புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
56 Posts - 50%
heezulia
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
12 Posts - 2%
prajai
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_m10லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்பால் ஊழலை ஒழிக்குமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 5:11 pm

நம் நாட்டில் லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இன்னும் லோக்பால் வராமல் இருப்பதுதான் என்பது போன்ற ஓர் அசட்டு நம்பிக்கை மத்தியதரவர்க்க மக்கள் மனத்தில் இப்போது பலமாக ஏற்பட்டுவருகிறது. அன்னா ஹசாரேவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இருதரப்பிலும் பெருவாரியானவர்களுக்கு லோக்பால் பற்றிய விவரங்களே தெரியாமலும் இருக்கின்றன.

அசல் பிரச்னையான லோக்பால் பற்றியும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது எப்படி என்பது பற்றியும் நிதானம் தவறாமல் மீடியாவில் இதுவரை ஒலித்த குரல்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று இன்ஃபோசிஸ் நிறுவன வேலையை உதறிவிட்டு இந்திய அரசின் குடிமக்களுக்கான மின்னணு அடையாள அட்டை வழங்கும் திட்டத் தலைவராகப் பணியாற்றும் நந்தனும் அவர் மனைவி ரோஹிணியும், அண்மையில் பெங்களூருவில் சூழல் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக சொந்தப் பணம் 50 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தவர்கள்.

அருணா ராய் ஆறு வருடங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பின் அதிலிருந்து விலகி சமூகப் பணியில் ஈடுபட்டவர். தகவலறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்ற சோனியா காந்தியை சம்மதிக்க வைத்து வெற்றி பெற்றவர். மக்களின் தகவலறியும் உரிமைக்கான தேசிய பிரசார அமைப்பு என்ற அமைப்பை அருணா உருவாக்கினார். இப்போது அன்னா ஹசாரேவின் அணியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இருவரும் அருணாவுடன் அந்த அமைப்பில் இன்னமும் இருக்கிறார்கள். லோக்பால் மசோதா வடிவத்தில் மட்டுமே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. அருணா, அரவிந்த் இருவரும் மகசாசே விருது பெற்றவர்கள். நந்தன், அன்னா ஹசாரே இருவரும் பத்ம பூஷன் பெற்றவர்கள்.

நந்தன் நீலகேணி, “லஞ்சம் ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டும் போதவே போதாது. பல முனைகளில் நடவடிக்கை தேவை. அதில் ஒன்று லோக்பால். ஊழலில் இருவகை. ஸ்பெக்ட்ரம் போன்ற மேலிடத்தில் நடக்கும் பெரிய ஊழல்கள். கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட்டுக்காக தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தர வேண்டியிருப்பது போன்ற சில்லறை ஊழல்கள். முதல்வகை ஊழல்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் அன்றாடம் உரசுபவை அல்ல. ஆனால் தொலைநோக்கில் பாதிப்பவை. இரண்டாம் வகை சில்லறை ஊழல்கள் உடனடியாக அன்றாடம் பாதிப்பவை. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான தீர்வுகள் தேவை.’

“எல்லா அரசு அலுவல்களும் வெளிப்படையாக நடக்கும் விதத்தில் டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் சில்லறை ஊழல்களை ஒழிக்கலாம். பெரிய ஊழல்களுக்குக் கடும் சட்டங்கள் தேவை. இதையெல்லாம் உட்கார்ந்து பேசி அலசித் தீர்மானிக்க வேண்டும். சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தின் நிலைக் குழுக்கள் ஒன்றும் முட்டாள்கள் நிரம்பியது அல்ல. அமெக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று உலகின் எந்த நாட்டுப் பாராளுமன்றக் குழுவுக்கும் நிகரான அறிவும் உழைப்பும் இங்கேயும் உள்ளது’ என்கிறார் நந்தன். “எல்லா அரசியல்வாதிகளும் மோசம் என்ற மிடில் க்ளாஸ் பார்வையைத் தொடர்ந்து ஊக்குவிப்பது ஆபத்தானது’ என்பது நந்தன் கருத்து.

இதே பார்வையை இன்னொரு கோணத்தில் இருந்து முன்வைக்கிறார் அருணா ராய். வெவ்வேறு மட்டத்தில் இருக்கும் வெவ்வேறு ஊழல்களை ஒழிக்க வெவ்வேறு சட்டங்கள் தேவை. பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் தனி. கீழ் மட்டம் தனி. நீதித் துறைக்கு முற்றிலும் தனியான கண்காணிப்பு அமைப்பு தேவை. இதுதவிர ஊழல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தர தனி அமைப்பும் சட்டமும் தேவை. இந்த நான்கையும் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி அவர் சார்நதிருக்கும் அமைப்பு விரிவாக அறிக்கைகள் தயாரித்திருக்கிறது. மன்மோகன் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் போதாது. அன்னா ஹசாரே குருவினர் முன்வைக்கும் லோக்பால் இன்னொரு ராட்சத அமைப்பாக மாறிவிடும். இரண்டும் தீர்வல்ல என்பது அருணாராய் கருத்து.

நந்தன், அருணா இருவருமே அன்னா ஹசாரே குழுவினரின் பிடிவாத அணுகுமுறையைக் கடுமையாக நிராகரிக்கிறார்கள். மக்கள் கருத்தையும் ஆதரவையும் திரட்ட போராட்டம் நடத்துவதை இருவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், தாங்கள் எழுதியிருக்கும் லோக்பாலைத்தான் அரசு ஏற்று நிறைவேற்ற வேண்டும், அதுவும் ஆகஸ்ட் 31க்குள் செய்யவேண்டும் என்றெல்லாம் அன்னா ஹசாரே அணியினர் பிடிவாதம் பிடிப்பதை அருணாவும் நந்தனும் (நானும்) ஏற்கவில்லை.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டும்வரை பிடிவாதமாக இருந்த அவரது அணியினர், மெல்ல தங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எதையும் செய்ய முடியாது என்பதும், தங்கள் கருத்துக்கு, பல மாற்றுக் கருத்துகள் அரசிடம் மட்டுமல்ல, மற்ற பொது மக்களிடையேயும் இருக்க முடியும் என்பதும் மெல்ல மெல்ல அவர்களுக்கு உறைத்து வருகிறது. முதலில் கண்முடித்தனமாக அவர்களை ஆதரித்து ஒரு மாதமாகப் பிரசாரம் செய்த டைம்ஸ் நவ், என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே, சி.என்.என். ஐ.பி.என். சேனல்கள் எல்லாம் கூட கடந்த ஒரு சில தினங்களாக மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கின்றன.

சி.என்.என். ஐ.பி.என். ஒரு சமரசத் தீர்வையே முன்வைத்தது. அரசு தன் மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும். அன்னா ஹசாரே அனியினரும் தங்கள் மசோதாவை மட்டுமே சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும். இன்னொரு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் அரசு, அன்னா அணியினர், எதிர்க்கட்சிகள், எம்.பி.க்கள், சட்ட அறிஞர்கள், சமூகப் பிரபலங்கள் இடம்பெறவேண்டும். ஒரு மாதத்துக்குள் அந்தக் குழு விவாதித்து முடிவு செய்து தரும் சட்ட முன்வடிவை ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் சிறப்புக் கூட்டம் நடத்தி, தீபாவளிக்குள் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் தீர்வு யோசனை.

இதையேதான் மன்மோகன் அரசு வேறு வடிவத்தில் இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசின் லோக்பால் சட்ட முன்வடிவு பாராளுமன்ற நிலைக்குழு முன்பு உள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம். அன்னா ஹசாரே குழுவின் மசோதாவையும் நிலைக்குழுவிடம் தருகிறோம். நிலைக்குழு ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு மாதம் ஆகும். அதன்பின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றலாம். கடைசியில் இந்த இதழ் வெளிவரும் சமயத்தில் இந்தச் சமரசம் நடந்திருக்கும்.

லோக்பால் வந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம்?

லோக்பால் ஒன்றும் அன்னா ஹசாரேவின் கண்டுபிடிப்பல்ல. உலக அளவில் இந்த அமைப்பு 140 நாடுகளில் இருக்கிறது. உயர் மட்ட ஊழல்கள் பற்றி விசாரிப்பதிலேயே பெரும்பாலும் இவை அக்கறை காட்டுகின்றன. இந்தியாவில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதைப் பற்றி நேரு காலத்திலேயே பேசியிருக்கிறார்கள். முதன்முதலில் 1968ல் மக்களவையில் சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட்டது (அதுதான் அரவிந்த் கேஜரிவால் பிறந்த வருடம்!). மசோதா நிறைவேறும் முன்பே அவையின் ஆயுள் முடிந்துவிட்டது. அதன் பின்னர் ஏழு முறை மக்களவையில் லோக்பால் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவையின் ஆயுள் முடிந்துவிட்டதால் நிறைவேறவில்லை. 1985ல் மசோதா திரும்பப் பெறப்பட்டது. கடைசியாகக் கொண்டு வந்தது 2001ல், ஒவ்வொரு முறையும் மசோதாவை விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நிலைக்குழுக்களும் விவாதித்து, கருத்து சொல்லியிருக்கின்றன.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரு லோக்பால் போதாது. மாநிலத்துக்கு ஒரு லோகாயுக்தா தேவை என்று சொல்லப்பட்டது. இதையடுத்து 18 மாநிலங்கள் லோகாயுக்தாவை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் நாட்டில் இல்லை. குஜராத்தில் உண்டு. ஆனால், அங்கே ஏழரை வருடமாக லோகாயுக்தா பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. கர்நாடகத்தில் லோகாயுக்தாவாக இருப்பவர் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இவர்தான் அண்மையில் பி.ஜே.பி முதலமைச்சர் எடியூரப்பா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தவர். இவர் அன்னா ஹசாரேவின் அணியில் இருப்பவர். அன்னாவின் லோக்பால் மசோதாவை எழுதியதில் முக்கிய பங்கேற்றியவர்.

லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அன்னா ஹசாரே கேட்பதற்கெல்லாம் முன்பாகவே சோனியா காந்தியின் காங்கிரஸ் 2004லேயே சொல்லிவிட்டது. அது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதன்படி இந்த வருடம் ஜனவரியில், ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை வகுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழுவை மன்மோகன் சிங் அமைத்தார். அந்தக் குழுவை லோக்பால் மசோதாவை உருவாக்கும்படி சொன்னார்.

அதன்பிறகுதான் அன்னா ஹசாரே அணியினர் திடீரென்று களத்தில் குதித்தார்கள். மசோதாவை உருவாக்கும் குழுவில் மக்கள் சார்பாக, தாங்களும் இடம்பெற வேண்டுமென்று அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். உடனே அரசு அவரையும் அவர் சொன்னவர்களையும் குழுவில் சேர்த்துக் கொண்டது. மசோதாவை பாராளுமன்றத்தில் வைத்தது. அண்ணா தங்கள் மசோதாவைத்தான் ஏற்கவேண்டுமென்று உண்ணாவிரதம் தொடங்கினார்.

இரண்டு மசோதாக்களுக்கும் என்ன வித்தியாசம்? மூன்றாவதாக அருணா ராய் போன்றவர்கள் முன்வைக்கும் மசோதா என்ன சொல்கிறது?

பிரதமரை லோக்பால் விசாரிக்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு பற்றி மட்டுமே எல்லாரும் மீடியாவில் அதிகம் பேசி வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருந்து விலகியபிறகு அவரை லோக்பால் விசாரிக்கலாம் என்கிறது மன்மோகன் அரசு. பதவியில் இருக்கும்போதே விசாரிக்க வேண்டும் என்கிறது அன்னா குழு.

ஆனால் வித்தியாசங்கள் பிரதமர் பற்றி மட்டுமல்ல. அன்னா ஹசாரே சொல்லும் லோக்பால், இன்னொரு போட்டி அரசாங்கத்தையே உருவாக்கிவிடும் ஆபத்து இருப்பதாக அதை மறுப்பவர்கள் சொல்கிறார்கள். அது அப்படித்தானா?

கல்கி



லோக்பால் ஊழலை ஒழிக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 5:36 pm

அருணா ராய் அவர்கள் கூறுவது போல....மீண்டும் அண்ணா ஹஷாரே மற்றும் அரசு தயாரித்துள்ள லோக் பால் மசோதாவையும்..மீண்டும் மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பொறுப்பு வகிபவர்கள் முன்னிலையில் பரிசீலிக்க பட்டு...சீரான மசோதா....எந்த விட சிக்கலும் இல்லாதா மசோதா உருவானால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்....

தினம் தினம் கீழ்தட்டு மக்கள் அரசு அலுவலகங்களில் தங்கள் வேலை செய்து முடிய வேண்டி லஞ்சம் கொடுத்து கொண்டிருக்கின்றனர்...அவர்களால் கொடுக்க முடியாது என்றோ.....இப்படி லஞ்சம் கேட்கிறார்களே என்று சென்று முறையிடவோ அவர்களால் முடியாது....காரணம் அரசு அதிகாரிகள் என்றாலே ஒரு விட பயம் நாம் மக்கள் மனதில் இருக்கிறது...எங்கே வேலை செய்து தர மாட்டார்களோ....சிக்கல் ஏற்படுதுவார்களோ என்ற அச்சம் அவர்களை லஞ்சம் கொடுக்க தூண்டுகிறது.......மக்களின் அறியாமையையும் இயலாமையையும் அவர்கள் பணமாக மாற்றுகின்றனர்.......

அருமையான கட்டுரை சிவா னா பகிர்ந்தமைக்கு நன்றிகள் லோக்பால் ஊழலை ஒழிக்குமா? 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக