புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_m10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_m10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_m10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_m10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_m10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_m10கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்!


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 03, 2011 1:10 pm

இரண்டாம் உலகப் போர் (1939 - 1945) நடைபெற்ற காலத்தில், இந்தியாவில் மக்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலைவாசிகள் ஏறிய நிலையில் கள்ள மார்க்கெட் தோன்றியது.

அதன் விளைவாக, கள்ள மார்க்கெட் விற்பனைகளில் கிடைக்கும் பணம், வரி வருமானத்தில் காண்பிக்கப்படாமல், கறுப்புப் பணமாக வளர ஆரம்பித்தது.

ஊழலும், கள்ளப்பணமும் பெரும்பாலாக அரசாங்க அதிகாரிகளிடம் பெருகிவருவதைக் கண்ட பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தலைமையிலான அரசாங்கம், 1947-ல் ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

அதன் பிறகு, 1956-ல் கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தந்த அறிக்கையின் மீது, ஊழல் கண்கானிப்புக் குழு அமைக்கப்பட்டது. 1965-ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த நிர்வாகச் சீர் திருத்தக் குழுவின் அறிக்கையில், சுவிடன் நாட்டிலுள்ள ஆம்பட்ஸ்மன் அமைப்பைப் போல இந்தியாவிலும், ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்காணிக்கத் தக்க அமைப்பு உருவாக வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, 1969-ல் மத்திய அரசாங்கம் லோக் பால் மசோதாவைக் கொண்டுவந்தது. ஆனால், அது சட்டமாக நிறைவேற்றப் படவில்லை. அதேபோல் 10 தடவைகள் லோக்பால் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப் படாமல் போயின.

ஆயினும், அரசாங்க நிர்வாகத்திலும், பல்வேறு பொது துறைகளிலும், ஊழல் நடவடிக்கைகள் மிக வேகமாகப் பரவி, கடைசியாக 2008-ல் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பிரம்மாண்டமான 2ஜி அலைவரிசை ஊழல் வெளிப்பட்டது. இது இந்திய மக்களிடம் பலமான கண்டனத்தையும், பயங்கரமான அச்சத்தையும் உண்டாக்கியது.

காந்திய வழியில் உண்ணாவிரத முறையை மேற்கொண்டு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அண்ணா ஹசாரே பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட ஆரம்பித்தார். அதனால் 40 அரசாங்க அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்றார்.

மகத்தான 2ஜி ஊழல் இந்தியா முழுவதிலும் பெறும் அதிர்ச்சியை உண்டாக்கிய நேரத்தில், ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரு வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டுமென்று, 2011 ஏப்ரல் 5-ம் தேதி புதுதில்லியில் ஜந்தர் மந்தர் மைதானத்தில் சாகும்வரை உண்ணா விரதத்தை அண்ணா ஹசாரே மேற்கொண்டார்.

இதற்கு நாடெங்கும் பேராதரவு வளர்ந்த நிலைமையில், அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதம் புரட்சிகரமான நிலைமையை, நாட்டில் ஏற்படுத்தும் என்பதற்கு அஞ்சி, புதியதொரு லோக்பால் மசோதாவை உருவாக்கிட, அண்ணா ஹசாரே அமைப்பின் சார்பில் ஐந்து பேர்களும், அரசாங்கம் சார்பில் 5 மந்திரிகளும், அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
2011 ஆகஸ்டு 15-க்குள் ஊழலை அடக்குவதற்கான வலிவான சட்டம் நிறைவேற்றப் பட்டாக வேண்டும் என்பதில் அண்ணா ஹசாரே கண்டிப்பாக இருக்கிறார்.

புதிய லோக்பால் மசோதாவின் கூட்டுக் குழுவில் இதுவரை நிகழ்ந்துள்ள பேச்சுகளும், உடன்பாடுகளும் இன்னமும் தெளிவு படவில்லை. கர்நாடக லோக் ஆயுக்தா சட்டத்தின்கீழ், மாநில முதல்வரின் மீது புகார்கள் வந்தால் அவற்றையும், ஆய்வு செய்யக் கூடிய அதிகாரம் லோக் ஆயுக்தா நீதிபதிக்குத் தரப்பட்டிருக்கிறது.

அதே வகையில் மத்திய லோக்பால் சட்டத்திலும், பிரதம மந்திரியின் மீது வரும் குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கான அதிகாரம் தரப்பட வேண்டுமென்று அண்ணா ஹசாரே குழுவினர் வற்புறுத்துகின்றனர்.
ஹசாரே குழுவினர் தரும் கண்டிப்பான வேண்டுகோள்களைச் சமாளிக்க முடியாமல் பிரதம மந்திரியும், காங்கிரஸ் தலைவரும் மற்ற மந்திரிகளும் தடுமாறும் நிலையில், யோகி ராம்தேவ் அறிவித்த மற்றொரு உண்ணாவிரதப் போராட்டமும், மத்திய மந்திரி சபையை அலைக்கழித்துள்ளது.

இந்தியாவில் பரவியிருக்கும் கறுப்புப் பணத்தையும், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் மறைத்து வைத்திருக்கும் கள்ளப் பணத்தையும், இந்திய அரசாங்கம் திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி, 2011 ஜூன் 4-ம் தேதி "சாகும்வரை உண்ணாவிரதம்'' இருக்கப்போவதாக பாபா ராம்தேவ் அறிவித்தார். ஹசாரே இருந்த உண்ணாவிரதத்துக்கு அடுத்த படியாக, ராம்தேவ் உண்ணாவிரதமும் பெருத்த கிளர்ச்சியை பொது மக்களிடம் உண்டாக்கும் என்ற அச்சம், மத்திய மந்திரிகளுக்கு ஏற்பட்டு விட்டது.

எப்படியாவது பாபா ராம்தேவை அமைதிப்படுத்தி, ஹசாரே குழுவில் இருந்து அவரைப் பிரித்துவிட மத்திய மந்திரிகள் முடிவுசெய்தனர்.

தில்லிக்கு விமானம் மூலம் ஜூன் 1-ம் தேதி வந்த பாபாவை வரவேற்க பிராணப் முகர்ஜி, வசந்த் பன்சால், கபில் சிபல், சுபோத்காந்த் சகாய் ஆகிய நான்கு மாமந்திரிகளும் தில்லி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.


மிக ஆடம்பரமான முறையில் ராஜ மரியாதையுடன் நான்கு மந்திரிகளும் வரவேற்று, மகிழ்ச்சியுடன் உரையாடி அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு வேண்டுகோள்களுக்கு இணங்கி அரசாங்கம் நடந்து கொள்ள இருப்பதால், ராம்தேவ் உண்ணா விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கேட்டுக்கொண்டார்கள்.

பாபா ராம்தேவுக்கு மந்திரிகள் தந்த சிவப்புக் கம்பள வரவேற்பைப் பத்திரிக்கையாளர்களும், காங்கிரஸ் தலைவர்கள் உள்பட்ட பலரும் மிக ஆச்சரியத்துடன் கவனித்தனர். ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி முடிய மத்திய மந்திரிகள் அடுத்தடுத்து வந்து பாபா ராம்தேவிடம் உரையாடினார்கள். அமைதி காப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. இருப்பினும் யோகி ராம்தேவிடம் அவர்களுடைய வேண்டுகோள்கள் பலன் தரவில்லை.

முடங்கிக் கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டால் ஒழிய, ஜூன் 4-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தாம் மேற்கொள்வதில் எத்தகைய மாறுதலும் இல்லை என்று பாபா கூறிவிட்டார். ராம்தேவ் எடுக்கும் முயற்சிக்கு தமது முழு ஆதரவு இருப்பதாக அண்ணா ஹசாரே அறிவித்தார்.

கடைசி முயற்சியாக, கபில் சிபல், சுபோத் காந்த் சகாய் ஆகிய இரு மந்திரிகளும் யோகி ராம்தேவை தில்லியில் உள்ள உயர்தர ஐந்து நட்சத்திர கிளாரிட்ஜ் ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய், நான்கு மணிநேரத்துக்கு மேல் பேசிப் பார்த்தார்கள். அதற்கும் பலனில்லை.

இதற்குள் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஏராளமான ராம்தேவ் ஆதரவாளர்கள் குவிந்துவிட்டனர். முதலில் அறிவித்தபடி, ஜூன் 4-ம் தேதி இரவு ராம்தேவ் குரு தமது உண்ணாநோன்பை ஆரம்பித்தார். அங்கு காத்திருந்த அவருடைய ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் அந்த நோன்பில் கலந்து கொண்டனர். இரவு 1 மணிக்குப் பிறகு திடீரென தில்லி போலீஸ் பட்டாளம் ராம்லீலா மைதானத்துக்குள் அணிவகுத்து வந்தது. உண்ணா விரதம் இருக்கும் பாபா ராம்தேவை அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதாக அறிவித்து, கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க போலீஸாரின் தடியடி தர்பார் நடைபெற்றது. கண்ணீர்ப் புகை வீசப்பட்டது. அடிபட்டவர்கள், உதைபட்டவர்கள், ரத்தக் களரியில் சிக்கியவர்கள் தரையில் தள்ளப்பட்டனர். கடைசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு, பாபா ராம்தேவைப் போலீஸார் வெளியே கடத்திச்சென்று மறுநாள் காலை ஹரித்வாரில் விட்டார்கள். 15 நாள்களுக்கு அவர் தில்லிக்குள் வர தடை போடப்பட்டது.

ஜூன் 5-ம் தேதி காலையில் மத்திய மந்திரி சுபோத் காந்த் சகாய் நிருபர்களிடம் கூறியதாவது: "ராம் தேவுடன் இனி எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்துவதாக இல்லை. வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் கொண்டுவர மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராம்தேவ் முழுக்க முழுக்க அரசியல்வாதிபோல் செயல்பட்டு வருகிறார்'.

இதுபற்றிக் கபில் சிபல் கூறியதாவது, "ராம்லீலா மைதானத்தில் யோகா நடத்தவும், ஐந்தாயிரம் பேர் வரை கூடுவதற்கும் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.இவற்றையெல்லாம் மீறி அவர் செயல் பட்டிருக்கிறார். யோகா மேடையை அரசியல் மேடையாக்கிவிட்டார். சட்டம், ஒழுங்கை நிலை நாட்டவே அவர்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 4-ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் எங்களுடன் பேசுகையில் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் 5 மணிக்கு மறுத்துவிட்டார்”.
.
இவ்வாறு பல்வேறு வகைகளில் 4-ம் தேதி நடைபெற்ற போலீஸ் நடவடிக்கைகளுக்கு மத்திய மந்திரிகள் பொறுப்பற்ற முறையில் சமாதானம் கூற ஆரம்பித்துவிட்டனர்.

ராம்தேவ் ஓர் அரசியல்வாதிபோல செயல்பட்டிருக்கிறார் என்று மத்திய மந்திரி சுபோத் காந்த் சகாய் கூறியிருக்கிறார்.இந்தியாவில் ஒரு தனிப்பட்ட மனிதர் அரசியல்வாதிபோல செயல்படுவது எந்தச் சட்டப்படி குற்றம் என்று அவர் விளக்கினால் நல்லது.

ஜூன் 1-ம் தேதி தில்லி விமான நிலையத்தில் மத்திய மந்திரிகள் நான்கு பேர் காத்திருந்து சிவப்புக் கம்பளத்தை விரித்து அவரை வரவேற்றார்களே, அதன்பிறகு ஜூன் 4-ம் தேதி காக்கிச் சட்டைப் போலீஸாரை அனுப்பி ராம்லீலா மைதானத்திலிருந்து குண்டுக்கட்டாக அவரையும் மற்றவர்களையும் இழுத்துச் சென்றார்களே, இது எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது?

ஜூன் 4-ம் தேதி நள்ளிரவில் ராம்லீலா மைதானத்தில் அமைதியாகக் கூடியிருந்த கூட்டத்தின்மீது போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை மூலம் விரட்டியடித்தது ஜனநாயக முறைக்கு மாறுபட்ட - சட்டம் - நீதி - நேர்மைக்கு விரோதமான - செயல்பாடு என்று சட்ட நிபுணர்களும், பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கூடியிருந்த மக்களைப் போலீஸார் அடித்ததும், தரையில் இழுத்துச் சென்றதும், மருத்துவமனைகளில் ரத்தக் காயங்களுடன் சேர்க்கப் பட்டதும் பற்றிய படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராம்லீலா மைதானத்தில் போலீஸார் நடத்திய விபரீதமான செயல்பாடுகளைப் பற்றி, செய்திகள் மூலம் கவனித்த உச்ச நீதிமன்றம் தாமாகவே, விசாரணை நடத்த முன்வந்துள்ளது.

நாட்டில் சட்டம் - அமைதி - நீதி - நேர்மை ஆகியவற்றைப் பாதுகாக்க அரசாங்கம் இருக்கிறது. அதற்கு மாறாக, சட்டத்தை மீறி, அமைதியைக் குலைத்து, நேர்மையற்ற முறையில் அநீதியான ஆட்சியை நடத்த ஓர் அரசாங்கம் முற்பட்டால், அத்தகைய காட்டாட்சி முறையை நீக்கிட மக்களின் எழுச்சிமிக்க புரட்சி வெடித்து எழும் என்பது உலக வரலாற்றில் பல நாடுகளில் நடைபெற்றது என்பது அடிப்படை அரசியல் பாடமாகும்.

இந்தியாவிலும் அத்தகைய அரசியல் பாடம் ஆரம்பிப்பதற்கான கட்டாயம் ஏற்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.
இரா.செழியன்



கறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Pகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Oகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Sகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Iகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Tகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Iகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Vகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Eகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Emptyகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Kகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Aகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Rகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Tகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Hகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Iகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! Cகறுப்புப் பணம், சிவப்புக் கம்பளம், தடியடி தர்பார்! K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக