புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_m10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
30 Posts - 50%
heezulia
முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_m10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_m10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_m10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
72 Posts - 57%
heezulia
முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_m10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_m10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_m10முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Oct 13, 2011 10:22 pm

முனைவர் வெ.இறைஅன்பு அவர்களின் ஆளுமைத்திறன்
கவிஞர் இரா .இரவி

இன்றைக்கு மாமனிதர் அப்துல் கலாமிற்கு அடுத்தபடியாக இளைஞர்களால் அதிகம் நேசிக்கப்படுபவர். திரு.வெ.இறையன்பு இஆப அவர்கள். இவர் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை செயலராக இருந்தார்கள் . தற்போது பணியாளர் நிர்வாகம் சீரமைப்பு த் துறை (பயிற்சி)செயலராக உள்ளார் .மிக நேர்மையான அதிகாரி. இவர் மிகச்சிறந்த நிர்வாகி என்பதற்கு பல்வேறு செயல்பாடுகளை உதாரணமாகக் கூறலாம். அகில இந்திய அளவில், தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு பல்வேறு விருதுகளை பெற்றுக் தந்துள்ளார். அகில இந்திய அளவில், தமிழக சுற்றுலாத்தலங்கள் கவனம் பெற்றது. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை எனப் பல சுற்றுலாத்தலங்கள் புதுப்பிக்கப்பட்டன.ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுர வாசல்களில் நலிந்து போன கிராமியக் கலைகளை உயிர்ப்பிக்கும் வண்ணம், தெருவோரத் திருவிழா ஒரு வருடமாக தொடர்ந்து நடைபெற்று, மதுரை மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாராட்டுக்களைப் பெற்றது. இணையத்தளங்களிலும் இடம் பெற்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு விடுதிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. விடுதிகளில் தொடர்ந்து தங்குபவர்களுக்கு கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டது. சென்னையில் நவீன சொகுசு, பேருந்துகள் சுற்றுலாத்தலங்களுக்கு இயக்கப்பட்டது. நட்பு ஆட்டோ என்ற திட்டத்தின் கீழ், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று உரையாற்றி, ஆட்டோ ஓட்டுநர்களை நெறிப்படுத்தி, முறைப்படுத்தி, வெற்றிகரமாக செயல் பெற்று வருகின்றது. மருத்துவ சுற்றுலா, கிராமிய சுற்றுலா, சமண மதத் தலங்கள் சுற்றுலா என சுற்றுலா பல்வேறு கோணங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இப்படி திரு.வெ.இறையன்பு அவர்களின் ஒய்வறியா செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். கலைப்பண்பாட்டுத் துறையிலும், கிராமியக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, பல்வேறு சலுகைகள் வழங்கி பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். கண்ணைக் கவரும் விதத்தில், அழகிய வண்ணங்களில் சுற்றுலா கையேடுகள் குறுத்தகடுகள் வெளியிட்டு சாதித்துள்ளர். தமிழில் சுற்றுலா இணையத்தளம் தொடங்கினார். பூமாலை, சமத்துவபுரம், உழவர் சந்தை, என பல்வேறு திட்டங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படகில் பயணம் செய்த போது, கடலில் விழுந்து உயிர் பிழைத்தவர். வெளிநாடு சென்ற போது, கார் விபத்து ஏற்பட்டு அதில் இருந்து உயிர் பிழைத்தவர். அவர் வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்த போதும் மனம் தளராமல் உழைத்துக் கொண்டே இருக்கும் மிகச் சிறந்த உழைப்பாளி. சுறுசுறுப்பிற்கு இலக்கணமாக வாழ்பவர். இவரது காலம் சுற்றுலாத் துறைக்கு பொற்காலம் என்று சொல்லுமளவிற்கு சாதனைகள் பல நிகழ்த்தியவர்.
இவர் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர் எழுதியுள்ள நூல்கள் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினர் அவரது நூல்களை நியாயமான விலையில், சிறந்த தரத்துடன் வெளியிட்டுள்ளனர். விற்பனையில் சாதனை படைத்து வருகின்றது. தேசிய அளவில் பல்வேறு விருதுகள் தமிழக சுற்றுலாத் துறைக்கு கிடைத்தவுடன் தமிழக சுற்றுலாத் துறையில் உள்ள அலுவலர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள, காவலர்கள் வரை அனைவருக்கும் இந்த விருது பெற உழைத்த உங்களுக்கு நன்றி என சான்றிதழ் போல அழகாக வடிவமைத்து ஒவ்வொன்றிலும் தன் கைப்பட கையெழுத்து இட்டு அனுப்பி வைத்தார். அதனை சுற்றுலாத் துறை பணியாளர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் மாட்டி வைத்துள்ளனர். அவருடைய ஒவ்வொரு செயலும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நிர்வாகத்தைப் பொருத்த வரையில் பேச்சைக் குறைப்பீர் உழைப்பைப் பெருக்குவீர் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர்.

பேச்சிற்கும், செயலிற்கும் வேற்றுமை இல்லாத சிறந்த பண்பாளர். ஆங்கிலம், தமிழ் இரண்டு இலக்கியமும் அறிந்தவர். இவர் பேசாத தொலைக்காட்சியே இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தொடர்ந்து உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். பொதிகை தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக இருந்து பட்டிமன்றங்களில் முத்திரை பதித்து வருகிறார். Z தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலையில் பேசினார்கள் . இவரது பயனுள்ள உரைகளின் ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் விற்பனைக்கு உள்ளது. இவருடைய நகைச்சுவைகள், மற்றவரை காயப்படுத்தாத பண்பான நகைச்சுவையாக இருக்கும்.

அய்.எ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் பலருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, நெறிப்படுத்தி சேவையாக செய்து வருகின்றார். மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்த போது ,நடவடிக்கைகளை அழகு தமிழிலேயே நடத்தி, தமிழ் வளர்ச்சித் துறையின் விருதினை ப் பெற்று உள்ளார். அவருடன் உரையாடும் சில நிமிடங்களில் பல்வேறு பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். குறித்த நேரத்திற்கு செல்வது. கையெழுத்து அச்சுப் போல மிகவும் நேர்த்தியாக இருக்கும். அளவாக, தேவையான சொற்களை மட்டும் பயன்படுத்தி, இனிமையாக பேசுதல். மற்றவரை மதித்தல்,செருக்கு இல்லாது இருத்தல் இப்படி பல்வேறு நல்ல விஷயங்களை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

இன்றைய இளைஞர்கள் பலரும், திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப என்ற பன்முக ஆற்றலாளரை மிகவும் நேசிக்கின்றனர். மதிக்கின்றனர். அவரை முன்மாதிரியாகக் கொண்டு பல்வேறு அய்.எ.எஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பெருமளவில் உருவாகி. வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். எனவே அவரது நூல்களைப் படிப்போம். உரைகளைக் கேட்போம். நிர்வாகக் திறனைப் பாராட்டுவோம். உள்வாங்கிக் கொண்டு நாமும் உயர்வோம்.நம்மைச் சார்ந்தவர்களையும் உயர்த்துவோம். இளம் வயதில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி,மிக உயர்ந்த பதவிகளை வகித்த போதும், துளி கூட கர்வம் இல்லாத இனிமையான மனிதர். . இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் வெறும் புகழ்ச்சி அல்ல, முழுமையான உண்மை.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 10:37 pm

மிக்க நன்றி நண்பரே.. இறையன்பு பற்றிய பகிர்வுக்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக