் பாதுகாப்பு படையின் 3 படைப் பிரிவுகளை
எகிப்தில் நிறுத்திவிட்டுதான் சென்றார் சீஸர். இதனால், எதிரிகள் பயமின்றி
அரியணையில் அமர்ந்தாள் கிளியோபாட்ரா.

இதற்கிடையில், கிமு. 46 ஜூலை
மாதம் ரோமை பெரும் படையுடன் சென்றடைந்தார் சீஸர். அவரை வரவேற்க திரளான பேர்
வந்திருந்தனர். ரோமானியப் பேரரசை அலெக்ஸாண்டிரியா வரை விரிவுபடுத்திய
வெற்றிக் கொண்டாட்டத்தின் அடையாளமாக அவர்கள் அங்கே வந்திருந்தனர்.

உண்மையில்,
இதைவிட பிரம்மாண்ட மக்கள் கூட்டம் சீஸரை வரவேற்க ரோமில் திரண்டிருக்க
வேண்டும். ஆனால் வரவில்லை. காரணம், சீஸருக்கும், கிளியோபாட்ராவுக்கும்
இடையே உள்ள உறவுதான்.

கிளியோபாட்ராவை அதிகாரப்பூர்வமாகத் திருமணம்
செய்து கொண்டு, ரோமப் பேரரசுக்கே அவளை மகாராணியாக்கப் போகிறார் சீஸர் என்ற
தகவல், அவர் ரோம் வருவதற்கு முன்பே அவரது ரோமானிய அரசியல் எதிரிகளால்
ஓரளவுக்கு பரப்பப்பட்டுவிட்டது.

இதுதவிர, இன்னொரு காரணமும்
இருந்தது. ரோமப் பேரரசுக்கு உட்பட்டு இருந்த ஸ்பெயின் பகுதியில், சீஸரின்
பரம எதிரியான பாம்பேவின் மகன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அங்கே அவர்கள்
வைப்பதுதான் சட்டமாக இருந்தது.

சீஸரிடம் பர்சலஸ் போரில்
தோல்வியடைந்த பாம்பேவை கிளியோபாட்ராவின் மாஜி கணவன் 13-ம் டாலமியின் ஆட்கள்
கொலை செய்துவிட்டதால் சீஸரின் வேலை குறைந்தது. அதேநேரத்தில், பாம்பேயின்
மகன்கள் ஆதிக்கத்தில் இருந்த ஸ்பெயினை, அவர்களுடன் போரிட்டு கொன்று, ரோமப்
பேரரசில் தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வந்தார் சீஸர்.

ரோமானியர்களான
பாம்பேயின் மகன்களைக் கொன்று கிடைத்த இந்த வெற்றி சில ரோமானியர்களுக்கு
கசப்பாக இருந்தது. அதனால், சீஸருக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல்
சற்று ஒதுங்கி இருந்தனர்.

இருந்தாலும், இதையெல்லாம் பெரியதாக
எடுத்துக்கொள்ளவில்லை சீஸர். மாறாக, எகிப்து வரையிலான தனது வெற்றியை
உற்சாகமாகக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தார். அடுத்த சில நாட்களிலேயே ரோம்
நகரம் திருவிழாக்கோலம் பூண்டது. பெரும்பாலான மக்கள் உற்சாகம் ஆனார்கள்

ஜூலியஸ்
சீஸர் அதைவிட படு உற்சாகத்தில் மிதந்தார். காரணம், ரோமின் வெற்றி விழாவில்
தனது ஆசைக்காதலி கிளியோபாட்ராவும் கலந்துகொள்ள இருக்கிறாள் என்பதுதான்.

சீஸரின்
அழைப்பை ஏற்றுப் பெரும் படையுடன் ரோமுக்கு பயணமானாள் கிளியோபாட்ரா. கூடவே,
ஒரு வயதே நிரம்பியிருந்த தனது மகன் சீஸர் டாலமியையும் அழைத்து வந்தாள்.
அப்போது, கிளியோபாட்ராவின் இப்போதைய அதிகாரப்பூர்வ கணவன் தம் தம்பி 14-ம்
டாலமியும் உடன் அழைத்து வரப்பட்டான். சில வாரங்களில் அவர்கள் ரோம் வந்து
சேர்ந்தனர்.

வெகுநாட்களுக்குப் பிறகு கிளியோபாட்ராவை மீண்டும்
நேரில் பார்த்த சீஸர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகன் சீஸர் டாலமியை
முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்ந்தார்.

இதையெல்லாம் கண் எதிரே
பார்த்துக்கொண்டு அப்பாவியாய் நின்று கொண்டிருந்தான், கிளியோபாட்ராவின்
டம்மி கணவனும், தம்பியுமான 17 வயது 14-ம் டாலமி.

கிளியோபாட்ரா தனது
ஆசைக்காதலி மட்டுமல்ல; எகிப்து பேரரசுக்கு மகாராணியும்கூட என்பதால், அவளை
பிரம்மாண்ட அரண்மனையில் தங்க வைத்தார் சீஸர். ரோம் நகரை ஒட்டி ஓடிய டைபர்
நதிக்கரையில் அந்த பிரம்மாண்ட அரண்மனை அமைந்திருந்தது.

சீஸரின்
வெற்றிவிழா செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்கள் கொண்டாடப்பட்டது. ரோம்
நகர வீதிகளில் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆட்டம்,
பாட்டம், கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்
பெரும்பாலான ரோம் மக்கள்.

இந்த வெற்றிவிழாக் கொண்டாட்டத்திற்கு மத்தியில் ஜூலியஸ் சீஸர் பெரிய திட்டம் ஒன்றையே தீட்டியிருந்தார்.

ரோமுக்கு
வந்து சேர்ந்துள்ள கிளியோபாட்ராவை ரோமானிய சட்ட திட்டங்களின்படியும், ரோம்
மக்களின் ஏகோபித்த ஆதரவுடனும் தனது அதிகாரப்பூர்வ மனைவியாக
அறிவிப்பதற்கும், அவள் மூலம் தனக்குப் பிறந்த சீஸர் டாலமியை தனது அரசியல்
வாரிசாக அறிவிக்கவும் தயாரானார்.
கிளியோபாட்ரா ரோமுக்கு வந்துவிட்டதால், எகிப்து பேரரசின் ஆட்சி நிர்வாகத்தை
அவளது நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் பார்த்துக்கொண்டனர்.
சிலநேரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அதுபற்றிய தனது கருத்தை
செயல்படுத்த எகிப்துக்கு ஒற்றர்களை அனுப்பி வைத்தாள் கிளியோபாட்ரா.

ஆனாலும்,
ரோமில் ஜூலியஸ் சீஸரின் விருந்தாளியாக - ஆசை நாயகியாக தங்கியிருந்த அவளது
மனம் மட்டும் ஏனோ அலைபாய்ந்தது. சீஸர், தன்னை அவரது அதிகாரப்பூர்வ மனைவியாக
அறிவிப்பாரா, சீஸருக்கும் தனக்கும் பிறந்த டாலமி சீஸர் அவரது வாரிசாக
அறிவிக்கப்படுவானா என்றெல்லாம் யோசித்ததில் பல இரவுகள் தூக்கத்தைத்
தொலைத்திருந்தாள்.

ஒருநாள் நள்ளிரவு -

யாரோ கதவைத் தட்டும்
சத்தம் கேட்டது. அணைத்துப் படுத்திருந்த 2 வயது குழந்தையான டாலமி சீசரை
பாதுகாப்பாக அகற்றி வைத்துவிட்டு கதவைத் திறக்க வந்தாள் கிளியோபாட்ரா.
சீஸரின் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்டிருந்த அந்த அரண்மனைக்குள் எதிரிகள்
யாரும் சட்டென்று நுழைந்துவிட முடியாது என்பதால், தைரியமாகவே கதவைத்
திறந்தாள்.

கதவைத் திறந்த மாத்திரத்தில் கிளியோபாட்ராவின் முகத்தில்
திடீர் பிரகாசம். ஆம்... ஜூலியஸ் சீஸர்தான் அவளைத் தேடி வந்திருந்தார்.
கையில் ஏதோ ஒரு பொருள் இருந்தது.

"உள்ளே வாருங்கள் பேரரசே! உங்களின் இந்த நேர வருகையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை".

"உன்னைப் பார்க்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. அதனால்தான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன்".

சில நிமிடங்கள் மவுனமாகக் கரைந்தன.

"பேரரசே!
ஏன் வந்தது முதல் மவுனமாக இருக்கிறீர்கள்? நான் இங்கே தங்கியிருப்பது
உங்கள் மனைவி கல்பூர்ணியாவுக்கு பிடிக்கவில்லையா?" - கிளியோபாட்ராவே அங்கே
நிலவிய மவுனத்தை கிழித்துக்கொண்டு பேசினாள்.

"ஏன் இப்படியெல்லாம்
நினைக்கிறாய்? எல்லா மனைவிக்குமே தனது கணவன் உத்தமபுத்திரனாக இருக்க
வேண்டும் என்ற ஆசைதானே இருக்கும்? அந்தவகையில், அவள் வருத்தப்படுகிறாள்.
அவ்வளவுதான்! ஆனால்..."

"என்ன ஆனால்..."

"இல்லை. இப்போது நீ
ஏன் அவளைப் பற்றி பேசுகிறாய்? உன்னுடன் இருக்கும்போது உனது கணவனாக இருக்கவே
நான் ஆசைப்படுகிறேன். இது எனது ஆசை மட்டுமல்ல பேராசையும்கூட!"

சீஸர்
இப்படிச் சொன்னதும், தனது மேனியில் அலைபாய்ந்த அவரது கரங்களை இறுக்கிப்
பிடித்துக்கொண்டு, அழகான இடுப்பை வளைத்து அப்படியே திரும்பினாள்
கிளியோபாட்ரா.

இப்போது இருவரது முகமும் மிக மிக நெருக்கத்தில்!

அந்த
குளிர்ந்த இரவிலும் அனலாக புறப்பட்டு வந்த இருவரது மூச்சுக்காற்றும்
மோதிக்கொண்டு ஒன்றாய் கலந்தன. இருவரது கண்களும் காதல் போதையில்
வெட்கப்பட்டு நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் தவித்தன. அந்த நிசப்தமான
பரவசத்தின் ஊடே மெல்லப் பேச்சை ஆரம்பித்தார் சீஸர்.

"அழகே! உன்னுடன்
தனிமையில் இருக்கும்போது நான் இந்த நாட்டுக்கு வேந்தன் என்பதையே
மறந்துபோய் விடுகிறேன். உன் அழகில் சிறைபிடிக்கப்பட்ட நான், உன் உள்ளம்
என்னும் சிறையில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து முடிக்க ஆசைப்படுகிறேன்." -
கற்பனையில் உச்சத்தில் நின்று கொண்டு பேசினார் அவர்.

"இதில் ஏன்
உங்களுக்கு சந்தேகம்? அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் நான் உங்களது
மனைவிதானே? விரைவில் உங்களது மனைவியாக அறிவிக்கப்போகிறீர்கள்தானே?"

"ஆமாம்!
இதில் எந்த சந்தேகமும் இல்லை! நீ என்னுடைய அதிகாரப்பூர்வமான மனைவி
ஆகிவிட்டால் எனக்கு புது தெம்பு கிடைத்துவிடும். மாவீரன் அலெக்ஸாண்டர் போல்
இந்த உலகத்தையே எனது தலைமையின் கீழ்க் கொண்டு வரவேண்டும். இந்த
உலகத்துக்கே நான் பேரரசனாக இருக்க வேண்டும். என்னருகில் நீ நீ மட்டும்
மகராணியாக வீற்றிருக்க வேண்டும். இது என்னுடைய பேராசையாகக்கூட இருக்கலாம்.
நீ மட்டும் என்னுடன் கடைசிவரை இருந்தால் எனது லட்சியங்கள் அனைத்துமே
நிறைவேறிவிடும்."


தீர்க்கமாக - அதுவும் பேராசையோடு சொன்ன சீஸரை அணைத்தபடி அவரது மார்பிள் தலை சாய்த்தாள் கிளியோபாட்ரா.

அப்போதுதான் சீஸருக்கு அந்த நினைவு வந்தது. கிளியோபாட்ராவை ஒற்றைக்கையால் தாங்கியபடியே படுக்கையில் இருந்து எழுந்தார்.

"உனக்காக
பரிசு ஒன்றை வாங்கி வந்தேன். உன்னைப் பார்த்த மாத்திரத்தில் அந்த பரிசையே
மறந்து போய்விட்டேன்..." என்ற சீஸர் லேசாக சிரித்து வைத்தார். அருகே
வைக்கப்பட்டு இருந்த பரிசுப் பொருளை எடுத்துப் பிரித்தார்.

அந்த
பரிசை பார்த்த மாத்திரத்தில் கிளியோபாட்ராவின் கயல் விழிகள் வியப்பில்
விரிந்தன. விலை உயர்ந்த நவரத்தினங்கள் கோர்க்கப்பட்ட ஆபரணம்தான் அது.

கிளியோபாட்ராவின் பேரழகுக்கு பேரழகு சேர்த்தது அந்த நவரத்தின மாலை.
ரோமில் தங்கியிருந்த கிளியோபாட்ராவின் நாட்கள் மிக வேகமாக நகர்ந்தன.
ஜூலியஸ் சீஸரும் அவளை அடிக்கடி பார்த்துவிட்டுச் சென்றார். அப்போது,
தனக்கும், கிளியோபாட்ராவுக்கும் பிறந்த டாலமி சீஸரையும் கொஞ்சி ஒரு
தந்தைக்குரிய மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார்.

நாட்கள் மாதங்களாக
உருண்டன. கிளியோபாட்ரா எகிப்தை மறந்தாள். சீஸர், கிளியோபாட்ராவின் அன்பில்
லயித்து இருந்து, ரோமின் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொண்டார். நாட்டில் பல
சீர்திருத்தங்களை செய்தார்.

லஞ்சம், கொலை போன்ற குற்றச் செயல்கள்
மலிந்திருந்த ரோமில், அதை அடக்கும் பொருட்டு சில கடுமையான சட்டங்களை செனட்
சபை ஒப்புதலுடன் நிறைவேற்றினார்.

மாவீரன் அலெக்ஸாண்டர் வெற்றியின்
நினைவாக உருவானதும், எகிப்தின் தலைநகருமான அலெக்ஸாண்டிரியாவில் இருந்த
நகரமைப்புத் திட்டங்களை ரோமில் மேற்கொண்டார்.

இத்துடன் அவர்
நின்றுவிடவில்லை. வரலாறு தன்னை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும்
விரும்பினார். அதற்காக, அப்போது நடைமுறையில் இருந்து வந்த ரோமன் காலண்டர்
முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். ரோமன் காலண்டர் முறைக்குப்
பதிலாக புதிய ஜூலியன் காலண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பிப்ரவரி
மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்பட்டு லீப் வருடம் புகுத்தப்பட்டது.

மேலும்,
தனது பெயரிலும் ஒரு மாதத்தை கொண்டு வந்தார் சீஸர். சூரியஸ் என்று அவர்
பெயரில் அன்று அழைக்கப்பட்ட மாதம்தான் இப்போது ஜூலை என்று
அழைக்கப்படுகிறது. அன்றே 31 நாட்களைக் கொண்டதாக சூரியஸ் மாதம் அமைந்தது.

இந்த
மாற்றங்களுக்கு மத்தியில் ஒருநாள் கிளியோபாட்ராவை சந்தித்த சீஸர், "நீ
இதுவரை எதிர்பார்க்காத பரிசு ஒன்றை நான் நாளை உனக்குத் தரப்போகிறேன்"
என்றார்.

கிளியோபாட்ராவுக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. "அது என்ன பரிசு?" என்று கேட்டாள். அதைச் சொல்ல சீஸர் மறுத்துவிட்டார்.

"கடந்த
பல மாதங்களாக என்னவளாக என்னுடன் தங்கியிருக்கிறாய். உனக்காகப் பார்த்துப்
பார்த்து நான் வடித்த பரிசு அது. நேரில் பார்த்தால்தான் அந்த பரிசின்
மகிமையை புரிந்துகொள்ள முடியும். அதனால் நாளைவரை காத்திரு. நானே உன்னை
அங்கு அழைத்துச் செல்கிறேன்..." என்று கூறி, அந்த சஸ்பென்ஸ் பரிசு பற்றிய
கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சீஸர்.

அத்துடன், "அந்த பரிசைப்
பார்க்கும்போது, நீ இந்த ஆடையைத்தான் அணிந்திருக்க வேண்டும்" என்று கூறிய
சீஸர், ரோமானிய ராஜவம்ச பெண்கள் மாத்திரமே அணியும் அந்த விலை உயர்ந்த
ஆடையைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

மறுநாளும் வந்தது.

கிளியோபாட்ராவை
அழைத்துச் செல்ல டைபர் நதிக்கரையில் அமைந்திருந்த தனது பிரம்மாண்ட
அரண்மனைக்கு வந்தார் சீஸர். அவர் அரண்மனைக்குள் நுழையவும், கிளியோபாட்ரா
தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

அந்த அழகிய ஆடையில் கிளியோபாட்ராவை பார்த்த சீஸர், அப்படியே ஒருகணம் அதிசயித்துப்போய் நின்றார்.
.

"இந்த
ஆடையில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? நான் உனக்கு இன்று
தரப்போகும் அந்த மாபெரும் பரிசே இப்போது உன் அழகில்
தோற்றுப்போய்விட்டதே..." என்று கூறிச் சிலிர்த்தார்.

தொடர்ந்து,
குதிரை வண்டியில் கிளியோபாட்ராவை அழைத்துக்கொண்டு பயணமானார் சீஸர்.
சிறிதுநேரப் பயணத்திற்குப் பிறகு ஒரு ஆலயத்தின் முன்பு நின்றது வண்டி.
ரோமானிய காதல் தெய்வமான வீனஸின் ஆலயம் அது.

குதிரை வண்டியில்
இருந்து முதலில் இறங்கிய சீஸர், தனது இரும்புக் கரத்தை நீட்டி கிளியோபாட்ரா
இறங்க உதவினார். இறங்கியதும், அவரது கரத்தைப் பற்றிக்கொண்டு ஆலயத்திற்குள்
நடந்தாள் கிளியோபாட்ரா.

"ஆமாம்... எனக்காக மாபெரும் பரிசு ஒன்று
தரப்போவதாக கூறினீர்கள். ஆனால், ஆலயத்திற்கு அழைத்து வருகிறீர்கள். இந்த
ஆலயத்தையா எனக்கு பரிசாகத் தரப்போகிறீர்கள்?" - கிளியோபாட்ரா கேட்டாள்.

"இது,
எங்களது காதல் தெய்வம் குடிகொண்டுள்ள கோவில். நீயும் ஒரு காதல்
தேவதைதானே.அதனால்தான் உனக்கான பரிசை இந்த காதல் கோவிலில் உருவாக்கி
வைத்திருக்கிறேன்".

"என்னது... பரிசை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா?"

"அடடா... உண்மையைச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறதே..."

"நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை. என்னை குழப்பத்திற்குள் மேலும் மேலும் ஆழ்த்துகிறீர்கள்".

"நீ
ஒன்றும் குழம்ப வேண்டாம். உனக்கான பரிசு இருக்கும் இடத்தை
நெருங்கிவிட்டோம்..." என்ற சீஸர், கிளியோபாட்ராவின் கேள்விக் கணைகளைத்
தடுத்து நிறுத்தினார்.

இருவரும் அப்போது போய் நின்ற இடம், ஒரு அழகான சிலை முன்பு.

"எனது பேரழகியே! இந்தச் சிலைதான் நான் உனக்காக இந்தக் காதல் கோவிலில் வடித்த பரிசு. அதை நன்றாக உற்றுப் பார்..."

சீஸர்
இப்படிச் சொன்னதும், தனது வேல் விழிகளை கூர்மையாக்கி அந்த சிலையை
நோக்கினாள். உச்சி முதல் பாதம்வரை அப்படியே அவளைப் போலவே இருந்தது.

உடனே பரவசம் ஆன அவள், சீஸரைப் பார்த்தாள்.

"ஆமாம்... இந்த சிலை என்னைப் போலவே இருக்கிறதே..."

"உன்னைப்போல் அல்ல; அந்த சிலை சாட்சாத் எனது பேரழகியான நீயேதான்!"

வீனஸ்
கோவிலில் தனது சிலையை பார்த்த கிளியோபாட்ரா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை. தன்மீது சீஸர் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து நெகிழ்ந்தாள்.

தனது சிலையைப் பார்த்து பரவசமாகிக்கொண்டிருந்த கிளியோபாட்ராவுக்குள் திடீர் வெட்கம். அந்த வெட்கத்தில் அவளது முகம் சிவந்தே போனது.

"இது
எனது சிலை ஓ.கே. ஏன் ஆடையின்றி இதை உருவாக்கி இருக்கிறீர்கள்? எனக்கு
அதைப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது..." - சீஸரைப் பார்த்துக் கேட்டாள்
கிளியோபாட்ரா.

"சிலை என்றால் நிர்வாணமாக இருந்தால்தான் அழகு.
பெண்மைக்கு அழகு நாணம். சிலைக்கு அழகு நிர்வாணம்" என்று விளக்கம்
கொடுத்துச் சமாளித்தார் சீஸர்.

காதல் கடவுள் வீனஸ் கோவிலில் கிளியோபாட்ராவுக்கு சீஸர் சிலை வடித்த தகவல் ரோமாபுரி முழுவதும் பரவியது.

சிலர்,
தங்களது வேந்தரின் ஆசை நாயகி எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்துகொள்ள அந்த
கோவிலை நோக்கி படையெடுத்தனர். பலரோ சீஸர் மீது கோபம் கொண்டனர்.
கிளியோபாட்ராவை அவர் ரோமாபுரிக்கு மகாராணி ஆக்கிவிடுவார் என்று
எண்ணினார்கள்.

தங்களது நாட்டுக்கு அயல்நாட்டைச் சேர்ந்த ஒருத்தி மகாராணி ஆவதை ஏற்க அவர்களது மனநிலை தயாராக இல்லை.

மேலும்,
கிளியோபாட்ரா ரோமாபுரிக்கு பேரரசி ஆகிவிட்டால், அவளுக்கும், சீஸருக்கும்
பிறந்த டாலமி சீஸருக்கு ரோமாபுரியின் அரசாளும் உரிமை வழங்கப்பட்டுவிடலாம்
என்றும், எகிப்து போன்று ரோமிலும் குடியாட்சி மறைந்து மன்னராட்சி
வந்துவிடலாம் என்றும் கருதினர்.

இதையொட்டி பல வதந்திகள் ரோம்
மக்களிடையே பரப்பப்பட்டன. ரோம் குடியரசு கோட்பாட்டாளர்களான செனட்
உறுப்பினர்கள் இந்தத் தகவல்களால் அதிர்ந்தனர். ரோம் நாட்டுக்காக சீஸரை
ஆட்சியில் இருந்து அகற்றவும், தேவைப்பட்டால் கொலை செய்யவும் தயாரானார்கள்,
சில செனட் உறுப்பினர்கள்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 1:10 pm

ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக்
கிடப்பதையும்,ரோமாபுரிக்கு தான் பேரரசராகி, கிளியோபாட்ராவை அரசியாக்க
அவர்போட்டிருந்ததொலைநோக்குத் திட்டத்தையும் நன்றாகவே அறிந்திருந்தனர்,
அவருடன் நெருங்கி
நட்பு பாராட்டிய சில செனட் உறுப்பினர்கள். சீஸர் அதை
அரசல் புரசலாக அறிந்திருந்தாலும், அது தொடர்பான செனட்டர்களின் நடவடிக்கைகளை
உன்னிப்பாக கவனித்து வந்தார்.

ஒருநாள் இரவு -

டைபர்
நதிக்கரையில் அமைந்திருந்த அரண்மனையில் தனது ஆசைக் காதலி கிளியோபாட்ராவுடன்
பேசிக் கொண்டிருந்தார் ஜூலியஸ் சீஸர். அப்போது அங்கே வந்த காவலாளி ஒருவன்,
ரோமானிய படைத்தளபதியும், சீஸரின் நெருங்கிய
நண்பனுமான ஆண்டனி அங்கே வந்துள்ள செய்தியத் தெரிவித்துவிட்டு வேகமாக அகன்றான்.

ஆண்டனியைக் காண்பதற்காக தனி அறை ஒன்றில் ஆஜராகி இருந்தார் சீஸர். அடுத்த ஓரிரு நிமிடத்தில் சீஸர் முன்பு வந்து நின்றான் ஆண்டனி.

“எனதருமைத் தோழன் ஆண்டனியே... வா... வா...!“

“ஆருயிர் நண்பன் சீஸருக்கு என் பணிவான வணக்கம்!“

“என்ன ஆண்டனி... உன் முகத்தைப் பார்த்தால், எப்போதும் இல்லாத உற்சாகத்தில் மிதப்பதுபோல் இருக்கிறதே... என்ன விஷயம்?“

“நான் கொண்டு வந்துள்ள விஷயத்தைச் சொன்னால் நீங்கள் என்னைவிட இன்னும் அதிக உற்சாகத்தில் மிதப்பீர்கள்...“

“அப்படி என்ன விஷயம்? நீயே சொல்...“

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த செய்திதான். நீங்கள் இந்த ரோமாபுரிக்கு
அதிகாரப்பூர்வ நிரந்தர பேரரசர் ஆகப் போகிறீர்கள்...“

“என்ன சொல்கிறாய் ஆண்டனி? நீ சொல்லும் செய்தி வியப்பாக இருக்கிறதே...
எல்லா செனட்டர்களும் இதற்கு ஒத்துக்கொள்வார்களா?“

“நல்ல விஷயத்தை பேசும்போது, குடியாட்சி பற்றிக் கொக்கரிக்கும் அந்த செனட்டர்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?“

“ஏனென்றால்
அவர்கள் ஆதரவும் வேண்டுமே... அதுமட்டுமல்லாமல், இப்போதைய குடியாட்சி
முறையை விட்டுக் கொடுக்க இந்த ரோமாபுரி மக்களும் முன்வர வேண்டுமே...
இதெல்லாம் சாத்தியமாகுமா?“

“நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள்? நாளை லூபர்கால் திருவிழா நடைபெற இருக்கிறது அல்லவா?“

“ஆமாம்...!“

“அந்த விழாவில் நானே உங்களுக்கு மணிமுடி சூட்டி, இந்த ரோமாபுரியின் மாமன்னராக அழகு பார்க்கப் போகிறேன்...“

“என்ன
சொல்கிறாய் ஆண்டனி? நீ சொல்லச் சொல்ல எனக்கு வியப்பாக இருக்கிறது. நான்
உன்னுடன் நிஜத்தில் பேசிக்கொண்டிருக்கிறேனா? அல்லது கனவில் மிதந்து
கொண்டிருக்கிறேனா என்றுகூட சந்தேகம் வருகிறது...“ என்று சீஸர் ஆனந்த
பரவசத்தில் மூழ்கியபோது, அங்கே கிளியோபாட்ரா வந்தாள்.

கிளியோபாட்ராவைப் பார்த்ததும் அவள் பக்கம் தனது காந்தக் கண்களைத் திருப்பினான் ஆண்டனி.

“வணக்கம் எகிப்து பேரரசியாரே! எங்கள் பேரரசர் சீஸரின் மனம் கவர்ந்த பேரழகே!“

“உங்களுக்கும் எனது பணிவான வணக்கம் வீரத் தளபதியே!“

தன்னிடம் பணிந்த ஆண்டனிக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் சொன்னாள் கிளியோபாட்ரா.

பின்,
“என்ன... இருவரையும் பார்க்கும்போது அதீத மகிழ்ச்சி
வெள்ளத்தில் திளைப்பவர்கள் போல் தெரிகிறதே... நானும் அந்த மகிழ்ச்சியில்
பங்கு
கொள்ளலாமா?“ என்றாள்.

உடனே, சீஸரே வாய் திறந்தார்.

“எனது
பேரழகே! என் நம்பிக்கைக்குரிய நண்பன் ஆண்டனி, என்னை இந்த நாட்டின்
பேரரசனாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்த
செய்தியைப் பற்றிதான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்“

“அது பற்றி
பேச என்ன இருக்கிறது? இந்த ரோமாபுரிக்கு பேரரசர் ஆக உங்களைவிட்டால் வேறு
யாருக்கு அந்த தகுதி இருக்கிறது? மேலும், பேரரசர் ஆக வேண்டும் என்பது
உங்களது லட்சியம் அல்லவா? இதை என்னிடம் எத்தனையோ முறை சொல்லி
இருக்கிறீர்களே...“

“நிஜம்தான் அழகே! நாளைக்கே நான் மணிமுடி
சூட்டிக்கொள்ள வேண்டும் என்று இவன் ஆசைப்படுவதோடு, அதற்கான விழாவையும்
ஏற்பாடு செய்துவிட்டான்“.

“அப்படியா? இந்தச் செய்தியைக் கேட்க
வேண்டும் என்பதற்காகத்தானே நான் ஆவலோடு காத்திருந்தேன். இப்போது அதற்கான
காலம் கனிந்துவிட்டது. வெற்றி வீரனான உங்களுக்கு இந்த ரோமாபுரி உரிய
கவுரவம் செய்ய இருக்கிறது...“ என்று கூறி
உணர்ச்சிவசப்பட்டாள் கிளியோபாட்ரா.

“அவசரப்படாதே
கிளியோபாட்ரா! இந்த ரோமாபுரிக்கு பேரரசர் ஆவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
இப்போதைய குடியாட்சி முறையை விட்டுவிட்டு முடியாட்சி முறையை ஏற்க நாட்டு
மக்கள் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் என்னுடன் நெருங்கிப் பழகும் சில
செனட்டர்கள் கூட எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். இப்படிப்பட்ட
சூழ்நிலையில் எப்படி நான் மணிமுடியை ஏற்றுக்கொள்ள முடியும்?“ என்று கூறிய
சீஸரின் பேச்சில் லேசான தடுமாற்றம் தெரிந்தது.

“அவசரப்பட்டு
நீங்களாகவே முடிவெடுக்க வேண்டாம் நண்பரே! எப்போதும் உங்கள் வலது கரமாக
செயல்படும் இந்த ஆண்டனி, இந்த விஷயத்திலும் அப்படியே நடந்துகொள்வான். நாளைய
விழாவில் நான் உங்களுக்கு மணிமுடி சூட்டுவதாக
அறிவிக்கிறேன். அங்கே
கூடியிருக்கும் மக்கள் அதை வரவேற்றால் மணிமுடியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இல்லையென்றால், மறுத்துவிடுங்கள்“ என்றான் ஆண்டனி.

கிளியோபாட்ராவுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது.

“எனது
பேரரசரே! எத்தனையோ ஆயிரம் மைல் தொலைவு கடந்து நான் இந்த ரோமாபுரிக்கு
வந்திருக்க காரணம், உங்களைப் பேரரசராக்க் காண வேண்டும் என்கிற எனது தணியாத
ஆசையே... அதற்கான நேரம் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது. தயங்காமல்
ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு இந்த ரோமப் பேரரசின்
பகுதிகளை விரிவாக்கிய உங்களுக்கு இந்த மணிமுடி ஏற்ற பரிசுதான். அதைக்
கண்டிப்பாக நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்“.

“நீ சொல்வது
சரிதான் அன்பே! நாளைய விழாவில் மணிமுடி சூட நான் தயாராகிவிட்டேன். எல்லாம்
சிறப்பாக நடக்கும் என்று நம்புவோம்...“ என்றார் சீஸர்.

“விழா
சிறப்பாக நடக்கும். நீங்கள் எல்லோரது ஆதரவுடனும் மணிமுடியை ஏற்பீர்கள்.
நானும் இதை நேரில் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்“ என்றாள்
கிளியோபாட்ரா.

“இல்லை அன்பே... அந்த விழாவில் நீ கலந்து கொள்ள ஏற்ற
தருணம் அல்ல இது. எனக்கு எதிராக சூழ்ச்சி நடப்பது நன்றாகவே தெரிகிறது.
உன்னை ஒரு அயல்நாட்டு பேரரசியாக இந்த ரோம் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களே
தவிர,எனக்குரியவளாக ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை. ரோம் மக்கள் உன்னை ஏற்றுக்
கொள்ளும்வரை நீ சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது என்று
நினைக்கிறேன்...“ என்றார் சீஸர்.

வேறு வழி தெரியாத கிளியோபாட்ராவும் அமைதியாகி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இதைக் கவனித்த ஆண்டனி அங்கிருந்து விடைபெற தயாரானான்.

“நண்பரே!
இப்போது நான் புறப்படுகிறேன். நாளைய விழாவில் உங்களை மீண்டும்
சந்திக்கிறேன்...“ என்று சீஸரைப் பார்த்து கூறிய ஆண்டனி,
கிளியோபாட்ரா பக்கம் திரும்பினான்.

அங்கே அவள் அழகு சிலைபோல்
நிமிர்ந்து நின்று கொண்டிருந்தாள். அவளை ஏக்கப் பார்வையோடு பார்த்த ஆண்டனி,
“எப்பேர்பட்ட பேரழகியாக இருக்கிறாள் இவள்? சீஸர் கொடுத்து வைத்தவர்.
நமக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்குமா என்றுமனதிற்குள் எண்ணியவாறே அந்த
இடத்தைவிட்டு அகன்றான்.
றுநாள் காலை (கி.மு.44 பிப்ரவரி 15-ந் தேதி) -

லூபர்கால் திருவிழாவால் ரோம் நகரமே பரபரத்துக் கொண்டிருந்தது.பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர்.

ஜூலியஸ்
சீஸர் தனது மனைவி கல்பூர்னியா, நண்பன் ஆண்டனி மற்றும்படைவீரர்கள் சூழ
வந்தார். சீஸரை விழா நடைபெறும் மேடைக்கு அழைத்துச் சென்றான் ஆண்டனி.

மேடையில்
மனைவியுடன் ஏறிய சீஸர், தனக்கு எதிரே திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தைப்
பார்த்து கையசைத்தார். பதிலுக்கு ரோம் மக்களும் கையசைத்து மகிழ்ச்சி
ஆரவாரம் எழுப்பினர்.

விழா ஆரம்பித்த சிறிது நேரத்தில் சீஸருக்கு
மணிமுடி சூட்டும் அறிவிப்பை வெளியிட்டான் ஆண்டனி. அதுவரை ஆரவாரத்தோடு
காணப்பட்ட ரோம் மக்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் 'கப்சிப்'
ஆனார்கள். ஆளாளுக்கு எதை எதையோ பேசிக் கொண்டார்கள்.

ரோம் மக்கள்
மட்டுமின்றி, செனட் சபை உறுப்பினர்களும் பரபரப்பானார்கள். 'சீஸர்,
மணிமுடிதரித்து, இந்த நாட்டுக்குப் பேரரசர் ஆகிவிட்டால் செனட் சபைஎன்ற
ஒன்றே தேவையில்லாமல் போய்விடுமே... பிறகு, நமக்கும் அதிகாரம்போய்விடுமே...'
என்று அவர்கள் பயந்தனர்.

ஒருபுறம் மக்களும், இன்னொருபுறம் செனட்
உறுப்பினர்களும் பரபரப்பாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சீஸர்
பதற்றமாகிவிட்டார். "நான்எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது. நல்லவேளை,
கிளியோபாட்ராவை இங்கு அழைத்து வரவில்லை. அவள் இதையெல்லாம் பார்த்தால் மனது
ஒடிந்து போய் இருப்பாள்..." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட சீஸர், தானே
முன் வந்து, "மணிமுடியைஏற்றுக் கொள்ளவில்லை" என்று அறிவித்து ரோமில்
குடியாட்சியே தொடரும் என்றும் சொன்னார்.

இதற்கு பிறகுதான் அங்கே
திரண்டிருந்த மக்கள் உற்சாகம் ஆனார்கள். ஆனாலும், ஆண்டனி விடுவதாக இல்லை.
சீஸரின் வெற்றிகளைப் பட்டியலிட்டு, அதற்கு உரிய
பரிசுதான் இந்த மணிமுடி என்று கூறி, இரண்டாவது முறையாக அதை அவருக்கு அணிவிக்க முயன்றான்.

மக்கள்
என்ன நினைக்கிறார்கள் என்று வேகமாக நோட்டமிட்டன சீஸரின் கண்கள். ஆனால்,
அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் பேசிக்கொண்டார்கள். "இந்த சீஸருக்கு
என்ன ஆயிற்று? திடீரென்று மணிமுடி, மன்னராட்சி என்றுபேசுகிறாரே..." என்று
முணுமுணுத்தனர்.

உடனே மணிமுடியை ஏற்க மறுத்தார் சீஸர். மக்களும்
நிம்மதி ஆனார்கள்.அதன் பின்னரும் ஆண்டனி விடுவதாக இல்லை. மூன்றாவது முறையாக
சீஸருக்கு மணிமுடி சூட்டப்போவதாக அறிவித்தான்.

இப்போது மக்கள் தரப்பில் இருந்தும், செனட்டர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல் பலமாக வந்தது.

"இதுவரை
சீஸர் நன்றாகத்தானே இருந்தார்? என்றைக்கு கிளியோபாட்ராவை இங்கே
அழைத்துக்கொண்டு வந்தாரோ, அன்று முதலே மாறிவிட்டார். கிளியோபாட்ரா
வேண்டுமானால் ஒரு நாட்டுக்கு அரசியாக இருக்கலாம். அதற்காக ரோமாபுரியிலும்
மன்னராட்சிதான் நடைபெற வேண்டும் என்று விரும்புவது கோழைத்தனம்,
முட்டாள்தனம்..." என்று அவர்கள் சொன்னது, சீஸர் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.

நடந்த சம்பவங்களால் மேலும் பதற்றமான சீஸர், மணிமுடியை ஏற்கவில்லை.

"அது
ஆண்டனியின் விருப்பம்தான். என்னுடைய விருப்பம் அது அல்ல..." என்று வேகமாக
அறிவித்து, அதற்காக வருத்தம் கோரியபோது திடீரென்று மயங்கி கீழேசரிந்தார்.
அவரது கைகால்கள் வெட்டி வெட்டி இழுத்தன. வாயில் இருந்து நுரை தள்ளியது.
இதைப் பார்த்து பதறிப்போன கல்பூர்னியா அழுதேவிட்டாள்.

இதைப் பார்த்த
ஆண்டனியும் பரபரப்பாகிவிட்டான். அருகே கிடந்த இரும்புக்கம்பி ஒன்றை
எடுத்து வந்த அவன், அதை சீஸரின் கையில் திணித்து, வேகமாக
அழுத்திப் பிடித்தான். சீஸருக்கு காக்காய் வலிப்பு நோய் உண்டு என்பதால் இப்படிச் செய்தான்.

சிறிதுநேரத்தில்
வலிப்பு தணிந்து எழுந்து அமர்ந்தார் சீஸர். அவரது வாயில் ஒட்டியிருந்த
நுரையை தனது அழகிய கரத்தால் ஒற்றியெடுத்து அப்புறப்படுத்தி
சுத்தம் செய்தாள் கல்பூர்னியா. சிறிதுநேரத்தில் அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

லூபர்கால்
விழாவில் மணிமுடி சம்பந்தமாக எழுந்த பிரச்சினை செனட்டர்கள் மத்தியில் வெகு
ஆழமாக எதிரொலித்தது. அவர்களில் பலர் சீஸரை வசை மாரி
பொழிந்தனர்.

ஜூலியஸ்
சீஸருடன் நெருங்கிப் பழகி வந்த சிலர், செனட்டரான காஷியஸ் தலைமையில்
சீஸரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு சதித்திட்டம் தீட்டினர்.
இதையொட்டி
மறைவாக கூட்டம் போட்டு தங்களது ஆதரவாளர்களுடன் பேசினர். பல இரவுகளை அதற்காக
செலவிட்டனர். அந்த கூட்டங்களில் சீஸரை எப்படி கொலை செய்வது? எங்கே கொலை
செய்வது? யார் கொலை செய்வது? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு
விவாதிக்கப்பட்டன.

சீஸருடன் நெருங்கிப் பழகி வந்த செனட்டர்
புரூட்டசும் ஒருகட்டத்தில் அதில் சேர்ந்துகொண்டான். அவனுக்கு அவரைக் கொலை
செய்ய வேண்டும் என்ற எண்ணம்
ஆரம்பத்தில் வந்ததே கிடையாது. ஆனாலும், சீஸர் பேரரசர் ஆவதை அவன் துளியும் விரும்பவில்லை.

ஒருநாள் -

புரூட்டசும், காஷியசும் தனியாக சந்தித்துப் பேசினர். புரூட்டஸ் கேட்டான்,

"சீஸரிடம் நான் அன்பானவனாகவே பழகி வருகிறேன். கண்டிப்பாக அவரைக் கொலை செய்துதான் ஆக வேண்டுமா?"

"ஏன்
இப்படியெல்லாம் பேசுகிறாய்? நாம் எல்லோருமே சுதந்திரமனிதர்களாகத்தானே
பிறந்தோம்? பின் ஏன் சீஸருக்கு அஞ்சி நடக்க வேண்டும்? நான் சிறுவனாக
இருந்தபோது ஒருமுறை, பொங்கி வந்த டைபர் நதியில் என்னோடு நீந்தி வரமுடியுமா
என்று சவால்விட்டான் சீஸர். இருவரும் நீந்தினோம். நான் நீந்திக் கரை
சேர்ந்தேன். ஆனால், சீஸர் சிக்கிக்கொண்டான். மூர்ச்சையற்றுப் போன அவனைக்
காப்பாற்றி கரை சேர்த்தேன். அன்று அவனுக்கு உயிர்பிச்சை கொடுத்த நான்,
இன்று அவனுக்குக் கீழ், பணிபுரிய வேண்டுமா?"

"நீ சொல்வது நியாயம்தான், காஷியஸ். அது சின்ன வயதில் நடந்தது. அதையும், இப்போது நடப்பதையும் ஏன் முடிச்சுப்போட்டு பேசுகிறாய்?"

"இப்போது
நாம் சீஸருக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் இனிமேல் கொடுக்கவே
முடியாது. அவன் பேரரசன் ஆகிவிட்டால் அவன் வைப்பதுதான் சட்டம். நாம் அவன்
சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இன்று, சீஸர் நல்லவன்தானே... என்று கேட்கும்
உன்னை அவன் நாளை கொலைகூட செய்யலாம். மனிதன் மனம் ஒரு குரங்கு. அது எப்போது
வேண்டுமானாலும் மரத்திற்கு மரம் தாவும். ஆட்சியின் ஒட்டு மொத்த அதிகாரமும்
ஒருவனிடம் போய்ச் சேர்ந்தால் நான் சொல்வது
நிச்சயம் நடக்கும்..." என்று அழுத்தம் திருத்தமாக சொன்னான் காஷியஸ்.

புரூட்டசுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குழப்பமான மனநிலையோடு காணப்பட்டான்.

"ஏன்
இன்னும் யோசிக்கிறாய்? நான் சொல்வதை திரும்பத் திரும்ப யோசி.இன்னொன்றையும்
சொல்கிறேன், கேள்... சீஸர் என்று அவன் பெயரையும், புரூட்டஸ் என்று உன்
பெயரையும் நான் உச்சரிக்கிறேன். இருவரது பெயரும் நன்றாகவே இருக்கிறது.
ஆனாலும், சீஸர் பெயரே மகத்துவம் பெறுகிறது. அவன் மட்டும்தான் இந்த உலகை
ஆளப் பிறந்தவனா? அவன் வைப்பதுதான் சட்டமாக வேண்டுமா? நமக்கு எல்லாம் அந்த
தகுதி கிடையாதா?"

"நீ சொல்வது புரிகிறது காஷியஸ். ஆனாலும்..."

"எதைச்
செய்தாலும் உடனே முடிவெடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி எடுக்கும் எந்த
முடிவிலும் அர்த்தமும் இல்லை; அது வெற்றிபெறவும்செய்யாது."

"இல்லை,
காஷியஸ்... எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் யோசித்து முடிவெடுக்க
வேண்டும். இன்னொருநாள் சந்திப்போமே...? " என்று கேட்டான் புரூட்டஸ்.
காஷியசும் சம்மதித்தான்.

இருந்தாலும், சீஸரை ஒழித்தே தீர்வது என்று உறுதியான முடிவை மனதிற்குள் எடுத்துக்கொண்டான் புரூட்டஸ்.

அதேநேரம், மார்ச் 15-ம் தேதி ரோமானியப் பேரரசராக மணிமகுடம் சூடிக்கொள்ள தயாரானார் ஜூலியஸ் சீஸர்.
பேரரசராக வேண்டும் என்ற ஜூலியஸ் சீஸரின் ஆசை வலுத்து வந்த அதேநேரத்தில், அவர் எந்தச் சூழ்நிலையிலும் பேரரசர்
ஆகிவிடக்கூடாது
என்ற கருத்தில் புரூட்டஸ், காஷியஸ் உள்ளிட்ட செனட்டர்கள் பலர் உறுதியாக
இருந்தனர். தங்களது கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் ஆதரவாளர்களையும்
மறைமுகமாக திரட்டினர்.

மார்ச் 15ஆம் தேதி நெருங்கியது. அதற்கு முந்தைய நாளான 14ஆம் தேதி ரோமில் அமைந்திருந்த சீஸரின் அரண்மனை பரபரப்பாக காணப்பட்டது.

ரோமாபுரிக்கு
பேரரசர் ஆகவேண்டும் என்ற கருத்தை சீஸர் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்த
புரூட்டசும், காஷியசும் அவரது அரண்மனைக்குப் பிற செனட்டர்கள் சகிதமாக
வந்தனர்., சீஸரின் ஆத்ம நண்பன் ஆண்டனியும் உடன் இருந்தான்..

சீஸரின்
அரண்மனைக்குள் நுழைந்த செனட்டர்களின் பார்வையில் சீஸரும், அவரது காதல்
மனைவி கிளியோபாட்ராவும் தெரிந்தனர். சீஸரை நெருங்கிய அனைவரும் ரோமானிய
பாரம்பரிய முறைப்படி கைகுவித்து, தலைகுனிந்து மரியாதை செய்தனர். ஆனால்,
கிளியோபாட்ராவுக்கு அந்த மரியாதை குறைவாகவே கிடைத்தது.திடீரென்று கோபத்தில்
சிவந்த அவளது மூக்கே அதைக் காட்டிக்கொடுத்தது.

அப்போது ஆண்டனியே மெல்ல வாய் திறந்தான்.

“மாண்புமிகு
தலைமை தளபதி அவர்களே! நாளைய ரோமானியப் பேரரசரே! தாங்கள் ரோமாபுரிக்குப்
பேரரசர் ஆவது குறித்து செனட்டர் சபை முக்கிய முடிவெடுத்து இருக்கிறது.
அதைச் சொல்வதற்காக இங்கே இவர்கள் வந்திருக்கிறார்கள்...“

“என்னது...
முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார்களா? நான் பேரரசர் ஆவதை இவர்கள்
ஆதரித்து முடிவு எடுத்து இருக்கிறார்களா? இல்லை... குடியாட்சி நடக்கும்
இடத்தில் முடியாட்சிக்கு இடமில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்களா?
இவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், நாளை இந்த ரோமாபுரிக்கு நான் பேரரசராக
முடிசூட்டிக் கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ரோமாபுரிக்காக
வெற்றிகளை மலைபோல் குவித்த எனக்கு பேரரசர் என்கிற இந்த மணிமுடி உரிய
பரிசுதான் உகந்த பரிசுதான் என்பதையும் செனட்டர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்...“ என்றார் சீஸர்.

அப்போது புரூட்டஸ் குறுக்கிட்டுப் பேசினான்.

“முதன்மை
தளபதியாரே! செனட் சபை என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை முதலில் கூர்ந்து
கவனியுங்கள். அதன்பின் உங்கள் கருத்தை தெரிவிப்பதுதான் நல்லது என்று
நினைக்கிறேன்...“

“என்ன சொல்கிறாய் புரூட்டஸ்? செனட் முடிவுக்காக இந்த மாவீரன் காத்திருக்க வேண்டுமா?“

“அப்படிச் சொல்லவில்லை, என் அன்பு நண்பரே! என்ன இருந்தாலும் செனட் ஒப்புதலைப் பெறுவது அவசியம் இல்லையா?“

“அதற்காக
என்னை ஒதுங்கிப் போகச் சொல்கிறாயா புரூட்டஸ்? இந்த பேரரசின்
வெற்றிவீரனுக்கு கவுரவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் செனட் சபையினருக்கு
வரவில்லையா?“ என்று கர்ஜித்த சீஸரின் கண்கள் கோபத்தில் சிவந்தன.

அதுவரை அமைதியாக இருந்த காஷியஸ் அப்போது வேகமாகவே வாய் திறந்தான்.

“மதிப்பிற்குரிய
தளபதியார், எதை எதிர்பார்த்து இப்படிப் பேசுகிறார் என்பது நன்றாகவே
புரிகிறது. குடியாட்சி நடைபெறும் ரோமில் மன்னாட்சி தேவையா? என்பதுதான்
செனட் சபையின் கேள்வி. இதை தளபதியார் புரிந்துகொள்வார் என்று
நினைக்கிறேன்...“ என்ற காஷியஸ் சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான்.

காஷியசின் இந்த செயல் சீஸரை ஆத்திரமூட்டியது.

“வெற்றிகள்
பல குவித்து உலகத்தையே நடுங்க வைக்கும் இந்த சீஸர், செனட் சபையினரிடம்
அடிமைப்பட்டுப் போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாவீரனுக்கு இது அழகும்
அல்ல. நாளை இந்த சீஸர் ரோமானிய வேந்தராக - ஏக சக்கரவர்த்தியாக
முடிசூடிக்கொள்ளப் போவது நிச்சயம். அதற்கு செனட்டர்கள் தயாராக
இருக்கட்டும்...“ என்று ஆணித்தரமாக பேசினார் சீஸர்.

காஷியசின்
கருத்துக்குக் கடுமையாக பதில் அளித்த சீஸரிடம் அடுத்து என்ன பேசலாம் என்பதை
அவசரம் அவசரமாக யோசித்த புரூட்டஸ், பணிவாகவே கேட்டான்.

“தளபதியாரே!
தங்கள் முடிவை செனட் சபை ஏற்றுக்கொள்ள சிறிது கால அவகாசம் வேண்டும். இதே
அரண்மனையில் பக்கத்து அறையில் நாங்கள் கூடிப் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவை
சொல்கிறோம். அதுவரை தாங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் அமைதியாக இருக்க
வேண்டும்“.

“சபாஷ் புரூட்டஸ்! நீ ஒருவன்தான் என்னை நன்றாக
புரிந்து வைத்திருக்கிறாய். மற்ற செனட்டர்களிடம் எனது நியாயமான விருப்பத்தை
எடுத்துச் சொல். நான் இந்த பேரரசுக்கு பேரரசர் ஆவதில் துணையாய் இரு“.

“தங்கள்
விருப்பப்படியே நாங்கள் செய்கிறோம்...“ என்ற புரூட்டஸ், உடன் வந்த மற்ற
செனட்டர்களை அழைத்துக் கொண்டு சீஸரின் அறையில் இருந்து வெளியேறினான்.

பக்கத்து அறையில் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூடி விவாதித்தனர்.

இதற்கிடையில், சீஸரிடம் காட்டமாகவே பேசிக்கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா.

“உங்கள்
செனட்டர்கள் எதை வைத்து இப்படி முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்?
மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு வந்த ஒரே மாவீரர் நீங்கள்தான். உங்களுக்கு
கவுரவம் செய்வதில் இவர்கள் ஏன் தயக்கம் காண்பிக்க வேண்டும்? இதே சம்பவம்
எனது எகிப்தில் நடந்திருந்தால், அவர்கள் அனைவரையும் அடுத்த நொடியே
சிரச்சேதம் செய்திருப்பேன்...“ என்று கொதித்தெழுந்த கிளியோபாட்ராவுக்கு
மூச்சு வாங்கியது. அருகில், கோப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து தேனான
உதட்டில் சப்பிக்கொண்டாள்.

“அவசரப்படாதே... எனது பேரரசியே! இந்த
ரோமாபுரி வேறு; உனது எகிப்து வேறு. இந்த செனட்டர்களைப் பொறுத்தவரை நான்
ரோமாபுரியின் முதன்மை படைத் தளபதி,அவ்வளவுதான். இங்கே குடியாட்சி
நடைபெறுவதால் செனட்டர்களின் ஒப்புதலையும் பெற வேண்டி இருக்கிறது. இவர்கள்
எல்லோரையும் ஒரேயடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது. இல்லையென்றால்,
இவர்களை இந்த இடத்திலேயே கொலை செய்திருப்பேன்...“ - சீஸரின் இந்த கருத்தால்
சற்று அமைதியானாள்
கிளியோபாட்ரா.

பக்கத்து அறையில் அவசர
ஆலோசனையில் ஈடுபட்ட செனட்டர்கள் சீஸரைப் பார்க்க திரும்பி வந்தனர்.
தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.

முதலில் புரூட்டசே எழுந்து பேசினான்.

“மதிப்பிற்குரிய
தளபதியாரே! நாங்கள் உறுதியான முடிவு எடுத்துவிட்டோம்.அதன்படி, தாங்கள்
இந்த ரோமாபுரிக்கு எப்போதும்போல் முதன்மை தளபதி. ரோமாபுரிக்கு வெளியே
தாங்கள் வேந்தர், அதாவது ரோமாபுரியின் ஏக சக்கரவர்த்தி! செனட்டர்களின் இந்த
முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நாளைய செனட் கூட்டத்தில் இதைத்தான்
நாங்கள்
அறிவிக்கப்போகிறோம். அதை இதை ஏற்றுதான் ஆக வேண்டும். இது எனது
தனிப்பட்ட கருத்து அல்ல. எல்லா செனட்டர்களும் சேர்ந்து எடுத்த உறுதியான
முடிவு“.

“என்ன சொல்கிறாய் புரூட்டஸ்? உங்களது இந்த முடிவு
என்னை அவமானப்படுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது? உள்நாட்டில் நான் பொம்மை
ராஜா,பிற நாடுகளில்தான் நான் உண்மையான ராஜா என்று அல்லவா சொல்லாமல்
சொல்கிறீர்கள்?“

“அவசரப்பட வேண்டாம் தளபதியாரே! செனட் எடுத்த முடிவுக்கு தலைவணங்குவது என்பது இந்த ரோமாபுரியின் மரபுதானே?“

“இதுவரைக்கும்
வேண்டுமானால் அந்த மரபு பின்பற்றப்பட்டு இருக்கலாம். இந்த ரோமாபுரிக்காக
பல வெற்றிகளைக் குவித்த இந்த சீஸரிடம் அந்த மரபு இனி செல்லுபடியாகாது...“
என்ற சீஸர் கோபத்தில் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டார்.

வேறு வழி தெரியாத புரூட்டஸ், காஷியஸ் உள்ளிட்ட செனட்டர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர்.

நாளை
காலையில் ஜெயிக்கப்போவது இந்த செனட்டர்களா? இல்லை... சீஸரா என்று
பார்த்துவிடுவோம்... என்று சொல்வதுபோல் இருந்தது, அவர்களது கம்பீர நடை.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 1:15 pm

விடிந்தால் மார்ச் 15-ம் தேதி -

அந்த நாளின் விடியலைத் தேடி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது இரவுப் பொழுது.

நள்ளிரவு
நேரம், வழக்கமாக அமைதியாக காணப்படும் ரோம் நகரில் உள்ள புரூட்டசின்
தோட்டத்து வீட்டில் இரவு விளக்கு வெகுநேரமாக எரிந்து கொண்டிருந்தது.
படுக்கையில் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான் புரூட்டஸ்.

ஜூலியஸ் சீஸரை ரோமானிய சக்கரவர்த்தியாக மணிமுடி சூட்டவிடாமல் எப்படித் தடுக்கலாம் என்று மூளையை கசக்கிக் கொண்டிருந்தான்.

இப்போதே
ஏக அதிகாரத்துடன் இருக்கும் சீஸருக்கு மணிமுடியையும் கொடுத்துவிட்டால்,
அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே... நாட்டின் ஒட்டு மொத்த அதிகாரமும்
அவரிடம் போய் குவிந்துவிட்டால் செனட்டில் நமக்கு என்ன வேலை?
அப்படியென்றால், ரோமானிய குடியாட்சி முறை என்னாவது? என்று பலவாறு
யோசித்துக்கொண்டிருந்தான் புரூட்டஸ்.

மனைவி போர்ஷியாவைப் பார்த்தான். அவள் களைப்பில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

தூக்கம்
வராமல் தவித்த புருட்டஸ், தோட்டத்திற்குள் உலவ வந்தான். ஆதரவின்றி கிடந்த
இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

பவுர்ணமியை
நோக்கி பருவச் செழிப்புடன் வளர்ந்து கொண்டிருந்தது அழகான பெண் நிலவு. அதை
சைட் அடிக்கும் நோக்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான
நட்சத்திரங்கள். அவற்றை வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்
புரூட்டஸ்.

அப்போது யாரோ வீட்டின் முன் வாயிலைத் திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான்.

அங்கே சக செனட்டர்களான காஷியஸ், சின்னா, காஸ்கா, டெஷியஸ், மெட்டலஸ்கிம்பர், டிரபோனியஸ் ஆகிய 6 பேர் வந்து கொண்டிருந்தனர்.

"என்ன
புரூட்டஸ்... இந்த நள்ளிரவு நேரத்தில் தூங்கி இருப்பாய் என்றுதான்
நினைத்து வந்தோம். ஆனால் நீயோ வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாய்.
திருடர்கள் பயமா?" - காஷியஸ் சிரித்துக் கொண்டே கேட்டான்.

"எப்போதுதான்
ஜோக் அடிக்க வேண்டும் என்று வரைமுறையே உன்னிடம் இல்லாமல் போய்விட்டது..."
என்று, பதிலுக்கு சிரிப்போடு அவர்களை வரவேற்ற புரூட்டஸ். "ஆமாம்... இந்த
அர்த்த ராத்திரியில் இங்கே மொத்தமாக வந்திருக்கிறீர்களே... அப்படி என்ன
முக்கியமான விஷயம்?" என்று கேட்டு காஷியசை ஏறிட்டுப் பார்த்தான்.

ரோமாபுரியின்
சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக சீஸர் அறிவித்து
இருக்கிறாரே..."அதுபற்றி பேசத் தான் இங்கே வந்திருக்கிறோம்..."

சீஸரை
சக்கரவர்த்தியாக விடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று பேசும் முன், இந்தக்
கருத்தில் அனைத்து செனட்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று அறிய
விரும்பினான் காஷியஸ். அவன் அந்தக் கருத்தைக் கூறியபோது, அங்கிருந்த
அனைத்து செனட்டர்களும் சபதம் ஒன்றையும் எடுத்துக்கொண்டனர்.

அந்த
சபதம் பற்றி புரூட்டஸ் பேசும்போது, உணர்ச்சி வசப்பட்டவனாகவே காணப்பட்டான்.
அதை, தனது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் உணர்வுப் பூர்வமாக அழகாக
கையாண்டுள்ளார் ஷேக்ஸ்பியர். அவரது நாடகத்தில் அப்போது புரூட்டஸ் பேசுவதாக
இடம்பெறும் வீர வசனம் இது:

"வேண்டாம்! நாம் இந்த சபதம் செய்ய
வேண்டிய அவசியமில்லை. உங்கள் முகங்களில் உள்ள சஞ்சலமும், உங்கள்
உள்ளங்களில் உள்ள நெடிய துயரமும், நிகழ்காலத்தில் உள்ள அலங்கோலங்களும்
நம்மை ஒன்றாக இணைக்க முடியாவிட்டால், அதை சபதம் செய்துதான் நாம் இணைக்க
வேண்டும் என்றால், நான் ஒன்றைச் சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். உடனே நாம்
இங்கிருந்து பிரிந்து சென்று விடுவோம். காலியாக கிடக்கும் நம்
கட்டிலுக்குச் செல்வோம்.

விசுவரூபம் எடுத்திருக்கும்
கொடுங்கோன்மைக்கு ஒவ்வொருவராக பலியாவோம். அவ்வாறு இல்லாமல், இன்றுள்ள
காரணங்களே கோழைகளை வீரனாகவும், உருகும் பெண்களை உருக்காகவும் மாற்றப்
போதுமானவை என்ற என் கருத்து சரியானதுதான் என்றால், நண்பர்களே... நம்
நாட்டின் துயர் களைய நம்மைத் தூண்டுவதற்கு சபதமா தேவை?வாக்கு தவறாத
ரோமானியர்களுக்கு சபதம் எதற்கு? சத்தியத்தைவிட சிறந்த சபதம் உண்டா? ...
செய்ய வேண்டும்; அல்லது செத்து மடிய வேண்டும். கோழைகள்,
சூழ்ச்சிக்காரர்கள், உயிர் தளர்ந்த கிழவர்கள்தான் தீமையையும் வரவேற்றுக்
கொண்டு, சபத உரையும் சாற்றிக் கொண்டிருப்பார்கள். மக்கள் அவர்களை
நம்பாததால் அவர்களுக்கு சபதம் தேவை. ஆனால், நம்மைப் பொறுத்தவரை சபதம் தேவை
என்று எண்ணி, நமது குற்றமற்ற காரியத்தைக் களங்கப்படுத்திவிடக் கூடாது.
அழிக்க முடியாத நமது உணர்ச்சிகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. சொன்ன சொல்லை
அணுவளவும் மீறுபவன் ரோமானியனாக இருக்க மாட்டான். அவனது ஒவ்வொருசொட்டு
ரத்தமும் குற்றமுடையதாக இருக்கும்..." என்று புரூட்டஸ் கதாபாத்திரத்தில்
கர்ஜிக்க வைக்கிறார் ஷேக்ஸ்பியர்.

புரூட்டஸின் வீர உரையைக் கேட்ட
அங்கிருந்த செனட்டர்கள் கொட்டும் இரவுப் பனியிலும் சிலிர்த்தெழுந்தனர்.
அவர்களது அவசர ஆலோசனை தொடர்ந்து கொண்டே போனது. ஆலோசனையின் நிறைவில் சீஸரைக்
கொலை செய்வது என்று எல்லோரும் உறுதியான முடிவினை எடுத்தனர்.

அப்போது, டெஷியஸ் அப்படியொரு கேள்வி கேட்டான்:

"சீஸரை மட்டும்தான் கொல்ல வேண்டுமா? வேறு யாரையும் கொல்ல வேண்டாமா?"

அதற்கு பதிளிக்க அவசரமாக திரும்பினான் காஷியஸ்.

"நல்லவேளை...
நினைவுபடுத்திவிட்டாய், டெஷியஸ். சீஸரை மட்டுமின்றி, அவனது இன்னொரு கரமாக
வலம் வரும் ஆண்டனியையும் கொலை செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
அவன் ஓர் உல்லாசப் பிரியன் மட்டுமல்ல; தந்திரக்காரனும் கூட! அவன் தனது
வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டால் நமக்குத்தான் ஆபத்து. அதனால், சீஸருடன்
ஆண்டனியும் சேர்ந்தே கொலை செய்யப்படட்டும்..." என்று வேகமாகவே சொன்னான்
அவன்.

காஷியசின் அந்த கருத்து புரூட்டசுக்குப் பிடிக்கவில்லை. அதற்கான எதிர்ப்பு கருத்தை அப்போதே பதிய வைத்தான்.

"சீஸருடன்
ஆண்டனியையும் சேர்த்து கொல்வது என்பது காட்டுமிராண்டித் தனமான செயல்.
தலையை வெட்டி ஒருவனைக் கொலை செய்த பிறகு, அவனது கை, கால்களை வெட்டுவது
என்பது ரத்தவெறியையே காட்டும். இப்போதைய நமது போராட்டம், இந்த
ரோமாபுரிக்கானது, ரோம் மக்களுக்கானது. முடியாட்சி கூடாது என்பதுதான் நமது
கொள்கை. நமது போராட்டத்தில் ராஜதந்திரம் இருக்கலாமே தவிர, தீவிரவாதம்
இருக்கக்கூடாது. நமது போராட்டத்தால் சீஸரின் தலை உருண்ட பிறகு, அவரது கையாக
உள்ள ஆண்டனியால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், ஆண்டனியைக் கொல்வதா?
வேண்டாமா? என்ற விவாதமே நமக்குத் தேவையில்லாதது..." என்று கூறி, அந்த
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் புரூட்டஸ்.

சிறிதுநேரம் அங்கே
அமைதி நிலவியது. அதுவரை தொடர்ச்சியாக விவாதம் செய்து களைத்துப் போனவர்கள்
மணியைப் பார்த்தார்கள். நேரம், நள்ளிரவைக் கடந்து மார்ச் 15-ம் தேதிக்கான
விடியல் ஆரம்பித்து இருந்தது.

"சரி... சரி... பொழுது
விடிந்துவிட்டது. ஓரிரு மணி நேரமாவது எல்லோரும் ஓய்வெடுங்கள். இன்று காலை
செனட் சபைக்குள் சீஸர் நுழையும்போது அவனது கதையை முடித்துவிட வேண்டும்.
எல்லோரும் அதற்கான ஆயுதங்களுடன் வாருங்கள். யாருக்கும் நம் மீது எந்தச்
சூழ்நிலையிலும் சந்தேகம் வந்துவிடக்கூடாது. சீஸரைக் கொன்ற பிறகு பிரச்சினை
வந்தால் எளிதில் சமாளித்துவிடலாம். அதற்கு முன்பே பிரச்சினை வருவதுதான்
நமக்கு நல்லதல்ல. நாம் இன்று காலை சீஸரை கொல்லப்போகும் செய்தி என் அன்பு
மனைவி போர்ஷியாவுக்குக் கூடத் தெரியாது. நீங்களும் உங்கள் துணையிடம்
இதுபற்றி மூச்சகூட விட்டுவிடாதீர்கள். காரியம் வெற்றிகரமாக முடிந்த பிறகு
சொல்லிக் கொள்ளலாம்..." என்று கூறி எல்லோரையும் தன் இல்லத்தில் இருந்து
அனுப்பி வைத்தான் புரூட்டஸ்.

எல்லா செனட்டர்களும் சென்ற பிறகு
படுக்கையறைக்கு வரத் திரும்பினான் புரூட்டஸ். அவன் எதிரே அவனது மனைவி
போர்ஷியா நின்று கொண்டிருந்தாள்.
ஜூலியஸ் சீஸரை கொலை செய்யும் திட்டம் பற்றி சக செனட்டர்களுடன் பேசிவிட்டு
திரும்பிய புரூட்டஸ், அந்தத் திட்டம் பற்றித் தெரியாத தனது மனைவி
போர்ஷியாவைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனான்.

"என்ன போர்ஷியா...
இங்கே நின்று கொண்டிருக்கிறாய்? இப்போதுதான் வந்தாயா? இல்லை.. வந்து
வெகுநேரம் ஆகிவிட்டதா?" - பதற்றத்துடனேயே கேட்டான் புரூட்டஸ்.

"ஏன்
பதற்றப்படுகிறீர்கள்? நான் இப்போதுதான் வந்தேன். எதார்த்தமாக
கவனித்தபோதுதான், உங்களைச் சிலர் சந்தித்துவிட்டு வெளியேறுவதைப்
பார்த்தேன். இந்த நேரத்தில் என்ன விஷயம் என்று கேட்கத்தான் இங்கே வந்தேன்"
என்று நிதானமாகவே பேசினாள் போர்ஷியா.

நல்லவேளை... நம் ரகசியத்
திட்டம் இவளுக்குத் தெரியவில்லை என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட
புரூட்டஸ், மனைவியை அணைத்தபடியே வீட்டிற்குள் சென்றான்.

விசாலமான அறையில் இருந்த அந்த பெரிய படுக்கையில் இருவரும் அமர்ந்தனர். படுக்கும் முன் மனைவியை ஏறிட்டான் புரூட்டஸ்.

"என்
அருமை மனைவியே! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. நாளை செனட் சபைக்கு
செல்ல வேண்டும். அதனால் நான் ஓய்வெடுக்கிறேன். நீயும் படுத்துக்கொள்".

"உங்களைத்
தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. இந்த நள்ளிரவில் நீங்களும், சிலரும்
சேர்ந்து எதையோ ரகசியமாக பேசி இருக்கிறீர்கள். மனைவியிடம் மறைக்கும்
அளவுக்கு பெரிய விஷயமா அது?"

"அது பற்றி இப்போது கூற முடியாது
அன்பே! நாளை வரை காத்திரு. உனக்கே உண்மை புரிந்துவிடும். இப்போது என்னைத்
தொந்தரவு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..." என்று பணித்த
புரூட்டசின் குரலில் களைப்பு நன்றாகவே தெரிந்தது. அவனது கண்களும்
தூக்கத்தைத் தொலைத்திருந்ததால் சிவந்துபோய் காணப்பட்டன.

"சரி...
உங்களை நான் தொந்தரவு செய்யவில்லை. நாளைக்கும் உங்களது ரகசியத் திட்டம்
எனக்குத் தெரியாவிட்டால், அதை நீங்களே என்னிடம் சொல்லிவிட வேண்டும்..."
என்று செல்லமாக ஒரு நிபந்தனை மட்டும் விதித்துவிட்டு படுக்கையில்
விழுந்தாள் போர்ஷியா. புரூட்டசும் அமைதியான தூக்கத்திற்குள் நுழைந்தான்.

அதுவரை
அமைதியாய் இருந்த வானம் திடீரென்று சிலிர்த்துக்கொண்டது. எங்கிருந்தோ
திரண்டு வந்த கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடியையும், மின்னலையும்
கொண்டு வந்தன. இயற்கை திடீரென்று ஏற்படுத்திய அந்த வெளிச்சத்தில் இருளில்
மூழ்கிப்போய் இருந்த ரோம் நகரம் அவ்வப்போது பகலாய் பளிச்சிட்டு மறைந்து
கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் சீஸரின் அரண்மனையில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.

படுக்கையறையில்
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சீஸரின் மனைவி கல்பூர்னியா அலறியபடியே
எழுந்தாள். பக்கத்து அறையில் மன அமைதியின்றி படுக்கையில் உருண்டு புரண்டு
கொண்டிருந்த சீஸர், மனைவியின் திடீர் அலறலால் பதற்றமானார்.

மனைவியின் அறைக்கு வேகமாக ஓடி வந்தார்.

தன்
அருகில் வந்து அமர்ந்த சீஸரை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டாள்
கல்பூர்னியா. அவளது உடல், அவளது கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கியது.

"அன்பே...
உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி அலறினாய்? திடீரென்று இடி இடித்ததால்
பயந்து விட்டாயா? அல்லது, துணையாய் நான் உன்னருகில் இல்லாததால் மிரண்டு
விட்டாயா?" - பதற்றத்தோடு கேட்டார் சீஸர்.

ஆனால், கல்பூர்னியாவிடம்
இருந்து எந்த பதிலும் வரவில்லை. சீஸரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப்
பதில் சொல்லாமல் மேலும் மேலும் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை இறுக்கி அணைத்து அவளது பதற்றத்தைத் தணிக்க முயன்றார் சீஸர். சில நொடிகளுக்குப் பிறகு கல்பூர்னியாவே வாய் திறந்தாள்.

"அரசே... பொல்லாத கனவு ஒன்று கண்டேன். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பயத்தில் அலறிவிட்டேன்".

"என்ன சொல்கிறாய் அன்பே... பொல்லாத கனவு உனக்கு மட்டும் இல்லையே; எல்லோருக்கும் வருவது இயல்பான ஒன்றுதானே...?"

"எல்லோருக்கும் கெட்ட கனவு வரலாம். ஆனால், நான் கண்ட கனவு, என்னைத் தங்களிடம் இருந்து பிரித்து வைத்து விடுமோ என்று பயப்படுகிறேன்".

"அப்படியென்றால்... நான் இறந்து விடுவதுபோல் கனவு கண்டாயா?"

"இப்போதைய
ரோமானிய பேரரசில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில் இப்படியொரு கனவு
வந்ததால், அப்படியொரு சம்பவம் நடந்துவிடுமோ என்று பயப்படுகிறேன்".

"உலக நாடுகளையே நடுங்க வைத்த ஒரு மாவீரனின் மனைவியாக இருந்து கொண்டு, ஒரு கனவுக்காக பயந்து நடுங்குவது கோழைத்தனம் இல்லையா?"

"கோழைத்தனம்
என்று நீங்கள் இதைக் கருத வேண்டாம் அரசே... நடைபெறப் போகும் ஒரு
சம்பவத்தின் முன்னெச்சரிக்கையாகக் கூட இதை எடுத்துக்கொள்ளலாம், அல்லவா?"

"சரி... நான் உன் வழிக்கே வருகிறேன். இப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்? "

"இன்று காலையில் நடைபெறப் போகும் செனட் சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது".

"நீ கண்ட கனவுக்கும், நான் செனட் சபைக்கு செல்லக்கூடாது என்பதற்கும் என்ன சம்பந்தம்?"

"சம்பந்தம்
இல்லாமல் இல்லை. அங்கே, உங்கள் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து வந்து விடுமோ
என்று பயப்படுகிறேன்... " என்ற கல்பூர்னியாவின் கண்களில் இருந்து
பொலபொலவென்று கண்ணீர் சிந்தியது. ஆறுதலாக அதைத் துடைத்துவிட்டார் சீஸர்.

கல்பூர்னியா கண்ட கனவு எவ்வளவு மோசமானது என்பதை திகிலாக வர்ணிக்கிறார் ஷேக்ஸ்பியர்.

"வீதியில்
ஒரு பெண் சிங்கம் குட்டி போட்டது. கல்லறைகள் வாய் திறந்து பிணங்களை
கக்கின. பயங்கர தோற்றம் கொண்ட எதிரிகள் வானத்தில் ஓடும் கரும்
மேகங்களுக்குள் மறைந்திருந்து இந்த ரோமாபுரியின் மீது தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் செனட் சபை முழுவதும் ரத்த மழை பெய்திருந்தது. இந்த
போரில் மடிந்த வீரர்கள், இறப்பதற்கு முன்பு எழுப்பிய சப்தம் காற்று மண்டலம்
முழுவதும் எதிரொலித்தது. உயிர் விடும் நிலையில் உள்ளவர்கள் ஏதேதோ
முனகினர். பேய்கள் எல்லாம் வீதிகளில் ஆட்டம் போட்டன... " என்று கல்பூர்னியா
தான் கண்ட கெட்ட கனவு குறித்து கூறுவதாக எழுதுகிறார் ஷேக்ஸ்பியர்.

கல்பூர்னியா
கண்ட கனவுக்குப் பரிகாரமாக உயிர் பலியிட உத்தரவிடுகிறார் சீஸர். அதன்படி
பலியிடப்பட்ட விலங்கின் உடலில் இதயம் இல்லை என்று தகவல் கிடைத்தபோது
சிலிர்த்தெழுகிறார் சீஸர். அதையும் ஷேக்ஸ்பியர் கம்பீரமாகவே
குறிப்பிடுகிறார்.

"கோழைகள்தான், தாங்கள் சாகுவதற்கு முன்னால்
பலமுறை பயத்தால் இறக்கிறார்கள். மாவீரன் மட்டும்தான் ஒருமுறை சாகிறான்.
அப்படிப்பட்ட மாவீரன் நான். சாவை யாரும் தவிர்க்க முடியாது. அது எப்போது
வரவேண்டுமோ, அப்போது வந்தே தீரும். என் மனைவி இன்று செனட் சபைக்கு
போகக்கூடாது என்று சொல்வதாலோ, பலியிடப்பட்ட விலங்கின் உடலில் இதயமே இல்லை
என்று சொல்வதாலோ நான் பயந்துவிட மாட்டேன். இன்று, பயத்தின் காரணமாக நான்
வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தால், எனக்கும் பலியிடப்பட்ட விலங்கைப் போல்
இதயம் இல்லாமல் போய்விடும். எந்த சூழ்நிலையிலும் இந்த சீஸர் பயத்தால்
அரண்மனைக்குள் முடங்கிக் கிடக்க மாட்டான். ஆபத்துக்கே தெரியும், இந்த சீஸர்
எப்படிப்பட்ட ஆபத்தானவன் என்று. நானும், ஆபத்தும் ஒரே நாளில் பிறந்த
சிங்கங்கள். நான் அண்ணன்; ஆபத்து தம்பி. நான் தம்பியைவிட மிகப்
பயங்கரமானவன். அதனால், இன்று செனட் சபைக்கு நான் செல்வது உறுதியான
முடிவுதான். அதில் எந்த மாற்றமும்
இல்லை..." என்று சீஸரின் வார்த்தைகளாக கர்ஜிக்கிறார் ஷேக்ஸ்பியர்.

அதேநேரம், சீஸரை செனட் சபைக்கு இன்று ஒருநாள் மட்டும் செல்லவிடாமல் தடுக்க கல்பூர்னியா எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்கிறாள்.

"இன்று
ஒரு நாள் மட்டுமாவது என் பேச்சைக் கேளுங்கள். இன்று உங்களுக்குப் பதிலாக
ஆண்டனி செனட் சபைக்குச் செல்லட்டும். காரணம் கேட்டால், இன்று தங்களுக்கு
உடல்நிலை சரியில்லை என்று நானே சொல்லி விடுகிறேன்..." என்று சீஸரின் காலில்
விழுந்து கதறுகிறாள் கல்பூர்னியா.

அவளின் கதறல் சீஸரின் மனதில்
திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது. செனட் சபைக்குச் செல்லப் போவதில்லை என்ற
தனது முடிவை முகமலர்ச்சியுடனேயே மனைவியிடம் கூறினார்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் கல்பூர்னியா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கணவனை ஆரத்தழுவி முத்தமிட்டாள்.
அப்போது,
கெட்ட கனவின் எதிராலியாக அதுவரை அவளிடம் காணப்பட்ட உடல் நடுக்கமும்
காணாமல் போய் இருந்தது. இரவு நேரமும் மறைந்து காலைப் பொழுது
மலர்ந்திருந்தது.

ஆனால், விதி யாரை விட்டது? சீஸரை செனட் சபைக்கு
எப்படியாவது அழைத்துச் சென்று கொலை செய்துவிட வேண்டும் என்ற ரகசியத்
திட்டத்தோடு, அவரது வீட்டிற்கு எதிரிகளான சில செனட்டர்கள் வந்து
கொண்டிருந்தனர்.
காலை 8 மணி இருக்கும். சதிகாரர்களுள் ஒருவனும், செனட்டருமான டெசியஸ்,
ஜூலியஸ் சீஸரின் அரண்மனைக்குள் வேகமாக நுழைந்தான். நேராக சீஸரை
சந்தித்தவன், அவரை வணங்கி நின்றான்.


"என்ன டெசியஸ்? இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாக வந்திருக்கிறாய்?"


"அப்படியொன்றும்
இல்லை தலைமை தளபதியாரே! காலை 10 மணிக்கு செனட் சபை கூட இருக்கிறது.
அதுபற்றி தங்களிடம் நினைவூட்டிவிடலாம் என்பதற்காக வந்தேன். அவ்வளவுதான்!"

"இல்லை
டெசியஸ். நான் இன்று செனட் சபைக்கு வருவதாக இல்லை. நான் சபை கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை என்று எல்லோருக்கும் தெரிவித்துவிடு".


"தளபதியாரே! அதற்கான காரணத்தை நான் அறிந்துகொள்ள முடியுமா?"


"இன்று
அதிகாலை என் மனைவி கல்பூர்னியா, கெட்ட கனவு ஒன்று கண்டாளாம். அதனால், நான்
இன்று அவளுடனேயே இருக்க வேண்டும்; வேறு எங்கும் செல்லக்கூடாது என்று
கூறுகிறாள். அதுதான் காரணம்".


"எனது இன்னொரு கேள்விக்கும் தாங்கள் விடையளிக்க முடியுமா?"


"தாராளமாகக் கேள்..."


"தங்கள் மதிப்பிற்குரிய மனைவி அப்படியென்ன கனவு கண்டாராம்?"


"உன்னிடம்
அதுபற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், உன் பணிவான அந்தக்
கேள்விக்குப் பதில் அளிக்கிறேன். எனது உருவச்சிலையில் பல இடங்களில் இருந்து
ரத்தம் சிந்தியதாம். நமது ரோமானியர்கள் அந்த ரத்தத்தில் தங்களது கைகளை
நனைத்து மகிழ்ந்தார்களாம். அதனால்... எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து
ஏற்படலாம் என்று இவள் கருதுகிறாள்..." என்று சீஸர் சொன்னபோது, டெசியசால்
பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில நொடிகள் மவுனங்களில்
கரைந்தவன், திடீரென்று முகம் மலரப் பேசினான்.

"தளபதியாரே! அந்தக்
கனவுக்கு நீங்கள் ஏன் அவ்வாறு பொருள் எடுத்துக் கொள்கிறீர்கள்? உங்கள்
சிலையில் இருந்து ரத்தம் வடிவதும், அதில் ரோமானியர்கள் கைகளை நனைத்து
கொண்டாடுவதும் நல்ல விஷயத்தைதான் சொல்கிறது. அதாவது, புத்துணர்ச்சி ஊட்டும்
புது ரத்தத்தை உங்களிடம் இருந்து இந்த ரோமாபுரி மக்கள் பெற இருக்கிறார்கள்
என்பதை அல்லவா அது காட்டுகிறது" என்றான் டெசியஸ்.


அவனது இந்தக்
கருத்து சீஸரையும் மனமாற்றம் கொள்ளச் செய்தது. அந்தக் கனவுக்கான பொருள்
இதுவாகவும் இருக்கலாம் அல்லவா என்று யோசித்தார். அதை கவனித்துவிட்ட
டெசியஸ், அந்த நிலைபாட்டில் இருந்து சீஸர் மீண்டும் மனம் மாறிவிடாமல்
இருக்க மேலும் உற்சாகமாக சில வார்த்தைகளை உதிர்த்தான்.

"தளபதியாரே! இன்னொன்றையும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன்..."


"தாராளமாகச் சொல்..."

"இன்று உங்களுக்கு மணிமுடி சூட்ட, அதாவது ரோமானிய சக்கரவர்த்தியாக தங்களை ஏற்றுக்கொள்ள செனட் சபை முடிவு எடுத்து இருக்கிறது அல்லவா?"


"ஆமாம்..."

"இந்த
நேரத்தில் நீங்கள் நல்ல முடிவு எடுத்தாக வேண்டும். மணிமுடி
சூட்டிக்கொள்வதற்கான இந்த வாய்ப்பைத் தவற விட்டுவிடக்கூடாது. மீறி தவற
விட்டுவிட்டால் செனட்டர்கள் மனம் மாற்றம் கொள்ளலாம். ஒருவேளை... அந்த
வாய்ப்பு கிடைக்காமல்கூட போய்விடலாம். அதனால், தாங்கள் இன்று கண்டிப்பாக
செனட் சபைக்கு வரவேண்டும் என்பது எனது பணிவான கருத்து".


டெசியஸ் இப்படி முடித்தபோது, பவுர்ணமி நிலவின் பிரகாசம் சீஸர் முகத்தில் பளிச்சிட்டது.

"மனைவி
வேண்டாம் என்கிறாள் என்பதற்காக இன்று செனட் சபைக்கு நான் வராமல் இருந்தால்
எனது ரோமானிய சக்கரவர்த்தி கனவு கனவாகவே போய்விட வாய்ப்பு உள்ளது. அதனால்,
இன்று கண்டிப்பாக செனட் சபைக்கு நான் வருவேன் என்று எல்லோரிடமும் தகவல்
சொல்லிவிடு..." என்று சீஸர் சொல்லி முடிக்கவும், யாரோ சிலர் வரும் சப்தம்
தெளிவாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தார் சீஸர்.


அங்கே
சதிகாரர்களான புரூட்டஸ், காஸ்கா, பப்ளியஸ், சின்னா, டிரபோனியஸ், மெட்டலஸ்
கிம்பர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை சீஸரை கண்டிப்பாக செனட்
சபைக்கு அழைத்து வந்து திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற தீர்க்கமான
முடிவு அவர்களது மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவர்களது முகம்
மாத்திரமே தற்காலிக சந்தோஷத்தை வரவழைத்திருந்தது.

அவர்களை முகம் மலர வரவேற்றார் சீஸர்.


"இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே... என்ன விஷயம்?" சீஸரே கேட்டார்.

"மணி
எட்டு கடந்துவிட்டது அல்லவா? இன்று தாங்கள் மணிமுடி சூட்டிக்கொள்ளப்
போகிறீர்கள். அதனால்தான் தங்களை அழைத்துப் போகலாம் என்று வந்தோம்..." என்று
இனிப்பாக பேசினான் புரூட்டஸ்.

அப்போது சீஸரின் நண்பன் ஆண்டனியும்
அங்கு வந்து சேர்ந்தான். அவன் சீஸரின் காதில் எதையோ கிசுகிசுக்க...
"நண்பர்களே! சிறிதுநேரம் காத்திருங்கள். நான் அதற்குள் உடை மாற்றிக்கொண்டு,
செனட் சபைக்குச் செல்ல தயாராக வந்து விடுகிறேன்..." என்று புரூட்டஸ்
உள்ளிட்ட செனட்டர்களிடம் கூறிவிட்டு, ஆண்டனியோடு தனியறைக்குச் சென்றார்
சீஸர்.

"ஆமாம்... நம் டைபர் நதிக்கரை அரண்மனையில் உள்ள கிளியோபாட்ரா
எப்படி இருக்கிறாள்? நான் இன்று மணிமுடி சூட்டிக்கொள்ளும் தகவல் அவளுக்கு
தெரியும்தானே?"

"நிச்சயமாக தெரியும் நண்பா... நீங்களே அவளிடம் அதுபற்றி பலமுறை கூறி இருக்கிறீர்களே..."

"ஆமாம்...
ஆமாம்... சந்தோஷத்தில் மறந்துவிட்டேன்..." என்ற சீஸர், ஆண்டனியை அங்கு
சிறிதுநேரம் காத்திருக்க வைத்துவிட்டு, உடை மாற்ற புறப்பட்டார்.

சிறிதுநேரத்தில்
நறுமணம் முன்னே கமழ்ந்துவர... ராஜநடையோடு வந்து கொண்டிருந்தார் சீஸர்.
அவருக்கு பக்கத்தில் வந்த கல்பூர்னியா கண்களில் மட்டும்தான் லேசாக கலவரம்
ஒட்டிக்கொண்டிருந்தது.

சீஸரை எப்போதும் இல்லாத கம்பீரத்தில் பார்த்த ஆண்டனியின் கண்களில் திடீர் வியப்பு. அதை வார்த்தைகளாகவே வெளிப்படுத்தினான்.

"நண்பா!
செனட் சபை தங்களுக்கு இன்னும் மணிமுடி சூட்டி அழகு பார்க்கவில்லை. ஆனாலும்
என் கண்களுக்கு ரோமானியச் சக்கரவர்த்தியாகவே தெரிகிறீர்கள். உங்களது
கம்பீர நடையும், மிடுக்கான பார்வையுமே அதற்கு சாட்சி..." என்று ஆண்டனி
சொல்ல மெய்சிலிர்த்துப் போனார் சீஸர்.

அருகில் நின்ற கல்பூர்னியா
பக்கம் திரும்பியவர், "எனது நண்பன் சொல்வதை கேட்டாயா? இப்போதே நான் இந்த
நாட்டுக்கு பேரரசர் ஆகிவிட்டேனாம். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது
அல்லவா? இன்னும் இரண்டு மணி நேரத்தில் அந்த நல்ல செய்தி உன்னையும் தேடி
வரும். எனக்கு மகிழ்ச்சியாக விடைகொடுத்து அனுப்பு. தலைமை தளபதியாக செனட்
சபைக்குச் சென்று, ரோமானியச் சக்கரவர்த்தியாக திரும்பி வருகிறேன்..."
என்றார்.

சீஸர் இப்படிச் சொன்ன மாத்திரத்தில் கலகலப்பான கல்பூர்னியா, "நீங்கள் வெற்றி வேந்தராக திரும்பி வருவீர்கள்..." என்று வாழ்த்தினாள்.

செனட்
சபையில் பெண்கள் பங்கேற்க முடியாது என்பதால் கல்பூர்னியாவிடம் விடைபெற்று
ஆண்டனியோடு வெளியே வந்தார் சீஸர். பிரம்மாண்ட வரவேற்பு அறையில் புரூட்டஸ்
உள்ளிட்ட செனட்டர்கள் காத்திருந்தனர்.

சீஸரின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்தவர்கள், "இதுதான் உனது கடைசி மகிழ்ச்சி" என்று மனதிற்குள் குமுறிக் கொண்டனர்.
திகாரர்களை நண்பர்கள் என்று நம்பிக் கொண்டு அரண்மனையில் இருந்து செனட்
சபைக்கு குதிரை வண்டியில் புறப்பட்டார் ஜூலியஸ் சீஸர். அவர், இன்று மணிமுடி
தரிக்கப்போகிறார் என்ற தகவல் ரோமாபுரி முழுவதும் பரவி இருந்ததால் மக்களில்
பலர் உற்சாகமாக இருந்தனர். சீஸரைக் காண வீதிகளில் திரண்டு நின்றனர்.
அவர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார் சீஸர்.

இதற்கிடையில், சீஸரை
கொலை செய்ய சதிகாரர்கள் தீட்டிய திட்டம் ஆர்ட்டிமிடோரஸ் என்ற ஆசிரியருக்கு
தெரிந்துவிட்டது அதை சீஸரிடம் தெரிவிக்க முடிவு செய்தவர், அதுபற்றி
வாய்மொழியாக சொல்வதைவிட கடிதம் வழியாகத் தெரிவிப்பது உகந்ததாக இருக்கும்
என்று முடிவெடுத்து, அதை எழுத ஆரம்பித்தார்.

"நண்பனாக உன்னை வலம்
வரும் புரூட்டசை நம்பாதே. அவன் அருகில் உள்ள காஷியஸ், சின்னா, டிரெபோனியஸ்,
மெட்டலஸ் கிம்பர் ஆகியோரையும் நம்பாதே. அவர்கள் அனைவரும் உன்னைப் பழிவாங்க
காத்திருக்கிறார்கள். நீ அழிவில்லாதவன் அல்ல. உனக்கு அவர்களால்தான் ஆபத்து
வரப்போகிறது. அதனால், அவர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்..."
என்று ஒரு தாளில் எழுதி, அதை சீஸரிடம் கொடுக்க தயாராக வைத்திருந்தார்
ஆர்ட்டிமிடோரஸ்.
காலை 10 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. செனட் சபை
முன்பு திரளான ரோமானியர்கள் கூடியிருந்தனர். அவர்களுடன் ஒருவராக நின்று
கொண்டிருந்தார் ஆர்ட்டிமிடோரஸ். சீஸர் எப்போது வருவார் என்று அவர் வரும்
பாதையையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்.

செனட் சபையை
சீஸர் வந்தடைந்தபோது அங்கு திரண்டிருந்தவர்கள் எழுப்பிய சீஸர் வாழ்க கோஷம்
அந்த விண்ணை முட்டியது. சீஸரை சூழ்ந்து கொண்டு வந்தனர் சதிகாரர்கள்.
ஆண்டனியும் சீஸரை நெருங்கியே வந்தான். இவர்கள் பொதுமக்கள் யாரும் சீஸரை
நெருங்காமல் பார்த்துக்கொண்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீஸரை
நெருங்கி, கடிதத்தைக் கொடுப்பது ஆர்ட்டிமிடோரசுக்கு ஒரு சவாலான காரியமாகவே
தெரிந்தது. ஆனாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சீஸரை நோக்கி
முன்னேறினார். ஒரு வழியாக சீஸரை நெருங்கிவிட்டார்.

சதிகாரர்கள்
சீஸரை சுற்றி நின்றதால், அவர்களைப் பற்றி சீஸரிடம் கூறும் தைரியமும்
அவருக்கு வரவில்லை. அதனால், சதித்திட்டம் குறித்து தான் எழுதிய கடிதத்தை
சீஸரிடம் கொடுக்க முயன்றார்.

தான் வைத்திருந்த கடிதத்தை சீஸரை
நோக்கி காண்பித்தவர், "மதிப்பிற்குரிய சீஸர், இந்த மனுவைத் தாங்கள் வாங்க
வேண்டும்..." என்றார். சீஸரும் அதை வாங்கிக்கொண்டு, அதை படிக்காமல் நகர
முயன்றார்.

"ஒரு நிமிடம் சீஸர். இந்த மனு தங்களோடு தனித்தொடர்பு கொண்டது. அதை இப்போதே படிப்பதுதான் உங்களுக்கு நல்லது".

"நான்
செனட் சபைக்கு அவசரமாக சென்று கொண்டிருக்கிறேன். இப்போது இந்த மனுவைப்
படிக்க எனக்கு நேரம் இல்லை. இன்னொருநாள் படித்துப் பார்த்து, தேவைப்பட்டால்
தங்களையும் வரச் சொல்கிறேன்..."

"இல்லை சீஸர். சிரமம் பார்க்காமல்
இப்போதே அதை படியுங்கள். உங்களுக்காகத்தான் அதைச் சொல்கிறேன்..." என்று
ஆர்ட்டிமிடோரஸ் சொன்னபோது, சதிகாரர்கள் உஷாராகிவிட்டார்கள். தங்கள் திட்டம்
பற்றிதான் இவன் சீஸரிடம் சொல்ல நினைக்கிறானோ... என்று பயந்தவர்கள், அவரை
அப்படியே அலாக்காக தூக்கி ஓரம் கட்டினர். சீஸரும் அதை பெரிய விஷயமாக
எடுத்துக்கொள்ளவில்லை.

சீஸர் செனட் சபைக்குள் செல்ல படிக்கட்டுகளில்
காலை வைத்தார். அப்போது, அவரை சூழ்ந்து வந்த சதிகாரர்கள் சிறிது
இடைவெளிவிட்டு பிரிந்து நின்று, தங்களது காதுகளுக்குள் ரகசியங்களை வேகமாக
பரிமாறிக் கொண்டனர். தங்கள் சதித்திட்டத்தில் சீஸரைச் சேர்ந்தவர்கள்
நெருங்காமல் பார்த்துக்கொண்டனர். அனைவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த
கத்தி மற்றும் வாளை அவ்வபோது தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டனர்.

அப்போதுதான்
சீஸரை நெருங்கி ஆண்டனி வருவது பற்றி யோசித்தனர். அவனும் ஒரு மாவீரன்
என்பதால், தங்கள் சதித்திட்டத்தில் இடையூறு ஏற்பட்டலாம் என்று பயந்தவர்கள்,
அவனை முதலில் அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபட்டனர். டிரேபோனியஸ் என்பவன்
ஆண்டனியுடன் பேச்சுக் கொடுத்து, அவனை சீஸரிடம் இருந்து விலக்கினான்.

இப்போது
புரூட்டஸ், காஷியஸ், காஸ்கா உள்ளிட்ட சதிகாரர்கள் மட்டுமே சீஸரை சுற்றி
வந்து கொண்டிருந்தனர். தான் அடுத்த சில நிமிடங்களில் கொலை செய்யப்படப்
போகிறோம் என்பதுகூட தெரியாமல் சிரித்தவாறும், வணக்கம் தெரிவித்தவாறும்
செனட் சபையின் முகப்பு படிக்கட்டுகளைக் கடந்து, சபைக்குள் நுழைந்தார்
சீஸர். தனக்கான சிம்மாசனத்தில் அமர முன்னேறினார்.

அப்போது சீஸரை
நெருங்கிய காஸ்கா, மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுத்து, ஆவேசமாக
சீஸரின் கழுத்தில் குத்தினான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் சீஸர் நிலை
தடுமாற... அடுத்தடுத்த நொடிகளில் மற்ற சதிகாரர்கள் ஓநாய்கள் போன்று
சூழ்ந்துகொண்டு அவரை கத்தியாலும், வாளாலும் குத்தினர்.

உயிருக்குப்
போராடிய சீஸர், புரூட்டஸ் பக்கம் திரும்பி, அவன் மீது உதவி கேட்பதுபோல்
சாய்ந்து விழுந்தார். அப்போது அவனும் தனது வாளை சீஸரின் உடலுக்குள்
நுழைத்தான். அவனும் இப்படிச் செய்வான் என்று சீஸர் எதிர்பார்க்கவில்லை.
"நீயுமா
புரூட்டஸ்? அப்படியானால்..." (கடைசியாக சீஸர் உதிர்த்த இந்த வார்த்தை
இன்றும் பிரபலமாக பேசப்படுகிறது) என்று கேட்டபடியே தரையில் சாய்ந்தார்
சீஸர். அவரது உயிர் பிரிய ஒருசில நொடிகளே இருந்தன.

நடந்த சம்பவத்தால் செனட் சபை கலவரமானது. சபைக்கு வந்த பொதுமக்களும் மற்ற செனட்டர்களும் ஓட்டம் பிடித்தனர்.
ஆனால்,
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சீஸரோ தனக்கு அருகில் உள்ள ஒரு
சிலையை நோக்கி மெல்ல நகர்ந்தார். அந்தச் சிலையின் காலை தனது கையால்
தொட்டபடி உயிரையும் விட்டார். அந்த சிலை அவரது முன்னாள் எதிரியான
பாம்பேவின் சிலை.

அப்படியென்றால், ஏன் அவர் சாகும் நேரத்தில் அப்படிச் செய்ய வேண்டும்? ஒரு சின்ன ஃளாஷ்பேக் :
சீஸருக்கு
முன்பு ரோமாபுரியின் அதிபதியாக இருந்தவன்தான் இந்த பாம்பே. சீஸரை மாபெரும்
வீரன் ஆக்கியதில் இவனுக்கு பெரும் பங்கு உண்டு. அதோடு நின்றுவிடாமல், தனது
படைத்தளபதிகளுள் ஒருவராகவும் சீஸரை நியமித்தான்.
அதிகார போதையில் பல
நாடுகள் மீது படையெடுத்த சீஸர் வெற்றிமேல் வெற்றி கொண்டார். அந்த வெற்றிகள்
சீஸரின் மனதை மாற்றியது. பாம்பேவை விரட்டிவிட்டு ரோமாபுரியின் அதிபதி ஆக
கனவு கண்டார். அதற்காக தனக்கு விசுவாசமான பெரும்படையை திரட்டினார்.

இதுபற்றி
பாம்பேயிடம் அவனது ஆதரவாளர்கள் சொன்னபோது அவன் நம்பவே இல்லை. "நான்
வளர்த்துவிட்டவன் அவன். எனக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் செயல்பட
மாட்டான



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 09, 2011 1:47 pm

முழு நீள! கிளியோ பெட்ரா! பகிர்விக்கு நன்றி ரேவதி!
படிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கி விட்டது..! ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக